Agri Info

Adding Green to your Life

December 27, 2022

குளிர்காலத்தில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!

December 27, 2022 0

 

தொற்றுகள் எளிதாக பரவும் என்பதால் குளிர்காலம் ஒரு கடினமான பருவம். பொதுவாக சீசன் மாறும் போது உணவில் சிறப்பு கவனம் செலுத்துவது நல்லது. குறிப்பாக குளிர் சீசனில் நிறைய உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.

குளிர் காலத்தில் சில உணவுகள் எடுத்து கொள்வது நம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. ஏற்கனவே இதயம் சார்ந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு குளிர்காலம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சீசன் ஆகும். குளிர் சீசனில் ரத்த ஓட்டத்தை பராமரிக்க இதயம் 2 மடங்கு கடினமாக வேலை செய்யும் சூழல் ஏற்படும். எனவே குளிர்காலத்தில் ஆரோக்கியமான இதயத்திற்கான உணவுகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம்.

குளிர் காலத்தில் குறைந்த வெப்பநிலை காரணமாக ரத்த தமனிகள் சுருங்கக்கூடும். இதனால் இதய தசைகளுக்கு குறைந்த ஆக்ஸிஜன் மற்றும் குறைந்த ஊட்டச்சத்துக்களே கிடைக்கும். இது ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தில் பாதிப்புகளை ஏற்படுத்த கூடும். குளிர்காலத்தில் இதய ஆரோக்கியத்திற்காக எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டியவை பற்றி பகிர்ந்து கொள்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் ரோஹித் ஷெலட்கர்.

ஆரோக்கிய உணவுகள்:

ஓட்மீல்:

உடலுக்குத் தேவையான பல வைட்டமின்கள் இதில் உள்ளன. ஓட்மீல்-ல் நிறைந்திருக்கும் ஜிங்க் மற்றும் ஃபைபர் சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. எனவே குளிர்காலத்தில் வழக்கமான காலை உணவாக ஓட்ஸை சேர்த்துக் கொள்ளலாம்.

சிட்ரஸ் பழங்கள்:

இதை ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதால் குளிர் சீசனில் எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, தக்காளி மற்றும் நெல்லி போன்ற சிட்ரஸ் பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும். சிட்ரஸ் பழங்களில் அடங்கியிருக்கும் ஃபிளாவனாய்ட்ஸ் மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட இரண்டும் அதிக அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் கொலஸ்ட்ராலை அதிகரிக்கின்றன. இதனால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைகிறது.

முழு தானியங்கள்:

முழு தானியங்கள் நார்ச்சத்து நிறைந்தவை. இவை இதயம் மற்றும் ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் முக்கிய பல ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கின்றன. நூடுல்ஸ் மற்றும் ஸ்பாகெட்டி போன்ற இன்ஸ்டன்ட் ஃபுட் பாகெட்ஸ்களில் பொதுவாக காணப்படும் மைதாவிற்கு பதில் பஜ்ரா, மக்கி, பார்லி, கினோவா, ஓட்ஸ், பக்வீட் மாவு மற்றும் ராகி போன்றவற்றை டயட்டில் சேர்க்கலாம்.

வேர் காய்கறிகள்:

வேர் காய்கறிகளில் வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின், வைட்டமின் சி உள்ளிட்ட பல மற்றும் மினரல்ஸ் அதிகம். இவை ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டு இதயம், ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். எனவே கேரட், டர்னிப்ஸ், ஸ்வீட் பொட்டேட்டோ, உருளைக்கிழங்கு மற்றும் பீட் போன்ற வேர் காய்கறிகளை அதிகம் எடுத்து கொள்ளலாம்.

தவிர்க்க வேண்டியவை:

- ஆரோக்கியமற்ற கொழுப்பு உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வறுத்த உணவுகளான பூரி, பரந்தா, பகோரி, கச்சோரி மற்றும் நம்கீன்ஸ்களை தவிர்த்து வெண்ணெய் & எண்ணெயை நுகர்வை கட்டுப்படுத்த வேண்டும். 10%-க்கும் குறைவான கொழுப்புள்ள இறைச்சிகளை தேர்ந்தெடுத்து சாப்பிடவும்.

- அதிக சர்க்கரை நுகர்வு குளிர் சீசனில் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனமாக்கலாம். இனிப்புகள் நிறைந்த உணவுகளை குளிர் சீசனில் அதிகம் சாப்பிடுவது வீக்கத்தை அதிகரிக்கிறது மற்றும் இதனுடன் தொடர்புடைய வலி நோய் எதிர்ப்பு சக்தியைவெகுவாக குறைக்கிறது. மேலும் சுவாச கோளாறுகளும் ஏற்படும். மொத்தத்தில் வறுத்த உணவுகள், கொழுப்பு மற்றும் சர்க்கரை அல்லது கொலஸ்ட்ரால் அதிகமுள்ள உணவுகளைத் தவிர்க்கவும்.

குளிர்காலத்தில் ஆரோக்கிய வாழ்க்கை முறையை பேணுவது முக்கியம். வெளியே சென்று ஒர்கவுட்ஸ்களில் ஈடுபட முடியாவிட்டாலும் வீட்டிற்குள்ளேயே நடனம், யோகா, மிதமான ஏரோபிக்ஸ் மற்றும் எளிய உடற்பயிற்சிகள் செய்யலாம். வழக்கமான உடற்பயிற்சி இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும், உடலை சூடாக வைக்க உதவுகிறது.


 Click here to join whatsapp group for daily health tip

December 26, 2022

8-ம் வகுப்பு முதல் டிகிரி வரை : இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய அரசு வேலைகள்

December 26, 2022 0

 2022 ஆம் வருடம் நிறைவடையவுள்ள நிலையில் பல்வேறு பிரிவுகளில் உள்ள தமிழக, மத்திய மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. பணிக்கான சம்பளம், கல்வி, வயது வரம்பு போன்ற விவரங்களைக் கீழ் வருமாறு காண்போம்.

தமிழக அரசு வேலைகள் :

1. தமிழ்நாடு விளையாட்டு ஆணையகம்

பணியிடம் : 97

சம்பளம் : நிலை 12 (ரூ. 35,600 – 1,12,800)

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 30.12.2022

முழு விவரங்களுக்கு : தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தில் பயிற்றுநர் பணியிடங்கள்; ஒரு லட்சம் வரை சம்பளம்

2. மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை

பணியிடம் : 9

சம்பளம் : -

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 30.12.2022

முழு விவரங்களுக்கு : டிகிரி முடித்தவர்களுக்கு அசத்தல் வாய்ப்பு : மதுரையில் அரசு வேலைவாய்ப்பு

3. தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம்

பணியிடம் : 7

சம்பளம் : ரூ 1 லட்சம் - 2 லட்சம் வரை

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 30.12.2022

முழு விவரங்களுக்கு :ரூ.2 லட்சம் வரை மாத சம்பளத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் வேலை... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

4. ஈரோடு அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்

பணியிடம் : 2

சம்பளம் : ரூ.15,700-58,100/-

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 30.12.2022

முழு விவரங்களுக்கு : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு ரூ.58000 வரை சம்பளத்தில் வேலை... முழு விவரம் இதோ

மத்திய அரசு வேலைகள்:

5. IREL நிறுவன தொழிற்பயிற்சி

பணியிடம் : 7

சம்பளம் : ரூ.12,000/-

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 30.12.2022

முழு விவரங்களுக்கு : எம்.பி.ஏ பட்டதாரிகளுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் உதவித்தொகையுடன் கூடிய தொழிற்பயிற்சி.

6. மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம்

பணியிடம் : 1

சம்பளம் : ரூ.37,400-67,000/- + GP ரூ.10,000/-

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 31.12.2022

முழு விவரங்களுக்கு : மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு... நேரடி நியமனத்தில் நிரப்ப அறிவிப்பு வெளியீடு

7. மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்

பணியிடம் : 4

சம்பளம் : ரூ.19,900 - 1,12,400/-

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 30.12.2022

முழு விவரங்களுக்கு : மத்திய அரசு நிறுவனத்தில் 10,12-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு..என்னென்ன பணிகள்?



 Click here to join WhatsApp group for Daily employment news 

மத்திய அரசு நிறுவனத்தில் 10,12-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு..என்னென்ன பணிகள்?

December 26, 2022 0

 வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வியின் இந்தியா கவுன்சில் கீழ் செயல்படும் மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சுற்றுச்சூழல்,காடு மற்றும் பருவ நிலை மாற்றம் அமைச்சகத்தின் தன்னாட்சி ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனமாகும். இதில் தற்போது காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்வயதுசம்பளம்
Library Information Assistant1அதிகபட்சம் 27 வயதுரூ.35,400-1,12,400/-
Lower Division Clerk(LDC)1அதிகபட்சம் 32 வயதுரூ.19,900-63,200/-
Driver(Ordinary Grade)2அதிகபட்சம் 27 வயதுரூ.19,900-63,200/-

கல்வித்தகுதி:

பதவிதகுதி
Library Information AssistantLibrary Science படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Lower Division Clerk(LDC)12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தட்டச்சு திறன்
Driver(Ordinary Grade)10 ஆம் வகுப்பு தேர்ச்சி,ஓட்டுநர் உரிமம் மற்றும் 3 ஆண்டுகள் அனுபவம்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதார்களில் தகுதியானவர்களுக்கு எழுத்துத் தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு https://iwst.icfre.gov.in/என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.700/- demand draft மூலம் செலுத்த வேண்டும். SC/ST/OBC/EWS பிரிவினர் ரூ.200/- கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://iwst.icfre.gov.in/jobs

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

The Director,Institute of Wood Science & Technology,18th cross,Malleswaram,Bengaluru - 560003.

விண்ணப்பத்தை அனுப்பக் கடைசி நாள் : 30.12.2022.

Click here to join WhatsApp group for Daily employment news

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு... நேரடி நியமனத்தில் நிரப்ப அறிவிப்பு வெளியீடு

December 26, 2022 0

 மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் தன்னாட்சி அமைப்பான ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் தேசிய இன்ஸ்ட்டியூட் (NIRD & PR), ஐதராபாத் ஆகும். ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் தேசிய இன்ஸ்ட்டியூட் ஆனது ஊரக வளர்ச்சியில் பயிற்சி,ஆராய்ச்சி, நடவடிக்கை ஆராய்ச்சி மற்றும் கன்சல்டன்சி செயல்பாடுகளை மேற்கொள்கிறது.

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் தேசிய இன்ஸ்ட்டியூட்டில் தற்போது உள்ள டைரக்டர் ஜெனரல் பதவிக்கான காலியிடத்தை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த பணி டெபுடேசன் மற்றும் நேரடி ஆள்சேர்ப்பு வகையில் நிரப்பப்படவுள்ளது.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்டைரக்டர் ஜெனரல்
சம்பளம்ரூ.37,400-67,000/- + GP ரூ.10,000/-
வயது வரம்புநேரடி நியமனத்திற்கு 50 வயதிற்குக் கீழ் இருக்க வேண்டும். டெபுடேசன் பிரிவில் 56 வயது அதிகபட்சமாக இருக்கலாம்.


கல்வித்தகுதி:

டெபுடேசன் பிரிவில் தேர்வு செய்ய குருப் அ பிரிவில் அரசின் பணி புரிந்திருக்க வேண்டும். நேரடி நியமனத்திற்கு சமூக அறிவியல் பிரிவில் Ph.D., பெற்றிருக்க வேண்டும். மேலும் 15 வருட அனுபவம் தேவை.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்குத் தகுதியானவர்கள் விண்ணப்பதார்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டு அழைப்பு விடுக்கப்படும். விண்ணப்பதார்கள் அதிகரிக்கும் நிலையில் நேர்காணல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தபால் மூலம் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் தகுந்த ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கச் செய்ய : http://nirdpr.org.in/

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

செயலர் (பயிற்சி),

ஊரக வளர்ச்சி அமைச்சகம், ஊரக வளர்ச்சித் துறை, கோர் - 4B(UG), இந்தியா வசிப்பிட மையம், லோதி ரோடு, புதுடெல்லி - 110003.

தபால் மூலம் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள் :30.12.2022

Click here to join WhatsApp group for Daily employment news

எம்.பி.ஏ பட்டதாரிகளுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் உதவித்தொகையுடன் கூடிய தொழிற்பயிற்சி.

December 26, 2022 0

 மத்திய அரசின் அரிதான தாதுகளை மற்றும் மினரல்களை உற்பத்தி செய்யும் நிறுவனமான IREL நிறுவனத்தில் எம்.பி.ஏ பட்டதாரிகளுக்கான தொழிற்பயிற்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. IREL நிறுவனம் மினி ரத்தினம் பிரிவு ஒன்றில் இடம்பெற்றுள்ளது. அணு சக்தி அமைச்சகத்தில் கீழ் செயல்படுகிறது. அணு மினரல்களை சுரங்கம் அமைத்து உற்பத்தி செய்து வருகின்றனர். இல்மனைட், ரூட்டில், சிர்கான், சில்லிமனைட், கார்னெட் போன்ற தாதுகளை உற்பத்தி செய்கின்றனர்.

தொழிற்பயிற்சி விவரங்கள்:

பிரிவுகள்எண்ணிக்கைஉதவித்தொகை
Executive(HR)03ரூ.12,000/-
Executive(Marketing)02ரூ.12,000/-
Executive(Finance &Accounts)02ரூ.12,000/-

வயது வரம்பு:

தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அதிகபட்சம் 25 வயது வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

தொழிற்பயிற்சிக்கு MBA (HRM)/ MA (IR & PM, MBA (Marketing),CA/ICWA/ MFC/ MBA(Finance & Accounts) அல்லது முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். முழு நேரப் பிரிவில் எம்.பி.ஏ பெற்றிருக்க வேண்டும்.

தொழிற்பயிற்சி காலம் :

IREL நிறுவனத்தில் எம்.பி.ஏ பட்டத்தாரிகளுக்கு ஒரு வருடம் தொழிற்பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் கல்வித்தகுதி மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். அங்கீகரிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு அதிகமாகத் தேர்வு செய்யப்பட்ட பட்டியலில் இடம்பெற்றிருந்தால் பிறந்த தேதி அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும். இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்குச் சான்றிதழ் பரிசோதனைக்காக அழைப்பு விடுக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தொழிற்பயிற்சியாவார்கள் கண்டிப்பாக http://www.apprenticeshipindia.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

https://www.irel.co.in/careers என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தை பதிவிறக்க செய்ய : https://www.irel.co.in/careers

தபால் மூலம் அனுப்ப வேண்டும் முகவரி:

The Dy. General Manager (HRD),

IREL(India) Limited

Plot No 1207,Veer Savarkar Marg, Opp Siddhi Vinayak Mandir

Mumbai, Maharashtra-400028

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 30.12.2022.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.


Click here to join WhatsApp group for Daily employment news

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு ரூ.58000 வரை சம்பளத்தில் வேலை... முழு விவரம் இதோ

December 26, 2022 0

 

ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்
அலுவலக உதவியாளர்2ரூ.15,700-58,100/-

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க 18 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 32 ஆகவும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 34 ஆகவும் மற்றும் ஆதிதிராவிடர் & பழங்குடியினர் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 37 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை. ஆதிதிராவிடர் & பழங்குடியினர் பிரிவு முன்னாள் இராணுவத்தினருக்கு அதிகபட்ச வயது 53 ஆகவும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு முன்னாள் இராணுவத்தினருக்கு அதிகபட்ச வயது 48 ஆகவும் உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு உச்ச வரம்புடன் கூடுதலாக 10 ஆண்டுகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://skilltraining.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அதனுடன் புகைப்படங்கள், சான்றிதழ்கள் நகல்கள் இணைத்து பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய: https://skilltraining.tn.gov.in/

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

முதல்வர்,

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்,

காசிபாளையம், ஈரோடு - 638009.

தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்பக் கடைசி நாள் : 30.12.2022 மாலை 5.45.


Click here to join WhatsApp group for Daily employment news

ரூ.2 லட்சம் வரை மாத சம்பளத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் வேலை... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

December 26, 2022 0

 தமிழக அரசின் இணையச் சேவை வழங்கும் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தில் (TAMIL NADU FIBRENET CORPORATION LIMITED) உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் தமிழ்நாட்டில் பாரத்நெட் பாகம் 2 இல் திட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இதற்கான பணிபுரியத் தகுதியான நபர்களைத் தற்காலிக அடிப்படையில் தேர்வு செய்ய இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்பணிக்கான விவரங்கள் கீழ் வருமாறு:-

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்வயது
Manager(Finance & Accounts)125-40
Manager(HR)126-40
General Manager132-40
Associate Consultant - NOC & Server1
Associate Consultant - Network Security1
Associate Consultant - BSS and Helpdesk1
Associate Consultant - Operation Support System1

சம்பளம்:

Manager பதவிகளுக்கு ரூ.1,00,000/- வரை சம்பளமும் General Manager பதவிக்கு ரூ.2,00,000/- வரை சம்பளமும் வழங்கப்படும். Associate Consultant பதவிகளுக்குச் சம்பள விவரம் இடம்பெறவில்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு நேர்காணலுக்கான அறிவிப்பு விடுக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் https://tanfinet.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும். Associate Consultant பதவிகளுக்கு மட்டும் தபால் மற்றும் இமெயில் மூலம் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : Manager/ Associate Consultant

தபால் மூலம் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Managing Director,

Tamil Nadu FibreNet Corporation Limited,

Door.No.807, 5th Floor,P.T.Lee Chengalvaraya Naicker Trust, Anna Salai, Chennai - 600002.

இமெயில் முகவரி : tanfinet@tn.gov.in

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 30.12.2022 மாலை 5.45 மணி வரை. 

Click here to join WhatsApp group for Daily employment news

டிகிரி முடித்தவர்களுக்கு அசத்தல் வாய்ப்பு : மதுரையில் அரசு வேலைவாய்ப்பு

December 26, 2022 0

மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் செயல்படும் வட்டார இயக்க மேலாண்மை அலகில் உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. உள்ளூர் வாசிகள் இதனைப் பயன்படுத்திக்கொண்டு இப்பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்
வட்டார ஒருங்கிணைப்பாளர்9

பணி வட்டாரங்கள்:

அலங்காநல்லூர், செல்லம்பட்டி, கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டி ஆகிய வட்டாரங்களில் இடம்பெற்றுள்ளன.

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு அதிகபட்சமாக 35 வயது இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கணினி இயக்கத்தில் 3 மாதம் MS Office சான்று பெற்றிருக்க வேண்டும் அல்லது பட்டப்படிப்பு கணினி அறிவியல் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து அதனைத் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று கொடுக்கலாம்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://madurai.nic.in/

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

இணை இயக்குநர் / திட்ட இயக்குநர்,

மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,

புது நத்தம் ரோடு, ரிசர்வ் லைன் பஸ் ஸ்டாப் அருகில், மதுரை.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 30.12.2022.

 Click here to join WhatsApp group for Daily employment news 

தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தில் பயிற்றுனர் பணியிடங்கள்; ஒரு லட்சம் வரை சம்பளம்

December 26, 2022 0

 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்றுனர் பணியிடங்களுக்காக தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

காலியிடங்கள் எண்ணிக்கை : 97

விளையாட்டு பிரிவுகள்:  Archery, Athletics (sprints), Athletics (Jumps), Athletics (Throws), Para Athletics, Boxing, Basketball, Fencing, Football, Gymnastics, Handball, Hockey, Judo, Kabaddi, Kho-Kho, Swimming (Diving), Swimming, Taekwondo, Tennis / Soft Tennis, Volleyball, Weightlifting, Wrestling and Wushu

ஊதிய விகிதம்: நிலை 12 (ரூ. 35,600 – 1,12,800)

விண்ணப்பங்களை, www.sdat.tn.gov.in இணைய வழியில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். 2022, டிசம்பர் 12ம் தேதி முதல் 30ம் தேதி மாலை 5 மணிவரை சமர்ப்பிக்கலாம். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களும் மேற்கண்ட இணையவழியில் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பான விரிவான அறிவிக்கை, இடஒதுக்கீடு விவரங்கள், த்த தேர்வுமுறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் https://www.sdat.tn.gov.in/என்ற இணையதளத்தில் பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.



 Click here to join WhatsApp group for Daily employment news 

December 18, 2022

Job Vacancy :Post Doctoral Fellows/td at TNAU, Coimbatore

December 18, 2022 0

 




GUIDELINES FOR POST DOCTORAL FELLOWSHIP

It is a temporary full time research position which may be offered for those who seek to choose research as a profession. Candidate with a PhD degree in appropriate disciplines and with consistently good academic record and research potential can apply.  The proposal should be innovative.

  1. Eligibility: 

A detailed research proposal has to be submitted along with the application. Proof of concept by way of preliminary work done is essential requirement for the applicants, which will be measured through their publications made in their SCI indexed journals. At least two letters of recommendation / reference from previous Principal Investigator / Chairman in case of freshers regarding the research capabilities and other attributes of the applicant must be submitted to the Dean, AC & RI, Madurai, directly by the referee in confidential letter. Candidates who obtained their doctoral degree from TNAU alone can apply for PDF.


  1. Duration: 

The duration of the fellowship will be for a period of 2 years.


  1. Financial Assistance :

The Post Doctoral Fellow will be paid with consolidated fellowship of Rs.40,000/-
per month.


  1. Leave 

Leave for maximum period of 12 days in a year in addition to public holidays may be taken by the Post Doctoral Fellow with the approval of the Project Director, Centre of Excellence in Innovations, AC & RI, TNAU, Madurai.


  1. Procedure for approval 

The applications received will be scrutinized by the screening committee. Later, the short listed candidates will be called to present the project proposal before the selection committee, constituted by University. No TA/DA will be paid for appearing in the interview. The decision of the Committee will be final.

6. Documents for applying to the post of Post of Doctoral Fellow


  • Application form ( to be obtained from DSW)

  • Research Proposal (as per Annexure III)

  • Publications in SCI indexed journals in the relevant theme area

  • Two letters of recommendation (to be sent by the referee directly to the Dean, AC&RI, Madurai)

   Interview Place, Date & Time :The Dean,AC & RI, Madurai.21.12.2022,9.00 a.m.




டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.30,000 சம்பளத்தில் மத்திய அரசு மையத்தில் வேலை

December 18, 2022 0

 மத்திய அரசின் தேசிய வாகன சோதனை தடங்கள் மையத்தில் (NATRAX) உள்ள பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிப்ளமோ படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்வயதுசம்பளம்
Technician – Vehicle Testing128ரூ.30,000/-
Technician – Homologation128ரூ.30,000/-

கல்வித்தகுதி:

12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Mechanical / Automobile பாடங்களில் டிப்ளமோ. மேலும் சம்பந்தப்பட்டப்பிரிவில் 5 ஆண்டுகள் அனுபவம்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதார்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கான அறிவிப்பு விடுக்கப்படும். தகுதி செய்யப்பட்டவர்களின் அளவை பொருத்து எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதார்கள் https://www.becil.com/என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து இமெயில் மூலம் சுய விவரங்கள் கொண்ட படிவத்தை இணைத்து அனுப்ப வேண்டும். SC/ST/PH பிரிவினர் ரூ.295/- மற்றும் இதர பிரிவினர் ரூ.590/- விண்ணப்பக்கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்திய ரசீதை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://www.becil.com/

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய இமெயில் முகவரி :hr.bengaluru@becil.com

கட்டணம் செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு :

BECIL.

BANK: UNION BANK OF INDIA

ACCOUNT NO: 510331001272052

IFSC CODE: UBIN0905828

அலுவலக முகவரி :

BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED, Regional office (Ro),

#162,1st Cross, 2nd Main,

AGS layout, RMV 2nd stage,

Bangalore-560094.

Phone: 080-23415853.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 25.12.2022.


 Click here to join WhatsApp group for Daily employment news