100 days Chellenge - அடுத்த கட்டாமாக அனைத்து பள்ளிகளுக்கும் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்..

  Education News (கல்விச் செய்திகள்)


100 days Chellenge. '100 நாளில் மாணவர்களை முழுமையாகப் படிக்க வைத்தல்' சவால் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்..

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக வழக்கமான கற்றல் கற்பித்தல் பணிகளுடன் எண்ணும் எழுத்தும் , திறன்மிகு வகுப்பறைகள் , உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் போன்ற திட்டங்கள் மாணவர்களின் வாசிப்புத் திறனையும் கற்றல் திறனையும் மேம்படுத்தி வருகின்றது.


தனி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆனேகொள்ளு , ஊராட்சிக்குட்பட்ட டிபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியை திருமதி கவளர்மதி என்பார் சமூக வலைத்தளப் பக்கத்தில் ( Facebook ) 04.112024 அன்று மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கு அழைப்பு விடுத்து , அதில் " எங்கள் பள்ளியில் 33 மாணவர்கள் பயின்று வருகின்றார்கள் . அனைவரும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடங்களை நன்றாக வாசிக்கத் தெரிந்தவர்கள் மற்றும் கணிதப் பாடத்தில் கூட்டல் , கழித்தல் , பெருக்கல் , வகுத்தல் ஆகிய அடிப்படைத் திறன்களில் அடைவு பெற்றுள்ளனர். 


மாண்புமிகு அமைச்சர் அவர்கள் எங்கள் பள்ளிக்கு வருகை புரிந்து மாணவர்களின் கற்றல் அடைவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார் . மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பள்ளியில் மாணவர்களின் கற்றல் அடைவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு , அதே போல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நிலை பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்களும் அழைப்பு விடுக்க வேண்டும் என மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கூறினார் . அதனடிப்படையில் , தற்போது மேற்கண்ட பொருண்மையின் சார்பில் 4562 பள்ளிகளின் பெயர்ப் பட்டியல் மாவட்டக் கல்வி அலுவலர்களிடமிருந்து ( தொடக்கக் கல்வி ) நவம்பர் 2024 - ல் பெறப்பட்டுள்ளது.


அதனை ஏற்று , பள்ளிக் கல்வித் துறை , அரசு முதன்மைச் செயலாளர் அவர்கள் மேற்கொண்ட ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்த கருத்துருக்களின்படி பெயர் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளிகளுக்கு , மாவட்ட ஆட்சியர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் , மக்கள் மன்ற பிரதிநிதிகள் , பள்ளி மேலாண்மைக் குழு . பெற்றோர் ஆசிரியர் கழகம் ஆகியோர் முன்னிலையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசித்தல் பயிற்சி மற்றும் கணிதப் பாடத்தில் கூட்டல் , கழித்தல் , பெருக்கல் வகுத்தல் ஆகிய அடிப்படைத் திறன்களை 100 நாட்களில் கற்பித்து , ஓப்பன் சேலஞ்ச் ( Open Challenge ) எனப்படும் வெளிப்படையான சவாலைப் பொது வெளியில் அறிவித்து இச்செயலை நடைமுறைப்படுத்த அனைத்து விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்டக்கல்வி அலுவலர்களுக்குத் ( தொடக்கக் கல்வி ) தெரிவிக்கப்படுகிறது . மேற்குறித்த 100 நாட்களுக்குள் தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசித்தல் மற்றும் கணக்கு பாடத்தில் கழித்தல் , கூட்டல் , பெருக்கல் , வகுத்தல் ஆகிய கற்றல் திறன்களில் அடைவு பெறுவதற்கான இலக்கினை நிர்ணயித்தல் சார்ந்து ஒவ்வொரு ஒன்றியத்திலும் தலைமை ஆசிரியர்களுக்கான நேரடிக் கூட்டம் நடத்தி , போதுமான அறிவுரைகள் , வழிகாட்டுதல்களை மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக் கல்வி ) வழங்க வேண்டும் . மேற்கண்ட விவரங்களை சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நேரடியாகக் கள ஆய்வு மேற்கொண்டு தேவையான ஆலோசனைகளை சார்ந்த மாவட்டக் கல்வி ( தொடக்கக் கல்வி ) அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு வழங்க வேண்டும் . மேலும் , மேற்கண்ட விவரத்தை ஆய்வு செய்யும் பொருட்டு சார்ந்த வட்டார வள மையப் பயிற்றுநர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

 முதற்கட்டமாக 4552 பள்ளிகளில் செயல்படுத்தவும் , பள்ளிப் பார்வையின்போது பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கி நடைமுறைப்படுத்தவும் , அதனைத் தொடர்ந்து , அனைத்து பள்ளிகளிலும் இந்நிகழ்வை கொண்டு செல்வதற்கு முத்தாய்ப்பாகவும் இதன்மூலம் அனைத்து அரசுப் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க ஒரு ஊக்குவிப்பாக அமையும் என்பதால் , செயல்பாட்டினை முழுமையாக வெற்றி அடைய அனைத்து வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

IMG-20250319-WA0021_wm


IMG-20250319-WA0022_wm



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2025 -26 மாணவர் சேர்க்கை தொடக்கம் - விண்ணப்பிப்பது எப்படி?

  Education News (கல்விச் செய்திகள்)

a229f5f676a9953716c4e512b45e61a61741843877053113_original

நாடுமுழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2025-26 மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் செயல்படும் கேந்திரிய வித்யாலயா (KV) பள்ளிகளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. பால்வதிகா (KG) மற்றும் 1-ம் வகுப்பில் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. விண்ணப்பங்கள் மார்ச் 21, 2025 வரை ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்படும்.


kumari To Kashmir Train: கோடை வெயில் வாட்டுதா? குமரி டூ காஷ்மீர்.. 130 கிமீ வேகம், இனி ஒரே ரயில், ரூ.1000 போதும், குளுகுளு சம்மர் ட்ரிப்


பால்வதிகா வகுப்புகள்

KV பள்ளிகளில் Pre-KG, LKG, UKG வகுப்புகளாக பால்வதிகா வகுப்புகள் நடத்தப்படுகின்றன.


வயது வரம்பு (31.03.2025 தேதியின்படி):


பால்வதிகா-1-க்கு 3 முதல் 4 வயது


பால்வதிகா-2 -க்கு 4 முதல் 5 வயது


பால்வதிகா-3 -க்கு 5 முதல் 6 வயது ஆகும்.


விண்ணப்பிக்க : https://balvatika.kvs.gov.in/


1-ம் வகுப்பு சேர்க்கை

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1-ம் வகுப்பில் சேர 6 முதல் 8 வயதிற்குள் குழந்தைகள் இருக்க வேண்டும். ஏப்ரல் 1, 2025 பிறகு 6 வயது முடிந்தால் சேர்க்கை கிடையாது.


விண்ணப்பிக்க: https://kvsonlineadmission.kvs.gov.in/


முக்கிய தேதிகள்

விண்ணப்ப தொடக்கம்: 07.03.2025 (காலை 10 மணி)


விண்ணப்ப கடைசி நாள்: 21.03.2025 (இரவு 10 மணி)


தேர்வான மாணவர்களுக்கான முதல் தேர்வு பட்டியல்: 25.03.2025 (1-ம் வகுப்பு) 26.03.2025 (பால்வதிகா)


Sri Brinda Theatre closed :மூடு விழா கண்ட ரஜினி தியேட்டர்! சோகத்தில் ரசிகர்கள்! அடுத்து என்னவாக போகுது?


மேலும் காலி இடங்கள் இருக்கும் பட்சத்தில் அடுத்த அடுத்த பட்டியல்கள் வெளியிடப்படும்.


இரண்டாம் பட்டியல்: 02.04.2025


மூன்றாம் பட்டியல்: 07.04.2025


கட்டணம் விவரம்

அட்மிஷன் கட்டணம்: ரூ.25


மாத சந்தா: ரூ 500 (Vidyalaya Vikas Nidhi)


கணினி கட்டணம்: ரூபாய் 100 (3-ம் வகுப்பு முதல்) பெண்களுக்கு கல்விக் கட்டணம் இல்லை


9, 10-ம் வகுப்பு ஆண் மாணவர்கள்: மாதம் ₹200


தேவையான ஆவணங்கள்

பிறப்பு சான்றிதழ்


வகுப்பு பிரிவு சான்றிதழ் (Community Certificate)


முகவரி சான்றிதழ் (ஆதார், வாக்காளர் அட்டை)


குழந்தையின் புகைப்படம்


பெற்றோர் பாதுகாப்புத்துறை பணியாளராக இருந்தால் அதன் சான்றிதழ்


திருவாரூர் கேந்திரிய வித்யாலயா பள்ளி 

இதனை தொடர்ந்து திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியிலும் மாணவர்கள் சேர்க்கைக்கான பணிகள் தொடங்கியுள்ளன. திருவாரூர் KV பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 7010789249 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

8th Pay Commission - Level 1 முதல் 10 வரை - ஊழியர்களுக்கு எவ்வளவு ஊதிய உயர்வு? முழு விவரம்

 Education News (கல்விச் செய்திகள்)

.com/

7வது ஊதியக்குழு ஃபிட்மெண்ட் ஃபாக்டரை 2.57 ஆக நிரணயித்தது. இதன் மூலம் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.7,000 -இலிருந்து ரூ.18,000 ஆக அதிகரித்தது.


8வது ஊதியக் குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.86 ஆக நிர்ணயிக்கப்படலாம்.


மத்திய அரசு சமீபத்தில் 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பை வெளியிட்டு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய பரிசை வழங்கியது. 8வது ஊதியக்குழுவில் ஊதிய உயர்வும் ஓய்வூதிய உயர்வும் எவ்வளவு இருக்கும்? இது பல காரணிகளை சார்ந்திருக்கும். அவற்றில் முக்கியமனது ஃபிட்மெண்ட் ஃபாக்டர்.


7th Pay Commission Fitment Factor


7வது ஊதியக்குழு ஃபிட்மெண்ட் ஃபாக்டரை 2.57 ஆக நிரணயித்தது. இதன் மூலம் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.7,000 -இலிருந்து ரூ.18,000 ஆக அதிகரித்தது. புதுப்பிக்கப்பட்ட சம்பள மேட்ரிக்ஸின் கீழ் புதிய சம்பளத்தை தீர்மானிக்க ஃபிட்மென்ட் ஃபாக்டர் அப்போதைய அடிப்படை ஊதியத்துடன் பெருகப்படுகின்றது. 


8th Pay Commission Fitment Factor


8வது ஊதியக் குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.86 ஆக நிர்ணயிக்கப்படலாம் என்ற ஒரு கணிப்பு உள்ளது. இதன் அடிப்படையில்ம் லெவல் 1 முதல் 10 வரையிலான அரசு ஊழியர்களின் சம்பளவு உயர்வு எவ்வளவு இருக்கும்? அனைத்து ஊழியர்களுக்குமான ஊதிய உயர்வு கணக்கீட்டை இங்கே காணலாம்.


8வது ஊதியக் குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.86 ஆக நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை ரூ.18,000 -இலிருந்து ரூ.51,480 ஆக உயர்த்தக்கூடும். இது 186% அதிகரிப்பாகும். ஆனால், இது மிக பெரிய உயர்வாக இருக்கும் என்றும், 2.86 -ஐ விட குறைவான ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அரசு தேர்வு செய்யலாம் என்றும் சிலர் கருதுகிறார்கள்.

2.86 என்ற ஃபிட்மெண்ட் ஃபாக்டர் நிர்ணயிக்கப்பட்டால், பல்வேறு நிலை ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? அதை பற்றி இங்கே காணலாம்.


8th Pay Commission ஊழியர்களுக்கு எதிர்பார்க்கப்படும் ஊதிய உயர்வு


Level 1: 


ஊதிய லெவல் 1 இல் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.18,000 ஆக உள்ளது. லெவல் 1 அரசு ஊழியர்களுக்கு ரூ.33,480 சம்பளத் திருத்தம் இருக்கும் என்று கூறப்படுகின்றது. இதனால் அடிப்படை ஊதியம் ரூ.51,480 ஆக உயரும்.


Level 2: 


ஊதிய லெவல் 2 மத்திய அரசு ஊழியர்கள் தற்போது ரூ.19,900 அடிப்படை சம்பளத்தைப் பெறுகின்றனர். மதிப்பீடுகளின்படி, நிலை 2 அரசு ஊழியர்களுக்கான அடிப்படை ஊதியம் ரூ.37,014 அதிகரித்து, ரூ.56,914 ஆக உயரும்.


Level 3: 


ஊதிய லெவல் 3 இல் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.21,700 ஆக உள்ளது. லெவல் 3 அரசு ஊழியர்களுக்கு ரூ.40,362 சம்பளத் திருத்தம் இருக்கும் என்று கூறப்படுகின்றது. இதனால் அடிப்படை ஊதியம் ரூ.62,062 ஆக உயரும்.


Level 4: 


ஊதிய லெவல் 4 மத்திய அரசு ஊழியர்கள் தற்போது ரூ.25,500 அடிப்படை சம்பளத்தைப் பெறுகின்றனர். மதிப்பீடுகளின்படி, நிலை 4 அரசு ஊழியர்களுக்கான அடிப்படை ஊதியம் ரூ.47,430 அதிகரித்து, ரூ.72,930 ஆக உயரும்.


Level 5: 


ஊதிய லெவல் 5 இல் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.29,200 ஆக உள்ளது. லெவல் 5 அரசு ஊழியர்களுக்கு ரூ.54,312 சம்பளத் திருத்தம் இருக்கும் என்று கூறப்படுகின்றது. இதனால் அடிப்படை ஊதியம் ரூ.83,512 ஆக உயரும்.


Level 6: 


ஊதிய லெவல் 6 மத்திய அரசு ஊழியர்கள் தற்போது ரூ.35,400 அடிப்படை சம்பளத்தைப் பெறுகின்றனர். மதிப்பீடுகளின்படி, நிலை 6 அரசு ஊழியர்களுக்கான அடிப்படை ஊதியம் ரூ.65,844 அதிகரித்து, ரூ.1,01,244 ஆக உயரும்.


Level 7: 


ஊதிய லெவல் 7 இல் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.44,900 ஆக உள்ளது. லெவல் 7 அரசு ஊழியர்களுக்கு ரூ.83,514 சம்பளத் திருத்தம் இருக்கும் என்று கூறப்படுகின்றது. இதனால் அடிப்படை ஊதியம் ரூ.1,28,414 ஆக உயரும்.


Level 8: 


ஊதிய லெவல் 8 மத்திய அரசு ஊழியர்கள் தற்போது ரூ.47,600 அடிப்படை சம்பளத்தைப் பெறுகின்றனர். மதிப்பீடுகளின்படி, நிலை  8 அரசு ஊழியர்களுக்கான அடிப்படை ஊதியம் ரூ.88,536 அதிகரித்து, ரூ.1,36,136 ஆக உயரும்.


Level 9: 


ஊதிய லெவல் 9 இல் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.53,100 ஆக உள்ளது. லெவல் 9 அரசு ஊழியர்களுக்கு ரூ.98,766 சம்பளத் திருத்தம் இருக்கும் என்று கூறப்படுகின்றது. இதனால் அடிப்படை ஊதியம் ரூ.1,51,866 ஆக உயரும்.


Level 10: 


ஊதிய லெவல் 10 மத்திய அரசு ஊழியர்கள் தற்போது ரூ.56,100 அடிப்படை சம்பளத்தைப் பெறுகின்றனர். மதிப்பீடுகளின்படி, நிலை  10 அரசு ஊழியர்களுக்கான அடிப்படை ஊதியம் ரூ.1,04,346 அதிகரித்து, ரூ.1,60, 446 ஆக உயரும்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) ) 

பள்ளிக்கல்வித்துறையின் 100 நாள் சவால் - தேர்வு செய்யப்பட்டுள்ள 4552 அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளின் பெயர்ப் பட்டியல் - மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக

  Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250318_224254

வாசிப்பு மற்றும் கணித அடிப்படைத் திறனில் 100% தயார் நிலையில் உள்ள பள்ளிகளின் விவரம் - தொடக்கக் கல்வி இயக்ககம் பட்டியல் வெளியீடு 


100-day challenge of the School Education Department - List of 4552 selected government primary / middle schools - District and Union wise

👇👇👇👇

Download here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு; ​மார்ச் 26-ல் பெற்றோர் ஆசிரியர் கூட்டம்: பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு

  Education News (கல்விச் செய்திகள்)
பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு பெற்றோர் ஆசிரியர் கூட்டம் மார்ச் 26-ல் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி பள்ளி அளவில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அந்தவகையில் அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் மார்ச் 26-ம் தேதி நடத்தப்பட வேண்டும். இந்த கூட்டங்களில் பாலியல் தீங்குகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் குழந்தைகளிடம் பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல் மற்றும் பாலியல் தொந்தரவுகள் குறித்தும், அதிலிருந்து அவர்களை பாதுகாப்பது குறித்தும் விவாதிக்க வேண்டும். மேலும், பிரச்சாரங்கள் வாயிலாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


இதுதவிர, பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலை உருவாக்க தேவையான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். பாலியல் துன்புறுத்தல் குறித்து நம்பிக்கையானவர்களிடம் தெரிவிப்பது மற்றும் அதுகுறித்து புகார் அளிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஏற்படுத்தவேண்டும். தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் கொண்ட மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு, மாணவர் மனசு பெட்டி, மாணவர்களின் உடல்நலன் குறித்தும் இந்த கூட்டங்களில் பேசப்பட வேண்டும். இந்த கூட்டத்தை சிறந்த முறையில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன் பரிசோதனை - தொடக்கக் கல்வித் துறை அறிவிப்பு

  Education News (கல்விச் செய்திகள்)

.com/

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் வாசிப்பு திறனை ஏப்ரலில் சோதனை செய்யப்பட உள்ளதாக தொடக்கக் கல்வித் துறை அறிவித்துள்ளது.


இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.ஆ.நரேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு : பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாநிலத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அதன்படி தளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆனேகொள்ளு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை வளர்மதி எங்கள் பள்ளி மாணவர்கள் தமிழ், ஆங்கில மொழிப் பாடங்களை நன்றாக வாசிக்க தெரிந்தவர்கள் மற்றும் கணிதத்தில் அடிப்படை திறன்களின் அடைவு பெற்றுள்ளனர். எங்கள் பள்ளிக்கும் அமைச்சர் ஆய்வுக்கு வரவேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.


அந்த அழைப்பை ஏற்று அமைச்சர் அங்கு ஆய்வு மேற்கொண்டார். இதேபோல் மற்ற பள்ளிகளும் அழைப்பு விடுக்கவேண்டும் என்றும் அப்போது அவர் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் 4,552 பள்ளிகள் 2024 டிசம்பரில் அழைப்பு விடுத்தன. தற்போது இந்த பள்ளிகளில் 100 நாள் சவால் என்ற அடிப்படையில் தமிழ், ஆங்கிலம் வாசித்தல் பயிற்சி மற்றும் கணிதப் பாடத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அடிப்படைத் திறன்களை கற்பித்து, பொது வெளியில் சவாலை ஏப்ரல் முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.


அதன்படி, மாவட்ட ஆட்சியர்கள், மாவட்டக் கல்வி அலுவலர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மக்கள் மன்ற பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் ஆகியோர் முன் இதை நடைமுறைப்படுத்தும் வகையில் போதுமான அறிவுரைகளை அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டும். இதேபோல், மற்ற பள்ளிகளும் மேற்கொள்ள வேண்டும். இது அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை நோக்கி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஒரு ஊக்குவிப்பாக அமையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

TN Budget : அரசு ஊழியர்களுக்கு 5 முத்தான அறிவிப்புகள்

 Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250314_163127

* கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட EL விடுப்பு பணம் பெறுதல் முறை வரும் 1 முதல் அமலுக்கு வருகிறது .

 * சென்னையில் T110 கோடியில் அரசு ஊழியர்களுக்கு வாடகை குடியிருப்பு . 

* அரசு ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் F1 கோடி விபத்து காப்பீடு . 

* அரசு அலுவலரின் பெண் பிள்ளைகளின் திருமணச் செலவுகளுக்காக 5 லட்சம் வங்கி நிதியுதவி . 

* பணிக் காலத்தில் எதிர்பாராமல் மரணமடைந்தால் ஆயுள் காப்பீடாக 10 லட்சம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன .

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )

8,997 சத்துணவு சமையல் உதவியாளர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் - புதிய அரசாணை வெளியீடு!

Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250315_221504

8,997 சத்துணவு சமையல் உதவியாளர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் - அரசாணையில் திருத்தம் செய்து (`ஓராண்டு தொகுப்பூதியத்திற்கு பின் சிறப்பு காலமுறை ஊதியம் & மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு`) புதிய அரசாணை வெளியீடு!

G.O.Ms.No.33 - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on edcation in tamil, Kalvi (கல்வி) )