February 11, 2025

பி.எப்., உடன் ஆதாரை இணைக்க பிப்., 15 வரை அவகாசம்

 Tamil_News_lrg_3849311

வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தின் நன்மைகளை பெற, பி.எப்., கணக்குடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம், பிப்., 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.


வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில், கடந்த 2024 மத்திய பட்ஜெட்டில், வருங்கால வைப்பு நிதி அமைப்பின் இ.எல்.ஐ., திட்டம் அறிவிக்கப் பட்டது. இத்திட்டத்தின் மூன்று பிரிவுகளின் கீழ் நிறுவனம், பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.


இத்திட்டத்தின் நன்மைகளை பெற, யு.ஏ.என் எனப்படும் பிரத்யேக கணக்கு எண்ணுடன், ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கை இணைப்பது கட்டாயம். இதற்கான அவகாசம் ஏற்கனவே பலமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது பிப்., 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.




🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 3 - ( Unit - 4 ) Lesson Plan

 Ennum Ezhuthum Lesson Plan | 2024 - 2025



Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 3 - ( Unit - 4 ) Lesson Plan - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 3 - ( Unit - 4 ) Lesson Plan - Download here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Hi -Tech lab Assessment - Quiz - Cycle 04 ( Instructions )

 

IMG_20250210_083909


 Hi -Tech lab Assessment - Quiz - Cycle 04 மேற்கண்ட circular-இல் குறிப்பிட்டுள்ளபடி February 10 முதல் February 14 வரை 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படவேண்டும். 


February 10 முதல் February 14 வரை அனைத்து வகுப்பும் Assessment -ஐ நடத்தும் படி Event  உருவாக்கப்பட்டுள்ளது.


முக்கிய குறிப்புகள்:


1. Hi -Tech lab Assessment - Quiz நடைபெறும் தேதியை மாணவர்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தி அவர்களை தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும்.


2. *6 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஒரு பாடத்திற்கு 4 கேள்விகள் வீதம் 5 பாடத்திற்கு 20 கேள்விகளை தேர்வு செய்ய வேண்டும்.*  


3. Hi -Tech lab Assessment - Quiz - Cycle 04 விற்கான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP), FAQ மற்றும் Video ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.


4. இந்த குறிப்பிட்ட தேதிகளில் பள்ளிகளில் வேறு எந்த தேர்வும் நடைபெறாத வண்ணம் இடைப் பருவத்தேர்வு காலஅட்டவணைகளை அமைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Hi -Tech lab Quiz Instructions - Download here



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

EMIS NEW UPDATE : Bus pass unwilling details update செய்யும் வழிமுறை

 

IMG_20250210_132454


EMIS NEW UPDATE


 💁‍♂️Bus pass unwilling details  update செய்யும் வழிமுறை அனைத்து அரசு பள்ளிகள்


💁‍♂️போக்குவரத்து வசதி தேவைப்படாத விவரங்களை EMIS வலைதளத்தில் UPDATE செய்வதற்கான வழிமுறை


💁‍♂️BUS PASS NOT WILLING STUDENTS DETAILS UPDATE


https://youtu.be/3zDrPRZPXq4

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Retirment Date -க்கும் Increment Date -க்கும் இடையில் காலாண்டு (மூன்று மாதம்) இருப்பின் ஓர் ஊதிய உயர்வு வழங்க அனுமதிக்கும் அரசாணை

 

IMG_20250210_233240

Retirment Date -க்கும் Increment Date -க்கும் இடையில் காலாண்டு  (மூன்று மாதம்) இருப்பின் ஓர் ஊதிய உயர்வு வழங்க அனுமதிக்கும் அரசாணை


Annual Increment to Retired Employees - Clarification go - Download here

குழுக்களில் அந்த அரசாணை எண் 148 P & AR Department, Dated: 31.10.2018 *தவறாக புரிந்து* கொள்ளப்பட்டுள்ளது...


*உண்மையான* விளக்கம்...



இதற்கு அரசுக் கடிதம் *784/ FR  P & AR Dept Dated 04.09.2019* இல் சரியான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது....


அதாவது....


 *ஓய்வு பெற இருக்கும்* ஒருவர் கடைசி ஆண்டில் பதவி உயர்வு பெற்றார் எனில்...


ஓராண்டு நிறைவு செய்வதற்கு முன் *ஓய்வு / இறப்பு நிகழ்ந்தாலும் அந்த* காலாண்டிற்கு *முதல் நாளில் ஓர் ஊதிய உயர்வு* வழங்கலாம்...


 *எடுத்துக்காட்டாக* ...


ஒருவர் 14/06/2024 இல் பதவி உயர்வு பெறுகிறார்...


13/06/2025 இல் தான் பதவி உயர்வு பெற்று ஓராண்டு நிறைவு பெறுகிறது...


ஆனால் அவரின் பணி ஓய்வு 30/04/2025...


ஓராண்டு நிறைவிற்குள்  அவர் ஓய்வு பெற்றார்...


இருப்பினும் June month

1/4 quarter இல் வருகிறது...

எனவே அவருக்கு அந்த காலாண்டின் முதல் நாள் *01/04/2025 இல் ஆண்டு ஊதிய உயர்வு வழங்கலாம்* ....

இது தான் அரசாணை மற்றும் அதன் விளக்கம்...


விளக்கக் கடிதத்தில் *எடுத்துக்காட்டுடன் தெளிவாக* விளக்கப்பட்டுள்ளது.


குழுக்களில் வலம் வருவது போல...


மே மாதம் ஒருவர் ஓய்வு..

அவருக்கு வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு 1/7 எனில் 

ஓய்வு பெறும் ஆண்டில் 1/7 அன்று ஓர் ஆண்டு *ஊதிய உயர்வு வழங்க இயலாது* .....


இந்த இடத்தில் *மற்றொரு* *அரசாணையினை* கவனிக்க...


அரசாணை எண் 311, நிதித் துறை நாள்: 31/12/2014...


இது என்னவெனில் வயது முதிர்வு காரணமாக ஒய்வு பெறுகிறார்கள்..

 *ஓய்வு பெற்றதற்கு அடுத்த நாள்* அன்னாரின் ஆண்டு *ஊதிய உயர்வு* நாள் எனில்...


அவர் ஓய்விற்கு பிறகு " *ஓய்வூதியப் பலன்களை* " பெறும் நோக்கில் அவருக்கு ஓர் *ஆண்டு ஊதிய உயர்வு* வழங்கலாம்...


அதாவது

 *31 மார்ச் 2024* இல் ஓய்வு...

அவரின் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு நாள் 1/4 எனில் அவருக்கு retirement benefits க்கு 01/04/2024 இல் ஓர் ஊதிய உயர்வு வழங்கலாம் ..

அதே போல்

30/06/2024 ஓய்வு - 1/7 regular increment எனில்

30/09/2024 ஓய்வு - 1/10 regular increment எனில்

31/12/2024 ஓய்வு - 1/1

Regular increment எனில்

Retirement benefits க்கு அந்த ஓர் ஊதிய உயர்வு வழங்கலாம்...


அரசாணைகள் & விளக்கக் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது..

☝️☝️☝️

`Courtesy:`

Mr.K.Selvakumar,

Head Master,

GHSS, M.Subbulapuram,

Madurai - Dt

🙏🙏🙏

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

TRUST EXAM 2025 - Question Paper (8.2.25)

 IMG_20250208_173017

TRUST EXAM 2024-2025 (8.2.25)👇

Download here



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

EE - February 2nd Week Lesson Plan

 EE - February 2nd Week Lesson Plan week ( 10.02.25_14.02.25 ) RajeshR.pdf

Download here



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

February 9, 2025

+1 & +2 பொதுத் தேர்வு - பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கூட நுழைவுச்சீட்டினை 17.02.2025 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!

 +1 & +2 பொதுத் தேர்வு - பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கூட நுழைவுச்சீட்டினை 17.02.2025 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!!

IMG_20250207_134222


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

NEET UG 2025 - Entrance Test Notification

 IMG_20250207_195345

Online Application Form for the National Eligibility - cum - Entrance Test [ [ NEET ( UG ) ] 2025 - Reg .


மருத்துவ படிப்புக்கான நீட் UG தேர்வு வரும் மே 4 ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு !

NEET application 2025.pdf 👇

Download here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

NMMS SAT - Science Calculation Study Materials ( T/M & E/M )

 NMMS SAT - அறிவியல் கணக்கீடுகள் 

Tamil Medium Study Materials - Download here

English Medium Study Materials - Download here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது - மார்ச் 7 வரை வரை விண்ணப்பிக்கலாம்!

 

1349988

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தகுதித் தேர்வுக்கு மாணவர்கள் மார்ச் 7-ம் தேதிக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும் என்டிஏ (தேசிய தேர்வு முகமை) உத்தரவிட்டுள்ளது.


நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் - NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.


அதன்படி 2025-26-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 4-ம் தேதி நேரடி முறையில் நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்ப பதிவு இன்று (பிப்.7) மாலை முதல் தொடங்கியது. விருப்பமுள்ளவர்கள் neet.nta.nic.in என்ற வலைத்தளம் வழியாக மார்ச் 7-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நீட் தேர்வுக்கான கட்டணம் பொதுப்பிரிவுக்கு ரூ.1700, பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.1600, எஸ்சி/ எஸ்டி பிரிவுக்கு ரூ.1000 என்றளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஜிஎஸ்டி மற்றும் சேவைக் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும்.

இதற்கிடையே ஒரு மாணவர் ஒருமுறை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நீட் தகுதித்தேர்வு மொத்தம் 3 மணி நேரம் 20 நிமிடம் நடைபெறும். தேர்வுக்கான ஹால்டிக்கெட் மே 1-ம் தேதி வெளியிடப்படும். அதன் முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியிடப்படும். மேலும், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உட்பட இதுகுறித்த கூடுதல் தகவல்களை https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011- 40759000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என் என்டிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

February 6, 2025

சளி, இருமல், நோய் எதிப்பு சக்தி.. குழந்தைக்கு தரும் பாலில் இந்த ஒரு மசலாவை கலந்து கொடுங்க..

 

இரவில் குழந்தைக்கு பாலில் இலவங்கப்பட்டை சேர்ப்பது தூக்கம், செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி, ரத்த சர்க்கரை கட்டுப்பாடு, மூளை செயல்பாடு மற்றும் சளி, இருமல் போன்றவற்றுக்கு உதவும்.

உங்கள் குழந்தை போதுமான ஊட்டச்சத்து பெறுகிறதா என்ற கவலை உங்கள் மனதில் அடிக்கடி எழுகிறதா? ஒரு கிளாஸ் பால் உங்கள் குழந்தை தவறவிடும் ஊட்டச்சத்துக்களை ஈடுசெய்யும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?

உங்கள் குழந்தைக்கு இரவில் வழக்கமாக ஒரு கிளாஸ் பால் கொடுக்கிறீர்கள் என்றால், அதில் ஒரு எளிய மசாலா பொருளை சேர்ப்பது அவர்கள் குடிக்கும் பாலின் சுவை மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். அது என்ன மசாலா என்று கேட்கிறீர்களா, இலவங்கப்பட்டை தன அது. உங்கள் குழந்தை இரவில் குடிக்கும் பாலில் இந்த அற்புத மசாலாவை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் இங்கே..

நம் அன்றாட சமையலில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான மசாலா பொருளாக உள்ளது ஒரு லேசான இனிப்பு சுவையை கொண்டுள்ள இலவங்கப்பட்டை. பாலில் இதை சேர்ப்பது உங்கள் குழந்தையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.


- இலவங்கப்பட்டை வழங்கும் மிக முக்கியமான நன்மைகளில் ஒன்று, சிறந்த தூக்கத்திற்கு உதவும் அதன் திறன். இந்த மசாலா பொருளில் உள்ள இயற்கை சேர்மங்கள் உடலையும், மனதையும் ரிலாக்ஸாக வைக்கவும், அமைதியான தூக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகின்றன. இதை சூடான பாலில் சேர்க்கும் போது நல்ல தரமான தூக்க கிடைக்கும் வகையிலான கலவையை உடலில் உருவாக்கும். பாலின் சூடு மற்றும் இலவங்கப்பட்டையின் இயற்கை தன்மை இரண்டும் சேர்ந்து படுக்கை நேரத்திற்கு ஏற்ற பானமாக அமைந்து நன்கு தூங்க உதவுகிறது.

- இலவங்கப்பட்டையில் இயற்கையாகவே காணப்படும் அழற்சி எதிர்ப்பு பண்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பு போன்றவை செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றன. செரிமான கோளாறு அல்லது அஜீரண பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு, இலவங்கப்பட்டை கலந்து ஒரு கப் சூடான பால் கொடுப்பது வயிறு உப்பசம் மற்றும் வாயு தொல்லையை குறைக்க உதவும். செரிமான நொதிகளின் உற்பத்தியை மேம்படுத்த, நம் உடல் உணவின் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சுவதை உறுதி செய்ய மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகளை குறைக்க இலவங்கப்பட்டை உதவுகிறது.

- குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்கள், இலவங்கப்பட்டையில் அதிகம் உள்ளது. இவை உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை எதிர்த்து போராடி, ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது, இதன் மூலம் நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறைகிறது. எனவே வழக்கமான அடிப்படையில் இரவில் உங்கள் குழந்தைக்கு கொடுக்கும்பாலில் இலவங்கப்பட்டை சேர்ப்பதனால், உங்களின் குழந்தையினுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

- ரத்த சர்க்கரை அளவை இலவங்கப்பட்டை ஒழுங்குபடுத்துகிறது. உங்கள் குழந்தையின் ரத்த சர்க்கரை அளவு ஏற்ற இறக்கமாக இருந்தால் அல்லது நீரிழிவு அபாயத்தில் இருந்தால் டயட்டில் இலவங்கப்பட்டை சேர்ப்பது ரத்த சர்க்கரை லெவலை கட்டுப்படுத்த உதவும். இரவு நேரம் குடிக்கும் பாலில் சிறிதளவு இலவங்கப்பட்டை சேர்ப்பது ஆரோக்கியமான குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்திற்கு கணிசமாக பங்களிக்கும்.

- மூளை செயல்பாடு மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த மற்றும் அறிவாற்றல் திறன்களை அதிகரிக்க உதவும் சேர்மங்கள் இலவங்கப்பட்டையில் உள்ளன. எனவே படிப்பில் கவனம், மன தெளிவு மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க தேவைப்படும் குழந்தைகளுக்கு இந்த மசாலா மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே குழந்தைக்கு இரவில் கொடுக்கும் பாலில் இதனை சேர்ப்பது குழந்தைகள் தங்களின் அன்றாட நடவடிக்கைகளில் சிறந்த செயல்திறனை பேணுவதற்கு உதவும்.

- குளிர் சீசனில் குழந்தைகளுக்கு ஏற்படும் சளி மற்றும் இருமலுக்கு இயற்கை தீர்வாக இலவங்கப்பட்டை இருக்கும். இதில் ஆன்டிமைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, எனவே தொண்டை புண் மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெற உதவும். இலவங்கப்பட்டை சேர்க்கப்பட்ட ஒரு கப் சூடான பால் தொண்டை வலியைத் தணிக்கும், இருமலை குறைக்கும். இதனால் உங்கள் குழந்தை இரவில் மிகவும் சௌகரியமாக தூங்க முடியும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

காலை உணவிற்கு தெரியாம கூட இந்த உணவுகளை சாப்பிடாதீங்க.. நாள் முழுவதும் நெஞ்செரிச்சலா இருக்கும்.!

 

காலையில் வெறும் வயிற்றில் நெஞ்செரிச்சல், வாயு தொல்லை ஏற்படுவதற்கு மோசமான உணவு, வாழ்க்கை முறை மற்றும் மன அழுத்தம் காரணம். சிட்ரஸ் பழங்கள், காபி, டீ, பிஸ்கட், வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.


காலையில் வெறும் வயிற்றில் நெஞ்செரிச்சல், வாயு தொல்லை போன்றவை அடிக்கடி ஏற்படுகிறது. மோசமான உணவு, மோசமான வாழ்க்கை முறை மற்றும் மன அழுத்தம் போன்ற பல காரணங்கள் வெறும் வயிற்றில் வாயு உருவாவதற்கு காரணமாக இருக்கலாம். சாப்பிடும்போதும், குடிக்கும்போதும் தெரியாமல் காற்றை விழுங்குவது, நீண்ட நேரம் பசியோடு இருப்பது, ஒழுங்கற்ற உணவு முறை, மன அழுத்தம் மற்றும் கவலை போன்றவற்றால் வயிற்றில் வாயு உருவாகும். இது தவிர காலையில் நாம் சாப்பிடும் சில உணவுகள், வயிற்றில் வாயு மற்றும் ஆசிட் உருவாக காரணமாகிறது. மேலும், சில உணவுகள் வயிற்றில் ஆசிட்-ஐ உருவாக்குகின்றன. இதன் காரணமாக, வயிற்றில் ஆசிட் ரிஃப்ளக்ஸை ஏற்படுத்தும்.

வயிற்றில் வாயுத்தொல்லை உள்ளவர்கள் ஆரோக்கியமான உணவை உண்ணவும், உணவை நன்கு மென்று சாப்பிடவும், மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்யவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். காலையில் வெறும் வயிற்றில் வாயு மற்றும் அசிடிட்டி இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், சில உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதை பற்றி விரிவாக பார்ப்போம்.


1. தக்காளி மற்றும் சிட்ரஸ் பழங்கள்: சிலர் அதிகாலையில் ஆரஞ்சு சாப்பிடுவதை விரும்புவார்கள். சிலர் காலை உணவாக தக்காளி சாப்பிடுவார்கள். இவற்றையெல்லாம் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், நாள் முழுவதும் வயிற்றில் ஆசிட் உருவாகிக்கொண்டே இருக்கும். உண்மையில், எலுமிச்சை, ஆரஞ்சு, தக்காளி போன்றவை ஆசிட்-ஐ உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. இது வெறும் வயிற்றில் ஆசிட் உற்பத்தியை அதிகரிக்கிறது. இந்த பொருட்களில் சிட்ரிக் ஆசிட் மற்றும் மாலிக் ஆசிட் உள்ளது, இது ஆசிட் உற்பத்தியை அதிகரிக்கிறது.



2. ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்கவும்: சீஸ், பட்டர் போன்றவற்றை காலையில் சாப்பிட்டால் வயிற்றில் ஆசிட் உருவாகும். இந்த பொருட்களில் நிறைய கொழுப்பு உள்ளது. எனவே இந்த கொழுப்பை உடைக்க நிறைய ஆசிட் தேவைப்படும். இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், வயிற்றில் அதிக ஆசிட் உற்பத்தியாகும். எனவே அவற்றைத் காலையில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று தேசிய நீரிழிவு மற்றும் செரிமான மற்றும் சிறுநீரக நோய்களுக்கான நிறுவனம் கூறியுள்ளது.



3. காபி மற்றும் டீ: நீங்கள் காலையில் எழுந்தவுடன் டீ அல்லது காபி குடிக்கிறீர்களா? அப்படிப்பட்ட தவறை ஒருபோதும் செய்யாதீர்கள், ஏனெனில் அது வயிற்றில் அதிகப்படியான ஆசிட்-ஐ ஏற்படுத்தும். எனவே காபி அல்லது டீ குடிக்கும் முன், முதலில் ஏதாவது சாப்பிடுங்கள், அதன் பிறகு டீ அல்லது காபி குடிக்கவும். டீ மற்றும் காபியில் உள்ள காஃபின் வயிற்றில் ஆசிட் உற்பத்தியை அதிகரிக்கிறது.



4. பிஸ்கட் மற்றும் குக்கீகள்: சிலர் காலை உணவாக ஒரு கப் டீ அல்லது காபி உடன் பிஸ்கட் சாப்பிடுவார்கள். இந்த இரண்டு கலவைகளும் வயிற்றுக்கு மிகவும் மோசமானவை. இவை இரண்டும் வயிற்றில் அசிடிட்டியை அதிகரிக்கும். பிஸ்கட்டில் ரிஃப்பைன்டு சுகர் மற்றும் மாவு பயன்படுத்தப்படுகிறது, அதே நேரத்தில் காஃபின் அசிடிட்டியை உருவாக்கும்.



5. வறுத்த உணவு காலையில் வறுத்த உணவுகளை சாப்பிடவே கூடாது. இதில் சோலே பத்துரா, பூரி சப்ஜி, கச்சோரி, சமோசா ஆகியவை அடங்கும். இதை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் குடல் பிரச்சனைகள் ஏற்படும். அதிகாலையில் அதை ஜீரணிக்க, அதிக என்சைம் மற்றும் பித்தநீர் தேவைப்படுகிறது, ஆனால் இது நடக்கவில்லை என்றால், ஆசிட் உற்பத்தி அதிகரிக்கிறது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

காஃபியுடன் இந்த 5 உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் வேகமாக உடல் எடை குறையும்..!

 மிகவும் பிரபலமான பானங்களில் ஒன்று பிளாக் காபி. பிளாக் காபி என்பது பால் அல்லது சர்க்கரை சேர்க்காமல் தயாரிக்கப்படும் காபி. பிளாக் காபியை தினமும் குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். பிளாக் காபியில் உள்ள காஃபின் கொழுப்பை எரிப்பதை ஊக்குவிக்கிறது மற்றும் உடற்பயிற்சி செய்பவர்களின் செயல்திறனை மேம்படுத்தவும், நாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்கவும் உதவுகிறது.

பிளாக் காபியை சில உணவுகளுடன் இணைக்கும்போது உடல் எடையை விரைவாக குறைக்கவும் உதவுகிறது. சரியான உணவுடன் இணைந்து அருந்துவது கொழுப்பை எரிக்கவும், பசியைக் குறைக்கவும் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை ஊக்குவிக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. விரைவான எடை இழப்பு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்காக பிளாக் காபியுடன் சேர்த்து சாப்பிடக்கூடிய 5 உணவுகள் இங்கே.


1. அவகேடோ பழம் : அவகேடோ பழம் ஆற்றல் மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். இதை பிளாக் காபியுடன் இணைக்கும்போது, ​​ ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் காஃபின் ஆகியவற்றின் சீரான கலவையை வழங்குகின்றன. இது நமக்கு தேவையான ஆற்றலை வழங்குவது மட்டுமின்றி, பசியைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இதன் மூலம் உடல் எடையை குறைக்க உதவி செய்கிறது.


2. முட்டைகள் : பிளாக் காபியுடன் முட்டைகளை சேர்த்து சாப்பிடுவது உடற்பயிற்சி செய்பவர்களின் செயல்திறனை மேம்படுத்தவும், நாள் முழுவதும் உங்களை முழுமையாகவும், திருப்தியாகவும் உணர வைக்கும். எனவே தினமும் இரண்டு முட்டைகளை உங்கள் அன்றாட உணவு பட்டியலில் இணைத்து கொள்ளுங்கள்.


3. கிரேக்க தயிர் : கிரேக்க தயிர் காலை உணவு அல்லது சிற்றுண்டிக்கு திருப்திகரமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும். கூடுதல் ஊட்டச்சத்திற்காக நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த பெர்ரிகள் அல்லது சிறிது சியா விதைகளைச் சேர்க்கவும். இதன் மூலம் உங்களுக்கு தேவையான சீரான உணவு கிடைக்கும்.


4. நட்ஸ் மற்றும் விதைகள் : பிளாக் காபியுடன் நட்ஸ் மற்றும் விதைகளை சேர்த்து சாப்பிடுவது பசியைத் தடுக்க உதவுகின்றன மற்றும் ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. உங்கள் காலை காபியுடன் ஒரு சிறிய கைப்பிடி அளவு பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகள் மற்றும் ஆளி விதை, சூரிய காந்தி விதைகள் போன்ற விதைகளையும் சேர்த்து கொள்வது நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கவும், நாள் முழுவதும் பசியைக் கட்டுப்படுத்தவும் ஒரு சிறந்த வழியாகும்.



5. பெர்ரி : பெர்ரிகளை பிளாக் காபியுடன் இணைப்பது உங்கள் காலை பானத்தின் சுவையை அதிகரிக்கும். அதே நேரத்தில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு கொழுப்பை எரிக்கவும் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் முக்கிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Cognizant நிறுவனத்தில் Cloud Infra Developer காலிப்பணியிடங்கள் – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

 Cognizant நிறுவனத்தில் Cloud Infra Developer காலிப்பணியிடங்கள் – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

Cognizant Technology Solutions ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Cloud Infra Developer பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Cognizant பணியிடங்கள்:

Cloud Infra Developer பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Developer கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelors/ Masters degree in IT, Data Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Developer ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு Cognizant-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

Cognizant தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாள் முடிவதற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group