Agri Info

Adding Green to your Life

January 30, 2025

AIIMS-ல் Consultant வேலைவாய்ப்பு 2025 – சம்பளம்: ரூ.1,00,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

January 30, 2025 0

 

AIIMS-ல் Consultant  வேலைவாய்ப்பு 2025 – சம்பளம்: ரூ.1,00,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

AIIMS-All India Institute of Medical Sciences ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் DEO, Consultant பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

AIIMS காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி DEO, Consultant பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DEO கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு / Dental Surgery / MBBS தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

AIIMS வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30, 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


DEO ஊதிய விவரம்:

Consultant – ரூ.1,00,000/-

Data Entry Operator – ரூ.20,000/-

AIIMS தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து vijaydeepsiddharth@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.02.2025 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளபடாது என தெரிவிக்கபட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Central Bank of India- வில் புதிய வேலைவாய்ப்பு 2025 – 1000 காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!

January 30, 2025 0

 

Central Bank of India- வில் புதிய வேலைவாய்ப்பு 2025 – 1000 காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!

 

Central Bank of India ஆனது Credit Officers பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 1000 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Central Bank of India காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Credit Officers in Mainstream (General Banking) பணிக்கென மொத்தம் 1000 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற  பல்கலைக்கழகத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் Graduate ( Bacholer Degree ) தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Central Bank of India வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 20 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 48,480-2,000/7-62,480-2,340/2-67,160-26,80/7-85,920 அளவிலான ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Central Bank of India விண்ணப்ப கட்டணம்:

Others – ரூ.750/-

Women/SC/ST/PWD – ரூ.150/-

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Online test (Including Descriptive Test), Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.02.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Assistant காலிப்பணியிடங்கள் – சம்பவம்: ரூ.25,000/-

January 30, 2025 0

 

அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Assistant காலிப்பணியிடங்கள் – சம்பவம்: ரூ.25,000/-

அண்ணா பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Project Assistant பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்

Project Assistant பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s degree in M.E / M.Tech / M.Sc / M.Phil தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள்  அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.02.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

2025 பிப்ரவரி மாத நாட்காட்டி - பள்ளிக் கல்வித் துறை வெளியீடு

January 30, 2025 0

எண்ணும் எழுத்தும் பருவம் 3 வகுப்பு 4 மற்றும் 5 (தமிழ் வழி) பிப்ரவரி முதல் வாரப்பாடக் குறிப்பு

January 30, 2025 0

எண்ணும் எழுத்தும் பருவம் 3 வகுப்பு 4 மற்றும் 5 (ஆங்கில வழி) பிப்ரவரி முதல் வாரப்பாடக் குறிப்பு

January 30, 2025 0

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.01.2025

January 30, 2025 0

 



திருக்குறள்: 

பால்: பொருட்பால் 

அதிகாரம் :குடிமை 

குறள் எண்: 960. 

நலம்வேண்டின் நாண்உடைமை வேண்டும்; குலம்வேண்டின்
 வேண்டுக யார்க்கும் பணிவு

பொருள்:
புகழ் போன்ற நன்மை வேண்டின், தீயது செய்ய அஞ்ச வேண்டும். குலப்பெருமை வேண்டின், எவர்க்கும் பணிந்து செல்ல வேண்டும்.

பழமொழி :

சொல் வல்லனை வெல்வது அரிது. 

 It is difficult to overcome the eloquent.

இரண்டொழுக்க பண்புகள் :   

 *எனது பெற்றோர் பெருமைப்படக்கூடிய வகையில் நான் நன்கு படிப்பேன். 

*எனது பெற்றோரும் ஆசிரியரர்களும் தரக்கூடிய ஆலோசனைகளை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி :

பணிவு என்ற பண்பு இல்லாதவன் வேறு எந்த நற்குணம் இருந்தும் இல்லாதவனே--நபிகள் நாயகம்

பொது அறிவு : 

"1. ஒரு கோழி ஒரு ஆண்டுக்கு எத்தனை முட்டை இடும்? 

விடை : 228 முட்டைகள்.

2. அணிலின் ஆயுள் காலம் எத்தனை ஆண்டுகள்? 

விடை :7 ஆண்டுகள்"

English words & meanings :

 Jungle.     -     காடு
 

Land.       -      நிலம்

வேளாண்மையும் வாழ்வும் : 

 நிலையான நீர் மேலாண்மையானது, மக்கள், சொத்துக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதத்தை குறைக்கும் அதே வேளையில், நீரின் நன்மையான பயன்பாடுகளை அதிகப்படுத்துகிறது.

நீதிக்கதை

 ஆமை


சிறுவன் ஒருவன் கடல் ஆமை ஒன்றை கண்டான்.அதனை மெதுவாக தொட்டவுடன் ஆமை தனது தலையையும், கால்களையும் ஓட்டுக்குள் இழுத்துக் கொண்டது.


 சிறுவன் என்னென்னவோ செய்து பார்த்தும் ஆமை தனது தலையையும், கால்களையும் வெளியில் நீட்டவே இல்லை.


அதை பார்த்த சிறுவன் ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு ஆமையை நெருங்கினான். அப்பொழுது சிறுவனுடைய மாமா, "தம்பி நீ என்னதான் தொந்தரவு செய்தாலும் ஆமை தன் தலையையோ கால்களையோ வெளியே 

நீட்டவே நீட்டாது" என்று கூறினார்.


சிறுவன், "ஆமையை பார்க்க எனக்கு மிகவும் ஆசையாக உள்ளது. அதனை எவ்வாறு வெளியில் கொண்டு வருவது என்று கூறுங்கள்" என்று  கேட்டான்.


 உடனே மாமா, " தம்பி ஆமையை மெதுவாக எடுத்துக்கொண்டு வீட்டினுள் சென்று கதகதப்பான ஒரு இடத்தில் வை.எந்த தொந்தரவும் செய்யாமல் சிறிது நேரம் இருந்தால், ஆமை தன் தலையையும் கால்களையும் வெளியே நீட்டி ஊர்ந்து செல்ல தொடங்கும்"என்று கூறினார்.


சிறுவனும் அதே போல் செய்ய ஆமையும் ஓட்டை விட்டு வெளியே வந்து ஊர்ந்ததை பார்த்து சிறுவன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.


ஆச்சரியம் அடைந்த சிறுவன் இது எப்படி என்று தனது மாமாவிடம் கேட்டான். அதற்கு அவனுடைய மாமா, "ஆமைகள் மட்டுமல்ல! மனிதர்களும் இப்படித்தான்" என்றாராம். 


மேலும்,"உன்னை சுற்றி இருப்பவர்களை மாற்ற விரும்பினால், நீ உன்னுடைய இன்முகத்தை அவர்களிடம் காட்ட வேண்டும். உன் கனிவான இரக்கம் கொண்ட இதயத்தால் மட்டுமே மற்றவர்களை மாற்ற இயலும்" என்றும் கூறினார்.

இன்றைய செய்திகள்

31.01.2025

* தென் அமெரிக்காவில் உள்ள 'சுரினாம்' நாட்டின் ராணுவத்துக்கு ஆவடியில் உள்ள படைத்துறை உடை தொழிற்சாலையில்  இருந்து ஆடைகள் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது.

* வானிலை முன்னறிவிப்பு: தூத்துக்குடி, நெல்லை, குமரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு.

* அடுத்த 5 ஆண்டுகளில் 100 ராக்கெட்களை விண்ணில் செலுத்த இலக்கு: இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தகவல்.

* ரூ.16,300 கோடி மதிப்பிலான முக்கிய கனிமங்கள் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்.

* ஹாக்கி இந்தியா லீக்: தமிழ்நாடு டிராகன்ஸ் அணி அரையிறுதிக்கு தகுதி,.

Today's Headlines

* For the country'Surinam' which is in South America Army Uniform has been manufactured and sent from Avadi Army Uniform manufacturing unit.

* Weather forecast: Thoothukudi, Nellai and Kumari there is a chance of heavy rain 

* Target to launch 100 rockets over the next 5 years: Information by ISRO chief V Narayanan 

* The central government approves the scheme for main minerals worth of Rs 16,300 crore.

* Hockey India League: Tamil Nadu Dragons qualified for the semifinals.

Covai women ICT_போதிமரம்


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலைத் தடுத்தல் - ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வுக் கையேடு

January 30, 2025 0

 IMG_20250128_224117

குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலைத் தடுத்தல் -  ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வுக் கையேடு👇

CSA Module Guide - Download here



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

SLAS தேர்வு - ஆசிரியர்களுக்கான அறிவுரைகள்!!!

January 30, 2025 0

 .com/

அனைவருக்கும் வணக்கம்


SLAS தேர்வு நடைபெறும் நாட்கள்

4.2.2025 - Tuesday -3 rd std

5.2.2025 - Wednesday -5th std

6.2.2025 - Thursday - 8th  std 

தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் பணிகள்

 தேர்வுக்கு நடைபெறுவதற்கு முதல் நாள் வட்டார வளமையத்தில் வினாத்தாள்களை பெற்று பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லுதல்

 ஒவ்வொரு நாளும் தேர்வு மாணவர்கள் எழுதி முடித்த பிறகு வினாத்தாள்கள் மற்றும் OMR  தாள்களை பெற்று வட்டார வளமையத்தில் ஒப்படைத்தல்

 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான இருக்கை வசதி வகுப்பறை வெளிச்சமாகவும் காற்றோட்டமாகவும் இருப்பதை உறுதி செய்தல் 

 தேர்வு எழுதும் மாணவர்கள் Blue colour ball point pen அல்லது Black colour ball point pen பயன்படுத்துவதை உறுதி செய்தல்

 தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் தேர்வு எழுதும் நாள் அன்று EMIS - School Login ல் வெளியாகும்.அந்த மாணவர்களின் பெயர் பட்டியலை பள்ளிகளுக்கு வரும் Field Invigilator வழங்கி தேர்வு நடைபெறுவதை உறுதிசெய்தல்

 தேர்வு முடிந்து வினாத்தாள்களை அலுவலகத்தில் ஒப்படைக்க வரும் பொழுது Std,Section மற்றும் medium  வாரியாக Boys & Girls குறித்து தனியாக ஒரு தாளில் குறித்து வட்டார வளமையத்தில் ஒப்படைத்தல் வேண்டும்

 தேர்வு நடைபெறும் நாளன்று காலை Field Invigilator பள்ளிக்கு வருகை புரிந்ததை உறுதி செய்தல் இல்லை என்றால் ஆசிரியர் பயிற்றுநர்களிடம் தகவல் தெரிவித்தல்

 தேர்வு எழுதும் நாளன்று தேர்வு எழுதும் மாணவர்களை புகைப்படம் எடுத்தல் குழுவில் பதிவு செய்தல் முதலியவற்றை தவிர்த்தல் வேண்டும்

 குறிப்பு  அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தேர்வு நடைபெறும் என்ற தகவல் தெரிவிக்கப்படுகிறது.நன்றி


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group