February 14, 2025

பொதுத்தேர்வு - ஆய்வு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டவை

 

Education News (கல்விச் செய்திகள்)
பொதுத்தேர்வு பணியில் நாள்தோறும் 40,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.

போக்சோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 56 பேர் மீது இறுதி தீர்ப்பு வர உள்ளது.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடர்பான கண்காணிப்பு அலுவலர்கள், ஆய்வு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


ஆலோசனையின்போது அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில்,


* பார்வை மாற்றுத் திறனாளிகள் 12-ம் வகுப்பு தேர்வை கணினி வழியாக எழுத உள்ளனர்.


* பார்வை திறன் குறைபாடு உள்ள மாணவரின் கோரிக்கையை ஏற்று கணினி வழியில் தேர்வெழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


* 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8.21 லட்சம் பேரும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8.23 லட்சம் பேரும் எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 9.13 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.


* பொதுத்தேர்வு பணியில் நாள்தோறும் 40,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர் என்று கூறினார்.


இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:


* பள்ளிக்கல்வித்துறையில் 238 போக்சோ வழக்குகள் உள்ளன. அதில் 11 பேர் குற்றமற்றவர்கள். 7 பேர் இறந்து விட்டார்கள்.


* போக்சோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 56 பேர் மீது இறுதி தீர்ப்பு வர உள்ளது.


* புகார்கள் தொடர்பாக தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், எந்த பள்ளிக்கூடமாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. யாரும் பயப்பட தேவையில்லை. உங்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை.


* தவறு என்று வரும்போது அது எப்படிப்பட்ட தவறாக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் விதத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

SET தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இன்றைய முக்கிய அறிவிப்பு.

   

Education News (கல்விச் செய்திகள்)
மாநிலத் தகுதித் தேர்வு ( SET ) 2024 ஆம் ஆண்டிற்கான அறிவிக்கை எண் . 01/2024 ) 20.03.2024 அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மூலம் வெளியிடப்பட்டு , இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

 தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது . அரசாணை ( D ) எண் . 278 , உயர்கல்வித் ( எச் 1 ) துறை , நாள் .17.12.2024 ன்படி மாநிலத் தகுதித் தேர்வினை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நடத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. 


இந்நிலையில் , UGC வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் , மாநிலத் தகுதித் தேர்வு , வருகின்ற 2025 மார்ச் மாதம் 6,7,8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் CBT மூலம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 தேர்விற்கான நுழைவுச்சீட்டு ( Hall Ticket ) ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் ( https://www.trb.tn.gov.in ) தேர்வு தேதிக்கு 7 நாட்களுக்கு முன்பாக பதிவேற்றம் செய்யப்படும் . அதனை பதவிறக்கம் செய்து எடுத்துக் கொள்ளலாம்.


 குறிப்பு : மேற்படி நுழைவுச் சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு தனியாக அனுப்பப்பட மாட்டாது .


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

NMMS தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் (Hall Tickets) பதிவிறக்கம் செய்தல் - DGE Proceedings

   

Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250214_143922

தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு (NMMS), பிப்ரவரி-2025 தேர்வுமைய பெயர்ப்பட்டியலுடன் கூடிய வருகைத் தாட்கள் (Nominal Roll Cum Attendance Sheets) மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் (Hall Tickets) பதிவிறக்கம் செய்தல் தொடர்பான செய்தி..

2024 - 2025 ஆம் ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு ( NMMS ) 22.02.2025 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறவுள்ளது . இத்தேர்விற்கு வருகைபுரியும் மாணவர்களின் பெயர்பட்டியலுடன் கூடிய வருகைத் தாட்கள் ( Nominal Roll Cum Attendance Sheets ) தேர்வு மையம் வாரியாக www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 17.02.2025 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது . எனவே , ஒவ்வொரு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களும் தவறாமல் பெயர் பட்டியலினை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

NMMS FEB 2025- NR AND HALL TICKET DOWNLOADING LETTER - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

புதிய வருமான வரிச் சட்டம் - புதிதாய் என்ன சொல்கிறது?

 

Education News (கல்விச் செய்திகள்)
1350641

இதோ வந்து விட்டது - புதிய வருமான வரிச் சட்ட வரைவு மசோதா. இது எந்த அளவுக்கு நமது எதிர்பார்ப்புகளை நம்பிக்கைகளை நிறைவேற்றி இருக்கிறது..?


வரைவு மசோதா, தொடக்கத்தில் இப்படிச் சொல்கிறது: இப்போது உள்ள வருமான வரி சட்டம் 1961, கடந்த 60 ஆண்டுகளில் எண்ணற்ற திருத்தங்களைக் கண்டுள்ளது. இதன் மூலம் வருமான வரிச் சட்டத்தின் அடிப்படைக் கட்டுமானம் அதிக சுமைகளை தாங்கி விட்டது; இதன் மொழி மிகவும் சிக்கலானதாக உள்ளது; வரி செலுத்துவோருக்கு அதிக செலவு தருவதாய், நேரடி வரி நிர்வாகத்தின் திறனுக்குத் தடையாய் இருக்கிறது.


வரி நிர்வாகத்தினர், வரி நிபுணர்கள் மற்றும் வரி செலுத்துவோர், வருமான வரிச் சட்டத்தின் கட்டுமானம் மற்றும் சிக்கல்கள் குறித்து கவலை எழுப்பி உள்ளனர். ஆகவே, எளிதில் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவான சுருக்கமான சட்டம் உருவாக்க, வருமானவரிச் சட்டம் 1961 முழுவதுமாக மீள்பார்வை செய்யப்படும் என்று ஜூலை 2024 நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இந்த எண்ணம் நிறைவேறியதா..?


536 பிரிவுகள், 16 அட்டவணைகள் கொண்ட 566 பக்க புதிய சட்டம் - 'எளிமையாக படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாக சுருக்கமாக' விளங்குவதாய்ச் சொல்ல இயலுமா..? மன்னிக்கவும்; 'முதல் பார்வையில்' அப்படிச் சொல்ல இயலவில்லை.


இப்போதைக்கு, ஒரு நல்ல செய்தி உடனடியாகக் கண்ணில் படுகிறது. நாம் பலமுறை விடுத்த வேண்டுகோள் நிறைவேறி இருக்கிறது. நிதி ஆண்டு - மதிப்பீட்டு ஆண்டு என்று தனித்தனியே குறிப்பிட வேண்டிய தேவை என்ன..? ஒன்று மட்டும் இருந்தால் போதாதா..? புதிய வருமான வரி சட்டத்தில் இது நீக்கப்பட்டு விட்டது. 'வரி ஆண்டு' மட்டுமே உள்ளது! நிச்சயம் பாராட்டுக்கு உரியது.

அதேசமயம், தற்போது நிதியாண்டு ஏப்ரல் 1 தொடங்கி மார்ச் 31 வரை உள்ளது. இதனை மாற்றி நாட்காட்டி ஆண்டுக்கு (Calendar Year) ஏற்ப ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை என்று மாற்றி அமைக்க வேண்டும் என்கிற வெகு நீண்ட நாள் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்பது மிகுந்த ஏமாற்றம்.


ஜவஹர்லால் நேரு காலத்தில் தொடங்கி 70 ஆண்டுகளுக்கும் மேலாக, நாட்காட்டி ஆண்டையே நிதியாண்டாகக் கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கை, நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு, ஜவஹர்லால் நேருவும் அதற்கு உடன்பட்டு, அடுத்தடுத்து வந்த அரசுகளும், வெவ்வேறு குழுக்களும் தொடர்ந்து ஆதரித்து ஆமோதித்து உள்ள போதிலும் புதிய வருமான வரி சட்ட மசோதா கவனத்தில் கொள்ளாதது ஏன் என்று புரியவில்லை. இந்த மாற்றம், வரி செலுத்தும் பொதுமக்களுக்கு மிகவும் உதவியாய் இருக்கும்.


உதாரணத்துக்கு, இரண்டு வாக்கியங்கள்: ஒன்று - '2025-26-ல் வருமானம் எவ்வளவு .?' மற்றது - '2025-ல் வருமானம் எவ்வளவு..?' இரண்டாம் கேள்வி எத்தனை எளிதாக இருக்கிறது ...? ஏன் இந்த மாற்றம் செய்யப் படவில்லை..? இன்னமும் கூட, வரிச் சட்டங்கள் அத்தனை எளிதில் யாருக்கும் புரிந்து விடக்கூடாது என்கிற அதிகார வர்க்கத்தின் நல்ல எண்ணம் புதிய வருமான வரி சட்டத்திலும் தொடர்கிறது!


இதேபோல, ஏற்றுக் கொள்ள முடியாத மற்றொன்று - மொத்த வருமானத்தைக் கணக்கிடுவதில் அனுமதிக்கப்படும் கழிவுகள். எப்போதும் போல ஆயுள் காப்பீடு / மருத்துவ காப்பீடு தவணைத் தொகை, வீட்டுக் கடன் மீதான வட்டித் தொகை ஆகியவற்றுக்கு 'வரம்பு' வைக்கிற சட்டம், பிரிவு 136, 137இன் கீழ் அனுமதிக்கப்படும் கழிவுக்கு வரம்பு ஏதும் வைக்கவில்லை. ஏன் ..? காரணம், இவை அரசியல் கட்சிகளுக்கு வழங்கும் நன்கொடை மீதான கழிவுகள். அதாவது அரசியல் கட்சிகளுக்கு எவ்வளவும் நிதி வழங்கலாம்: வருமான வரியில் இருந்து கழிவு பெறலாம். சரி, விடுங்கள்; யார் இதனைப் பெரிதாகப் பேசப் போகிறார்கள்?


நிறைவேறும் என்று எதிர்பார்க்கவில்லை; ஆனாலும் அரசு மிக உறுதியாய் 'ஏதேனும்' செய்து இருக்கலாம் என்று தோன்றுகிற இரண்டு அம்சங்கள், புதிய சட்ட மசோதாவில் அப்படியே தொடர்கின்றன. அறக்கட்டளை வருமானம், விவசாய வருமானம் - இரண்டும் வருமானவரியில் இருந்து விலக்கு பெற்றவை.


அறக்கட்டளைக்கு வரும் வருமானத்தில் வரி செலுத்தி விட்டு மீதத் தொகையில் அறப்பணி செய்தால் ஆகாதா? வணிக நோக்கத்துடன் செயல்படும், அளவின்றி வருமானம் ஈட்டும் மருத்துவமனைகள், உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை அறக்கட்டளையின் பெயரால் வருமான வரியில் இருந்து விலக்கு பெறுவதைத் தொடர்ந்து அனுமதித்தல் எந்த வகையில் நியாயம்?


ஏழை விவசாயிகளின் வருமானத்துக்கு வரிவிலக்கு - முற்றிலும் நியாயமானது. முழு மனதுடன் வரவேற்கலாம். அதே நேரம், எத்தனை செல்வந்தர்கள், பல இயக்க விவசாய நிலங்களை வளைத்துப் போட்டு, பல சமயங்களில் அங்கே விவசாயமும் செய்யாமல், பிற வழிகளில் தமக்கு வந்த வருமானத்தை விவசாய வருமானமாய்க் காட்டி, வருமான வரி விலக்கு பெற முடிகிறது.


புதிய சட்டத்திலும் இந்த அவலம் தொடர்கிறது. மேற்சொன்ன இரண்டு அம்சங்கள் குறித்தும் அரசியல் கட்சிகள், மக்கள் பிரதிநிதிகள் கேள்வி எழுப்புவார்கள் என்று எதிர்பார்ப்பது அறிவுடைமை அன்று. அறக்கட்டளை வருமானம், விவசாய வருமானத்துக்கு வரம்பு வைத்து, வரி விதிக்கலாம்; தவறில்லை. ஆனால், பயனாளிகள் எவ்வாறு தமக்கு எதிராகவே பேசுவார்கள்?


பல நூறு பக்கங்களுக்கு நீளும் புதிய வருமான வரி மசோதா பல்வேறு நல்ல அம்சங்களையும் கொண்டுள்ளது. வரவேற்கத்தக்க நல்ல அம்சங்கள் நிறையவே உள்ளன. அது குறித்துப் பிறகு பார்ப்போம். இப்போதைக்கு 'புதிய பார்வை' 'புதிய பாதை' என்று சொல்ல முடியவில்லை. ஆனாலும், 1961 சட்டத்தை விடவும் புதிய சட்டம், சில / பல அம்சங்களில் எளிமையாக உள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை.


நேரடி வரி நிர்வாகம் மீதான அரசின் பார்வை இன்னமும் தெளிவாய் தீர்க்கமாய் இருந்து இருக்கலாம். ஒருவேளை மசோதாவின் நிறைவில் அது நிறைவேறலாம்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

அதிகரிக்கும் ‘ஆல் பாஸ்’ - அசத்தும் மிரட்டுநிலை அரசு உயர்நிலைப் பள்ளி!

 

Education News (கல்விச் செய்திகள்)

1350717

அரிமளம் அருகே மிரட்டுநிலை அரசு உயர்நிலைப் பள்ளியில் நடத்தப்படும் தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படுவதால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது.


புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே மிரட்டுநிலை அரசு உயர்நிலைப் பள்ளியில் சுமார் 300 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் கல்வியில் சிறந்து விளங்குவதற்காக நிகழாண்டில் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.500 வீதம் வழங்கப்பட்டுள்ளது. இது மாணவர்களிடையே கற்றல் ஆர்வத்தை தூண்டியிருப்பதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.


இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஏ.எல்.முத்துக்குமார் கூறியதாவது: ஒவ்வொரு வகுப்பிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவ, மாணவிகள் படிப்பில் நாட்டமின்றி இருக்கின்றனர். இவர்களிடையே கல்வியின் அவசியத்தை புரிய வைப்பதுடன், மற்ற மாணவர்களுடன் போட்டியிட்டு படிக்க வைக்கும் விதமாக ஆஸ்திரேலியாவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மீ.மாதவன் மூலம் காலாண்டுத் தேர்வில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற 104 பேருக்கு தலா ரூ.500 வீதம் கொடுக்கப்பட்டது.


இதைத் தொடர்ந்து நடைபெற்ற அரையாண்டுத் தேர்வில் முழுத் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்தது. இவர்களுக்கும் தலா ரூ.500 வீதம் மொத்தம் ரூ.1.17 லட்சம் வழங்கப்பட்டது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறும் அனைவருக்கும் ரொக்கப் பரிசு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.


தவிர, நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த 36 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், எழுத்து, வாசிப்புக்கு ஆசிரியர்கள் மூலம் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றார். ஆசிரியர்களின் இந்த புதிய முயற்சிக்கு அப்பகுதி மக்கள் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

PM POSHAN Noon Meal App New Version 1.19 - Update Now

 

Education News (கல்விச் செய்திகள்)
IMG_20250213_215432

PM POSHAN Noon Meal App New Version 1.19 - Update Now


Update Date: 13.02.2025

New Version - 1.19

👇👇👇👇

https://play.google.com/store/apps/details?id=in.co.bsnl.chennai.pmp

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

10th English Second Revision 2025 question paper

 

Education News (கல்விச் செய்திகள்)

10th English Second Revision 2025 question paper  - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )


10, 11, 12-ம் வகுப்புகளுக்கு நடப்பாண்டில் பொதுத்தேர்வு எழுதும் 25.57 லட்சம் மாணவர்கள்

 

Education News (கல்விச் செய்திகள்)

1350750

தமிழகத்தில் நடப்பாண்டில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை மாநிலம் முழுவதும் 25.57 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளதாக தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3 முதல் ஏப்.15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வு தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.


பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன், தமிழக பாடநூல் கழக மேலாண்மை இயக்குநர் பொ.சங்கர், பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், தேர்வுத்துறை இயக்குநர் ந.லதா, தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.ஆ.நரேஷ், தனியார் பள்ளிகள் இயக்குநர் மு.பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


கூட்டம் முடிவில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டன. அதன்படி பிளஸ் 2 தேர்வை 3 லட்சத்து 78,545 மாணவர்கள், 4 லட்சத்து 24,023 மாணவிகள், 18,344 தனித் தேர்வர்கள், 145 கைதிகள் என மொத்தம் 8 லட்சத்து 21,057 பேர் எழுதுகின்றனர். பிளஸ் 1 பொதுத் தேர்வை 3 லட்சத்து 89,423 மாணவர்கள், 4 லட்சத்து 28,946 மாணவிகள், 4,755 தனித்தேர்வர்கள், 137 கைதிகள் என மொத்தம் 8 லட்சத்து 23,261 பேரும் எழுதவுள்ளனர்.


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 4 லட்சத்து 46,411 மாணவர்கள், 4 லட்சத்து 40,465 மாணவிகள், 25,888 தனித்தேர்வர்கள், 272 கைதிகள் என 9 லட்சத்து 13,036 பேர் எழுத இருக்கின்றனர். ஒட்டுமொத்தமாக 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை 25 லட்சத்து 57,354 பேர் எழுதுகின்றனர்.


பொதுத்தேர்வுக்காக 11, 12-ம் வகுப்புகளுக்கு 3,316 மையங்களும், 10-ம் வகுப்புக்கு 4,113 மையங்களும் அமைக்கப்பட உள்ளன. இதுதவிர தேர்வு கண்காணிப்பு சிறப்பு படைகள், தேர்வறை கண்காணிப்பாளர்கள் விவரங்களையும் தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.


அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: பொதுத் தேர்வு என்பது தேர்தலுக்கு சமமானதாகும். இது பல லட்சம் மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது. தேர்வெழுத வரும் மாணவர்கள் பதற்றத்தை தவிர்த்து, மகிழ்ச்சியான மனநிலையில் வர வேண்டும்.


நமது மாணவர்களின் கல்வி நிலை குறித்து தவறான தரவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதற்கு தீர்வாக 10 லட்சம் மாணவர்களிடம் ஆய்வு செய்து தரவுகளை வெளியிட திட்டமிட்டு இருக்கி ம். மாநில திட்டக்குழு இந்த அறிக்கையை வெளியிடும். அப்போது நமது தமிழக மாணவர்களின் நிலை தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.


தனி தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட்: இதற்கிடையே 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித் தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் இன்று (பிப்.14) மதியம் வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து தேர்வர்கள் www.dge.tn.gov.in எனும் வலைதளத்தில் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், பிளஸ் 1 (அரியர்) மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கு இரு தேர்வுக்கும் சேர்த்து ஒரே ஹால்டிக்கெட் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


கணினியில் தேர்வெழுதும் மாணவர்: பூந்தமல்லியில் உள்ள பார்வைத்திறன் குறைபாடுள்ளோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர் ஆனந்த், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை கணினிவழியில் எழுத விருப்பம் தெரிவித்திருந்தார். அவரின் விருப்பத்தை ஏற்று வாசிப்பாளர் உதவியுடன் கணினி வழியில் அவர் தேர்வெழுத தேர்வுத்துறை அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் பொதுத்தேர்வை கணினி வழியில் எழுதும் முதல் மாணவராக இவர் விளங்குவார். வரும் காலங்களில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தாமாகவே தேர்வெழுத இந்த நிகழ்வு சிறந்த முன்மாதிரியாக விளங்கும் என்று பள்ளிக்கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )