Agri Info

Adding Green to your Life

January 25, 2023

தாம்பரத்தில் இந்திய விமானப் படை பணிக்கு தேர்வு முகாம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

January 25, 2023 0

 இந்திய விமானப் படையில் 2023 ஆம் ஆண்டுக்கான ஏர்மேன் பணிக்குத் தேர்வு முகாம் தாம்பரத்தில் பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 8 நாள் வரை நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம். தெலுங்கான மற்றும் பாண்டிச்சேரி ஆண்கள் கலந்துகொள்ளலாம்.

குரூப் y ஏர்மேன் பிரிவில் Medical Assistant பதவிக்குத் தேர்வு முகாமில் கலந்துகொள்ள 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பார்மசியில் டிகிரி/டிப்ளமோ படித்தவர்கள் கலந்துகொள்ளலாம். தேர்வு முகாம் தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை நிலையத்தில் நடைபெறவுள்ளது.

இந்த தேர்வு முகாமில் கலந்துகொண்டு இந்திய விமானப்படை பணியில் சேர தேவையான விவரங்களை இங்குத் தெரிந்துகொள்ளுங்கள்.

பணியின் விவரங்கள்:

தேர்வு முகாம் நாள்பங்குபெற வேண்டிய மாநிலங்கள்
பிப்ரவரி 1 - 2தமிழ்நாடு, கேரளா மற்றும் பாண்டிச்சேரி
பிப்ரவரி 4 - 5கர்நாடகா, தெலுங்கான மற்றும் ஆந்திரப் பிரதேசம்
பிப்ரவரி 7 - 8(Diploma / B.SCin Pharmacy)தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கான, ஆந்திரப் பிரதேசம் மற்றும் பாண்டிச்சேரி

வயது வரம்பு:

Medical Assistant trade : 27.06.2002 - 27.06.2006 (திருமணமாகாத ஆண்கள்)

Medical Assistant trade (with Diploma / B.Sc in Pharmacy) : திருமணமாகாத ஆண்கள் 27.06.1999 - 27.06.2004 தேதிக்குள் பிறந்தவர்கள் மற்றும் திருமணம் ஆனவர்கள் 27.06.1999 - 27.06.2002.

கல்வித்தகுதி:

இரண்டு பிரிவு கல்வித்தகுதி உடையவர்கள் கலந்துகொள்ளலாம்.

1. 12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம் பாடங்களுடன் 50% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. 12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம் பாடங்களுடன் 50% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி மற்றும் கூடுதலாக Diploma / B.SC in Pharmacy 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் முதல் கட்டமாகச் சான்றிதழ் சரிபார்ப்பு, அதனைத்தொடர்ந்து, உடற்தகுதி தேர்வு, எழுத்துத்தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகிய முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

சம்பளம் :
தேர்வு செய்யப்பட்டவர்களுக்குப் பயிற்சி காலத்தில் ரூ.14,600 அளிக்கப்படும். அதனைத் தொடர்ந்து,  பணி நியமனத்திற்குப்  பின் தொடக்கத்தில் ரூ.26,900 மாத சம்பளமாக வழங்கப்படும். இதர சலுகைகளும் உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள ஆண்கள் நேரடியாகப் பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 8 வரை நடக்கும் தேர்வு முகாமில் கலந்துகொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

ரூ.85 ஆயிரம் வரை சம்பளம்.. தமிழ்நாடு அரசு இயக்கத்தில் பல்வேறு பிரிவில் வேலை.. முழு விவரம்!

January 25, 2023 0

 தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.85 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பணியின் விவரங்கள் மற்றும் தகுதிகள் குறித்துப் பார்ப்போம்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்வயது
Finance Officer1ரூ.85,00040
Technical Officer1ரூ.85,00045
Admin Officer1ரூ.35,000-
Admin Associates4ரூ.30,000-
Post of an Advisor1--

கல்வி மற்றும் இதர தகுதிகள்:

பதவியின் பெயர்கல்வி
Finance OfficerFinance / Chartered Accountant /ICWA பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 வருட அனுபவம் தேவை
Technical OfficerEnvironmental Sciences பாடத்தில் முதுகலைப் பட்டம் மற்றும் 2 வருட அனுபவம்
Admin Officerஏதாவது ஒரு பட்டப்படிப்பு மற்றும் 5 வருட அனுபவம்
Admin Associatesஏதாவது ஒரு பட்டப்படிப்பு மற்றும் 5 வருட அனுபவம்
Post of an AdvisorEnvironmental Sciences அல்லது அதற்கு நிகரான பாடத்தில் Ph.D மற்றும் 15 வருட அனுபவம்

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://tngreencompany.com/ என்ற இணையத்தளத்தில் உள்ள ஆன்லைன் படிவம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://tngreencompany.com/careers

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 02.02.2023

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

பாதுகாப்பு துறையிலுள்ள வேலைவாய்ப்புக்கான வெப்பினார் தொடர் - ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் ‘தேசம் காக்கும் நேசப் பணிகள்’

January 25, 2023 0

 சென்னை: 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு இந்திய ராணுவம், விமானப்படை, கப்பற்படை உள்ளிட்ட தேசத்தின் பாதுகாப்புத்துறையிலுள்ள வேலைவாய்ப்புகளை அறியச் செய்யும் நோக்கில் ‘இந்து தமிழ் திசை’ சார்பில் ‘தேசம் காக்கும் நேசப் பணிகள்’ எனும் வெப்பினார் தொடர் நிகழ்வை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்நிகழ்வில் சாய்ராம் கல்வி நிறுவனமும், ஆர்.எம்.கே. கல்வி நிறுவனமும் இணைந்திருக்கின்றன.

இந்த இணையவழி தொடர் நிகழ்வின் 5 மற்றும் 6-ம் பகுதிகள் வரும் ஜன. 26, 29-ம் தேதிகளில் நடைபெறவுள்ளன. இந்த நிகழ்வில் துறை சார்ந்த சிறப்பு வல்லுநர்கள் பங்கேற்று, அத்துறைகளிலுள்ள வேலைவாய்ப்புகளைப் பற்றி கலந்துரையாடவுள்ளனர்.

நாளை (ஜனவரி 26,) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள வெப்பினாரில், இந்திய கடற்படையின் ஓய்வுபெற்ற கமாண்டர் எஸ்.நவநீத கிருஷ்ணன், ‘இந்திய கடற்படையில் உள்ள வேலை வாய்ப்புகள்’ எனும் தலைப்பில் உரையாற்ற உள்ளார்.

வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.29) மாலை 4 மணிக்குநடைபெறவுள்ள வெப்பினாரில், இந்திய கடலோர காவல்படை கமாண்டண்ட் ஏ.சோமசுந்தரம், ‘இந்திய கடலோர காவல்படையிலுள்ள வேலைவாய்ப்புகள்’ எனும் தலைப்பில் உரையாற்ற உள்ளார்.

இந்த இரு வெப்பினார் நிகழ்வுகளையும் ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு ஒருங்கிணைத்து, கலந்துரையாட வுள்ளார்.

இந்நிகழ்வில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் https://www.htamil.org/DKNP03 என்ற லிங்கில் பதிவு செய்து கொள்ளுங்கள். இந்நிகழ்வில் பங்கேற்க முதலில் பதிவு செய்யும் 10 மாணவர்களுக்கு டாக்டர் வி.டில்லிபாபு இணைந்து எழுதிய நூல் பரிசாக வழங்கப்படும். மேலும் பங்கேற்கும் அனைத்து மாணவர்களும் டாக்டர் வி.டில்லிபாபு எழுதிய அறிவியல் நூல்களை சிறப்புக் கழிவு விலையில் பெறலாம். கூடுதல் விவரங்களைப் பெற 9944029700 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

எளிதில் வேலைவாய்ப்பு பெற உதவும் தாட்கோ இலவச பயிற்சி வகுப்பு

January 25, 2023 0

 அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ), ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு திறன் பயிற்சிகளை வழங்கி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, தற்போது பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலைவாய்ப்பு பெற உதவும், Aspiring Minds Computer Adaptive Test என்ற பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்பில் இறுதியாண்டு பயில்வோர் இந்தப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.

3 மாதங்கள் வழங்கப்படும் இந்த பயிற்சிக்கான அனைத்து செலவையும் தாட்கோ வழங்கும். பயிற்சி முடித்து, தேர்வில் பங்கேற்று வெற்றி பெறுவோருக்கு AMCAT சான்றிதழ் வழங்கப்படும். விருப்பமுள்ளோர், தாட்கோவின் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

மதுரை வேளாண் அறிவியல் நிலையத்தில் மசாலா பொடிகள் தயாரிக்க 5 நாட்கள் இலவச பயிற்சி

January 25, 2023 0

மதுரை: மதுரை வேளாண் அறிவியல் நிலையத்தில் மசாலா பொடிகள் தயாரிப்பதற்கான இலவசப் பயிற்சி பிப்.,6-ல் தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது.

இது குறித்து வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் அறிக்கையில் கூறியுள்ளதாவது: மசாலா பொடிகள் தயாரிப்பது குறித்த 5 நாட்கள் இலவச பயிற்சியானது மதுரை வேளாண் அறிவியல் நிலையத்தில் பிப்.,6 முதல் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இப்பயிற்சியில் குழம்பு மிளகாய் பொடி, சாம்பார் பொடி, ரசப்பொடி, கரம் மசாலா பொடி, பிரியாணி மசாலா பொடி, சென்னா மசாலா பொடி, கறிவேப்பிலை பொடி, இட்லி பொடி முருங்கைக் கீரை பருப்புப் பொடி உள்ளிட்ட பல வகையான பொடிகள் தயாரிப்பது குறித்த செயல்முறை விளக்கத்துடன் கூடிய பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

பயிற்சி பெற விருப்பமுள்ளோர், திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண் அறிவியல் நிலையம், மதுரை என்ற முகவரியிலும், 95241 19710 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்புகொண்டு முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

மேலும், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் உரிமம் பெறுவது குறித்தும் சிறு குறுந்தொழில் தொடங்குவது குறித்தும் வங்கியில் கடன்பெறுவது குறித்தும் சந்தைப்படுத்துவது குறித்தும் நிபுணர்கள் விரிவான பயிற்சி அளிக்க இருக்கின்றனர். இப்பயிற்சியில் மதுரைமாவட்ட விவசாயிகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், தொழில் முனைவோர் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

January 23, 2023

12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்... தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு

January 23, 2023 0

 தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் புறத்தொடர்பு பணியாளர் ( Out Reach Worker) பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பவுள்ளன.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்
புறத்தொடர்பு பணியாளர் ( Out Reach Worker)1ரூ.10,592

வயது வரம்பு:

விண்ணப்பதார்கள் 40 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது

தகுதிகள்:

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நல்ல தகவல் தொடர்பு திறன் இருக்க வேண்டும். பணி அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் https://thoothukudi.nic.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்படிவத்தைப் பூர்த்தி செய்து அதனுடன் கல்வி, வயது மற்றும் முன் அனுபவம் குறித்த சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பதார்கள் 40 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது

தகுதிகள்:

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நல்ல தகவல் தொடர்பு திறன் இருக்க வேண்டும். பணி அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் https://thoothukudi.nic.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்படிவத்தைப் பூர்த்தி செய்து அதனுடன் கல்வி, வயது மற்றும் முன் அனுபவம் குறித்த சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,

176, முத்துச் சுரபு பில்டிங்,

மணிநகர் 2 வது தெரு, பாளை ரோடு,

தூத்துக்குடி 628 003.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 31.01.2023

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு : தமிழ்நாடு ஊராட்சித் துறையில் 761 சாலை ஆய்வாளர் காலியிடங்கள்

January 23, 2023 0

 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள 761 சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்சாலை ஆய்வாளர்
காலியிடங்கள்760
ஊதியயம்ரூ.19,500 - 71500
வயதுபொதுப் பிரிவினர்,  1.07.2023 அன்று 37 வயதிற்கு மிகாதவராக இருத்தல் வேண்டும்.ஏனைய பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு கிடையாது
கல்வித் தகுதிஐ.டி.ஐ (கட்டுமான வரைதொழில் அலுவலர்) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்;சிவில் படிப்பில் பட்டயம் பெற்ற விண்ணப்பத்தாரக்ளுக்கு முன்னுரிமைMust possess an I.T.I. Certificate in Civil Draughtsmenship from a Government recognized institute:Provided that preference shall be given to the persons possessing a Diploma in Civil Engineering.
தேர்வு முறைஎழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்எழுத்துத் தேர்வுதாள் 1: பாடத்தாள் (தொழிற்பிரிவு தரம்)தாள் 2: பகுதி அ: கட்டாய தமிழ் மொழி தகுதித் தேர்வுபகுதி ஆ : பொது அறிவு
விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்11.02.2023

விண்ணப்பக் கட்டணம்:  இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும். டிஎன்பிஎஸ்சி ஒருமுறை பதிவுக் கட்டணம் ரூ.150 ஆகும். ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், ஆதரவற்ற விதவைகள், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுள்ள  மாற்றுத் திறனாளிகள் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பம் செய்வது எப்படி? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in -யில் விண்ணப்பிக்க வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத, தகுதியில்லாத, காலம் கடந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று டிஎன்பிஎஸ்சிதெரிவித்துள்ளது.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

LIC Recruitment: மாதம் ரூ.50,000 வரை சம்பளம்... 1,516 காலியிடங்களை அறிவித்த எல்ஐசி நிறுவனம்!

January 23, 2023 0

 Recruitment of Apprentice Development Officer 22-23: அப்ரண்டிஸ் வளர்ச்சி அதிகாரி (Apprentice Development Officer) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்ப ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. வணிக சந்தைப் பற்றிய புரிதலும், நல்ல தகவல் தொடர்புத் திறனும் கொண்ட திறமையுள்ள இளம் பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

ந்த ஆட்சேர்ப்பின் மூலம், 1,516 அப்ரண்டிஸ் வளர்ச்சி அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். தேர்வு மற்றும் நியமனங்களில், அரசின் இட ஒதுக்கீட்டு முறை உட்பட்ட அரசின் விதிகளின்படி இருக்கும் என்று எல்ஐசி தெரிவித்துள்ளது.

பயிற்சிக் காலத்தில், அப்ரண்டிஸ் வளர்ச்சி அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரருக்கு ஒரு நிலையான உதவித் தொகையாக (Stipend) மாதத்திற்கு சுமார் ரூ.51,500/- வழங்கப்படும்.

எல்ஐசி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான/-யில் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 10.02.2023 ஆகும்.

Recruitment of Apprentice Development Officer 22-23


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

அடுத்த 20 ஆண்டுகளில் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும் வேலைகள்...!

January 23, 2023 0

 ஒவ்வொரு மாற்றத்திற்கும் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகுக்கிறது. அதீத தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதர்களுக்கு வேலை இல்லாமல் போகலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால், இரண்டு நபர், ஒரு நாள் முழுவதும் செய்யும் வேலையை தொழில்நுட்பத்தின் உதவியால் 3 மணிநேரத்தில் செய்யும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. ஒருபுறம் தொழில்நுட்ப வளர்ச்சி சாதகமான அம்சங்களை கொண்டிருந்தாலும், மற்றொருபுறம் சில சேவைகளுக்கான அழிவையும் குறிக்கிறது. அந்த வகையில், அடுத்த 20 ஆண்டுகளில் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போக உள்ள சில வேலைகளை பற்றி இங்கே காணலாம். இந்தத் துறைகளில் ஏதாவது ஒன்றில் நீங்கள் பணியாற்றினால், பீதி அடையத் தேவையில்லை. தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சியடைவதை போல, நீங்களும் உங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டால் உங்கள் எதிர்கலாம் வளமாக இருக்கும்.

பயண முகவர்கள் (Travel agents) : தொழில்நுட்ப வளர்ச்சி, ட்ராவெல் ஏஜென்ட் வேலையை ஆபத்தில் தள்ளியுள்ளது. முன்பெல்லாம், நாம் எங்கும் சென்றாலும் பயண முகவர்களின் உதவியை நாடுவோம். அவர்கள் நமக்கு தங்கும் இடம், பார்க்க வேண்டிய இடங்களை ஆகியவற்றை பரிந்துரைப்பார்கள். ஆனால், தற்போதைய இளைஞர்களின் கையிலிருக்கும் ஸ்மார்ட் போன் ஒன்றே போதுமானதாக இருக்கிறது.

உங்களிடம் ஒரு கார் அல்லது பைக்கும், மொபைலும் இருந்தால் போதும் உலகையே யாருடைய உதவியும் இல்லாமல் சுற்றி வந்துவிடலாம். ஏனென்றால், கூகிள் அனைவரின் வாழ்க்கையையும் எளிமையாக்கிவிட்டது. எங்கு விடுமுறைக்கு செல்லலாம், எப்படி செல்லலாம், விமான டிக்கெட், ஹோட்டல் புக்கிங் என அனைத்தையும் உட்காந்த இடத்தில் இருந்து ஆன்லைன் வழியாக செய்துவிடலாம். இதனால், பயண முகவர்களின் தேவை முழுமையாக குறையும்.

காசாளர்கள் (Cashiers) : கிட்டத்தட்ட சுமார் 3.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காசாளராக பணிபுரிவதால், இந்த வேலை ஒட்டுமொத்தமாக மறைந்துவிடும் என கூறமுடியாது. ஆனால், இந்த பதவிகளுக்கான தேவை குறையலாம். அதாவது, யு.எஸ். பியூரோ ஆஃப் லேபர் ஸ்டாடிஸ்டிக்ஸ் தகவலின்படி, 2031-க்குள் இந்த வேலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 10% குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்கான முக்கிய காரணம் ஆட்டோமேஷன். கொரோன தொற்று துவங்கியதில் இருந்து மக்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதையையே அதிகம் விரும்புகிறார்கள். எனவே, இவர்களுக்கான தேவை குறைவதற்கான வாய்ப்பு அதிகம்.

வங்கி கேஷியர் (Bank Cashier) : BLS தகவலின்படி, 2031 ஆம் ஆண்டில் வங்கி கேஷியர்களுக்கான தேவை குறையும் என்று கணித்துள்ளது. ஏனென்றால், ஆன்லைன் ஷாப்பிங்கை போலவே, ஆன்லைன் பேங்கிங் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தங்களின் சொந்த வாழ்க்கையை பார்க்க கூட நேரம் இல்லாமல் ஓடும் மக்களுக்கு வங்கி செல்வதற்கு எப்படி நேரம் இருக்கும். அதுவும், தற்போது எல்லாம் டிஜிட்டல் மயமாகிவிட்டதால் இவர்கள் வங்கி செல்வதற்கான தேவையும் குறைகிறது. அப்படியே பணம் தேவைப்பட்டாலும், அருகில் இருக்கும் ATM-க்கு செல்லலாம்.

ஓட்டுனர் (driver job) : ஓட்டுனர்களுக்கான தேவை இந்த நிமிடம் வரை இருந்து கொண்டுதான் உள்ளது. எனவே, இது முற்றிலும் மறைவதற்கான வாய்ப்பு குறைவு. இருப்பினும், இந்த வேலையில் இருப்பவர்கள் கடினமான இன்னல்களை சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இதற்கிடையில், தானியங்கி வாகனங்களின் வருகையும் அதிகரிக்கும். எனவே, வரும் காலங்களில் ஓட்டுனர்களின் தேவை குறையலாம்.

செய்தித்தாள் (Print media Jobs) : பல காலமாக செய்தித்தாள்கள் இருந்து வந்தாலும், அதற்கான தேவை என்னவோ குறைவாகத்தான் இருக்கிறது. ஏனென்றால், வீட்டில் இருப்பவர்கள் அன்றைய செய்திகளை அன்றே தொலைக்காட்சி வழியாக தெரிந்து கொள்கிறார்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு தங்களின் சொந்த வேலைகளை கவனிக்கவே நேரம் இல்லாதபோது, எப்படி செய்தித்தாள் வாசிக்க நேரம் கிடைக்கும்.

டிஜிட்டல் மீடியாவின் எழுச்சி செய்தித்தாள்களுக்கான முக்கியத்துவத்தை குறைத்துள்ளது. செய்தித்தாள்களுக்கு நிருபர்கள் மற்றும் ஆசிரியர்களின் தேவை இருந்தாலும் அதன் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும்.

டெலிமார்கெட்டிங் (Telemarketing) : டெலிமார்கெட்டிங் என்பது வணிகம் சார்ந்த தொழில். இந்த பதவிக்கான தேவை எதிர்காலத்தில் இல்லாமல் போகலாம். ஏனென்றால், இதற்கான பெரிய காரணம் டிஜிட்டல் எழுச்சி மற்றும் விளம்பரம். டிஜிட்டல் விளம்பரங்கள் உலகில் எல்லா மூளை முடுக்கிலும் உள்ள மக்களை சென்றடைகின்றன. மக்கள் அவர்களின் தொலைபேசியில் என்ன தேடுகிறார்களோ, அது குறித்த விளம்பரங்கள் பார்க்கும் அனைத்து பக்கங்களிலும் காண்பிக்கப்படும். எனவே, டெலிமார்க்கெட்டிங் வேலைக்கான தேவை குறையும்.

கிடங்கு தொழிலாளர்கள் (Warehouse workers) : தற்போது பிரபல நிறுவனங்கள் அனைத்தும் பெருவாரியாக கிடங்குகளில் ரோபோக்களை பயன்படுத்துகின்றன. ரோபோக்கள் பொறுப்பேற்றவுடன் கிடங்கு வேலைகள் முதலில் செல்லும். மேலாண்மை ஆலோசனை நிறுவனமான பெயின் & கோ தகவலின் படி, கிடங்குகளில் குறைந்தபட்சம் 70% வேலைவாய்ப்புகள் ஆட்டோமேஷன் மூலம் இழக்கப்படலாம் என கூறியுள்ளது. எனவே, எதிர்காலத்தில் கிடங்கு தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு முற்றிலும் மறைந்து விடலாம்.

கணக்காளர்கள் (Accountants) : அக்கவுண்டன் பணிகளை செய்ய பல மென்பொருள்கள் உள்ளது. ஒரு மனிதன் இதை செய்தால் அவர்களுக்கு மாதம் மாதம் சம்பளம் வழங்க வேண்டும். ஆனால், இந்த வேலைகளை செய்ய மென்பொருட்களை பயன்படுத்தும்போது நேரமும் செலவும் குறைகிறது. குறிப்பாக, இந்த வேலைகளை எக்செல் இன்னும் எளிமையாக்குகிறது. எதிர்க்காலத்தில், கணக்காளர்களுக்கான தேவை குறையலாம்.

டைபிஸ்ட் (Typing Jobs) : டேட்டா என்ட்ரி மற்றும் டைப்பிஸ்ட் வேலைகள் இன்னும் உள்ளன. ஆனால், அதன் தேவை நீண்ட காலத்திற்கு இருக்காது. குரல் அங்கீகாரம் மற்றும் டிக்டேஷன் மென்பொருள் இருப்பதால், டைபிஸ்ட் பதவிக்கான முக்கியத்துவம் குறையலாம். எனவே, இந்த பதவியில் நீங்கள் இருந்தால், உங்களை நீங்கள் மேம்படுத்துக்கொள்வது நல்லது.

இயந்திர தொழிலாளர்கள் (Machine workers)

உலோகம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வெட்டி அதை தேவையான பொருட்களாக உருவாக்கும் தொழிலாளர்களுக்கான தேவை குறையலாம். இந்த தொழிலாளர்களின் பணிகளுக்கு ரோபோக்கள் மாற்றப்படலாம். இயந்திரத் தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பு 2031-க்குள் கிட்டத்தட்ட 46,000 ஆகக் குறையும் என்று BLS கணித்துள்ளது.

தபால் ஊழியர்கள் (Postal workers) : உண்மையை கூறவேண்டும் என்றால், தபால் வருவதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால், ஆட்டோமேஷன் தபால் துறையில் சில பாதிப்பை ஏற்படுத்தும். எதிர்காலத்தில், தபால் துறையில் குறைந்த பணியாளர்கள் தேவைப்படுவார்கள். அதாவது, தபால் சேவையில் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பும் 6% குறைவதற்கான வாய்ப்பு அதிகம். ஏனென்றால், நாம் அனைவரும் சமூக வலைத்தளத்தை அதிகமாக பயன்படுத்த துவங்கிவிட்டோம்; மெயில், முகநூல் என அனைவரும் புதிய தொழில்நுட்பத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறோம்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

January 22, 2023

கடலோர காவல்படையில் மாலுமியாக வேண்டுமா? - 255 பணியிடங்கள்... 10ம் வகுப்புத் தேர்ச்சி போதும்!

January 22, 2023 0

இந்திய கடலோரக் காவல் படையில்  255 மாலுமிகள் (Posts of Navik (General Duty) and Navik (Domestic Branch)  ஆள் சேர்க்கை செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியக் குடியுரிமை உள்ள  திருமணமாகாத ஆண்கள்  இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள்:

Navik (General Duty) : 225

Navik (Domestic Branch) : 30

வயது வரம்பு: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு 18-22 க்குள் இருக்க வேண்டும்.  இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.

கல்வித் தகுதி:  Navik ( General Duty ) பதவிக்கு இந்த பதவிக்கு மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து 12ம் வகுப்பு அல்லது சமமான தேர்வில் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். கணிதம், இயற்பியல் பாடங்களில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்

Navik ( Domestic Branch) பதவிக்கு 10ம் வகுப்பு அல்லது சமமான தேர்வில் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

தேர்வு முறை: தகுதி வாய்ந்தவர்கள் எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு, மருத்துவத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். இதில், தேர்ந்தெடுக்கபபட்டவர்கள், இந்திய கடற்படை மாலுமிகளின் பயிற்சி மையமான ஐஎன்எஸ் சில்கா-வில் பயிற்சிக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.300 ஆகும். பட்டியலின , பழங்குடியின விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி?  https://joinindiancoastguard.cdac.in என்ற இணையதள முகவரி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் விண்ணப்பபங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி தேதி 16.02.2023 மாலை 5.30 மணி வரை ஆகும். 


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்தால் போதும்: இந்து அறநிலையத்துறையில் சூப்பர் வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்

January 22, 2023 0

 அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் திருக்கோயில் விளங்குகிறது. இத்திருக்கோயில் நிர்வாகம்,      நாதஸ்வரம், தவில், தாளம், சுருதி, உதவி அர்ச்சகர், இலை விபூதிபோத்தி உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை திருச்செந்தூர் வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வரும் ஜனவரி 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த காலிப்பணியிடங்கள்: 6    

நாதஸ்வரம் (ஒரு காலியிடம்)தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இசைப்பள்ளியில் இது தொடர்புடையத் துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்சம்பளம்: ரூ.  19500 – 62000
தாளம் (ஒரு காலியிடம்)தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இசைப்பள்ளியில் இது தொடர்புடையத் துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்சம்பளம்:  ரூ.18500 – 58600
தவில் (ஒரு காலியிடம்)தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இசைப்பள்ளியில் இது தொடர்புடையத் துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்சம்பளம்:  ரூ.18500 – 58600
 தவில் (ஒரு காலியிடம்)தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இசைப்பள்ளியில் இது தொடர்புடையத் துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்சம்பளம்: ரூ.18500 – 58600
சுருதி (ஒரு காலியிடம்)தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இசைப்பள்ளியில் இது தொடர்புடையத் துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்சம்பளம்:  ரூ.18500 – 58600
உதவி அர்ச்சகர் (கீழ்சாந்தி போந்தி)ஒரு காலியிடம்தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என்றும், அகமப்பள்ளி மற்றும் வேதப் பாட சாலையில் தொடர்புடைய துறையில் ஓராண்டு படிப்பினை மேற்கொணடதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்சம்பளம்: ரூ. 15900 – 50400 வரை 
இலை விபூதிபோத்தி (ஒரு காலியிடம்)தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.ரூ.15900 – 50400

 பொது நிபந்தனைகள்:

ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

தொற்று நோய் உடல் அல்லது மனநிலை குன்றிய குறைபாடுகள் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என்றும் நீதிமன்றத்தில் தண்டணை அடைந்தார்கள், பட்ட கடனை தீர்க்க முடியாதவர்கள் என நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டவர்கள், அரசுப்பணிகள் பொது ஸ்தாபணங்கள் மற்றும் வேறு இடங்களில் பணிறிந்து தண்டணை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆகியோர்கள் மேற்படி பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப் படிவத்தை, அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 27ம் தேதி மாலை 5.45 மணிக்குள் மட்டுமே விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: இணை ஆணையர்/செயல் அலுவார். அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர்- 62016, தூத்துக்குடி மாவட்டம். தொலைபேசி எண்: 04836-242221

விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்துச் சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்று அலுவர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும் அசல் சான்றிதழ்கள் அனுப்பகூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் வேலை : 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

January 22, 2023 0

 நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரசுத் தரப்பில் காலியாக உள்ள ஜீப்பு ஓட்டுநர் பணிக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுளளது.  இது, பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில், குறைவு காலிப்பணியிடமாக (Shortfall Vacancy) சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் (Special Recruitment Drive) மூலம் நிரப்பட  உள்ளது.

பதவியின் பெயர்ஜீப்பு ஓட்டுநர்
மொத்தப் பணியிடங்கள்1
இடஒதுக்கீடு விவரங்கள்பழங்குடியினர் மட்டும்
வயது18 - 42 வயதிற்குள் இருக்க வேண்டும்
கல்வித் தகுதி8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
சிறப்புத் தகுதிதகுதியான அலுவலரால் வழங்கப்பட்ட செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.வாகனம் ஓட்டுவதில் 5 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும் .
சம்பளம்ரூ. 19500 - 62,000 வரை
விண்ணப்பப் படிவம்மாதிரி விண்ணப்பப் படிவத்தினை https://namakkal.nic.in/ என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்30.01.2023 பிற்பகல் 5.45 மணி வரை

நிபந்தனைகள்: 

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை https://namakkal.nic.in/ என்ற  இணையதளத்தில் உள்ள மாதிரி விண்ணப்பப்படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.

1988ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டப்படி செய்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

 வாகளம் ஓட்டுவதில் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் முன் அனுபபம் பெற்றிருக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 21.01.2023 முதல் 31.01.2023 அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.45 மணிக்குள்  அனுப்பி வைக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), அறை எண். 06, முன்றாவதுதளம், மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சிப் பிரிவு) மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், நாமக்கல் 637 003 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்ப படிவத்தில் உள்ள விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் பரிசீலக்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news