Agri Info

Adding Green to your Life

February 3, 2025

திருப்பத்தூர் DCPU-யில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – விரைந்து விண்ணப்பிக்கவும் ll முழு விவரங்கள் உள்ளே…

February 03, 2025 0

 

திருப்பத்தூர் DCPU-யில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – விரைந்து விண்ணப்பிக்கவும் ll முழு விவரங்கள் உள்ளே…

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள  District Child Protection Unit (DCPU) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Production Officer மற்றும் Social Worker பணிக்கென  காலியாக உள்ள 3 பணியிடங்களை   நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.  இப்பணிகள்  குறித்த முழு விவரங்களையும்  கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

DCPU காலிப்பணியிடங்கள்:

Production Officer – 1 மற்றும் Social Worker – 2 என மொத்தம் 3 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DCPU கல்வி தகுதி:

Production Officer:

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகத்தில் Master’s degree in Social Work / Sociology / Child Development / Human Rights Public Administration / Psychology / Psychiatry / Law / Public Health / Community Resource Management ஆகியவற்றில்  ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். அல்லது மேல் குறிப்பிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றில்  Bachelor’s degree தேர்ச்சி பெற்று 2 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


Social Worker:

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலை கழகத்தில் BA in Social Worker / Sociology / Social Science பட்டப்படிப்பு முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

42 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

DCPU  ஊதிய விவரம்:

Production Officerக்கு  ரூ.27,804 மற்றும் Social Workerக்கு  ரூ.18,536 மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில்  தேர்வு செய்யப்படுவார்கள்.

DCPU விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதற்கு விண்ணப்பிக்க 04.02.2025 ம் தேதியே இறுதிநாளாகும்.  மேலும், இறுதி நாள் முடிவதற்குள்  விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

திண்டுக்கல் DCPU துறையில் வேலை செய்ய ஓர் அரிய வாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கவும் ll முழு விவரங்கள் உள்ளே…

February 03, 2025 0

 

திண்டுக்கல் DCPU துறையில் வேலை செய்ய ஓர் அரிய வாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கவும் ll முழு விவரங்கள் உள்ளே…

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  தமிழ்நாடு அரசு District Child Production Unit (DCPU) துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இதில் Production Officer மற்றும் Social Worker பணிக்கு என மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணி  குறித்த முழு விவரங்களையும்  கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Dindigul DCPU காலிப்பணியிடங்கள்:

Production Officer – 1 மற்றும் Social Worker – 2 என மொத்தம் 3 காலிப்பணியிடங்கள்  நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dindigul DCPU கல்வி தகுதி:

Production Officer:

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகத்தில் Master’s degree in Social Work / Sociology / Child Development / Human Rights Public Administration / Psychology / Psychiatry / Law / Public Health / Community Resource Management ஆகிய பாடப்பிரிவுகளில்  ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பு  தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும் அல்லது மேல் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில்  ஏதேனும் ஒன்றில்  Bachelor’s degree தேர்ச்சி பெற்று 2 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Social Worker:

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலை கழகத்தில் BA in Social Worker / Sociology / Social Science பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

42 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.


Dindigul DCPU ஊதிய விவரம்:

Production Officer – ரூ.27,804 மற்றும் Social Worker – ரூ.18,536  என  மாத ஊதியம் வழங்கப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Dindigul DCPU விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேல்குறிப்பிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க 05.02.2025-தே  இறுதி நாளாகும்.  மேலும், இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

கள்ளகுறிச்சி DHS-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு – 80+ காலிப்பணியிடங்கள் II உடனே விண்ணப்பிக்கவும்…

February 03, 2025 0

 

கள்ளகுறிச்சி DHS-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு – 80+ காலிப்பணியிடங்கள் II உடனே விண்ணப்பிக்கவும்…

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள  District Health Society (DHS ) ஆனது  வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Cook, Office Assistant மற்றும் Hospital Worker உள்ளிட்ட  89 காலிப்பணியிடங்கள்  நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் குறித்த முழு விவரங்களையும்  கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Kallakurichi DHS காலிப்பணியிடங்கள்:

Special Educator, Social Worker, Lab Technician மற்றும் Pharmacist உள்ளிட்ட 89 காலிப்பணியிடங்கள்  நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Special Educator – 1 பணியிடம்

Occupational Therapist – 1 பணியிடம்

Social Worker – 1 பணியிடம்

Cook – 1 பணியிடம்

Office Assistant – 2 பணியிடம்

Hospital Worker – 16  பணியிடம்

Sanitary Worker – 22 பணியிடம்

Multipurpose Hospital Worker – 9 பணியிடம்

Sweeper – 17 பணியிடம்

Lab Technician – 3 பணியிடம்

Van Driver – 2 பணியிடம்

Cemonc Security – 2 பணியிடம்

Physiotherapist – 2 பணியிடம்

Pharmacist – 1 பணியிடம்

Mid Level Health Provider – 5 பணியிடம்

Therapeutic Assistant – 1 பணியிடம்

Dispenser – 2 பணியிடம்

Kallakurichi DHS கல்வி தகுதி:

Special Educator:

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Bachelor’s அல்லது Master’s degree in Special Education படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Occupational Therapist:

Bachelor’s அல்லது  Master’s degree in Occupational Therapy படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Social Worker:

Master’s degree in Social Work – ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Cook:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சமாக 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Office Assistant:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சமாக 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Hospital Worker:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சமாக 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Sanitary Worker:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சமாக 8 ஆம் வகுப்பு தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும்.

Multipurpose Hospital Worker:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சமாக 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Sweeper:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சமாக 8 ஆம் வகுப்பு தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும்.

Lab Technician:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் DMLT படிப்பு முடித்திருக்க வேண்டும்.

Van Driver:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பில்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  heavy driving license பெற்றிருக்க வேண்டும்.

Cemonc Security:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சமாக 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Physiotherapist:

Bachelor’s degree in Physiotherapy படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Pharmacist:

D.Pharm படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Mid Level Health Provider:

B.Sc in Nursing அல்லது DGNM படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Therapeutic Assistant:

Diploma in Nursing Therapy படிப்பு முடித்திருக்க வேண்டும்.

Dispenser:

D.Pharm படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 வயது நிறைவடைந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.


Kallakurichi DHS ஊதிய விவரம்:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு பணிகளுக்கு வழங்கப்படும் மாத ஊதியம் பற்றி கீழே விவரிக்கக்கப்பட்டுள்ளது.

Special Educator – ரூ. 23,000

Occupational Therapist – ரூ. 23,000

Social Worker – ரூ. 23,800

Cook – ரூ. 8,500

Office Assistant – ரூ. 13,000

Hospital Worker – ரூ. 8,500

Sanitary Worker – ரூ. 8,500

Multipurpose Hospital Worker – ரூ. 8,500

Sweeper – ரூ. 8,500

Lab Technician – ரூ. 13,000

Van Driver – ரூ. 13,500

Cemonc Security – ரூ. 8,500

Physiotherapist -ரூ. 13,000

Pharmacist – ரூ. 15,000

Mid-Level Health Provider – ரூ. 18,000

Therapeutic Assistant – ரூ. 15,000

Dispenser – ரூ. 10,000

Kallakurichi DHS தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Kallakurichi DHS விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேல்குறிப்பிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்  06.02.2025 என   தெரிவிக்கப்பட்டுள்ளது  . மேலும், இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

February 2, 2025

2024-2025 நிதியாண்டிற்கு நீங்கள் இதுவரை செலுத்திய வருமான வரி கணக்கை களஞ்சியம் செயலியில் பதிவிறக்கம் செய்வது எப்படி?

February 02, 2025 0

 IMG-20250202-WA0036

2024-2025 நிதியாண்டிற்கு நீங்கள் இதுவரை செலுத்திய வருமான வரி மற்றும் மீதமுள்ள வரி கணக்கை களஞ்சியம் செயலியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


களஞ்சியம் செயலியில் -Reports -Pay Drawn-2024-25 செலக்ட் செய்து pay drawn பட்டியலை டவுன்லோட் செய்யலாம்.


ஒரே பக்கத்தில் 11 மாதங்களுக்கு ஊதிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.


களஞ்சியம் app Link...👇👇👇 https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

TNPSC - குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதவிறக்கம் செய்வது எப்படி?

February 02, 2025 0

 

dinamani%2F2024-06%2F4fd9a1e9-0a11-4fc8-91f7-021307d8b5f2%2Ftnpsc

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது ஒருமுறை பதிவேற்றம்(ஓடிஆர்) மூலமாக விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகிவற்றை இணையதளத்தில் உள்ளீடு செய்து நுழைச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.


தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி முற்பகல் தமிழக அரசில் காலியாக உள்ள 2,540 குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களை நிரப்புவதற்கான கொள்குறி வகையிலான ஒருங்கிணைந்த முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 5 லட்சத்து 81 ஆயிரம் பேர் எழுதினர். இதில் 29 ஆயிரத்து 809 பேர் அடுத்தக்கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றனர்.


அவர்களுக்கு வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி பிற்பகல் முதன்மைத் தேர்வின் தமிழ் தகுதித்தாள் தேர்வும் மற்றும் கொள்குறி வகையில் விடை அளிக்கும் பொது அறிவு மற்றும் பொது திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் தேர்வு நடைபெறும் எனவும், விரிவான விடை அளிக்கும் வகையிலான பொதுஅறிவுத் தேர்வு பிப்ரவரி 23 ஆம் தேதி முற்பகல் நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.


இந்த நிலையில், குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


நுழைவுச் சீட்டை பதவிறக்கம் செய்வது எப்படி?


தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in - இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


விண்ணப்பத்தாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம்(ஓடிஆர்) மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லாததால் எவ்வளவு சேமிக்க முடியும்?

February 02, 2025 0

 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரி சலுகை மூலம் ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் வரை வருமான வரி இல்லை. இதுதவிர, நிலையான வருமான வரி விலக்கு ரூ.75 ஆயிரம் உள்ளது. எனவே, சம்பளம் பெறுவோர் ஆண்டுக்கு ரூ.12 லட்சத்து 75 ஆயிரம் வரை வருமான வரி செலுத்தத் தேவையில்லை.

17384685223057

வரி செலுத்துவோர் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் இருந்தால் அவர்கள் ரூ.80,000 அளவுக்கு பலன் பெறுவர். இது தற்போதுள்ள விகிதங்களின்படி செலுத்த வேண்டிய வரியில் 100 சதவீதம் ஆகும்.


ஆண்டுக்கு ரூ.18 லட்சம் வரை வருமானம் பெறுவோர் ரூ.70,000 வரை வரியை சேமிக்க முடியும். இது தற்போதைய வரி விகிதத்தில் 30 சதவீதம் ஆகும். ரூ. 25 லட்சம் வரை வருமானம் உள்ள ஒருவர் ரூ.1,10,000 அளவுக்கு வரி பலன் கிடைக்கும். இது தற்போதைய வரியில் 25 சதவீதம் ஆகும்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp groupரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லாததால் எவ்வளவு சேமிக்க முடியும்?

JEE முதன்மை தேர்வு; பிப்.25 வரை விண்ணப்பிக்கலாம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

February 02, 2025 0

 1349380

பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மை தேர்வு ஏப்ரலில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பிப்ரவரி 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று என்டிஏ அறிவுறுத்தியுள்ளது.


ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இது ஜேஇஇ முதன்மை தேர்வு, பிரதான தேர்வு என 2 பிரிவாக நடைபெறும். இதில், முதன்மை தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்துகிறது. ஆண்டுதோறும் ஜனவரி, ஏப்ரல் என 2 முறை இத்தேர்வு நடத்தப்படுகிறது.


அதன்படி 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு ஜனவரி 22 முதல் 30-ம் தேதி வரை நடந்தது. சுமார் 13 லட்சம் பேர் எழுதினர். இதன் முடிவுகள் பிப்ரவரி 12-ம் தேதி வெளியிடப்பட உள்ளன.


இந்நிலையில், ஜேஇஇ 2-ம்கட்ட முதன்மை தேர்வு ஏப்ரல் 1 முதல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கியுள்ளது. விருப்பம் உள்ள மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளம் வாயிலாக பிப்ரவரி 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


முதல்கட்ட தேர்வு எழுதியவர்களும் இதில் பங்கேற்கலாம். தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படும். ஹால் டிக்கெட் வெளியீடு உள்ளிட்ட இதர விவரங்கள் பின்னர் வெளியிடப்படும். இதுகுறித்த கூடுதல் தகவல்களை https://nta.ac.in என்ற தளத்தில் அறியலாம். தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிரமங்கள் இருந்தால், 011-40759000/69227700 என்ற தொலைபேசி எண் அல்லது jeemain@nta.ac.in எனும் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

3, 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘ஸ்லாஸ்’ தேர்வு நாளை தொடக்கம்: கூடுதல் வழிகாட்டுதல்கள் வெளியீடு

February 02, 2025 0

 1349381

அரசுப் பள்ளி​களில் 3, 5, 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்​களுக்கான ‘ஸ்லாஸ்’ தேர்வு நாளை (4-ம் தேதி) தொடங்​கு​கிறது. இத்தேர்​வுக்கான கூடுதல் வழிகாட்டு​தல்களை பள்ளிக்​கல்​வித் துறை வெளி​யிட்​டுள்​ளது.


இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி​களுக்கு பள்ளிக்​கல்வி இயக்​குநரகம் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை விவரம்: தமிழகத்​தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி​களில் பயிலும் மாணவர்​களின் கற்றல் திறனை அளவிட ‘ஸ்லாஸ்’ எனும் மாநில கற்றல் அடைவு தேர்வு அவ்வப்​போது நடத்​தப்​படு​கிறது. அதன்​படி, இந்த ஆண்டு 3, 5, 8-ம் வகுப்பு பயிலும் 15.78 லட்சம் மாணவர்​களுக்கு பிப்​ரவரி 4 முதல் 6-ம் தேதிவரை ஸ்லாஸ் தேர்வு நடத்​தப்படஉள்ளது. கொள்​குறி வினாத்​தாள் அடிப்​படை​யில் தேர்வு நடைபெறும். 3-ம் வகுப்​புக்கு 35 கேள்வி​கள், 5-ம் வகுப்​புக்கு 45 கேள்விகள், 8-ம் வகுப்​புக்கு 50 கேள்விகள் இடம்​பெறும்.


இந்த தேர்​வுக்காக பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்​கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கூடுதல் வழிகாட்டு​தல்கள் வெளி​யிடப்​பட்​டுள்ளன. அதன்​படி, தேர்​வுக்கு முந்தைய நாள் வட்டார வள மையத்​தில் இருந்து வினாத்​தாள்களை பெற்று பள்ளி​களுக்கு எடுத்​துச் செல்ல வேண்​டும். ஒவ்வொரு நாளும் தேர்வு முடிந்த பிறகு, வினாத்​தாள்​கள், ஓஎம்ஆர் விடைத்​தாள்களை பெற்று வட்டார வள மையத்​தில் ஒப்படைக்க வேண்​டும். இவ்​வாறு அ​தில் கூறப்​பட்​டுள்​ளது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

மணற்கேணி செயலி பள்ளியில் பயன்படுத்தப்படுகிறதா? - ஆய்வுக்கு பள்ளிக்கல்வி துறை உத்தரவு

February 02, 2025 0

 

1349407

அரசுப் பள்ளிகளில் உள்ள ஸ்மார்ட் போர்டுகளில் மணற்கேணி செயலி பயன்படுத்தப்படுகிறதா என்பதை தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பாக தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் கணினி சார்ந்த புதிய அறிவியல் தொழில்நுட்பங்களுடன் கற்றல் செயல்பாட்டுக்கு பெரிதும் உதவும் வகையில் மணற்கேணி செயலியை வடிவமைத்துள்ளது.


இந்த செயலியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பாடங்கள் தமிழ், ஆங்கில வழியில் அனிமேஷன் காணொலிகளாக மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் விதத்தில் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திறன் பலகைகள் (ஸ்மார்ட் போர்டு) நிறுவப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.


இந்த பலகைகளில் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் உட்பட அனைத்து வகை ஆசிரியர்களும் தங்கள் பெயர் அல்லது செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் அன்றைய வகுப்பறை குழலுக்கு ஏற்ற பாடங்களை தேர்வு செய்து கற்றல், கற்பித்தல் செயல்பாட்டினை மேற்கொள்ள வேண்டும்.


இதுதவிர தொடக்கப் பள்ளிகளில் மணற்கேணி செயலியை வகுப்பறைக் கற்பித்தலுக்கு ஆசிரியர்கள் பயன்படுத்தி வருகின்றனரா என்பதை அனைத்து அலுவலர்களும் பள்ளிப் பார்வை மற்றும் ஆய்வுகளின்போது கண்காணிக்க வேண்டும்.


மேலும், ஒவ்வொரு ஆசிரியரும் மணற்கேணி செயலியை திறன் பலகைகள் மூலம் பயன்படுத்தி வருவதை செல்போனில் படம்பிடித்து அதை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். இதுசார்ந்த அறிவுறுத்தல்களை முதல்நிலை கண்காணிப்பு அதிகாரிகளாக உள்ள வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group