சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வுகள் நடத்த திட்டம்: மார்ச் 9 வரை கருத்துகேட்பு

Education News (கல்விச் செய்திகள்)
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி ஆண்டுதோறும் 2 பொதுத்தேர்வுகள் நடத்தப்படும். இதன் மீதான கருத்துகளை பொதுமக்கள், ஆசிரியர்கள் மார்ச் 9-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் நாடு முழுவதும் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த வாரியம் மத்திய கல்வி அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த பாடத்திட்டத்தின்கீழ் பயிலும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேசிய கல்விக் கொள்கை-2020 அடிப்படையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் சில மாற்றங்களை செய்து வரைவு அறிக்கையை சிபிஎஸ்இ தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்விவரம் பின்வருமாறு: சிபிஎஸ்இ பொதுத்தேர்வுக்கு புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி 2025-26-ம் கல்வியாண்டில் முதல்கட்டமாக பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இருமுறை நடத்தப்படும். அதாவது முதல்கட்டமாக பிப்.17 முதல் மார்ச் 6-ம் தேதி வரையும், 2-ம் கட்டமாக மே 5 முதல் 20-ம் தேதி வரையும் பொதுத் தேர்வுகள் நடைபெறும்.

இந்த தேர்வெழுத 26 லட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இவ்விரு தேர்வுகளையும் மாணவர்கள் எதிர்கொள்ளலாம். பிப்ரவரியில் எழுதும் தேர்வில் பெறும் மதிப்பெண்ணில் மாணவர்கள் மனநிறைவு கொண்டால், மே மாதம் நடைபெறும் தேர்வை எழுத வேண்டியதில்லை. அதேநேரம் மதிப்பெண்களை உயர்த்த விரும்பினால் மே மாத தேர்வையும் மாணவர்கள் எழுதலாம். இந்த மாற்றங்கள் மாணவர்கள் பொதுத் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளவும், மனஅழுத்தத்தை தவிர்க்கவும், பாடங்களை புரிந்து கொண்டு படிக்கவும் வழிவகை செய்யும்.

மேலும், இரண்டாம் கட்டத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களே இறுதி மதிப்பெண்ணாகக் கருதப்படும். அதேபோல் அறிவியல், கணிதம், சமூக அறிவியல் பாடங்களுக்கான வினாத்தாள் எளிது மற்றும் கடினம் என இரு வகைகளாகப் பிரிக்கப்படும். அதில், விரும்பும் வினாத்தாளை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். அவற்றில் கடினமான வினாத்தாளை தேர்வு செய்யும் மாணவர்கள் மட்டுமே குறிப்பிட்ட பாடங்கள் சார்ந்த பிரிவில் பட்டப் படிப்புகள் மற்றும் தொடர்புடைய பிற உயர்கல்வி பிரிவுகளை பயில முடியும்.

முதல்கட்ட தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் பிளஸ் 1 வகுப்பில் அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் மீண்டும் தேர்வெழுதி தேர்ச்சி பெற வேண்டும். மேலும், இந்த வரைவு அறிக்கை மீதான கருத்துகளை பொதுமக்கள், ஆசிரியர்கள் மார்ச் 9-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களை https://www.cbse.gov.in/ எனும் வலைத்தளத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

யூடியூப் சேனல் மூலம் பொருட்கள் விற்பனை செய்து இரட்டிப்பு லாபம் பெறுவது எப்படி? தமிழக அரசு தரும் 3 நாட்கள் பயிற்சி

 நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் சமூக ஊடகங்கள் பொதுப்போக்கு இடமாக மட்டுமில்லாமல், ஆன்லைன் வர்த்தக தளங்களாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. அதில் வீடியோக்களை தவிர்க்கவே முடியாது. சர்வதேச அளவில் யூடியூப் வீடியோக்களின் மூலம் பொருட்கள் விற்பனை செய்து இரட்டிப்பு லாபம் பெறுபவர்கள் ஏராளம். யூடியூப்பில் வீடியோக்கள் பதிவேற்றம் செய்தே பலர் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். தொழில் செய்பவர்களுக்கும் யூடியூப் வீடியோக்கள் மூலம் அவர்களின் பொருட்களை விற்பனை செய்து லாபம் பெற முடியும்.

ஆனால் இதையெல்லாம் எப்படி தொடங்குவது, யூடியூப் சேனல் மூலம் நமது பொருட்களை சந்தைப்படுத்துவது எப்படி என பலருக்கு கேள்வி எழுகிறது. உங்களுக்கு நிபுணர்கள் கொண்டு தமிழக அரசே பயிற்சி அளித்தால் எப்படி இருக்கும்? ஆம், தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் சொந்தமாக யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் “யூடியூப் சேனலை பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல்” தொடர்பான பயிற்சியை 3 நாட்களுக்கு வழங்க உள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட தகவலில், “ தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், உங்களது சொந்த யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் யூடியூப் சேனலை பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சி வரும் 05.03.2025 முதல் 07.03.2025 தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி தொழில் முனைவோர் மேம்பாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் யூடியூப் சேனலை உருவாக்குவது எப்படி, வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம், சமூக ஊடக சந்தைப்படுத்தல், சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் நெட்வொர்க்கை எவ்வாறு அதிகரிப்பது, பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு ஆன்லைன் மார்க்கெட்டிங் மற்றும் விதிகள் ஆகியவற்றை விரிவாக விளக்கிடும் வகையில் வடிவமைப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம். பங்குபெறும் ஆண், பெண் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் https://www.editn.in/ என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். . மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை . 8668108141 / 8668102600/7010143022 என்ற தொலைப்பேசி எண்களில் தொடர்புகொண்டு அறிந்துகொள்ளலாம்”என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலகச் சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600 032 என்ற அலுவலக முகவரியில் நேரில் சென்றும் தகவல்களை அறிந்துகொள்ளலாம்.

தமிழக அரசு வழங்கும் இப்பயிற்சி குறைவான கட்டணத்தில் நிபுணர்கள் கொண்டு தனித்துவமாக நடத்தப்படுகிறது. இப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் மேல் குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் நபர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்) 

ஊதியம் வழங்கும் நாளுக்கு, குறைந்தபட்சம் 2 நாட்கள் முன்னதாக ஊதியப் பட்டியல் சமர்ப்பிக்க கருவூலம் மற்றும் கணக்குத் துறை உத்தரவு!

Education News (கல்விச் செய்திகள்)
ஊதியம் வழங்கும் நாளுக்கு, குறைந்தபட்சம்  2 நாட்கள் முன்னதாக ஊதியப் பட்டியல் சமர்ப்பிக்க கருவூலம் மற்றும் கணக்குத் துறை உத்தரவு!

👇👇👇👇

DAAS letter to PAOs and TOs Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

பள்ளிக் கல்வித் துறை உயர் அலுவலர்களுக்கு மந்தண அறிக்கைகள் (Confidential Reports) எழுதுதல் - அரசாணை வெளியீடு!

Education News (கல்விச் செய்திகள்)

பள்ளிக் கல்வித் துறை உயர் அலுவலர்களுக்கு மந்தண அறிக்கைகள் (Confidential Reports) எழுதுதல் - அரசாணை வெளியீடு!

G.O.Ms.No.32- ACR Reports - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு: இறுதிகட்ட பணிகளில் தேர்வுத் துறை தீவிரம்

Education News (கல்விச் செய்திகள்)
தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில், கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் போன்ற இறுதிகட்ட பணிகளை தேர்வுத் துறை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3 முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பிளஸ் 2 வகுப்பில் 8.21 லட்சம் மாணவர்கள், பிளஸ் 1-ல் 8.23 லட்சம் பேர், பத்தாம் வகுப்பில் 9.13 லட்சம் பேர் என மொத்தம் 25.57 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். இதற்காக 11, 12-ம் வகுப்புகளுக்கு தலா 3,316 மையங்களும், பத்தாம் வகுப்புக்கு 4,113 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தேர்வறை கண்காணிப்பாளர் மற்றும் பறக்கும் படை அலுவலர் நியமனம் உட்பட இறுதிகட்ட பணிகளும் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இது குறித்து தேர்வுத் துறை அலுவலர்கள் சிலர் கூறும்போது, ''பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 48,426 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதேபோல், பொதுத் தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களாக 11-ம் வகுப்பு தேர்வுக்கு 44,236 பேரும், 12-ம் வகுப்புக்கு 43,446 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், முறைகேடுகளை தடுக்க பத்தாம் வகுப்புக்கு 4,858-ம், 11, 12-ம் வகுப்புக்கு தலா 4,470-ம் நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான இறுதி சரிபார்ப்பு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுதவிர மாவட்ட ஆட்சியர், முதன்மை, வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 300 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரம் ஆயுதம் தாங்கிய காவல் துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் வசதிக்காக கடந்த ஆண்டைவிட தேர்வு மையங்களின் எண்ணிக்கையானது கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து தேர்வுகள் முடிந்ததும் விடைத்தாள் திருத்துதல் பணிக்காக தமிழகம் முழுவதும் சுமார் 150 முகாம்கள் அமைக்கப்பட உள்ளன'' என்றனர்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

TPF ACCOUNT SLIP DOWNLOAD

Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250226_101909

TPF ACCOUNT SLIP DOWNLOAD : 

http://www.agae.tn.nic.in/onlinegpf/

Username : TPF Number

Suffix : PTPF

Date of Birth : DD/MM/YYYY 

மேற்கண்ட link னை பயன்படுத்தி  2014-15 ,2015-16,2016-17,2017-18,2018-19 , வருடங்களுக்கான TPF A/C Slip னை download செய்து கொள்ளலாம்.

தற்போதைய முறையில்  பதிவு செய்யப்பட்ட Mobile Number க்கு 4 இலக்க OTP வருவதால் அவ்வெண்ணினை பதிவு செய்வதன் மூலமாகவே Account Slip Download செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

யாருக்கேனும் பதிவு செய்த Mobile Number இல்லாத பட்சத்தில் AG office னை 044 24324500 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் TPF Number, மாற்றம் செய்ய வேண்டிய தாங்கள் தற்போது பயன்படுத்தும் புதிய 

Mobile Number னை அலுவலக வேலை நேரத்தில்(10 AM ---5PM) தொடர்பு கொண்டு தெரிவிக்கும் பட்சத்தில் Update செய்து தருகிறார்கள்.

இல்லம் தேடிக் கல்வி (ITK) தன்னார்வலர் சான்றிதழ் பதிவிறக்கம் செய்வதற்கான லிங்க்

Education News (கல்விச் செய்திகள்)

குறிப்பு: 

சான்றிதழை பதிவிறக்கம் செய்ய தாங்கள் குறைந்தபட்சம் 3 மாத காலம் தன்னார்வலராக இல்லம் தேடிக் கல்வியில் சேவை புரிந்திருக்க வேண்டும்.
பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

IIT Madras-ல் Junior Research Fellow வேலை – ரூ.70,000/- ஊதியம் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IIT Madras-ல் Junior Research Fellow வேலை – ரூ.70,000/- ஊதியம் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

IIT Madras ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Junior Research Fellow, Social Media Specialist பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

IIT Madras காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Junior Research Fellow, Social Media Specialist பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Research Fellow கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s / Master’s degree in Marketing or Mass Communication / ME/M.Tech in Civil / Agricultural/Geomatic Engineering with NET/ GATE தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IIT Madras வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Junior Research Fellow ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Research Fellow – ரூ.37,000/-

Social Media Specialist – ரூ.70,000/-

IIT Madras தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.03.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்) 

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் JRF வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் JRF வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில் JRF / Project Fellow பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

MKU காலிப்பணியிடங்கள்:

MKU வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி JRF/Project Fellow பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

JRF கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s degree in Physics or Chemistry தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

MKU வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

JRF ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.14,000/- முதல் ரூ.28,000 மாத ஊதியம் வழங்கப்படும்.

MKU தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 05.03.2025ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்) 

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் Guest Faculty வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.50,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் Guest Faculty வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.50,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் ( CUTN ) ஆனது Guest Faculty பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CUTN காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Guest Faculty பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Guest Faculty கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s degree in social work with NET / PhD தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

CUTN வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Guest Faculty ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

CUTN தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து hodsocialwork@cutn.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 07.03.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்) 

சென்னை துறைமுகத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – தேர்வு எழுத தேவையில்லை || சம்பளம்: ரூ.1,25,000/-

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

சென்னை துறைமுகத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு  – தேர்வு எழுத தேவையில்லை || சம்பளம்: ரூ.1,25,000/-

Full-Time Specialist பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை சென்னை துறைமுக அறக்கட்டளை ஆனது அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் தேர்வாகும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,25,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையவும்.

Chennai Port காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Full-Time Specialist பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Full Time Specialist – MD (General Medicine) – 2 பணியிடங்கள்

Full Time Specialist MS (General Surgery) – 1 பணியிடம்

Full Time Specialist MD (Anaesthesia) – 1 பணியிடம்

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MD / MS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Port வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Pilot ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,25,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

Chennai Port தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 27.02.2025ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்) 

JIPMER ஆணையத்தில் ரூ.22,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

JIPMER ஆணையத்தில் ரூ.22,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

Clinical Trial Coordinator பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை JIPMER ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Clinical Trial Coordinator பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம்  நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree in Life Sciences தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.22,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல்(03.03.2025) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 26.02.2025ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.