February 11, 2025

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் Senior Research Fellow காலிப்பணியிடம்

 Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு. பின் வரும் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன Senior Research Fellow.

அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்கள் மொத்த எண்ணிக்கை 1. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 17.02.2025 வரை. இதற்கு தகுதியான நபர்களுக்கு ரூ.42,000 வரை சம்பளம் பெறலாம். மேலும் இதற்கான முழுவிவரம் இந்த பக்கத்தின் கீழே பகிரப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் விவரம்:

பதவியின் பெயர்: Senior Research Fellow

காலியிடங்கள் மொத்த எண்ணிக்கை: 1

தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் M.Sc, ME/M.Tech தேர்ச்சி செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை நோக்கவும்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 42,000/- வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 18 முதல் 37 க்குள் இருந்தல் அவசியம். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை கவனிக்கவும்.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை கவனிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (17.02.2025) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மின்னஞ்சல்:
ampasaladr@bicpu.edu.in

விண்ணப்பிக்க கடைசி தேதி:

17.02.2025

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ இணையதளம்: இங்கே பார்க்கவும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:இங்கே டவுன்லோட் செய்யவும்

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)


மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் 22 Technical Assistant காலிப்பணியிடங்கள்

 Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு. பின் வரும் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன Technical Assistant.

அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்கள் மொத்த எண்ணிக்கை 22. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 01.03.2025 வரை. இதற்கு தகுதியான நபர்களுக்கு ரூ.70,290 வரை சம்பளம் பெறலாம். மேலும் இதற்கான முழுவிவரம் இந்த பக்கத்தின் கீழே பகிரப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் விவரம்:

பதவியின் பெயர்: Technical Assistant

காலியிடங்கள் மொத்த எண்ணிக்கை: 22

தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் B.Sc, Diploma தேர்ச்சி செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை நோக்கவும்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 70,290/- வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 28 க்குள் இருந்தல் அவசியம். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை கவனிக்கவும்.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Written Exam/Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை கவனிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (01.03.2025) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:
General/OBC-Rs.500
SC/ ST/PwBD/ESM/Women/CSIR Employees-No Fees.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

01.03.2025

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ இணையதளம்: இங்கே பார்க்கவும்

இப்பணிக்கு விண்ணப்பிக்க: இங்கே விண்ணப்பிக்கவும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:இங்கே டவுன்லோட் செய்யவும்

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)

தமிழக அரசு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் 132 Assistant & Associate Professor காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

 Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
தமிழக அரசு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு. பின் வரும் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன Assistant & Associate Professor.

அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்கள் மொத்த எண்ணிக்கை 132. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழக அரசு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 03.03.2025 வரை. இதற்கு தகுதியான நபர்களுக்கு ரூ.57,700 முதல் ரூ.217,100 வரை சம்பளம் பெறலாம். மேலும் இதற்கான முழுவிவரம் இந்த பக்கத்தின் கீழே பகிரப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் விவரம்:

பதவியின் பெயர்: Assistant & Associate Professor

காலியிடங்கள் மொத்த எண்ணிக்கை: 132

தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் Law, MA தேர்ச்சி செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை நோக்கவும்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 57,700/- முதல் ரூ. 217,100/- வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 40 முதல் 45 க்குள் இருந்தல் அவசியம். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை கவனிக்கவும்.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை கவனிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (03.03.2025) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:
Rs.600
Rs.300 for SC/ST/PWD

விண்ணப்பிக்க கடைசி தேதி:

03.03.2025

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ இணையதளம்: இங்கே பார்க்கவும்

இப்பணிக்கு விண்ணப்பிக்க: இங்கே விண்ணப்பிக்கவும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:இங்கே டவுன்லோட் செய்யவும்

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)

தமிழக ரயில்வேயில்(CMRL) Manager காலிப்பணியிடங்கள் – முழு விவரங்களுடன் || உடனே விரையுங்கள்!

 

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தமிழக ரயில்வேயில்(CMRL) Manager காலிப்பணியிடங்கள் – முழு விவரங்களுடன் || உடனே விரையுங்கள்!

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Manager (VAC & TVS) and Assistant Manager – (HR) பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Manager (VAC & TVS) and Assistant Manager – (HR) பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B.Tech (Mechanical / EEE) / Graduate in Science/ Commerce/ Arts/ Humanities / MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • AM (HR): அதிகபட்சம் 30 ஆண்டுகள்
  • தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.62,000/- முதல் ரூ.85,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.
  • தகுதியானவர்கள் நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

    விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 12.02.2025ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

  • Manager (VAC & TVS): அதிகபட்சம் 38 ஆண்டுகள்

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)


மார்ச் மாதத்தில் உதவி பேராசிரியர் தகுதித் தேர்வு: முழுவீச்சில் ஏற்பாடுகள் நடந்து வருவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்

 1350375

கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான தகுதித்தேர்வை (செட்) மார்ச் மாதம் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது.


கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கு நெட் அல்லது செட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நெட் தேர்வை யுஜிசி சார்பில் தேசிய தேர்வு முகமையும், செட் எனப்படும் மாநில அளவிலான தகுதித்தேர்வை சம்பந்தப்பட்ட மாநில அரசின் சார்பில் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகமும் நடத்துகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் செட் தகுதித்தேர்வை 2024 முதல் அடுத்த 3 ஆண்டு காலத்துக்கு நடத்த திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது.


அதைத்தொடர்ந்து, செட் தேர்வுக்கான அறிவிப்பை சுந்தரனார் பல்கலைக்கழகம் கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிட்டு அதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை அந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் 30 வரை பெற்றது. செட் தேர்வு ஜூன் 7 மற்றும் 8-ம் தேதி கணினி வழியில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஹால் டிக்கெட்டையும் ஆன்லைனில் வெளியிட்டது. இந்நிலையில், தேர்வு தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்பாக அதாவது ஜுன் 5-ம் தேதி அன்று, தொழில்நுட்பக் காரணங்களால் செட் தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக திடீரென ஓர் அறிவிப்பை வெளியிட்டது. இதனால், செட் தேர்வு தேர்வெழுத தயாராக இருந்த தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


அதன் பிறகு 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் ஸ்லெட் தேர்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில், ஸ்லெட் தேர்வை நடத்தும் பொறுப்பை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைத்து தமிழக அரசு கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓர் அரசாணை வெளியிட்டது. அதைத்தொடர்ந்து, மனோன்மணீயம் சுந்தரனா பல்கலைக்கழக அறிவிப்பின்படி செட் தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களின் அனைத்து தரவுகளும் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டன. செட் விண்ணப்பதார்களின் விவரங்கள் ஒப்படைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் செட் தேர்வு நடத்தப்படவில்லை.


இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "செட் தேர்வுக்கு நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். அவர்களின் விவரங்கள் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. செட் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. செட் தேர்வை மார்ச் மாதத்தில் நடத்த முடிவுசெய்துள்ளோம்" என்றார்.


புதிய விண்ணப்பதாரர்கள் கோரிக்கை: இதற்கிடையே, செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று புதிய விண்ணப்பதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய முதுகலை பட்டதாரிகளும், தற்போது இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் கூறும்போது, "பொதுவாக ஒரு தேர்வு வாரியம் தேர்வு நடத்துவதற்கு முன்பாக தேர்வுக்கான அறிவிப்பை வெளியிடும். அதன்பிறகு விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளும். அந்த வகையில், செட் தேர்வு நடத்தும் பொறுப்பு டிஆர்பி-க்கு முதல்முறையாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே, டிஆர்பி சார்பில் செட் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு புதிய விண்ணப்பங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டு்ம். செட் தேர்வு அறிவிப்பு கடந்த ஆண்டு மார்ச் மாத்ம் வெளியிடப்பட்டது. இ்ப்போது ஓராண்டு நெருங்கிவிட்டது. அடுத்த செட் தேர்வு எப்போது நடத்தப்படும் என்பது தெரியாது. எனவே, டிஆர்பி செட் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு புதிய விண்ணப்பதாரர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர். முதுகலை இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் நெட், செட் தகுதிதேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

அனைத்து வகையான விடுப்பு விபரம் ஒரே பக்கத்தில்

 

அனைத்து வகையான விடுப்பு விபரம் ஒரே பக்கத்தில்....

IMG-20250211-WA0008_wm_wm

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

மீண்டும் வருகிறது ஒராண்டு பி.எட் படிப்பு; யார் எல்லாம் தகுதி?

 c81JL4w9IY6KLMo0pu8r

மத்திய அரசாங்கம் ரத்து செய்த பின்னர் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் ஒரு வருட பி.எட் படிப்பை மீண்டும் கொண்டுவர உள்ளது; யார் எல்லாம் இந்த படிப்பில் சேர தகுதியுள்ளவர்கள் என்பது இங்கே ஒரு பெரிய கொள்கை மாற்றமாக, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (NCTE) ஒரு வருட பி.எட் (B.Ed) மற்றும் எம்.எட் (M.Ed) படிப்புகளை மீண்டும் கொண்டு வர உள்ளது, கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இந்த படிப்புகளின் கால அளவை இரண்டு ஆண்டுகளாக மாற்றிய நிலையில் தற்போது ஓராண்டாக மாற்றப்பட உள்ளது. புதிய வரைவு விதிமுறைகளின் ஒரு பகுதியான இந்த மாற்றம், 2026-27 முதல் நடைமுறைக்கு வரும், இது தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ஆசிரியர் பணிக்கான விரைவான வழிகளை மீண்டும் வழங்குகிறது. 


வரைவு விதிமுறைகள் 2025 ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலின் சமீபத்திய பொதுக்குழுக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது மற்றும் கருத்துகளைப் பெற விரைவில் பகிரங்கப்படுத்தப்படும்.


பல தசாப்தங்களாக ஓராண்டு படிப்புகளாக நடத்தப்பட்ட பி.எட் மற்றும் எம்.எட் படிப்புகள், 2014 இல் ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (அங்கீகார விதிமுறைகள் மற்றும் நடைமுறை) விதிமுறைகளின் கீழ் இரண்டு ஆண்டு படிப்புகளாக நீட்டிக்கப்பட்டன. 2015 இல் பாராளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு பதிலளித்தபோது, அப்போதைய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி, 2014 விதிமுறைகளின்படி யோகா கல்வி, பாலின படிப்பு உள்ளிட்ட புதிய தொகுதிகளுடன் பி.எட் பாடத்திட்டம் திருத்தப்பட்டதோடு, 20 வார இன்டர்ன்ஷிப் பயிற்சியும் அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறினார். “அதன் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், பி.எட் படிப்பின் கால அளவு மேம்படுத்தப்பட்டு, அது மிகவும் தொழில்முறை மற்றும் கடுமையான ஆசிரியர் கல்வித் திட்டமாக மாற்றப்பட்டுள்ளது," என்று பாராளுமன்றத்தில் பதில் கூறப்பட்டது.


இந்த விதிமுறைகள், ஆசிரியர் கல்விக்கான விதிமுறைகளை நிர்ணயித்தது, பின்னர் திருத்தப்படவில்லை.


இருப்பினும், ஒரு வருட பி.எட் மற்றும் எம்.எட் படிப்புகளின் மறு அறிமுகமானது இரண்டு வருட படிப்புகள் ரத்து செய்யப்படுவதை அர்த்தப்படுத்துவதில்லை. ஒரு வருட எம்.எட் திட்டம் முழு நேரமாக இருக்கும், அதே நேரத்தில் ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிர்வாகிகள் போன்ற பணிபுரிபவர்களுக்கு இரண்டு வருட பகுதி நேர படிப்பு வழங்கப்படும் என்று ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சலின் தலைவர் பங்கஜ் அரோரா கூறினார்.


வரைவு விதிமுறைகளின்படி, ஓராண்டு பி.எட் படிப்புக்கு, நான்கு ஆண்டு பட்டப்படிப்பு அல்லது முதுகலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள். மூன்றாண்டு பட்டப்படிப்பு படிப்பை முடித்தவர்களுக்கு இது கிடைக்காது என்றும், அத்தகைய மாணவர்களுக்கு, இரண்டு ஆண்டு பி.எட் திட்டம் தொடரும் என்றும் பங்கஜ் அரோரா கூறினார்.


“2015 இல் தொடங்கப்பட்ட இரண்டு வருட எம்.எட் திட்டம், ஆசிரியர் கல்வியை மேம்படுத்துவதற்கோ அல்லது கற்பித்தல் ஒழுக்கத்தை இளம் மாணவர்களிடையே மேம்படுத்துவதற்கோ உதவவில்லை. பல நிறுவனங்களில், இடங்கள் காலியாகிவிட்டன, பாடத்திட்டம் இருந்திருக்க வேண்டிய விதத்தில் மேம்படுத்தப்படவில்லை. ஆராய்ச்சிக் கூறுகளுடன் கூடுதலாக, எம்.எட் பாடத்திட்டத்தில் களப்பணி கூறும் மற்றும் சமூக ஈடுபாடு கூறும் இருக்கும்,” என்று பங்கஜ் அரோரா கூறினார்.


"2014 வரை ஒரு வருட பி.எட் மற்றும் எம்.எட் படிப்புகள் ஆசிரியர் கல்வியின் முக்கிய திட்டங்களாக இருந்தன. இது தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 இன் வெளிச்சத்தில் இந்தத் திட்டங்களின் மறுமலர்ச்சியாகும். தேசிய கல்விக் கொள்கை உடன், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) தேசிய உயர்கல்வித் தகுதிக் கட்டமைப்பை வெளியிட்டது. இதில், 6.5 லெவலில், ஓராண்டு முதுநிலைப் பட்டப்படிப்பு இருக்கலாம். நமது மாணவர்கள் நான்கு வருட ITEP (ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டம்) அல்லது நான்கு வருட இளங்கலைப் பட்டம் மற்றும் ஒரு வருட பி.எட் படிப்புக்குப் பிறகு நிலை 6.5 இல் இருப்பார்கள்,” என்று பங்கஜ் அரோரா கூறினார்.


ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டம், நான்கு ஆண்டு திட்டமான (BA B.Ed/ B.Sc B.Ed/ B.Com B.Ed), 2023-24 கல்வி அமர்வில் இருந்து 57 நிறுவனங்களில் முன்முயற்சி முறையில் தொடங்கப்பட்டது. இது 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்குக் கிடைக்கும். 2025-26 ஆம் ஆண்டு முதல், ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டம் முன்முயற்சி முறையில் இருக்காது மற்றும் ஆசிரியர் கல்விக்கான வழக்கமான திட்டமாக இருக்கும், அதாவது இந்த ஆண்டு முதல் படிப்பை வழங்க நிறுவனங்கள் அங்கீகாரம் பெறலாம் என்று பங்கஜ் அரோரா கூறினார். ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டம் யோகா, உடற்கல்வி, சமஸ்கிருதக் கல்வி மற்றும் கலைக் கல்வி ஆகிய நான்கு சிறப்புத் திட்டங்களும் 2025-26 அமர்வில் இருந்து வழங்கப்படும், என்று பங்கஜ் அரோரா கூறினார்,


2014 விதிமுறைகள் நான்கு வருட பி.ஏ/பி.எஸ்சி பி.எட்க்கு வழங்கப்பட்டுள்ளது, இது இப்போது ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டமாக மாறியுள்ளது. மேலும் இந்த விதிமுறைகள் மூன்று வருட ஒருங்கிணைந்த பி.எட் – எம்.எட் திட்டங்களையும் வழங்கியுள்ளன, மேலும் இது குறித்து ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் இன்னும் முடிவு எடுக்கவில்லை. "மீதமுள்ள நிகழ்ச்சிகள் பற்றி பின்னர் முடிவு செய்வோம்" என்று பங்கஜ் அரோரா கூறினார்.


“12 ஆம் வகுப்புக்குப் பிறகு, யாராவது பள்ளி ஆசிரியராக வேண்டும் என்று முடிவு செய்தால், ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டம் உள்ளது. மூன்று வருட பட்டப்படிப்புக்குப் பிறகு முடிவு செய்தால், இரண்டு வருட பி.எட் படிப்பு உள்ளது. முதுகலை அல்லது நான்கு ஆண்டு பட்டப்படிப்புக்குப் பிறகு, ஒரு வருட பி.எட் படிப்பு வழங்கப்படுகிறது. இந்த மூன்று திட்டங்களும் முற்றிலும் வெவ்வேறு மக்களுக்கானது... எவருக்கும், எந்தக் கட்டத்திலும், கற்பித்தலுக்கு வரத் தயாராக இருக்கும், பொருத்தமான திட்டம் கொடுக்கப்பட வேண்டும். தேசிய கல்விக் கொள்கையின் கீழ் புதிய பள்ளிக் கல்விக் கட்டமைப்பின்படி இந்தத் திட்டங்கள் நான்கு சிறப்புகளைக் கொண்டிருக்கும் - அடித்தளம், ஆயத்தம், நடுநிலை மற்றும் இடைநிலைப் பள்ளி நிலைகள்,” என்று பங்கஜ் அரோரா கூறினார்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group