Agri Info

Adding Green to your Life

June 18, 2022

தேநீரில் சேர்க்கப்படும் ஏலக்காய் மற்றும் சுக்கின் நன்மைகள் என்ன?.!

June 18, 2022 0

 ஏலக்காய் மற்றும் சுக்கை காபியில் சேர்த்துக்கொள்வதன் காரணம்:

சுக்கு பயன்கள்:

இஞ்சியை, சுண்ணாம்பு நீரில் நனைத்துக் காயவைத்து எடுக்கப்படு வதுதான் சுக்கு. இது, காரத்தன்மை கொண்டது.

சுக்கு, பித்தத்தை அதிகரிக்கும். கபம், வாதம் போன்றவற்றைக் குறைக்கும்.

பசியின்மையைச் சரிசெய்யும். உடல்பருமன் இருப்பவர்களுக்கு ஏற்றது. கெட்ட நீரை அகற்றும்.

தனியா, சுக்கு, சீரகம், மிளகு போன்றவற்றைச் சேர்த்து அரைத்து, ஒரு தேக்கரண்டி அளவு பாலில் கலந்து, சுக்கு காபியாகக் குடிக்கலாம்.

சுக்கு ரத்தத்தைக் கெட்டிப்படுத்தும். எனவே, ரத்தம் உறைதல் பிரச்னை இருப்பவர்கள், அளவாகப் பயன்படுத்த வேண்டும்.

செரிமானப் பிரச்னை உள்ளவர்கள், அரை தேக்கரண்டி சுக்குப் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்க, நிவாரணம் கிடைக்கும்.

ஏலக்காய் பயன்கள்:

ஏலக்காயைப் பொதுவாக, இனிப்புகள் செய்யும்போது பயன்படுத்துவார்கள். இனிப்புப் பண்டங்களைச் செரிமானம் அடையச்செய்யும் ஆற்றல் ஏலக்காய்க்கு உண்டு.

ஏலக்காய் நல்ல நறுமணம் மிகுந்தது. நறுமணமூட்டியாக பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்படுகிறது.

ஏலாதித் தைலம், ஏலாதி சூரணம் போன்றவற்றைச் சாப்பிட்டுவர, வயிற்று எரிச்சல் குணமாகும்.

கபத்தைக் குறைக்கும் தன்மை ஏலக்காய்க்கு உண்டு. பைநீன், சபிநீன் (Sabinene) போன்ற பல்வேறு விதமான நறுமண எண்ணெய்கள் ஏலக்காயில் இருந்து எடுக்கப்படுகின்றன.

ஏலக்காயில் இரும்புச்சத்து, மாங்கனீசு துத்தநாகம் போன்ற சத்துக்கள் மிக அதிக அளவு உள்ளன. ஏலக்காயைத் தினமும் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதிக கலோரி நிறைந்த இனிப்புகள், பிரியாணி போன்றவற்றில் ஏலக்காயைச் சேர்த்து, சமைத்துச் சாப்பிடுவது நல்லது.

வெண்ணெய் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?

June 18, 2022 0

 

 

வெண்ணெய்யை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மை தீமைகளை காண்போம்.

1. எடைக் குறைவுடன் இருக்கும் குழந்தைகளுக்கு வெண்ணெய் கொடுக்கலாம். அதே போல குழந்தைகளுக்கு இரவு நேரங்களில் கொடுப்பதை தவிர்த்திடுங்கள்.

2. காச நோயால் அவதிப்படுபவர்களுக்கு வெண்ணெய் மிகவும் நல்லது. இது நீண்ட நேரத்திற்கு உடலுக்கு தேவையான எனர்ஜியை கொடுத்திடும்.

3. 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதயநோய், உடல் பருமன் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், வெண்ணெய் எடுத்துக் கொள்ளக்கூடாது.

4. வெண்ணையை அதிகமாக எடுத்துக் கொண்டால், பசி எடுக்கும் தன்மையை குறைந்துவிடும். இதயம் சார்ந்த நோய்கள், சர்க்கரை நோய் போன்றவை ஏற்படும் என்பதால் எச்சரிக்கையாக பயன்படுத்துவது நல்லது.

கேரட்டை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகளை பாருங்க..!

June 18, 2022 0

 தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும். குடல் புண்கள் வராமல் தடுக்க கேரட் உதவுகிறது.

கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் ஏற்படாது.

நாம் சாப்பிடும் உணவு நன்கு செரிமானம் ஆகும். பூச்சிகளால் வரும் நோய்களை தடுக்கிறது. உலர்ந்த சருமம் இருப்பவர்கள் கேரட் சாறுடன் தேன் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் சருமத்துக்கு தேவையான சத்து கிடைக்கும்.

கேரட்டில் உள்ள விட்டமின் ஏ சத்து கண்களுக்கு பலம் கொடுக்க கூடியது. விழித்திரைக்கு பலம் சேர்க்கும். கண்பார்வை நன்றாக தெரியும். சருமத்திற ஆரோக்கியத்தை தருகிறது. கோடைகாலத்தில் வெளியில் சென்று வரும்போது புறஊதா கதிர்கள் தோலை பாதிக்கிறது. தோல் கருப்பாவதை தடுக்கிறது. தோலில் சிராய்ப்பு காயம், அரிப்பு இருந்தால் கேரட்டை பசையாக்கி தடவினால் அரிப்பு, சிவப்பு தன்மை போகும். வேர்குரு மறையும்.
வைட்டமின் ஏ சத்து குறைபாட்டினால் உண்டாகும் மாலைக்கண் நோயை கேரட் குணமாகும்.

கேரட்டில் அதிக அளவில் நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளது. கேரட்டை உணவுடன் அடிக்கடி சாப்பிடுவதன் மூலம். கண்கள் ஆரோக்கியம் அடையும், மாலைக் கண் நோய் வராமல் தடுக்கும் சக்தி இதில் உள்ளது.

இயற்கையாகவே இனிப்பான சுவை கொண்ட கேரட்டை விரும்பாதவர்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இருக்கவே முடியாது. கேரேட்டை தினமும் எடுத்துக் கொள்பவர்களுக்கு கண்பார்வை சம்மந்தமான பிரச்சனை குறைந்து கண்பார்வை பளிச்சென தெரியும். இதனால் நாம் அன்றாட உணவில் கேரட்டை சேர்த்து வந்தால் நம் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

தினமும் உலர் திராட்சையை சாப்பிடுவதால் ரத்தசோகை சரியாகுமா...?

June 18, 2022 0

 ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு ரத்தசோகை ஏற்படும். இவர்கள் தினமும் உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை நோய் சரியாகும்.


















உணவு செரிமானத்தை எளிதாக்க உலர் திராட்சை மிகவும் உதவுகிறது. நற்பகலில் அதிக அளவில் உணவை சாப்பிட்டால், பின்னர் சிறிது உலர் திராட்சையை சாப்பிடுவது மிகவும் நல்லது.

உலர் திராட்சையை தினமும் உட்கொண்டால் உடல் சூடு தனித்து, உடல் எடை அதிகரிக்கும். மேலும் பொட்டாசியம் அதிக அளவு உள்ளது. இந்த பொட்டாசியம் உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்த உதவுகிறது.

மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினந்தோறும் இரண்டு முறை தொடர்ந்து உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை பெறலாம். ரத்தத்தை சுத்திகரிக்க உலர் திராட்சை மிகவும் உதவுகிறது.

மூல நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உலர்திராட்சையை தொடர்ந்து எடுத்து கொண்டால், அந்த நோயில் இருந்து விடுபடலாம். உலர் திராட்சையில் உள்ள வைட்டமின் ஏ சத்து, கண்களின் பார்வைத்திறனை அதிகரிக்க செய்கிறது.

நார்ச்சத்து நிறைந்த உலர் திராட்சையை சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். எலும்புகள், பற்கள் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை காக்க உலர் திராட்சைப் பயன்படுகிறது.

தினமும் காலையில் சிறிது உலர்ந்த திராட்சையை சாப்பிட்டால் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் வேப்பம் பூ !!

June 18, 2022 0

 வேப்ப மரத்தின் விதைகள், பட்டை மற்றும் இலைகள், பூ என அனைத்து பாகங்களும் நிரூபிக்கப்பட்ட ஆண்டிசெப்டிக், ஆன்டிவைரல், ஆண்டிபிரைடிக், அழற்சி எதிர்ப்பு, அல்சர் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.


















வேப்ப இலைகளைப் போல் வேப்பம்பூ ஒரு சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. பொடுகு மற்றும் அரிப்பு போன்றவற்றிற்கு உலர்ந்த வேப்பம் பூ மருந்தாக பயன்படுகிறது.

உலர்ந்த வேப்பம் பூக்கள் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்குகின்றன. மசாஜ் எண்ணெய்கள், கிரீம்கள் மற்றும் அஸ்ட்ரிஜென்ட்கள் உட்பட பல்வேறு அழகுசாதனப் பொருட்கள் இந்த பூவை பயன்படுத்தி தயாரிக்கலாம்.

வாயுத்தொல்லை, ஏப்பம் தொல்லை, பசியின்மை போன்ற கோளாறுகளுக்கு இந்த பூக்களை நன்றாக மென்று உண்டால் குணம் கிடைக்கும்.

வேப்பம் பூ செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக இந்திய சமையலில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இவை சாதம், ரசம், பருப்பு மசாலா கலவைகள், உகாதி பச்சடி போன்றவற்றை தயாரிக்கவும் சமையலில் பயன்படுத்தப்படுகிறது.

தேனுடன் வேப்பம்பூ சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல் எடையில் மாற்றத்தை உருவாக்கும். வேப்பம்பூ கொழுப்பு வளர்சிதை மாற்றத்திற்குக் காரணமான ஹார்மோனைத் தடுக்க உதவுகிறது.

ஒரு கைப்பிடி வேப்பம்பூவை , நீரில் ஊறவைத்து தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் பருமன் குறையும்

இந்த பூவை கொதிக்கும் நீரில் போட்டு ஆவி பிடிக்க காதில் சீல் வடிதல் குணமாகும். பூவை வாயில் போட்டு நன்றாக அரைத்து சாப்பிட்டால் தொண்டை புண் குமாமாகும். வேப்பம்பூவில் துவையல், ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் பித்த மயக்கம், வாந்தி குணமாகும்.

குழந்தைகளின் கையெழுத்தை அழகாக்குவது எப்படி?

June 18, 2022 0

 அழகான கையெழுத்து குழந்தைகளின் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்துகிறது. சரளமாக வாசிப்பதற்கு உதவுகிறது. காட்சி உணர்வை செயல்படுத்துகிறது. மதிப்பெண்களில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே குழந்தைகளின் கையெழுத்தை அழகாக்குவதற்கு எவ்வாறு பயிற்றுவிப்பது என்று பார்ப்போம். 

முதலில் குழந்தைகள் எந்தெந்த விரல்களைப் பயன்படுத்தி எழுதுகோல்களைப் பிடித்து எழுதுகிறார்கள் என்று கவனிக்க வேண்டும். சிலர் கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலையும், ஒரு சிலர் கட்டைவிரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் ஆகிய மூன்று விரல்களையும் பயன்படுத்தி எழுதுவார்கள். 

இதனைக் கண்டறிந்த பின்பு அவர்களின் வசதிக்கு ஏற்றது போல எளிமையாகக் கையாளும் வகையில் எடை மற்றும் தடிமன் குறைந்த எழுதுகோல்களை வழங்க வேண்டும். இதன் மூலம், எழுதும்போது அவர்களையும் அறியாமல் விரல்களுக்கு அழுத்தம் கொடுப்பது தவிர்க்கப்பட்டு விரல் வலி, கை வலி இல்லாமல் எழுதுவதில் கவனம் அதிகரிக்கும்.

இரண்டாவதாக, எழுத்துக்களை அதன் வரி வடிவம் (நேர்க்கோடு, படுக்கைக் கோடு, சாய்வுக் கோடு), வளைவு, சுழி போன்றவற்றை வடிவம் மாறாமல் எழுதப் பழக வேண்டும். அவ்வாறு பழகும்போதுதான் கையெழுத்து அழகாகும். இதற்கு சிறு கட்டமிடப்பட்ட குறிப்பேடு, இரட்டை வரி, நான்கு வரி குறிப்பேடு பயிற்சியே சிறந்தது. இதன் மூலம் ஒரு எண் அல்லது எழுத்து, இந்த அளவில் தான் அமைய வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள முடியும். 

மூன்றாவதாக, எழுத்துக்களை முறையான அமைப்பு, வடிவத்தில் எழுதக் கற்றுக் கொண்ட பின்னர், ஒரு வரி நேர்க்கோடு இட்டக் குறிப்பேட்டில் எழுதப் பழக வேண்டும். இதன் மூலம் எழுத்துக் களின் அடிப்பகுதியை எவ்வாறு கோட்டின் மேற்புறம் அமைத்து எழுத வேண்டும்; மேல் நோக்கி மற்றும் கீழ் நோக்கி எழுத வேண்டும் என்று தெரிந்துகொள்ள முடியும். 

நான்காவதாக, எழுதும் வார்த்தையில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தும் ஒரே அளவில் அமைய வேண்டும். ஒன்று பெரியது, மற்றொன்று சிறியது என்று அளவு மாறுபடாமல், எழுத்துக்களின் அளவிலும் கவனம் செலுத்தி எழுத வேண்டும். பயிற்சியே சிறந்த ஆசான்! 

எனவே மீண்டும், மீண்டும் எழுதி பயிற்சி செய்தல் வேண்டும். இதன் மூலம் நிதானமாக எழுதும் சூழலிலும், 'தேர்வு' போன்று கால அவகாசம் அளித்து, வேகமாக எழுத வேண்டிய சூழலிலும் அழகாக எழுத முடியும்.

எடை குறைக்கும் ஜப்பானிய உடற்பயிற்சி

June 18, 2022 0


 இன்றைய சூழலில் உடல் எடையைக் குறைப்பது பலருக்கும் சவாலாக உள்ளது. இதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறோம். மருத்துவ மற்றும் உடற்பயிற்சி நிபுணர்களும் பல்வேறு வழிகளை ஆராய்ந்து வருகின்றனர். அந்த வகையில், ஜப்பானியர்கள் அறிமுகம் செய்த 'டவல் உடற்பயிற்சி' பற்றி தெரிந்துகொள்வோம். வயிற்றுப் பகுதியில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க இந்தப் பயிற்சி உதவுகிறது. ஜப்பானின் புகழ்பெற்ற மசாஜ் நிபுணரான மருத்துவர் தோஷிகி புகுட்சுட்ஸியால் இந்தப் பயிற்சி அறிமுகம் செய்யப்பட்டது. இது உடல் எடையைக் குறைப்பதுடன், முதுகு வலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த உடற்பயிற்சியைத் தொடர்ந்து செய்வதன் மூலம் இடுப்பைச் சுற்றி இருக்கும் அதிகப்படியான சதை மற்றும் உடல் எடை குறையும். 'டவல் உடற்பயிற்சி' 



செய்முறை:

 1. கை, கால்களை நன்றாக நீட்டி தளர்த்திய நிலையில், தரையில் விரிக்கப்பட்ட பாயின் மேல், மேற்கூரையைப் பார்த்தவாறு படுத்துக்கொள்ளுங்கள்.

2. தொப்புளுக்கு நேர் கீழே, முதுகுக்கு அடியில், ஒரு டவலை நன்றாக சுருட்டி வைத்துக்கொள்ளுங்கள். 

3. கால்கள் இரண்டையும் 10 செ.மீ. இடைவெளியில் நகர்த்தி, தோள்பட்டை தரையில் படுமாறு வைத்திருங்கள்.

 4. கைகளை தலைக்கு மேலே தூக்கி, உள்ளங்கைகள் தரையைப் பார்த்தவாறு இருப்பதுபோல் செய்யுங்கள்.

 5. இந்த நிலையில் குறைந்தது 5 நிமிடங்களாவது இருக்க வேண்டும். பிறகு உடலை மெதுவாகத் தளர்த்தி, இயல்பு நிலைக்கு வரவும்.


 மேலே குறிப்பிட்ட முறைப்படி தொடர்ந்து பயிற்சி செய்தால், விரைவாக உடல் எடை குறையும் என மருத்துவர் தோஷிகி கூறுகிறார். 



எடைக் குறைப்பு விஷயத்தில், மேற்கொள்ளும் பயிற்சிகளைத் தொடர்ந்து பின்பற்றினால் மட்டுமே பலன் கிடைக்கும். 

அவ்வாறே, இந்த டவல் உடற்பயிற்சியினைத் தினமும் செய்தால் சரியான உடலமைப்பைப் பெற முடியும். உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி மட்டுமின்றி, உணவிலும் மாற்றங்களைச் செய்ய வேண்டும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். 

துரித உணவுகள், கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்கள், ஆல்கஹால் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். பழங்கள், காய்கறிகள், குறைந்த கலோரி கொண்ட உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும். தேவையான தண்ணீர் குடித்து, முறையாக உடற்பயிற்சி செய்து, சரியான நேரத்தில் தூங்கி எழுந்து, மனஅழுத்தம் இல்லாமல் வாழ்ந்தால், உடல் இளமையாகவும், அழகாகவும் இருக்கும்.

June 11, 2022

ரூ.1000 ஊக்கத்தொகையுடன் போட்டித் தேர்வு பயிற்சிகள்: அரசு முக்கிய அறிவிப்பு

June 11, 2022 0

 படித்த வேலையற்ற எஸ்சி/எஸ்டி சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இலவச போட்டித்தேர்வு பயிற்சிகள் வழங்கும் திட்டத்தை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் (National  Career  Service  Centre  for  SC/STs) அறிவித்துள்ளது.



இதுகுறித்து, துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி வெளியிட்ட செய்திக் குறிப்பில், " சென்னை, புதுச்சேரியில்  11 மாத கால அரசு வேலை வாய்ப்பு பெறுவதற்கான போட்டித்தேர்வு பயிற்சி, கணினிப்பயிற்சி சுருக்கெழுத்து பயிற்சி ஆகியவை இலவசமாக திறன்வாய்ந்த தனியார் பயிற்சி நிறுவனம் மூலம் 01 ஜூலை 2022 முதல் ஆரம்பமாக உள்ளது.

பயிற்சி காலத்தில் உதவித்தொகை ரூ 1000/-,வழங்கப்படும் மற்றும் இலவசமாக போட்டி தேர்வு பயிற்சி புத்தகங்கள் மற்றும் எழுது பொருள்களும் வழங்கப்படும்.

இந்த பயிற்சியில் சேர்ந்து பயனடைய விருப்பமுள்ளவர்கள் தங்களுடைய விருப்ப மனுவை கல்வி மற்றும் குடும்பம் பற்றிய சுய விபரங்களுடன் துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம், மூன்றாம் தளம், வேலைவாய்ப்பு அலுவலகம் சாந்தோம், சென்னை , தமிழ்நாடு என்ற முகவரிக்கு 24.06.2022 க்குள் விண்ணப்பிக்க வேண்டுகிறோம். இந்த பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் 27 வயதுக்குள் இருக்கவேண்டும்.

மேலும், விவரங்கள் மற்றும் வழிகாட்டுதலுக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் www.labour.gov.in மற்றும் www.ncs.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம்.



கோடை கால பயணத்துக்கு அவசியமான குறிப்புகள்

June 11, 2022 0

 கோடை காலத்தில் தொடர் விடுமுறைகள் கிடைப்பதால் சுற்றுலா அல்லது உறவினர் வீடுகளுக்கு செல்வதற்கு பெரியவர்களும், குழந்தைகளும் ஆர்வமாக இருப்பார்கள். கொரோனா தொற்றை சமாளித்து மீண்ட இன்றைய சூழலில் வெளியிடங்களுக்கு சுற்றுலா செல்லும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். சுற்றுலா பயணத்திற்காக வீட்டிலிருந்து கிளம்பும்போது சமையல் எரிவாயு இணைப்பு, மின்சார இணைப்பு, போர்வெல் மோட்டார் சுவிட்ச், தண்ணீர் குழாய்கள், அறைகளில் ஒளிரும் மின்விளக்குகள் ஆகியவை அணைக்கப்பட்டிருப்பதை ஒருமுறைக்கு, இருமுறை பார்த்துக்கொள்ள வேண்டும்.


பயணங்களின்போது குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் உடன் இருந்தால், அவர்களுக்கு தேவையான வசதிகளை முன்னதாக திட்டமிட்டு ஏற்பாடு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட வட்டார மொழி, அங்குள்ள தகவல் தொடர்பு வசதிகள், தங்குமிடம் ஆகியவற்றில் கவனம் வேண்டும். கோடைகாலம் என்பதால் பருத்தி ஆடைகளே நல்லது. மேலும், வெப்பத்தை ஈர்க்கும் அடர்ந்த நிற ஆடைகள் அணிவதை தவிர்க்கவும். காரில் செல்பவர்கள் வெயில் அதிகம் இல்லாத காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிக்கலாம். இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை சாலை ஓரமாக காரை நிறுத்திவிட்டு, 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை ஓய்வெடுப்பது கட்டாயம். பயணம் செல்லும் வழித்தடங்களில் எங்கெங்கு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ளன என்பதையும், வாகன பழுது பார்ப்பு வசதிகள் கிடைக்கும் என்பதையும் அறிந்திருப்பது அவசியம்.


வெளியிடங்களில் சாப்பிடும்போது அசைவ உணவுகள், பழக்கமில்லாத புதிய ரெசிபிகள், எண்ணெய்யில் வறுத்த சிற்றுண்டிகள் ஆகியவற்றை உண்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பயணங்களின்போது ஆவியில் வேகவைக்கப்பட்ட உணவு வகைகளே உடல் நலனுக்கு ஏற்றது. வெளியூர் பயணங்களின்போது அவசரத் தேவைக்காக முக்கிய மருந்துகள் அடங்கிய சிறிய முதலுதவி பெட்டியை எடுத்துச்செல்வது அவசியம். அதில், அன்றாடம் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளை தகுந்த அளவுக்கு இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு தேவையான டயாப்பர், பால், பிஸ்கட் ஆகியவற்றை தேவையான அளவு கொண்டு செல்வது நல்லது. 


ரெயில் பயணங்களின்போது மற்றவர்கள் தரும் பானங்கள், பிஸ்கட்டுகள் உள்ளிட்ட சிற்றுண்டி வகைகளை வாங்கி சாப்பிடக்கூடாது. கொரோனா தாக்குதல் முற்றிலும் அகலாத நிலையில், சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், நெரிசலில் இருந்து ஒதுங்கியிருத்தல், ரெயில் பெட்டிகளில் கதவு, ஜன்னல் உள்ளிட்ட இதர பகுதிகளை அவசியமில்லாமல் தொடுவதை தவிர்த்தல் ஆகியவற்றை கடைப்பிடிக்கவும். அவ்வாறு தொட நேர்ந்தால் சானிட்டைசர் கொண்டு கைகளை கழுவ வேண்டும்.


June 5, 2022

8 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு ரூ.25,000/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு !

June 05, 2022 0

 

8 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு ரூ.25,000/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு !

Psychiatrist, Medical Officer பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாத தொடக்கத்தில் வெளியானது. இந்த தமிழக அரசு பணிக்கு என 14 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


TNHRCE வேலைவாய்ப்பு விவரங்கள் :

  • தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பின் படி, மொத்தம் 14 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் Psychiatrist பணிக்கு MBBS with Diploma In Psychiatric Medicine, Medical Officer பணிக்கு MBBS மற்றும் Nurse பணிக்கு Diploma in Nursing Home Guardian பணிக்கு Degree in Masters of Social welfare, MSW, Social Worker பணிக்கு Bachelor of Social welfare (BSW), Maintenance Assistant மற்றும் Vocational Trainer பணிக்கு ஏதேனும் ஒரு Degree மற்றும் Watchman பணிக்கு 08 ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
  • 01.05.2022 அன்றைய நாளின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 35 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதார்கள் இந்த பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் குறைந்தது ரூ.9,000/- முதல் அதிகபட்சம் ரூ.25,000/- வரை வழங்கப்பட உள்ளது. மேலும் கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download TNHRCE Palani Notification & Application

Download TNHRCE Official Website

TET - ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு எப்போது நடைபெறும்?

June 05, 2022 0

 ஆசிரியர் தகுதித் தேர்வை ஜூலை இறுதி வாரத்தில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு (டெட்) தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் பயிற்சி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி, ஆண்டுதோறும் டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று காரணமாக 2020, 2021-ம் ஆண்டுகளில் டெட் தேர்வு நடத்தப்படவில்லை.

கரோனா பாதிப்பு குறைந்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டு டெட் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து, தேர்வுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 7-ம் தேதி வெளியிடப்பட்டு ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

6.33 லட்சம் பேர் விண்ணப்பம்

இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள்-1, பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள்-2 இரண்டையும் சேர்த்து டெட் தேர்வுக்கு 6 லட்சத்து 33 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கான அறிவிக்கையில் தேர்வு எப்போது நடத்தப்படும் எந்த முறையில் (ஆன்லைன் அல்லது ஆஃப்லைன்) நடத்தப்படும்என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை.

டெட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தனியார் பயிற்சி மையங்கள் வாயிலாகவும், சுயமாகவும் படித்து வருகிறார்கள். ஆனால் தேர்வு தேதி குறித்து எவ்வித அறிவிப்பும் ஆசிரியர் தேர்வு வாரியம் இதுவரை வெளியிடாததால் தேர்வர்கள் சோர்வடைந்துள்ளனர்.

அதிகாரி தகவல்

இந்நிலையில், டெட் தேர்வு நாள் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘டெட் தேர்வை ஜூலை இறுதி வாரத்தில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம்’’ என்றார். டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக இடை நிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கான போட்டித்தேர்வு நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் பணி ஓய்வுபெற்று வரும் நிலையில், ஆசிரியர் பணியிடங்கள் அதிக அளவில் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

For More All Job Notification Link : Click Here