நம்முடைய விருப்பங்களில் நாம் தேர்ச்சி பெற வேண்டும் என்றால் மனதை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் அல்லது ஒரு முகப்படுத்த வேண்டும். அதற்கு ஒவ்வொருவரும் நம் மனதை நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க சில பயிற்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாக உள்ளது. அப்போதுதான் நாம் மனதை ஆளுகை செய்ய நல்ல திட்டங்களை தீட்ட முடியும். இதுபோன்ற எளிய பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் மூளையின் திறன் நன்கு மேம்படும் என்கிறார்கள் அறிவியல் ஆய்வாளர்கள்.
மனதைக் கட்டுப்படுத்த முதல் பயிற்சியாக மூச்சை உள்வாங்கிக் கொண்டு ரிலாக்ஸாக உணர்ந்து, அதன்பிறகு வெளியிட வேண்டும். அதேபோன்று உங்கள் தசைகளை ரிலாக்ஸ் செய்துகொள்ள வேண்டும். மேலும் உங்கள் தலை முதல் பாதம் வரை உங்களையே ரிலாக்ஸ் செய்துகொள்ள வேண்டும். இதுவே உங்கள் மனதை ஒரு முகப்படுத்தும் முதல் உடற்பயிற்சியாகும்.