Agri Info

Adding Green to your Life

July 30, 2024

உங்கள் வயதிற்கு ஏற்ப நீங்கள் தினசரி எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்..? இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...

July 30, 2024 0

 நம்முடைய நாளை உற்சாமாக துவக்கவும், இலக்குகளை அடைய கடினமாக உழைக்கவும், உடலை எல்லா வகையிலும் ஆரோக்கியமாக வைத்து கொள்ளவும் தினசரி இரவு போதுமான நேரம் தூங்குவது எவ்வளவு முக்கியம் என்பது நம் அனைவருக்குமே தெரியும்.

ஆனாலும் நம்மில் பலரும் இரவில் போதுமான அளவு தூங்க முக்கியத்துவம் கொடுப்பதில்லை, இதனால் பல்வேறு உடல்நல கோளாறுகளை சந்திக்கிறோம். இந்த நிலையில் 18 முதல் 60 வயதுடையவர்கள் ஒவ்வொரு நாளும் இரவில் குறைந்தது 7 மணிநேர தூங்குவதை இலக்காக கொள்ள வேண்டும் என ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. ஒருவருடைய வயதுக்கு ஏற்ப அவருக்கு எவ்வளவு தூக்கம் தேவை என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்த தகவல்களை கீழே பார்க்கலாம்…

News18

ஒருவர் வயதுக்கு ஏற்ப எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்.!!

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) கூற்றின்படி, வயதுக்கு ஏற்ப தினசரி பரிந்துரைக்கப்பட்டிருக்கும் தூக்க நேரம் கணிசமாக வேறுபடுகிறது. CDC பரிந்துரைக்கும் தூக்கம் நேரம் சார்ந்த வழிகாட்டுதல்கள் இங்கே…

  • புதிதாக பிறந்த குழந்தைகள் (0-3 மாதங்கள் வரை): தினசரி 14 முதல் 17 மணி நேரம் தூக்கம் தேவை

  • பிறந்நது 4-12 மாதங்கள் வரையிலான கைக்குழந்தைகள்: தினசரி 12 முதல் 16 மணி நேரம் தூக்கம் தேவை

  • 1 வயது முதல் 2 வயது வரையிலான சிறு குழந்தைகள்: தினசரி 11 முதல் 14 மணி நேரம் தூக்கம் தேவை

  • 3 வயது முதல் 5 வயது வரையிலான குழந்தைகள்: தினசரி 10 முதல் 13 மணி நேரம் தூக்கம் தேவை

  • 6 வயது முதல் 12 வயது வரையிலான பள்ளி செல்லும் குழந்தைகள்: தினசரி 9 முதல் 12 மணி நேரம் தூக்கம் தேவை

  • 13 முதல் 17 வயது வரையிலான டீனேஜர்கள்: தினசரி 8 முதல் 10 மணி நேரம் தூக்கம் தேவை

  • 18 முதல் 60 வயது வரையிலான பெரியவர்கள்: தினசரி 7 மணிநேரம் அல்லது அதற்கு மேல்

  • 61 முதல் 64 வயது வரையிலான வயது முதிர்ந்தவர்கள்: தினசரி 7 முதல் 9 மணி நேரம் தூக்கம் தேவை

  • 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெரியவர்கள்: தினசரி 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் தேவை

    எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் வயது முக்கியப் பங்கு வகிக்கும் அதே நேரம், உங்கள் உடல் சரியாகச் செயல்படுவதற்கு நீங்கள் ஓய்வெடுக்க வேண்டிய மணிநேரங்களின் எண்ணிக்கையை சில காரணிகள் பாதிக்கலாம். அவை கீழே…

    • அடிக்கடி ஏற்படும் தொந்தரவுகள் அல்லது குறுக்கீடுகள் தூக்கத்தின் தரத்தை பாதிக்கலாம்

    • உங்களுக்கு ஏற்கனவே தூக்கமின்மை பிரச்னை இருந்தால், உங்கள் உடல் அதிக தூக்கத்தை கேட்கும்

    • கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் உடல் அசௌகரியம் தூக்கத்தை மோசமாக பாதிக்கும்.

    • வயதானவர்களின் தூக்க முறை மாறுகிறது. இளம் வயதினரைப் போலவே அதே அளவு தூக்கம் முதியவர்களுக்கு தேவைப்பட்டாலும், வயதானவர்கள் மிக குறைவாக தூங்குகிறார்கள், அதே போல தூங்குவதற்கும் அதிக நேரம் எடுத்து கொள்கிறார்கள். சிரமப்பட்டு தூங்கினாலும் இரவில் பல முறை எழுந்திருக்கிறார்கள்.

    சிறந்த தூக்கத்தினால் நமக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்…

    • போதுமான தூக்கம் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்று மற்றும் நோய்களை எதிர்த்து போராட நமக்கு உதவுகிறது.

    • சரியாக தூங்காமல் இருப்பது பசியை கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை பாதிக்கிறது, இது அதீத எடை அதிகரிப்பு அல்லது மோசமான எடை இழப்புக்கு வழிவகுக்கிறது. அதே நேரம் போதுமான தூக்கம் ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவும்.

    • தூக்கம் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த, மன அழுத்த ஹார்மோன்களின் அளவை குறைக்கவும் உதவி மனநலனை மேம்படுத்துகிறது.

    • ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் லெவல் மற்றும் இதய செயல்பாடு உள்ளிட்டவற்றை சிறப்பாக பராமரிப்பதில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. தினசரி போதுமான அளவு தூங்குவது டைப் 2 நீரிழிவு, இதய நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் போன்ற நாள்பட்ட நிலைகள் ஏற்படுவதற்கான ஆபத்தை குறைக்கிறது.

      • உங்கள் உடலுக்கு போதுமான தூக்கம் கிடைப்பதை உறுதி செய்வது சாலையில் நீங்கள் வாகனத்தை இயக்கி செல்லும் போது விபத்து ஏற்படும் அபாயத்தை குறைக்கும்.

      • கவனிக்கும் திறன், நினைவாற்றல் மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன் உள்ளிட்ட அறிவாற்றல் செயல்பாடுகளை மேம்படுத்த போதுமான தூக்கம் உதவுகிறது.

சுகர் முதல் கல்லீரல் வரை.. கோவக்காயில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா..?

July 30, 2024 0

 கோவக்காய் என அழைக்கப்படும் இது சுரைக்காய் குடும்பத்தைச் சேர்ந்த குறைவாக அறியப்பட்ட காய்கறியாகும். இது இந்தியா மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள பல்வேறு உணவு வகைகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்த இந்த சிறிய கோவக்காய் வெள்ளரியைப் போல பிரபலமாக இல்லை என்றாலும், இந்த காய்கறியில் பலரும் அறியாத நன்மைகள் உள்ளன. நமது வழக்கமான டயட்டில் கூடுதல் ஆரோக்கியத்தை இந்த கோவக்காய் சேர்க்கும்.

கோவக்காயில் உள்ள சத்துக்கள் : 

கோவக்காயில் இயற்கையாகவே நார்ச்சத்து, அதிகமான நீர்ச்சத்து மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளது. குறிப்பாக..

  • வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்: நமது நோயெதிர்ப்பு செயல்பாடு, பார்வை ஆரோக்கியம் மற்றும் சரும பராமரிப்புக்கு அவசியமான வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை கோவக்காயில் அதிகமுள்ளது. மேலும் கோவக்காயில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் இருப்பதால், நமது ஒட்டுமொத்த நல்வாழ்விற்கு இது சிறந்த பலனை தருகிறது.

  • உணவுமுறை நார்ச்சத்து: கோவக்காயில் உள்ள நார்ச்சத்து நமது செரிமானத்திற்கு உதவுவதோடு, சாப்பிட்ட திருப்தியையும் இரைப்பை குடல் ஆரோக்கியத்தையும் தருகிறது.

News18

கோவக்காயின் ஆரோக்கிய நன்மைகள் : 

  • ரத்த சர்க்கரை கட்டுப்பாடு: கோவக்காய் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இதன் இயற்கையான சேர்மங்கள் இன்சுலின் உணர்திறனை அதிகரித்து, குடலில் குளுக்கோஸ் உறிஞ்சுதலைக் குறைக்கலாம். இது நீரிழிவு நோயாளிகளுக்கு பயனளிக்கும்.

  • உடல் எடை மேலாண்மை: இதன் குறைந்த கலோரி உள்ளடக்கம் மற்றும் அதிக நார்ச்சத்து காரணமாக, எடை மேலாண்மை டயட்களில் கோவக்காய் சிறந்த ஒன்றாக இருக்கும்.. இதிலுள்ள நார்ச்சத்து சாப்பிட்ட திருப்தியையும் ஊக்குவித்து, ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைக்கிறது.

  • ஆண்டி ஆக்ஸிடெண்ட் பண்புகள்: கோவக்காயில் பீட்டா கரோட்டின் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் நிறைந்துள்ளன. இது வயதாகுதல் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கு பங்களிக்கும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை எதிர்த்துப் போராட இந்த கலவைகள் உதவுகின்றன.

  • அழற்சி எதிர்ப்பு விளைவுகள்: கோவக்காய் சாற்றில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதாகக் சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இது மூட்டுவலி போன்ற அழற்சி நிலைகளின் அறிகுறிகளைப் போக்க உதவும்.

  • கல்லீரல் ஆரோக்கியம்: கோவக்காயில் கல்லீரலை சேதத்திலிருந்து பாதுகாக்கவும் அதன் ஒட்டுமொத்த செயல்பாட்டை ஆதரிக்கவும் உதவும் ஹெபடோப்ரோடெக்டிவ் பண்புகள் உள்ளன,.

  • சுவாச ஆரோக்கியம்: பாரம்பரியமாகவே கோவக்காயில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டி ஆக்ஸிடெண்ட் பண்புகள் காரணமாக ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாச பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

  • முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உட்பட கோவக்கயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு பங்களிப்பதோடு முடி உதிர்வைத் தடுக்கவும் உதவும்.

    Click here for more Health Tip

     Click here to join whatsapp group for daily health tip

பேக்கிங் பவுடர் vs பேக்கிங் சோடா.. இரண்டும் ஒன்னு இல்லையா..? இத்தனை நாள் இது தெரியாம போச்சே..

July 30, 2024 0

 
பல்வேறு விதமான பேக்கிங் ரெசிபிகளில் பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இவை இரண்டிற்குமான வித்தியாசத்தை கண்டுபிடிப்பது பலருக்கு சற்று கடினமான காரியமாக உள்ளது. மேலும் ஒரு சி

லர் பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் ஆகிய இரண்டும் ஒன்றுதான் என்று தவறாக எண்ணுகின்றனர். பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் ஆகிய இரண்டுமே பேக்கிங் செய்யப்படும் பொருட்களில் வாயு குமிழ்களை உருவாக்குவதற்கு உதவக்கூடிய பொருட்கள்.

இவை இரண்டின் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பெயர் மற்றும் தோற்றம் காரணமாக அனுபவமிக்க சமையல் வல்லுனர்கள் கூட ஒரு சில சமயங்களில் எது பேக்கிங் சோடா, எது பேக்கிங் பவுடர் என்பதில் குழம்பி போவதுண்டு. பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் ஆகிய இரண்டுமே ஒரே மாதிரியான நிறம் மற்றும் சுவையைக் கொண்டிருந்தாலும் அவற்றின் வேதியியல் அமைப்பும் பயன்பாடும் வெவ்வேறாக அமைகிறது.

News18

சோடியம் பை-கார்பனேட் பேக்கிங் சோடாவை உருவாக்குகிறது. சோடியம் பை-கார்பனேட் என்ற கார உப்பு அமிலங்களுடன் வினைபுரிந்து கார்பன் டை ஆக்சைடு வாயுவை வெளியிடுகிறது. இதனால் பேக்கிங் சோடா பயன்படுத்தப்பட்ட மாவு கார்பன் டை ஆக்சைடு வெளியீடு காரணமாக உப்பி எழுகிறது. மோர் அல்லது கோகோ பவுடர் போன்ற அமிலத்தன்மை கொண்ட பொருட்களை பயன்படுத்தி செய்யப்படும் ரெசிபிகளில் பெரும்பாலும் பேக்கிங் சோடா பயன்படுத்தப்படுகிறது.

பேக்கிங் சோடாவை ஒரு கலவையில் சேர்க்கும் பொழுது அதில் உள்ள அமிலத்துடன் வினைபுரிந்து கார்பன் டை ஆக்சைடு உருவாக்குகிறது. இறுதியாக நமக்கு கிடைக்கும் ப்ராடக்ட் மென்மையாகவும், புசுபுசுவென்றும் கிடைக்கிறது. சூடான ஓவனில் வைத்து பேக் செய்யும் பொழுது மாவு விரிவடைவதால் இந்த விளைவு ஏற்படுகிறது. பேக் செய்யப்பட்ட உணவுகளில் பழுப்பு நிறத்தை கொண்டு வருவதற்கு பேக்கிங் சோடா உதவுகிறது. இதனால் பிஸ்கட் போன்ற பேக் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தி தயாரிப்பதற்கு பெரும்பாலானவர்கள் பேக்கிங் சோடாவை பயன்படுத்துவர்.

சோடியம் பை கார்பனேட் மக்காசோள மாவு மற்றும் அமிலம் வழக்கமாக டார்டர் கிரீம் ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு பேக்கிங் பவுடர் தயாரிக்கப்படுகிறது. இது கார்பன் டை ஆக்சைடு உருவாக்குவதற்கு இதற்கு வெப்பம் மற்றும் ஈரப்பதம் தேவை. அமிலம் ஏற்கனவே பேக்கிங் பவுடரில் உள்ளது. எந்த ஒரு அமில பொருளும் பயன்படுத்தப்படாத உணவு பொருளில் பேக்கிங் பவுடர் சேர்க்கப்படுகிறது.


தயாரிப்பாளர்கள் வழக்கமாக பேக்கிங் பவுடர் இரட்டிப்பு செயல்பாடு கொண்டதாக வரையறுக்கின்றனர். அதாவது இது நீருடன் தொடர்பு கொள்ளும் பொழுது அது ஆக்டிவேட் ஆகிறது அல்லது கார்பன்-டை-ஆக்சைடு உற்பத்தி செய்ய துவங்குகிறது. இந்தக் கலவையை சமைக்கவோ அல்லது வெப்பப்படுத்தவோ துவங்கும் பொழுது அது மீண்டும் ஒருமுறை ஆக்டிவேட் ஆகிறது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

சோர்வு..எடை குறைப்பு.. அதிக வியர்வை.. இரத்த புற்றுநோயின் 5 அறிகுறிகள்..!

July 30, 2024 0

 இரத்த புற்றுநோய் என்பது உங்கள் இரத்த அணுக்களை பாதிக்கும் ஒரு வகையான புற்றுநோயாகும், இது நோயெதிர்ப்பு சக்தி மற்றும் இரத்த அணுக்களின் முக்கிய செயல்பாடுகளை சீர்குலைக்கிறது. லுகேமியா, லிம்போமா மற்றும் மைலோமா ஆகியவை இரத்த புற்றுநோயின் பொதுவான வகைகள் ஆகும். உங்கள் உடலிலிருக்கும் வெள்ளை இரத்த அணுக்கள் சக்திவாய்ந்த தொற்றுநோய் எதிர்ப்பு போராளிகள் ஆகும்.

இவை, உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உங்கள் உடலில் உள்ள நோய்க்கிருமிகளை எதிர்த்து போராட உதவுகின்றன. உங்கள் உடலுக்குத் வெள்ளை இரத்த அணுக்கள் கண்டிப்பாகத் தேவைப்படுவதால், அவை பொதுவாக வளர்ந்து ஒழுங்கான முறையில் பிரிக்கப்படுகின்றன. ஆனால் லுகேமியாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களுக்கு, எலும்பு மஜ்ஜையில் அதிகளவு அசாதாரண வெள்ளை இரத்த அணுக்களை உற்பத்தி செய்கிறது. இதனால், அவை சரியாக செயல்படாமல் கட்டிகளாக மாறி, புற்றுநோய் செல்களை உருவாக்குகின்றன.

News18

லிம்போமா என்பது லிம்போசைட்டுகள் எனப்படும் உங்கள் இரத்த அணுக்களை பாதிக்கும் ஒரு வகை புற்றுநோயாகும். லிம்போசைட்டுகள் ஒரு வகை வெள்ளை இரத்த அணுக்கள் ஆகும், அவை தொற்று மற்றும் நோயை எதிர்த்துப் போராடுவதன் மூலம் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கின்றன. அவை பெரும்பாலும் நமது நிணநீர் மண்டலத்தில் வாழ்கின்றன. ஆனால் லிம்போமாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களுக்கு, அங்கு அதிகப்படியான அசாதாரண லிம்போசைட்டுகளை உற்பத்தி ஆகி உடலின் திறனைக் குறைக்கின்றன.

மைலோமா என்பது பிளாஸ்மா செல்களை குறிவைக்கிறது. பிளாஸ்மா செல்களானது நோயெதிர்ப்பு சக்திக்கு முக்கியமானது. ஆனால் மைலோமாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களுக்கு, ஒட்டுமொத்த நோயெதிர்ப்பு செயல்பாட்டை பலவீனப்படுத்துகிறது. இரத்தப் புற்றுநோய் கண்டறிதலில் உலகளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் ஒருவர் கண்டறியப்படுகிறார், மேலும் இந்த நோயால் ஆண்டுதோறும் 70,000 உயிரிழப்புகள் ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


ஆரம்ப அறிகுறிகளை கண்டறிதல்:

1. தொடர்ச்சியான சோர்வு மற்றும் பலவீனம்: ஒருவருக்கு சோர்வு ஏற்படுவது பொதுவானது என்றாலும், நீடித்த மற்றும் விவரிக்க முடியாத சோர்வு மற்றும் பலவீனம் ஆகியவை அடிப்படை சிக்கல்களைக் குறிக்கலாம். இரத்த புற்றுநோயானது ஆரோக்கியமான இரத்த அணுக்களை உற்பத்தி செய்யும் உடலின் திறனை அடிக்கடி தடுக்கிறது, இதன் காரணமாக இரத்த சோகை மற்றும் தொடர்ச்சியான சோர்வுக்கு வழிவகுக்கிறது.

2. தற்செயலான எடை குறைப்பு: நியூயார்க்கின் மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் கேன்சர் சென்டர் மருத்துவமனையின் லுகேமியா நிபுணர் & ஆரம்பகால மருந்து மேம்பாட்டு நிபுணரான டாக்டர் எய்டன் எம். ஸ்டீன், எம்டி, உணவு மாற்றங்கள் அல்லது அதிகரித்த உடல் ரீதியான செயல்பாட்டுகள் இல்லாமல் திடீர் எடை குறைப்பு இரத்த புற்றுநோயின் ஆரம்ப கட்டத்தைக் குறிக்கலாம் என்று கூறியுள்ளார்.

3. நோய்த்தொற்றுகளுக்கு அதிக பாதிப்பு: இரத்த புற்றுநோய்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை சீர்குலைத்து, தொற்றுநோய்க்கான பாதிப்பை அதிகரிக்கிறது. எனவே அடிக்கடி மற்றும் நீடித்த நோய்கள் குறித்து உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

4. சிராய்ப்பு மற்றும் இரத்தப்போக்கு: சிராய்ப்பு என்பது தோலில் கீறல்கள் இன்றி அடர் நிறத்தில் இருக்கும் ஒரு காயம் அல்லது தழும்பு, ஈறுகளில் இரத்தப்போக்கு அல்லது சிறிய காயங்களுக்குப் பிறகு நீடித்த இரத்தப்போக்கு ஆகியவை சில இரத்த புற்றுநோய்களுடன் தொடர்புடைய இரத்த உறைதல் சிக்கல்களைக் குறிக்கிறது.
5. இரவு வியர்வை: வெப்பம் அல்லது உடல் ரீதியான செயல்பாடு இல்லாமல் ஏற்படும் அதிகப்படியான இரவு வியர்வைகள் ஆபத்தானவை. அவை சில இரத்தப் புற்றுநோய்களுடன் தொடர்புடைய அறிகுறிகளாகும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

தினம் ஒரு செவ்வாழை சாப்பிடுங்க.. ஏன் தெரியுமா..?

July 30, 2024 0

 சிவப்பு வாழைப்பழத்தை பொதுவாக செவ்வாழைப்பழம் என்று அழைக்கப்படுகிறது. மஞ்சள் மற்றும் பச்சை வாழைப்பழங்களை காட்டிலும் அடர்த்தியாக இனிமையாக இருக்கும் செவ்வாழை அதிக ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியவை. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கின்றன மற்றும் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. செவ்வாழைப்பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, பிட்டா கரோட்டின் போன்ற அத்தியாவசிய வைட்டமின்களை கொண்டுள்ளது.

வைட்டமின்களும், மினரல் சால்ட்களும் நிறைந்த பழம் இது. வாழைப்பழங்கள் சத்து நிறைந்தது. அதிலும் செவ்வாழை அதிக சத்து கொண்டது. இருப்பினும், இது மஞ்சள் வாழைப்பழத்தைப் போல இனிப்பு இல்லை, ஆனால் சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, செவ்வாழைப்பழம் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

News18

தனித்துவமான சுவை மற்றும் நன்மைகளுக்கு பெயர் பெற்ற செவ்வாழைப்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் 7 நன்மைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

  1. நோய் எதிர்ப்பு சக்தி: செவ்வாழைப்பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், நோய்த்தொற்றுகளிலிருந்து உடலைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

  2. செரிமானம்: செவ்வாழைப்பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது.

  3. எடை கட்டுப்பாடு : செவ்வாழைப்பழத்தில் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

  4. இதய ஆரோக்கியம் : செவ்வாழைப்பழத்தில் ஏராளமான பொட்டாசியம் உள்ளது, இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும் இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

  5. ஆற்றல் : செவ்வாழைப்பழத்தில் இயற்கையான சர்க்கரை உள்ளது, இது உடனடி ஆற்றலை வழங்குகிறது மற்றும் சோர்வை நீக்குகிறது. உடற்பயிற்சிக்குப் பிறகு அல்லது உடல் ரீதியான செயல்பாடுகளின் போதும் இது சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  6. மனநிலை மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது : செவ்வாழைப்பழத்தில் வைட்டமின் பி6 உள்ளது, இது மூளையில் செரோடோனின் அளவை அதிகரிக்க உதவுகிறது, மேலும், இது மனநிலையை மேம்படுத்துகிறது மற்றும் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்கிறது.

  7. தோல் மற்றும் முடிக்கு நன்மை : செவ்வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. இது தவிர, கூந்தலை வலுவாகவும், பளபளப்பாகவும் மாற்றவும் உதவுகிறது.


உங்கள் உணவில் செவ்வாழைப்பழத்தைச் சேர்ப்பது பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும், ஆனால் உங்கள் வழக்கமான உணவில் ஏதேனும் புதிய உணவுப் பொருளைச் சேர்ப்பதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகுவது அவசியம்.

🔻🔻🔻


+2 அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக தேர்வுத்துறையின் செய்திக் குறிப்பு!

July 30, 2024 0

 

IMG_20240729_152404

+2 அசல் மதிப்பெண் சான்றிதழ் 01.08.2024 முதல் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்பட உள்ளது - DGE செய்திக் குறிப்பு!

+2 Original Marksheet Distribution - Download here

🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

ஆகஸ்ட் 14 முதல் நீட் இளநிலை கவுன்சிலிங் தொடக்கம்: மருத்துவ கலந்தாய்வு கமிட்டி

July 30, 2024 0
1287670

வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் நீட் இளநிலை மருத்துவ கல்விக்கான கவுன்சிலிங் பணி தொடங்கும் என மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி தெரிவித்துள்ளது. இதற்கான பதிவு நடைமுறை ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.


கவுன்சிலிங் தொடர்பான தகவல்களைப் பெற மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி இணையதளத்தை பார்க்குமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். “நாடு முழுவதும் உள்ள 710 மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 1.10 லட்சம் எம்பிபிஎஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடைபெற உள்ளது. ஆயுஷ், நர்சிங் படிப்புகளை தவிர்த்து சுமார் 21,000 பிடிஎஸ் படிப்புக்கான சேர்க்கைக்கும் கவுன்சிலிங் நடைபெறும்” என தேசிய மருத்துவ ஆணைய செயலாளர் மற்றும் மருத்துவர் பி.ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்.


அகில இந்திய அளவில் மாணவர் சேர்க்கையில் 15 சதவீதம் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மர் புதுச்சேரி, மத்திய பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 100 சதவீத சேர்க்கையை மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி கவனிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) கடந்த 26-ம் தேதி வெளியிட்டது. நீட் தேர்வு தொடர்பான பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த முடிவை உச்ச நீதிமன்ற உத்தரவின் படி என்டிஏ வெளியிட்டது. தற்போது இந்த முடிவுகளின் அடிப்படையில் கவுன்சிலிங் தொடங்க உள்ளது.




முன்னதாக, நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 571 நகரங்களில் கடந்த மே 5-ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வை 4,750 மையங்களில் 23.33 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாகின.


இந்த நிலையில், வினாத்தாள் கசிவு, கணிசமான மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது ஆகிய விவகாரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தேர்வை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதன் மீதான விசாரணையில், மறுதேர்வு நடத்த முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.


மேலும், ஒரே கேள்விக்கு இரண்டு பதில்கள் தொடர்பான வாதத்திலல் டெல்லி ஐஐடியின் உதவியை உச்ச நீதிமன்றம் நாடியது. டெல்லி ஐஐடி அந்த வினாவுக்கு சரியான ஒரு பதிலை தெரிவித்தது. இதனால் கணிசமான மாணவர்களுக்கு 5 மதிப்பெண் குறைக்கப்பட்டது. அதனுடன் ஏற்கனவே கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டதன் அடிப்படையிலும் திருத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகளை என்டிஏ கடந்த 26-ம் தேதி வெளியிட்டது.


கடந்த ஜூன் மாதம் வெளியான முடிவுகளின்படி, நாடு முழுவதும் மொத்தம் 13 லட்சத்து 16,268 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். அண்மையில் வெளியான திருத்தப்பட்ட முடிவுகளில் 13 லட்சத்து 15,853 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை 415 குறைந்துள்ளது. இதனால் தரவரிசையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.



🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news 

கியூட் தேர்வு முடிவுகள் வெளியானது: 45 பாடங்களில் 22,920 மாணவர்கள் முழு மதிப்பெண்

July 30, 2024 0

 

பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்புக்கான கியூட் நுழைவுத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்டுள்ளது. இதில் 45 பாடங்களில் 22,920 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.


பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு ‘பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு’ எனும் கியூட் தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் 261 மத்திய, மாநில, நிகர்நிலை மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் இத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த முன்வந்தன. அதன்படி 15 பாடங்களுக்கு பேப்பர்-பேனா முறையிலும் 48 பாடங்களுக்கு கணினி வழியிலும் என மொத்தம் 63 பாடங்களுக்கு கடந்த மே மாதம் கியூட் நுழைவுத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது.


இந்த கியூட் தேர்வு நாடு முழுவதும் 13 மொழிகளில் 28 வெளிநாட்டு நகரங்கள் உட்பட 379 நகரங்களில் நடைபெற்றது. 13.4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்த நிலையில் 11,13,610 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

தேர்வு முடிவுகள் ஜூன் 30-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நீட், நெட் தேர்வு பிரச்சினைகளால் கியூட் தேர்வு முடிவுகள் தாமதம் ஆனது.


இந்நிலையில் கியூட் தேர்வு முடிவு நேற்று முன்தினம் மாலை வெளியானது.


இதில் 45 பாடங்களில் 22,920 மாணவர் கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

இதில் வணிகப் படிப்புகளில் அதிகபட்சமாக 8,024 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். இதையடுத்து அரசியல் அறிவியலில் 5,141 மாணவர்கள், இதற்கடுத்து வரலாற்றில் 2,520 மாணவர்கள் முதல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.


தேர்வு நடைபெற்ற 33 மொழித்தாள்களில் 18-ல் 1,904 மாணவர்கள் முழு மதிப்பெண்ணான 200 பெற்றுள்ளனர். ஆங்கில தேர்வில் பங்கேற்ற 8.2 லட்சம் மாணவர்களில் 1,683 பேர் 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.


சம்ஸ்கிருதம், பஞ்சாபி ஆகிய இரண்டு மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.


கடந்த 2023-ல் மொத்தம் 22,836 பேரும், 2022-ல் 21,159 பேரும் 100 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தனர்.


கடந்த 2023-ல் வணிகப் படிப்புகளில் 2,357 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண் பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு இப்பாடத்தில் முழு மதிப்பெண் பெற்ற மாணவர் எண்ணிக்கை 8,024 ஆக அதிகரித்துள்ளது.


இதனால் டெல்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட புகழ்பெற்ற கல்வி நிலையங் களில் வணிகவியல் போன்ற பாடங்களுக்கு போட்டி அதிகரிக்கும் என கருதப்படுகிறது.


அதேவேளையில் பொருளாதாரம்/ வணிகப் பொருளாதாரத்தில் ஹானர்ஸ் படிப்புக்கு அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்துள்ளதால் இந்தப் படிப்புக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் இந்த ஆண்டு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

பொறியியல் படிப்புகளுக்கான `கேட்’ நுழைவு தேர்வு: பட்டதாரிகள் ஆக. 24-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

July 30, 2024 0

 1287017

நாடு முழுவதுமுள்ள ஐஐடி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் (Graduate Aptitude Test in Engineering) எனும் தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.


அதேபோல பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களும் கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிக்கு ஊழியர்களை தேர்வு செய்கின்றன. மேலும், கணிசமான தனியார் உயர்கல்வி நிறுவனங்களும் கேட் மதிப்பெண் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. அதனால் இத்தேர்வானது பட்டதாரிகள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.


இந்த கேட் நுழைவுத் தேர்வு இயந்திரவியல், கட்டிடவியல் உட்பட 30 பாடப்பிரிவுகளில் கணினி வழியில் நடத்தப்படும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து 3 ஆண்டுக்கு இந்த மதிப்பெண் செல்லும். அதன்படி 2025-ம் ஆண்டுக்கான கேட் தேர்வு வரும் பிப்ரவரி 1, 2 மற்றும் 15, 16-ம் தேதிகளில் பாடப்பிரிவு வாரியாக காலை, மதியம் என இருவேளைகளிலும் நடைபெற உள்ளது. இந்த முறை கேட் தேர்வை ரூர்க்கி ஐஐடி நடத்தவுள்ளது. மேலும், தேர்வுக்கான மையங்கள் 8 மண்டலங்களாகப் பிரிக்கப்பட உள்ளன.


இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் https://gate2025.iitr.ac.in/ எனும் வலைத்தளத்தில் சென்று செப். 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


இந்த வாய்ப்பை தவறவிடுபவர்கள் தாமதக் கட்டணத்தை செலுத்தி அக்டோபர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதனுடன் பொறியியல் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க முடியும். மேலும், கூடுதல் விவரங்களை வலைத் தளத்தில் அறியலாம்.




🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

ஆக.1 முதல் பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்: அரசுத் தேர்வுகள் இயக்ககம்

July 30, 2024 0

 1287177

இந்த ஆண்டு (2024 மார்ச்) 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.


இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை: இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல் 01.08.2024 அன்று முதல் வழங்கப்படும்.


பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் அசல் (Original Mark Certificates) / மதிப்பெண் (Statement Of Mark) பெற்றுக் கொள்ளலாம். மேலும். விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

School Calendar - August 2024

July 30, 2024 0

 
ஆகஸ்ட் -2024 நாள்காட்டி..


03-08-2024 - சனி --ஆசிரியர் குறைதீர் நாள் 


RL


16-08-2024 - வெள்ளி - வரலட்சுமி விரதம்.


19-08-2024 - திங்கள் - ரிக் உபகர்மா/ ஆவணி ஆவிட்டம் 


20-08-2024 - செவ்வாய் - காயத்ரி ஜெபம் 


அரசு விடுமுறை நாள்கள்..


15-08-2024 - வியாழன் - சுதந்திர தினம் 


26-08-2024 - திங்கள் - கிருஷ்ண ஜெயந்தி.


சனி பள்ளி வேலை நாள்கள்


10-08-2024 

24-08-2024



🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

School Morning Prayer Activities - 31.07.2024

July 30, 2024 0

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.07.2024

திருக்குறள் 

பால் : பொருட்பால்


அதிகாரம்: அறிவு உடைமை


குறள் எண்:430


அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவிலார்

என்னுடைய ரேனும் இலர்.


பொருள்: அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர்; அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.


பழமொழி :

அத்ருஷ்டமும் ஐஸ்வர்யமும் ஒருவர் பங்கல்ல;


Fortune’s wheel is ever revolving


இரண்டொழுக்க பண்புகள் : 


 *  நான் எப்போதும் அழகாகவும், தெளிவாகவும் எழுதுவேன்.                   

 *என் வாசித்தலை மேம்படுத்த தினமும் ஐந்து பக்கங்களாவது வாசிப்பேன்.


பொன்மொழி :


" தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தனக்கென தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்!---- பிடேல் காஸ்ட்ரோ


பொது அறிவு : 


1. என் கடன் பணி செய்து கிடப்பதே – என்று கூறியவர்


விடை: திருநாவுக்கரசர்


2. தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம்


விடை: கன்னியாகுமரி


English words & meanings :


 concern-அக்கறை,


 cover-உறை


வேளாண்மையும் வாழ்வும் : 


விதைத்தபின் அறுவடைக்கு மட்டும் சென்று அறுவடை செய்து வந்தார்கள் நம் முன்னோர்கள். சர்க்கரை நோய், மலச்சிக்கல், புற்றுநோய்க்கு எதிரானது.


நீதிக்கதை


 ஒருவரை ஒருவர் குறை கூறுவது தவறு.


ஓர் ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். ஒருவர் சலவை தொழிலாளி, இன்னொருவர்  குயவர். இரண்டு பேருமே அரசரிடம் வேலை பார்த்து வந்தனர்.


ஒரு நாள் இரண்டு பேருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அவர்கள் தங்கள் குறைகளை தாங்களே தீர்த்துக்  கொள்ளாமல் அரசரிடம் ஒருவர் பற்றி ஒருவர் குறை கூறிக்கொண்டு இருந்தனர்.


 குயவர், சலவை தொழிலாளியை அரசரிடம் வசமாக சிக்க வைக்க வேண்டும் என்று எண்ணி அரசரைப் பார்த்து, “அரசே, நமது பட்டத்து யானை கருப்பாக இருக்கிறது. யானையை சலவை தொழிலாளியிடம் கொடுத்து வெளுக்க செய்ய சொல்லுங்கள்” என்றார். 


அரசர்  சலவை தொழிலாளியை கூப்பிட்டு யானையை வெளுத்து வரும்படி கூறினார். உடனே சலவை தொழிலாளி அரசரைப் பார்த்து, “அரசே, யானையை வெளுத்து விடலாம் யானையை வேக வைக்கும் அளவிற்கு பெரிய பானை ஒன்றை குயவரை செய்து தர சொல்லுங்கள்” என்றார்.

அரசர் குயவரை கூப்பிட்டு, “யானையை வேக வைக்க பெரிய பானையை செய்து கொடு” என்று ஆணையிட்டார். குயவர் திரு திரு என விழித்தார்.


இருவரும் ஒருவர் மீது ஒருவர் குறை கூறுவதை அறிந்த அரசர், அவரவருக்கு இட்ட வேலையை செய்யவில்லை எனில் கடும் தண்டனை விதிக்கப்படும் என்றார்.


இருவரும் அரசரிடம் சென்று  தங்கள் தவறை உணர்ந்து கொண்டோம். இனிமேல் இதுபோல் நடக்க மாட்டோம் என்று மன்னிப்பு கூறினர். அரசரும் மன்னித்து அவரவர் வேலையை செய்ய உத்தரவிட்டார்.


இறுதியில் இருவரும் சந்தித்தனர். உன் மேல் நானும், என்மேல் நீயும் குறை கூறி மாட்டிக் கொண்டோம். இதனால் நம் இருவருக்குமே துன்பம். இனிமேல் இதுபோல் நடக்கக்கூடாது. இருவரும்  முன்பு போலவே நண்பர்கள் ஆனார்கள். 


நீதி : ஒருவர் மீது ஒருவர் குறை கூறி வம்பில் மாட்டிக்கொண்டு விழிப்பதை விட, ஒருவர் மீது மற்றொருவர் குறை கூறுவதை விட்டு அவரவர் குறையை அவரவர் திருத்திக் கொண்டு வாழ்வது சிறந்ததாகும்.


இன்றைய செய்திகள் - 31.07.2024


🌟அம்மா உணவகங்களை சீர்படுத்த ரூ.7 கோடி ஒதுக்கீடு: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்.


🌟இறப்பு, இடம் பெயர்தல் காரணமாக தமிழகத்தில் 4.49 லட்சம் குடும்ப அட்டைகள் ரத்து: கூட்டுறவு, உணவுத்துறை செயலர் தகவல்.


🌟மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம்: அரசு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் தலைவர் தகவல்.


🌟கேரளாவின் வயநாட்டில் கனமழை காரணமாக நிலச்சரிவில் சிக்கி பலர்  உயிரிழந்த நிலையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


🌟லெபனானை தாக்க இஸ்ரேல் திட்டம்: இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க மத்திய அரசு அறிவுரை.


🌟பாரீஸ் ஒலிம்பிக்; அயர்லாந்தை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்த இந்திய ஆண்கள் ஹாக்கி அணி.


🌟பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ்: ரபேல் நடாலை வீழ்த்திய ஜோகோவிச்.


🌟மகளிர் டி20 தரவரிசை: ஏற்றம் கண்ட இந்திய வீராங்கனைகள்.


Today's Headlines


🌟Allocation of Rs 7 Crores for renovation of Amma restaurants: Resolution in Chennai Corporation meeting.


 🌟4.49 lakh family cards are cancelled in Tamil Nadu due to death and migration of places: Cooperatives and Food department Secretary informantion.


 🌟Tamil Nadu ranking first in the export of electronic goods: Information from the head of the Government Industry Guidance Institute.


🌟 Heavy rains in Kerala's Wayanad have left many people dead in landslides. Kerala faces a huge impact.


 🌟Israel Plans to Attack Lebanon: Central Govt Advises Indians to Stay Safe


 🌟Paris Olympics;  Indian men's hockey team beat Ireland to record its 2nd win.


🌟 Paris Olympics Tennis: Djokovic beats Rafael Nadal


 🌟Women's T20 Rankings: Indian players on the rise.

 

Prepared by

Covai women ICT_போதிமரம்



🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news