பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை – கல்வி தகுதி குறித்த முழு விவரங்களுடன்!

பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை – கல்வி தகுதி குறித்த முழு விவரங்களுடன்!

பாரதியார் பல்கலைக்கழகமானது Project Fellow பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென 1 பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:

Project Fellow பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc. (Nanoscience and Technology/ Physics / Materials Science) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.03.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்) 

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தேர்வுக்குரிய கால அட்டவணை வெளியீடு

Education News (கல்விச் செய்திகள்)
பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தேர்வுக்குரிய கால அட்டவணையை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது.

நம்நாட்டில் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவாக நடைபெறும். இதில் முதன்மைத் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு கடந்த ஜனவரி 22 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வை 12.58 லட்சம் பேர் வரை எழுதினர். இதன் முடிவுகள் பிப்ரவரி 11-ம் தேதி வெளியிடப்பட்டன.

இதைத் தொடர்ந்து ஜேஇஇ 2-ம்கட்ட தேர்வு ஏப்ரல் 2 முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணைய விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 1-ல் தொடங்கி 26-ம் தேதி நிறைவு பெற்றது. இந்நிலையில் ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்குரிய விரிவான தேர்வுக்கால அட்டவணையை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. அதன் விவரங்களை மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று அறியலாம். மேலும், தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு உட்பட கூடுதல் விவரங்களை www.nta.ac.in/ என்ற வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

Census E-Register Software - பள்ளி விவரங்களை தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம்..

Education News (கல்விச் செய்திகள்)

 IMG_20250313_095457

Census E-Register @ MSK Free SOFTWARE - டவுன்லோட் செய்து தங்கள் பள்ளி விவரங்களை தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளவும்

 Census E-Register @ MSK Free Edusoft 2018 👇👇👇👇

CLICK HERE FOR SOFTWARE - Download here

INSTRUCTIONS TO USE SOFTWARE - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

பள்ளி மாணவர்கள் கல்வி உதவி தொகைக்கு மார்ச் 15 வரை விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

Education News (கல்விச் செய்திகள்)
1354106

பள்ளி மாணவர்கள் போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித் தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 15 வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: நடப்பு கல்வி ஆண்டுக்கு (2024-2025) மத்திய அரசின் கல்வி உதவித்தொகை ((PM YASASVI Postmatric Scholarship For OBC's, EBC's & DNT's Students) பெறுவதற்காக

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல மாணவ / மாணவியர்களிடம் ஆன்லைன் விண்ணப்பங்கள் (https://umis.tn.gov.in) கடந்த பிப்ரவரி 28-ம் தேதி வரை வரவேற்கப்பட்டன.

தற்போது மாணவர்களின் நலன் கருதியும், கல்வி உதவித் தொகை பெற தகுதியுள்ள எந்த மாணவரும் விடுபட்டுவிடக்கூடாது என்பதை கருத்தில்கொண்டும் கல்வி உதவித்தொகைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 15 வரை நீட்டிக்கப்படுகிறது. காலஅவகாச நீட்டிப்பு விவரத்தை மாணவர்களிடம் தெரிவிக்குமாறு அனைத்து கல்வி நிலையங்களின் முதல்வர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதேபோல், மாணவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உடனடியாக ஆன்லைனில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

Summative / Annual Examinations 2024-2025 Timetable Classes : 6-9

Education News (கல்விச் செய்திகள்)

 Summative / Annual Examinations 2024-2025 Timetable Classes : 6-9

அரசு / அரசு உதவி பெறும் / தனியார் பள்ளிகளுக்கு 1 முதல் 5 ஆம் வகுப்பு மற்றும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2024-25ஆம் கல்வியாண்டிற்கான முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது . அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு இத்தேர்வு கால அட்டவணை குறித்த விவரத்தினை தெரிவிக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து வகை மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் 

இணைப்பு : முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணைகள் - 2025

IMG-20250312-WA0044_wm_wm

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

Summative / Annual Examinations 2024-2025 Timetable Classes : 1 - 5

IMG_20250312_191144_wm

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

7.5 % இடஓதுக்கீட்டின் கீழ் வரும் மாணவர்களின் விவரங்களை சரிபார்த்து அனுப்ப பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு.

Education News (கல்விச் செய்திகள்)
7.5 % இடஓதுக்கீட்டின் கீழ் 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் வரும் மாணவர்களின் விவரங்களை சரிபார்த்து அனுப்ப பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு.

IMG_20250312_162501_wm

7.5 % பார்வையில் அடிப்படையில் , இடஓதுக்கீட்டின் கீழ் 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் 1835456 மாணவ / மாணவிகள் விவரங்கள் சரிபார்த்தல் மற்றும் 24646 மாணவ / மாணவிகள் விவரங்கள் உள்ளீடு செய்யப்படாமல் நிலுவையில் உள்ளது . 7.5 % இடஓதுக்கீடு தெரிவு செய்யப்படாமல் 10. 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் பயிலும் மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்க இயலாது . இதனை தொடர்ந்து , 7.5 % இடஓதுக்கீடு சரிபார்த்தல் EMIS வாயிலாக மேற்கொள்ள இருப்பதால் , 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் பயிலும் மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் படித்த விவரங்களை தமிழ் வழி / ஆங்கில வழி விடுதலின்றி தெரிவு செய்து சார்ந்த வகுப்பு ஆசிரியர்கள் சரிபார்த்து 7.5 Verification நிலுவைப்பட்டியலை தக்க நடவடிக்கை மேற்கொண்டு விரைவில் முடித்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

இணைப்பு : 10.03.2025 நாளின்படியான தரவுகள் விவரப்பட்டியல் ( மின்னஞ்சல் வழியாக )

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

4, 5, 7, 8-ம் வகுப்புகளுக்கு புதிய பாடப் புத்தகம்: என்சிஇஆர்டி அறிவிப்பு

Education News (கல்விச் செய்திகள்)

1353940

தேசிய கல்விக் கொள்கையின்படி 2025-26-ம் கல்வியாண்டு முதல் 4, 5, 7, 8-ம் வகுப்புகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக என்சிஇஆர்டி அறிவித்துள்ளது.

நம் நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு தேவையான பாடத்திட்ட வடிவமைப்பு பணிகளை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம் (என்சிஇஆர்டி) மேற்கொண்டு வருகிறது. இதை அடிப்படையாக கொண்ட பாடப் புத்தகங்களை சிபிஎஸ்இ, கேந்தரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகள் பின்பற்றி வருகின்றன. இதற்கிடையே தேசிய கல்விக் கொள்கை-2020-ஐ மையமாக கொண்டு அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த என்சிஇஆர்டி முடிவு செய்தது.

கலை, உடற்கல்வி, ஆரோக்கியம் மற்றும் தொழிற்கல்வி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த பாடதிட்டம் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி முதற்கட்டமாக 2024-25-ம் கல்வியாண்டில் 1, 2, 3, 6-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. தொடர்ந்து வரவுள்ள 2025-26-ம் கல்வியாண்டில் 4, 5, 7, 8-ம் வகுப்புகளுக்கு தேசிய கல்வி கொள்கையின்படி தயாரிக்கப்பட்டுள்ள புதிய பாடப் புத்தகங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கையை என்சிஇஆர்டி இயக்குநர் டி.பி.சக்லானி, சிபிஎஸ்இ, கேந்தரிய வித்யாலயா மற்றும் நவோதயா வாரியங்களுக்கு அனுப்பியுள்ளார். அதில், “இந்த பாடப்புத்தகங்கள் பள்ளிக்கல்வியில் மாணவர்களுக்கு தேவையான கற்பித்தல், கற்றலை நிறைவு செய்யும். கலை, உடற்கல்வி, திறன் மற்றும் மொழி, கணிதம், அறிவியல், சுற்றுச்சூழல் மற்றும் சமூக அறிவியல் பற்றிய புதிய நுணுக்கங்கள் உள்ளடக்கிய முழுமையான சூழலையும் இந்த பாடப்புத்தகங்கள் உறுதி செய்யும்.

இதுதவிர, 2025-26-ம் கல்வியாண்டில் மாணவர்களிடம் விளையாட்டு, செயல்பாட்டு அளவிலான கற்றலில் ஈடுபடுவதை ஊக்குவிக்க அதற்கான உத்திகளை கையாள வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

இலவச மொபைல் ஆப் டெவலப்பர் பயிற்சி; மாதம் ரூ.45,000 சம்பளத்துடன் வேலை வாய்ப்பு! தமிழக அரசு அறிவிப்பு

Education News (கல்விச் செய்திகள்)
n5tVkA7rZkon3550eDTc

தமிழ்நாடு அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச மொபைல் ஆப் டெவலப்பர் பயிற்சி வழங்குகிறது. முன்னணி தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சியுடன் வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு. 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மொபைல் ஆப் டெவலப்பர் பயிற்சியில் சேர விரும்புபவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழக இளைஞர்களுக்கு பல்வேறு துறை சார்ந்த பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அதற்கு ஏற்ற வேலை வாய்ப்புகளும் ஏற்படுத்தி தரப்படுகிறது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் முன்னணி தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இப்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆட்டோமொபைல், தொழில்நுட்பம், தகவல் தொடர்பு, உணவு, மருத்துவமனை பணிகள், உற்பத்தி, எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், லாஜிஸ்டிக், நகை டிசைனிங், விற்பனை, மார்க்கெட்டிங், இதழியல் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த ஏராளமான பயிற்சிகள் நான் முதல்வன் திட்டம் மூலம் இலவசமாக அளிக்கப்படுகிறது.

அந்த வகையில், தற்போது நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மொபைல் ஆப் டெவலப்பர் (Mobile App Developer) பயிற்சி இலவசமாக அளிக்கப்பட உள்ளது. மேலும், இப்பயிற்சிக்குப் பின்னர் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும். இந்தப் பயிற்சியில் சேர விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

இந்த மொபைல் ஆப் டெவலப்பர் பயிற்சியில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் போன்களுக்கு ஏற்ற ஆப்-கள் உருவாக்குதல், ஆப் வேகம், பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துதல், ஆப்-கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை கண்டறிந்து சரிசெய்தல் ஆகியவை கற்பிக்கப்படும்.

இப்பயிற்சியில் 18 வயது நிறைந்த 12-ம் வகுப்பு முடித்தவர்கள் அல்லது அதற்கு நிகரான கல்வி பெற்றவர்கள் கலந்துகொள்ளலாம். இந்தப் பயிற்சி சென்னை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் வழங்கப்படுகிறது. மேலும் பயிற்சி வகுப்புகள் மார்ச் 24 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இப்பயிற்சி நேரடி வகுப்பாக 210 மணி நேரம் என்ற கணக்கில் நடத்தப்படும். இப்பயிற்சியை முறையாக முடிக்கும் நபர்களுக்கு GRIT Talents, Gradinant, AIRNODE UK, IBM, Brainhunters MY ஆகிய தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும். மேலும், இந்த நிறுவனங்களில் மாத சம்பளமாக ரூ.35,000 முதல் ரூ.45,000 வரை கிடைக்கும்.

தமிழக அரசு இலவசமாக அளிக்கும் இப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/3709 என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். சிறந்த வேலை வாய்ப்புகளை எதிர்நோக்கும் இளைஞர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். 

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

சுய உதவிக் குழு பெண்கள் சுமைகளை (Luggage) கட்டணமின்றி எடுத்துச் செல்ல அனுமதி - அரசாணை வெளியீடு!

Education News (கல்விச் செய்திகள்)

 IMG_20250312_090631

100 கி.மீ. வரை சுய உதவிக் குழு பெண்கள் 25 Kg வரையிலான சுமைகளை (Luggage) கட்டணமின்றி எடுத்துச் செல்ல அனுமதி - அரசாணை வெளியீடு!

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தொழில் முனைவோரின் உணர்வை ஊக்குவிப்பதற்காக , சுய உதவிக்குழுக்கள் ( SHGs ) உறுப்பினர்கள் தங்கள் உற்பத்திப் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு சந்தைகளிலும் தங்கள் சொந்த தயாரிப்புகளை சந்தைப்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள் . இது அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கவும் உதவும் . இந்த முயற்சியில் , சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சில சமயங்களில் மாவட்டத்திற்குள் தங்கள் விளைபொருட்களுடன் பயணிப்பதிலும் , இது தொடர்பான பல்வேறு கண்காட்சிகளுக்காக மாவட்டங்களுக்கு வெளியே வரும்போதும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். எனவே தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் மூலம் இலவச போக்குவரத்து உதவியை , பெண்கள் தங்கள் பொருட்களை கொண்டு செல்வதற்கு உதவும் , இது அவர்களின் சிறந்த வாழ்வாதாரத்தை ஈட்ட உதவும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Free Luggage go - Download here

🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

எஸ்.எஸ்.எல்.சி. , தேர்வு 28 ம் தேதி துவக்கம் சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவு

Education News (கல்விச் செய்திகள்)
எஸ்.எஸ்.எல்.சி. , தேர்வு 28 ம் தேதி துவக்கம் சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவு

IMG-20250311-WA0042

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

ஆசிரியர்களுக்கான அறிவியல் மாநாடு நடைபெறுதல் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250311_223314

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கணிதம் மற்றும் செய்து பரிசோதனை அறிவியல் பாடங்களை தானாக கற்றலை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட வானவில் மன்றம் , வகுப்பறை கற்றல் கற்பித்தலிலும் புதுமையாக செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்து படைப்பாற்றலுடன் வரும் அறிவியல் மற்றும் கணித செயல்பட்டு ஆசிரியர்களுக்கான ஆசிரியர் மாநாடு நடத்துவதாக திட்டமிடப்பட்டது.

தமிழ்நாட்டின் பள்ளிகளில் அறிவியல் மற்றும் கணித வகுப்பறைகளில் நடைபெறும் புதுமையான கற்றல் கற்பித்தல் முறைகளை பயன்பாட்டு நோக்கில் ஆய்வு செய்து ஆய்வு கட்டுரைகளை பகிரும் மேடையாக ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு வழிகாட்டப்பட்டது.

இந்த அடிப்படையில் மாநிலம் முழுவதிலும் இருந்து 643 ஆசிரியர்கள் தங்கள் ஆய்வு அறிக்கைகளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சமர்ப்பித்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆய்வு அறிக்கைகளை மண்டல வாரியாக சமர்ப்பிக்கும் வண்ணம் மேற்கு , தெற்கு , மத்திய மற்றும் வடக்கு மண்டலங்களாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு வருகிற மார்ச் மாதம் 15 ஆம் தேதி சனிக்கிழமை அன்று கீழ்காணும் பட்டியல் அடிப்படையில் மாநாடுகள் நடத்துவது என திட்டமிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கான அறிவியல் மாநாடு நடைபெறுதல் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

👇👇👇👇👇

Science conference Proceedings - Download here

Science Conference - Selected Teachers List - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

CPS missing credit - online portal ல் பதிவேற்றம் செய்ய வழிவகை செய்யப் பட்டுள்ளது - கருவூலம் மற்றும் கணக்குத் துறை

Education News (கல்விச் செய்திகள்)

1000220502_wm

திருவண்ணாமலை மாவட்ட கருவூல உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலை கருவூலங்களின் கீழ் உள்ள பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு cps missing credit -onine portal- லில் பதிவேற்றம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ள தகவலை தெரிவித்தும் மேலும் cps missing credit -online portal- லில் விரைவாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

 இந்நிலையில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்த தொகை விடுபட்டுள்ளதை cps missing credit -online portal லில் விரைந்து பதிவேற்றம் செய்யமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் , பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் வாரியாக cps missing credit விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே , திருவண்னாமலை மாவட்ட கருவூல அலகில் உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலை கருவூலங்களின் கீழ் உள்ள பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு இந்த தகவலை தெரிவித்து cps missing credit -online portal- லில் விரைவாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்துமாறு அனைத்து உதவி கருவூல அலுவலர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.