Agri Info

Adding Green to your Life

July 18, 2022

மழைக்காலங்களில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா?

July 18, 2022 0

 தமிழர்களின் முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் பிடிக்காத நபர் யாரேனும் இருக்க முடியுமா? சுவையானது, சத்தானது என்பதோடு மட்டுமல்லாமல் வெகுஜன மக்களும் வாங்கி உண்ணும் வகையில் விலை குறைவானது என்பதும் வாழைப்பழத்தின் சிறப்பம்சம் ஆகும். சாதாரணமாக சாலையோர கடைகளில் கூட வாழைப்பழங்களை நாம் வாங்கிவிட முடியும். சிலருக்கு தினசரி உணவு சாப்பிட்ட பிறகு, செரிமானத்திற்காக வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் இருக்கும். அந்த அளவுக்கு நம்முடைய வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட வாழைப்பழங்களை கண்டதும் க்காலத்தில் நாம் சற்று ஒதுக்க தொடங்கி விடுகிறோம். ஏனெனில் மழைக் காலங்களில் வாழைப்பழம் சாப்பிட்டால் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம் என்றும், பிற நோய்கள் தாக்கக் கூடும் என்ற பொதுவான எச்சரிக்கை உணர்வு எல்லோர் மனதிலும் உள்ளது. ஆனால், உண்மையில் மழைக்காலங்களில் வாழைப்பழம் சாப்பிடலாமா கூடாதா, என்பது குறித்து நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.



வாழைப்பழமும், மழைக்காலமும் :

 பொதுவாக மழைக்காலங்களில் நீர் சார்ந்த மற்றும் சுவாசம் சார்ந்த நோய்கள் நம்மை தாக்கக் கூடும் என்ற சூழலில், நாம் என்ன உணவு உண்ணப் போகிறோம் என்பது குறித்து மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். நீங்கள் தினசரி வாழைப்பழம் சாப்பிடுபவர் என்றால் நீங்களும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் வாழைப்பழம் சாப்பிடுவது முற்றிலும் பாதுகாப்பானது. அது பல வகைகளில் நம் உடலுக்கு நன்மை தரக் கூடியது. ஆனால், எப்போது சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும் என்பதே முக்கியமானது.

ஏன் எச்சரிக்கை தேவை? 

அமினோ அமிலங்கள், விட்டமின் பி6, சி மற்றும் நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், மேங்கனீஸ் போன்ற சத்துக்கள் நிறைந்த வாழைப்பழம் நம் ஆரோக்கியத்திற்கு நல்லது. நமது மூளையின் செயல்பாடுகளை ஊக்குவிக்க இது உதவும். இதய நோய் பாதிப்புகள் மற்றும் ஸ்டிரோக் போன்றவற்றை தடுக்கிறது. அதே சமயம், வாழைப்பழத்தை தவறான சமயத்தில் சாப்பிடக் கூடாது மற்றும் சில வகை உணவுகளோடு சேர்த்து சாப்பிடக் கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


எப்போது தவிர்க்க வேண்டும்? 

செரிமானக் கோளாறு, இருமல் அல்லது ஆஸ்துமா போன்ற பாதிப்பு கொண்டிருக்கும் நபர்கள் இரவில் இதை சாப்பிடக் கூடாது. இது உடம்பில் கபம் உண்டாக காரணமாகிவிடும். இதைத் தொடர்ந்து சளி பிடிக்கும். ஆகவே பகல் நேரத்தில் சாப்பிடவும். வெறும் வயிற்றில் சாப்பிடலாமா? காலை உடற்பயிற்சி செய்யும் முன்பாக வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் பலருக்கு இருக்கும். ஆனால், இது ஆசிட் ரிஃப்ளெக்ஸ் என்னும் எதுக்களித்தல் பிரச்சனையை உண்டாக்கும். பொட்டாசியம் இருப்பதால் இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது.



எந்த உணவுகளோடு சேர்த்து சாப்பிடக் கூடாது? :

 பொதுவாகவே வாழைப்பழத்தை பால் அல்லது பால் சார்ந்த பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது. இது உடலின் அக்னியை பாதித்து, செரிமானப் பிரச்சனையை உண்டாக்கும்.

பாதுகாப்பு அவசியம் : மழைக்காலங்களில் காய்ச்சல், சளி, இருமல், செரிமானக் கோளாறுகளை சந்திக்கும் போது வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்த்து விடுவது நல்லது..


Click here to join whatsapp group for daily health tip



July 15, 2022

WALK-IN-INTERVIEW for Young Professional-I & II at ICAR-NAARM, Rajendranagar, Hyderabad

July 15, 2022 0

 WALK-IN-INTERVIEW 

Candidates are invited to attend Walk-in-interview for engagement / hiring as Young Professional-I (one position) & Young Professional-II (six positions) on contract/short term basis (purely temporary) to work under various Projects / Divisions / Service Units at ICAR-NAARM, Rajendranagar, Hyderabad-500 030, Telangana. 


For Young Professional-I 

Name of the Position:  Young Professional – I 

Emoluments: Rs. 25,000/- (Fixed) per month 

Duration: Young Professional-I will be engaged initially for 01 year and extendable for further one more year based on performance to be assessed by the Unit In-Charge and continuation of the schemes. 

Age Limit:  The minimum age under Young Professional category will be 21 years and maximum 45 years as on date of walk-in-Interview with relaxation as per rules. 

Mode of Engagement: Purely on Contract (Temporary) basis

 For Young Professional-II (S.No.02 to 7) 

Name of the Position: Young Professional – II 

Emoluments: Rs. 35,000/- (Fixed) per month 

Duration: Young Professional-II will be engaged initially for 01 year and extendable for further one more year based on performance to be assessed by the Unit In-Charge and continuation of the schemes.

 Age Limit: The minimum age under Young Professional category will be 21 years and maximum 45 years as on date of walk-in-Interview with relaxation as per rules. Mode of Engagement Purely on Contract (Temporary) basis 

Interview date & time to be held on : 02/08/22,03/08/22, 04/08/22

The eligibility criteria and other terms and conditions for the positions - Click here to download pdf file 

July 14, 2022

வாய்ப்புண் வரக் காரணங்களும், பின்பற்ற வேண்டிய உணவு முறையும்

July 14, 2022 0

 குழந்தை முதல் முதியோர் வரை வாய்ப்புண் எல்லோருக்கும் வரலாம். பொதுவாக, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு இது வரும் சாத்தியம் அதிகம். அடுத்து, நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பவர்களுக்கும், இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கும் இதன் தாக்கம் அதிகம்.

வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடுபவர்கள், புகை பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், நீரிழிவு நோயாளிகள் ஆகியோருக்கு அடிக்கடி வாய்ப்புண் வரலாம். எந்த நேரமும் வேலை, வேலை என்று பரபரப்பாக இருக்கிறவர்களுக்கும், மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் வாய்ப்புண் மீண்டும் மீண்டும் வந்து தொல்லை கொடுக்கும்.

வாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயம்தான். ஆனால், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்சினை பெரிதாகிவிடும். தொடக்கத்தில் உதடு, கன்னம், நாக்கு, அண்ணம் ஆகிய பகுதிகளில் கடுகளவு தோன்றும் கொப்புளங்கள், சில நாட்களில் உடைந்து, உளுந்து அளவுக்குக் குழிப்புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும்; சாப்பிடும்போதும் பேசும்போதும் வலி அதிகமாகும். கழுத்தில் நெறிகட்டும்; காய்ச்சல் வரும்; உடல்வலி, தலைவலி எனத் தொல்லைகள் தொடரும்.

காரணங்கள்

> நீண்ட நாட்களுக்குச் சரிவிகித உணவைச் சாப்பிடாதவர்களுக்கு இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி6 மற்றும் பி12 குறைபாடு ஏற்படும். இதனால் ரத்த வெள்ளை அணுக்கள் குறைந்துவிடும். இதன் விளைவாக உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து வாய்ப்புண் வரும்.

> வைட்டமின் பி2 குறைபாடு இருந்தால், வாயின் இரண்டு ஓரங்களிலும் வெள்ளை நிறத்தில் வெடிப்புகள் தோன்றும்.

> இரைப்பையில் புண் உள்ளோருக்கு, அங்கே சுரக்கிற அதீத அமிலம் தூக்கத்தில் உணவுக்குழாயைக் கடந்து வாய்க்கு வந்துவிடும். அப்போது தொண்டையிலும் வாயிலும் புண் ஏற்படும்.

> கூர்மையான பற்கள் இருந்தால், அவை உள் கன்னத்தைக் குத்தி, புண்ணை உண்டாக்கும். மிகச் சூடாகக் காபி/டீ குடித்தால்கூட வாய்ப்புண் வருவதுண்டு. சிலர் வாயின் ஒரு பக்கத்தில் மட்டுமே உணவை மெல்லுவார்கள். இது நாளடைவில் வாய்ப்புண்ணுக்கு வழியமைக்கும்.

சரியான உணவு

  • மருத்துவரின் ஆலோசனைப்படி ஆன்ட்டிசெப்டிக் திரவத்தைப் பயன்படுத்தி வாய் கொப்பளித்தல்,
  • ஸ்டீராய்டு, வலி மரத்துப் போகச் செய்யும் களிம்பு இவற்றோடு வலி நிவாரணி மாத்திரைகளையும் ஒரு வாரம் சாப்பிட வேண்டும்.
  • லாக்டோபேசில்லஸ் (Lactobacillus) மருந்து கலந்த மல்ட்டி வைட்டமின் மாத்திரை மற்றும் இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் மாத்திரைகளை ஒரு மாதம் சாப்பிட வேண்டும்.
  • பூஞ்சையால் வரும் வாய்ப்புண்ணுக்குக் காளான் கொல்லி மருந்தைத் தடவினால் நல்ல பலன் கிட்டும்.

எப்படித் தடுக்கலாம்?

வாய்ச்சுத்தம் காப்பது, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ‘ஸ்கேலிங்’ முறையில் பற்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். நீரிழிவு நோயாளிகள் நோயைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.

என்ன சாப்பிட வேண்டும்?

ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக வாய்ப்புண் ஏற்படுவதைத் தடுப்பதற்குச் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளான பால், தயிர், முட்டை, இறைச்சி, ஈரல், மீன், நண்டு, கீரை, பச்சையிலைக் காய்கள், வெல்லம், தேன், பேரீச்சை, முளைக் கட்டிய பயறுகள், கொண்டைக் கடலை, பச்சைப் பட்டாணி, கோதுமை, கேழ்வரகு, சோயாபீன்ஸ், தக்காளி, முருங்கைக்காய், சுண்டைக்காய் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.

Click here to join whatsapp group for daily health tip

கண்பயிற்சி Vs கண்ணாடி: நிஜமும் நம்பிக்கையும் - ஒரு விளக்கம்

July 14, 2022 0

 கதை சொன்ன காணொளி: சில நாட்களாக கண்பயிற்சி குறித்த ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதைப் பார்த்திருக்கலாம். மேலும் கீழும் பக்கவாட்டிலும் செல்லும் சிறிய பந்து அளவிலான உருண்டை வடிவ உருவங்களைப் பார்க்கச் சொல்லுகிறது அந்த காணொளி. அதில் ஒரு அடிக்குறிப்பு வேறு. இதைச் செய்தால் கண்ணில் பார்வை அதிகரிக்கும் என்று.

பலரும் அதைப் பார்த்துவிட்டு அந்த காணொளி என்ன சொல்கிறது என்றும், அப்படிப் பார்த்தால் கண்ணாடி போடுவதைத் தவிர்க்க முடியுமா என்றும் கேட்கிறார்கள். ஜப்பான் கண் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றின் மிகச் சிறந்த தயாரிப்பு என்ற குறிப்பினையும் சிலர் சேர்த்து அனுப்பி வருவதால் பலரையும் அது கவர்ந்ததில் வியப்பில்லை.

கண்ணாடி ஏன்: இது போன்ற கண்பயிற்சிகள் கண்ணின் தசைகளுக்கு நல்லதுதான். ஆனால் பார்வையை மேம்படுத்துமா என்பதுதான் இங்கே கேள்வியே? கண்களுக்குப் பயிற்சி கொடுத்து கண்ணாடியைக் கழற்றலாம் என்றும் விடுமுறை நாட்களில் உங்கள் பிள்ளைகளை அழைத்து வந்து தங்கி பயிற்சி பெற்று கண்ணாடிக்கு நிரந்தர ‘பை பை’ சொல்லுங்கள் என்றும் சொல்வது போன்ற காணொளிகள் இதற்கு முன்னரும் பகிரப்பட்டிருக்கின்றன.

எனவே தற்போதைய காணொளியினையும் பார்த்துவிட்டு கண்ணாடியைக் கழற்ற முடியுமா என்று கேட்கிறார்கள். பார்வை குறைபாட்டுக்கு ( Defective Vision ) கண்ணாடி அணிகிறோம். வசதியானவர்கள் காண்டாக்ட் லென்சு அல்லது லேசர் சிகிச்சை செய்து கொள்ளலாம். மருந்து, மாத்திரை, சொட்டு மருந்து வேறு பயிற்சிகள் எதுவும் பயன் தராது. அது புரிய வேண்டுமென்றால் கண்ணின் அமைப்பைத் தெரிந்து கொள்வது நல்லது.


பார்வைக் குறைபாடு: பார்வைக் குறைபாடு (Defective vision) என்பது கண்ணின் உருவ அமைப்பில் ஏற்படக்கூடிய பிரச்சினையால் ஏற்படக்கூடியது. ஒரு பொருளிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் கண்ணின் கருவிழி, விழிலென்சு வழியாக ஊடுருவி விழித்திரையில் பிம்பம் விழுகிறது. இதற்கு இவை அனைத்தும் இயல்பாக இருக்க வேண்டியது அவசியம். கண்ணின் கருவிழிக்கும் விழித்திரைக்கும் உள்ள தொலைவு குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ பார்வை குறைபாடு ஏற்படலாம்.

இதனால் பிம்பம் விழித்திரையில் விழாமல் விழித்திரைக்கு முன்னாலோ அல்லது பின்னாலோ விழுகிறது. மைனஸ் லென்சு (-) அல்லது பிளஸ் லென்சு ( + ) கொண்டு விழித்திரையில் பிம்பத்தை விழச்செய்து பார்வை குறைபாடு சரி செய்யப்படுகிறது. காய்கறி, கீரை சாப்பிடுவதன் மூலமோ, கண்பயிற்சி செய்வதன்மூலமோ, மருந்து மாத்திரையின் மூலமோ இதனைச் சரி செய்ய முடியாது.


Click here to join whatsapp group for daily health tip

“குழந்தைகளின் உடல் பருமன் பிரச்சினைக்கு சிறுதானியங்களே சிறந்த தீர்வு” - மருத்துவர் கு.கணேசன்

July 14, 2022 0

 பேக்கிங் செய்யப்பட்ட சிப்ஸ், பர்கர், பீஸா என்று முற்றிலும் மண்ணுக்கும் மரபுக்கும் தொடர்பில்லாத உணவுகளுக்கு அடிமையாகிக் கிடக்கிறது நம் இளைய சமுதாயம்.

பொறித்த, வறுத்த எண்ணெய் உணவுகளுக்கே வேலையில்லாத நம் மரபில் இன்றைக்கு அவைதாம் முழுமையாய் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. இதனால் பாதிக்கும் மக்களுக்கு சிறுதானியங்களே சிறந்த தீர்வு.

தற்போது குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என பெரும்பாலானோருக்கு உள்ள பெரும் பிரச்சினை உடல் பருமன். ‘‘இந்தப் பிரச்சினைக்கு சிறுதானியங்கள் சிறந்த தீர்வாகவே இருக்கும்’’ என்கிறார் டாக்டர் கு.கணேசன்.

இதுகுறித்து டாக்டர் மேலும் கூறியது: “வெள்ளை அரிசியைவிட சிறுதானியங்களில் மாவுச்சத்து 20 சதவீதம் குறைவாக உள்ளது. பாலிஸ் செய்யப்பட்ட அரிசி ருசியாக இருக்கிறது என்று சொல்லி குழந்தைகள் அதிகமாக சாப்பிடுவதே உடல் பருமனுக்கு காரணம்.

அதேநேரத்தில் புரதச்சத்தும், நார்ச்சத்தும் அதிகம் என்பதால் உடல் பருமனாகாது. உடலுக்கு பலத்தைக் கொடுக்கும். சர்க்கரை நோய், மலச்சிக்கல் வராது. செரிமானம் நன்றாக இருக்கும்.

அரிசியோடு ஒப்பிடும்போது சிறுதானியங்களில் நுண்சத்துக்களான கால்சியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், இரும்பு போன்ற சத்துக்கள் அதிகம். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். செரிமானத்தைத் தாமதப்படுத்தும் என்பதால் உடல் பருமனாகாது.”

Click here to join whatsapp group for daily health tip

மன அழுத்தம் முதல் உடல் பருமன் வரை : உங்களுக்கு மாரடைப்பு வருவதற்கான காரணங்கள்..!

July 14, 2022 0

 நம் உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றான இதயம் இயல்பான முறையில் செயல்படாமல் ஆபத்தை எதிர்கொள்வதற்கு பல்வேறு விதமான காரணங்கள் உள்ளன. நம் இதயம் எந்தெந்த வகையில் பாதிக்கப்படும் என்பதை தெரிந்து கொள்வது மிக முக்கியமானதாகும். இதயம் சார்ந்த நோய்கள் திடீரென்று நிகழ்ந்துவிடுவதில்லை, பல ஆண்டுகளின் தொடர் விளைவுகள் எதிரொலியாகவும், நாம் கடைப்பிடிக்கும் மோசமான பழக்க, வழக்கங்கள் காரணமாகவும் இத்தகைய நோய்கள் ஏற்படுகின்றன.

உலகெங்கிலும் இதயநோய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் 18 மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர். இதய நோயால் உயிரிழக்கும் மொத்த மக்களில் 3ல் ஒரு பங்கு சதவீதத்தினர் 70 வயதுக்கு முன்பாக இளம் வயதிலேயே உயிரிழக்கின்றனர் என்று உலக சுகாதார நிலையம் தெரிவிக்கிறது.

இளம் வயதினரின் உயிரை பறிக்கும் இதய நோய்கள் :

பிரபல இந்திய பாடகர் கேகே அண்மையில் இதய பாதிப்பால் உயிரிழந்த நிலையில், இந்த நோய் இளம் வயதினரை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்ற விழிப்புணர்வு அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக 40 வயதை ஒட்டிய இளம் வயதினருக்கான ஆபத்துகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

மன அழுத்தம் :

அளவுக்கு அதிகமான மன அழுத்தம் காரணமாக இதயத்திற்கு செல்லும் குழாய்களில் அழற்சி ஏற்படும் என்றும், இது நல்லதல்ல என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மன அழுத்தம் காரணமாக நம் உடலின் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதுவும் கூட இதய நோய் ஆபத்து அதிகரிக்க காரணமாக அமையும். உடல் இயக்கமின்மை, தூக்கமின்மை, உடல் பருமன் போன்ற காரணங்களும் இதய நோய் ஆபத்தை அதிகரிக்கும்.

போதுமான தூக்கமின்மை

போதிய தூக்கம் இல்லை என்றால் உடலில் பல்வேறு விதமான நோய்கள் அதிகரிக்கக் கூடும். அதில் ஒன்று இதய நோய் பாதிப்பு ஆகும். தூக்கமின்மை பிரச்சனையால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 8 மணி நேர தூக்கம் அவசியமாகும்.

அதிகப்படியாக மது அருந்துவது

நீங்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்துவதன் காரணமாக உங்கள் ரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் இதய செயலிழப்பு ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இது மட்டுமல்லாமல் உடல் பருமனுக்கும் மதுப்பழக்கம் வழிவகை செய்யும்.

உடல் பருமன்

கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் கண்ட உணவுகளையும் சாப்பிடுவது, மோசமான வாழ்வியல் பழக்க, வழக்கங்கள் ஆகியவை உடல் பருமன் அதிகரிக்க காரணமாகும். இதனால் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் கொழுப்பு நோய், இதய நோய் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.

புகைப்பிடிப்பது

புகைப்பிடிப்பதால் நமது ரத்த தட்டுக்களில் படிமங்கள் உண்டாகின்றன. நம் இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் குழாய்கள் சுருங்கி விடுகின்றன. இது மட்டுமல்லாமல் ரத்த அடர்த்தி அதிகரித்து அடைப்புகள் ஏற்படவும் காரணமாக அமைகின்றன.

பிற ஆபத்துகள்

நமது வீட்டில் யாருக்கேனும் இதய நோய் பிரச்சனைகள் இருந்தால், அதுகுறித்து நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மோசமான உணவுப் பழக்கத்தை கைவிட வேண்டும். உயர் ரத்த அழுத்தம் வரமால் கட்டுப்படுத்துவது நல்லது.

அறிகுறிகளும், எச்சரிக்கைகளும்...

* மூச்சுத்திணறல்

* நெஞ்சு வலி

* நெஞ்சுப் பகுதியில் இறுக்கம்

* கைகள், கழுத்து, தாடை, மேல் வயிறு போன்ற இடங்களில் வலி

* உடல்சோர்வு

* சீரற்ற இதய துடிப்பு

Click here to join whatsapp group for daily health tip

இரவில் வாக்கிங் போவது உடலில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்....

July 14, 2022 0

 சாப்பிட்ட பிறகு செய்யும் வாக்கிங் இதய பாதிப்புகளை குறைக்கும் என்றும் ஆய்வு ஒன்று கூறுகிறது. 10 நிமிட நடைப்பயிற்சியில் வளர்ச்சிதை மாற்றத்திலும் முன்னேற்றம் இருக்கும்.கலோரிகளும் குறையும். சர்க்கரை நோய் வருவதையும் தடுக்க முடியும். 



சாப்பிட்ட பிறகு நிச்சயம் பலருக்கும் உடலில் அணுவும் அசையாது என்பதுபோல தான் இருக்கும். அப்படியே கொஞ்சம் படுக்கலாமா என சோம்பேறித்தனமும் ஒட்டிக்கொள்ளும். ஆனால் அவ்வாறு படுத்தால் நெஞ்சு எரிச்சல், வாயு பிரச்சனை ஆகியவை வரும்.

 இவற்றையெல்லாம் தவிர்க்க சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் வாக்கிங் செல்வது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள். அதோடு சாப்பிட்ட பிறகு செய்யும் வாக்கிங் இதய பாதிப்புகளை குறைக்கும் என்றும் ஆய்வு ஒன்று கூறுகிறது.


பொதுவாக இரவு உணவுக்குப் பிறகு நடை பயிற்சி செல்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல பயனை தரும். குறிப்பாக, உடல் நலன் மட்டுமல்லாமல் மனநலனை மேம்படுத்தவும் இது உதவிகரமாக இருக்கும். அந்த வகையில் இரவு உணவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செல்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். இரவு நேரத்தில் நடந்து செல்வதால் சாப்பிட்ட உணவு எளிமையாக ஜீரணம் அடையும். 
இது வயிறு உப்புசம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியும். சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்வதால் நமது மெட்டபாலிசம் மேம்பாடு அடைகிறது.

நடைப்பயிற்சியை தொடர்ந்து உணவுகள் வேகமாக செரிமானம் அடைவதால் நமது உடலில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறுகின்றன. இதனால், உடல் உள் உறுப்புகளின் நலன் மேம்பாடு அடையும். அதுமட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும் தினசரி நடைப்பயிற்சி செய்வதன் மூலமாக இதை கட்டுப்படுத்த முடியும். 

15 நிமிடங்கள் அதிவேகமாக நடந்தீர்கள் என்றால் பசி உணர்வை கட்டுப்படுத்த முடியும். இரவில் நீங்கள் தூக்கமின்மை பிரச்சினையால் அவதிப்படுபவர் என்றால், உணவு சாப்பிட்ட பிறகு நடந்து செல்வது நல்ல பலனை தரும். உங்கள் ஸ்ட்ரெஸ் அளவை குறைத்து நன்றாக தூக்கம் வரும். மன அழுத்தம் அல்லது ஸ்ட்ரெஸ் போன்ற பாதிப்புகளை எதிர்கொண்டு வருபவர் என்றால், இரவு நேரத்தில் நடப்பது உங்கள் மனதிற்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். உங்கள் உடலுக்கு ரிலாக்ஸ் உணர்வு கிடைக்கும்.

July 10, 2022

வருகிறது மழைக்காலம்… காய்ச்சல், சளியில் இருந்து தப்பிக்க சில வழிகள்!

July 10, 2022 0

பருவ மழைக்காலங்களில் காய்ச்சல் மற்றும் சளியால் பாதிப்பு உருவாகும் என்பதால், ஒவ்வொருவரும் மிகவும் கவனமாகவும், சுத்தமாக இருப்பது அவசியம். வெயிலில் இருந்து நிவாரணம் கொடுக்கும் மழைக்காலத்தில், பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகள் உற்பத்தியாகி மக்களை பாதிக்கின்றன. சமைலையறை முதல் சாலை வரை என தொற்று இல்லாத இடமே இருக்காது. வீடுகளிலும், வெளியே செல்லும்போது சுகாதாரத்தை கடைபிடித்தால் மட்டுமே இந்த தொற்றுகளின் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும். அதற்கு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் சில உள்ளன.

மழைநீரில் ஒதுங்கியிருத்தல்:

மழைக்காலங்களில், மழையில் நனைவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த நேரங்களில் முடிந்தளவுக்கு மழையில் நனைவதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் உடலில் அரிப்பு, சொறி உள்ளிட்ட தோல் பாதிப்புகள் உருவாகும். இதனால் கூடுமான அளவிற்கு மழையில் நனைய வேண்டாம். எதிர்பாராதவிதமாக மழையில் நனைய நேரிட்டால், உடனடியாக வீட்டிற்கு வந்தவுடன் சுடுதண்ணீரில் குளிப்பது நல்லது. நனைந்த துணிகளை துவைத்துவிட வேண்டும். இதன்மூலம் தொற்று பாதிப்புகள் உங்களுக்கு ஏற்படுவதற்கு குறைவான வாய்ப்புகளே உள்ளன.

கைகளை சுத்தமாக வைத்திருத்தல்:

நம் உடலுக்குள் நுழையும் பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுகள் பெருமளவு முகம் மற்றும் வாய் வழியாக மட்டுமே உடலுக்குள் செல்கின்றன. இதன் மூலம் புதிய வியாதிகளால் பாதிக்க நேரிடுகிறது. வெளியில் எங்கு சென்று வந்தாலும், உடனடியாக கைகளை கழுவும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். ஹேண்ட் வாஷ் உள்ளிட்டவைகளை பயன்படுத்தியும் கைகளை சுத்தமாக கழுவிக்கொள்ளலாம்.

ஆரோக்கியமான உணவு:

மழைக்காலங்களில் கடைகளில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. உடலுக்கு தேவையான ஆரோக்கியமான உணவுகளை வீட்டிலேயே நன்கு சமைத்து சாப்பிட வேண்டும். எளிதாக செரிமானமாகக்கூடிய உணவுகளை அதிகளவு எடுத்துக் கொள்ளுங்கள். இதுபோன்ற உணவுகளை சாப்பிடும்போது செரிமானப் பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்படாது. சூடான மற்றும் பிரெஷ் உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

சுடு தண்ணீர்:

சுடு தண்ணீரை குடிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஒருவேளை வெளியில் செல்ல வேண்டியிருந்தால் வீட்டிலேயே சூடான தண்ணீரை தயாரித்து கூடவே எடுத்துச் செல்லுங்கள். தண்ணீரை சுட வைக்காமல் குடிக்கும்போது, அதில் பாக்டீரியா உள்ளிட்ட தொற்றுகள் இருக்க வாய்ப்புள்ளது. அந்த நீர் வயிற்றுக்குள் போகும்போது வயிற்றுப்போக்கு ஏற்படுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

தண்ணீர் தேங்கக்கூடாது:

வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சிறிய பாத்திரம், தேங்காய் மூடி, டயர் உள்ளிட்டவைகளில் தண்ணீர் தேங்கியிருந்தால், அதன் மூலம் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களை உருவாக்கும் கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்புகள் உள்ளது. வீட்டின் சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

Click here to join whatsapp group for daily health tip

யோகா செய்வது உங்கள் இதயத்தை எப்படி மாரடைப்பிலிருந்து பாதுகாக்குமாம் தெரியுமா?

July 10, 2022 0

 யோகா என்பது உடல் மற்றும் மன நெகிழ்வுத்தன்மை, சகிப்புத்தன்மை, சமநிலை, ஒருங்கிணைப்பு மற்றும் கவனம் ஆகியவற்றை மேம்படுத்துவதாகும். பிரபல இதய நிபுணர்கள் யோகா இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல வழிகளைப் பட்டியலிட்டுள்ளார்கள். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மன அழுத்தத்தை குறைக்கிறது

மன அழுத்தம் உடலில் உள்ள கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற ஹார்மோன்களை உயர்த்தலாம், இது ஒருவரின் இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்த கடினமான நேரத்துக்கு வழிவகுக்கும். கரோனரி தமனி நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றின் வலுவான ஆபத்து காரணிகளுக்கு எதிராக வலுவிழக்கச் செய்யும் மன அழுத்தம் ஒருவரின் இதயத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறது. உங்கள் நல்வாழ்வில் மன அழுத்தத்தின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை எதிர்த்துப் போராட, நாள் முழுவதும் ஓய்வெடுக்க உதவும் தியான நடவடிக்கைகள் அல்லது ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகளைக் கவனியுங்கள். இந்த ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் உங்கள் இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், இதனால் நீங்கள் எதிர்காலத்தில் இருதய பிரச்சனைகளால் பாதிக்கப்படுவது குறையும்.

இதய ஆரோக்கியம் தொடர்பான எண்களை மேம்படுத்துகிறது வழக்கமான யோகா, கொலஸ்ட்ரால் அளவுகள், இரத்த சர்க்கரை, உடல் கொழுப்பு மற்றும் எடை சுற்றளவு ஆகியவற்றைக் குறைப்பதன் மூலம் இரத்த அழுத்தம் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். வளர்சிதை மாற்ற நோய்க்குறி உள்ளவர்களில் (நடுத்தர வயதுடையவர்கள்) 3 மாதங்கள் யோகா பயிற்சி செய்தால், இரத்த அளவீடுகள் மற்றும் இடுப்பு சுற்றளவு (இதய நோயின் குறிப்பான்) ஆகியவற்றில் முன்னேற்றம் இருப்பதாக ஒரு ஆய்வு காட்டுகிறது.


உடற்பயிற்சி யோகா என்பது ஒரு சிறந்த உடற்பயிற்சி முறையாகும், இது கலோரிகளை எரிக்க உங்களை அனுமதிக்கிறது. கூடுதலாக, இது உடலில் உள்ள மூட்டுகளின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்த உதவுகிறது, இது உங்கள் ஒட்டுமொத்த மைய தசை வலிமையை மேம்படுத்துகிறது, இது ஓட்டம் மற்றும் நீச்சல் போன்ற ஏரோபிக் நடவடிக்கைகளில் அதிக சகிப்புத்தன்மையைப் பெற உதவுகிறது. இந்த ஏரோபிக் பயிற்சிகள் தனிநபர்கள் எடை பயிற்சியை மட்டும் செய்வதை விட கணிசமாக அதிக விகிதத்தில் கலோரிகளை எரிக்க உதவுகின்றன.


யோகா மற்றும் புகைப்பிடித்தல் தொடர்ந்து யோகா பயிற்சி செய்யும் புகைப்பிடிப்பவர்கள் புகைபிடிப்பதை நிறுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். யோகா பயிற்சி செய்வதன் பல நன்மைகளில் ஒன்று, இது மக்கள் மன அழுத்தத்தை உள்நாட்டில் நிர்வகிக்க உதவுகிறது, இதனால் அவர்கள் புகைபிடிக்கும் விருப்பத்தை குறைக்கிறார்கள். மன அழுத்த புகைப்பிடிப்பவர்களுக்கு இது குறிப்பாக உண்மை. புகைபிடிக்காதவர்களை விட புகைப்பிடிப்பவர்கள் கரோனரி தமனி நோய் மற்றும் மாரடைப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படுவதற்கான அதிக ஆபத்தில் உள்ளனர். புகைப்பிடிப்பவர்களுக்கு புகைபிடிப்பதை நிறுத்த உதவுவதன் மூலம் யோகா இந்த ஆபத்தை குறைக்கிறது.

Click here to join whatsapp group for daily health tip

மாரடைப்பு அபாயத்தை குறைக்கும் ‘இந்த’ காய்கறிகளை உணவில் அவசியம் சேர்க்கவும்

July 10, 2022 0

வயதானவர்களுக்கு தான் மாரடைப்பு ஏற்படும் என நினைத்துக்கொண்டிருந்த காலம் எப்போதோ மலையேறி விட்டது. தற்போதைய வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக இளம் வயதினர் கூட மாரைப்பால் இறந்து போகும் சமபவங்களை நாம் அன்றாடம் கேள்விப்படுகிறோம். 

தமனிகளில் ஏற்படும் அடைப்பு காரணமாக மாரடைப்பு ஏற்படுகிறது. மேலும், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளும் மாரடைப்பு ஏற்படக் காரணமாக இருக்கிறது. ஆரோக்கியமற்ற, சோம்பேறித்தனமான வாழ்க்கை முறையும் இதற்கு ஒரு முக்கிய காரணி என்பதை மறுத்து விட முடியாது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பு ஆகியவையும்  மாரடைப்பு மற்றும் இதய நோய்களுக்கான ஆபத்தை அதிகரிக்கின்றன.

மாரடைப்பு அபாயத்தைக் குறைக்க சில காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். எனவே எந்தெந்த காய்கறிகளை உட்கொள்வதன் மூலம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்பதை அறிந்து கொள்ளலாம். 

மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கும் சில காய்கறிகள்

பச்சை காய்கறிகளில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதனை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதால்,  மாரடைப்பு அபாயத்தை குறைக்கலாம். சோயாபீன், தக்காளி, வெங்காயம், ப்ரோக்கோலி போன்ற பல காய்கறிகள் மாரடைப்பைத் தடுக்கவும் சிகிச்சை செய்யவும் மிகவும் உதவியாக இருக்கும். ஏனெனில் இதில் வைட்டமின்கள்,  நார்ச்சத்துக்கள் நிறைந்து உள்ளது. ப்ரோக்கோலியில் உள்ள கோலின் சத்தும் அதிக அளவிலாக வைட்டமின் கே சத்தும் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும். 

ப்ரோக்கோலி மட்டுமல்ல, லெட்யூஸ், முட்டைகோஸ் போன்ற இலை வடிவ காய்கறிகளும் இதயத்தை பலப்படுத்தி மாரடைப்பு அபாயத்தை குறைக்கும்.

மீன் உணவுகள்

மீன் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. ஏனெனில் மீன்கள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த மூலமாகும். அவை இதயத்தைப் பாதுகாப்பது உட்பட பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. இதன் மூலம், அமில கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தலாம். இது இதய நோய் அபாயத்தை வெகுவாகக் குறைக்கிறது. சால்மன், டுனா, கானாங்கெளுத்தி மற்றும் மத்தி ஆகியவை இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த மீன்கள்.

சைவ உணவு உண்பவர்களுக்கு காளான் சிறந்த தேர்வு

 வைட்டமின் சி, டி மற்றும் ஈ மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது. வைட்டமின் சி ஆன்டிஆக்ஸிடன்ட்களைக் கொண்டுள்ளது, இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்பைக் குறைத்து இதய நோய்களைத் தடுக்கிறது. வைட்டமின் டி மீன்களில் அதிக அளவில் உள்ளது. சைவ உணவு உண்பவர்கள் காளான்களை சாப்பிடலாம். பச்சை காய்கறிகள், பப்பாளி, கீரை, குடை மிளகாய் ஆகியவை வைட்டமின்-சி மற்றும் ஈ ஆகியவற்றை உங்களுக்கு அள்ளி வழங்குகின்றன. 


Click here to join whatsapp group for daily health tip

தினம் இரண்டு கிராம்பு ஆரோக்கியத்திற்க்கு அருமருந்து

July 10, 2022 0

 கிராம்பின் ஆரோக்கிய பண்புகள்: மனிதன் மட்டுமல்ல உயிரினங்கள் அனைத்திற்குமே இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி உண்டு. ஆனால், மனிதர்கள் மட்டும் நவீன உலகில் வாழும் உயிரினமாகவும், தொழில்நுட்பத்தால் இயற்கையை விட்டு வெகுதொலைவில் வந்து விட்ட உயிரினமாகவும் மாறிவிட்டார்கள்.



எனவே, இயற்கையிலேயே கிடைக்க வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தியையும் செயற்கையாகவே பெற வேண்டியிருக்கிறது. ஆனால், இயற்கையின் கொடைகள் அற்புதமானவை. இயற்கையில் விளையும் பொருட்களே, நமது வாழ்க்கையை தீர்மானிக்கின்றன.

வீட்டிலேயே உணவுக்கு பயன்படுத்தும் சில பொருட்களே நமது ஆரோக்கியத்தை பேணி காப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. அதில் கிராம்புக்கு முக்கிய இடம் உண்டு. இந்திய சமயலறைகளில் நீங்கா இடம் பிடித்துள்ள கிராம்பு பல அற்புதமான ஆரோக்கியப் பண்புகளைக் கொண்டதாகும். 

உணவின் ஊட்டச்சத்து மதிப்பையும் அதிகரிக்கும் கிராம்பு, சுவையான மசாலா ஆகும். பல் வலிக்கும், வயிறு மற்றும் தொண்டைக்கும் ஆரோக்கியத்தையும் ஆசுவாசத்தையும் அளிக்கிறது கிராம்பு.  

யூஜெனோல் என்ற பொருள் மன அழுத்தம் மற்றும் பொதுவான வயிற்று நோய்களைப் போக்க உதவுகிறது. இது, கிராம்பில் போதுமான அளவு உள்ளதால், கிராம்பின் பயன்பாடு மன அமைதியை ஏற்படுத்துகிறது. 

வைட்டமின் ஈ, வைட்டமின் சி, ஃபோலேட், ரிபோஃப்ளேவின், வைட்டமின் ஏ, தியாமின், வைட்டமின் டி, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ள கிராம்பை எப்படி பயன்படுத்தினால் நல்லது?

படுக்கைக்குச் செல்வதற்கு முன் இரண்டு கிராம்புகளை மென்று சாப்பிட்டு பின்னர் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அமிலத்தன்மை போன்ற வயிற்றுப் பிரச்சினைகளை போக்குவதோடு, செரிமானத்தையும் மேம்படுத்தும் கிராம்பை இரவில் சாப்பிடுவது நல்லது. 

தினமும் கிராம்பை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இருமல், சளி, வைரஸ் தொற்று, மூச்சுக்குழாய் அழற்சி, சைனஸ் மற்றும் ஆஸ்துமா போன்றவற்றிலிருந்து விடுபட கிராம்பு உதவுகிறது.  

உணவே மருந்தாகலாம் ஆனால் மசாலா மருந்தாகுமா? ஆகும் என்பதற்கு அட்டகாசமான உதாரணம் கிராம்பு.

Click here to join whatsapp group for daily health tip

July 9, 2022

சளியால் அவதியா? இந்த யோகாசனங்கள் பலன் தரும்..

July 09, 2022 0

 

மழை, குளிர் காலங்களில் சளி, இருமல் பிரச்சினைகள் ஏற்படுவது இயல்பானது. குளிர்ச்சியான கால நிலை காரணமாக உண்டாகும் இத்தகைய ஒவ்வாமைகளை தவிர்ப்பதற்கு உடல் நலத்தில் கூடுதல் அக்கறை கொள்ள வேண்டும்.

 நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த வேண்டும். அதற்கு சில யோகாசனங்கள் கை கொடுக்கும். மருத்துவர் மற்றும் யோகா ஆசிரியர் ஆலோசனை பெற்று இவற்றை செய்வது அவசியம். 


1. சர்வாங்காசனம்: 

தரைவிரிப்பில் மல்லாந்த நிலையில் படுக்கவும். பின்பு மூச்சை நன்றாக உள்ளிழுத்தபடி இரு உள்ளங்கைகளால் உடலை தூக்கி உயரே கொண்டு வரவும். அதாவது இரு உள்ளங்கைகளையும் இடுப்பில் வைத்தபடி கால்களை நேராக தூக்க வேண்டும். அப்போது முதுகு, இடுப்பு, கால்களை நேர் நிலையில் மேல்நோக்கி வைத்திருக்க வேண்டும். எந்த அசைவும் இல்லாமல் சீராக சுவாசிக்க வேண்டும். ஓரிரு நிமிடங்கள் அதே நிலையில் வைத்திருந்த பிறகு கால்களை மடித்து முதுகு பின்புறத்தை உள்ளங்கைகளில் கொண்டு வந்து மெதுவாக கால்களை ஆரம்ப நிலைக்கு திருப்ப வேண்டும். 

 2. உஜ்ஜயி பிராணாயாமம்: 

கால்களை மடக்கி, உடலை நேராக நிமிர்த்தி தியான நிலையில் அமர்ந்து கொள்ளவும். கண்களை மூடிக்கொள்ளவும். பின்பு இரு நாசி துவாரங்கள் வழியாக நிதானமாகவும், ஆழமாகவும் மூச்சை உள்ளிழுக்கவும்.சில விநாடிகள் அதே நிலையில் இருந்துவிட்டு மெதுவாக மூச்சை வெளியே விடவும். அப்படி மூச்சு வெளிப்படும்போது 'ஹா' என்ற சத்தத்தை வெளியிடவும். இந்த மூச்சுப் பயிற்சி நுரையீரலை வலுப்படுத்த உதவும். அதில் தேங்கி இருக்கும் சளியை வெளியேற்ற உதவும். 

3. அர்த்த மத்ஸ்யேந்திராசனம்: 

ரையில் நேராக நிமிர்ந்த நிலையில் கால்களை நீட்டியபடி அமர வேண்டும். பின்பு இடது காலை வலது பக்கமாக மடக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு வலது காலை இடது காலுக்கு வெளிப்புறமாக கொண்டு வந்து தரையில் ஊன்றிக் கொள்ள வேண்டும். அதே நிலையில் மூச்சை வெளியேற்றியபடி உடலின் மேல்பாகத்தை வலது பக்கமாக திருப்ப வேண்டும். அப்போது முதுகுத்தண்டுவடம் வளையாமல் நேராக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வலது கால் பாதத்தை இடது கையால் பிடித்துக்கொண்டு வலது கையை பின்புறமாக வைத்துக்கொள்ள வேண்டும். அந்த நிலையில் இயல்பாக மூச்சை உள் இழுத்தவாறு 20 முதல் 30 நொடிகள் இருக்க வேண்டும். பின்பு மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்.



Click here to join whatsapp group for daily health tip

பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் 7 நன்மைகள்

July 09, 2022 0
ஆண்டு முழுவதும் கிடைக்கும் பழ வகைகளுள் ஒன்று, பப்பாளி. ஆனாலும் மற்ற பழங்களை போல் பப்பாளியை பலரும் விரும்பி சாப்பிடுவதில்லை. ஏன் பப்பாளி பழத்தை தவிர்க்கக்கூடாது என்பது குறித்து பார்ப்போம். 
1. செரிமானத்தை மேம்படுத்தும்
பப்பாளி பழத்தில் புரதத்தை ஜீரணிக்க உதவும் சைமோபாபைன் மற்றும் பபைன் போன்ற என்சைம்கள் இருப்பதால், செரிமான செயல்முறை எளிதாக நடைபெறும். மலச்சிக்கல் மற்றும் குடல் நோய் பாதிப்புகளையும் கட்டுப்படுத்தும் தன்மை பப்பாளிக்கு உண்டு. மேலும் பப்பாளியில் நிறைந்துள்ள நார்ச்சத்து செரிமான அமைப்பை சீராக செயல்பட வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலின் வளர்சிதை மாற்ற செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.

2. புற்றுநோய்க்கு எதிராக பாதுகாப்பு அளிக்கும் 

புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய் பாதிப்புக்கு ஆளாகாமல் பாதுகாக்கும் ஆற்றலும் பப்பாளிக்கு இருக்கிறது. இதில் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளது. அது ப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்தை குறைக்க உதவுகிறது. மேலும் பப்பாளியில் உள்ள லைகோபீன், புரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவும் பீட்டா கரோட்டினுடன் இணைந்து அத்தகைய புற்றுநோயை தடுக்கக்கூடியது. பப்பாளியில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்துக்கு ஆரோக்கியம் சேர்ப்பதால் பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தையும் தவிர்க்கலாம்.

3. இதயத்தைப் பாதுகாக்கிறது 

பப்பாளி, இதயத்திற்கு ஆரோக்கியமான உணவாகவும் கருதப்படுகிறது. இதில் பொட்டாசியம் மிகுதியாக இருக்கிறது. வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகளும் அதிகம் உள்ளன. இவை அனைத்தும் தமனிகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் உடலில் ரத்த ஓட்டம் சீராக செயல்படுவதற்கும் ஊக்குவிக்கிறது. பக்கவாதம், மாரடைப்பு மற்றும் உயர் ரத்த அழுத்த அபாயத்தைக் குறைக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தவும் பப்பாளி உதவுகிறது. 

4. மூளையை பாதுகாக்கும் 
மூளை செல்களை சிதைப்பதன் மூலம் நினைவாற்றல் இழப்பு பிரச்சினையை ஏற்படுத்தும் நோய், அல்சைமர். அறிவுசார் திறன்களை இழக்க செய்துவிடும் ஒருவகை நரம்பியல் கடத்தி நோயும் கூட. பிரீ ரேடிக்கல்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகளுக்கு இடையே சம நிலையின்மை நிலவுவதன் விளைவாக செல்கள் சேதம் அடைகின்றன. பப்பாளி மற்றும் புளித்த பப்பாளி சாற்றை உட்கொள்வதன் மூலம், ப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆதலால் பப்பாளி பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் அல்சைமர் நோயின் வீரியத்தை குறைக்கலாம்.

5. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 
இதில் அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும் என்பதை அறிந்து கொள்வதும் அவசியமானது. 

6. கண்களை பாதுகாக்கும் 
உடலின் மிக முக்கியமான பாகங்களில் ஒன்றாக கண்கள் இருப்பதால் அவற்றை பாதுகாப்பது முக்கியமானது. பப்பாளி, தசை சிதைவு போன்ற நோய்களில் இருந்து கண்களை பாதுகாக்கின்றன. இதுமட்டுமல்லாமல் பப்பாளியில் வைட்டமின் ஏ சத்தும் நிறைந்துள்ளது. இது கார்னியாவை பாதுகாக்க உதவுகிறது. ஆன்டி ஆக்சிடென்டுகளும் நிறைந்திருப்பதால் விழித்திரை சிதைவை குறைக்கவும், பார்வை திறனை மேம்படுத்தவும் உதவுகிறது. 

7. வலியை குறைக்க உதவும் 
இயற்கை வலி நிவாரணியாக செயல்படும் பப்பேன் என்ற நொதி பப்பாளியில் இருக்கிறது. இது வீக்கத்தை எதிர்த்து போராடவும், சில வகையான வலிகளை குறைக்கவும் உதவும். மேலும் அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்ட பாபாயின் இருப்பதால், கீல்வாதம் காரணமாக ஏற்படும் மூட்டு வலியை குறைப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

Fibromyalgia: உடல் வலியை அலட்சியம் செய்ய வேண்டாம்; தசைநார் வலி நோய் காரணமாக இருக்கலாம்

July 09, 2022 0

 உடம்பு வலி என்பது பொதுவாக அனைவருக்கும் வரும்  ஒரு உடல் நல பிரச்சனைதான். சில சமயங்களில் உடல் வலி பின்னி எடுக்கும். அதற்கு காய்ச்சல் அல்லது அதிக அளவில் ஏதேனும் பளு தூக்கியது போன்றவை காரணமாக இருக்கலாம். ஆனால், அடிக்கடி உடல் வலி ஏற்படுகிறது அல்லது காரணமே இல்லாமல் உடல் வலி ஏற்படுகிறது என்றால், அலட்சியம் வேண்டாம். உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். ஏனென்றால், அது  ஃபைப்ரோமியால்ஜியா என்னும் தசைநார் வலி என்னும் நோயாக இருக்கலாம்.

தசைநார் வலிக்கான காரணம்

இந்த தசை நார் நோயினால், ஆண்களை விட அதிக அளவில் பெண்கள் தான் பாதிக்கப்படுகின்றனர் என புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இந்த நோய் எதனால் ஏற்படுகிறது என்பதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை என்றாலும், மரபு ரீதியாக இந்த நோய் ஏற்பட்டிருந்தால், அவர்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.


சிலருக்கும் உடல் ரீதியான காயம், தொற்று, அறுவை சிகிச்சை, குழந்தை பேறு ஆகியவற்றின் காரணமாவோ அல்லது மிக மோசமான மன நிலை பாதிப்பின் காரணமாகவோ ஏற்படக் கூடும்.  உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாகவும் தசைநார் வலி ஏற்படக் கூடும்.

தசைநார் வலிக்கான அறிகுறிகள்

தசைநார் வலி நோய் பாதிக்கபப்ட்டவர்களுக்கு, அதிக அளவிலான சோர்வு, தூக்கமின்மை, மூட்டுகளில் தாங்க முடியாத வலி, கடுமையான தலைவலி, எதிலும் கவனம் செலுத்து முடியாத மனநிலை போன்ற அறிகுறிகள் இருக்கும். இது உங்கள் அன்றாட வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

தசைநார் வலிக்கான சிகிச்சை

நோய்க்கான சிகிச்சையில், மருந்துகள் வழங்கப்பட்டாலும், உடற்பயிற்சி,  மன அழுத்தத்தை நீக்கும் யோகா பயிற்சிகள், தியான பயிற்சிகள் ஆகியவை முக்கிய ப்பங்கு வகிக்கின்றன. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், நமது வாழ்க்கை முறையை மேம்படுத்துவதன் மூலம் இந்த நோயிலிருந்து விடுபடலாம். 


Click here to join whatsapp group for daily health tip

July 8, 2022

Mushroom, Honeybee, Organic Agricultural Training Schedule of TNAU-Coimbatore

July 08, 2022 0

New Age Startup Oppurtunities in Fisheries - Free Online Training Programme by MANAGE, Hyderabad

July 08, 2022 0

 New Age Startup Oppurtunities in Fisheries -  Free Online Training Programme by MANAGE, Hyderabad

1

Trg Prg No. & Year

:

179, 2022-23

2

Title

:

New Age Startup Oppurtunities in Fisheries 

3

Dates

:

11/07/2022 to 14/07/2022

4

Venue

:

Online (No Fee), ICAR- Central Institutes of Fisheries Technology, Cochin, Kerala

5

Objectives

:

i) To enrich the participants understanding on start-up opportunities in fisheries; ii) To familiarize the technological interventions in value addition, fish processing, nutraceuticals and dry fish processing; iii) To conduct focus group discussion on preparation of business plan. iv) To update the schemes and policies on the entrepreneurship development.

6

Content

:

Enterprise development process (EDP) is the activity of generating additional income to the interested stakeholders. The contents of the programme include the following areas. 


1. Stakeholders’ feasibility analysis 

2. Opportunities in value addition, fish processing, nutretuticals and dryfish processing. 

3. Business plan preparation. 

4. Investment analysis. 

5. Need for Inclusive entrepreneurship. 

6. Success of community based EDP 

7. Activities of Agri-Business unit of ICAR-CIFT. 

8. NFDB initiatives on entrepreneurship development 

9. MSME – Policies and programmes 

10. Practical session on detailed project report preparation

7

Methodology

:

Theory and practical that include classroom lectures, interactive discussions, case studies and real-life examples.

8

To Whom

:

Extension professionals, 

field level officers, 

students, 

entrepreneurs and other professionals in the fisheries sector who are interested/ engaged in establishment of fish-based enterprises. 

This will be helpful for the youth who are looking for self-employment opportunities in fisheries.



July 7, 2022

மூட்டு வலி வாட்டி வதைக்குதா? இவற்றின் மூலம் விரட்டி அடிக்கலாம்!

July 07, 2022 0

 மூட்டு ஆரோக்கியத்தை இயற்கையாக மேம்படுத்துவது எப்படி: 

முழங்கால் மற்றும் மூட்டு வலி பிரச்சனையால் பலர் சிரமப்படுகிறார்கள். பல நேரங்களில் முழங்கால் வலி காயம் காரணமாகவோ அல்லது கீல்வாதம் போன்ற பல நோய்களின் காரணமாகவோ ஏற்படலாம். 

வயது ஏற ஏற, நாட்பட்ட வலியும் வெளிவரத் தொடங்குவதையும் அடிக்கடி நாம் பார்க்கிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீண்ட நேரம் எங்கும் உட்காரவோ, அதிக நேரம் நடக்கவோ முடியாது. இந்தப் பிரச்சனையைக் குறைக்க கால்சியம் நிறைந்த உணவை உட்கொள்வது நல்லது. . கால்சியம் எலும்புகளுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஏதேனும் காரணத்தால் மூட்டு வலி ஏற்பட்டால், நீங்கள் சில எளிய வழிமுறைகளின் மூலம் அதிலிருந்து நிவாரணம் பெறலாம். 

மழை மற்றும் குளிர்காலத்தில் மூட்டு வலி கணிசமாக அதிகரிக்கிறது. ஆகையால் இந்த காலங்களளில் உணவில் மாற்றங்களைச் செய்வதைத் தவிர, நீங்கள் லேசான உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும். குழந்தை பருவத்திலிருந்தே கால்சியம் அதிகமாக உட்கொள்பவர்களுக்கு இந்த பிரச்சனை குறைவாகவே இருக்கும். மூட்டு வலியை போக்கும் பயனுள்ள உணவுகளை பற்றி காணலாம். 

பால் நுகர்வு:

உங்கள் எலும்புகளை வலுப்படுத்தவும், தசைகளை வளர்க்கவும் விரும்பினால், தினமும் பால் உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. பாலில் புரதம், கால்சியம், கூடுதலாக, பாஸ்பரஸ், மெக்னீசியம், அயோடின் மற்றும் வைட்டமின்கள் ஏ, டி, கே மற்றும் ஈ உட்பட பல தாதுக்கள், கொழுப்புகள் மற்றும் ஆற்றல் உள்ளது.

பெரும்பாலும் உடலில் ஏதாவது காயம் ஏற்பட்டாலோ, அல்லது சளி பிரச்சனை இருந்தாலோ, நாம் பாலுடன் மஞ்சள் சேர்த்து உட்கொள்கிறோம். பால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதோடு, வலியை தாங்கும் சக்தியையும் அளிப்பதே அதற்கு காரணமாகும். 

இஞ்சி:

இஞ்சி சாப்பிடுவது மூட்டு வலி மற்றும் தசைகளுக்கு சிறந்த சிகிச்சை என்று கூறப்படுகிறது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது வலியைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இஞ்சியை வலி நிவாரணியாக பயன்படுத்த, ஒரு டீஸ்பூன் அரைத்த மஞ்சள், ஒரு கப் பாலில் இஞ்சி துண்டுகள் சேர்த்து, அதில் கருப்பு மிளகு ஒரு சிட்டிகை சேர்த்து அதை ஒரு கொதி நிலைக்கு கொண்டு வர வேண்டும். அதனுடன் தேன் கலந்து குடித்து வர, விரைவில் வலி நீங்கும்.

நட்ஸ் / உலர் பழங்கள்:

நட்ஸ் / உலர் பழங்களின் நன்மைகளை அனைவருக்கும் தெரியும். தினமும் அதை உட்கொள்பவர்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள். பல்வேறு நட்ஸ் / உலர் பழங்களை சாப்பிடுவதன் மூலம், உங்கள் மூட்டு வலிக்கு உதவும் பல ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும். 

மேலும் இவை தசை வளர்ச்சியிலும் உதவுகின்றன. நட்ஸ்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. வாதுமைக் கொட்டை, பாதாம், ஆளிவிதையுடன் பைன் கொட்டைகளை தினமும் உட்கொள்ள வேண்டும்

உடல் எடையை குறைக்க ஜூம்பா பயிற்சி டிரை பண்ண போறீங்களா..? அதுக்கு முன்னாடி இதை தெரிஞ்சுக்கோங்க...

July 07, 2022 0

 ஜூம்பா என்பது ஒரு வொர்க்அவுட் பார்ட்டி போன்றது. இது dance floor-ல் செய்யப்படும் வினோதமான ஒற்றுமையைக் கொண்ட வொர்க் அவுட். மேலும், இது குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலமான வொர்க்அவுட்டாக மாறி வருகிறது. இது ஒரு தீவிர கார்டியோ பயிற்சியாகும். இது கலோரிகளை எரிக்கவும், தசை திரட்சிக்கும் மற்றும் உங்கள் கைகளை ஒரே நேரத்தில் டோனிங் செய்யவும் பயனுள்ளதாக இருக்கும்.



மற்ற உடற்பயிற்சிகளைப் விட இதிலுள்ள உற்சாகமான விஷயம் என்னவென்றால்; வொர்க் அவுட் போன்று ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப செய்ய வைத்து உங்களை சலிப்படையச் செய்யாது. வேடிக்கையாக இருக்கும் அதே நேரம் இது உங்கள் கலோரிகளை எரிப்பதில் கவனம் செலுத்துகிறது.

Zumba வகுப்பில் சேர ஏற்கனவே திட்டமிட்டுள்ளீர்களா? காத்திருங்கள். முதலில் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் இங்கே உள்ளன. தி ரூட்டட் அண்ட் கோ இணை நிறுவனர் ரோஹித் மோகன் புகாலியா முதலில் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்களை பட்டியலிட்டுள்ளார். ஜூம்பாவுக்கு செல்வதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்.,

1. நீர்ச்சத்து அதிகரிப்பு மற்றும் ஊட்டச்சத்து :

வொர்க்அவுட்டிற்காக உங்கள் உடலை சார்ஜ் செய்து கொள்ள மறக்காதீர்கள். ஜூம்பாவுக்கு முந்தைய மற்றும் பிந்தைய ஊட்டச்சத்து என்பது நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான அம்சமாகும். நீர்ச்சத்து அதிகரிப்பு கால்களில் ஏற்படும் பிடிப்புகளைத் தவிர்க்க உதவுகிறது மற்றும் உணவு உங்களை உற்சாகமாக வைத்திருக்க உதவுகிறது.

இதில் புரதங்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை தசை முறிவைத் தடுக்கின்றன, நீங்கள் நடனமாடும்போது அவற்றை வலுவாகவும் நெகிழ்வாகவும் வைத்திருக்கின்றன.

2. ஆரோக்கியமான மாற்றங்கள் தாமதமாகவே கிடைக்கும் :

ஜூம்பா ஒரு கடுமையான உடற்பயிற்சி முறையாக இருப்பதால், முடிவுகளை விரைவாக அடைய உதவுகிறது என்று கருதப்படுகிறது. இருப்பினும், உங்கள் எடை அல்லது தசை வலுவூட்டலில் கடுமையான மற்றும் உடனடியான விளைவுகளை எதிர்பார்ப்பது நடைமுறை சாத்தியமற்றது.

மற்ற எல்லா வகையான வொர்க்அவுட்டைப் போலவே, ஜூம்பாவும் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி தேவைப்படக்கூடிய ஒரு செயல்முறையாகும்.

3. இது அனைவருக்குமானது :

ஜூம்பாவை பின்பற்ற நீங்கள் நன்றாக நடனமாடக்கூடியவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது ஒரு நல்ல நடனக் கலைஞராக இருப்பது பற்றியது அல்ல. ஜூம்பா நகர்வுகள் எளிதானவை மற்றும் மாற்றியமைக்கக்கூடியவை. இதற்கு வயது வரம்போ தனித்திறனோ தேவையில்லை. ABCD விதியை நினைவில் கொள்ளுங்கள்- Any Body Can Do.

4.வசதியான ஆடைகளில் கவனம் செலுத்துங்கள் :

Zumba என்று சொல்லும் போது பக்கவாட்டு அசைவுகள் மற்றும் முதன்மையான அசைவுகள் குறித்து சிந்தியுங்கள். இந்த ஃபிட்னஸ் பயிற்சிக்கு வரும்போது உங்கள் ஆடைகள் இலகுவானதாகவும் அதிகப்படியான வியர்வையை உறிஞ்சும் வகையிலும் இருக்க வேண்டும்.

பலவிதமான, உடல் அசைவுகளுக்கு ஒத்துழைக்கும் வகையிலான ஒரு ஜோடி ஆடைகளை எடுக்க மறக்காதீர்கள். Dance sneakers அல்லது cross trainers ஜூம்பாவிற்கு சிறந்த தேர்வுகள்.

5.நீங்கள் சாப்பிடக்கூடிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகளை அறிந்து கொள்ளுங்கள் :

எந்தவொரு உடற்பயிற்சி திட்டத்தின் பட்டியலிலும் சரியான உணவு மற்றும் ஊட்டச்சத்து முதலிடம் வகிக்கிறது. அது இல்லா விட்டால், ஜூம்பா வொர்க்அவுட் எளிதில் பலவீனம் மற்றும் சோர்வை ஏற்படுத்தும். கார்போஹைட்ரேட் நிறைந்த ஆனால் குறைந்த கொழுப்புள்ள உணவுகளையே தேர்ந்தெடுங்கள்.

ஜூம்பா அடைந்தே தீர வேண்டிய இலக்கல்ல, அது ஒரு போட்டியும் அல்ல. உடற்தகுதியை நோக்கிய இந்த அழகிய பயணத்தை அனுபவிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். இது அதிகம் செய்ய வேண்டும். மேலும் இந்த சுவாரஸ்யமான, உற்சாகமளிக்கும் உடற்பயிற்சியில் சத்தான ஸ்னாக்ஸ் விருப்பங்கள் ஆரோக்கியமான விளைவுகளைத் தரும். ஃபிட்டான மகிழ்ச்சியான மற்றும் சுவையான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்!

Webinar on Startups in Urban Agriculture By MANAGE Hyderabad on 23-jul-2022

July 07, 2022 0