Agri Info

Adding Green to your Life

May 31, 2023

ஜாலியான பயணத்திற்கு உங்களுக்கு தேவையான 5 லக்கேஜ் கேஜெட்கள்..!

May 31, 2023 0

 

பயணத்தைத் திட்டமிடுவது ஜாலியாக இருக்கும். ஆனால் சாமான்களை பேக்கிங் செய்யும் போது தான் கட்டுப்பாடும். தேவையான பொருட்களை எடுத்துச்செல்ல வேண்டும். பாதுகாக்கவும் வேண்டும் என்ற பல யோசனைகளை இருக்கும். அதற்கு எப்படி சரியாக பேக்கிங் செய்வது, என்ன பேக்கிங் உபகாரங்கள் பயன்படுத்தலாம் என்று சொல்கின்றோம்.

லக்கேஜ் கவர்கள் :  சாமான்களை தனித்த வண்ணம் மற்றும் வடிவமைப்புடன் வைத்திருப்பது உங்கள் சாமான்களை எளிதில் அடையாளம் காண உதவும். உங்களிடம் தனித்துவமான லக்கேஜ் இல்லையென்றால், லக்கேஜ் கவர்கள் பயன்படுத்தினால் உங்கள் பையை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். அதோடு கூடுதல் பாதுகாப்பும் வழங்கும். சூட்கேஸை அழுக்கு, அரிப்பு  மற்றும் கீறல்களிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன.

கழுத்து தலையணை (Neck Pillow):  நீங்கள் ரயில், விமானம் அல்லது பேருந்தில் பயணம் செய்கிறீர்கள் என்றால், உங்கள் கழுத்து நிறைய சிரமங்களைச் சந்திக்கும். எனவே, நீண்ட நேர பயணத்தின் போது நீங்கள் வசதியாக தூங்குவதற்கு கழுத்து தலையணை முக்கியமானது.  எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய இந்த இலகுரக தலையணைகள் உங்கள் கழுத்தில் உறுதியாக பொருந்துகிறதா என்பதை மட்டும் பார்த்து வாங்கிக்கொள்ளுங்கள். இது பயண அலுப்பைக் குறைக்க உதவும்.

தனிப்பயனாக்கப்பட்ட லக்கேஜ் டேக் :  ஒரே மாதிரியான பைகள் இருக்கும் போது உங்கள் லக்கேஜ் எது என்பதை திறந்து பார்த்து தேர்வு செய்வது கடினம். அதற்கு பதிலாக தனிப்பயனாக்கப்பட்ட லக்கேஜ் தகை பையோடு இணைத்துக்கொண்டால் எளிதாக இருக்கும். அதேபோல பய் எங்காவது தொலைந்து விட்டால்,  உங்கள் பெயர், தொலைபேசி எண், மின்னஞ்சல் ஐடி போன்ற விவரங்கள் கொண்ட டேக் வைத்து கண்டுபிடித்தவர்கள் உங்களிடம் பொருளை சேர்க்க முடியும்.

லக்கேஜ் எடை கருவி : விமான நிலையத்தின் செக்-இன் கவுண்டரில் உங்கள் சாமான்களை வெயிட் பெல்ட்டில் எடைபோடப் போகும் போது, ​​பலர் சந்திக்கும் விஷயம் எடை அளவு தான். விமானத்தில் அனுமதிப்பட்ட எடையை விட கூடுதல் எடை இருந்தால் அதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். விமான நிலையத்தில் இது ஒரு பதற்ற சூழலை உருவாக்கும். அதை தவிர்க்க கிளம்பும் முன்பே உங்கள் லக்கேஜ் எடையை சரி பார்த்துக்கொள்ளுங்கள். கூடுதல் எடை இருந்தால் அதற்கான கட்டணத்தையும் தயாராக எடுத்து செல்ல உதவும்.

TSA Lock: நீங்கள் பயணம் செய்யும் போது, ​​மிகப்பெரிய கவலைகளில் ஒன்று, சாமான்கள் திருட்டு பயம். பொருட்களை சரியாக பாதுகாப்பது நம் பொறுப்பு. நீங்கள் எங்கு பயணம் செய்தாலும் உங்கள் சூட்கேஸ் மற்றும் மதிப்புமிக்க பொருட்களைப் பாதுகாக்க போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக(TSA) பூட்டு உதவும். TSA பூட்டு என்பது அடிப்படையில் ஒரு உலகளாவிய பாதுகாப்பு அமைப்பாகும், இது பயணிகள் தங்கள் சாமான்களைப் பூட்டி வைக்கவும், மதிப்புமிக்க பொருட்களுக்கு சேதம் ஏற்படாமல் சரிபார்க்க அதிகாரிகளை அனுமதிக்கிறது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

முளை கட்டிய பயிர்களை சாப்பிட்டால் உடல் எடை குறையுமா.? நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க..!

May 31, 2023 0

 பசிக்கு சாப்பிடுவது என்பதையெல்லாம் தாண்டி வாய் ருசிக்கு ஏற்றபடி சாப்பிடும் பழக்கம் இன்று அனேக மக்களுக்கு இருக்கிறது. அலைபாயும் நாக்கை கட்டுப்படுத்த முடியாமல் பல வகையான ஸ்நாக்ஸ் மற்றும் துரித உணவுகளை வயிறு நிரம்ப சாப்பிடுகின்றனர். இதன் எதிரொலியாக செரிமானக் கோளாறு, வயிறு உப்புசம், உடல் பருமன் போன்ற பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

ருசியின் தேடலையும் பூர்த்தி செய்ய வேண்டும், அதே சமயம் அது ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்ற தேடல் உங்கள் மனதில் வந்திருக்கிறதா? அப்படியானால் உங்களுக்கு முளைகட்டிய பயறு வகை ஸ்நாக்ஸ்கள் அனைத்துமே நல்ல சாய்ஸ் ஆக அமையும். அதிலும் முளைகட்டிய கொண்டக்கடலை பயிரானது சத்து மிகுந்ததாக இருக்கும். இதுபோன்ற பயறுகளை ஸ்நாகஸ் ஆக எடுத்துக் கொண்டால் நமக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை இப்போது பார்க்கலாம்.

உடல் எடை குறையும்: ஆமாம், வயிராற சாப்பிடும்போது உடல் எடை அதிகரிக்குமோ என்ற அச்சம் உங்களுக்கு தேவையில்லை. ஏனென்றால் கொண்டக்கடலையில் நார்ச்சத்து மிக, மிக அதிகம் மற்றும் கலோரி சத்து குறைவாக இருக்கும். ஆகவே, உடலில் தேவையற்ற கொழுப்புகளை கரைக்க விரும்பும் நபர்களுக்கு இது சிறப்பான உணவாக அமையும்.

இதயநலனை மேம்படுத்தும்: சிவப்பு கொண்டக்கடலையில் ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ் மற்றும் எண்ணற்ற ஃபைடோ ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை உங்கள் ரத்த நாளங்களின் நலமை மேம்படுத்தும் மற்றும் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ் அளவை குறைக்கும். இதன் எதிரொலியாக உங்களுக்கு இதய நோய்க்கான அபாயம் குறையும்.

முடி ஆரோக்கியம் மேம்படும்: முளை கட்டிய கொண்டக்கடலையில் அத்தியாவசிய விட்டமின்களான விட்டமின் ஏ, விட்டமின் பி16 மற்றும் ஜிங்க், மேங்கனீஸ் போன்ற தாதுக்கள் போன்றவை நிரம்ப உள்ளன. இது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு துணை நிற்பதோடு, முடி வளர்ச்சிக்கும் உதவும்.

சர்க்கரை அளவை சீராக்கும்: கொண்டக்கடலையில் உள்ள காம்ப்ளெக்ஸ் மாவுச்சத்தானது கொஞ்சம் தாமதமாக செரிமானம் அடையும். அதே சமயம், நார்ச்சத்தானது ரத்தத்தில் உள்ள சர்க்கரையை உறிஞ்சும். ஆக, உங்கள் ரத்தத்தில் உடனடியாக சர்க்கரை அளவு அதிகமாகாமல் தடுக்கப்படுகிறது.

மூளையின் செயல்பாடு மேம்படும்: நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் தன்மை கொண்டக்கடலைக்கு உண்டு. அதனால் மூளை சுறுசுறுப்பாக இயங்கும் மற்றும் உங்கள் எண்ண ஓட்டம் மேம்படும். கவனத்திறன் அதிகரிக்கும் என்பதால் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு இதை தினசரி மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் போல சாப்பிடக் கொடுக்கலாம்.

செரிமானத்திற்கு நல்லது: முளைகட்டிய கொண்டக்கடலையில் கரையத்தக்க நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளது. இது செரிமான நடவடிக்கையை மேம்படுத்தும் மற்றும் குடல் நலன் காக்கும். மேலும், சர்க்கரை அளவும் உடனடியாக அதிகரிக்காது என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த உணவாக அமையும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உங்களுக்கு நீரிழிவு நோய் வரும் அபாயம் இருக்கா..? உடனே இதை ஃபாலோ பண்ணுங்க..!

May 31, 2023 0

 உலக மக்கள் பெரும்பாலானவர்களை பாதித்து, ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் சர்க்கரை நோய் நம்மை தாக்கிவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு உங்களுக்கு இருக்கலாம். குறைந்தபட்சம் எந்த வயதில் இந்த நோய் தாக்குகிறது என்ற காலத்தையாவது தள்ளிப்போட வேண்டும் என்று நினைப்பீர்கள்.

சராசரி சர்க்கரை அளவை தாண்டும் அந்நாளில் தான் சர்க்கரை நோய் பாதிப்பை தெரிந்து கொள்ள வேண்டும் என்று இல்லை. பொதுவாக 3 மாத சராசரி ரத்த சர்க்கரை அளவை தெரிந்து கொள்ள மருத்துவர்கள் உங்களுக்கு ஹெபிஏ1சி என்ற பரிசோதனையை செய்வார்கள். இதனை ஏ1சி பரிசோதனை என்றும் கூறலாம். இந்தப் பரிசோதனையில் நீங்கள் சராசரி அளவை நெருங்கி வருகிறீர்கள் என்றாலே, அடுத்தகட்டமாக சர்க்கரை நோயை நோக்கி அடியெடுத்து வைக்க உள்ளீர்கள் என்று பொருள்.

ஹெபிஏ1சி என்றால் என்ன? ரத்த சிவப்பு அணுக்களில் உள்ள புரதத்திற்கு பெயர் ஹீமோகுளோபின் ஆகும். இதன் மீது படிந்துள்ள கிளைசேடட் ஹீமோகுளோபின் என்னும் அளவை பரிசோதனை செய்வதன் மூலமாக நம் ரத்தத்தில் உள்ள குளூகோஸ் அளவை தெரிந்து கொள்ளலாம். ரத்தத்தில் எந்த அளவுக்கு குளுகோஸ் அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு கிளைசேடட் ஹீமோகுளோபின் அளவு மிகுதியாக இருக்கும்.

ஹெச்பி1ஏசி அளவு 5.7-க்கு குறைவாக இருந்தால் அது சராசரி அளவாகும். அதுவே 5.7 முதல் 6.4 வரை இருந்தால் நீரிழிவு அபாயத்தில் உள்ளீர்கள் என்று அர்த்தம். 6.5க்கு மேல் இருந்தால் டைப் 2 நீரிழிவு பிரச்சினை உங்களுக்கு வந்துவிட்டது என்பது உறுதியாகிவிடும். ஆகவே, அபாய கட்டத்தில் உள்ளபோதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளலாம்.

தினசரி உடற்பயிற்சி: உடற்பயிற்சி செய்வதை சிரமமான கடமை என்று கருதாமல் அதை பொழுதுபோக்காக மேற்கொள்ள வேண்டும். வாரம் ஒன்றுக்கு 150 நிமிடங்களுக்கு குறையாமல் பயிற்சி செய்ய வேண்டும். நடைபயிற்சி, ஏரோபிக் பயிற்சி போன்றவற்றை செய்வதன் மூலமாக உடலில் இன்சுலின் சுரப்பு அதிகமாகும். அதன் எதிரொலியாக ஹெச்பிஏ1சி அளவுகள் குறையும்.

சீரான உணவு: சீரான உணவை கச்சிதமான அளவில் சாப்பிடுவது சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும். நீங்கள் சாப்பிடும் உணவில் சுமார் 50 சதவீதம் காய்கறிகள் இருக்க வேண்டும். சுமார் 25 சதவீதம் புரதமும், 25 சதவீதம் முழு தானிய உணவுகளும் இருக்க வேண்டும். கொழுப்பு குறைவான அளவில் சேர்த்துக் கொள்ளலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தும் மாவுச்சத்தை ஜீரணிக்க இது உதவும்.

ஒரே சீரான நேரத்தில் உணவு: தினசரி உணவு சாப்பிடும் நேரத்தை ஒரே மாதிரியாக கடைப்பிடிக்க வேண்டும். அதிக நேர இடைவெளியும் இருக்கக் கூடாது, உடனுக்குடன் சாப்பிடவும் கூடாது. அளவுக்கு அதிகமாக உணவு எடுத்துக் கொள்ள வேண்டாம். அதிலும் சர்க்கரை நோய்க்கு எதிரான மருந்து எடுத்து வருபவர் எனில் உணவு கட்டுப்பாடு மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

அவ்வபோது பரிசோதனை: வீட்டிலேயே குளுகோமீட்டர் வைத்து அவ்வபோது உங்கள் ரத்த சர்க்கரை அளவை பரிசோதனை செய்து கொள்ளலாம். 3 அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறை ஹெபிஏ1சி பரிசோதனையை மருத்துவரிடம் செய்து கொள்ள வேண்டும். அபாய கட்டத்தை நெருங்கி வரும்பட்சத்தில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

ஃபிரிட்ஜில் இந்த 11 உணவுகளை மறந்து கூட வெச்சுடாதீங்க... கெட்டு போயிடும்..!

May 31, 2023 0

 ஃபிரிட்ஜில் வைத்தால் பொருட்கள் கெட்டுப் போகாது என்றுதான் நாம் நினைத்திருப்போம். ஆனால் சில பொருட்களை ஃபிரிட்ஜில் வைக்ககூடாது. எவையெல்லாம் வைக்க கூடாது என்ற பட்டியல் இதோ….

பிரெட் : இதை சொன்னால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். பிரெட்டை தயவுசெய்து ஃபிரிட்ஜில் வைக்காதீர்கள். அப்படி வைதால் அவை கெட்டுப் போகும் வாய்ப்புள்ளதோடு சாப்பிட முடியாதளவிற்கு வறண்டு விடும். ஆகவே சமையலறையில் மற்ற பொருட்களை வைத்துள்ள அலமாரியிலேயே இதையும் வைத்திருங்கள்.


உருளைக் கிழங்கு: கடையிலிருந்து வாங்கி வந்து, அதை அப்படியே கூடையில் வைத்தாலே போதும். இதை தனியாக பத்திரப்படுத்தி வைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் உருளைக்கிழங்கை ஒருபோதும் ஃபிரிட்ஜில் வைத்து விடாதீர்கள். குளிரூட்டப்பட்ட இடத்தில் வைத்திருக்கும் போது, இதிலிருக்கும் கார்போஹைடரேட்ஸ் – மாவுச்சத்து – தன்மை மாற்றம் அடைகிறது. இதனால் சமைக்கும் போது உருளைக்கிழங்கின் சுவை மாறி இனிப்பாக இருக்கும்.

சாக்லேட் : சாக்லேட்டை ஃபிரிட்ஜில் வைத்திருப்பதால் ஒன்றும் ஆகாதுதான். ஆனால் சாக்லேட்டை கொஞ்சம் சாப்பிட்டு விட்டு, அதை அப்படியே ஃபிரிட்ஜில் மூடாமல் திறந்து வைத்திருந்தால் மற்ற உணவுகளின் சுவையை அவை உள்வாங்கிவிடும். இதன் காரணமாக சாக்லேட்டின் தன்மை மாறிவிடும். இதை சாப்பிடும் போது உங்களுக்கு சரியாக செரிமானம் ஆகாமல் வயிற்று வலி ஏற்படக் கூடும். சில சமயங்களில் வயிற்றுப்போக்கு கூட ஏற்பட வாய்ப்புண்டு. ஆகையால் சாக்லேட்டை திறந்தபடி ஃபிரிட்ஜில் வைக்காதீர்கள்.

மூலிகைகள் : துளசி, ரோஸ்மேரி போன்றவற்றை ஃபிரிட்ஜில் வைத்தால் வாடிவிடும். இதை உங்கள் சமையலறையில் சூரிய ஒளி நேரடியாக படாத இடத்தில் வைத்தாலே போதுமானது. சிறிய கிளாஸ் ஒன்றில் கொஞ்சமாக தண்ணீர் நிரப்பி அதில் துளசியையும் ரோஸ் மேரி இலையையும் வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

தேன் : பிரிட்ஜில் தேனை வைத்தால், அதன் நறுமனத்தையும் சுவையையும் இழந்து விடும். ஒரு பாட்டிலில் தேனை ஊற்றி வைத்து நன்றாக மூடி, அதை இருட்டான இடத்தில் வைத்தாலே போதும்.

வெள்ளரிக்காய் : வெள்ளரியை ஃபிரிட்ஜில் வைத்தால் சுருங்கிப் போய்விடும். ஃபிரிட்ஜில் வைப்பதால் இருந்தாக நன்றாக மூடி வைக்கவும்.

அவகோடா : முழுதாக பழுக்காத அவகோடாவை பிரிட்ஜில் வைத்தால் அவை ஒருபோதும் பழுக்காது. ஆகையால் அதை சமையலறையில் உள்ள கூடையில் வைத்தாலே போதும்.

பூண்டு : ஃபிரிட்ஜின் உள்ளே ஈரமாக இருப்பதால், பூண்டை உள்ளே வைத்தால் அவை சுலபமாக வளர்ந்து விட வாய்ப்புள்ளது. அதுவும் நீண்ட காலம் ஃபிரிட்ஜில் வைத்திருந்தால் அவை ரப்பர் போன்று ஆகிவிடும். ஆகையால் அதை அப்படியே திறந்தவெளியில் வைத்தாலே நன்றாக பயன்படுத்தலாம்.

காஃபி : காஃபியை ஃபிரிட்ஜில் வைத்தால், அருகிலுள்ள பொருட்களின் சுவையை அது உள்வாங்கிவிடும். இதனால் நீங்கள் காஃபியை குடிக்கும் போது வேறு சுவையை கொண்டிருக்கும். அதனால் காஃபியை ஃபிரிட்ஜில் வைக்காதீர்கள்.

வெங்காயம் : வெங்காயத்தை நறுக்கியதும் அதை ஃபிரிட்ஜில் வைக்காமல் சமையலறையிலே வைத்திருங்கள். ஃபிரிட்ஜில் வைக்கும் போது வெங்காயத்தின் வடிவம் மாறுவதோடு கொட்டுப்போகவும் வாய்ப்புள்ளது. ஃபிரிட்ஜின் உள்ளே குளிராகவும் ஈரமாகவும் இருப்பதால் வெங்காயத்தை உள்ளே வைத்தால் அவை வளரத் தொடங்கிவிடும்.

குடை மிளகாய் : சுவைக்காகவும் இதன் மொறுமொறுப்பிற்காகவும் குடை மிளகாயை வாங்கியிருப்பீர்கள். ஆனால் இதை ஃபிரிட்ஜில் வைத்தால் சுருங்கிப் போய்விடும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

குழந்தைகளின் வளர்ச்சிக்கு அவசியம் தர வேண்டிய 6 ஊட்டச்சத்துகளும்.. உணவுகளும்..

May 31, 2023 0

 மொபைல் கேம்கள், எப்போதும் ஆன்லைனில் நேரத்தை செலவிடுவது, ஜங்க் உணவுகள் என இன்றைய தலைமுறையினர், குறிப்பாக குழந்தைகளின் வாழ்க்கைமுறை அடியோடு மாறிவிட்டது. வெளியே சென்று ஓடியாடி விளையாடுவதற்கு பதில் வீட்டிற்குள்ளேயே மொபைல் கேம் விளையாடுகிறார்கள். சதா சர்வ காலமும் ஆன்லைனில் தான் இருக்கிறார்கள். நிச்சியம் இது நல்ல பழக்கம் அல்ல. அதிகமாக ஜங்க் உணவுகளை எடுத்துக்கொள்வது, குறைவான உடல் இயக்கம், மொபைல் ஸ்கீரினை அதிக நேரம் பார்ப்பது போன்றவற்றால் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகள் புறக்கணிக்கப்படுகின்றன. உடல் அசைவின்றி ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்கும் வாழ்க்கைமுறை பெரியவர்களை மட்டுமல்லாமல் குழந்தைகளின் வாழ்க்கையிலும் நுழைந்துவிட்டது. ஆகவே, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தை எப்படி கொடுப்பது? என்ன ஊட்டச்சத்துகள், என்ன விட்டமின்கள், வாழ்க்கைமுறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து முக்கியத்துவம் குறித்து ஹெர்பி ஏஞ்சல் மருத்துவமணையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறையின் தலைமை மருத்துவர், டாக்டர். சுவாதி ராமமூர்த்தி நம்மிடம் விளக்குகிறார். “குழந்தைகளுக்கு என்னென்ன சத்துக்கள் முக்கியமாக தேவை என்பதை பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும். குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு அடிப்படையாக இருப்பது சத்துள்ள உணவு. சரிவிகித உணவை நாம் கொடுக்கும் போது, அது குழந்தைகளின் ஓட்டுமொத்த வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடல்நல பிரச்சனைகளை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். உங்கள் குழந்தை புத்திசாலியாகவும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் சக்தியோடும் இருப்பதற்கு சத்துள்ள உணவு மிகவும் அவசியம்”. குழந்தைகளின் சத்தான டயட்டிற்கு 6 வழிகள்..

1. சரிவிகித உணவு:  கார்போஹைட்ரேட்ஸ், புரதங்கள், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் நல்ல கொழுப்புகள் அடங்கிய பழங்கள், காய்கறிகள், பருப்புகள் மற்றும் தானியங்கள் ஆகியவற்றை உங்கள் குழந்தைகள் கண்டிப்பாக உண்ண வேண்டும். இந்த உணவை தினசரி 4-5 முறை உங்கள் குழந்தைக்கு கொடுங்கள். இதன் மூலம் உங்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.

2. நீர்ச்சத்து மிகவும் முக்கியம்: தினசரி உங்கள் குழந்தை போதுமான அளவிற்கு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யுங்கள். தாகம் எடுக்கும் போது குளிர்பானங்களை குடிக்க விடாதீர்கள். அதிக நீர்ச்சத்து கொண்ட தர்பூசணி, முலாம் பழம், வெள்ளரிக்காய், இளநீர், லிச்சி, திராட்சை போன்றவற்றை தவறாமல் உங்கள் குழந்தைகளுகு கொடுங்கள்.

3. ஜங்க் உணவை குறையுங்கள்: சிறு வயதிலேயே ஆரோக்கியமான, சுவையான தின்பண்டங்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். வெறும் கலோரி நிறைந்த நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதற்குப் பதில் சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுமாறு உங்களை குழந்தைகளை ஊக்கப்படுத்துங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள், ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகள், சர்க்கரை நிறைந்த திண்பண்டங்களுக்கு பதிலாக பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகளை கொடுத்து பழக்குங்கள். சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் உங்கள் குழந்தைகளுக்கு புரதம், மினரல்ஸ் மற்றும் நார்ச்சத்து கிடைக்கும் அதே சமயத்தில் கொழுப்புகள் மற்றும் சர்க்கரை அடங்கிய திண்பண்டங்கள் சாப்பிடுவதை குறைக்கலாம்.

4. மூளை வளர்ச்சிக்கு ஒமேகா 3 ஃபேட்டி ஆசிடை சேர்த்துக் கொள்ளுங்கள்: APA, ALA, & DHA , இவற்றோடு மக்னீசியம், விட்டமின் பி காம்பளக்ஸ் ஆகியவை உங்கள் குழந்தையின் அறிவு வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகவே உங்கள் குழந்தைகளின் டயட்டில் இவை போதுமான அளவிற்கு இருப்பதை பார்த்துக் கொள்ளுங்கள். மீன் எண்ணெயில் அதிகளவு ஓமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருக்கிறது. நீங்கள் சைவப் பிரியர்களா? கவலையை விடுங்கள். வறுத்த வால்நட், ஊற வைத்த பாதாம், சியா விதைகள், ஆளி விதைகள், நெய்களில் போதுமான சத்துக்கள் அடங்கியுள்ளது.

5. கால்சியம் மிகவும் முக்கியம்: உங்கள் குழந்தையின் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு கால்சியம் மிகவும் முக்கியம். ஆகவே தினசரி உணவில் போதுமான அளவிற்கு கால்சியம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பால், சீஸ், தயிர் போன்றவை இந்த சத்துக்களை ஈடுகட்டும். உங்கள் குழந்தைக்கு பால் அருந்துவது அலர்ஜியாக இருந்தால், கீரைகள், காய்கறிகள், பாதாம், பீன்ஸ், டோஃபு ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். முக்கியமாக, விட்டமின் டி கிடைக்க வேண்டுமானால் உங்கள் குழந்தையின் உடலில் சூரிய ஒளி பட வேண்டும். ஆகவே கொஞ்ச நேரம் வெளியே விளையாட அனுமதியுங்கள்.

6. வளர்ச்சிக்கும் சக்திக்கும் இரும்புச்சத்தை உணவில் சேருங்கள்: சிவப்பு ரத்த செல்களின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, செரோடோன் ஹார்மோனை (நம் மனநிலையை உற்சாகப்படுத்துவது) மேம்படுத்துவதற்கும் இரும்புச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. ADHD-யின் அறிகுறிகளை குறைக்கவும் இரும்புச்சத்து உதவுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகவே, இரும்புச்சத்து அதிகமாக உள்ள இறைச்சிகள், கோழிக்கறி, மீன், பீன்ஸ், பருப்புகள், கீரைகளை உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள். இந்த உணவுகளோடு விட்டமின் சி அதிகமாக உள்ள நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை, தக்காளி, மிளகுத்தூளையும் சேர்த்துக்கொள்ளும் போது இரும்புச்சத்தின் பலன் முழுமையாக கிடைக்கும்.

7. தேவையான விட்டமின் மற்றும் மினரல்ஸை வழங்குங்கள்: விட்டமின் A, B, C, D, E, மற்றும் K ஆகியவை நோய் எதிர்ப்பு சக்திக்கும் கண் நலத்திற்கும் மிகவும் முக்கியம். இவையெல்லாம் உங்கள் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டுமென்றால் கேரட், சிட்ரஸ் பழங்கள், கீரைகள், பால் பொருட்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதை வானவில் டயட் என கூறுவார்கள். எல்லா விட்டமின்களும் உங்கள் குழந்தைகளுக்கு கிடைக்க இந்த டயட்டைப் பின்பற்றுங்கள்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

May 29, 2023

12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போஸ்ட் மாஸ்டர் பணியிடங்கள்: உடனே அப்ளை பண்ணுங்க!

May 29, 2023 0

 நாடு முழுவதும் வங்கிகள் இல்லாத பகுதிகளில் உள்ள கிளை அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர் மற்றும் துணை போஸ்ட் மாஸ்டர் பணியிடங்களுக்கான ( Gramin Dak Sevaks (GDS) (Branch Postmaster(BPM)/Assistant Branch Postmaster ) அறிவிப்பை இந்திய தபால் துறை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம், 12,828 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எவ்வித எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் இல்லாமல், 10ம் வகுப்புத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வானவர்கள் பட்டியல் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக இதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Ads by 

வயது வரம்பு: குறைந்தபட்ச வயது - 18 (விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்க வேண்டும்)

அதிகபட்ச வயது - 40 (விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்க வேண்டும்)

பட்டியல் சாதிகள் (5 ஆண்டுகள்), பட்டியல் பழங்குடியினர் (5 ஆண்டுகள்) , இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (3 ஆண்டுகள்), மாற்றுத் திறனாளிகள்(10 ஆண்டுகள்) நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும்.

கல்வி தகுதி: குறைந்தபட்ச பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கட்டாயமாக விண்ணப்பதாரர்கள் உள்ளூர் மொழியறிவு கொண்டிருக்க வேண்டும். 10ம் வகுப்பில் விண்ணப்பித்தில் குறிப்பிட இருக்கும் உள்ளூர் மொழியை 10ம் வகுப்பில் ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். அதேபோன்று, மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும்.

காலியிடங்கள்:

நாடு முழுவதும் : 12,828

இதில், தமிழ் நாட்டில் உள்ள கிளை அஞ்சல் அலுவலகங்களில் 18 இடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கோயம்பத்தூர், தருமபுரி, திண்டுக்கல், சேலம் கிழக்கு, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மண்டலங்களில் தலா 2 இடங்களும், தாம்பரம் மண்டலத்தில் 3 இடங்களும், விருத்தாச்சலம் மண்டலத்தில் 4 இடங்களும் நிரப்பப்பட உள்ளது.

விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தைத் தாண்டி, நாட்டின் எந்தவொரு அஞ்சல் வட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இருப்பினும், உள்ளூர் மொழியறிவு கொண்டிருக்க வேண்டும்.

ஊதியம் மற்றும் படிகள்: 

தற்போது, புதிதாக முறைப்படுத்தப்பட்ட  காலம் தொடரும் படிகள் அமைப்பு மற்றும் ஊதிய அளவுகள் கடைபிடிக்கப்படும் (Time Related Continuity allowance (TRCA) structure and slabs).

வரிசைபதவிஊதிய விவரம்
1கிளை போஸ்ட் மாஸ்டர்Rs. 12000/-
2உதவிக் கிளை போஸ்ட் மாஸ்டர் / அஞ்சல் பணியாளர்Rs. 10000/-

தேர்வு செய்யப்படும் முறை: நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியில் (அதாவது 10ம் வகுப்பு) பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட 30 நாட்களுக்குள் வாழ்வாதாரத்துக்கு வேறு வகைகளிலும் வருமானம் ஈட்டி வருவதற்கான விண்ணப்பத்தை Rule 3-A (iii) of GDS (Conduct and Engagement) Rules, 2020-ன் படி சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பதாரர்கள் https://indiapostgdsonline.gov.in என்ற முகவரியின் கீழ் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே, ஜனவரி மாதத்தில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் நேரடியாக இரண்டாம் பாகத்தில் இருந்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பதாரர்கள் தாங்கள் பதிவு செய்யும் விவரங்களுக்கு ஆதாரமாக உரிய ஆவணங்களையும் (சாதி சான்றிதழ், கல்வித் தகுதி, மின்னஞ்சல், புகைப்படம், கையெழுத்து, தொலைபேசி எண்) பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி 11/06/2023 ஆகும்.

விண்ணப்பக் கட்டணம்: பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகள்/ திருநர்கள் ஆகிய பிரிவைச் சார்ந்த விண்ணப்பதார்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஏனைய வகுப்பினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.

அஞ்சல் வங்கிக் கிளையின் மூலமாகவோ அல்லது ரூபே/விசா/ மாஸ்டர் வங்கிக் கணக்கு அட்டைகள், கடன் அட்டைகள், இணையவழி வங்கிப் பரிமாற்றம், யுபிஐ, ஆகியவை மூலமாகச் செலுத்தலாம்.

.பின்னணி: அஞ்சல்துறையின் துறை சாராத சேவை அமைப்பு 150 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. கிராமப்பகுதிகளில் முறையான முழு நேர ஊழியர்களுக்கு அவசியம் இல்லாத நிலையில் அடிப்படை, சிக்கன அஞ்சல் சேவை வழங்க இந்த அமைப்பு தேவைப்பட்டது. 1,29,346 துறை சாராத கிளை அஞ்சல் அலுவலகங்கள் இந்த கிராம அஞ்சல் பணியாளர்கள், கிளை போஸ்ட் மாஸ்டர்கள் ஆகியோரால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் கிளை போஸ்ட் மாஸ்டர்கள் அல்லாத கிராம அஞ்சல் பணியாளர்கள் துணை மற்றும் தலைமை அஞ்சல் அலுவலகங்களில் பணியாற்றி வருகிறார்கள் (Branch, Sub and Head Post offices). கிராம அஞ்சல் பணியாளர்களைப் பகுதி நேர ஊழியர்களாக அதாவது நாள் ஒன்றுக்கு 3 முதல் 5 மணி நேர ஊழியர்களாக பயன்படுத்துதல் இந்த அமைப்பின் முக்கிய அம்சமாகும். இவர்கள் வாழ்வாதாரத்துக்கு வேறு வகைகளிலும் தொழில்கள் மூலமாகவும் வருமானம் ஈட்ட வேண்டும். இந்தப் பணியாளர்கள் தங்களது 65-ஆவது வயது வரை பணியில் இருப்பார்கள்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

May 27, 2023

இந்திய விமான படையில் 250+ காலிப்பணியிடங்கள் – சம்பளம்:ரூ.2,50,000/- || விண்ணப்பங்கள் வரவேற்பு!

May 27, 2023 0

 

இந்திய விமான படையில் 250+ காலிப்பணியிடங்கள் – சம்பளம்:ரூ.2,50,000/- || விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய விமானப்படை ஆனது இந்த ஆண்டுக்கான Air Force Common Admission Test (AFCAT) க்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Ground Duty (Non-Technical and Technical) and Gazetted Officers in Flying Branches பணிக்கான 258 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு குறித்த முழு விவரங்களும் கீழ் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

IAF காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Ground Duty (Non-Technical and Technical) and Flying Branches பணிக்கென மொத்தம் 276 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

AFCAT கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduation / Post-Graduation என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

IAF வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 20 என்றும் அதிகபட்ச வயதானது 26 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வர்மப்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

AFCAT ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.56,100/- முதல் ரூ.2,50,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IAF விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250/- தேர்வு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

AFCAT தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்வு செய்யயப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 01.06.2023ம் தேதி முதல் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.06.2022ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Apply Online


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

TVS நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க.. விவரங்கள் இதோ!

May 27, 2023 0

 

TVS நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க.. விவரங்கள் இதோ!

TVS நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Deputy General Manager பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ள நபர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TVS காலிப்பணியிடங்கள்:

TVS நிறுவனத்தில் தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி Deputy General Manager பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TVS கல்வி தகுதி:

பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TVS அனுபவ விவரம் :

இப்பணிக்கு பணிபுரிய ஆர்வம் உள்ள நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 08 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 12 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

TVS ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாதம் ஊதியம் வழங்கப்படும்.

TVS தேர்வு செய்யப்படும் முறை :

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TVS விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification & Apply Online Link

 Click here to join WhatsApp group for Daily employment news

EdCIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.45,000/- ஊதியம்!

May 27, 2023 0

 

EdCIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.45,000/- ஊதியம்!

கல்வி ஆலோசகர்கள் இந்தியா லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Programmer பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

EdCIL காலிப்பணியிடங்கள்:

கல்வி ஆலோசகர்கள் இந்தியா லிமிடெட் ஆனது தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி Programmer பணிக்கென ஒரு காலிப் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

EdCIL வயது வரம்பு:

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 35 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

EdCIL கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Computer Science பாடப்பிரிவில் Masters Degree / Bachelor’s degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

EdCIL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.45,000/- ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

EdCIL தேர்வு செய்யப்படும் முறை :

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

EdCIL விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட : nmmssrectt@edcil.co.in மின்னஞ்சல் மூலம் இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.81,100/- ஊதியம்!

May 27, 2023 0

 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.81,100/- ஊதியம்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant, Cook,Light Vehicle Driver ‘A’ பணிகளுக்கென 09 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ISRO காலிப்பணியிடங்கள்:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆனது தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி Assistant, Cook,Light Vehicle Driver ‘A’ பணிகளுக்கென 09 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ISRO வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 18 முதல் 35 வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ISRO கல்வி தகுதி:

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேலும் பல்கலைக்கழகத்தில் Graduation பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ISRO ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.19,900/- முதல் ரூ.81,100/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ISRO தேர்வு செய்யப்படும் முறை :

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் Written Test / Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ISRO விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

மதியம் எவ்வளவு நேரம் தூங்கலாம்..? நீண்ட நேரம் தூங்கினால் வரும் பாதிப்புகளை தெரிஞ்சுக்கோங்க..!

May 27, 2023 0

 

‘உண்ட மயக்கம் தொண்டனுக்கு உண்டு’ என்ற பழமொழியை நம் முன்னோர்கள் சொல்ல கேட்டிருப்போம். ஆம் காலை, மதிய நேரத்தில் சாப்பிட்டவுடன் சிறிய மயக்கத்துடன் கூடிய தூக்கம் நமக்கு வரும். அப்போது ஒரு 5 நிமிடமாவது தூங்காவிட்டால் நாள் முழுவதும் ஏதோ எரிச்சலாக உணர்வோம். இதைத் தான் ஆய்வும் கூறுகிறது. மதிய நேரத்தில் நாம் சிறிது நேரம் தூங்குவது நம்முடைய மனதை நிம்மதியாக்குவதோடு, இளைய தலைமுறையினருக்கு ஞாபக சக்தியையும் அதிகரிக்க உதவும் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.

மதிய நேர தூக்கம் குறித்த ஆய்வு சொல்வது என்ன….? குறிப்பாக ஸ்பெயின் மற்றும் அனைத்து மெடிட்டரேனியன் நாடுகளிலும் மதிய தூக்கம் என்பது ஒரு பராம்பரியமாக உள்ளது என்கிறது குவாடலஜாரா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு முடிவுகள். அலுவலகம் மற்றும் வீடுகளில் இருந்தாலும் மதிய உணவை சாப்பிட்ட பிறகு ஒரு குட்டி தூக்கம் போட வேண்டும் என்றும், இது தனிநபர்களின் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்கு உதவுகிறது என்கிறது ஆய்வுகள். அதற்காக அதிக நேரம் தூங்கினாலும், உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் கூறுகிறது. மேலும் மதிய வேளைகளில் குட்டி தூக்கம் போடுவது, இளைய தலைமுறையினருக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கிறது எனவும் கூறுகிறது. இவ்வாறு தூங்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பவர்கள், மதிய நேரம் குட்டித் தூக்கத்தை பின்பற்றாதவர்களை விட அதிக வார்த்தைகளை ஞாபத்தில் வைத்திருப்பார்கள் என்று ஆய்வு முடிவுகளில் தெளிவாகி உள்ளது.

தூக்கத்தின் வகைகள்: பொதுவாக பவர் நேப், கேட் தூக்கம் (பூனை தூக்கம்) சியெஸ்டா என தூக்கத்தின் வகைகளை பிரித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். குறிப்பாக 'பவர் நேப்' என்பது தூக்கம் அல்ல. மீண்டும் எழுவதற்கான புத்துணர்வைப் பெறுவதற்கான ஒரு பயிற்சியாகவே கருதப்படுகிறது. பெரிய நிறுவனங்கள் கூட தங்களுடைய பணியாளர்களுக்கு பவர்-நேப் முறையை செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இவ்வாறு பணியாளர்கள் வேலைக்கு நடுவில் குட்டி தூக்கம் போடுவது, நமது மூளையை கூர்மையாகவும், வழிப்புணர்வுடனும் வைத்திருக்க முடியும் என நம்புகிறது. இதே போன்று காட் தூக்கம் அதாவது பூனை தூக்கம் என்பது நாம் சிறிது நேரம் ஓய்வெடுப்பது போன்றது தான் எப்படி பூனை கண் மூடியிருந்தாலும் விழிப்புடன் உள்ளதோ? அதைப் போன்று தான் ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்லாமல் சிறிது மனதை புத்துணர்ச்சியாக்க கூடிய விஷயங்களில் ஒன்றாக இது உள்ளது. இதே போன்று சியெஸ்டாவும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்

இவ்வாறு தூக்கம் என்பது ஒவ்வொருவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்தாக இருந்தாலும் 30 நிமிடங்களுக்கு மேல் தூங்குவது தனிமனிதர்களுக்கு சிக்கலான விஷயமாக அமைகிறது. குறிப்பாக நீரழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கப்படுகிறது. இதோடு மட்டுமின்றி மதிய நேரத்தில் குட்டி தூக்கத்திற்கு பிறகு காபி குடிப்பதும் நல்லது என்கிறது ஆய்வுகள். மதிய உணவிற்கு பிறகு நீங்கள் காபி குடிப்பது உங்களின் செரிமான சக்தியை அதிகரிக்கிறது. வளர்சிதை மாற்றத்தின் சரியான செயல்பாட்டிற்கு பங்களிக்கும் எனவும் கூறப்படுகிறது.




Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip