Agri Info

Adding Green to your Life

May 25, 2022

இந்தியன் பேங்கில் வேலைவாய்ப்பு 2022 | Indian Bank Recruitment 2022 | 312 Specialist Officers Posts Bank Jobs 2022

May 25, 2022 0

 

Indian Bank Recruitment 2022 - Specialist Officers Posts Job Details:

இந்தியன் வங்கியில் அறிவிக்கப்பட்ட​ 312 Specialist Officers பதவிக்கான​வேலைக்கான​ விவரங்கள்
Job Organization Name :Indian Bank
Job Category :Central Government Indian Bank Jobs
Employment Work Type :Regular Permanent Basis
Posting Name :Specialist Officers (SO) Posts
Total Vacancy :312 Vacancies
Place of Posting :TamilNadu - Anywhere in India
Apply Job Starting Date :24-05-2022
Apply Job Last Date :14-06-2022
Apply Job Mode :Online
Official Website :*https://www.indianbank.in*


Indian Bank Recruitment 2022 Posting Name & Vacancy Details:

இந்தியன் வங்கியில் அறிவிக்கப்பட்ட வேலையின் பதவியின் விவரங்கள் மற்றும் காலிபணியிடங்கள் விபரங்கள்
                                       Name Of Posting DetailsTotal No Of Vacancy Details
SO-Specialist Officers:-Assistant, Accounts, Data Analyst, Digital Banking,Manager, IT, Credit, Merchant acquiring, Risk Management, Portfolio Management, Sector Specialist, Statistician, Economist, Corporate Communication, Industrial Development, Security, Dealer, Forex, Domestic, Bullion Exchange, System Administrator, Database Administrator, Middleware Administrator, IT-Virtualization, ESB and API Management, Software Developers, Java Technologies, Network Routing and Switching, IT- Network Security, - For More Etc...,312 Specialist Officers Post
Total No Of Vacancy312 Vacancies



Indian Bank Recruitment 2022-Specialist Officers Salary Details :

இந்தியன் வங்கியில் அறிவிக்கப்பட்ட​ 312 Specialist Officers ​வேலைக்கான​ மாத​ சம்பள​ விவரங்கள்
Specialist Officers Salary ScaleSpecialist Officers Salary Details
1. Scale IRs.36000 + 1490 - 46430 + 1740 + 49910 + 1990 - 63840/-
2. Scale IIRs.48170 + 1740 + 49910 + 1990 - 69810/-
3. Scale IIIRs.63840 + 1990 + 73790 + 2220 - 78230/-
4. Scale IVRs.76010 + 2220 + 84890 + 2500 - 89890/-
Latest Indian Bank Jobs 2022

Indian Bank Recruitment 2022-Specialist Officers Age Limit :

இந்தியன் வங்கியில் Specialist Officers Posts மூலம் 60 விதமான​ பல​ பதவிகளுக்கு 312 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பதவிகளுக்கும் வயது வரம்பு தனித் தனியாக​ மாறுபடும்.

சில​ பதவிகளுக்கு 23 வயது முதல் 40 வயது வரை இருக்கும்.

சில​ பதவிகளுக்கு 23 வயது முதல் 35 வயது வரை இருக்கும்.

சில​ பதவிகளுக்கு 25 வயது முதல் 37 வயது வரை இருக்கும்.

சில​ பதவிகளுக்கு 27 வயது முதல் 40 வயது வரை இருக்கும்.

இந்த​ வயது வரம்ப்பு உட்பட மேலும் வயது வரம்பு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது

The Upper age limit is relaxed by 5 years for SC/ST

3 years for OBC

எல்லா பதவிகளுக்கான​ வயது வரம்புகளை தெரிந்து கொள்ள கீழ் குடுக்கப்பட்டுள்ள​ அதிகார​ பூர்வ​ இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு நோட்டிபிகேசனை பார்க்கவும்​.

Indian Bank Recruitment 2022-Specialist Officers Selection Process:

இந்தியன் வங்கி விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்க பின்வரும் செயல்முறையைப் பின்பற்றலாம்.

☑️Short Listing

☑️Written / Online Test + Interview

Indian Bank Recruitment 2022-Specialist Officers Application Fee/Exam Fee:

Community NameFees Details
For SC/ST/PWBD CandidatesRs.175/-
For all Others CandidatesRs.850/-

Note:விண்ணப்பதாரர்கள் மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் பேமெண்ட் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.

Indian Bank Recruitment 2022-Specialist Officers Educational Qualification :

☑️Graduate and Above
☑️For More Check Indian Bank Official Notification

How to Apply Indian Bank Recruitment 2022-Specialist Officers Posts:

இந்தியன் வங்கியின் இணையதளத்தில் உள்ள தற்போதைய வேலை வாய்ப்புகள் பிரிவில் அதாவது https://www.indianbank.in/ என்ற இணைப்பின் மூலம் 24.05.2022 முதல் 14.06.2022 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Indian Bank Job Specialist Officers Official Notification & Application Link:

இந்தியன் வங்கி வேலைக்கான​ நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் ஆண்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.
Indian Bank Official Website Career Page Link:Click Here
Indian Bank SO Posts Official Notification PDF Link:Click Here
Indian Bank Recruitment Apply Job Online Link:Click Here



இனிமேல் இருட்டில் தூங்க பழகிக்கோங்க... ஆராய்ச்சியாளர்கள் விடுக்கும் ஹை அலெர்ட்!

May 25, 2022 0

 பெரும்பாலும் நாம் அனைவருமே நல்ல இருட்டில் தான் தூங்குவோம். ஆனால் எல்லோராலும் அது முடியாது. சிலருக்கு இருட்டில் தூங்க பயமாக இருக்கும். ஆகையால் ஜன்னல் வழியாக வரும் வெளிச்சம் அல்லது ஸீரோ-வாட்ஸ் பல்புகளை பயன்படுத்தி அச்சமின்றி உறங்கும் பழக்கத்தினை கொண்டிருப்பர், ஒரு சிலர் கண்கூசும் அளவிற்கு பளீச்சென்ற ஒரு மின்விளக்கு எரியாவிட்டால் தான் தனக்கு தூக்கமே வரும் என்பார்கள்.




இதில் நீங்கள் எந்த வகையாக இருந்தாலும் சரி, இனிமேல் இருட்டில் துயில்கொள்ள பழகி கொள்ளவும். இதை நாங்கள் சொல்லவில்லை, ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்! ஏனென்றால் இரவில் தூங்கும் போது ஜன்னல் வழியாக வரும் வெளிச்சத்தை கூட திரைச்சீலைகளை கொண்டு மறைக்க வேண்டும், மிதமான சுற்றுப்புற மின்விளக்குகளை கூட எரிய விடக்கூடாது.

ஏனெனில் அது நம் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்கின்றனர் அமெரிக்காவில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். அவர்களின் கூற்றுப்படி மங்கலான வெளிச்சம் கூட தூக்கத்தின் போது இருதய செயல்பாட்டை பாதிக்கலாம் மற்றும் மறுநாள் காலையில் இன்சுலின் ரெசிஸ்டென்ஸை அதிகரிக்கும்.

பல்கலைக்கழகத்தின் ஃபீன்பெர்க் ஸ்கூல் ஆஃப் மெடிசினில், சீஃப் ஆஃப் ஸ்லீப் மெடிசீன் ஆக பணிபுரியும் டாக்டர் பில்லிஸ் ஜீ விளக்கமளிக்கையில், "நாங்கள் மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகள், இரவில் நீங்கள் தூங்கும் அறையில் ஏற்படும் ஒரு மிதமான வெளிச்சம் கூட - குளுக்கோஸ் மற்றும் இதயத்தின் இரத்தக் குழாயின் ஒழுங்குமுறை பாதிக்கும். இது இதய நோய், நீரிழிவு மற்றும் மெட்டாபாலிக் சிண்ட்ரோம் போன்ற ஆபத்துகளுக்கு வழிவகுக்கும். எனவே மக்கள் தூக்கத்தின் போது ஒளி வெளிப்பாட்டின் அளவைத் தவிர்ப்பது அல்லது குறைப்பது முக்கியம்" என்று கூறி உள்ளார்.

பிஎன்ஏஎஸ் (PNAS) இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வின் வழியாக, மிதமான ஒளி வெளிப்பாடாட்டினால் நம் உடல் ஹையர் அலெர்ட் ஸ்டேட்டிற்கு (higher alert state) செல்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒருவரின் இதயத் துடிப்பு அதிகரிக்கும். உடன் இரத்தத்தை வெளியேற்ற இதயம் சுருங்கும் விகிதமும், ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்த ஓட்டத்திற்காக உங்கள் இரத்த நாளங்களுக்கு இரத்தம் எவ்வளவு வேகமாக செலுத்தப்படுகிறது என்ற விகிதமும் அதிகரிக்கும்.

இதுபற்றி நார்த்வெஸ்டர்னில் உள்ள நரம்பியல் ஆராய்ச்சி உதவிப் பேராசிரியரான டாக்டர் டேனிலா கிரிமால்டி விளக்கமளிக்கையில், "நீங்கள் தூங்கினாலும், உங்கள் தன்னியக்க நரம்பு மண்டலம் செயல்படுத்தப்படுகிறது. அது தவறு. பொதுவாக, உங்கள் இதயத் துடிப்பு மற்றும் பிற இருதயம் சார்ந்த பணிகள் இரவில் குறைவாகவும் பகலில் அதிகமாகவும் இருக்கும்" என்று கூறி உள்ளார்.

மேலும் இந்த ஆய்வின் வழியாக, ஒளிமிக்க அறையில் தூங்கி காலையில் எழுந்தவர்களுக்கு இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் ஏற்பட்டதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் என்பது உங்கள் தசைகள், கொழுப்பு மற்றும் கல்லீரலில் உள்ள செல்கள் இன்சுலினுக்கு சரியாக ரெஸ்பான்ஸ் செய்யவில்லை என்று அர்த்தம். ஆகையால் உங்கள் இரத்தத்தில் இருந்து குளுக்கோஸை ஆற்றலுக்காக பயன்படுத்த முடியாது.

அதை ஈடுசெய்ய, உங்கள் கணையம் அதிக இன்சுலினை உருவாக்கும். காலப்போக்கில், உங்கள் இப்ளட் சுகர் அதிகரிக்கும். தூக்கம், ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சியோடு சேர்த்து பகல் நேர வெளிச்சமும் நம் ஆரோக்கியத்திற்கு ஒரு முக்கிய காரணியாகும், ஆனால் இரவில் வெளிச்சத்திற்கு வேலை இருக்க கூடாது என்பதே ஆராய்ச்சியாளர்களின் ஒருமித்த கருத்து ஆகும்!

அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கில் NEFT, RTGS வசதி? செய்வது எப்படி?

May 25, 2022 0

 அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கிலிருந்து பிற வங்கி வாடிக்கையாளர்களுக்கு NEFT, RTGS வசதி மூலம் பணம் பரிவத்தனை செய்யலாம் என மே 17-ம் தேதி அறிவிப்பு வெளியானது



அதை தொடர்ந்து இந்த வசதியை அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கில் மே 18-ம் தேதி முதல் ஆரம்பம் ஆகியுள்ளது.

மேலும் 2022, மே 31-ம் தேதி முதல் அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கில் ஆர்டிஜிஎஸ் சேவை மூலமாகவும் பணம் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NEFT என்றால் என்ன? 
24 மணி நேரமும் ஒரு வங்கி கணக்கிலிருந்து எந்த ஒரு வங்கி கணக்கிற்கு வேண்டுமானாலும் இணையதள வங்கி சேவை மூலம் பணம் அனுப்பும் வசதியே NEFT. குறைந்தது 1 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரையில் NEFT பரிவர்த்தனையால் செய்யலாம். வங்கிக் கிளை மூலம் NEFT பரிவர்த்தனை செய்யும் போது 15 லட்சம் ரூபாய் வரையில் அனுப்பலாம்

அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கில் NEFT பரிவர்த்தனை செய்ய கட்டணம் எவ்வளவு? 
ரூ.10,000 வரையில் அனுப்ப ரூ.2.50 + ஜிஎஸ்டி 10,001 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை அனுப்ப ரூ.5 + ஜிஎஸ்டி 1 லட்சத்து 1 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை அனுப்ப ரூ.15 + ஜிஎஸ்டி ரூ.2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக அனுப்பும் போது ரூ.25 + ஜிஎஸ்டி

வாடிக்கையாளர் சேவை எண்? 
அஞ்சல் அலுவலக இணைய வங்கி கணக்கிலிருந்து பணம் அனுப்பும் போது வரும் பிரச்சனைகளை 1800 2666 868 என்ற எண்ணை தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்.

இணையதளம் மூலம் புகார் அளிப்பது எப்படி? https://www.indiapost.gov.in/VAS/Pages/ComplaintRegistration.aspx என்ற இணைப்பிற்குச் சென்று NEFT என்பதை தேர்வு செய்து புகார் அளிக்கலாம்.
மின்னஞ்சல் postatm@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் பெங்களூருவில் உள்ள நோடல் அலுவலகத்தில் NEFT பரிவர்த்தனை குறித்து புகார் அளிக்க முடியும்.

May 24, 2022

பணத்தை சேமிக்கும் விஷயத்தில் நீங்கள் செய்யும் தவறு என்ன தெரியுமா?

May 24, 2022 0

 


ஏழை முதல் பணக்காரர்கள் வரை சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை நிச்சயம் சேமித்து வைக்கும் பழக்கம் உள்ளது. தொழிலதிபர்கள் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்தால், ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் வங்கிகளிலும் அஞ்சலகங்களிலும் தங்களுக்கு தெரிந்த சேமிப்பு திட்டங்களில் இணைந்து பயனடைகின்றனர். எந்தவொரு நிதி இலக்கையும் நிறைவேற்ற, நீங்கள் நன்கு திட்டமிட்டு அதற்கேற்ப முதலீடு செய்ய வேண்டும். இருப்பினும், முதலீடுகளுக்காக பணம் சேமிக்கப்பட்டால் மட்டுமே நீங்கள் முதலீடு செய்யலாம். எனவே, திட்டமிடப்பட்ட முதலீடுகளுக்கு எந்தத் தவறும் இல்லாமல் பணத்தைச் சேமிக்க, வருமான வரம்பிற்குள் உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம்.



சேமிப்பதில் நடக்கும் தவறுகள்:

போதுமான அளவு பணத்தை சேமிக்க, நீங்கள் பின்வரும் தவறுகளை தவிர்க்க வேண்டும்:

1.செலவுகளை கண்காணிப்பது இல்லை

உங்கள் செலவுகளை நீங்கள் கண்காணிக்காவிட்டால், தேவையற்ற விஷயங்களுக்கு பணத்தை செலவழிக்க நேரிடும். தேவைகளுக்கான செலவினங்களைத் தவிர்க்கவோ அல்லது ஒத்திவைக்கவோ முடியாது என்பதால், கூடுதலாக செலவழிக்கும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள். எனவே பணத்தைச் சேமிக்க வேண்டும் என நினைத்தால், உங்கள் இலக்கு வரம்பிற்குள் உங்கள் செலவுகளைக் கண்காணிக்க வேண்டும்.

2. அவசர நிதிக்கு திட்டமிடுவதில்லை

அவசர கால தேவைகளுக்கு கைகொடுக்கும் வகையில் வருமானத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை எடுத்து வைக்க வேண்டும். அப்படி செய்வதால் அவசர காலத்தில் நீங்கள் கூடுதலாக செலவழிக்க மாட்டீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளலாம். அவசர காலத்தின் போது ஒரு மாதம் அல்லது இரண்டு அல்லது அதற்கு மேல் பணத்தைச் சேமிக்கத் தவறினால் உங்கள் வழக்கமான முதலீடுகள் தடம் புரளலாம். அதேபோல் அவசர காலத்திலும் செலவுகளை கடந்து குறிப்பிட்ட சேமிப்பை தொடர என்ன செய்ய வேண்டும் என்ற திட்டமிடலும் உங்களிடம் இருக்க வேண்டும்.

3. புதிதாக வந்த கேஜெட்களை உடனடியாக வாங்குதல்

புதிதாக அறிமுகப்படுத்தப்படும் விலையுயர்ந்த கேஜெட்களை உடனடியாக அதிக பணம் செலவழித்து வாங்குவது சேமிப்பிற்கு பாதகமாய் அமையும். ஏனெனில் லேட்டஸ்ட் அப்டேட் கொண்ட எலக்ட்ரானிக் கேஜெட்கள் இல்லாமல் கூட சிறப்பாக வாழ முடியும், ஆனால் சேமிப்பு இல்லாமல் இருப்பது எதிர்காலத்தில் பெரும் சிக்கலை கொடுக்கும். எனவே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கேஜெட்டுகள் அதிக விலை கொண்டவையாக இருப்பதால், குறைந்த விலையில் அவற்றை வாங்க நீங்கள் சிறிது காலம் காத்திருப்பதன் மூலம் அதற்கான செலவை ஒத்திவைக்கலாம்.

4.பேரம் பேசாமல் பொருட்களை வாங்குவது

அதிகமாகச் சேமிக்க, நன்றாக பேரம் பேசி அதிகபட்ச சில்லறை விலையை (எம்ஆர்பி) விட குறைவான விலையில் பொருட்களைப் வாங்க வேண்டும். சிறப்பு விற்பனைகள் அல்லது ஆன்லைன் டீல்களைப் பயன்படுத்தி நீங்கள் அதிகச் சேமிப்பைப் பெறலாம்.

5. தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த தவறுதல்

சேமிப்பை அதிகரிக்க, சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் ஆன்லைன் சேவைகளுக்காக கூடுதலாக செலவழிப்பதை தவிர்க்க வேண்டும். ஒரு சேவையை பெறுவதற்கு அல்லது சப்ஸ்கிரைப் செய்வதற்கு முன்பு அது உங்களுக்கு உண்மையாகவே தேவையா?, அதில் உள்ள அனைத்து அம்சங்களையும் நீங்கள் பயன்படுத்துவீர்களா? போன்ற அம்சங்களை சரி பார்க்க வேண்டும்.

May 22, 2022

சத்து மாவு கஞ்சி குடிப்பதால் கிடைக்கும் 7 நம்பமுடியாத நன்மைகள் : மிஸ் பண்ணாம குடிங்க..!

May 22, 2022 0

 சத்து மாவு என்பது தானியங்கள் மற்றும் பருப்புகளின் கலவையிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு மாவு ஆகும். அதன் குளிர்ச்சியான குணங்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட இந்த பானம் பல வகையான ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. சத்து மாவின் ஆரோக்கிய நன்மைகள் உடலின் நிலைத்தன்மைக்குத் தேவையான அத்தியாவசிய தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்களுடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன.


குறிப்பாக வெறும் வயிற்றில் இதை உட்கொள்ளும் போது வயிற்று அசௌகரியத்தை நீக்கும் மற்றும் உடலின் தீங்கு விளைவிக்கும் நச்சுகளையும் நீக்கும். முன்னரே குறிப்பிட்டபடி சத்து மாவு உடலைக் குளிர்விக்கும் என்பதால் கோடை கால வெப்பத்திலிருந்து ஆறுதல் பெற இதுவொரு 'பெஸ்ட் ஆப்ஷன்' ஆகும். இப்படியாக கோடையில் சத்து மாவு பானத்தை குடிப்பதால் கிடைக்கும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

உடனடி ஆற்றலை வழங்கும் : சத்து மாவு பானம், கணிசமான அளவு தாதுக்கள் மற்றும் ஆற்றலைக் கொண்ட ஒரு எளிய பானமாகும். மேலும், இதை நம் உடலால் மிகவும் எளிதில் ஜீரணிக்க முடியும். தொடர்ந்து சத்து மாவு பணம் குடிப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நல்லது.

நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்கும் : சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைத் தடுப்பது சத்து மாவிப்பின் முக்கியமான ஆரோக்கிய நன்மைகளில் ஒன்றாகும். சத்து மாவு என்பது குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்ட கரும்பு சாறு போன்றதொரு பானமாகும். இதன் விளைவாக, நேச்சுரல் சுகர் படிப்படியாக வெளியிடப்படும்.

செரிமானத்தை மேம்படுத்தும் : உப்பு, இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து உள்ளதால், சத்து மாவு செரிமானப் பாதையின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது, இது வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் மேம்படுத்தும், சுத்தப்படுத்தும். வெறும் வயிற்றில், ஒரு கிளாஸ் சத்து மாவு பணம் குடித்துவர கண்கூட பலன் கிடைக்கும்.

எடை இழப்புக்கு உதவும் : சத்து மாவு பானத்தை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது ப்ளோட்டிங் ஏற்படுவது குறையும். மேலும், இது உங்கள் உடலின் மெட்டபால்ஸித்தை அதிகரிக்கிறது மற்றும் கூடுதல் கலோரிகளை சரியாக 'பர்ன்' செய்யவும் உதவுகிறது.

சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்கும் : தொடர்ந்து சத்து மாவை உட்கொள்வது சருமத்திற்கு ஊட்டமளிக்கும் மற்றும் சருமத்தின் நீரேற்றத்தை பராமரிக்கும். மேலும் சருமத்தில் உள்ள செல்களில் ஏற்படும் தேய்மானத்தை தடுக்கும்.

பெண்களுக்கான ஒரு மூலிகை மருந்து : சத்து மாவு என்பது ஊட்டச்சத்து நிறைந்த ஒரு பானமாகும், இது பெண்களுக்கு கர்ப்பம் மற்றும் மாதவிடாய் காலத்தில் இழந்த ஊட்டச்சத்துக்களை மீண்டும் பெற உதவுகிறது மற்றும் ஆரோக்கியமாக இருக்க ஆற்றலையும் வழங்குகிறது. ஒட்டுமொத்தமாக சத்து மாவு பானம், கோடையில் குடிக்க வேண்டிய ஒரு சிறந்த ஆற்றல் நிர்மபிய பானமாகும்


May 19, 2022

பூண்டின் நம்பமுடியாத ஆரோக்கிய நன்மைகள்

May 19, 2022 0

 


பூண்டு நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது நம் உடலுக்கு நன்மை பயக்கும் பல பண்புகளைக் கொண்டுள்ளது. அதேபோல் பூண்டு உடலுக்கும் சருமத்திற்கும் மிகவும் நல்லது. பூண்டை தொடர்ந்து நம்முடைய உணவில் அதிகப்படியாக சேர்த்து வந்தால், நம்முடைய உடலில் கொலஸ்ட்ராலின் அளவு கட்டுப்படுத்தப்படுகின்றது. சளி இருமல் நீங்க, புற்றுநோய் வராமல் தடுக்க, நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உடலுக்கு ஆரோக்கியத்தை சேர்க்கும் பொருட்களின் வரிசையில் இந்த பூண்டிற்கு முதல் இடம் என்று சொன்னால் அது மிகையாகாது.

இத்தகைய மருத்துவ குணங்களைக் கொண்ட பூண்டை சருமத்திற்கு எப்போதாவது பயன்படுத்தியிருக்கிறீர்களா? இல்லையென்றால், பூண்டு உங்கள் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். நமது சருமத்திற்கு அவற்றின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

சருமத்திற்கு பூண்டு நன்மைகள்

முகப்பருவை குறைக்கலாம்: 

பூண்டு ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும் மற்றும் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே முகப்பருவை குறைக்க பூண்டு பயன்படுத்தப்படலாம். முகப்பருவை குறைக்க பூண்டு பயன்படுத்துவது எப்படி என்பதை பார்ப்போம். 

நீங்கள் 1 கிராம்பு பச்சைப் பூண்டு மற்றும் ஒரு கிளாஸ் குளிர்ந்த நீரைச் சாப்பிடலாம். மேலும், ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கும் நீரேற்றமாக இருப்பதை உறுதி செய்து உங்கள் சருமத்தை சுத்தம் செய்யுங்கள்.

முதுமையை தாமதப்படுத்தலாம்: தோல் வயதானது மன அழுத்தம், ஆரோக்கியமற்ற பழக்கம், மன அழுத்தம், வீக்கம், மரபணுக்கள் போன்றவற்றால் ஏற்படுகிறது. பூண்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு கலவைகள் ஆக்ஸிஜன் ரேடிகல்களை அகற்ற உதவுகிறது, இதனால் மன அழுத்தத்தை குறைக்கிறது. சுருக்கங்களை தாமதப்படுத்த பூண்டை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்ப்போம். காலையில் முதலில் தேன் மற்றும் எலுமிச்சை பழத்துடன் ஒரு பூண்டு பற்களை உட்கொள்ளவும். நீங்கள் திரிபலா நீரில் பச்சையாக நறுக்கிய பூண்டு சேர்த்து காலையில் குடிக்கலாம். 

சொரியாசிஸை ஆற்றும்: பூண்டு உட்கொள்வது நோய் அறிகுறிகளைக் குறைக்க உதவும். தடிப்புத் தோல் அழற்சி காரணமாக ஏற்படுகிறது, மேலும் பூண்டு ஒரு வலுவான அழற்சி எதிர்ப்பு முகவர் என்பதால், பலர் தடிப்புத் தோல் அழற்சியைக் குறைக்க பூண்டு பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர். இருப்பினும், இதை நிரூபிக்க நேரடி அறிவியல் சான்றுகள் இல்லை.

தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

May 19, 2022 0

 தரையில் அமர்ந்து சாப்பிடுவது, சாதாரண விஷயமாக இருந்தாலும் அதில் பல நன்மைகள் அடங்கியுள்ளன. இரண்டு கால்களையும் மடக்கி, தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் எத்தகைய பலன்களை பெற முடியும் என்று இங்கே காணலாம்:




1) வழக்கமாக தரையில் அமரும்போது இரண்டு கால்களையும் மடக்கி அமர்வது ‘சுகாசனம்’ எனப்படும் யோகப் பயிற்சியாகும். இந்த நிலை செரிமானத்திற்கு உதவுகிறது. தரையில் அமர்ந்து சாப்பிடும்போது உணவு எடுப்பதற்கு நாம் முன்னால் செல்லுவோம். உணவு எடுத்த பிறகு பின்னால் வருவோம். இந்த செயல்பாட்டால் வயிற்றில் உள்ள தசைகள் செயல்பட்டு எளிமையான செரிமானத்திற்கு வழிவகுக்கிறது.

2) தரையில் அமர்ந்து சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. டேபிளில் அமர்வதை விட, தரையில் அமரும்போது, வேகஸ் எனும் நரம்பு (மூளைக்கு தகவல் அனுப்பும் நரம்பு) சுறுசுறுப்பாக செயல்படுகிறது. இதனால் வயிறு நிறைந்தவுடன் உடனடியாக தகவலை மூளைக்கு அனுப்புகிறது. அதிகமாக சாப்பிடுவது தவிர்க்கப்பட்டு உடல் எடை சீராகிறது.

3) தரையில் அமர்வது இன்னொரு ஆசனமான பத்மாசனத்துடன் தொடர்புடையது. இதன் மூலம் வயிற்றுப் பகுதியைச் சுற்றியுள்ள தசைகள் அனைத்தும் விரிவடைந்து உடம்பில் உள்ள வலிகளை குறைக்கிறது. தரையில் அமர்ந்து உணவு சாப்பிடும் பொழுது உடல் தசைகள் நன்றாக செயல்பட்டு நெகிழ்வுத்தன்மையை கொடுக்கிறது.

4) அமைதியான மனநிலையும், செய்யும் காரியத்தில் கவனத்தைச் செலுத்தவும், சிறந்த முடிவுகளை எடுக்கவும், உணவின் சுவை, நறுமணம் முதலிய அனைத்தையும் கவனிக்க உதவுகிறது. இதனால் மறைமுகமாக நினைவாற்றலையும் அதிகரிக்கிறது.

5) பரபரப்பான வாழ்க்கை முறையில் குடும்பத்துக்காக நேரம் ஒதுக்குவது சாப்பிடும்போது மட்டும்தான். குடும்பத்துடன் ஒன்றாக தரையில் அமர்ந்து சாப்பிடும் போது, மன நிம்மதி ஏற்பட்டு உறவை மேம்படுத்த முடியும்.

6) ஆரோக்கியமான வாழ்விற்கு தோரணை மிகவும் முக்கியமானதாகும். தரையில் அமரும்போது நமது முதுகுத்தண்டு நேராக இருந்து கம்பீரமான தோரணையை ஏற்படுத்துகிறது. இதனால் தோள் பட்டையில் உள்ள வலிகள் குறைந்து, தசைகள் வலுவடைவதற்கு உந்து சக்தியாகவும், நரம்பு மண்டலத்தை சீரமைக்கவும் உதவுகிறது.

7) தரையில் அமர்ந்து சாப்பிட்டு, எந்த ஒரு உதவியும் இல்லாமல் எழுந்து நிற்பவர்களுக்கு ஆயுள் அதிகமாவதை ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆகவே, ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும், நமது ஆயுள் அதிகரிப்பதற்கும் தரையில் அமர்ந்து சாப்பிடுவது ஒரு எளிய பயிற்சியாகும்.

8) தொடர்ச்சியாக முட்டிகளை மடக்கி அமர்வதனால் மூட்டுகளுக்கும், இடுப்பு பகுதியில் உள்ள எலும்புகளுக்கும் உறுதி கிடைக்கிறது. மேல்வாதம் மற்றும் கீழ்வாதம் முதலியவற்றை தடுக்கிறது. தரையில் அமர்ந்து சாப்பிடுவதனால் இது மூட்டுகளை எளிதாக இயங்கச் செய்கிறது. தரையில் அமர்ந்து சாப்பிடுவது ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் ஒரு எளிய பயிற்சியே.

May 16, 2022

மன ஆரோக்கியத்தை மீட்டெடுக்க ஆக்கப்பூர்வமான வழிகள்

May 16, 2022 0

 தியானம், உடற்பயிற்சி, சரிவிகித ஊட்டச்சத்து உணவு, யோகா போன்றவை மன ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எதிர்பாராத சூழலில் மனதை உலுக்கும் நிகழ்வுகள், சம்பவங்கள் நடந்தால் அதில் இருந்து மீண்டு வருவதற்கு வெகு நேரமாகும். அது மன நலனில் கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். இத்தகைய சூழலில் மன ஆரோக்கியத்தை மீட்டெடுக்க ஆக்கப்பூர்வமான சில வழிமுறைகளை பின்பற்றுவது முக்கியம். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:



1. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று பேசுவதை நிறுத்துங்கள்

மன நலத்தை பேணுவதை விட மற்றவர்கள் தங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள், தங்களை எந்த நிலையில் வைத்திருக்கிறார்கள், நாம் ஏதாவது ஒரு காரியத்தில் ஈடுபட்டால் அதனை எப்படி எடுத்துக்கொள்வார்கள், விமர்சிப்பார்களா? பாராட்டுவார்களா? என்பதை அறிந்து கொள்வதற்குத்தான் பலரும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இது மன ஆரோக்கியத்திற்கு சுமையை ஏற்படுத்தும். மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி தொடர்ந்து சிந்திப்பது, சுதந்திரமான வாழ்க்கை சூழலுக்கு வழிவகுக்காது. நிறைவேறாத ஆசைகள், லட்சியங்கள் போன்ற இலக்குகளை நோக்கி பயணிக்கும்போது அதிலும் பாதிப்பை ஏற்படுத்தும். தேவையில்லாத விஷயங்களை பற்றி சிந்தித்து குழம்பிப்போய்விடுவீர்கள். மனம் நிம்மதியை இழந்துவிடும். உங்கள் மனதிற்கு சரி என்று தோன்றினால், அதனை பின்பற்றுவதற்கு தயங்கக்கூடாது. தேவையற்ற சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது.

2. மனதை லேசாக்குங்கள்

நெருக்கடியான சூழலை எதிர்கொள்ளும்போது பதற்றம் எட்டிப்பார்க்கும். அந்த சமயத்தில் மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள மனம் விரும்பாது. தன்னம்பிக்கையை இழக்க நேரிடும். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது. மனதை ரிலாக்‌ஸ் ஆக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அது தவறான முடிவு எடுப்பதை தடுக்கும். வாழ்க்கையை முழுமையாகவும், சுதந்திரமாகவும் வாழ வழிவகை செய்யும். மன நலனும் பாதுகாக்கப்படும்.

3. நகைச்சுவை உணர்வை தக்கவையுங்கள்

நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள் கடினமான சூழலையும் சிறப்பாக கையாள்வார்கள். சட்டென்று டென்ஷன் ஆக மாட்டார்கள். நகைச்சுவை உணர்வை தக்கவைத்துக்கொண்டால் மனம் ரிலாக்‌ஸ் ஆகும். எல்லா விஷயங்களையும் சீரியசான கண்ணோட்டத்தில் அணுகத் தோன்றாது. மன ஆரோக்கியத்தின் தரத்தையும், ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மேம்படுத்த உதவும்.

4. நெருக்கமானவர்களுடன் பகிருங்கள்

உடல் ஆரோக்கியத்தை போலவே மன நலமும் முக்கியமானது. ஏதேனும் பிரச்சினையை எதிர்கொண்டால் அதுபற்றி மனதுக்குள்ளேயே பேசிக்கொள்வது நல்லதல்ல. அதுபற்றி மனதுக்கு பிடித்தமான நபர்கள், நண்பர்கள், குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அது மார்பிலும், மனதிலும் இருந்து சுமையை குறைக்க பெரிதும் உதவும். நெருக்கமானவர்களிடம் மட்டுமின்றி அந்நிய நபர்களிடமும் பேசலாம். ஆனால் நீங்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினையை பற்றி அல்லாமல் பொதுவான விஷயங்களை பேசலாம். அது மன நிலையை மேம்படுத்தும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

5. வழக்கத்தை மாற்றுங்கள்

தினமும் ஒரே மாதிரியான வழக்கத்தை பின்பற்றுவது சலிப்புணர்வை உண்டாக்கும். ஒருவித மந்தமான உணர்வை ஏற்படுத்தும். சில சமயங்களில் சின்ன விஷயமாக இருந்தாலும், அது வழக்கத்திற்கு மாறாக நடந்தால் பயத்தை உண்டாக்கிவிடும். அவ்வாறு உணரும்போதெல்லாம் வழக்கமான நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். அது மன நலனை மேம்படுத்த உதவும்.

6. செயல்பாடுகளில் ஈடுபடுங்கள்

சலிப்பை முறியடிப்பதற்கான சிறந்த வழி, நீங்கள் விரும்பும் விஷயங்கள், வாழ்க்கைக்கு மதிப்பு சேர்க்கும் செயல்கள் போன்றவற்றில் ஈடுபடுவதாகும். ஓவியம் வரைதல், நடனம் ஆடுதல், தோட்டக்கலை சார்ந்த பணிகளில் ஈடுபடுதல் என மனதுக்கு பிடித்தமான விஷயங்களில் கவனம் செலுத்தலாம். இவை மட்டுமின்றி தியானம் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடலாம். இதுவும் மனதளவில் வலிமையாக செயல்பட ஊக்கப்படுத்தும்.

7. காலை - இரவு வழக்கத்தை உருவாக்குங்கள்

காலையிலும், இரவிலும் குறிப்பிட்ட விஷயங்களை செய்வதற்கு நேரம் ஒதுக்குங்கள். அதில் உடற்பயிற்சியும், தியானமும் அவசியம் இடம் பெற வேண்டும். அது உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் செயல்பட உதவும். காலை உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். காலையில் உடற்பயிற்சி, இரவில் தியானம் என நேரத்தை ஒதுக்கிவிடலாம். இரவில் தூங்க செல்வதற்கு முன்பு செல்போன் பார்ப்பதை தவிர்த்துவிட்டு தியானம் மேற்கொள்வது நல்ல தூக்கத்தை வரவழைக்கும். அசவுகரியம், மன குழப்பத்தை உணரும் போது இதனை செய்வது பலன் தரும். மனதை ஆசுவாசப்படுத்த உதவும்.

8. வேலையைப் பற்றி பெருமையாக பேசுவதை நிறுத்துங்கள்

இரவு பகல் பாராமல் உழைக்கும் பலர் வேலை மீதுதான் முழு கவனத்தையும் செலுத்துவார்கள். குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிடமாட்டார்கள். தாங்கள் பார்க்கும் வேலையை பற்றி மற்றவர்களிடம் பெருமையாக சொல்வார்கள். தன்னால்தான் அந்த வேலையை சிறப்பாக செய்து முடிக்க முடியும் என்றும் பெருமிதம் கொள்வார்கள். வேலை எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு குடும்ப நலன் மீது அக்கறை கொள்வதும் அவசியமானது.

அதனை புரிந்து கொள்ளாவிட்டால் மன நிம்மதியையும், இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் இழக்க நேரிடும். வேலை, குடும்பத்துடன் செலவிடும் நேரம் மற்றும் பொழுதுபோக்கு இவை மூன்றையும் சமமாக கையாளும் பின்லாந்து, உலகில் மகிழ்ச்சியாக மக்கள் வசிக்கும் நாடாக அடையாளப்படுத்தப்படுகிறது. அங்கு வசிப்பவர்களை போல வேலைக்கும், வாழ்க்கைக்கும் இடையே சம நிலையை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். இத்தகைய ஆக்கப்பூர்வமான வழிகள் மன ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உதவும்.

May 14, 2022

இரவு தூங்கப்போகும் முன் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழம்.!

May 14, 2022 0

 சப்போட்டா பழத்திலுள்ள சில சத்துப்பொருட்களும், வைட்டமின்களும் இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் குணம் கொண்டவை.

எனவே தினந்தோறும் சப்போட்டா பழத்தை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. சப்போட்டா பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், இரண்டு சப்போட்டா பழத்துடன், ஒரு டம்ளர் பால் சேர்த்து, மிக்ஸியில் அடித்து மில்க் ஷேக் தயாரித்து சாப்பிடலாம்.



சப்போட்டா, கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறந்த இயற்கை மருந்தாகும்.

சப்போட்டா பழக்கூழ் கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கிறது மற்றும் தாகத்தை தணிக்கவும் உதவுகிறது.

தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்கு செல்லும் முன்னர் ஒரு டம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும் மற்றும் சருமம் பளபளப்பாகும்.

சப்போட்டா பழத்தைத் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குடல்புண், குடல் எரிச்சல், வயிற்றுவலி, போன்ற பிரச்சனைகள் சரியாகும். சப்போட்டா பழத்தை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு, குடல் புற்றுநோய் ஏற்படாது.

சளித்தொல்லையைப் போக்க சப்போட்டா பழச்சாறுடன் 2 டீஸ்பு+ன் எலுமிச்சைச்சாறு கலந்து சாப்பிட வேண்டும்.

சப்போட்டா பழத்துடன் கொய்யா, திராட்சை ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்துச் சாறு எடுத்துச் சாப்பிட்டுவர உடல் வலிமை பெறும்.

சப்போட்டா பழத்தின் சாறுடன், சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகளைச் சரிசெய்யும்.

சுரைக்காய் அடிக்கடி சாப்பிடுவதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள் !!

May 14, 2022 0

 கோடை கால வெப்பத்தால் உடல் சூடு அதிகரித்து, தோல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகிறது.




சுரைக்காயை உணவில் சேர்த்துக்கொள்வதால் உடல் சூடு குறையும், வெப்பத்தால் ஏற்படும நோய்கள் தாக்காமல் காக்கும். மேலும் நமது தோலுக்கு மினுமினுப்பையும் கொடுக்கும்.

சுரைக்காய் ஒரு சிறந்த சிறுநீர் பெருக்கியாக செயல்படுகிறது. ஏனெனில் சுரைக்காய் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்கு வெளியேற உதவுகிறது.

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் பழுத்த சுரைக்காயை ரசமாக்கி, அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து அருந்தினால் சிறுநீரம் சம்பந்தமான பிரச்சனைகளில் சிறந்த முன்னேற்றம் கிடைக்கும்.

சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண்நோய்கள் நீங்கும். வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகள், மலச்சிக்கல் போன்றவை தீரும். குறிப்பாக மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்துவ உணவாக உள்ளது.

பித்தத்தைக் குறைக்க சுரைக்காயை உணவில் சேர்த்து கொள்ளலாம். ஏனெனில் சுரைக்காய் பித்தத்தைக் குறைக்க ஒரு சிறந்த இயற்கை மருத்துவ உணவாகும்.

சுரைக்காயில் நார்ச்சத்து வளமான அளவில் இருப்பதால் மலச்சிக்கல், குடலில் புண்கள் உள்ளவர்கள் தினமும் ஒரு வேளை சுரைக்காயை உணவில் சேர்த்து வந்தால் குடல் புண்கள் ஆறும்.

May 10, 2022

எடையைக் குறைக்க உதவும் ‘சைவ உணவு முறை’

May 10, 2022 0

 டல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு சைவ உணவு முறை  சிறந்தது. இதில் பழங்கள், காய்கறிகள், உலர்ந்த பீன்ஸ் மற்றும் பட்டாணி, தானியங்கள், விதைகள் மற்றும் கொட்டைகள் ஆகியவை உணவாக உட்கொள்ளப்படுகின்றன.





சைவ உணவுகளைப் பின்பற்றுபவர்கள், தங்கள் ஊட்டச்சத்துக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் பலவகையான உணவுகளை சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். புரதம், இரும்பு, கால்சியம், துத்தநாகம் மற்றும் வைட்டமின் பி12 ஆகியவை நிறைந்த உணவுகளை தினமும் சாப்பிட வேண்டும்.

இறைச்சி, மீன் போன்றவற்றைத் தவிர்க்கும் சைவ உணவு முறையில் முட்டை, பால் மற்றும் தேன் போன்ற உணவுகள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன. 

‘சைவ உணவு முறை’ உடல் எடையைக் குறைக்க உதவும், இதயத்தைப் பாதுகாக்கும், சர்க்கரை நோய் ஏற்படாமல் தடுக்கும். இதில் நார்ச்சத்து அதிக அளவில் இருப்பதால் மலச்சிக்கல் போன்ற வயிற்றுக்கோளாறுகள் ஏற்படுவதில்லை.

இந்த உணவு முறையை பின்பற்றுவதன் மூலம், அதிக அளவில் நார்ச்சத்து, ஆன்டிஆக்சிடன்ட், பொட்டாசியம், மக்னீசியம், போலேட், வைட்டமின் சி, ஏ, ஈ கிடைக்கிறது.

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைப்பதற்கு, தினசரி உணவில் முழு தானியங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தைப் பராமரிக்கத் தேவைப்படும் புரதம், கனிமங்கள், வைட்டமின்கள், ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் பைட்டோகெமிக்கல்கள் இதில் உள்ளன. தினமும் ஏதேனும் ஒரு தானியத்தை உணவில் சேர்த்து வருவதால் உடல் எடை குறைவதோடு, ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் நாம் பயன்படுத்தும் சமையல் எண்ணெய் முக்கிய இடம் பிடிக்கிறது. எனவே சைவ உணவு முறையைப் பின்பற்றுபவர்கள், தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

தினமும் இயற்கை தானியங்களை, காய்கறிகளை மட்டுமே சாப்பிடுவது, பெருங்குடல் புற்றுநோய் முதல் பல்வேறு வகை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைப் பெருமளவு குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இயற்கை உணவு சாப்பிடுவது ரத்த நாளங்களைக் காப்பதுடன், அவற்றில் கொழுப்பு படிவதையும் தடுக்கிறது.

இதில் முட்டை போன்ற உணவுப் பொருட்கள் சேர்க்கப்படுவதால், எலும்புகளின் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் போதுமான அளவு கிடைக்கிறது. இம்முறைகளைப் பின்பற்றினால் எளிதாக எடையைக் குறைக்கலாம்

குறைந்த செலவில் உடல் எடையைக் குறைக்கலாம்

May 10, 2022 0

 பெரும்பாலான பெண்களின் முக்கிய பிரச்சினைகளில் குறிப்பிடத்தக்கது உடல் எடை அதிகரிப்பு. எடையைக் குறைப்பதற்காக உடற்பயிற்சி செய்வது, உணவுப் பழக்கங்களை மாற்றுவது, குறைந்த அளவிலான உணவுகளை சாப்பிடுவது என பல வழிகள் உள்ளன. 



இதற்காக அதிக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். உடல் எடையை சீராக பராமரிப்பதற்கு முக்கிய காரணமாக விளங்குவது உணவு முறை. இதற்காக அதிக பணம் செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. குறைந்த செலவில் உடல் எடையைக் குறைப்பதற்கும் சில வழிகள் உள்ளன. அவற்றை பார்ப்போமா...

1) காய்கறிகள்:
எடைக்குறைப்பில் ஈடுபடுபவர்கள் காய்கறிகளை அதிகமாக சாப்பிட வேண்டும். வழக்கமாக காய்கறிகளை வாங்கும் இடங்களை விட, சந்தைகளில் காய்கறிகளின் விலை குறைவாக இருக்கும். அதனால், நேரடியாக உள்ளூர் சந்தைக்கு சென்று காய்கறி வாங்கினால் புதிய, ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகளை குறைவான விலையில் வாங்கலாம்.

2) திட்டமிட்டு பொருட்களை வாங்குதல்:
பல்பொருள் அங்காடிகளுக்கு செல்லும்போது தேவையற்ற பொருட்களை வாங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால், பொருட்கள் வாங்கும் முன்பு தேவையான மற்றும் சத்தான உணவு பொருட்கள் பற்றிய பட்டியலை தயாரிக்க வேண்டும். அதற்கு முன்பு வீட்டில் என்னென்ன பொருட்கள் உள்ளது என்பதை, ஒரு முறை சரிபார்த்து விடுவது நல்லது. வாங்கும் பொருட்களை காலாவதி தேதி முடிவதற்குள் பயன்படுத்த வேண்டும்.

3) ஊட்டச்சத்து நிறைந்த கலோரி குறைவான உணவுகள்:

பழங்கள்
ஆரஞ்சு, மாதுளை, கொய்யாப் பழம் மற்றும் ஆப்பிள் போன்ற கலோரி குறைவாக இருக்கும்  பழவகைகளில் புரதம் மற்றும் தாதுக்கள் இருப்பதால், அவை உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமில்லாமல், ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கும், நோய்களைத் தடுப்பதற்கும் உதவுகின்றன.

கீரைகள்
விலை மலிவான கீரைகளில் உடல் எடையைக் குறைப்பதற்கான சத்துக்கள் உள்ளன.  அவற்றை தினசரி உணவில் சேர்க்கும்போது கால்சியம் மற்றும் பொட்டாசியம் உடலில் அதிகரிக்கிறது.
காய்கறிகளில் கேரட், பீன்ஸ் மற்றும் பயறு வகைகளில் மெக்னீசியம் அதிகமாக உள்ளது. இது கலோரி மற்றும் கார்போஹைட்ரேட்டை கட்டுப்பாட்டுக்குள் வைக்கக்கூடியது.

4) இயற்கையாக கொழுப்பை கட்டுப்படுத்தும் மசாலாப் பொருட்கள்:
உடல் எடையைக் குறைக்க உதவும் மசாலாப் பொருட்களான வெந்தயம், மஞ்சள், மிளகு, லவங்கப்பட்டை, இஞ்சி, குடைமிளகாய், சீரகம் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதில் உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற மசாலாப் பொருட்களைத் தேர்ந்தெடுங்கள்.

5) சத்தான உணவுப் பழக்கம்:
அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் வேகவைத்த உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். வறுத்த மற்றும் எண்ணெய்யில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
 காலையில் காபிக்கு பதில் புத்துணர்ச்சியூட்டும் மூலிகை தேநீர் குடிக்கலாம். லெமன் டீ, கிரீன் டீ, இஞ்சி டீ, சீரக தேநீர், செம்பருத்தி தேநீர் மற்றும் மிளகுக்கீரை தேநீர் ஆகியவற்றை தாராளமாகப் பருகலாம்.
தயிரில் அதிகமான கலோரி இல்லாததால், காலை உணவுக்கு 3 கப் தயிர் சாப்பிட்டாலே உடல் எடை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வு கூறுகிறது.

வெயில் காலத்தில் ஏ.சி. பயன்பாடு மற்றும் பராமரிப்பு

May 10, 2022 0

 கோடைக்காலத்தில், வெப்பத்தில் இருந்து தப்பிப்பதற்காக பெரும்பாலானவர்கள் ஏ.சி. பயன்படுத்துவார்கள். தொடர்ந்து அதிகப்படியான பயன்பாட்டால் மின்சாரக்கட்டணம் உயர்வதும் பரவலாக நடக்கும். சரியான முறையில் ஏ.சி.யை பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.




மாலை நேரத்தில், வீட்டில் ஜன்னல் கதவுகளை திறந்து வைத்து குளிர்ந்த காற்றை உள்ளே வர அனுமதிப்பதன் மூலம், அதிக நேரம் ஏ.சி.யை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது.

150 சதுர அடி அறைக்கு 1.5 டன் திறன் கொண்ட ஏ.சி. தேவை. எனவே அறையின் அளவை கணக்கீடு செய்து ஏ.சி.யை தேர்வு செய்ய வேண்டும்.

தற்போது சந்தையில் வந்துள்ள இன்வெர்ட்டர் ஏ.சி.களை பயன்படுத்துவதன் மூலம், மின்சாரத்தை வெகுவாக மிச்சப்படுத்த முடியும். அது எவ்வளவு ஸ்டார் கொண்டது என்பதை அறிந்து, பின் ஏ.சி. நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் வாங்குவது சிறந்தது.

பலர் ஏ.சி.யை 20 முதல் 22 டிகிரி வெப்பநிலையில் இயக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆனால் 24 டிகிரிக்கு மேல் இயக்குவதே நல்லது. இதன் மூலம் ஆரோக்கியம் பாதிப்பதைத் தடுப்பதோடு, மின்சாரச் செலவையும் குறைக்க முடியும்.

மூன்று மாதத்துக்கு ஒரு முறை, ஏ.சி.யின் காற்று வடிகட்டியை சுத்தப்படுத்தவேண்டியது அவசியம். சரியான கால இடைவெளியில் ஏ.சி.யை பழுதுபார்ப்பது, தேவையற்ற செலவுகள் ஏற்படுவதைத் தடுக்கும்.
இரவு பகலாக ஏ.சி.யை பயன்படுத்தும்போது, அறையில் உள்ள கதவு, ஜன்னல்களை அடைத்து, திரைச்சீலைகளைக் கொண்டு மூடி பயன்படுத்த வேண்டும்.

ஏ.சி. பயன்படுத்தும் அறையில் இரும்பால் செய்யப்பட்ட பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. அறையில் திறந்த நிலையில் உள்ள அலமாரிகளை பி.வி.சி. திரைகளைக்கொண்டு மூடுவது நல்லது.
புத்தகங்கள், துணிகள் போன்றவற்றை ஏ.சி. இயந்திரத்தின் நேர் எதிரே இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஏ.சி. பொருத்தப்பட்ட அறையில், மேற்கூரையில் இயங்கும் மின்விசிறி பொருத்துவதைவிட, டேபிள் பேன் எனும் சுவற்றில் பொருத்தும் மின்விசிறி பயன்படுத்துவதே சிறந்தது.

தண்ணீர் வடியும் குழாயை சரியான முறையில் வடிகாலோடு இணைக்க வேண்டும். வடிகுழாய் மேலும் கீழும் இருந்தால், தண்ணீர் சரியாக வெளியேறாமல் மீண்டும் ஏ.சி. இயந்திரத்துக்கே வந்து, அறைக்குள் கொட்டுவதற்கு வாய்ப்பு உண்டாகும்.

மேற்கூறிய குறிப்புகளை கடைப்பிடிப்பதன் மூலம் ஏ.சி.யின் ஆயுள் காலத்தை அதிகப்படுத்துவதோடு, மின்சாரக் கட்டணத்தையும் குறைக்க முடியும். 

கோடைக்கால பகல் தூக்கம் ஆரோக்கியமானதா?

May 10, 2022 0

 ‘பகலில் தூங்கினால் உடல் எடை அதிகரித்துவிடும்’ என்பது பலரின் கருத்தாக இருக்கிறது. ஆனால் அது தவறு. 



வயிறு நிறைய உணவு சாப்பிட்டுவிட்டு, நீண்ட நேரம் தூங்கினால்தான் ஆபத்து. வீட்டில் ஓயாது உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு, பகல் நேர தூக்கம் தவிர்க்க முடியாதது. இன்று பெரும்பாலான இல்லத்தரசிகள் பகல் நேர தூக்கத்தை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல், பணியாற்றுபவர்கள் கூட, விடுமுறை நேரத்தில் பகல் நேர தூக்கத்தை கடைப்பிடிப்பது உண்டு.


நாம் இரவில் 6 முதல் 8 மணி நேரம் வரை தூங்குவோம். குளிர் காலத்தில் பகலில் தூங்குவதற்கும், கோடைக்காலத்தில் பகல் நேரத்தில் தூங்குவதற்கும் வேறுபாடு உண்டு. கோடைக்காலத்தில் பகல் நேரம் அதிகமாக இருக்கும் மற்றும் வெப்பம் அதிகமாக இருப்பதால் உடலில் நீர்ச்சத்து குறையும். இதனால் மூளை சோர்வடையும்.

காலை முதல் மதியம் வரை மூளை மற்றும் உடலிற்கு அதிக வேலை கொடுக்கும்போது, சற்று ஆசுவாசப் படுத்திக்கொள்ள மூளையோ, உடலோ தானாகவே ஓய்வு கேட்கும். அந்த நேரத்தில் 15 நிமிடம் தூங்கினால் உடல் உறுப்புகள் சுறுசுறுப்பாகிவிடும்.

ஒரு சிலர் உடல் உழைப்பு இல்லாமல், மூளைக்கு அதிக வேலை கொடுக்கக்கூடிய வகையிலான பணிகளில் ஈடுபட்டிருப்பார்கள். இத்தகையவர்களுக்கு அதிக சோர்வின் காரணமாக, சில சமயங்களில் மூளை உறக்க நிலைக்குக் கொண்டு செல்லும். இவ்வாறு தானாகவே உறக்கம் வரும் நேரத்தில், பத்து நிமிடம் ஓய்வு எடுத்துக் கொள்வதில் தவறில்லை. இதனால் உடல் எடை அதிகரிக்காது. பகலில் சிறிது நேரம் தூங்குவதால் மூளை செயல்பாடு அதிகரித்து அறிவுத்திறன் வளரும். பகலில் தூங்குவது இதயத்திற்கு நல்லது. ரத்த அழுத்தம் குறையும். நினைவாற்றலை அதிகரிக்கவும், செயல்திறனை மேம்படுத்தவும், மனநிலையை சீராக வைக்கவும் உதவும்.

கோடைக்காலத்திலும், உடல் உழைப்பே இல்லாமல் பகல் பொழுதில் தூங்கினால், நோய்களுக்கான களமாக உடல் மாறி விடும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தேவையான அளவு உழைப்பை உடல் மேற்கொண்டு விட்டது எனும் பட்சத்தில், சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். இதனால் எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை.

அதற்காக வெகுநேரம் தூங்க வேண்டாம். மதிய வேளையில் 15 நிமிடங்களில் இருந்து 30 நிமிடம் வரை மட்டுமே தூங்குவது நல்லது. அதற்கு மேலே தூங்கினால், ஒரு கட்டத்தில் மதிய தூக்கத்திற்கு உடல் அடிமையாகி விடும். 

உடல் எடையைக் குறைக்க உதவும் கோடைக்கால காய்கறிகள்

May 10, 2022 0

 கோடைக்காலத்தில் கலோரிகள் குறைவாக உள்ள காய்கறிகள் அதிகமாகக் கிடைக்கின்றன. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் கோடைக்காலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.




தினமும் அன்றாட உணவில் இந்தக் காய்கறிகளைச் சேர்த்துக்கொண்டால் உடல் எடையை எளிதாகக் குறைக்க முடியும். அந்தக் காய்கறிகளின் தொகுப்பு இங்கே:

வெள்ளரிக்காய்:
வெள்ளரிக்காய் கோடைக் காலத்தில் மலிவாக கிடைக்ககூடிய ஒன்று. நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளதால், இதனைக் கோடையில் அதிகம் சாப்பிட்டால் உடல் எடையைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். இது கொழுப்புகளைக் கரைத்து உடல் எடையைக் குறைக்க உதவும்.

சுரைக்காய்:
சுரைக்காயில் 96 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. இதில் கார்போஹைட்ரேட்டுகள், புரதம், குறைந்த அளவு கலோரி, அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. வைட்டமின், கால்சியம், 
மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளன. சுரைக்காய் சாறு உடலுக்கு சத்துக்களைத் தருவதோடு, கொழுப்பைக் குறைத்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

முட்டைக்கோஸ்
முட்டைக்கோஸ், கொலஸ்ட்ரால் பிரச்சினையைத் தடுத்து, கல்லீரலைச் சுத்தம் செய்யும். இதில் கலோரிகள் குறைவாக உள்ளதால், உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினந்தோறும் முட்டைக்கோஸ் சாறு குடிக்கலாம் அல்லது பொரியல் செய்து சாப்பிடலாம்.  இதில் உள்ள குளுக்கோசினோலேட்டுகள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்து, உடலை நோய்க்கிருமிகளின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

பாகற்காய்
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவும் பாகற்காய், கெட்ட கொழுப்புகளையும் நீக்கும். இதில் கலோரிகள் குறைவாக உள்ளதால் உடல் எடையைக் குறைக்க உதவும். 
இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து, ஜீரண சக்தியை அதிகரித்து உணவில் இருக்கும் சத்துகளைப்  பிரித்துக் கொடுக்கும். கொழுப்பை வெளியேற்றும். எனவே உடல் எடையைக் குறைக்க விரும்பு வோர் தினமும் பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அல்லது காலையில் எழுந்தவுடன் பாகற்காய் சாறு அருந்தலாம்.

பிரோக்கோலி
இது உலகின் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகும். எடை இழப்புக்கு சிறந்த உணவாக அமைகிறது. இதில் 89 சதவீதம் நீர்ச்சத்து இருக்கிறது. எனவே உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள், போதுமான நீரேற்றம், நார்ச்சத்துக்களைப் பெற பிரோக்கோலியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கேரட்
உடல் எடை குறைப்பதில் கேரட் முக்கிய பங்கு வகிக்கிறது. இது குறைந்த கலோரிகளைக் கொண் டது. அதிக அளவு நார்ச்சத்துகள் உள்ளன. இவை உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் குறைக்க உதவும். கேரட்டை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் உடல் எடையை எளிதாகக் குறைக்கலாம். 

பீன்ஸ்
இதில் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், எளிதில் உடல் எடையைக் குறைக்க உதவும். 

குடைமிளகாய் 
குடைமிளகாயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் உடல் எடையைக் குறைக்க வழிசெய்வதுடன், உடலை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள  உதவுகிறது. 

May 9, 2022

மொழிபெயர்ப்புத் திறனை வளர்த்துக்கொள்ள நிதிஉதவி

May 09, 2022 0

 மொழி­பெ­யர்ப்­புத்­து­றை­யில் பணி­யாற்­று­ப­வர்­கள் மேலும் தங்­கள் மொழி­பெ­யர்ப்­புத் திறனை வளர்த்­துக்கொள்­ளும் வகை­யில் மொழி­பெ­யர்ப்­புத் திற­னா­ளர் மேம்­பாட்­டுத் திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது தொடர்பு தக­வல் அமைச்சு.


இதன்­மூ­லம், மொழி­பெ­யர்ப்­புத் திறனை மேம்­ப­டுத்­திக்­கொள்­ளும் வகை­யி­லான பயிற்சி, பட்­டறை வகுப்­பு­களில் சேர்ந்து பயில விரும்­பும் சிங்­கப்­பூ­ர­ர்கள் அதற்­கான கட்­ட­ணத்­தில் 90 விழுக்­காடு அதா­வது $10,000 வரை­யி­லான நிதி உதவி பெற­லாம்.

இந்­தத் திட்­டத்­தின் வழி நிதி உதவி பெற விரும்­பு­வோர், மொழி­பெ­யர்ப்பு, உரை­பெ­யர்ப்­புத் துறை­யில் குறைந்­த­பட்­சம் ஓராண்டு காலம் அனு­ப­வம் பெற்­றி­ருக்க வேண்­டும். 

சிங்­கப்­பூர் மற்­றும் வெளி­நா­டு­களில் குறு­கிய காலப் படிப்பு, பட்­ட­யப் படிப்பு, இள­நி­லைப் பட்­டப்­ப­டிப்பு, முது­நிலை பட்­ட­யப் படிப்பு, முது­நி­லைப் பட்­டப்­ப­டிப்பு ஆகி­ய­வற்­றுக்கு நிதி­உ­தவி கேட்டு விண்­ணப்­பிக்­க­லாம். 


அத்­து­டன் மாநாடு, கருத்­த­ரங்கு, இணை­யக் கருத்­த­ரங்கு, சான்­றி­த­ழ் கல்வி ஆகி­ய­வற்­றுக்கும் நிதி உதவிக்கு விண்­ணப்­பிக்­க­லாம். மேல் விவ­ரம்: https://www.mci.gov.sg/ttds/