8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? தமிழக அரசில் உங்களுக்கான சூப்பர் வேலை இதோ!
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுகாதார பணியாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுகாதார பணியாளர் அலுவலகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் அலுவலக உதவியாளர் பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மாறும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 08 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.18 வயது பூர்த்தியான மற்றும் 37 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.15,700/- முதல் ரூ.58,100/- வரை ஊதியமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 31.07.2023ம் தேதிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவ அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Download Notification PDF
Click here for latest employment news