November 30, 2023
Day 18 | பொதுத்தமிழ் | எழுத்து இலக்கணம் | பகுதி 3
BE படித்தவர்களுக்கு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலை.. மாதம் ரூ.1,60,000 வரை சம்பளம்.!!
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் Graduate Executive Trainee பதவிக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது.
நிறுவனத்தின் பெயர்: Neyveli Lignite Corporation India Limited
காலி பணியிடங்கள்: 295
பதவி பெயர்: Graduate Executive Trainee
கல்வித் தகுதி: பொறியியல் பட்டப்படிப்பு
சம்பளம்: ரூ.50,000 முதல் ரூ.1,60,000
வேலைக்கு விண்ணப்பிக்க: https://www.nlcindia.in/new_website/index.htm
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.12.2023
🔻🔻🔻
Click here for latest employment news
KVB கரூர் வைஸ்யா வங்கியில் அசத்தல் வேலை!! இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!!
கல்வி தகுதி : டிகிரி..! KVB கரூர் வைஸ்யா வங்கியில் அசத்தல் வேலை!! இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!!
கரூர் வைஸ்யா வங்கி(KVB) காலியாக உள்ள Relationship Manager - NRP (CASA) Account பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிறுவனம்: கரூர் வைஸ்யா வங்கி(KVB)
பணி: Relationship Manager - NRP (CASA) Account
காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master's degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 35 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்: Relationship Manager - NRP (CASA) Account பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு கரூர் வைஸ்யா வங்கி விதிகளின்படி ஊதியம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
**Written Test
**Interview
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி
Relationship Manager - NRP (CASA) Account பணிக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பிறகு அவற்றை பூர்த்தியிட்டு முறையான சான்றிதழ்களுடன் ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.
விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 24-12-2023
🔻🔻🔻
Click here for latest employment news
20,000 பணியிடங்கள்: கோவையில் டிச.2-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
கோவை: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, டிசம்பர் 2-ம் தேதி கோவையில் நடைபெற உள்ள தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 250-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. 20 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் சார்பில் கோவை நிர்மலா கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 2-ம் தேதி நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சி தொடர்பான விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் மோ.ஷர்மிளா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.நேற்று மதுக்கரை, குனியமுத்தூர், போத்தனூர், வெள்ளலூர், சிங்காநல்லூர் ஆகிய இடங்களில் வாகன பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இன்று சிட்ரா, காளப்பட்டி, சரவணம்பட்டி, துடியலூர் ஆகிய இடங்களிலும், நாளை செல்வபுரம், பேரூர், தடாகம்ரோடு, கோவைப் புதூர், தொண்டா முத்தூர், சுண்டக்கா முத்தூர் ஆகிய இடங்களிலும் இளைஞர்கள், பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணார்வு ஏற்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்.
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், 250-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்துக்காக 20 ஆயிரத் திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப் படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, தொழில் கல்வி பயின்றவர்கள், செவிலியர்கள், பொறியியல் மாணவர்கள் என அனைத்து பிரிவினரும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.முகாமில் வேலை வாய்ப்பு பெறுபவர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது. மேலும் விவரங்களுக்கு 94990 55937 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
🔻🔻🔻
Click here for latest employment news
நேரத்தை மிச்சப்படுத்தும் ரெடி டு குக் உணவுகள்... ஆபத்தை அறிவீர்களா?
வீட்டில் சமைத்துச் சாப்பிட்ட மாதிரியும் இருக்க வேண்டும்... அதேசமயம் அதிக வேலையும் வைக்கக்கூடாது என எதிர்பார்க்கும் பலரின் சாய்ஸ் 'ரெடி டு குக்' உணவுகள்.
சமைக்கப்படாத ரெடிமேட் சப்பாத்தி, பரோட்டாக்கள், இட்லி, தோசைக்கான பாக்கெட் மாவுப் பொருள்கள், பணியாரம், வடை, பஜ்ஜி மாவுகள் போன்றவற்றின் விற்பனை சூப்பர் மார்கெட்டுகளில் அமோகமாக இருக்கிறது. ஆனால், பதப்படுத்தப்பட்ட இத்தகைய உணவுப்பொருள்களை வாங்கி சமைப்பதால் ஏற்படும் கேடுகள் பல என்கின்றனர், ஊட்டச்சத்து நிபுணர்கள்.
பாக்கெட் உணவுகள் மற்றும் ரெடி டு குக் வகை உணவுப்பொருள்களால் ஏற்படும் உடல்நலக் கேடுகளைப் பட்டியலிடுகிறார் கோவையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் கற்பகம்.பிளாஸ்டிக் பேக்கேஜ் அபாயம்!
* ''பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மாவுப் பொருள்கள், ரெடி டு குக் சப்பாத்தி, பரோட்டாக்கள் எல்லாம் பல நாள்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அவற்றைப் பதப்படுத்தியிருப்பார்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தொடர்ச்சியாகச் சாப்பிடும்போது, உடல் இயக்கம் பாதிக்கப்படும். உதாரணத்துக்கு, தாகம் குறைவது, சிறுநீர் கழிப்பதில் சிக்கல், மலச்சிக்கல் போன்றவை ஏற்படும்.
அதிக அளவு உப்பும் ஆபத்தே!
* பாக்கெட் உணவுகள் அனைத்திலுமே, சோடியம் அதிகமாகச் சேர்த்திருப்பார்கள். உணவு கெட்டுப்போய்விடக்கூடாது என்பதற்காக இப்படிச் செய்வார்கள். ஒரு நாளைக்கு ஒருவர் 2.300 மி.கிராம் அளவுக்குத்தான் உப்பு சேர்க்க வேண்டும் என்பது அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் பரிந்துரை. நாள் ஒன்றுக்கு ஒரு டீஸ்பூன் உப்பு மட்டும் பயன்படுத்தவும் என்பதே, ஊட்டச்சத்து நிபுணர்களின் அறிவுரையாகவும் இருக்கும். ஆனால் பதப்படுத்தப்பட்ட ரெடி டு குக் சப்பாத்தி ஒன்றில் மட்டுமே, நாங்கள் குறிப்பிடும் அளவைவிட அதிக உப்பு சேர்க்கப்பட்டிருக்கும். உணவில் உப்பு அதிகமாகச் சேர்ப்பதால், ரத்த அழுத்தப் பிரச்னை ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
எண்ணெய் அபாயம்!
* ரெடி டு குக் உணவுப் பொருள்கள் எல்லாம் எந்த எண்ணெயில், எந்தத் தண்ணீரில் தயாரிக்கப்பட்டிருக்கும் என்பதை நாம் அறிய மாட்டோம். ஒருவேளை சுத்தமான தண்ணீர் பயன்படுத்தப்படவில்லை எனில், நீர் வழி நோய் ஏற்படலாம்.
சத்தில்லா உணவுகள்!
* ரெடி டு குக் உணவுகள் எதிலும், நார்ச்சத்து இருக்காது. அதே நேரம், கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கும். மற்ற ஊட்டச்சத்துகள் மிகக்குறைவாக இருக்கும். இதனால் அசிடிட்டி, நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறுகள், மலச்சிக்கல் போன்றவை அடிக்கடி ஏற்படும். தொடர்ச்சியாக ஏற்படும் இப்படியான பாதிப்புகள் சிறுநீரகப் பிரச்னைகள், குடல் சார்ந்த பிரச்னைகள் போன்றவற்றுக்கு வழி வகுக்கும்.
சோடா உப்பு எச்சரிக்கை!
* இன்ஸ்டன்ட் சப்பாத்தி, பரோட்டாக்கள் சமைக்கும்போது உப்பி வர வேண்டும் என்பதற்காக, தயாரிக்கும்போது அதில் சோடா உப்பு, பேக்கிங் பவுடர், மோனோசோடியம் குளுட்டமேட் போன்றவற்றைச் சேர்ப்பார்கள். இவை யாவும், சிறுநீரகப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
மைதா கலப்படம்
* பரோட்டாக்களைப் பொறுத்தவரை, வீட்டில் செய்து சாப்பிட்டாலே தீமைதான். காரணம், மைதா. மைதாவின் அளவுக்கதிகமான கலோரி, உடலை எளிதில் சோர்வடையச் செய்துவிடும். செரிமானச் சிக்கல்களையும் ஏற்படுத்தும். பாக்கெட் உணவுகளில் அதன் தீமை இன்னும் அதிகரிக்கும். சில பாக்கெட் கோதுமை உணவுப்பொருள்களிலும்கூட, மைதா கலப்படம் இருக்கலாம் என்பதால் கவனம் தேவை.
தேதிகளில் அபாயம்...
* பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதால், இதயப் பிரச்னைகள், சர்க்கரைநோய் போன்ற வாழ்வியல் சிக்கல்கள் எல்லாம் இள வயதிலேயே ஏற்படலாம்.
`எல்லாம் சரி. ஆனால், நாங்கள் விருப்பப்பட்டு இந்த உணவை நாடுவதில்லை. எங்களுக்கு நேரமில்லை. அதனால்தான் இதை வாங்கி உபயோகிக்கிறோம்' என்பார்கள் சிலர். இப்படியானவர்களுக்கான சில மாற்று யோசனைகள்,வாரக் கடைசியிலேயே ரெடி பண்ணிக்கோங்க!
* சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில், அடுத்த வார மெனுவுக்கான அடிப்படைத் தேவைகளைத் தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, ஒரு வாரத்துக்கான காய்கறிகளை வாங்கி, அவற்றில் தேவையானவற்றை வெட்டி ஃப்ரிட்ஜில் சேமித்து வைத்துக்கொள்வது, இட்லி, தோசை, அடை, ராகி மாவு போன்றவைக்கு வீட்டிலேயே மாவு தயாரித்து ஃபிரிட்ஜில் சேமித்து வைத்துக்கொள்வது, சப்பாத்திக்குத் தேவையான கோதுமை மாவைத் தயாரித்து ஃபிரிட்ஜில் வைத்துக்கொள்வது...
சிறுதானியங்களுக்கு வெல்கம் சொல்லுங்க!
* ரெடி டு குக் உணவுகளுக்கு பதில், ரெடிமேட் சிறுதானியங்கள், சேமியா பாக்கெட்டுகள், ராகி மாவு, கம்பு மாவு போன்றவற்றை வாங்கி உபயோகப்படுத்தலாம். இவற்றையுமேகூட வீட்டில் வாங்கி அரைத்து உபயோகப்படுத்துவது நல்லது. இருப்பினும் நேரமில்லை என்பவர்களுக்கு, வேறு உணவுகள் இல்லை என வரும்போது, இவை பரிந்துரைக்கத்தக்கவை. குறைந்தபட்ச நன்மைகளாவது கிடைக்கும், தீமைகள் தவிர்க்கப்படும்.
வீட்டில் செய்து சாப்பிடுங்கள்!
* கோதுமை பரோட்டா உடலுக்கு நல்லது என நினைத்து, அதைத் தேடிப்பிடித்து வாங்கி சாப்பிடுவார்கள் சிலர். ரெடி டு குக் உணவுப் பொருள்கள், எந்த வகையிலும் பரிந்துரைக்கத்தக்கவை இல்லை. எனவே, கோதுமை சாப்பிட நினைப்பவர்களுக்கு ரெடிமேடு சப்பாத்தியோ, ரெடிமேடு கோதுமை பரோட்டாவோ அவர்கள் நினைப்பதுபோல நன்மையைச் செய்யாது. தரமான கோதுமை மாவை வாங்கி வீட்டிலேயே சப்பாத்தி, பரோட்டா செய்து சாப்பிடுவதே ஆரோக்கியத்துக்கான வழி.''
November 29, 2023
Day 17 | Monetary Policy | Indian Economy - 4 |
Day 17 | PM, COM, Attorney General | Indian Polity 7
Day 17 | இலக்கியம் 6 அகநானூறு, நற்றிணை, ஐங்குறுநூறு, கலித்தொகை
99 உதவியாளர் காலியிடங்கள்: திருச்சி மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களில் வேலை
திருச்சி மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சங்கங்களில் காலியாக உள்ள 99 இளநிலை உதவியாளர்/ உதவியாளர் பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் டிசம்பர் 1ம் தேதிக்குள் (01.12.2023 ) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காலியிடங்கள்: 99
கல்வித்தகுதி: இதற்கான கல்வித் தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree 10+2+3 முறையில்) மற்றும் கூட்டுறவு பயிற்சி ஆகும்.
கூட்டுறவு பயிற்சி: வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு நிறுவனம், புனே வழங்கும் முதுநிலை வாணிப மேலாண்மை (கூட்டுறவு) பட்டம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் கூட்டுறவில் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும், கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்து தேர்வு முடிவுகள் நிலுவையில் இருப்பவர்களும், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் 2023-24ஆம் ஆண்டு நேரடி பயிற்சி/ அஞ்சல்வழி / பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு (Diploma in Cooperative Management) சேர்ந்துள்ளவர்களும் இப்பணிக்கு உரிய சான்று/கட்டணம் செலுத்தியதற்கான இரசீதினை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆள்சேர்ப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.
எழுத்து தேர்வு: இதற்கான எழுத்துத் தேர்வு 24.12.2023 அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்படவுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்: ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250/-ஆகும். இதர பிரிவை சார்ந்தவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500/- ஆகும்.
வயது வரம்பு: முற்பட்ட வகுப்பினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். ஏனைய அனைத்து பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
எழுத்துத் தேர்வு பட்டப்படிப்பு நிலையிலான தரத்துடனும், கூட்டுறவு மேலாண்மை, கூட்டுறவு நிதி மற்றும் வங்கியியல், கூட்டுறவு கணக்கியல், கணினி பயன்பாடு, பொது அறிவு, தமிழ் போன்ற பாடங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும். எழுத்துத் தேர்வு கொள்குறி வகையில் (Objective Type) 200 வினாக்களுடன், 170 மதிப்பெண்களுக்கானதாகவும் தேர்வுக்கான கால அளவு 180 நிமிடங்கள் கொண்டதாகவும் இருக்கும். வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் தமிழில் அச்சடிக்கப்பட்டிருக்கும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வுக்கான மதிப்பெண் மற்றும் நேர்முக தேர்வுக்கான மதிப்பெண் முறையே 85:15 என்ற விகிதத்தில் இருக்கும்.
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்விலும் நேர்முகத் தேர்விலும் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் அரசாணைப்படியான இட ஒதுக்கீடு, இனச் சுழற்சி முறை, அவர்கள் தெரிவித்த முன்னுரிமை விருப்பச் சங்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு, உரிய சங்கத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பம் செய்வது எப்படி? இத்தேர்வுக்கு தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் www.drbtry.in என்ற இணையதளம் வழியாக (through online only) மட்டுமே 01.12.2023 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.
TN MRB Pharmacist வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023 – சம்பளம்: ரூ.1,30,400/- || விண்ணப்ப பதிவு ஆரம்பம்!
TN MRB Pharmacist வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023 – சம்பளம்: ரூ.1,30,400/- || விண்ணப்ப பதிவு ஆரம்பம்!
Pharmacist பணிக்கு என தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் (TN MRB) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் இன்று (28.11.2023) முதல் இணையவழி மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
TN MRB பணியிடங்கள்:
Pharmacist பணிக்கு என தமிழ்நாடு மருத்துவ துணை சேவை பிரிவில் ஒதுக்கப்பட்டுள்ள 28 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.
- Pharmacist (Ayurveda) – 01 பணியிடம்
- Pharmacist (Siddha) – 26 பணியிடங்கள்
- Pharmacist (Unani) – 01 பணியிடம்
TN MRB Pharmacist 2023 கல்வி:
Pharmacist பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
TN MRB Pharmacist 2023 வயது:
01.07.2023 அன்றைய தேதியின் படி, விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது குறைந்தது 18 வயது எனவும், அதிகபட்சம் 32 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.
TN MRB Pharmacist 2023 ஊதியம்:
இந்த TN MRB சார்ந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்கள் Pay Matrix Level – 11 படி, ரூ.35,400/- முதல் ரூ.1,30,400/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
TN MRB தேர்வு செய்யும் விதம்:
Pharmacist பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Merit List என்னும் தேர்வு முறையின் படி தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
TN MRB விண்ணப்ப கட்டணம்:
- SC / SCA / ST / DAP(PH) / MBC / DNC DAP(PH) – ரூ.300/-
- மற்ற நபர்கள் – ரூ.600/-
TN MRB விண்ணப்பிக்கும் விதம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 28.11.2023 அன்று முதல் 18.12.2023 அன்று வரை https://www.mrb.tn.gov.in/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Notification Link 1
Download Notification Link 2
Download Notification Link 3
Online Application Link
🔻🔻🔻
ONGC நிறுவனத்தில் ரூ.1,80,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
ONGC நிறுவனத்தில் ரூ.1,80,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
ONGC ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது Contract Medical Officer – Field Duty (FDMO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ONGC காலிப்பணியிடங்கள்:
Contract Medical Officer – Field Duty (FDMO) – 2 பணியிடங்கள்
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Bachelor of Medicine and Bachelor of Surgery (MBBS) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
07.11.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
ONGC பணிக்கான தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சம்பள விவரம்:
தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.1,05,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 30.06.2024 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2023 Pdf
🔻🔻🔻