Agri Info

Adding Green to your Life

February 26, 2023

Agricultural Extension Quiz for TNPSC AO exam - 01

February 26, 2023 0


February 25, 2023

மரியாதை இல்லாமல் நடந்து கொள்ளும் குழந்தையை எப்படி கையாள்வது..? பெற்றோர் செய்யும் தவறு இதுதான்..!

February 25, 2023 0

இன்றைக்கு உள்ள குழந்தைகள் பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்துக்கொள்கிறார்களா என்றால், நிச்சயம் கிடையாது. மார்டன் கலாச்சாரம் என்கிற பெயரில் , பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு மரியாதை என்ற விஷயத்தைக் கற்றுக்கொடுக்க மறந்துவிடுகிறார்கள். ஒவ்வொரு பெற்றோர்களும் நாம் எப்படி வளர்ந்தோம் என்பதை நினைவில் வைத்திருந்தாலே அதுப்போன்ற ஒவ்வொருவரும் குழந்தைகளை வளர்த்திருக்க முடியும். ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் இதை மட்டும் செய்ய மறந்துவிடாதீர்கள். இனியும் பெற்றோர்களாகிய நீங்கள் இதுப்போன்று இருந்துவிடாதீர்கள். உங்களை குழந்தைகளுக்கு சமூகத்தில் மதிப்பு மற்றும் மரியாதை கிடைக்க வேண்டும் என்றால், இந்த விஷயங்களை மறக்காமல் நீங்கள் பாலோ பண்ணினாலே போதும்..இதோ என்னென்ன அறிந்துக்கொள்ளுங்கள்.“

மரியாதைக்குரியதாக குழந்தையை வளர்த்தல்: பெற்றோர்களாகிய உங்களை மட்டுமில்லை, மற்றவர்களையும் மதிப்புடன் உங்களது குழந்தைகள் நடத்த வேண்டும் என்றால், அவர்களுக்கு மரியாதை என்பதைக் கற்றுக்கொடுங்கள். ஏதாவது ஒரு விஷயம் அவர்களுக்கு செய்தால், நன்றி என்ற வார்த்தையை சொல்ல வேண்டும் என்று கற்றுக்கொடுக்கவும். மேலும் மரியாதை என்பது அவர்களின் செயல்களில் மட்டுமில்லை, மற்றவர்களைப் பார்க்கும் விதத்திலும் உள்ளது என்பதை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவும். யாராக இருந்தாலும் வீட்டிற்கு வந்தவர்களைப் பார்த்து சிரிக்கவும் மற்றும் வாருங்கள் என்று சொல்லக் கற்றுக்கொடுக்கவும்.


குழந்தைகளுக்கு உறவின் தன்மையை வெளிப்படுத்துதல்: ஒவ்வொரு பெற்றோர்களும் குழந்தைகளிடம் நண்பர்களாக இருக்க வேண்டும் என்ற ஆசை அதிகளவில் இருக்கும். அதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் சிறு வயதில் அவர்கள் ஏதாவது தவறுகள் செய்தால் அந்நேரத்திலும் அவர்களுக்கு நண்பர்களாக இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறான ஒன்று. தவறுகளைத் தட்டிக் கேட்கவும், எது சிறந்தது? என அறிந்துக்கொள்வதற்கு ஏற்ற வகையில் குழந்தைகளுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். தவறு செய்தால் தண்டிக்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளவும். இதுப்போன்று நீங்கள் உங்களது குழந்தைகளை வளர்க்கும் போது, மரியாதை ஏற்படும். மேலும் வளர வளர உங்களது நட்பு வலுப்படும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளவும்.

மரியாதையுடன் குழந்தைகளைத் திருத்துதல் : உங்களது குழந்தை அவமரியாதையாக இருப்பதை நீங்கள் கண்டால், அவர்களிடம் உங்களது குரலை உயர்த்தி திட்டாதீர்கள். அவர்களை சரிசெய்ய வேண்டும் என்று நினைத்தால், அவர்களிடம் மரியாதையுடன் நடந்துக்கொள்ளுங்கள். பெற்றோர்களைப் பார்த்து தான் குழந்தைகள் வளர்கிறார்கள் என்பதால், நிச்சயம் கெட்ட விஷயங்களை மாற்ற வழியாக இது அமையும். இதை விட்டு விட்டு தேவையில்லாமல் திருத்துகிறோம் என ஆத்திரத்தில் கத்திக் கூச்சலிடுவதால் எந்த பலனும் இல்லை. இது மேலும் உங்களது குழந்தைகளை மோசமாக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

வாழ்க்கையில் எது சரி மற்றும் எது தவறு என்பதைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள். இதற்கான நேரத்தை அவர்களுக்காக நீங்கள் ஒதுக்க வேண்டும். உங்களது குழந்தைகளுக்கு யாராவது உதவி செய்திருந்தால் நன்றி எனச் சொல்வதற்குக் கற்றுக்கொடுத்தல் மற்றும் ஏதாவது தவறு செய்தால் எந்த ஈகோவும் இல்லாமல் மன்னித்துவிடுங்கள் என்று சொல்வதற்குக் கற்றுக்கொடுங்கள். இச்செயல் அவர்களை மற்றவர்களிடமிருந்து பிரிந்துக்காட்டுவதோடு மரியாதையுடன் நடத்தும்.

மேலும் வருத்தம் தெரிவிப்பது என்பது மரியாதை காட்டுவதற்கான ஒரு வழி என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். இதோடு மற்ற நபர்களிடம் பணிவையும், கருணையும் எவ்வாறு செலுத்த வேண்டும் என்று கற்றுக்கொடுங்கள்.

Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip


 Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip

செவ்வாழை சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா..? சாப்பிட சரியான நேரம் எது..?

February 25, 2023 0

மூளையின் செயல்பாடு, இதயத்தின் செயல்பாடு, ரத்த ஓட்டம், ரத்த உற்பத்தி, சிறுநீரகத்தின் இயக்கம், கல்லீரலின் இயக்கம், குடலின் இயக்கம் ஆகியவற்றுக்குத் தேவையான சத்துகள் நிறைந்தது செவ்வாழை. தவிர, ஒவ்வொரு தாவரத்துக்கும் தனித்துவமான தாவர வேதிப்பொருள்கள் இருக்கும். அந்த அடிப்படையில் உடம்பை வலுவாக்கும் காயகல்பமாக மருத்துவத்தில் செவ்வாழைப் பழமும் பயன்படுத்தப்படுகிறது என்று கூறினால் மிகையாகாது. 

செவ்வாழை சாப்பிடுவதற்கான சரியான நேரம் என்ன?

செவ்வாழைப்பழம் சாப்பிடுவதற்கான சரியான நேரம் காலை 6 மணி. இந்த நேரத்தில் முடியவில்லையென்றால் பகல் 11 மணி பிரேக் நேரத்திலோ, மாலை 4 மணி பிரேக் நேரத்திலோ சாப்பிடலாம். உணவு எடுத்தவுடன் செவ்வாழையைச் சாப்பிட்டால் மந்தமாக உணர்வதுடன், இதனுடைய முழு சத்துகளும் நமக்குக் கிடைக்காது. இது எல்லா பழங்களுக்கும் பொருந்தும்.

செவ்வாழையின் பயன்கள் :

 நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவர வேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.
மாலைக்கண்நோய் கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப் பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.
முந்தைய தினம் சாப்பிட்ட சில உணவுகளால் மறுநாள் காலையில் மலம் வெளியேற முடியாமல் இருக்கும். காலையில் ஒரு செவ்வாழைப்பழத்தை சாப்பிட அது குடலைத் தூண்டி கழிவை வெளியேற்ற வைக்கும்.

அரசு தொழில் பயிற்சி நிறுவனங்களில் சேரும் பெண்களுக்கு ரூ.2500 உதவித்தொகை – மத்திய அரசு அறிவிப்பு!

February 25, 2023 0

 

அரசு தொழில் பயிற்சி நிறுவனங்களில் சேரும் பெண்களுக்கு ரூ.2500 உதவித்தொகை – மத்திய அரசு அறிவிப்பு!

மத்திய அரசு சார்பில் அரசு தொழில் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்துள்ள பெண்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை இருந்தால் அவர்களுக்கு ரூ.2500 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவித்தொகை அறிவிப்பு

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் சார்பில் இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகளை வழங்கவும் அவர்களை தொழில் முனைவோராக மாற்றவும், அவர்களை வேலை வாய்ப்புகளுக்கு அதிக அளவில் தகுதி உடையோராக மாற்ற மத்திய அரசு பல தொழில் பயிற்சி நிறுவனங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அந்த நிறுவனங்களில் பெண்கள் பலர் பயிற்சி பெற்று வருகின்றனர். அவரை ஊக்குவிக்கும் நோக்கில் அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதன் படி மத்திய அரசின் தொழில் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து பயிற்சி பெற்று வரும் பெண்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை இருந்தால் அவர்களுக்கு உதவித்தொகையாக ரூ. 2500 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகை ஏழை எளிய பெண்களின் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும், இந்த பயிற்சி மூலம் பெண்கள் சுயமாக தொழில் தொடங்க இது வழிவகை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் தொழில் தொடங்க வங்கிகளில் கடன் பெறும் வழிமுறைகள்

February 25, 2023 0

 தொழில் தொடங்கி இந்த சமுதாயத்தில் பெரிய ஆளாக வளர வேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் உண்டு. ஆனால் அந்த தொழில் தொடங்குவதற்கு முதலில் தன்னம்பிக்கை அவசியம் தேவை. நாம் செய்ய போகும் தொழிலை சிறப்பாக நடத்துவதற்கு பணம் தேவை. அந்த பணத்தை வைத்து தான் தொழில் தொடங்க முடியும். அந்த பணத்தை எப்படி புரட்டுவது? என்று யோசித்து, யோசித்தே சிலர் தாங்கள் தொழில் தொடங்க நினைக்கும் எண்ணத்தை விட்டு விடுவார்கள். உங்கள் எண்ணங்களை வளமாக்க தான் அரசும், பல்வேறு வங்கிகளும் தொழில் கடன் உதவிகளை வழங்கி வருகிறது. அந்த கடன் உதவிகளை பெறுவதற்கு நாம் தயாராக வேண்டும்.


உறுதியான நம்பிக்கை 

தொழில் தொடங்குவதற்காக வங்கி மேலாளரை அணுகி நாம் செய்ய போகும் தொழிலை எடுத்து கூறி கடன் கேட்கிறோம். கடன் கொடுக்கும் வங்கி மேலாளர், முதலில் நம்மை சோதிப்பது நம்பிக்கை தான். தொழிலில் வெற்றி கிடைக்காவிட்டால் கடனை எப்படி கட்டுவீர்கள் என்று. ஆனால் நம் நிச்சயம் இந்த தொழிலில் சாதித்து காட்டுவேன் என்று உறுதி கூற வேண்டும். நீங்கள் அப்படி கூறினாலும், உங்களை மாதிரி எனக்கு தெரிந்த நபர் ஒருவர் தொழில் செய்தார். அதில் பலத்த நஷ்டம் ஏற்பட்டது. அதற்கு பிறகு அவர் வேறு ஒரு தொழில் செய்து நஷ்டத்தை ஈடுகட்டினார். அது போல் உங்களுக்கு வேறு தொழில் செய்கிற திட்டம் இருக்கிறதா? என்று கேட்பார்கள்.
இதற்கும் நீங்கள், தாங்கள் மேற்கொள்ள இருக்கும் தொழிலின் செயல்பாடுகளை விளக்கி கூறுங்கள். அதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் கடன் தொகையை மாதந்தோறும் தவணை மாறாமல் கட்டி விடுவேன் என்று உறுதி கூறுங்கள். 
உங்கள் உறுதி தான் கடன் தரும் வங்கி மேலாளருக்கு அசாத்தியமான நம்பிக்கையை ஏற்படுத்தும். அவர் சொல்கிறபடி நான் மேற்கொள்ளும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டால் வேறு தொழில் செய்து கடன் தொகையை அடைத்து விடுவேன் என்று கூறுவது நம் மீது உள்ள நம்பிக்கையை சீர்குலைத்து விடும். எனவே நீங்கள் மேற்கொள்ள இருக்கும் தொழில் மீது அசாத்தியமான நம்பிக்கையை முதலில் வையுங்கள். அது வங்கி மேலாளரை ஈர்த்து விடும்.

திட்ட மதிப்பீடு 
நீங்கள் செய்யப் போகிற தொழில் இதுதான் என்று முடிவு செய்துவிட்டால் அதற்கான திட்டத்தை தயார் செய்ய வேண்டும். முதலில் உங்களைப் பற்றிய தகவல்கள், நீங்கள் யார், என்ன செய்து கொண்டிருந்தீர்கள், இனி என்ன செய்யப் போகிறீர்கள் என்ற விவரங்கள் இருக்க வேண்டும். தொடங்கப் போகிற தொழிலைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும், எப்படித் தெரியும், அந்தத் தொழிலில் என்ன புதுமைகள் செய்யப் போகிறீர்கள்; உங்களுக்கான மூலப்பொருட்கள் எங்கு கிடைக்கும்; உங்களின் வாடிக்கையாளர்கள் யார் என்பது பற்றி தெளிவாகக் கூற வேண்டும். இந்தத் தொழில் மூலம் மாதத்துக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்கிற தோராயமான கணக்கு வேண்டும்.

இதற்கு டி.எஸ்.சி.ஆர். என்கிற விகிதத்தை நிச்சயம் பார்ப்பார்கள். அதாவது, ஒரு மாதத்துக்கு நீங்கள் 15 ஆயிரம் சம்பாதிக்கிறீர்கள் எனில், அசலுக்கும் வட்டிக்குமாகச் சேர்த்து ரூபாய் 10 ஆயிரம் போக, குறைந்தது ரூபாய் 5 ஆயிரம் உங்களிடம் இருந்தால்தான் தொடர்ந்து தொழில் நடத்த முடியும். அதாவது, இந்த விகிதம் 1.5க்கு மேல் இருந்தால் மட்டுமே உங்களுக்கு எளிதாகக் கடன் கிடைக்கும். நீங்கள் செய்யும் தொழிலில் இந்த வருமானம் உங்களுக்கு இருக்கிறதா என்பதை நீங்களே உறுதி செய்து கொண்டு, வங்கியை அணுகினால் உற்சாகத்துடன் பேசலாம். அடமானமில்லாத கடன் 
அதாவது ரூபாய் 10 லட்சம் வரைக்குமான தொழில் கடனுக்கு எந்த விதமான அடமானமும் கேட்கக்கூடாது என்பது ஆர்.பி.ஐ. விதி. இந்த விதி காரணமாக, 10 லட்சம் வரை எந்தவித அடமானமில்லாமல் கடன் கிடைக்கும். ஒரு வேளை வங்கிகள் அடமானம் கேட்டால் அது விதியை மீறிய செயலாகவே கருத வேண்டும். தவிர, சிறு மற்றும் குறு தொழில்களை ஊக்குவிக்க மத்திய அரசும் சிட்பியும் சேர்ந்து ஒரு கோடி ரூபாய் வரைக்கும் எந்த விதமான அடமானமும் இல்லாமல் கிரெடிட் கேரண்டி திட்டத்தில் கடன் தருகிறார்கள். ஆனால், இந்தத் திட்டத்தில் கடன் பெற பதிவு செய்ய வேண்டும். இது பற்றி வங்கிகளிடம் கேட்டால் அவர்கள் இது சம்பந்தமான மற்ற முழு விவரங்களைத் தருவார்கள். 

அடமான கடன் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உங்களுக்கு பணம் தேவை எனில், அடமானம் இல்லாமல் கடன் கிடைக்காது. அந்த சமயத்தில் உங்களிடம் இருக்கும் சொத்துக்களை அடமானம் வைத்துத்தான் கடன் பெற முடியும். ஒருவேளை இரண்டு கோடி ரூபாய் தேவைப்பட்டால் ஒரு கோடி ரூபாய் வரை கிரெடிட் கேரண்டி திட்டத்தின் மூலம் அடமானம் இல்லாமலும், மீதமுள்ள ஒரு கோடிக்கு சொத்துக்களை அடமானம் வைத்தும் கடன் பெறலாம். 

முதலீடு தொகை எவ்வளவு? 
தொழில் திட்டத்திலே நமக்கு எவ்வளவு தொகை தேவைப்படும் என்று தெரிந்துவிடும். அந்த தொகையில் குறைந்தபட்சம் 1:4.5 என்ற விகிதத்தில் நம்மிடம் சொந்த பணம் இருக்க வேண்டும். அதாவது, ஒரு லட்சம் ரூபாயை நீங்கள் மூலதனமாக கொண்டு வந்தால் வங்கிகள் ரூ.4.5 லட்சம் வரைக்கும் கடன் கொடுக்கும். இந்த விதிதான் நிரந்தரம் என்று சொல்ல முடியாது. மிகச் சில சமயங்களில் மட்டும் இந்த விகிதத்துக்கு கீழே சென்றால் வங்கிகள் கடன் கொடுக்கும். அது நீங்கள் செய்யும் தொழில், உங்கள் தொழில் நடக்கும் இடம் போன்ற பல காரணிகளை வைத்து வங்கி அதிகாரிகள் முடிவு செய்வார்கள். இருந்தாலும் முதல்முறை தொழில் தொடங்குவோர் இந்த விகிதத்துக்கும் குறைவாக மூலதனம் வைத்திருந்தால் கடன் கிடைப்பதில் சிரமம் ஏற்படலாம். எனவே உங்கள் தொழிலில் முதலீடு கணிசமாக இருக்க வேண்டும் என வங்கிகள் எதிர்பார்ப்பதுதான் இதற்குக் காரணம். 

வங்கிகளை எப்படி அணுகுவது? 
ஒவ்வொரு வங்கியும் ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகையை கடனாகக் கொடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து செயல்படுகின்றன. அந்த இலக்குக்காக போட்டி போட்டுக் கொண்டு வங்கிகள் கடன் தருகின்றன. ஆனாலும் தொழில் முனைவோருக்கு கடன் கிடைக்கவில்லை எனில் அதற்குக் காரணம், சரியான திட்டமிடல் இல்லாததுதான்.

 உங்கள் தேவை ரூபாய் 25 லட்சம் எனில் அருகிலிருக்கும் வங்கிகளையே அணுகலாம். அவர்களே கடன் தருவார்கள். 25 லட்சத்துக்கு மேல் போகும் போது, ஒவ்வொரு வங்கியும் தொழில்கடன்களை ஊக்குவிக்கவே தனியாக சிறுதொழில் கிளையை (எஸ்.எம்.இ. கிளை) வைத்திருக்கிறார்கள். அங்கிருக்கும் அதிகாரிகளை அணுகினால் அவர்கள் உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள். 

தேவையான ஆவணங்கள் அடையாளச் சான்றிதழ், முகவரிச் சான்றிதழ், தொழில் நடைபெறும் இடத்துக்கான முகவரிச்சான்றிதழ், திட்ட அறிக்கை, வருமான எதிர்ப்பார்ப்பு (கடனை திருப்பிச் செலுத்தும் காலம் வரைக்கும்), உள்ளாட்சி மற்றும் இதர அரசு அலுவலகங்களில் இருந்து தடையில்லாச் சான்றிதழ் (தேவைப்பட்டால்), தொழில் நடைபெறும் இடம் உங்களுடையது என்றால் அதற்கான சான்றிதழ் (அ) வாடகை இடம் என்றால் ஒப்பந்தச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் கொடுக்க வேண்டும். இவை தவிர, வேறு என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது கடன் விண்ணப்பத்திலேயே இருக்கும். அவற்றையும் கொடுத்தால் நிச்சயம் உங்கள் கடன் மனுவை வங்கி அதிகாரிகள் ஒதுக்கித் தள்ள மாட்டார்கள்!


Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip

பெண்கள் வேலைக்காக காத்திருக்காமல் சொந்தமாக தொழில் தொடங்கலாம்...

February 25, 2023 0

"என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் அயல்நாட்டில்" என்ற பாடல் வரிகளில் புதைந்துள்ள கருத்துகள் வளர்ந்து வரும் இளைஞர்களுக்காக கூறப்பட்டது. நமது நாடு தன்னிறைவு பெறும் காலம் வரை இந்த வரிகள் உயிருடன் இருக்கும். படித்த பெண்கள் அரசு வேலைகளுக்காக காத்திருக்காமல் சுலபமாக தொழில் தொடங்கலாம். அதற்காக தொழில் பயிற்சி நிலையங்களில் சேர்ந்து நமக்கு என்ன தொழில் தொடங்க விருப்பமோ அந்த தொழிலில் பயிற்சிப்பெற்று தொடங்கலாம். இதற்காக தொழில் ஆலோசனை கூறும் அரசு நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களில் ஆலோசனை பெறலாம். அவர்கள், எளிதான முறையில் தொழில் யோசனைகளையும் வழங்குகிறார்கள்.

விவசாயத் தொழில்கள் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு, தோல் பொருட்கள் தயாரிப்பு, எலக்ட்ரானிக் போன்ற மின்னணு கருவிகள் தயாரிப்பு, பீங்கான் பொருட்கள் தயாரித்தல், பெயிண்டிங், வர்ணம் தீட்டுதல், மாடலிங் செய்தல், ரேடியோ, ரெப்ரிஜிரேட்டர், குளிர்சாதனப்பெட்டி, வாஷிங் மெஷின் போன்றவற்றை பழுது பார்த்தல் போன்ற பல தொழில்களை தொடங்கலாம். மேலும் கம்ப்யூட்டர் வேலைகளுக்கு அது பற்றிய தொழில்நுட்பங்களை அறிந்து இதில் ஈடுபடலாம். இதன் மூலம் நமக்கு தினசரி வருமானம் கிடைப்பதுடன் தொழிலை விரிவுபடுத்தி பலருக்கு வேலை வாய்ப்பையும் வழங்கலாம்.

தொழிலை விரிவுபடுத்த அரசு மானியத்துடன் கடன் உதவிகளும் வழங்குகிறது. அதன்படி மானியத்துடன் கடன் உதவிகள் பெற்று தொழில் வல்லுனர்களை அழைத்து வந்து எளிதில் வேலைகளை முடிப்பதற்கான நுட்பங்களை அறிந்து கொள்ளலாம். பணிகளை விரைவில் முடிப்பதால் பல தொழில் ஆர்டர்களை பெறும் போது நமக்கு கூடுதலாக வருமானமும் கிட்டும். மேலும் தொழில் தொடங்குவதற்கு வங்கிகள் கடன் உதவி அளிக்கிறது. தொழில் முதலீட்டுக்கழகமும் கடன் உதவி வழங்குகிறது. சிறு தொழில் நிறுவனமும் கடன் தர தயாராக உள்ளன. இந்த நிறுவனங்களில் கடன் பெற்று தொடங்கிய தொழிலை அபிவிருத்தி செய்யவோ, புதிய தொழில் தொடங்கவோ கடன் பெறலாம். எந்தவொரு தொழிலையும் தள்ளி விடாது. அது பற்றி ஆராய்ந்து அறிந்து வாழ்க்கையில் முன்னேறலாம்.

 Click here to join whatsapp group for daily health tip

மாரடைப்பை தடுக்க மன அழுத்தத்தை குறைப்போம்

February 25, 2023 0

 மாரடைப்பு ஏற்படுவ தற்கான காரணங்களான வாழ்க்கைச் சூழல், பணிச்சுமை, தூக்கமின்மை, கட்டுப்பாடற்ற உணவு முறை, உடல்நல பிரச்சனைகள் மற்றும் இவை அனைத்தாலும் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தைக் குறைப் பதோடு உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றை முறையாக பின்பற்றினால் மாரடைப்பு வராமல் தடுக்க முடியும் என்கிறார் நெல்லை ஷிபா மருத்துவமனை இதயநோய் சிகிச்சை மருத்துவர் கிரிஷ் தீபக். மன அழுத்தத்தைக் குறைக்க வேலை நேரங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் விளையாட்டுக்கள், இசை கேட்பது, படிப்பது போன்ற ஏதாவதொரு மனதுக்கு பிடித்தமான செயலில் ஈடுபடலாம்.


பொதுவாக மாரடைப்பு ஏற்படும்போது திடீர் நெஞ்சுவலி (வழக்கமாக நெஞ்சிலிருந்து இடது கை அல்லது கழுத்தின் இடப்பாகத்திற்கு பரவும்), மூச்சுதிணறல், வாந்தி, மயக்கம், வியர்த்தல் போன்ற அறிகுறிகள் காணப்படும். சிலருக்கு நெஞ்சு வலி இல்லாமல், நெஞ்சு எரிச்சலோ அல்லது இடது கை குடைச்சலோ இருக்கும். இது மட்டுமல்லாமல் முதுகு எரிச்சல், வலது பக்க நெஞ்சுவலி, தாடைவலி போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம். வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு வலி இல்லாமல் கூட மாரடைப்பு ஏற்படலாம். மாரடைப்பை கண்டறிய இதய சுருள் படம் (ECG) எடுக்க வேண்டும். மேலும் ரத்தப் பரிசோதனை மூலமும் மாரடைப்பை கண்டறிய லாம். இதய ஸ்கேன் (ECHO) மூலம் நம் இதயத்தின் செயல்திறன், மாரடைப்பைக் கண்டறியலாம்.


ஆஞ்சியோகிராம் / ஆஞ்சியோ பிளாஸ்டி ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்து பார்க்கும்போது இதய ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டிருந்தால், கை வழியாக ஒரு சிறிய டியூப்பை செலுத்தி, அதன் மூலம் ஒரு பலூனை உட்செலுத்தி ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்ட இடத்திற்கு சென்று அதில் இருக்கும் கொழுப்பு படிவுகளை அகற்றி (விரித்து விடுதல்) அந்த இடத்தில் ஸ்டென்ட் வைத்து அடைப்பை சரி செய்யும் சிகிச்சை முறைக்கு ஆஞ்சியோபிளாஸ்டி. பைபாஸ் சர்ஜரி யாருக்கு தேவை? இதயத்திற்கான ரத்தக் குழாய்களில் 3 அல்லது 5 இடங்களில் அடைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே பைபாஸ் சர்ஜரி பரிந்துரை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் அடைப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை பரிந்துரை செய்யப்படுகிறது. இந்த ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையினால் சுலபமாக மற்றும் வலி இல்லாமல் அடைப்பை அகற்றலாம்.

இதய நோயாளிகள் பின்பற்ற வேண்டிய உணவு பழக்க வழக்கங்கள் என்ன? இதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் அதிகளவு உப்பு, நிறைவுற்ற கொழுப்பு, சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். காய்கறிகள், பழங்களை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமுள்ள சால மீன், வால்நட்ஸ், கொண்டைக்கடலை, ஓட்ஸ், சிவப்பு திராட்சை, தக்காளி போன்ற உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 6 கிராம் (3 டீஸ்பூன்) அளவிற்கு உப்பு உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல் ஒரு நாளைக்கு 4 முதல் 6 டீஸ்பூன் அளவில் சன் பிளவர் எண்ணெய், ரைஸ்பிராண்ட் எண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவற்றை உணவில் சுழற்சி முறையில் சேர்த்துக் கொள்ளலாம்.

மாரடைப்பை தடுக்க என்ன செய்வது? 
மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் மாரடைப்பை வராமல் தடுக்க முடியும். மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக அதை சரி செய்ய முயற்சிப்பதோடு, முடிந்தவரை எப்போதும் மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ம ன அழுத்தத்தைக் குறைக்க வேலை நேரங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் விளையாட்டுக்கள், இசை கேட்பது, படிப்பது போன்ற ஏதாவதொரு மனதுக்கு பிடித்தமான செயலில் ஈடுபடலாம். மாரடைப்பை தடுக்க ரத்த அழுத்தம், சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். மது அருந்துதல், புகை மற்றும் புகையிலை போன்ற பழக்கங்களை கைவிட வேண்டும். தினசரி 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம், தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தினசரி அரை மணி நேரமாவது நடைபயிற்சி, உடற்பயிற்சி, யோகா பயிற்சிகள் செய்ய வேண்டும் என்கிறார் மருத்துவர் கிரிஷ் தீபக்.

கோயம்புத்தூர் மத்திய சிறையில் பணி.. விண்ணப்பிக்க இன்னும் 3 நாட்களே உள்ளன..!

February 25, 2023 0

 கோயம்புத்தூரில் உள்ள மத்திய சிறையில் இரவுக் காவலர் காலிப் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடம் பொது இன சுழற்சி மூலம் நிரப்பப்படவுள்ளது.

01.07.2022 அன்று வரை தேதியில் 32 வயதுக்கு மிகாமல் இருக்கும் நபர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வித் தகுதி குறித்த விவரங்கள் அறிவிப்பில் இடம்பெறவில்லை..

ஆர்வமுள்ளவர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கும் படி கோவை மத்தியச்  சிறை கண்காணிப்பாளர் மா.ஊர்மிளா தெரிவித்துள்ளார். விண்ணப்பதார்கள் சாதிச் சான்றிதழ் நகலுடன்  சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பப் படிவத்தை  “சிறை கண்காணிப்பாளர், மத்தியச் சிறை, கோவை-18 என்ற முகவரிக்கு 28.02.2023 தேதிக்குள் தபால் மூலம் பெறும் படி விண்ணப்பிக்க வேண்டும்.

மேற்படி தேதிக்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். தேர்வு தேதி மற்றும் நேர விவரம் தகுதியுள்ள விண்ணப்பதார்களுக்கு மட்டும் அஞ்சல் மூலம் பின்னர் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்குஇங்கே கிளிக்செய்யவும்.


Tamil Ilakkanam Pirithu Eludhuga – பிரித்து எழுதுக | TNPSC General Tamil Notes

February 25, 2023 0

 

பிரித்தெழுதுக – தமிழ் இலக்கணம்

பள்ளி மாணவர்களுக்கும், TNPSC & TET தேர்வு எழுதுபவர்களுக்கும் உதவும் வகையில் இந்த பக்கத்தை வடிவமைத்துள்ளோம்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வினாக்களும் பள்ளி பள்ளி புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டதே.

  1. அமுதென்று -அமுது +என்று
  2. செம்பயிர் -செம்மை +பயிர்
  3. செந்தமிழ் -செம்மை +தமிழ்
  4. பொய் யகற்றும் -பொய் +அகற்றும்
  5. இடப்புறம் -இடது +புறம்
  6. சீரிளமை -சீர்+இளமை
  7. வெண்குடை -வெண்மை + குடை
  8. பொற்கோட்டு-பொன் + கோட்டு
  9. நன்மாடங்கள்-நன்மை + மாடங்கள்
  10. நிலத்தினிடையே- நிலத்தின் + இடையே
  11. தட்பவெப்பம்- தட்பம் + வெப்பம்
  12. வேதியுரங்கள்-வேதி + உரங்கள்
  13. கண்டறி -கண்டு +அறி
  14. ஓய்வற-ஓய்வு +அற
  15. ஆழக்கடல்- ஆழம் + கடல்
  16. விண்வெளி- விண் + வளி
  17. நின்றிருந்த -நின்று + இருந்த
  18. அவ்வுருவம் -அ + உருவம்
  19. இடமெல்லாம் -இடம் +எல்லாம்
  20. மாசற -மாசு +அற
  21. கைப்பொருள் -கை +பொருள்
  22. பசியின்றி -பசி +இன்றி
  23. படிப்பறிவு -படிப்பு +அறிவு
  24. நன்றியறிதல் -நன்றி +அறிதல்
  25. பொறையுடைமை -பொறை +உடைமை
  26. பாட்டிசைத்து -பாட்டு +இசைத்து
  27. கண்ணுறங்கு -கண்+உறங்கு
  28. போகிப்பண்டிகை -போகி +பண்டிகை
  29. பொருளுடைமை -பொருள் +உடைமை
  30. கல்லெடுத்து -கல் +எடுத்து
  31. நானிலம் -நான்கு +நிலம்
  32. 32.கதிர்ச்சுடர் -கதிர்+சுடர்
  33. மூச்சடக்கி -மூச்சு +அடக்கி
  34. வண்ணப்படங்கள் -வண்ணம் +படங்கள்
  35. விரிவடைந்த -விரிவு +அடைந்த
  36. நூலாடை -நூல் +ஆடை
  37. தானென்று -தான் +என்று
  38. எளிதாகும் -எளிது +ஆகும்
  39. பாலையெல்லாம் -பாலை +எல்லாம்
  40. குரலாகும்-குரல் + ஆகும்
  41. இரண்டல்ல-இரண்டு + அல்ல
  42. தந்துதவும்-தந்து +உதவும்
  43. காடெல்லாம்-காடு + எல்லாம்
  44. பெயரறியா-பெயர் + அறியா
  45. மனமில்லை- மனம் + இல்லை
  46. காட்டாறு- காடு + ஆறு
  47. பொருட்செல்வம் -பொருள் +செல்வம்
  48. யாதெனின் -யாது +எனின்
  49. யாண்டுளனோ?-யாண்டு +உளனோ?
  50. பூட்டுங்கதவுகள் -பூட்டு +கதவுகள்
  51. தோரணமேடை -தோரணம் +மேடை
  52. பெருங்கடல் -பெரிய +கடல்
  53. ஏடெடுத்தேன்- ஏடு +எடுத்தேன்
  54. துயின்றிருந்தார் -துயின்று +இருந்தார்
  55. வாய்தீ தின் -வாய்த்து +ஈயின்
  56. கேடியில்லை -கேடு +இல்லை
  57. உயர்வடைவோம் -உயர்வு +அடைவோம்
  58. வனப்பில்லை -வனப்பு +இல்லை
  59. வண்கீரை -வளம் +கீரை
  60. கோட்டோவியம் -கோடு +ஓவியம்
  61. செப்பேடு -செப்பு +ஏடு
  62. எழுத்தென்ப-எழுத்து +என்ப
  63. கரைந்துண்ணும் -கரைந்து +உண்ணும்
  64. நீருலையில் -நீர் +உலையில்
  65. தேர்ந்தெடுத்து -தேர்ந்து +எடுத்து
  66. ஞானச்சுடர்-ஞானம் + சுடர்
  67. இன்சொல்- இனிய +சொல்
  68. நாடென்ப -நாடு +எ ன்ப
  69. மலையளவு -மலை +அளவு
  70. தன்னாடு -தன் + நாடு
  71. தானொரு -தான் +ஒரு
  72. எதிரொலிதத்து -எதிர் +ஒலிதத்து
  73. என்றெ ன்றும்-என்று + என்றும்
  74. வானமளந்து -வானம் +அளந்து
  75. இருதிணை -இரண்டு +திணை
  76. ஐம்பால் -ஐந்து +பால்
  77. நன்செய் -நன்மை +செய்
  78. நீளு ழைப்பு -நீள் +உழைப்பு
  79. செத்திறந்த-செத் து + இறந்த
  80. விழுந்ததங்கே-விழுந்தது + அங்கே
  81. இன் னோசை -இனிமை + ஓசை
  82. வல்லுருவம்-வன்மை + உருவம்
  83. இவையுண்டார் -இவை +உண்டார்
  84. நலமெல்லாம் -நலம் +எல்லாம்
  85. கலனல்லால் -கலன் +அல்லால்
  86. கனகச் சுனை -கனகம் +சுனை
  87. பாடறிந்து -பாடு+அறிந்து
  88. மட்டுமல்ல -மட்டும் +அல்ல
  89. கண்ணோடாது -கண் +ஓடாது
  90. கசடற -கசடு +அற
  91. அக்களத்து -அ+களத்து
  92. வாசலெல்லாம்-வாசல் +எல்லாம்
  93. பெற்றெடுத்தோம்- பெற்று +எடுத்தோம்
  94. வெங்கரி’-வெம்மை+கரி
  95. என்றிருள்’-என்று +இருள்
  96. சீவனில்லாமல்-’சீவன்+இல்லாமல்
  97. விலங்கொடித்து-விலங்கு + ஒடித்து
  98. நமனில்லை -நமன் +இல்லை
  99. ஆனந்தவெள்ளம் -ஆனந்தம் +வெள்ளம்
  100. பெருஞ்செல்வம் -பெருமை + செல்வம்
  101. ஊராண்மை -ஊர் +ஆண்மை
  102. இன்பதுன்பம்-இன்பம் +துன்பம்
  103. விழித்தெழும்- விழித்து + எழும்
  104. போவதில்லை-போவது +இல்லை
  105. படுக்கையாகிறது -படுக்கை +ஆகிறது
  106. கண்டெடுக்கப்பட்டுள்ளன -கண்டு +எடுக்கப்பட்டு +உள்ளன
  107. எந்தமிழ்நா-எம் + தமிழ் + நா
  108. அருந்துணை-அருமை +துணை
  109. திரைப்படம் -திரை +படம்
  110. மரக்கலம் -மரம் +கலம்
  111. பூக்கொடி -பூ +கொடி
  112. பூத்தொட்டி -பூ +தொட்டி
  113. பூச்சோலை -பூ +சோலை
  114. பூப்பந்து -பூ +பந்து
  115. வாயொலி -வாய் +ஒலி
  116. மண்மகள் -மண் +மகள்
  117. கல்லதர் -கல் +அதர்
  118. பாடவேளை -பாடம் +வேளை
  119. கலங்கடந்தவன் -காலம் + கடந்தவன்
  120. பழத்தோல் -பழம் +தோல்
  121. பெருவழி -பெருமை +வழி
  122. பெரியன் -பெருமை +அன்
  123. மூதூர் -முதுமை +ஊர்
  124. பைந்தமிழ் -பசுமை +தமிழ்
  125. நெட்டிலை -நெடுமை +இலை
  126. வெற்றிலை -வெறுமை +இலை
  127. செந்தமிழ் -செம்மை +தமிழ்
  128. கருங்கடல் -கருமை +கடல்
  129. பசுந்தளிர் -பசுமை +தளிர்
  130. சிறுகோல் -சிறுமை +கோல்
  131. பெற்சிலம்பு -பொன் +சிலம்பு
  132. இழுக்கின்றி -இழுக்கு +இன்றி
  133. முறையறிந்து -முறை +அறிந்து
  134. அரும்பொருள் -அருமை +பொருள்
  135. மனையென -மனை +என
  136. பயமில்லை-பயம்+இல்லை
  137. கற்பொடி -கல் +பொடி
  138. உலகனைத்தும் -உலகு+அனைத்தும்
  139. திருவடி -திரு +அடி 140.நீரோடை -நீர் +ஓடை
  140. சிற்றூர் -சிறுமை +ஊர்
  141. கற்பிளந்து -கல் +பிளந்து
  142. மணிக்குளம் -மணி+குளம்
  143. அமுதென்று -அமுது +என்று
  144. புவியாட்சி -புவி +ஆட்சி
  145. மண்ணுடை -மண் +உடை
  146. புறந்தருதல் -புறம் +தருதல்
  147. வீட்டுக்காரன் -வீடு +காரன்
  148. தமிழ்நாட்டுக்காரி -தமிழ்நாடு +காரி
  149. உறவுக்காரர் -உறவு +காரர்
  150. தோட்டக்காரர் -தோட்டம் +காரர்
  151. தடந்தேர் -தடம்+ தேர்
  152. கலத்தச்சன் -காலம் +தச்சன்
  153. உழுதுழுது – உழுது +உழுது
  154. பேரழகு – பெருமை+அழகு
  155. செம்பருதி -செம்மை +பருதி
  156. வனமெல்லாம் – வானம் +எல்லாம்
  157. உன்னையல்லால் -உன்னை +அல்லால்
  158. செந்தமிழே -செம்மை +தமிழே
  159. ஆங்கவற்றுள் -ஆங்கு +அவற்றுள்
  160. தனியாழி -தனி +ஆழி
  161. 162.வெங்கதிர் -வெம்மை +கதிர்
  162. கற்சிலை -கல் +சிலை
  163. கடற்கரை -கடல் +கரை
  164. பன்முகம் -பல் +முகம்
  165. மக்கட்பேறு -மக்கள் +பேறு
  166. நாண்மீன் -நாள் +மீன்
  167. சொற்றுணை -சொல் +துணை
  168. பன்னூல் -பல் +நூல்
  169. இனநிரை -இனம் +நிரை
  170. புதுப்பெயல் -புதுமை +பெயல்
  171. அருங்கானம் -அருமை +கானம்
  172. எத்திசை -எ +திசை
  173. உள்ளொன்று -உள் +ஒன்று
  174. ஒருமையுடன் -ஒருமை +உடன்
  175. பூம்பாவாய் -பூ +வாய்
  176. தலைக்கோல் -தலை +கோல்
  177. முன்னுடை -முன் +உடை
  178. ஏழையென -ஏழை +என
  179. நன்மொழி -நன்மை +மொழி
  180. உரனுடை -உரன் +உடை
  181. அகநானூறு- அகம்+நானூறு
  182. அகந்தூய்மை - அகம்+துய்மை
  183. அங்கயற்கண் - அம்+கயல்+கண்
  184. அமைந்திருந்தது - அமைந்து+இருந்தது
  185. அலகிலா - அலகு + இலா
  186. அல்லாவருக்கும் - அல்லாவர்+ஊக்கும்
  187. அழகாடை - அழகு+ஆடை
  188. அறிவுண்டாக- அறிவு + உண்டாக
  189. அன்பகத்து இல்லா - அன்பு + அகத்து + இல்லா
  190. அன்பீனும் - அன்பு + ஈனும்
  191. ஆட்டம் - ஆடு + அம்
  192. ஆயிடை - ஆ+இடை
  193. ஆருயிர்-அருமை+உயிர்
  194. இங்கேயிரு - இங்கே+இரு
  195. இங்கொன்றும் - இங்கு+ஒன்றும்
  196. இணரூழ்த்தும் - இணர்+ஊழ்த்தும்
  197. இயல்பீராறு- இயல்பு + ஈர் (இரண்டு) + ஆறு
  198. இலரெனினும் - இலர்+எனினும்
  199. இல்லதணின் - இல்+அதனின்
  200. இவனிறைவன் - இவன் +இறைவன்
  201. இழந்தோமென்றல்லாவர் - இழந்தோம்+என்று+அல்லாவர்
  202. இளங்கனி = இளமை + கனி
  203. இளிவன்று - இளிவு+அன்று
  204. இறந்தாரணையர் - இறந்தார்+அணையர்
  205. இரப்பார்க்கொன்றிவர் - இரப்பார்க்கு+ஒன்று+ஈவார்
  206. இன்னிசை - இனிமை+இசை
  207. ஈண்டிவரே - ஈண்டு+இவரே
  208. ஈண்டினியான்- ஈண்டு + இனி + யான்
  209. ஈதலிசைபட- ஈதல்+இசைபட
  210. ஈந்தளிப்பாய் - ஈந்து+அளிப்பாய்
  211. ஈன்றெடுத்த - ஈன்று+எடுத்த
  212. உடைத்தன்று - உடைத்து+அன்று
  213. உடையதுடையாரை - உடையது+உடையாரை
  214. உணர்ச்சி - உணர் + சி
  215. உண்டென்று - உண்டு + என்று
  216. உரையதனை - உரை+அதனை
  217. உலகறிய - உலகு+அறிய
  218. ஊக்கமுடையான் - ஊக்கம்+உடையான்
  219. ஊர்புறம் - ஊர்+புறம்
  220. எமதென்று- எமது + என்று
  221. எழுந்தெதிர்- எழுந்து + எதிர்
  222. எனக்கிடர் - எனக்கு + இடர்
  223. எனைத்தொன்றும் - எனைத்து+ஒன்றும்
  224. என்டிசை - எட்டு+திசை
  225. ஒல்காருரவோர் - ஒல்கார்+உரவோர்
  226. ஓய்வூதியம் - ஓய்வு+ஊதியம்
  227. ஓரெழுத்து - ஒன்று + எழுத்து
  228. கண்ணருவி = கண் + அருவி
  229. கடலலை - கடல்+அலை
  230. கடலோரம் - கடல்+ஒரம்
  231. கடும்பசி - கடும்+பசி
  232. கணக்கிழந்த - கணக்கு+இழந்த
  233. கயற்கண்ணி - கயல்+கண்ணி
  234. கரவிலா - கரவு+இலா
  235. கருமுகில்- கருமை + முகில்
  236. கரைவரலேறு - கரை+விரல்+ஏறு
  237. கவியரசர் - கவி+அரசர்
  238. காட்டிலழும் - காட்டில்+அழும்
  239. காட்டுமரங்கள் - காடு+மரங்கள்
  240. காடிதனை- காடு + இதனை
  241. காண்டகு- காண் + தகு
  242. காத்தோலம்பல் - காத்து+ஓம்பல்
  243. காரிருள் - கார்+இருள்
  244. காலமறிந்தாங்கு - காலம்+அறிந்து+ஆங்கு
  245. குமின்சிரிப்பு - குமின்+சிரிப்பு
  246. குலவுமெழில் - குலவும்+எழில்
  247. குழற்காடேந்துமிள - குழல்+காடு+எந்தம்+இள
  248. குறுங்காவியம் - குறுமை+காவியம்
  249. குறுந்தொகை - குறுமை+தொகை
  250. குறைவிலை - குறைவு+இல்லை
  251. குற்றேவல் - குறுமை+ஏவல்
  252. கேளானை - கேள் + ஆனை
  253. கொங்கலர்ந்தார் - கொங்கு+அலர்+தார்
  254. கோட்பாடு - கோள் + பாடு
  255. கொட்பின்றி - கொட்பு+இன்றி
  256. கொலை - கொல் + ஐ
  257. கோயில் - கோ+இல்
  258. கோலப்பூங்கூடை - கோலம்+பூ+கூடை
  259. கோடல் - கோடு + அல்
  260. கோலையூன்றி - கோலை+ஊன்றி
  261. கோற்பாகர் - கோல்+பாகர்
  262. சரணல்லால் - சரண்+அல்லால்
  263. சாக்காடு - சா + காடு
  264. சிற்றோர் - சிறுமை+ஊர்
  265. சீறடி - சிறுமை+அடி
  266. சுவையுணரா - சுவை + உணரா
  267. செங்கோலம் - செம்மை+கோலம்
  268. செய்யுள் - செய் + உள்
  269. செற்றன்று - செற்று+அன்று
  270. சேணுறைதல் - சேண்+உறைதல்
  271. சேவடி- செம்மை + அடி
  272. சொற்பொருத்தி - சொல்+பொருத்தி
  273. சோர்விலான் - சோர்வு+இலன்
  274. தங்கால் - தம்+கால்
  275. தந்தம் - தம்+தம்
  276. தமக்குரியர் - தமக்கு + உரியர்
  277. தவமிரண்டும் - தவம்+இரண்டும்
  278. தளிர்த்தற்று - தளிர்த்து + அற்று
  279. தாமுள -தாம் + உள
  280. தாப்பிசை - தாம்பு + இசை
  281. தாயுள்ளம் - தாய்+உள்ளம்
  282. தாழ்வின்றி - தாழ்வு+இன்றி
  283. தானல்லதொன்று - தான்+அல்லது+ஒன்று
  284. திருவினையாக்கும் - திருவினை+ஆக்கும்
  285. திறனறிந்த - திறன்+அறிந்து
  286. தீந்தமிழ் - தீம்+தமிழ்
  287. தேர்ந்தெடுத்து - தேர்ந்து+எடுத்து
  288. தொழிற்கல்வி - தொழில்+கல்வி
  289. தொழுதேத்தி - தொழுது + ஏத்தி
  290. தோற்றரவு - தோற்று + அரவு
  291. நடவாமை - நட+ ஆ + மை
  292. நல்லறம்- நன்மை + அறம்
  293. நறுஞ்சுவை - நறுமை+சுவை
  294. நன்கணியர் - நன்கு + அணியர்
  295. நன்மொழி - நன்மை + மொழி
  296. நாத்தொலைவில்லை- நா + தொலைவு + இல்லை;
  297. நிலத்தறைந்தான் - நிலத்து+அறைந்தான்
  298. நிழலருமை - நிழல் + அருமை
  299. நீரவர் - நீர்+அவர்
  300. நீர்த்தவளை - நீர்+தவளை
  301. நூற்றாண்டு - நூறு+ஆண்டு
  302. நெடுமரம் - நெடுமை+மரம்
  303. பணமாயிரம் - பணம்+ஆயிரம்
  304. பண்பிலுயர் - பண்பில்+உயர்
  305. பல்பொருணிங்கிய - பல்+பொருள்+நீங்கிய
  306. பறவை - பற + வை
  307. பாடுன்றும் - பாடு+ஊன்றும்
  308. பாய்தோடும் - பாய்ந்து + ஒடும்
  309. பாவினம் - பா+இனம்
  310. பிணிநோயுற்றோர்- பிணி + நோய் + உற்றோர்
  311. புலவி - புல + வி
  312. புளிப்பு - புளி + பு
  313. புறநானூறு- புறம்+ நான்கு+ நூறு
  314. பூட்டுமின்- பூட்டு + மின்
  315. பூம்பினல் - பூ+பினல்
  316. பெறுதல் - பெறு + தல்
  317. பேரண்டம் - பெருமை+அண்டம்
  318. பேரூர் - பெருமை+ஊர்
  319. பைங்கிளி - பசுமை+கிளி
  320. பொருளுமைமை - பொருள்+உமைமை
  321. பொற்கோட்டுமேறு - பொன்+கோட்டு+மேறு
  322. போக்கு - போ + கு
  323. போன்றிருந்தேனே - போன்றி+இருந்தேனே
  324. மக்களொப்பன்று - மக்கள்+ஒப்பு+அன்று
  325. மட்கலத்துள் - மண்+கலத்து+உள்
  326. மரவேர்- மரம்+வேர்
  327. மருப்பூசி- மருப்பு + ஊசி
  328. மலர்ச்சோலை- மலர்+சோலை
  329. மறதி - மற + தி
  330. மார்போலை- மார்பு + ஓலை
  331. மொய்யிலை- மொய் + இலை
  332. வன்பாற்கன் - வன்பால் + கண்
  333. வாயினராதல் - வாயினர்+ஆதல்
  334. வாயினீர்- வாயின் + நீர்
  335. வரவு - வர + உ
  336. வாயுணர்வு - வாய் + உணர்வு
  337. வாழ்க்கை - வாழ் + கை
  338. வாழ்த்தாதென்னே - வாழ்த்தாது+என்னே
  339. விரைந்தசையும் - விரைந்து+அசையும்
  340. விளங்கிற்றங்கே - விளங்கிற்று+அங்கே
  341. விளையாட்டுடையார் -விளையாட்டு+ உடையார்
  342. வீழ்ந்த்திங்கே - வீழ்ந்தது+இங்கே
  343. வெஞ்சுரம் - வெம்மை+சுரம்
  344. வெண்மதி- வெண்மை + மதி
  345. வெந்துலர்ந்து- வெந்து + உலர்ந்து.
  346. வெவ்விருப்பாணி- வெம்மை+இரும்பு+ஆணி
  347. வெவ்விறகு - வெம்மை+விறகு
  348. வெள்வாய் - வெண்மை+வாய்
  349. வெள்ளத்தனைய - வெள்ளம்+அத்து+அனைய
  350. வைத்திழந்தான் - வைத்து+இழந்தான்