Agri Info

Adding Green to your Life

December 30, 2024

HRA Slap For Jan 2025 - Annual (01/01) Increment - Single Page For All Teachers

December 30, 2024 0

 இந்த மாதம் increment இருப்பவர்கள் HRA சரிபார்த்துக் கொள்ளவும்...







NMMS Exam - 22.02.2025 அன்று நடைபெறுதல் சார்ந்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

December 30, 2024 0

 IMG_20241230_154257

2024-2025 தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை ( NMMS ) தேர்வு 22.02.2025 அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் , சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலம் இணையதளம் வாயிலாக விண்ணப்பப் படிவங்களை 31.12.2024 முதல் 24.01.2025 - க்குள் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தலைமை ஆசிரியர்களிடம் 24.01.2025 -க்குள் ஒப்படைக்க வேண்டும் என தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்குமாறும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு உரிய அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


மேலும் , இத்துடன் இணைத்தனுப்பப்படும் அறிவிப்பினையும் அனைத்து அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

NMMS தேர்வு - 22.02.2025 அன்று நடைபெறுதல் சார்ந்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

NMMS - FEB 2025 Exam Instructions - Download here

PG TRB - English ( LANGUAGE , LINGUISTICS AND PEDAGOGY - Unit 9 ) Full Study Materials

December 30, 2024 0

 What's New :


PG TRB - English ( Unit 9 ) Full Study Materials & Important Question And Answer - Way To Success - Download here

PG TRB - Computer Science ( Data Communication And Computer Networks ) Study Materials - Mr D.Sundaravel - Download here

PG TRB - English ( Unit 2 ) Full Study Materials & Important Question And Answer - Way To Success - Download here


PG TRB EXAM - Syllabus
PG TRB EXAM - Syllabus - All subject - click here

அரசு பள்ளிகளில் இணைய வசதிக்கான சேவை கட்டணம்: பள்ளி கல்வி துறை ரூ.3.26 கோடி நிதி விடுவிப்பு

December 30, 2024 0

 அரசுப் பள்ளிகளில் இணையதள வசதிக்கான சேவைக் கட்டணத்தை செலுத்தும் வகையில் ரூ.3.26 கோடி நிதியை பள்ளிக்கல்வித் துறை விடுவித்துள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயன்பாட்டில் உள்ள பிராட்பேண்ட் சேவைக் கட்டணத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.1.50 கோடி நிலுவை வரை நிலுவை வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையாகின.


இந்நிலையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் 2,973 உயர்நிலைப் பள்ளிகளுக்கு மாதம் ரூ.1,500 வீதம் கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கு ரூ.44 லட்சத்து 59,500-ம், 3,074 மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கு ரூ.92,022-ம் என மொத்தம் ரூ.1 கோடியே 36 லட்சத்து 81,500 நிதி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.


அதைத் தொடர்ந்து இணையதள வசதியுள்ள 6,224 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையான சேவைக் கட்டணத்தை செலுத்தும் வகையில் ரூ.3.26 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை உடனே இணையதள சேவை நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டும்.


அதற்கான விவரங்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடனடியாக எமிஸ் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே மத்திய அரசின் நிதியுதவியின் கீழ் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், மத்திய அரசு மானியத்தை நிறுத்தி வைத்துள்ளதால் மாநில அரசு தன் சொந்த நிதியில் இருந்து செலவிட்டு வருவதாகவும் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

விடுமுறை ஓய்வூதிய பலன்பெற 'களஞ்சியம்' செயலி கட்டாயம் பள்ளிக்கல்வி இயக்குநா் உத்தரவு.

December 30, 2024 0

 IMG_20241230_103759


தமிழகத்தில் ஜனவரி முதல் விடுமுறை, ஓய்வூதிய பலன்களைப் பெற 'களஞ்சியம்' என்ற பெயரிலான செயலியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா்


இதுதொடா்பாக அவா் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும், அவா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


களஞ்சியம்' செயலி குறித்த பயிற்சி பெற பணியாளா்கள், அலுவலா்கள் விவரத்தை இதுவரை அனுப்பாத மாவட்டங்கள், உடனடியாக அனுப்ப வேண்டும். அனைத்து நிலை அலுவலா்கள், ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் 100 சதவீதம் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அத்துடன், விடுமுறைக்கு விண்ணப்பிக்க, ஓய்வூதிய பலன்கள் கோரிட, பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கருத்துருக்கள் அனுப்பிட, அனைத்து வகை முன்பணங்கள் மற்றும் 'பே-சிலிப்' கோரிட பயன்படுத்த வேண்டும். அனைத்து நிலை அலுவலா்கள், ஆசிரியா்கள், பணியாளா்கள் தங்களது பிரதிமாத 'பே-சிலிப்'பை களஞ்சியம் செயலி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் இச்செயலியின் பயன்பாடு 100 சதவீதம் நடைபெற வாய்ப்புள்ளது.


எனவே, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலா்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சம்பளம் பெற்று வழங்கும் அலுவலா்களுக்கு, இதனை வலியுறுத்த வேண்டும். வரும் ஜனவரி முதல் ஓய்வூதிய கருத்துருக்கள் இணைய வழியில் மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.


இதுவரை ஓய்வு பெற்றவா்கள், பங்களிப்பு திட்ட ஓய்வூதியா்களுக்கு பெற்று வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை, உடனடியாக விரைந்து பெற்று வழங்குவதுடன், இப்பொருளையும் தொடா் கண்காணிப்பில் வைத்திட வேண்டும். எனவே, இனிவரும் காலங்களில் 'களஞ்சியம்' செயலியின் பயன்பாட்டை அதிகப்படுத்த, உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

175 அரசு மேல்நிலை பள்ளிகளில் நவீன கணினி அறிவியல் ஆய்வகங்கள்:

December 30, 2024 0

 தமிழகத்தில் 175 அரசு மேல் நிலைப்பள்ளிகளில் வரும் 2024-25-ம் கல்வியாண்டில் ரூ.57.80 கோடி மதிப்பில் நவீன கணினி அறிவியல் ஆய்வங்கள் அமைக்கப்படவுள்ளன.


தமிழக சட்டப்பேரவையில் நடப்பாண்டில், பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது, ஒரு அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார். அதில், அரசுப் பள்ளி மாணவர்கள் கணினித் தொழில்நுட்பம் மற்றும் குறியீடுகளை நடைமுறைப் பயிற்சியின் மூலம் கற்றுத் தேர்வதற்கு அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகேற்ப படிப்படியாகத் தரம் உயர்த்தப்படும்.


முதல்கட்டமாக, 2024-25-ம் கல்வியாண்டில் 1,000 மாணவர்களுக்கு மேல் பயின்றுவரும் அரசுப்பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.58 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும் என்று அதில் அமைச்சர் தெரிவித்திருந்தார்.



இதையடுத்து, 2024-25-ம் கல்வியாண்டில் கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாடுகள் பாடப்பிரிவுகள் உள்ள 2,903 அரசு மேல் நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முதல்கட்டமாக 5 மாணவர்களுக்கு ஒரு கணினி என்ற கணக்கில் 175 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 12,043 கணினிகள் மற்றும் உபகரணங்களுடன் கூடிய புதிய நவீன கணினி அறிவியல் ஆய்வகங்களை மேம்படுத்த பள்ளி கல்வித்துறை இயக்குநர் கோரினார்.



இதனை பரிசீலித்த தமிழக அரசு, மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப அரசுப்பள்ளி மாணவர்கள் தங்கள் தனித்திறனை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கிடும் பொருட்டு 175 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 12,043 கணினிகள் மற்றும் உபகரணங்களுடன் கூடிய புதிய நவீன கணினி அறிவியல் ஆய்வகங்களை ரூ.57.80 கோடியில் அமைக்க அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Ennum Ezhuthum - Term 3 - Empty Format

December 30, 2024 0

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர் பட்டியலில் ஜன.2-க்​குள் திருத்தம் செய்​ய​லாம்

December 30, 2024 0

 தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பெயர்ப் பட்டியலில் ஜனவரி 2-ம் தேதிக்குள் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமென தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பாக தேர்வுத் துறை இயக்குநர் ந.லதா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2024-25) 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப் பட்டியல் கடந்த டிச. 24-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் விடுபட்ட மாணவர்களை சேர்க்கவும், இறப்பு/ மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்களை நீக்கவும் இறுதி வாய்ப்பு தற்போது வழங்கப்படுகிறது.


இதையடுத்து அனைத்துவித உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களும் பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் அதன் விவரங்களை ஜன.2-ம் தேதிக்குள் சரிசெய்ய வேண்டும்.


அதேநேரம் இறப்பு மற்றும் மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்கள் பெயர்களை மட்டும் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் நீண்ட விடுப்பில் உள்ள மாணவர்களின் பெயர்களை தன்னிச்சையாக நீக்கக்கூடாது. சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்களின் அனுமதி பெற்ற பின்னரே அத்தகைய மாணவர்களை இறுதி பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும். இதற்கான அறிவுறுத்தல்களை சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நமது மின்னணு பணிப்பதிவேடு eSR ஐ தரவிறக்கம் செய்தல் மற்றும் விடுபட்ட விவரங்களை Edit செய்யும் வழிமுறை

December 30, 2024 0
IMG_20241230_103759

நமது மின்னணு பணிப்பதிவேடு eSR ஐ தரவிறக்கம் செய்தல் மற்றும் விடுபட்ட விவரங்களை Edit செய்யும் வழிமுறை

e-SR Download Edit Procedure - Download here

December 29, 2024

ஆசிரியர்களுக்கான முக்கிய தகவல்

December 29, 2024 0

 ஆசிரியர் பட்டய தேர்வு எழுதியவர்களுக்கு வரும் 30ம் தேதி முதல் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல் தெரிவித்துள்ளது.


2024 ஜூன்/ஜூலை- ல் நடைபெற்ற முத லாண்டு மற்றும் 2ம் ஆண்டு தொடக்க கல்வி ஆசிரியர் பட்டயதேர்வை எழுதிய பயிற்சி மாணவர் கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் மற்றும் பட்டய சான்றி தழ்கள் வரும் 30ம் தேதிமுதல் விநியோகம் செய்யப்படும். எனவே, பயிற்சி மாணவர்கள் தாங்கள் பயின்ற நிறுவனத்திலும், தனித்தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திலும் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட சுகாதார சங்கத்தில் Staff Nurse காலிப்பணியிடங்கள் – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!  

December 29, 2024 0

 மாவட்ட சுகாதார சங்கத்தில் Staff Nurse காலிப்பணியிடங்கள் – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!  

மாவட்ட சுகாதார சங்கம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Dental Assistant, Staff Nurse மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 26 பணியிடங்கள்  நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Dental Assistant, Staff Nurse மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 26 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு / 10ம் வகுப்பு / B.Sc / BDS / BSMS / D.Pharm / Diploma / M.Sc / Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.13,800/- முதல் ரூ.40,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.12.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

IIITDM காஞ்சிபுரத்தில் Junior Research Fellow வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

December 29, 2024 0

 IIITDM காஞ்சிபுரத்தில் Junior Research Fellow வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

IIITDM காஞ்சிபுரம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.
IIITDM காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளது.

Junior Research Fellow கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech / M.Sc தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IIITDM வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Junior Research Fellow ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.37,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IIITDM தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 12.01.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

CMC வேலூர் கல்லூரியில் Senior Resident வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

December 29, 2024 0

 CMC வேலூர் கல்லூரியில் Senior Resident வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது  வெளியிட்டுள்ளது. இதில் Senior Resident, Teacher, Physiotherapist மற்றும் பல்வேறு பணிக்கான 5 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:

Senior Resident, Teacher, Physiotherapist மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc / BE / B.Tech / M.Ed / M.Phil / M.Sc / MA / MCA / MD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 04.01.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF



6 -8th Std - மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் - CEO Proceedings

December 29, 2024 0

 6-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் 


Click Here to Download - மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் - CEO Proceedings - Pdf

1-5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் - CEO Proceedings

December 29, 2024 0

 

1-5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் 


Click Here to Download - State Level Kalai Thiruvizha Competitions for Class 1-5 Students - CEO Proceedings - Pdf