Agri Info

Education News, Employment News in tamil

March 4, 2025

Bank of India-வில் 400 காலிப்பணியிடங்கள் – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

March 04, 2025 0

 

Bank of India-வில் 400 காலிப்பணியிடங்கள் – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

Bank of India வங்கி ஆனது Apprentice பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென 400 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

BOI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Apprentice பணிக்கென 400 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BOI  வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 20 என்றும் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.12,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

BOI தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Online Written Exam மற்றும் Local Language Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.03.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்) 

மத்திய பல்கலை. சேர்க்கைக்கான க்யூட் நுழைவுத் தேர்வு மே 8-ல் தொடக்கம்

March 04, 2025 0

 

Education News (கல்விச் செய்திகள்)
மத்திய பல்கலைக்​கழகங்​களில் இளநிலை படிப்பு​களில் சேரு​வதற்கான க்யூட் தேர்வு கணினி வழியில் மே 8-ல் தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக என்டிஏ அறிவித்​துள்ளது.


நாடு முழு​வதும் உள்ள மத்திய பல்கலைக்​கழகங்கள் மற்றும் அதன்​கீழ் இயங்​கும் கல்லூரி​களில் இளநிலை, முது​நிலை பட்டப்​படிப்பு​களில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்​வில் (க்யூட்) தேர்ச்சி பெறவேண்​டும். இந்த தேர்வை தேசிய தேர்​வுகள் முகமை (என்​டிஏ) ஆண்டு​தோறும் நடத்தி வருகிறது. அதன்​படி, அடுத்த கல்வி​யாண்​டில் (2025-26) இளநிலை படிப்பு​களுக்கான க்யூட் நுழைவுத் தேர்வு வரும் மே 8 முதல் ஜூன் 1-ம் தேதி வரை நடத்​தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்​ணப்ப பதிவு தற்போது தொடங்​கப்​பட்​டுள்​ளது.


இதையடுத்து விருப்​ப​முள்​ளவர்கள் https://cuet.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக மார்ச் 22-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும். விண்​ணப்ப கட்டணம் செலுத்த மார்ச் 23-ம் தேதி கடைசி நாளாகும். தொடர்ந்து விண்​ணப்​பங்​களில் மார்ச் 24, 25, 26-ம் தேதி​களில் திருத்​தங்கள் மேற்​கொள்​ளலாம். இதில் ஏதேனும் சிரமங்கள் இருப்​பின் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது cuet-ug@nta.ac.in என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்​ளலாம். க்யூட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் நடத்​தப்பட உள்ளது.


நடப்​பாண்டு க்யூட் நுழைவுத் தேர்வு விதி​முறை​களில் பல்வேறு மாற்​றங்கள் செய்​யப்​பட்​டுள்ளன. அதன்​படி, மாணவர்கள் 12-ம் வகுப்​பில் எந்த பாடம் படித்​திருந்​தா​லும், விரும்பிய பாடத்​தில் தேர்வு எழுதலாம். அதேபோல், ஒருவர் அதிகபட்சம் 5 பாடங்கள் வரை விண்​ணப்​பிக்க வாய்ப்பு வழங்​கப்​படு​கிறது. மேலும், ஹால்​டிக்​கெட் வெளி​யீடு உட்பட கூடு​தல் ​விவரங்களை www.nta.ac.in/ என்ற தளத்​தில் அறிய​லாம் என்று என்டிஏ தெரி​வித்​துள்​ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

CUET ( UG ) - 2025 will be conducted in 13 Indian languages

March 04, 2025 0

 

Education News (கல்விச் செய்திகள்)

The CUET ( UG ) - 2025 will be conducted in 13 Indian languages i.e. English , Hindi , Assamese , Bengali , Gujarati , Kannada , Malayalam , Marathi , Odia , Punjabi , Tamil , Telugu , and Urdu.

 Candidates are requested to please check the Information Bulletin of CUET ( UG ) - 2025 available on NTA website : https://cuet.nta.nic.in/ for UG Programmes , Scheme of Examination , Eligibility and other information.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

SSLC - Maths Public Exam 2024 - 2025 Model Question Paper - Mr R.Rajesh - T/M & E/M

March 04, 2025 0

 

Education News (கல்விச் செய்திகள்)
SSLC - Maths Public Exam Model Question Paper - Mr R.Rajesh - T/M - Download here


SSLC - Maths Public Exam Model Question Paper - Mr R.Rajesh - E/M - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

மார்ச் 2025 முதல் IFHRMS சம்பளப் பட்டியல் மற்றும் இதர நிலுவைப் பட்டியல் ஆன்லைன் மூலம் சமர்ப்பித்தால்போதுமானது - கருவூலம் மற்றும் கணக்குத் துறை இயக்குநரின் கடிதம்!

March 04, 2025 0

 

Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250304_121706

மார்ச் 2025 முதல் IFHRMS சம்பளப் பட்டியல் மற்றும் இதர நிலுவைப் பட்டியல் ஆன்லைன் மூலம் சமர்ப்பித்தால் மட்டுமே போதுமானது - Physical (Hard Copy) நகல் இனி தேவையில்லை - மாவட்டக் கருவூலர் & கருவூலம் மற்றும் கணக்குத் துறை இயக்குநரின் கடிதம்!


 சென்னை கருவூல கணக்குத்துறை இயக்குநர் அவர்களின் அறிவுரையின்படி 2025 - ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊதியம் மற்றும் ஊதியம் தொடர்பான நிலுவை பட்டியல்களின் Physical ( Hard Copy ) நகல் கருவூல அலுவலகத்தில் நேரில் இனி சமர்பிக்க தேவையில்லை.


 மேலும் , ஊதியப் பட்டியல்கள் அந்தந்த மாதங்களின் கடைசி வேலை நாட்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு முன்னதாக IFHRMS Kalanjiyam ஆன்லைன் ... வழியாக ( Soft Copy ) - யினை மட்டும் தங்கள் அலுவலகத்திற்கு தொடர்புடைய மாவட்ட கருவூலம் / சார்நிலை கருவூலத்திற்கு கீழ்கண்ட இணைப்புகளுடன் கட்டாயம் ஆன்லைன் வழியாக இணைத்து அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Salary Bills Dispensing - Dir Letter - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

மத்திய அரசின் ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் மிகவும் ஆபத்தானது - இந்து தமிழ் திசை கட்டுரை.

March 04, 2025 0

 

Education News (கல்விச் செய்திகள்)
1352898

பழைய ஓய்வூதியத் திட்டம் வேண்டும் என்கிற முதன்மைக் கோரிக்கைக்காகத் தமிழக அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தொடர் போராட்டத்தில் குதித்துள்ளனர். திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி எண் 309 இல் ‘அரசு ஊழியர், ஆசிரியர்களுக்குப் புதிய ஓய்வூதியம் கைவிடப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்’ எனத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியம் கொண்டுவரப் பரிசீலிக்கப்படும் என்றோ கமிட்டி அமைக்கப்படும் என்றோ அதில் சொல்லவில்லை. ஆனால், தற்போது இவ்விஷயத்தில் திமுக அரசு ஏன் இவ்வளவு தடுமாறுகிறது எனத் தெரியவில்லை.

​சாத்​தியம் உண்டு: உண்மை​யில், பழைய ஓய்வூ​தியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்​படுத்து​வதில் தமிழக அரசுக்குப் பெரிய சிரமம் ஒன்றும் இல்லை. இப்போது பணியில் இருக்கும் தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்​களில் 2.29 லட்சம் பேர் பழைய ஓய்வூ​தியத் திட்டத்​தி​லும், 6.14 லட்சம் பேர் புதிய ஓய்வூ​தியத் திட்டத்​திலும் உள்ளனர்.

ஊழியர்​களின் தொகை ரூ.73,974 கோடியை ஆயுள் காப்பீட்டு ஓய்வூதிய நிதியில் அரசு சேமித்து வைத்துள்ளது. இதில் பாதித் தொகையான ரூ.37,000 கோடியை அரசு ஓய்வூதிய நிதியமாக வைத்துக்​கொண்டு, ஓய்வு பெறுவோரின் ஓய்வூ​தியச் செலவை அதன் வட்டியி​லிருந்து ஈடுகட்​டலாம். 7% வட்டி என்றால், ரூ.2,590 கோடி கிடைக்​கும். மீதி ரூ.37,000 கோடியை அவரவர் வருங்கால வைப்பு நிதியில் செலுத்த வேண்டும்.

இன்றைய நிலவரப்படி, ஏற்கெனவே ஓய்வு பெற்றுப் பழைய ஓய்வூ​தியம் பெறுவோர் 6.97 லட்சம் பேர். இவர்களுக்கான ஓய்வூ​தியச் செலவு 2024-25இல் ரூ.37,663 கோடி. இது அரசின் மொத்தச் செலவான ரூ.3.48 லட்சம் கோடியில் 10 சதவீதம்​தான். புதிய ஓய்வூ​தியத் திட்டத்தில் உள்ளவர்​களில் 7,738 பேர் 2023-24இல் ஓய்வு​பெற்று​விட்​டனர். சராசரியாக 8,000 பேர் ஓய்வு பெறுவர் என்றால், பழைய ஓய்வூ​தி​ய​தா​ரர்​களில் இது ஒரு சதவீதம்​தான். ஓய்வூ​தியச் செலவான ரூ.37,763 கோடியிலும் இது ஒரு சதவீதம்​தான்.

ALSO READ:
»   நாகை: பொதுத்தேர்வு எழுதவந்த மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேரில் வாழ்த்து

»   ஆஸ்கர் விருது விழாவில் பாலஸ்தீன இன அழிப்புக்கு எதிராக குரல் கொடுத்த இயக்குநர்கள்

அதாவது ரூ.376 கோடிதான் கூடுதல் செலவாகும். இதனை அரசு கையிலிருக்கும் நிதிய வட்டியான ரூ.2,590 கோடியி​லிருந்து ஈடுகட்​டலாம். ஆனால், அதைச் செய்யாமல் பழைய ஓய்வூ​தியத் திட்டம், மத்திய அரசின் ஒருங்​கிணைந்த ஓய்வூ​தியத் திட்டம் ஆகியவை குறித்து ஆராய்​வதற்குக் குழு அமைக்​கப்​படுவதை, வெந்த புண்ணில் வேல் பாய்ச்​சுவதுபோல ஊழியர்கள் உணர்கின்​றனர். மேலும், அறிக்கை தர அந்தக் குழுவுக்கு 9 மாதங்கள் அவகாசம் கொடுத்​திருப்​பதும் அதிருப்தியை ஏற்படுத்​தி​யிருக்​கிறது.

தமிழக அரசு செய்யும் தவறு: மத்திய அரசு ஊழியர்​களுக்கு இருக்கும் புதிய ஓய்வூ​தியத் திட்டத்தையும் தமிழக அரசு நடைமுறைப்​படுத்​தவில்லை. மத்திய அரசு ஊழியர் மறைந்​தால், அவரது குடும்பத்​துக்குப் பழைய ஓய்வூதிய விதிகளில் உள்ள குடும்ப ஓய்வூ​தி​ய​மும், இறப்புப் பணிக்​கொடையும் வழங்கப்​படு​கின்றன. ஊனமுற்று விருப்ப ஓய்வில் சென்றால் பழைய ஓய்வூதிய விதிகளில், ‘இன்வேலிட்’ ஓய்வூ​தி​யமும் பணிக்​கொடையும் கிடைக்​கின்றன.

ஓய்வு​பெறு​பவருக்குப் பணிக்​கொடையும் ‘ஆனுவிட்டி’ (ஆண்டுத் தொகை) வடிவில் மாதந்​தோறும் உத்தர​வாதம் இல்லா​விட்​டாலும் ஓர் ஓய்வூ​தியம் கிடைக்​கிறது. அரசுப் பங்களிப்பு 14% கிடைக்​கிறது. ஓய்வு​பெற்றால் 60% எடுத்​துக்​கொள்​ளலாம். 40% ஆனுவிட்​டியில் போட்டு, இறந்தபின் அந்த 40% குடும்பத்​துக்குத் திரும்பக் கிடைக்​கும். தமிழக அரசு இதில் எதையும் செய்யாமல் மொத்தத் தொகையையும் கொடுத்து அனுப்பு​கிறது.

கடந்த 2024 மே மாதம் வரை ஓய்வு, இறப்பு ஆகிய காரணங்​களால் 38,129 பேர் பணியில் இல்லை. மாதந்​தோறும் ஒரு தொகை கிடைக்​காத​போது, அதைப் பங்களிப்பு ஓய்வூ​தியம் என்று சொல்வதில் அர்த்​தமில்லை. பணிக்​கொடைச் சட்டப்படி அனைவருக்கும் பணிக்கொடை தந்தாக வேண்டும்.

பழைய ஓய்வூ​தியப் பலன்கள்: ஆனாலும் புதிய ஓய்வூ​தியம் பழைய ஓய்வூ​தி​யத்​துக்கு ஈடாகாது. பழைய திட்டத்தில் 10 ஆண்டுகள் பணிக்கு மத்திய அரசிலும், 30 ஆண்டுகள் பணிக்கு மாநிலத்​திலும் 50% சம்பளம் உத்தரவாத ஓய்வூ​தி​ய​மாகக் கிடைக்​கிறது. கம்யூட்​டேஷன், குடும்ப ஓய்வூ​தி​யமும் கிடைக்​கிறது. குறைந்தபட்ச ஓய்வூ​தியமாக மத்திய அரசில் ரூ.9,000, மாநிலத்தில் ரூ.7,850 கிடைக்​கிறது. 80 வயதுக்கு மேல் 100 வயதுவரை கிடைக்கும் கூடுதல் ஓய்வூ​தியம், ஊதியக் குழு வரும்போது ஓய்வூதிய உயர்வு, அகவிலைப்படி போன்றவை பழைய ஓய்வூ​தியத் திட்டத்தில் இருப்பவை. புதிய திட்டத்தில் இல்லை.

இதற்காக நடத்தப்பட்ட பலகட்டப் போராட்​டங்​களுக்குப் பிறகு, உத்தர​வாதமான 50% ஓய்வூ​தியம்; அதில் 60% குடும்ப ஓய்வூ​தியம்; குறைந்தபட்ச ஓய்வூ​தியம் ரூ.10,000; அகவிலைப்​படியும் உண்டு எனக் கூறி ஒருங்​கிணைந்த ஓய்வூ​தியத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு​வந்தது. அது ஓய்வூதிய முறையின் நோக்கத்தையே கேள்விக்கு உள்ளாக்கு​கிறது. ஒருங்​கிணைந்த ஓய்வூ​தியத் திட்டத்​தில், ஊழியரின் 10 சதவீதத்தோடு அரசும் 10% தரும். இரண்டும் சேர்ந்து ‘தனிநபர் கார்பஸ்’ ஆகும். அரசு போடும் 8.5% ‘பூல் கார்பஸ்’ எனப்படும். தனிநபர் கார்பஸ் சந்தையில் முதலீடு செய்யப்​படும். இந்த முதலீட்டுத் தொகைக்கு உத்தர​வாதமில்லை.

ஓய்வு பெறும்போது ஊழியரின் தனிநபர் கார்பஸ் முழுமையாக இருக்க வேண்டும். நடுவில் பணம் எடுக்​காமல், ஒழுங்கான நேரத்தில் கட்டி, சந்தை நிலையாக இருந்தால் உங்கள் கார்பஸ் என்னவாக இருக்குமோ அதற்கு ‘பெஞ்ச்​மார்க் கார்பஸ்’ என்று பெயர். இதனை பி.எஃப்​.ஆர்​.டி.ஏ.தான் தீர்மானிக்​கும். அதற்கு ஒரு வரையறையும் இல்லை என்பது கவனிக்​கத்​தக்கது.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் பலன்கள்: ஓய்வு பெறும்போது பணிக் காலம் 25 ஆண்டுகள் இருந்​தால், நேராக 12 மாத சராசரி சம்பளத்தின் 50% ஓய்வூ​தி​ய​மாகக் கிடைக்​காது. தனிநபர் கார்பஸ், பெஞ்ச்​மார்க் கார்பஸுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். தனிநபர் கார்பஸ் முழுவதையும் அரசின் பூல் கார்பஸுக்குத் தாரை வார்க்க வேண்டும். அது திரும்பக் கிடைக்​காது. அப்போதுதான் 50% ஓய்வூ​தியம் கிடைக்​கும். தனிநபர் கார்பஸ் குறைந்​தால், அதே விகிதத்தில் ஓய்வூ​தி​யமும் குறையும். தனிநபர் கார்பஸ் சந்தையில் வீழ்ந்து​விட்டால் உங்கள் ஓய்வூ​தி​யமும் வீழ்ந்து​விடும் அபாயம் உண்டு.

ஓய்வு பெறும்போது பணிக்​காலம் 10 ஆண்டுகள் என்றால் சம்பளத்தில் 20%தான் ஓய்வூ​தி​ய​மாகக் கிடைக்​கும். குறைந்தபட்ச ஓய்வூ​தியம் ரூ.10,000 என்பது தனிநபர் கார்பஸ், பெஞ்ச்​மார்க் கார்பஸுக்குக் குறையாமல் இருந்​தால்தான் கிடைக்​கும். தனிநபர் கார்பஸ் குறைந்​தால், குறைந்தபட்ச ஓய்வூ​தியமான 10,000 கிடைக்​காது. தனிநபர் கார்பஸிலிருந்து 60% எடுத்​துக்​கொள்​ளலாம். ஆனால், உங்கள் ஓய்வூ​தியம் 60% குறைந்து​விடும். அதாவது, ஓய்வூ​தியம் ரூ.10,000 என்றால் அதில் 60% குறைந்து, ரூ.4,000தான் ஓய்வூ​தி​ய​மாகக் கிடைக்​கும்.

அதேபோல் குடும்ப ஓய்வூ​தியம் 60% என்ற கணக்கின்படி ஓய்வூ​தியம் ரூ.4,000 என்றால், அதில் 60% ரூ.2,400தான் கிடைக்​கும். குடும்ப ஓய்வூ​தி​யத்​துக்குக் குறைந்த​பட்சம் ரூ.10,000 என்கிற உத்தர​வாதம் கிடையாது. எனவேதான், மத்திய அரசு இதனை ஓய்வூ​தியம் என்று குறிப்​பி​டாமல் ‘பே அவுட்’ என்கிறது.

விருப்ப ஓய்வு: விருப்ப ஓய்வு விவகாரத்தில் விநோதமான விதிமுறை சேர்க்​கப்​பட்​டுள்ளது. அதாவது, 21 வயதில் பணிக்கு வரும் ஒருவர் 25 ஆண்டுகள் பணி செய்திருந்​தால்​தான், விருப்ப ஓய்வில் செல்ல முடியும். இதன்படி, அவர் தனது 46 வயதில் விருப்ப ஓய்வில் சென்றால், அவருக்கு எப்போது ஓய்வு வயது 60 ஆகிறதோ அப்போது​தான். அதாவது, 14 ஆண்டுகள் கழித்துதான் ‘பே அவுட்’ கிடைக்​கும். இப்படி ஒரு விநோத விதிமுறை ஊழியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி​யுள்ளது.
மத்திய அரசு ஊழியர்​களுக்கு அறிவிக்​கப்​படும் அதே சதவீதத்தில் அகவிலைப்படி கிடைக்​காது. 1.4.2025-க்குப் பின் பூஜ்ஜி​யத்​திலிருந்து தொடங்கு​வார்கள். அகவிலைப்​படியை மத்திய ஆவணப் பாதுகாப்பு முகமைதான் அறிவிக்கும் (central record keeping agency), மத்திய அரசல்ல பழைய ஓய்வூ​தியத் திட்டத்தில் இருப்​பதில் என்னவெல்லாம் புதிய ஓய்வூ​தி​யத்தில் இல்லை என்று ஏற்கெனவே குறிப்​பிட்​டிருக்​கிறோமோ அவை எதுவும் ஒருங்​கிணைந்த ஓய்வூ​தியத் திட்டத்​திலும் கிடையாது. எனவேதான் மாநில அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூ​தியத் திட்டத்தைத் தொடர்ந்து வலியுறுத்து​கிறார்கள். அரசு இதில் உரிய முடிவை எடுக்க வேண்டும்!

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

March 3, 2025

CUET ( UG ) - 2025 will be conducted in 13 Indian languages

March 03, 2025 0

Education News (கல்விச் செய்திகள்)
The CUET ( UG ) - 2025 will be conducted in 13 Indian languages i.e. English , Hindi , Assamese , Bengali , Gujarati , Kannada , Malayalam , Marathi , Odia , Punjabi , Tamil , Telugu , and Urdu.

 Candidates are requested to please check the Information Bulletin of CUET ( UG ) - 2025 available on NTA website : https://cuet.nta.nic.in/ for UG Programmes , Scheme of Examination , Eligibility and other information.

IMG_20250303_101836_wm

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

March 2, 2025

Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 3 - ( Unit - 6 & Set - 8 ) Lesson Plan

March 02, 2025 0

 Ennum Ezhuthum Lesson Plan | 2024 - 2025



Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 3 - ( Unit - 6 ) Lesson Plan - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 3 - ( Unit - 6 ) Lesson Plan - Download here

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 3 - ( Set - 8 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 3 - ( Set - 8 ) Lesson Plan - T/M - Download here

EMIS தளத்தில் தகவல் பதிவேற்ற பணிச்சுமை குறைப்பு - இன்று (01.03.2025) முதல் நடைமுறைக்கு வருகிறது?

March 02, 2025 0
IMG_20250301_083113

EMIS தளத்தில் தகவல் பதிவேற்ற பணிச்சுமை குறைப்பு - இன்று (01.03.2025) முதல் நடைமுறைக்கு வருகிறது?

SPD - Relief from EMIS Work - Download here

State Board, CBSE, ICSE இடையேயான வித்தியாசம் என்ன தெரியுமா..? எது பெஸ்ட் தெரியுமா..? முழுசா படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!!

March 02, 2025 0

 இந்தியாவில் அதிக கல்வியறிவு பெற்ற மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். மேலும், 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி தமிழகத்தின் கல்வியறிவு விகிதம் 80.33% ஆகும். இதை தொடர்ந்து, தொழில்துறை அமைப்பான அசோசம் நடத்திய கணக்கெடுப்பின்படி, தொடக்க மற்றும் நடுநிலைக் கல்வி சேர்க்கையில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பின்பற்றப்படும் கல்வி முறைகள் பற்றி இப்பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம்.



அதாவது, இந்தியாவில் State Board, CBSE, ICSE, NIOS மற்றும் AISSCE என ஐந்து முக்கிய கல்வி வாரியங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு பாடத்திட்டங்கள், கற்றல் முறைகள், மதிப்பீட்டு அளவுகோல்கள் மற்றும் தேர்வுகளை நடத்துவதற்கான வாரியங்களை கொண்டுள்ளன. இருப்பினும் தமிழகத்தில் 3 கல்வி வாரியங்கள் மட்டுமே பரவலாக அறியப்படுகிறது.




அதில் முதலாவதாக, “மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ” ஆகும். இது, மத்திய அரசின் கீழ் செயல்படுகிறது. மேலும், இது பொது மற்றும் தனியார் பள்ளிகளுக்கிடையே தேசிய அளவில் ஒரே கல்வி தரத்தை வழங்கி வருகிறது. இந்த வாரியம் மூலம் தேசிய அளவில் ஒரே பாடத்திட்டம் கற்பிக்கப்படுகிறது.



 இரண்டாவதாக, “மாநில கல்வி வாரியம் (State Board)” ஆனது மாநில அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் மேற்பார்வையின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து பள்ளிகளையும் நிர்வகிக்கிறது. இம்முறையில் மாநில அரசால் உருவாக்கப்பட்ட பாடத்திட்டம் கற்பிக்கப்படுகிறது. இறுதியாக, “இந்திய இடைநிலைக் கல்வி சான்றிதழ் வாரியம்(ICSE)” ஆனது அதன் சர்வதேச கல்வித் தரநிலைகள் மற்றும் விரிவான பாடத்திட்டத்திற்கு பெயர் பெற்றது. மேலும், ஆங்கில வழி கல்வி பயிற்றுவிக்கும் ICSE வாரியம், மாணவர்களுக்கு பரந்த அளவிலான கல்வி மற்றும் தொழில்முறை நோக்கங்களை கற்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கல்வி வாரியங்கள் அனைத்தும் இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் அதற்கென சொந்த கல்வி வாரியத்தைக் கொண்டு மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான தேர்வுத் தரங்களை தீர்மானிக்கிறது.

மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு சலுகைகள்: தேர்வுத் துறை வழிகாட்டுதல்கள் வெளியீடு

March 02, 2025 0

 எதிர்பாராத விபத்தால் பாதிக்கப்படும் மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பொதுத் தேர்வில் கூடுதல் நேர சலுகைகள் வழங்க வேண்டுமென தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேர்வுத் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு மார்ச் 3-ம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. இதையடுத்து பொதுத்தேர்வில் பங்கேற்கும் தகுதியான மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு கூடுதல் நேரம் போன்ற உரிய சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.




மேலும், சலுகைகள் கோரியிருந்த நிலையில் ஆணைகள் பெறாத நிலையில், அந்த மாணவர்களுக்கு உதவி இயக்குநர்கள் தங்கள் அளவிலேயே அனுமதி வழங்கி அதற்கான பின்னேற்பாணையை பெற்றுகொள்ளலாம். இதன்பின் சலுகைகள் கோரி விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள், எதிர்பாராத விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் விண்ணப்பங்களை பரிசீலனை செயது வழிமுறைகளின்படி அனுமதி வழங்க வேண்டும்.


மருத்துவச் சான்றிதழின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் அந்தந்த மாவட்ட தேர்வுத்துறை உதவி இயக்குநர்களே முடிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது. அதேபோல்,வழிகாட்டுதலில் இடம்பெறாத நோய்களுக்கு சலுகைகள் வழங்கக்கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

March 1, 2025

களஞ்சியம் ஆப் -ல் CL/RL தவிர பிற விடுப்பு விண்ணப்பிற்கும்போது சம்பளம் பிடித்தம் செய்யப்படுகிறதா?

March 01, 2025 0

 IFHRMS kalanjium leave apply...Salary deduction???

தற்போது நமது விடுப்புகளை களஞ்சியம் வழியாக விண்ணப்பித்து வருகிறோம்...

CL/RL தவிர பிற விடுப்பு எனில் சம்பளம் பிடித்தம் செய்கிறது என்று குற்றச்சாட்டு பரவலாக வருகிறது 🙏


1) *சரியான விடுப்பு* தான் விண்ணப்பித்து உள்ளாரா என்பதை *உறுதி செய்து* கொ

ள்ளுங்கள்..

Approve it...

Do mark for retry....

Check the bill....

5) duty pay .

Leave pay .. என சரியாக பிரிந்து வந்து இருக்கும்...

( பிரிந்து வருவது problem இல்லை) ..

மொத்த தொகை சரியாக இருக்கும்...

உங்கள் நிலையில் இதை சரி செய்து கொள்ளலாம்....

10, 11, 12 பொதுத்தேர்வுகள்: - உதவி எண்கள் அறிவிப்பு

March 01, 2025 0

 தேர்வு மையங்களிலுமாக மொத்தம் 25,57,354 தேர்வர்கள் 2024-25-ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வினை எழுதவுள்ளனர்.

இத்தேர்வுப் பணியில் ஒவ்வொரு தேர்வு நாளன்றும் சுமார் 45,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

 மேலும் தேர்வு முறைகேடுகளைத் தடுக்க சுமார் 4800 க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் தேர்வுப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

மேனிலை முதலாமாண்டு, இரண்டாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் 20,476 மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு மொழிப்பாட விலக்கு, சொல்வதை எழுதுபவர், தேர்வெழுத கூடுதல் ஒரு மணி நேரம் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

மாணவர்கள்/ தேர்வர்கள்/ பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துக்கள் மற்றும் ஐயங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

 தேர்வு நாட்களில் ஒவ்வொரு நாளும் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறை செயல்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தேர்வுக் கட்டுப்பாட்டு அறை – தொடர்பு எண்கள்

அலைபேசி தடை:-9498383075 / 9498383076

தேர்வு மைய வளாகத்திற்குள் அலைபேசியை எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

 அத்துடன் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் தங்களுடன் அலைபேசியை வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வறிவுரையை மீறி தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ அலைபேசி/இதரத் தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பதாகக் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

February 28, 2025

TNSET 2025 Hall Ticket Released!

February 28, 2025 0

  Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250228_084941_909

TNSET 2025 Hall Ticket Released!
The TNSET Hall Ticket is now available for download on the TRB website.
📌 Login Details:
✅ Registration Number – Your TNSET Application Number (Check your old admit card)
✅ Password – Your Date of Birth in this format: DD/MM/YYYY (Example: 10/05/1997)
⚠️ Important: Enter the slashes (/) in your date of birth. Without them, it will show an "Invalid Registration Number" error.
📌 Hall Ticket Details:
Your exam date and shift will be mentioned on the hall ticket. Check it carefully to avoid confusion.
📢 Download your hall ticket now and get ready for the exam! Wishing you all the best! 🎯

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 3 - ( Set - 8 ) Lesson Plan

February 28, 2025 0

  

Education News (கல்விச் செய்திகள்)


Ennum Ezhuthum Lesson Plan | 2024 - 2025

March - 2025

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 3 - ( Set - 8 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 3 - ( Set - 8 ) Lesson Plan - T/M - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )