Agri Info

Adding Green to your Life

October 25, 2022

உங்கள் வயிற்று வலிக்கு காரணம் என்ன..? அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்!

October 25, 2022 0

 மேல் வயிற்றுப் பகுதியில் வலி எடுப்பது அஜீரனம், வாயுத்தொல்லை போன்ற சாதாரண வலி கிடையாது. தீவிரத்தன்மை கொண்ட உடல்நலப் பிரச்சினைகளால் இந்த வலி ஏற்படலாம். குறிப்பாக, ஆசிட் ரிஃப்ளெக்ஸ் என்னும் அமில எதுக்களித்தல் மற்றும் பித்தப்பை கல் போன்ற காரணங்களால் வயிறு வலி ஏற்படலாம்.

இந்த இரண்டு பிரச்சினைகளுக்குமான அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருப்பதால் பெரும்பாலும் மக்கள் குழப்பம் அடைந்து விடுவார்கள். ஆகவே, இந்த இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை புரிந்து கொண்டால், அதற்கேற்ப நாம் சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும். மேலும், வாழ்வியல் பழக்க, வழக்கங்களை மாற்றி கொள்ள முடியும்.

ஆசிட் ரிஃப்ளெக்ஸ் என்றால் என்ன..?

நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆகுவதற்காக குடலில் அமிலம் சுரக்கும். இந்த அமிலமானது நமது உணவுக் குழாயை நோக்கி வராமல் இருக்க ஸ்பின்ஸ்டர் என்னும் வால்வு இருக்கும். இது தளர்வடையும் பட்சத்தில் அமிலமானது உணவுக் குழாயை நோக்கி மேலெழும்பி வரும். அதைத்தான் ஆசிட் ரிஃப்ளெக்ஸ் என்று சொல்கிறோம். இதுவே அடிக்கடி ஏற்படுமாயின், அதை ஜெர்டு என்று குறிப்பிடுகின்றனர்.

பித்தப்பை கல் என்றால் என்ன..?

நமது வயிற்றின் வலது புறத்தில் இருக்கக் கூடிய சிறிய உறுப்புதான் பித்தப்பை. கல்லீரலுக்கும் கீழே இருக்கிறது. செரிமானத்திற்கு தேவையான பைல் என்னும் திரவம் இதில் சுரந்து அங்கிருந்து சிறுகுடலுக்கு வரும். அந்த செரிமான திரவமானது படிந்து நாள்பட ஒரு கல் போல உருவாகிவிடும். பெரும்பாலும் ஆரம்ப காலத்தில் இது எந்தவித அறிகுறிகளையும் காட்டாது. பெரிய அளவுக்கு தொந்தரவு ஏற்படாது. ஆனால், பிரச்சினை தீவிரமாகும் பட்சத்தில் அறுவை சிகிச்சை மூலமாக அகற்ற வேண்டியிருக்கும்.

ஆசிட் ரிஃப்ளெக்ஸ் மற்றும் பித்தப்பை கல் இடையே உள்ள ஒற்றுமை

இந்த இரண்டும் வெவ்வேறான நோய்கள் என்றாலும் அறிகுறிகள் ஒன்றுபோல இருக்கின்றன. சாதாரணமாக இந்த அறிகுறிகளின் வேறுபாடு என்னவென்று நீங்கள் தெரிந்து கொள்ளாவிட்டால் தவறான சிகிச்சையை நீங்கள் எடுத்துக் கொள்ள நேரிடும். இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்க தெரிந்து கொள்ள வேண்டும்.

எங்கு வலி ஏற்படும்..?

ஆசிட் ரிஃப்ளெக்ஸ் பிரச்சினை இருப்பவர்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படும். வயிறு முதல் நெஞ்சு வரையில் எரிச்சல் உண்டாகும். உணவுக் குழாயின் அடிப்பகுதியான ஸ்பின்ஸ்டர் வால்வு தளர்வதன் காரணமாக கீழ் பகுதி நெஞ்சு எலும்புகளை ஒட்டி வலி அதிகமாக இருக்கும்.

இதேபோல பித்தப்பை கல் பிரச்சினைக்கும் மேல் வயிற்றில் வலி ஏற்படும் என்றாலும், அது வலது புறமாக இருக்கும். நெஞ்சு அல்லது இடுப்பு பகுதி வரையிலும் வலி பரவும்.

வலி எப்படி இருக்கும்..?

குனிவது, வளைவது போன்ற சமயங்களில் ஆசிட் ரிஃப்ளெக்ஸ் காரணமாக வரும் வலி அதிகமாகும். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ஆண்டசிட் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். ஆனால், பித்தப்பை கல் பிரச்சனையால் ஏற்படும் வலி என்பது நீங்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளீர்களோ, அந்த அளவுக்கு தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும்.

நேர கணக்கீடு முக்கியம்

ஆசிட் ரிஃப்ளெக்ஸ் காரணமாக ஏற்படும் வலி என்பது சில நிமிடங்கள் முதல் சில மணி நேரம் வரையில் நீடிக்கலாம். கொழுப்பு நிறைந்த உணவு சாப்பிடும்போதும், வயிறு முட்ட சாப்பிடும்போதும் வலி உண்டாகும். பித்தப்பை கல் வலியும் சாப்பிட்ட பிறகு ஏற்படும் என்றாலும், அது உடனடியாக தோன்றுவதில்லை. ஆனால் 5 மணி நேரம் வரையிலும் கூட நீடிக்கும்.

வயிற்று வலிக்கு வேறு காரணம்

பித்தப்பை கல் இருப்பவர்களுக்கு அல்ட்ராசவுண்ட் பரிசோதனை மூலமாக அது உறுதி செய்யப்பட்டாலும், அவர்களுடைய வயிற்று வலிக்கு ஆசிட் ரிஃப்ளெக்ஸ் காரணமாக இருக்கலாம். இதனால் தான் சிலருக்கு பித்தப்பை கல் அகற்றிய பிறகும் கூட வயிற்று வலி நீடிக்கிறது. அதேசமயம், ஆரோக்கியமான உணவு முறையை கடைப்பிடிப்பதன் மூலமாக இந்த இரண்டையுமே தவிர்க்க முடியும்.

 Click here to join whatsapp group for daily health tip

முளைகட்டிய பயறுகளை பச்சையாக உண்பதால் கிடைக்கும் நன்மை மற்றும் தீமைகள்..!

October 25, 2022 0

 குறைவான கலோரி, அதிக ஃபைபர் சத்து, வலுவான புரோட்டின் சத்து, வைட்டமின் சி, ஃபோலேட், காப்பர் மற்றும் மாங்கனீஸ் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் அடங்கிய ஸ்னாக்ஸாக முளைகட்டிய பயறுகள் குறிப்பிடப்படுகின்றன.

ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருப்பதன் காரணமாக முளைகட்டிய பயறு வகைகள் சூப்பர் ஃபுட்ஸ் என்று குறிப்பிடப்படுகிறனன. முளைகட்டிய பயறு வகைகளை பலர் பச்சையாகவும் உட்கொள்கிறார்கள் சிலர் லேசாக வேகவைத்து அல்லது சமைத்தும் உட்கொள்கிறார்கள். பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் அப்படியே ரா-வாக முளைகட்டிய பயறுகளை சாப்பிடுவதால் சில நன்மைகளும் கூடவே சில அபாயங்களையும் கொண்டு உள்ளது.

முளைகட்டிய பயறுகள் என்பவை விதை மற்றும் குழந்தை தாவரம் உள்ளிட்ட இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் இருப்பவை. சாலட்ஸ் முதல் சாண்ட்விச் வரை பலவற்றிலும் பச்சையாக முளைகட்டிய பயறுகளை பயன்படுத்தலாம். பல்வேறு வகையான ஸ்ப்ரவுட்ஸ் எனப்படும் முளைகட்டும் பயறுகளில் பல்வேறு வகைகள் உள்ளன. வெஜிடபிள் ஸ்ப்ரவுட்ஸ், பீன் ஸ்ப்ரவுட்ஸ், ஸ்ப்ரவுட்டட் கிரெயின்ஸ், நட்ஸ் & சீட் ஸ்ப்ரவுட்ஸ் என பல உள்ளன.

வெஜிடபிள் ஸ்ப்ரவுட்ஸ் என்னும் போது மஸ்ட்டர்ட் கிரீன், ப்ரோக்கோலி, ரெட் க்ளோவர் மற்றும் அல்ஃப்ல்ஃபா ஸ்ப்ரவுட்ஸ் உள்ளிட்ட பல இருக்கின்றன. பீன் ஸ்ப்ரவுட்ஸ் என்னும் போது கிட்னி பீன்ஸ்,ஸ்னோ பீஸ் மற்றும் பிளாக் பீன் ஸ்ப்ரவுட்ஸ் உள்ளிட்டவை அடங்கும். ஸ்ப்ரவுட்டட் கிரெயின்ஸ் வகையில் குயினோவா மற்றும் வீட்கிராஸ் ஸ்ப்ரவுட்ஸ் அடக்கம். நட்ஸ் & சீட் ஸ்ப்ரவுட்ஸ் என்னும் வகையில் எள் விதைகள், பூசணி விதைகள் மற்றும் சூரியகாந்தி விதை ஸ்ப்ரவுட்ஸ்கள் வருகின்றன. சரி, இப்போது முளைகட்டிய பயறு அல்லது தானிய வகைகளை பச்சையாக உட்கொள்வதால் நமக்கு கிடைக்கும் நன்மை மற்றும் தீமைகளை பார்க்கலாம்...

நன்மைகள்:

ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் :

ரா ஸ்ப்ரவுட்ஸ் டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு அவர்களின் ரத்த சர்க்கரையை சிறப்பாக கட்டுப்படுத்த உதவும். இது தொடர்பான ஆய்வில் ரா ஸ்ப்ரவுட்ஸ் amylase enzyme செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கலாம். எனவே இது சர்க்கரைகளை சரியாக உடைத்து ஜீரணிக்க உடலை பயன்படுத்த செய்கிறது.

செரிமான மேம்பாடு :

பச்சையாக உட்கொள்ளப்படும் முளைகட்டிய பயறு வகைகள் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற மற்றும் செரிமான பிரச்சனைகளை சரி செய்ய உதவ கூடும். பச்சையாக எடுத்து கொள்ளப்படும் ஸ்ப்ரவுட்ஸ்களில் குறைவான ஆன்டி-நியூட்ரியன்ட்ஸ் உள்ளன. இது செரிமான செயல்முறையின் போது தாதுக்களை உறிஞ்சுவதை உடல் திறம்பட செய்ய உதவுகிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன :

தினசரி உணவில் சமைக்காத முளைகட்டிய பயறு வகைகளை சேர்த்து கொள்வது நம் இதய ஆரோக்கியத்திற்கு நன்மைகளை அளிக்கும். இப்பழக்கம் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் என குறிப்பிடப்படும் HDL-ஐ அதிகரிப்பதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது என்பதை பல ஆய்வுகள் எடுத்து காட்டியுள்ளன. சுருக்கமாக சொல்வதென்றால் ரா ஸ்ப்ரவுட்ஸ், கெட்ட கொலஸ்ட்ரால், மொத்த கொழுப்பு மற்றும் பிளட் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

தீமைகள்:

ரா ஸ்ப்ரவுட்ஸ்களை உண்பதால் ஏற்பட கூடிய முக்கிய அபாயம் ஃபுட் பாய்சனிங் ஆகும். ஏனென்றால் பச்சையாக உட்கொள்ளப்படும் முளைகட்டிய பயறு வகைகளில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருக்கலாம். மேலும் இவை உணவுகளால் பரவும் நோயை ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். விதைகள் ஈரப்பதமான நிலையில் முளைப்பதால் பாக்டீரியாக்கள் மட்டுமின்றி கிருமிகள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறும் வாய்ப்புகளும் அதிகம்.

எனவே பயறுகளை முளைகட்டிய பின் அப்படியே சாப்பிடாமல் நன்கு வேகவைத்து சாப்பிடுவது நோய்வாய்ப்படாமல் பாதுகாக்க உதவலாம். பல ஆய்வுகளின்படி பெரும்பாலான ஆரோக்கியமான மக்களுக்கு, பச்சையாக அல்லது லேசாக சமைத்த வேக வைத்த ஸ்ப்ரவுட்ஸ்களை சாப்பிடுவதால் நன்மைகள் கிடைப்பதை விட, அபாயங்கள் சற்று அதிகம் இருக்கும். காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு அபாயங்களும் உண்டு. ஸ்ப்ரவுட்ஸ் தவறான முறையில் வளர்க்கப்பட்டால், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை கொண்டிருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 Click here to join whatsapp group for daily health tip

காலையில் எழுந்துகொள்ளும் போது சோர்வாகவே இருக்கிறதா..? இவையெல்லாம் காரணங்களாக இருக்கலாம்...

October 25, 2022 0

 காலையில் எழுந்து கொள்ளும் போது உற்சாகமாகவும், மனம் லேசாகவும் இருந்தால் அந்த நாள் சிறப்பாக இருக்கும். ஆனால் பலருக்கும் சரியான தூக்கமின்மை, போன்ற சில காரணங்களால் காலையில் எழுந்து கொள்ளும் போது சோர்வாக இருக்கும். சோர்வை போக்குவதற்கு சுட சுட டீயோ காபியோ குடித்து அன்றைய நாளை தொடங்குவார்கள். நீங்கள் தினமும் 8 மணி நேரம் நன்றாகத் தூங்கியும், அதற்கு பிறகும் காலையில் சோர்வாக இருந்தால், தொடர்ச்சியாக உங்களுக்கு காலையில் எழுந்து கொள்ளும் பொழுது நீங்கள் சோர்வாகவே உணர்ந்தால் உங்களுடைய பழக்க வழக்கங்களில் பின்வருவனற்றை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.

அலாரம் அடிக்க அடிக்க ஆஃப் செய்வது :இன்னும் ஒரு 5 நிமிடம் தூங்கலாம், இன்னும் ஒரு 10 நிமிடம் தூங்கலாம் என்று அலாரம் அடிப்பதற்கு முன்பாகவே அல்லது அடிக்கும் பொழுது உடனடியாக அது ஸ்னூஸ் மோடுக்கு மாற்றுவது, காலை நேரத்தில் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் நன்றாக தூங்கி தூங்கி கொண்டிருக்கும் பொழுது அலாரம் அடித்து இடையில் விழித்து மீண்டும் சில நிமிடங்கள் தூங்குவது என்பது வழக்கத்தை விட உங்களை அதிகமாக சோர்வாக்கும். உங்களுடைய ஆழமான தூக்கத்தில் இருந்து நீங்கள் கண்விழித்து விட்டீர்கள், எனவே, மீண்டும் அந்த நிலைக்கு செல்ல முடியாது.

அதிகமாக காஃபி மற்றும் காஃபீன் உள்ள பானங்கள், மதுபானம் :பலருக்கும் காலையில் எழுந்த உடனேயே சுடச்சுட காபி இருக்க வேண்டும்; அந்த அளவுக்கு மிகப்பெரிய ஆற்றலை கொடுக்கும் காபியில் இருக்கும் காஃபீன் உங்களுடைய நரம்பு மண்டலத்தை தூண்டி விட்டு உங்களை உற்சாகப்படுத்தும். ஆனால் நீங்கள் தூங்குவதற்கு முன்பு காபி குடித்தால் அது உங்களை உற்சாகமாக வைத்திருக்கும், ஆனால் உங்கள் தூக்கம் கெடும். எனவே காலையில் எழுந்து கொள்ளும் போது சோர்வாக இருந்தால் காபி குடிப்பதை குறைக்க வேண்டும். அதேபோல மதுபானத்தையும் தவிர்க்க வேண்டும். காபி மற்றும் மதுமானம் இரண்டுமே ஆழமான தூக்கத்தை பாதிக்கிறது. இதனால் நீங்கள் காலையில் சோர்வாகத்தான் எழுந்து கொள்வீர்கள்.

உங்கள் உடல் வெளிப்படுத்தும் அறிகுறிகளை, தூக்கத்தின் தேவையை புரிந்து கொள்ளுங்கள் :ஆங்கிலத்தில் இதை Chronotype என்று கூறுவார்கள். ஒரு சிலருக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்க வேண்டும் என்று இயற்கையாகவே தோன்றிவிடும். அந்த நேரத்தில் நீங்கள் கட்டாயமாக தூங்க வேண்டும். எளிதாக சொல்ல வேண்டுமானால் ஒரு சிலருக்கு இரவு முழுவதும் வேலை செய்து நள்ளிரவுக்கு பின்பு அல்லது அதிகாலை நேரத்தில் தூங்க செல்வார்கள். ஒரு சிலர் காலையில் எழுந்து இரவில் சீக்கிரமாக தூங்கி விடுவார்கள். இவ்வாறு உங்களுடைய உடலுக்கு எந்த நேரத்தில் தூங்கினால் அது சரியாக இருக்கும் என்பதை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார் போல நீங்கள் உங்களுடைய தூக்க நேரத்தை நீங்கள் அமைத்துக்கொள்ள வேண்டும்.

நிம்மதியான தூக்கத்தை பாதிக்கும் சுற்றுபுறம் மற்றும் காரணிகள் :பொதுவாகவே ஒரு சிலருக்கு தூங்கும் போது, தங்களைச் சுற்றி என்ன நடக்கின்றது என்றே தெரியாது. தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள மாட்டார்கள். இடி இடித்தாலும், பூகம்பமே வந்தாலும் தூக்கம் கெடாது என்று என்ற நிலையெல்லாம் ஒரு வகையில் வரம் தான். ஆனால் ஒரு சிலருக்கு விளக்கு போட்டால், சிறிய சத்தம் கேட்டாலே, தூக்கம் கலைந்துவிடும். எனவே அவ்வாறு மிகவும் சென்சிட்டிவாக இருப்பவர்கள் அமைதியான இடமாக தேர்வு செய்ய வேண்டும். விளக்கின் வெளிச்சம், மொபைலில் இருந்து, எலெக்ட்ரானிக் சாதனங்களில் இருந்து வெளிவரும் நீல ஒளி, ஆகியவை கூட சில நேரங்களில் உங்கள் தூக்கத்தை கெடுக்கும். அதேபோல நீங்கள் படுக்கும் மெத்தை, பயன்படுத்தும் தலையணை, ஆகியவை சவுகரியமாக இருக்கிறதா என்பதை நீங்கள் சரிபார்த்து கொள்ள வேண்டும்.

உங்களுடன் தூங்குபவரால் உங்களுக்குத் தொந்தரவு :உங்கள் சகோதரன், சகோதரி, பெற்றோர்கள் அல்லது திருமணமானவர்களாக இருந்தால், கணவன்/மனைவி என்று உங்களுடன் தூங்குபவர்களால் உங்களுக்கு பாதிப்புகள் ஏற்படலாம். அவர்கள் தூங்காமல் உங்களிடம் பேசிக் கொண்டே தொந்தரவு செய்யலாம். அல்லது, அவர்களுடைய குறட்டையால் கூட உங்கள் தூக்கம் கெடலாம். எனவே அவர்கள் நன்றாக தூங்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டு அதை செய்யுங்கள், நீங்கள் நிம்மதியாக தூங்கி காலையில் பிரஷ்ஷாக எழுந்து கொள்ள முடியும்.

தூக்கம் சார்ந்த குறைபாடுகள் :மேலே குறிப்பிட்ட எந்த விதமான காரணமும் இல்லை என்றாலும், காலையில் உங்களால் உற்சாகமாக எழுந்து கொள்ள முடியவில்லை என்றால், உங்களுக்கு தூக்கம் சார்ந்த ஏதேனும் குறைபாடு இருக்கலாம். மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.


 Click here to join whatsapp group for daily health tip

பெண்கள் அதிகமாக பாதிக்கப்படும் 6 ஊட்டச்சத்து குறைபாடுகள் : இதை மட்டும் கவனிச்சுக்கோங்க...

October 25, 2022 0

 ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினை இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தற்போதும் தொடர்ந்து வருவது கவலைக்குரியதாக இருக்கிறது. ஏனென்றால் ஊட்டச்சத்து குறைபாடுகளை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் கடும் உடல்நலப் பிரச்சனைகள் மற்றும் சில நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரிக்கும்.

ஒப்பீட்டளவில் சில ஊட்டச்சத்து குறைபாடுகள் ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கலாம். சோர்வு, தலைசுற்றல், விரல்களில் கூச்சம், தசை பலவீனம் மற்றும் எலும்பு வலி வரை பல கோளாறுகள் ஊட்டச்சத்து குறைபாடுகளால் ஏற்படும். எனவே தங்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் மிகவும் பொதுவான ஊட்டச்சத்து குறைபாடுகளை பெண்கள் அறிந்து கொள்வது அவசியம்.

இந்திய பெண்களுக்கு ஏற்படும் மிகவும் பொதுவான ஊட்டச்சத்து குறைபாடுகள் இங்கே...

கால்சியம் குறைபாடு :

பற்கள் மற்றும் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் கால்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது. அது போல நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் கால்சியம் அவசியம். எலும்புகளின் வலிமைக்கும் இது மிகவும் முக்கியமானது. கால்சியம் குறைபாடு காரணமாக பலவீனமான எலும்பு, பற்களில் பிரச்சனை, தசைப்பிடிப்புகள், சீரற்ற இதயத் துடிப்பு உள்ளிட்டவை ஏற்படலாம். பால் மற்றும் பால் பொருட்களை தவிர சோயா பால், டோஃபு, ப்ரோக்கோலி, பீன்ஸ், பாதாம், எள், சியா விதைகள், உலர்ந்த அத்திப்பழங்கள் மற்றும் கடுகு கீரை உள்ளிட்டவற்றை டயட்டில் சேர்ப்பதன் மூலம் கால்சியம் குறைபாட்டை சரி செய்யலாம்.

வைட்டமின் டி பற்றாக்குறை :

உடலின் வழக்கமான மற்றும் ஆரோக்கிய செயல்பாட்டிற்கு வைட்டமின் டி மிக அவசியம். நல்ல எலும்பு தாது அடர்த்தியை பராமரிக்க தேவையான கால்சியம் உறிஞ்சுதலுக்கு வைட்டமின் டி3 பொறுப்பாகும். இதன் மூலம் எலும்பு முறிவுகளின் அபாயம் குறையும். குறிப்பாக சூரிய ஒளியில் இருந்து பெறக்கூடிய ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்தாக இருக்கிறது. இதில் ஏற்படும் பற்றாக்குறை முதுகுவலி, முடி உதிர்வு, அதீத சோர்வு உள்ளிட்ட பல அறிகுறிகளை ஏற்படுத்தும். மீன் மற்றும் மீன் எண்ணெய் சப்ளிமெண்ட், சீஸ், போர்ட்ஃபிட்டட் மில்க், முட்டையின் மஞ்சள் கரு உள்ளிட்டவை வைட்டமின் டி-யின் வலுவான ஆதாரங்கள்.

அயோடின் குறைபாடு :

இயல்பான தைராய்டு செயல்பாடு மற்றும் தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்திக்கு அயோடின் ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். உடலில் போதுமான அயோடின் இல்லாவிட்டால் உடல் வளர்சிதை மாற்றம், உடல் வெப்பநிலை மற்றும் பலவற்றைக் கட்டுப்படுத்த உதவுவதற்கு போதுமான தைராய்டு ஹார்மோன்கள் உருவாகாது. எடை அதிகரிப்பு, பலவீனம், சோர்வு, முடி உதிர்வு உள்ளிட்ட பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். பால், உப்பு, முட்டை, கோழி, கடற்பாசி உள்ளிட்டவை அயோடின் நிறைந்தவை.

வைட்டமின் பி12 பற்றாக்குறை :

இது நீரில் கரையக்கூடிய வைட்டமின் மேலும் இதை நம் உடலால் இயற்கையாக உற்பத்தி செய்ய முடியாது, உணவுகளில் இருந்து தான் பெற வேண்டும். இந்த வைட்டமின் மூளை மற்றும் நரம்பு செல்கள் வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் டிஎன்ஏ உற்பத்தியை எளிதாக்குகிறது. ரத்த சிவப்பணுக்களை உருவாக்குவதற்கும், ஆரோக்கியமான செரிமானத்தை மேம்படுத்துவதற்கும், நரம்பியல் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் இது முக்கியமானது. B12 விலங்கு உணவுகளில் போதுமான அளவு காணப்படுகிறது. பால், முட்டை, தயிர், கொழுப்பு நிறைந்த மீன்கள், சிவப்பு இறைச்சி, செறிவூட்டப்பட்ட தானியங்கள் உள்ளிட்டவற்றின் மூலம் வைட்டமின் பி 12 பெறலாம்.

ஃபோலேட் குறைபாடு :

இது வைட்டமின் பி-9 அல்லது ஃபோலிக் ஆசிட் என்றும் குறிப்பிடப்படுகிறது. தீவிர சோர்வு, ஆற்றல் பற்றாக்குறை, மூச்சுத் திணறல், தலைவலி, பார்வையில் தொந்தரவு, வாய் புண்கள், தசை பலவீனம், மனச்சோர்வு மற்றும் அதிக குழப்பம் உள்ளிட்ட பல அறிகுறிகள் இந்த ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும். ஃபோலேட் உடலில் சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்க உதவுகிறது மற்றும் ஆரோக்கிய செல் வளர்ச்சி ஊக்குவிக்கிறது. பெண்களுக்கு காணப்படும் ஃபோலேட் குறைபாடு கர்ப்ப காலத்தில் பிறப்பு குறைபாடுகளின் அபாயத்தை ஏற்படுத்த கூடும். குழந்தை பெற்று கொள்ள திட்டமிடும் பெண்கள் கருத்தரிப்பதற்கு முன், ஃபோலேட் அளவு அதிகமாக இருப்பதை உறுதிசெய்ய தகுந்த வைட்டமின்களை உட்கொள்ள நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். அடர்ந்த இலை கீரைகள், பீன்ஸ், பழங்கள், முழு தானியங்கள், நட்ஸ் & சீட்ஸ்களில் ஃபோலேட் காணப்படுகிறது.

இரும்புச்சத்து குறைபாடு :

போதுமான ஊட்டச்சத்துக்கள் இல்லாததால் ஏற்படும் குறைபாடுகளின் பட்டியலில் ரத்த சோகை முக்கியமனது. ரத்த சோகைக்கு மிகவும் பொதுவான காரணமாக இரும்புச்சத்து குறைபாடு இருக்கிறது. கர்ப்பிணிப் பெண்களில் காணப்படும் ரத்த சோகையானது கர்ப்பம் அல்லது பிரசவத்தின் போது பெண்களின் மரண அபாயத்தை அதிகரிக்கிறது. மாதவிடாய் காரணமாக ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கு, ரத்த சோகைக்கு முக்கிய காரணமாகிறது. இந்த இழப்பை ஈடுசெய்யாமல் போவதால் பெண்களில் இரும்புச்சத்து குறைபாடு அதிகமாக உள்ளது. இழக்கும் இரும்புச்சத்தை மீட்டெடுக்க கடல் உணவுகள், சிவப்பு இறைச்சி, பீன்ஸ், கீரைகள், உலர் திராட்சை, பாதாமி போன்றவற்றை பெண்கள் டயட்டில் சேர்த்து கொள்ளலாம்.

 Click here to join whatsapp group for daily health tip

October 24, 2022

மிளகு முதல் இஞ்சி வரை... நீரழிவு நோயைக் கட்டுப்படுத்த கிட்சனில் இருக்கும் ஆயுர்வேத மூலிகைகள்

October 24, 2022 0

 

இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக உள்ள சர்க்கரை நோய். என்னதான் இதற்கு இன்சுலின் முதல் பல்வேறு மருந்து மாத்திரைகள் நாம் சாப்பிட்டாலும் பயனில்லை.

இன்றைக்கு மாறிவரும் உணவுப்பழக்கங்கள் நம்முடைய உடல் நலத்தையும் முற்றிலும் பாதித்துவிட்டது. குறிப்பாக இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக உள்ள சர்க்கரை நோய். என்னதான் இதற்கு இன்சுலின் முதல் பல்வேறு மருந்து மாத்திரைகள் நாம் சாப்பிட்டாலும் பயனில்லை. நம்முடைய உணவுமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டும், இல்லாவிடில் பல எண்ணற்ற நோய்களையும் நாம் பெறக்கூடும். எனவே இந்நேரத்தில் நீரழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் ஆயுர்வேத மூலிகைள் என்னென்ன என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

மிளகு: எந்த விஷமுள்ள உணவுகளைச் சாப்பிட்டாலும் சிறிதளவு மிளகு சாப்பிடுங்கள் போதும். விஷத்தை முறித்துவிடும் என்பார்கள் நம்முடைய முன்னோர்கள். ஆம் அந்தளவிற்கு மிளகில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. குறிப்பிட்ட உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை சீராக்கவும் உதவியாக உள்ளது.

நாவல் பழம்: சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த பழம் என்றால் அது நாவல் பழம் தான். இப்பழங்களில் உள்ள துவர்ப்பு தன்மையும், ஜம்போலினின் என்ற குளுக்கோசைடு உடலில் ஸ்டார்ச் சர்க்கரையாக மாற்றும் செயல்பாட்டை தடுக்க கூடியது. எனவே சர்க்கரை நோயாளிகள் தங்களுடைய உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்வதற்கு தினமும் 4-5 நாவல் பழங்கள் அல்லது இலைகளை மென்று சாப்பிடலாம். இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

இஞ்சி: இஞ்சியில் வைட்டமின்கள் ஏ, சி, பி6, பி12 மற்றும் கால்சியம்,பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. இதில் உள்ள ஹைப்போலிபிடெமிக் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நீரழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடனும், சீராகவும் வைத்திருக்க உதவுகிறது. எனவே நீரழிவு நோயாளிகள் காலையில் எழுந்தவுடன் ஒரு சிறிய துண்டு இஞ்சி அல்லது இஞ்சி சாற்றை குடித்து வந்தால் ரத்த சர்க்கரை அளவையும் குறைக்க முடியும்.

நெல்லிக்காய்: சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் ஆயுர்வேத மூலிகைகளில் முக்கியமானது நெல்லிக்காய். இதில் உள்ள வைட்டமின் சி சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக உள்ளது. இதோடு இதில் உள்ள நார்ச்சத்துக்கள் இரத்த ஓட்டத்தில் உள்ள குளுக்கோஸை மெதுவாக வெளியிடும் வேலை செய்கின்றது. எனவே நீரழிவு நோயாளிகள், நெல்லிக்காயை ஜூஸாகவோ அல்லது அப்படியே ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிடும் போது சர்க்கரை அளவைக் குறைத்துக் கொள்ள முடியும்.

வெந்தயம்: நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு சிறந்த ஆயுர்வேத மருந்தாக உள்ளது வெந்தயம். முளைகட்டிய வெந்தயத்தைத் தினமும் நீங்கள் சாப்பிடும் போது உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரிப்பதோடு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் தடுக்கிறது. இது டைப் 2 வகை சர்க்கரை நோய் உள்ளவர்கள் தாராளமாக இதைச் சாப்பிடலாம். இதோடு உடல் பருமனைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.

ஜின் செக் (Ginseg): அமுக்கரா, தண்ணீர் விட்டான் போன்ற கிழங்கு வகையைச் சார்ந்தது தான் ஜின்செக். இது வெளிநாடுகளில் அதிகளவில் கிடைக்கிறது. இதில் உள்ள நோயெதிர்ப்பு பண்புகள் இரத்த அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

இலவங்கப்பட்டை: இலவங்கப்பட்டையில் ஆன்டிஆக்சிடன்ட் பண்புகள் அதிகளவில் உள்ளதால் நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே சரக்ரை நோய் உள்ளவர்கள் தினமும் அரை டீஸ்பூன் பட்டை பொடியை உணவில் சேர்க்க வேண்டும். இது சர்க்கரை அளவைக் குறைப்பதோடு, உடல் எடை கட்டுப்பாடுடன் வைத்திருக்க உதவுகிறது. மேலும் இதய நோய்க்கான அபாயத்தையும் குறைக்கிறது.


இந்த ஆயுர்வேத மூலிகைப் பொருள்களைப் போன்று பாகற்காய் ஜுஸ், கடலைப்பருப்பு, வேப்பிலை, ஆவாரம் பூ, கிரீன் டீ, ஆளி விதை போன்ற பொருள்களையும் சர்க்கரை நோயாளிகள் தினமும் உங்களுடைய உணவு முறையில் சேர்த்துக் கொள்ளுங்கள். நிச்சயம் சர்க்கரை அளவை நிர்வகிக்க முடியும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.


 Click here to join whatsapp group for daily health tip

மூன்று வேளையிலும் உணவை இந்த குறிப்பிட்ட நேரத்தில்தான் சாப்பிடனுமாம்..!

October 24, 2022 0

 உடல் ஆரோக்கியமாக இருக்க ஊட்டச்சத்து மிக்க உணவுகள், காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும் என்பது நம் எல்லோருக்குமே தெரிந்த ஒன்று. ஆனால் உடல் மற்றும் குடல் என்ற இரண்டின் ஆரோக்கியத்தையுமே உறுதி செய்ய சாதனஉணவுகள் மட்டும் போதாது. அவற்றை நாம் சாப்பிடும் நேரமும் முக்கியம் என்பது பலருக்கும் தெரிவதில்லை.

உணவை எடுத்து கொள்வது மிகவும் ஈஸியான ஒன்றாக உங்களுக்கு தோன்றலாம். ஆனால்  சாப்பிடும் நேரம் தொடர்பான விஷயத்தில் நாம் செய்யும் எளிய தவறுகள் தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இன்றைய நாளில் நாம் சாப்பிடும் நேரம் என்பது வேலைப்பளு, அலுவலக வேலை நேரங்கள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக பணியாளர்கள் ஃப்ரீயாக இருக்கும் நேரங்கள் உள்ளிட்ட பல காரணிகளை பொறுத்து நாளுக்கு நாள் மாறுபடுகிறது. ஆனால் நாம் உண்ணும் நேரம் மற்றும் உணவுக்கு இடையில் கழிக்கும் நேரத்தின் அளவு ஆகியவை நமது ஆரோக்கியத்தில் ஆழமான விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. உணவு நேரம் ஏன் முக்கியம் மற்றும் சிறந்த உணவு நேரம் எது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

குறித்த நேரத்தில் சாப்பிடுவது ஏன் முக்கியம்.?

நாம் சாப்பாடு எடுத்து கொள்ளும் நேரங்கள் மற்றும் செரிமானம் ஆகியவை சர்க்காடியன் ரிதம் போன்ற உடலின் இயற்கை செயல்முறைகளுடன் தொடர்பு கொள்கின்றன. அதே போல நிலையான உணவு நேரம் என்பது நமது உடல்கள் நம்பகமான பசி குறிப்புகளை உருவாக்க உதவுகிறது. ஒவ்வொரு நாளும் சரியான நேரத்தில் உங்கள் உணவை உண்பதன் மூலம், எடை பராமரிப்பு, அதிக ஆற்றல் அளவுகள் போன்ற பல நன்மைகளை பெறலாம் மேலும் நோய்களை எதிர்த்து போராடலாம்.


காலை உணவை எத்தனை மணிக்கு சாப்பிடலாம்.?

காலையில் நாம் சாப்பிடும் உணவு தான் அன்றைய நாளை ஆற்றலுடன் தொடங்க உதவும். மேலும் நம்முடைய வளர்சிதைமாற்றம் சிறப்பாக இருக்க மென்மையான உண்ணவுகளுடன் நாளை தொடங்க வேண்டும். ஃபைபர் சத்துமிக்க மற்றும் சூடான உணவுகள் காலை நேரத்திற்கு ஏற்றவை என்று பரிந்துரைக்கும் நிபுணர்கள், 7 மணிக்குள் காலை உணவை சாப்பிட சொல்கிறார்கள். இல்லை என்றால் தூங்கி எழுந்ததில் இருந்து 1 மணி நேரத்திற்குள் சாப்பிடலாம். எப்படி பார்த்தாலும் காலை உணவை 10 மணிக்குள் முடிக்க வேண்டும்.

மதிய உணவு.?

மதிய உணவை தினமும் 12:30 - 2 மணிக்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும் என்பதே நிபுணர்களின் பரிந்துரை. மதிய நேரத்தில் புரதங்கள், கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளைக் கொண்ட ஒரு சீரான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து உள்ளடக்கம் நிறைந்ததாக மதிய உணவு இருக்க வேண்டும். காலை உணவுக்கும் மதிய உணவிற்கும் இடையில் 4 மணிநேர இடைவெளியை இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். அதிகப்பட்சம் மதியம் 3 மணிக்குள் மதிய உணவை சாப்பிட்டு விட வேண்டும்.

காலை & மாலை ஸ்னாக்ஸ் டைம்.!!

காலை உணவுக்கும் மதிய உணவிற்கும் இடையில் பசி எடுத்தால் பழங்கள் அல்லது சீட்ஸ் & நட்ஸ்களை சாப்பிடலாம். எந்த வகை ஸ்னாக்ஸாக இருந்தாலும் காலை 11 - 11.30-க்குள் சாப்பிட்டு விடுங்கள். அதுவே மதிய உணவிற்கு பிறகான ஸ்னாக்ஸ் என்றால் மாலை 4 முதல் 4.30-க்குள் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. மாலை ஸ்னாக்ஸ் டைமில் ஃப்ரெஷ் ஜூஸ்கள் இருப்பது சிறந்தது.

டின்னர் எப்போது சாப்பிடுவது.?

அன்றைய நாளின் கடைசி உணவு டின்னர் என்பதால் தூக்கத்தில் தொந்தரவு இல்லாமல் இருக்க லைட்டான உணவு வகைகளை தேர்வு செய்து கொள்ள வேண்டும். மாலை 6.30 முதல் இரவு 8 மணிக்குள் டின்னரை சாப்பிட பரிந்துரைக்கிறார்கள் நிபுணர்கள். குறிப்பாக தூங்குவதற்கும், டின்னருக்கும் இடையில் 2 மணிநேரம் இடைவெளி இருக்க வேண்டும். இரவு 10 மணிக்கு மேல் டின்னர் எடுத்து கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.


 Click here to join whatsapp group for daily health tip

நீங்கள் வெயிட் போடுறீங்க என்பதை ஆரம்பத்திலேயே உணர்த்தும் 8 அறிகுறிகள்..!

October 24, 2022 0

 உடலின் ஆரோக்கியம் பல வழிகளில் கணக்கிடப்படுகிறது. ஒருவருக்கு மோசமான ஆரோக்கியம் இருப்பதை வெளிப்படுத்தும் ஒன்று உடல்பருமன். ஆம், ஒபிசிட்டி என்று குறிப்பிடப்படும் உடல்பருமன் அதிகப்படியான உடல் எடை மற்றும் உடலில் இருக்கும் அதிக கொழுப்பின் நிலை (கொழுப்பு திரட்சி) என வரையறுக்கப்படுகிறது. அதிக எடை மற்றும் உடல் பருமன் என்பது ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்க கூடியது.

ஒருவரது BMI 25-க்கும் மேல் இருந்தால் அதிக எடை என்றும், அதுவே 30-க்கு மேல் இருப்பது உடல் பருமனாகவும் கருதப்படுகிறது. குறிப்பாக ஒருவர் தனது உயரத்திற்கு ஏற்ற எடையை விட சுமார் 20%-க்கும் அதிகமான எடையை கொண்டிருப்பது ஒபிசிட்டி எனப்படுகிறது. பொதுவாக கடுமையான உடல் பருமன் என்பது உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள், சில வகையான புற்றுநோய்கள், பக்கவாதம், பித்தப்பை நோய், ஆஸ்துமா, ஸ்லீப் அப்னியா, சிறுநீரக கற்கள், மலட்டுத்தன்மை மற்றும் மூட்டுவலி போன்ற அபாயங்கள் ஏற்பட வழிவகுக்கும். அசாதாரண கொலஸ்ட்ரால் அளவுகளை உடல்பருமன் அதிகமாக்கும் என்பதால் தான் உடல்பருமன் இதய நோய் மற்றும் பக்கவாதத்திற்கான ஆபத்து காரணியாக இருக்கிறது.

இந்த நோய்களை தவிர ஒருவரின் மன ஆரோக்கியத்தையும் ஒபிசிட்டி பாதிக்கிறது. எனவே உடல் பருமனின் அறிகுறிகள் அதிகப்படியான உடல் கொழுப்பிற்கும் அப்பாற்பட்டவை. சில அறிகுறிகள் தீவிர நோய்களை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கலாம், அவை உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாக இருக்கலாம். உடல் பருமன் ஏற்பட பொதுவாக மரபணு, உடலியல், சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறை காரணிகள் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. ஆரோக்கியமான டயட் மற்றும் சீரான உடல் செயல்பாடுகள் மூலம் எடையை கட்டுக்குள் வைக்கலாம். இதனிடையே BMI மூலம் ஒருவர் தனது வெயிட் லெவலை அறிந்து கொள்ளும் முன், அதிக எடையுடன் இருப்பதை அளவிடுவதற்கான மருத்துவ அறிகுறிகளை ஆயுர்வேதம் கண்டறிந்துள்ளதாக பிரபல ஆயுர்வேத நிபுணர் டாக்டர் சைதாலி குறிப்பிட்டுள்ளார்.

ஆயுர்வேதத்தின் கூற்றுப்படி ஒருவர் கவனிக்க வேண்டிய உடல் பருமனின் முக்கிய ஆரம்ப அறிகுறிகள் கீழே:

- அடிக்கடி அதிகமாக தாகம் எடுப்பது

- மூச்சிரைப்பது மற்றும் சுவாசிப்பதில் சிரமம்

- ஒருநாளில் பலமுறை சோர்வாக உணர்வது

- வழக்கத்தை விட உடலில் இருந்தது வியர்வை அதிகமாக வெளியேறுவது

- இரவு தூங்குவதில் சிக்கல் ஏற்பட்டு இதன் தொடர்ச்சியாக பகல்நேரத்தில் தூக்க கலக்கமாகவே இருப்பது

- உடல் துர்நாற்றம்

- நன்றாக சாப்பிட்டாலும் கூட அதிகப்படியான பசியை உணர்வது

- பாதகமான மனநல விளைவுகள் காரணமாக ஏற்படும் மாயை உணர்வு

உடல் பருமன் இருக்கும் ஒருவர் தனது எடையைக் குறைப்பது மிகவும் சவாலான விஷயம். எடையை கட்டுக்குள் வைத்திருக்க விரும்பும் ஒருவர் டயட்டில் ஃபைபர் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். பர்கர், பீட்சா, வறுத்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், குக்கீஸ் அல்லது கேக்ஸ் போன்ற சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள், மதுபானங்கள், புகைப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் டாக்டர் சைதாலி.

 Click here to join whatsapp group for daily health tip


October 18, 2022

தீபாவளிக்கு டூர் ப்ளான் போட்டாச்சா? தென்னிந்தியாவில் உள்ள இயற்கை எழில் கொஞ்சம் இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க.!

October 18, 2022 0

 என்றாலே புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகளுடன் தான் கொண்டாட பெரும்பாலோனோர் விரும்புவார்கள். ஆனால் பட்டாசுகள் இல்லாத மாசில்லா தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்று நினைப்பவர்கள் தீபாவளிக்கான விடுமுறை நாளை இயற்கையோடு கொண்டாட வேண்டும் என்று நினைப்பதுண்டு. அதுவும் இந்தாண்டு தீபாவளி திருநாள் திங்கள் கிழமை வருவதால் சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாள்கள் விடுமுறை வருவதால் இப்பொழுதே எந்த இடங்களுக்கு செல்லலாம் என திட்டமிட்டிருப்பீர்கள். இன்னும் ப்ளான் போடவில்லை என்றால், இதோ உங்களுக்காகவே தென்னிந்தியாவில் உள்ள இயற்கை எழில் கொஞ்சம் மலைவாசஸ்தலங்கள் என்னென்ன? எங்கு உள்ளது? என அறிந்துக்கொள்வோம்..

வாகமன்,கேரளா: கேரள மாநிலத்திலுள்ள இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள இயற்கை எழில்மிகு மலைவாசஸ்தலம் தான் வாகமன். இந்த மலையின் உச்சியில் நின்று கேரளத்தின் அழகை ரசிக்க ஏற்ற மலையாகவும், பசுமையான சமவெளிகள், விண்ணை முட்டும் மலைகள், வளைந்தோடும் ஆறுகள், நீர் வீழ்ச்சிகள் என சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்கள் பல இங்குள்ளன.

ஊட்டி, தமிழ்நாடு: தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களில் அமைந்துள்ள இடம் தான் ஊட்டி. மலைகளின் ராணி என்றழைக்கப்படும் ஊட்டியின் மலை ரயில், மலர் கண்காட்சி என அனைத்தும் கண்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டு மக்கள் குறைந்த செலவில் பயணம் செல்ல வேண்டும் என்றால் முதலில் தேர்வு செய்யும் இடம் தான் ஊட்டி. இதே போன்று கொடைக்கானலும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த தேர்வாக அமையும்.

சக்லேஷ்பூர், கர்நாடகா: மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இடம் தான் சக்லேக்பூர். இங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற டிரக்கிங், நீர் வீழ்ச்சிகள், அழகிய மலைகள் என அனைத்தும் கண்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. நிச்சயம் தீபாவளிக்கு சுற்றுலா செல்வதற்கு சிறந்த இடமாகவும் இது உள்ளது.

அரக்கு பள்ளத்தாக்கு, ஆந்திரப் பிரதேசம்: ஆந்திர மாநிலத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இடம் தான் அரக்கு பள்ளத்தாக்கு. அடர்ந்த காடுகள், கண்களைக் கவரும் மலைகள், அமைதியான சூழல் அனைத்தும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரும். காபி தோட்டங்கள், மலைகளில் நீண்ட நேர பயணங்கள் அனைத்தும் இந்த இடத்தில் அமைந்துள்ளது.

கூர்க், கர்நாடகா: கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ள சுற்றுலாத்தளங்களில் ஒன்று கூர்க். தனிமையை விரும்புபவர்கள், இயற்கையின் அழகை பொருமையாக பார்க்க விரும்புவோர் தேர்வு செய்யும் இடம் தான் கூர்க். பெங்களுரில் இருந்து 5 மணி நேரத்திற்கு செல்லக்கூடிய இந்த இடம் இளைஞைர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வெகுவாக கவரக்கூடும்.

மூணாறு, கேரளா: கேரள மாநிலத்தில் உள்ள மலைவாசஸ்தலங்களில் ஒன்று தான் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள மூணாறு. எங்கு பார்த்தாலும் பச்சைப் பட்டு உடுத்தியது போல அழகிய தேயிலை தோட்டங்கள், அழகான நீர்வீழ்ச்சிகள், எரவிகுளம் தேசிய பூங்கா, போட்டிங் என பல இடங்கள் இங்கு அமைந்துள்ளது. மலைகளின் பயணம் செய்வோர்கள் மிகவும் விரும்பக்கூடிய இடமாகவும் மூணாறு பார்க்கப்படுகிறது.

ஏற்காடு, தமிழ்நாடு: தமிழ்நாட்டின் அழகிய மலைவாசஸ்தலமான ஏற்காட்டிற்கு குறைந்த செலவில் மக்கள் சென்று வரலாம்.. குளிர்ச்சியான கிளைமேட், போட்டிங், மலை ஏற்றம் என அனைத்தும் வெகுவாக சுற்றுலாப் பயணிகளை கவரும்.

குன்னூர், தமிழ்நாடு: மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள இடம் தான் குன்னூர். தேயிலைத் தோட்டங்கள், பச்சைப் பட்டு உடுத்தியது போல மலைத் தொடர்கள் அனைத்தும் அனைவரின் கண்களை வெகுவாக கவரும். குறிப்பாக செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் விதவிதமான மலர்கள் பூத்து குலுங்கும் என்பதால் அனைவரையும் தீபாவளிக்கு இந்த இடத்தை தேர்வு செய்யலாம்.

 Click here to join whatsapp group for daily health tip

உடல் எடையைக் குறைக்கணுமா..? இந்த 5 சூப் வகைகளை ட்ரை பண்ணுங்க...

October 18, 2022 0

 உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகள் மிகவும் அவசியமாகும். குறிப்பாக உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கும், எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள விரும்புவோருக்கும் எண்ணெய் மற்றும் கொழுப்பு இல்லாத சூப் வகைகள் சரியான சரிவிகித உணவாக கருதப்படுகிறது. காய்கறிகள், இறைச்சிகள், பருப்புவகைகள் என எதை வேண்டுமானாலும் கொண்டு எளிதான முறையில் தயாரிக்கக்கூடிய சூப் வகைகள் செரிமானத்திற்கு ஏற்றதாக இருப்பதால் குடல் ஆரோக்கியத்திற்கும் நல்லதாகும்.

1. காய்கறி சூப் : சுவையான, சத்தான காய்கறி சூப்பைப் பொறுத்தவரை நீங்கள் வீட்டில் இருக்கக்கூடிய அல்லது உங்களுக்கு மிகவும் பிடித்தமான எந்த காய்கறிகளை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். முதலில் காய்கறிகள் அனைத்தையும் வேகவைத்து, அதனை மிக்ஸியில் போட்டு பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து, அத்துடன் பேஸ்ட் ஆக்கப்பட்ட கலவையை போதுமான அளவு தண்ணீர் சேர்த்து ஊற்றவும். அத்துடன் உப்பு மற்றும் மிளகு தூள் கலந்து கொதிக்க வைத்து பரிமாறலாம்.

2. சிக்கன் சூப் : சிக்கன் சூப் செய்வதும் காய்கறி சூப்பைப் போல மிகவும் எளிமையானது. குறைந்த கொழுப்பு கொண்ட கோழியின் துண்டுகளை நன்றாக வேகவைத்து. அதன் தண்ணீரை மட்டும் எடுத்துக்கொள்ளவும். அத்துடன் ஒரு சிட்டிகை உப்பு, மிளகு, சில பூண்டு சேர்த்து சூடாக பரிமாறலாம். இத்துடன் கேரட், சோளம், பீன்ஸ், முட்டைகோஸ் போன்றவற்றையும் பொடியாக நறுக்கிச் சேர்த்துக்கொண்டால் சுவையும், ஆரோக்கியமும் டபுளாக கிடைக்கும்.

3. கேரட் சூப் : சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கேரட் பிடிக்காவதர்கள் இருக்க முடியாது. கண்ணைக் கவரும் ஆரஞ்சு வண்ணத்தில், நல்ல கிரீமியான கேரட் சூப் செய்ய, ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து அது உருகியதும். வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். அத்துடன் வெட்டி வைத்த கேரட் துண்டுகளையும் சேர்த்து நன்றாக தண்ணீர் விட்டு வேக வைக்க வேண்டும். இந்த கலவை நன்றாக ஆறிய பின்னர், மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.இதனை மீண்டும் ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, உப்பு, மிளகு தூள் சேர்த்து கொதிக்க வைத்து, சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து பரிமாறவும்.

4. பூசணிக்காய் சூப் : நன்றாக ழுத்த பூசணிக்காயின் மேற்புறத்தோலை நீக்கிவிட்டு, பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். அதனை வெண்ணெய் சேர்க்கப்பட்ட ஒரு கடாயில் சேர்த்து, அத்துடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்க்கவும். அவை நன்றாக வதங்கியதும். சிக்கன் ஸ்டாக் அல்லது தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பூசணிக்காய் நன்றாக வெந்து மென்மையான கூழாக மாறும் வரை வேகவைக்க வேண்டும். இப்போது இந்த சூடான கலவையில் உப்பு மற்றும் மிளகு சேர்த்து சுவைக்கலாம்.

5. பாலக்கீரை சூப் : ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு பாலக் சூப் அவசியமான ஒன்றாகும். ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து நறுக்கிய வெங்காயம் மற்றும் சில பூண்டு பற்களைச் சேர்க்கவும். அவை பொன்னிறமாக வதங்கியதும், அத்துடன் தேவையான அளவு பாலக்கீரை சேர்த்து வதக்க வேண்டும். இதனை மிக்ஸியில் போட்டு மென்மையான பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ளவும். இத்துடன் சிறிதளவு கடலை மாவு கலந்து, அதன் பச்சவாசனை போகும் வரை கொதிக்க வேண்டும். கடைசியாக உப்பு மற்றும் மிளகு தூள் தூவி பரிமாறலாம்.

 Click here to join whatsapp group for daily health tip

October 16, 2022

இரவு டின்னருக்கு இந்த 5 உணவுகளை கட்டாயம் தவிர்க்கனுமாம்... ஆயுர்வேத நிபுணர்களின் பரிந்துரை..!

October 16, 2022 0

 சுறுசுறுப்பான வாழ்க்கை முறை மற்றும் ஊட்டச்சத்து மிக உணவுப் பழக்கம் ஆகியவை நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. ஆரோக்கியம் என்று வரும் போது என்ன உணவை எடுத்து கொள்கிறோம் என்பதுடன் எப்போது சாப்பிடுகிறோம் என்பதும் மிக முக்கியம்.

சரியான நேரத்தில் சரியான உணவை உட்கொள்வதே உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். நம் உடல் நல்ல நிலையில் இயங்க இரவு நேர தூக்கம் எவ்வளவு அவசியம் என்று தெரியும். அந்த இரவு தூக்கத்தை பெறும் முன் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். அந்த வகையில் சில உணவுகளை இரவில் சாப்பிடாமல் தவிர்ப்பது உடலுக்கு நல்லது. பண்டைய மற்றும் பாரம்பரிய மருத்துவமான ஆயுர்வேதம் பொதுவாக இரவு 7 மணிக்கு மேல் உணவுகள் எடுப்பதை தவிர்க்க அறிவுறுத்துகிறது. அதே போல சில உணவுகளை இரவில் தவிர்க்கவும் சொல்கிறது. ஆரோக்கியமாக இருக்க ஆயுர்வேதம் கீழ்காணும் உணவுகளை இரவில் தவிர்க்க பரிந்துரைக்கிறது

தயிர்: காலை அல்லது மதியம் சாப்பிடுவதை போல இரவில் தயிர் சாப்பிட கூடாது என நம் வீட்டு பெரியவர்கள் நம்மை எச்சரிப்பதை அடிக்கடி கேட்டிருப்போம். அவர்கள் சொல்வது உண்மை தான். இரவில் தயிர் சாப்பிடுவது ஆயுர்வேதத்தால் பரிந்துரைக்கப்படவில்லை. ஆயுர்வேத நிபுணர்களின் கூற்றுப்படி, இரவில் தயிர் எடுத்து கொள்வது உடலில் கபம் மற்றும் பித்த தோஷத்தை அதிகரிக்க கூடும். தயிரில் இனிப்பு மற்றும் புளிப்பு ஆகிய இரண்டும் கலந்திருக்கிறது. இதை இரவில் சாப்பிடுவதால் நாசி பாதையில் சளி உருவாகலாம். இருமல் மற்றும் மலச்சிக்ல் ஏற்படலாம்.

கோதுமை: ஆயுர்வேத நிபுணர்களின் கூற்றுப்படி ஒருவர் இரவு நேரத்தில் கோதுமையை பயன்படுத்தி செய்யப்படும் எந்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் நம் உடல் இரவு நேரத்தில் கோதுமையால் செய்யப்பட்ட உணவுகளை ஜீரணிக்க அதிக நேரம் எடுத்து கொள்ளும். அதே போல பதப்படுத்தப்பட்ட கோதுமை மாவு ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. கோதுமை மாவை எந்த வடிவத்திலும் இரவு சாப்பிட்டால் அது உங்கள் உடலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்த கூடும்.

பச்சை காய்கறிகள் (ரா சாலட்ஸ்): பொதுவாக சாலட்டுகள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் இரவு நேரத்தில் ஒருவர் பச்சையாக காய்கறிகள் அல்லது பழங்களை கொண்டு சாலட்டுகளை தயார் செய்து சாப்பிடுவது செரிமான சிக்கல்களை ஏற்படுத்தும். இதற்கு பதிலாக காய்கறிகளை நன்றாக வேகவைத்து சாலட்டுகளை செய்து இரவில் சாப்பிடலாம். இரவில் நமது செரிமானம் இயல்பாகவே குறைவாக இருக்கும் என்பதால் செரிமானம் குறைவாக இருக்கும். நன்கு செரிக்காத உணவுகள் உடலில் நச்சுகள் குவிய வழிவகுக்கும். மேலும் ரா சாலட்களை உட்கொள்வது இரவு தூக்கத்தை தொந்தரவு செய்யும்.

மைதா: சுத்திகரிக்கப்பட்ட மாவு அல்லது மைதாவால் செய்யப்பட்ட உணவுகளை இரவில் சாப்பிட கூடாது என பரிந்துரைக்கிறார்கள் ஆயுர்வேத நிபுணர்கள். குறிப்பாக மைதாவில் நார்ச்சத்து இல்லாததால் ஸ்வீட் பாய்சன் என குறிப்பிடப்படுகிறது. மைதா எவ்வளவு ருசியாக இருக்கிறதோ அதே அளவிற்கு ஜீரணிக்க மிகவும் கடினமானது. பகலில் சாப்பிட்டாலே இது ஜீரணிக்க கடினம் என்று கூறப்படும் நிலையில் இரவில் மைதாவால் செய்யப்படும் பதார்த்தங்களை சாப்பிடுவது ஜீரணத்தில் தாமதம், மலச்சிக்கல், பைல்ஸ் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். கூடவே வளர்சிதை மாற்றத்தையும் மைதா நுகர்வு மெதுவாக்குகிறது.

உப்பு: இரவில் அதிக சோடியம் உள்ள உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இரவு 7 மணிக்குப் பிறகு உணவில் அதிக உப்பைத் தொடர்ந்து சாப்பிடுவதால், நம் இதயம் மற்றும் ரத்த நாளங்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படுகிறது.



 Click here to join whatsapp group for daily health tip

டீ சர்க்கரை நோயை கட்டுப்படுத்துமா..? டீ குடிப்பதற்கு பின் இருக்கும் ஆச்சரியமூட்டும் நன்மைகள்..!

October 16, 2022 0

 நம் நாட்டில் பலருக்கு டீ குடிக்கவில்லை என்றால் அன்றைய நாளே நகராது. அப்படிப்பட்ட டீ பிரியர்கள் இருக்கும் இன்றைய நிலையில், டீ குடிப்பது உண்மையாகவே ஆரோக்கியமானதா என்றால் முழுவதுமாக ஆம் என்று சொல்லி விட முடியாது.

நம்முடைய நாட்டில் மட்டும் டீக்கென்று தனி மரியாதை உண்டு. காபி பிரியர்கள் போல இந்த டீக்கு அடிமையான தனி கூட்டமே உண்டு. இதை வெறும் பானமாக இல்லாமல் இந்தியர்களின் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாகவே மாறி இருக்கிறது. டீயை பொறுத்தவரை அதன் முக்கிய சிறப்பே நாம் விரும்பும் சுவைக்கு ஏற்றார் போல விதம் விதமாக தயாரிக்க முடியும் என்பது தான்.

சாதாரண டீ, எலுமிச்சை டீ, பிளாக் டீ, ஏலக்காய் டீ, தந்தூரி டீ போன்ற பலவிதமான வகைகளில் தயாரிக்க முடியும். இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அல்லது ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று நான்கு முறையாவது டீ குடித்தே ஆக வேண்டும் என்று இருப்பவர்களும் உண்டு. ஆனால் இப்படி அடிக்கடி டீ குடிப்பது உடலுக்கு ஆரோக்கியமானது இல்லை! டீ குடிப்பதால் இருக்கும் நன்மைகள் போல, தீமைகள் உள்ளன.

பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் டிம்பிள் ஜன்க்டா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தேநீரைப் பற்றி ஒரு பெரும் விழிப்புணர்வு ஏற்படும் அளவுக்கு பதிவிட்டு இருக்கிறார்.

டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

டாக்டர் டிம்பிளின் இன்ஸ்டாகிராம் பதிவில், டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். அதில் தேநீரில் உள்ள பாலிபெனால்ஸ் எனும் வேதி பொருள் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்துவதில் மிகவும் உதவியாக இருக்கிறது. மேலும் சரியான செரிமானத்திற்கும் கார்டியோவாஸ்குலர் என்ற நோய் ஏற்படுாமல் தடுக்கவும் உதவுகிறது. உடல் எடையை சரியான அளவில் வைத்து கொள்ளவும் உதவுகிறது.

தேநீரில் சுவையூட்டும் மணமூட்டும் பொருட்களான ஏலக்காய், கிராம்பு, லவங்கப்பட்டை, கருப்பு மிளகு ஆகியவை இயற்கையாகவே மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இவற்றை தேநீர் தயாரித்து கலந்து குடிக்கும் போது அவை பாக்டீரியாக்களை கொல்வதோடு மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

டீ குடிப்பதால் ஏற்படும் கெடுதல்கள்:

டீயில் கலக்கப்படும் அதிகப்படியான சர்க்கரை உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். காபியை விட, தேநீரில் சர்க்கரை தூக்கலாக குடிப்பது பலருக்கும் பிடிக்கும். அதிக சர்க்கரை ஆபத்தானது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்! ஒத்து, ரத்தத்தில் கலக்கும் போது உடல் சக்தியை முழுவதுமாக உறிஞ்சுவதுடன் மேலும் டீ குடிக்க வேண்டும் என்று ஆவலையும் உண்டாக்குகிறது. இது கிட்டத்தட்ட அடிமையாவது போன்ற மனநிலையை உண்டாக்கும்.

இதனால் நீங்கள் எப்போதெல்லாம் மன அழுத்தத்துடனும் சோர்வாகவோ, தலைவலி அல்லது சக்தி குறைவாக இருப்பதாக உணர்கிறேர்களோ அப்பொழுதெல்லாம் டீ குடித்தால் சரியாகிவிடும் என்ற எண்ணம் இயற்கையாகவே உங்களுக்கு ஏற்பட்டு விடும்.

டீ பற்றிய கசப்பான உண்மை:

தேநீர் தயாரிக்க தரம் குறைந்த தேயிலைகளை பயன்படுத்தும் போது, டானின்ஸ்கள் என்னும் வேதிப்பொருளை அதிக அளவில் வெளியிடுகிறது. இவை வயிற்றில் அமிலம் சுரப்பதை அதிகரித்து அசிடிட்டிக்கு வழிவகுக்கிறது.

ஆரோக்கியமான முறையில் டீ தயாரிப்பதற்கு சில அறிவுரைகள்:

தேநீர் தயாரித்த பின் பத்து நிமிடங்களுக்குள் அதனை குடித்து விட வேண்டும் மறுபடியும் சூடுபடுத்தி குடிக்கவே கூடாது.
பாலுடன் டீயை சேர்த்து அதனுடன் மற்ற பொருட்களை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். இவை வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரித்து விடும். அதற்கு பதிலாக சூடான பாலை நேரடியாக பிளாக் டீ உடன் சேர்க்கலாம்.
டீ குடிக்கும் பொழுது அதனுடன் உப்பு சேர்க்கப்பட்ட ஸ்னாக்ஸ் அல்லது எண்ணையில் பொறித்த உணவுகள், எலுமிச்சை கலந்த பொருட்கள், டொமேட்டோ கெட்சப் ஆகியவற்றை சேர்த்து சாப்பிடக்கூடாது. அவ்வாறு செய்தால் அவை வயிறு உப்புசத்திற்கு வழிவகுக்கும்.
Click here to join whatsapp group for daily health tip

நீங்கள் அடிக்கடி காலை உணவை தவிர்த்தால் என்ன நடக்கும்..? பிரபல நிபுணரின் விளக்கம்

October 16, 2022 0

 காலை சீக்கிரம் எழுந்து பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் அவசர அவசரமாக வேலைக்கு செல்வோர் வரை பலரும் காலை செய்யும் பொதுவான ஒரு விஷயமாக இருக்கிறது காலை உணவை சாப்பிடாமல் தவற விடுவது.

நீண்ட நேர தூக்கம், ட்ராஃபிக் ஜாம், மீட்டிங், குழந்தைகளை பள்ளிக்கு தயார் செய்வது என காலை உணவை சாப்பிடாததற்கு மக்கள் கூறும் காரணங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. நீங்கள் காலை உணவை தவறாமல் சாப்பிடுகிறீர்களா..? காலை சாப்பிடாமல் இருப்பது ஆரோக்கியத்தில் பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும், மேலும் வளர்சிதை மாற்றத்தை வெகுவாக பாதிக்க கூடும்.

இரவு சாப்பாட்டிற்கு பிறகு நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பதால் நம் உடலில் ஆற்றல் குறைந்து காணப்படும். ஒரு நாளை உற்சாகமாக மற்றும் புத்துணர்ச்சியுடன் துவக்க நம் உடலில் ஆற்றல் இருக்க வேண்டும். இதற்கு காலை நாம் சாப்பிடும் உணவுகளே பொறுப்பு. ஆனால் நீங்கள் காலை உணவை தவிர்ப்பவர் என்றால் உங்களுக்கு ஆற்றல் எங்கிருந்து வரும்.? எப்படி நீங்கள் ஃபிரெஷ்ஷாக இருப்பீர்கள்..!

நீங்கள் ஏன் காலை உணவை தவிர்க்கக்கூடாது என்பதற்கான சில முக்கிய காரணங்களை பிரபல ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ருஜுதா திவேகர் தனது லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட்டில் குறிப்பிட்டுள்ளார். நீண்ட நேரம் சாப்பிடாமல் இருக்கும் போது, கோபம், எரிச்சல், மலச்சிக்கல், முடி உதிர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் எழும். ஒருவேளை உணவிற்கும் அடுத்த வேளை உணவிற்கும் நீண்ட இடைவெளி விடுவதால் எந்த பலனும் இல்லை என்பதை பல ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தி உள்ளன. இரவு சாப்பிட்டிற்கு பிறகு சுமார் 10 மணி நேரம் இடைவெளி விழும் நிலையில், காலை எழுந்ததில் இருந்து சுமார் 2 மணி நேரத்திற்குள் காலை உணவை சாப்பிட பரிந்துரைக்கிறார்.

காலை உணவை தவிர்ப்பது தலைவலி, ஒற்றைத் தலைவலி உள்ளிட்டவற்றுக்கும் வழிவகுக்கும் என்கிறார். சிலர் எடையை குறைக்க ஒரு யுக்தியாக காலை உணவை தவிர்க்கிறார்கள். ஆனால் காலை இது விரைவான எடை இழப்புக்கு வழிவகுக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார். காலை உணவைத் தவிர்ப்பது உடலில் உள்ள மைக்ரோநியூட்ரீயன்ட் கன்டெட்டை பாதிக்கிறது. இருவேளை உணவுக்கு இடையில் நீண்ட இடைவெளி விடுவதன் காரணமாக உடலில் கால்சியம் குறைந்து விடும். தவிர அசிடிட்டி, உப்பசம், சீரற்ற மாதவிடாய் போன்ற சிக்கல்களும் ஏற்படும். எல்லாவற்றுக்கும் மேலாக ஹீமோகுளோபின், பி12 மற்றும் வைட்டமின் டி பற்றாக்குறை ஏற்பட வழிவகுக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

எப்போதாவது என்றால் பரவாயில்லை, தொடர்ந்து காலை உணவைத் தவிர்ப்பது உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான அதிக விகிதங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது என்றார். காலை உணவை சாப்பிட வேண்டும் என்பதற்காக பேக்கேஜ்டு உணவுகளுக்கு சென்று விடாதீர்கள், அது இன்னும் ஆபத்து. காலை நேரம் வீட்டில் சமைத்த மற்றும் சத்தான உணவுகளை சாப்பிடுவதே சிறந்தது என்று அறிவுறுத்தி உள்ளார். காலை உணவை தவிர்ப்பது ஆற்றல் மற்றும் மனநிலையை எதிர்மறையாக பாதிப்பதோடு புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.



Click here to join whatsapp group for daily health tip

டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் சீக்கிரம் குணமடைய சாப்பிட வேண்டிய உணவுகள்..!

October 16, 2022 0

 மழைக்காலத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதால் மக்கள் கடும் அவதிகளுக்கு ஆளாகி வருகின்றனர். மழைக்காலத்தில் அங்காங்கே தேங்கும் தண்ணீரில் இருந்து உருவாக்கக்கூடிய `ஏடிஸ் ஏஜிப்தி' என்ற ஒருவகையான கொசுக்கள் கடிப்பதன் மூலமாக டெங்கு காய்ச்சல் பரவுகிறது. காய்ச்சல், உடல்வலி, குமட்டல், வாந்தி, வயிற்று வலி, கண்ணுக்குப் பின்புறம் வலி, எலும்பு வலி போன்றவை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதற்கான முக்கியமான அறிகுறிகளாகும்.

வைரஸ் காய்ச்சலான இதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும், குறிப்பாக பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை கட்டாயம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

மேலும் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க உடற்பயிற்சி செய்வதோடு, மனதை அதிக அழுத்தம் இன்றி ரிலாக்ஸாக வைத்துக்கொள்ளவும் வேண்டும்.

டெல்லி குர்கானில் உள்ள ஃபோர்டிஸ் மெமோரியல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டின் தலைமை ஊட்டச்சத்து நிபுணரான தீப்தி கதுஜா மழைக்காலத்தில் டெங்கு காய்ச்சலிலும் இருந்து தப்பிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய வெள்ளை அணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கவும், தொற்றுக்களை தடுக்கவும் உதவக்கூடிய உணவுகள் சிலவற்றைக் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

டெங்குவில் இருந்து நம்மை பாதுகாக்கும் உணவில் சில:

1. பான வகைகள்:உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சூடான பானங்கள், மூலிகை தேநீர், சூப் ஆகியவற்றை பருகக்கொடுக்கலாம். பிளேட்லெட்களின் எண்ணிக்கையை மேம்படுத்தவும், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் எலுமிச்சை கலந்த தண்ணீர், மோர், லஸ்ஸி, இளநீர் ஆகியவற்றைக் கொடுக்கலாம்.
2. பழங்கள்:வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நாவல் பழம், பேரிக்காய், பிளம், செர்ரி, பீச், பப்பாளி, ஆப்பிள் மற்றும் மாதுளை போன்ற பருவகால பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். இந்த பழங்கள் செரிமானத்தை மேம்படுத்துதோடு, குடல் ஆரோக்கியம் மற்றும் யோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
3. காய்கறிகள்:நல்ல குடல் ஆரோக்கியத்தையும் நோயெதிர்ப்பு செயல்பாட்டையும் மேம்படுத்த உதவும் பருவகால காய்கறிகளை கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டும். ஏ, சி, போன்ற வைட்டமின்கள் மற்றும் ஜிங்க், மெக்னீசியம் ஆகிய தாதுக்கள் நிறைந்த காய்கறிகள் நல்ல ஆக்ஸினேற்றிகளாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியவையாகவும் உள்ளன.
4. மசாலா பொருட்கள்:இந்திய மசாலாக்களில் நோயெர்திப்பு சக்தி உள்ளிட்ட ஆரோக்கிய நன்மைகள் உள்ளது அனைவரும் அறிந்ததே. எனவே அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை காளான், வைரஸ் தடுப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நோயெதிர்ப்பு-அதிகரிப்பு போன்ற செயல்பாடுகளைக் கொண்ட மஞ்சள், இஞ்சி, பூண்டு, மிளகு, இலவங்கப்பட்டை, ஏலக்காய் மற்றும் ஜாதிக்காய் போன்ற மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகைகளை அன்றாட உணவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை டி-செல்கள் போன்ற நோயெதிர்ப்பு செல்களை ஒழுங்குபடுத்துவதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு, உடலை நோய்க்கிருமிகளிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.
5. நட்ஸ்:நட்ஸ் மற்றும் விதைகள் புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்தவையாக உள்ளன. எனவே நோயெதிர்ப்பு சக்தி வேண்டுவோர் தினந்தோறும் நட்ஸ் வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
6. புரோபயாடிக்:தயிர், மோர், சீஸ் கேஃபிர், கொம்புச்சா மற்றும் சோயாபீன்ஸ் போன்ற புரோபயாடிக்குகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நல்ல பாக்டீரியாக்களைக் கொண்ட இவரை செரிமான அமைப்பை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

Click here to join whatsapp group for daily health tip

உடல் எடையை குறைக்க காலையில் எழுந்ததும் இந்த 5 விஷயங்களை செய்தால் போதும்..!

October 16, 2022 0

 இன்றைய நவீன யுகத்தில் எடை குறைப்பு என்பது மிகப்பெரும் சவாலாகி வருகிறது எடையை குறைக்க விரும்பும் ஒவ்வொருவரும் என்னென்னவோ வழிமுறைகளை பின்பற்றுகின்றனர் ஆனால் அனைத்தும் கை கொடுக்கின்றதா என்று கேட்டால் இல்லை என்பதே பதிலாக இருக்கும். எந்தளவிற்கு உணவு பழக்கங்களை கட்டுப்படுத்தினாலும், குறிப்பிட்ட வகை உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டாலும் சிலரால் எடையை குறைக்கவே முடிவதில்லை. அதற்கு முக்கிய காரணம் நமது வாழ்க்கை முறையில் மாற்றத்தை கொண்டு வராதது தான். காலையில் எழுந்ததும் இந்த ஐந்து விஷயங்களை மட்டும் தொடர்ந்து செய்து வந்தால் போதும் உங்களது எடையை மிக எளிதாக குறைக்கலாம்.


காலையில் சுடு தண்ணீர் குடிக்க வேண்டும் : காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் சுடு தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுவதுடன் வளர்ச்சிதை மாற்றத்திற்கும் செரிமானத்திற்கும் உதவுகிறது. நம்முடைய கலாச்சாரங்களில் இந்த சுடு தண்ணீர் குடிப்பது என்பது ஒரு எழுதப்படாத விதியாகவே இருந்து வந்துள்ளது.

யோகாசனம் பழகுதல் : காலையில் யோகாசனம் செய்வது உடல் எடையை குறைப்பதற்கு உதவும். உதாரணத்திற்கு சூரிய நமஸ்காரத்தை சரியான நேரத்தில் செய்யும்போது கிட்டத்தட்ட 13.91 கலோரிகளை குறைக்க உதவுகிறது. இதை தினமும் அரை மணி நேரம் தொடர்ந்து செய்து வர 278-280 கலோரிகளை எரிக்க உதவுகிறது இது ஒரு மணி நேரம் கார்டியோ பயிற்சி செய்வதை விட சிறந்த முடிவுகளை தருகிறது என்று ஊட்டச்சத்து நிபுணரும், பாலக் நோட்ஸ் இன் நிறுவனருமான பாலக் மிதா தெரிவித்துள்ளார்.

புரதங்கள் நிறைந்த காலை உணவு : காலை உணவு எடுத்து கொள்ளும்போது புரதங்கள் அதிக அளவு சேர்த்து கொள்வது நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடும், சக்தியுடனும் இருக்க உதவும். புரதங்கள் நிறைந்த காலை உணவிற்கு முட்டைகள், முளைகட்டிய பயறு வகைகள் ஆகியவற்றை தேர்ந்தெடுத்துக் உண்ணலாம்.

சரியான தூக்கம் : இரவில் சீக்கிரமாக உறங்க சென்று விட வேண்டும். அவ்வாறு செய்வதினால் வழக்கத்தை விட அதிக நேரம் தூங்க முடிவதுடன் உடலின் வளர்ச்சிதை மாற்றத்திற்கும், உடல் தன்னை ரீசார்ஜ் செய்து கொள்ளவும் மிகவும் உதவுகிறது. அது மட்டும் இல்லாமல் குறைவான நேரம் தூங்கினால், தூங்காத நேரத்தில் உடலை புத்துணர்ச்சியோடு வைக்க நாம் அதிக உணவுகளை எடுத்துக் கொள்கிறோம். இது உடலில் அதிக அளவுகள் கலோரிகள் சேர்ந்து எடை குறைப்பதற்கு தடையாக உள்ளது. எனவே குறைந்தபட்சம் எட்டு மணி நேர தூக்கமாவது அவசியம்.

சூரிய ஒளியில் சிறிது நேரம் செலவழியுங்கள் : ஒரு நாளைக்கு சிறிது நேரம் ஆவது சூரிய ஒளி நம் மீது படுமாறு செய்ய வேண்டும். அது எப்படி சூரிய ஒளியினால் எடை குறையும் என்ற கேள்வி வரலாம். சூரிய ஒளி நம்முடைய சருமத்தின் மீது நேரடியாக விழும்போது அது தோலுக்கு அடியில் உள்ள கொழுப்புகளை சிதைத்து எடை குறைப்பிற்கு உதவுகிறது. மேலே கூறிய விஷயங்களை தொடர்ந்து கடைபிடித்து வர உடல் எடையை மிக எளிதாக குறைக்கலாம்.


Click here to join whatsapp group for daily health tip

October 14, 2022

எச்சரிக்கை... மழைக்காலத்தில் இந்த உணவுகளை சாப்பிட்டால் உடல்நலக்குறைவு ஏற்படலாம்..!

October 14, 2022 0

மழைக்காலத்தில் நோய்த் தொற்றுகள் எளிதில் பரவும். பருவ மாற்றத்தால் உடல் நலக் குறைவு, சளி போன்ற பிரச்னைகளும் வரும். இவற்றைத் தடுக்க முடிந்த அளவு உடலைப் பராமரிப்பது அவசியம். குறிப்பாக உணவுகள் மூலமும் நோய்த் தொற்று வெகுவாகப் பரவும் என்பதால் உணவில் கவனமாக இருப்பது அவசியம்.

கடை உணவுகளில் கவனம் : சளி, உடல் நலக் குறைவு மற்றவர்களுக்கு இருந்தாலும் அவைக் காற்றின் மூலம் பரவும். எனவே நீண்ட நேரம் வெளியே வைத்த உணவுகள், தெருக்களில் விற்கும் பழங்களை வாங்கி உண்பதைத் தவிர்க்கவும். வீட்டிலும் உணவுகளை திறந்து வைக்காமல் மூடி சூடு படுத்தி உண்ணவும். நீரையும் கொதிக்க வைத்துக் குடியுங்கள்.

எண்ணெய்யில் பொறித்த உணவுகள் : மழைக்காலங்களில் எண்ணெய்யில் பொறித்த சூடான உணவுகளை சாப்பிடத்தான் வாய் தூண்டும். எப்படியாவது சூடாக டீ அதோடு ஒரு சமோசா சாப்பிட்டால்தான் மழைக்காலம் திருப்தியாகக் கழியும். அனால் அவ்வாறு சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. காரணம் மழைக்காலத்தில் ஜீரண சக்தி மிகக் குறைவாக இருக்கும். அந்தசமயத்தில் இப்படி பொறித்த உணவுகளை டம் கட்டி சாப்பிட்டால் அது ஜீரணமாக நேரம் அதிகமாகும். இதனால் நெஞ்சு எரிச்சல், வயிறு மந்தத் தன்மை , வயிறு கோளாறு போன்ற உபாதைகளை சந்திக்க நேரிடும்.

கடல் சார் உணவுகள் : கடல் சார் உணவுகளை மழைக்காலத்தில் கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். ஏனெனில் மழைக்காலம்தான் கடல் உயிரினங்களுக்கு இனப்பெருக்கக் காலம். அப்போது அவற்றின் வயிற்றில் முட்டைகள் இருக்கும். அவற்றை சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறு ஏற்படும் அல்லது அவை விஷமாகவும் மாறலாம்.

கீரை வகைகள் : கீரைகள் சத்தானது என்பதில் ஐயமில்லை. ஆனால் அவற்றை மழைக்காலத்தில் உண்பதை முடிந்தவரை தவிர்க்கலாம். ஏனெனில் அவை மண்ணில் விளைவதால் கிருமிகள் இலைகளில் தொற்றிக் கொள்ள ஏதுவாக இருக்கும். அவற்றை உண்பது உடலுக்குக் கேடு. கீரை மட்டுமன்றி காலிஃப்ளவர், கோஸ் போன்றவற்றையும் மழைக்காலத்தில் தவிர்க்கலாம்.

காளான் : காளான் மண்ணில் குறிப்பாக மழைக்காலத்தில் தளதளவென வளரக் கூடியது. இருப்பினும் அவற்றை மழைக்காலத்தில் உண்பது சரியல்ல. காரணம் மழைக்காலத்தில் காளானை பாக்டீரியாக்கள் வெகுவாகத் தாக்கும். அவற்றை என்னதான் சுத்தம் செய்து சாப்பிட்டாலும் அந்த பாக்டீரியாக்கள் தாக்கும் ஆற்றல் கொண்டது. வீட்டில் சமைப்பது மட்டுமல்லாமல் கடைகளில் காளான் வாங்கி உண்பதையும் தவிர்க்கலாம்.


Click here to join whatsapp group for daily health tip

40 வயதிற்குப் பின் பலவீனமாகும் எலும்புகள்... தடுக்க உதவும் இந்த 5 உணவுகளை தினமும் எடுத்துக்கோங்க...

October 14, 2022 0

 நீங்கள் அமர்ந்திருக்கும் நிலையை மாற்றும் பொழுது அல்லது காலையில் எழுந்திருக்கும் பொழுது, நீண்ட நேரம் நடந்த பிறகு அல்லது நீண்ட நேரம் வேலை செய்த பின்பு மூட்டுகளில் அல்லது எலும்பு பிராதனமாக இருக்கும் பகுதிகளில் குத்துவது போன்ற வலி தோன்றுகிறதா.? குறிப்பாக, முதுகு வலி, தோள்பட்டை வலி மற்றும் இடுப்புப் பகுதியில் அடிக்கடி இவ்வாறு வலி தோன்றினால் எலும்புகள் பலவீனமாக இருக்கின்றன என்று அர்த்தம். எலும்புகள் தான் நம்முடைய உடல், இந்த வடிவில் இந்த அமைப்பில் இருக்க வேண்டும் என்ற வடிவத்தை வழங்குகின்றன.

எலும்புகள் பலவீனமாகும் போது காயங்கள் ஆறுவதற்கு தாமதமாகும். அடிக்கடி எலும்புகள் உடையும் சாத்தியம் ஏற்படும். பலவீனமான எலும்புகள் நம்முடைய பேலன்ஸை தடுமாற செய்யும். எலும்புகளை உறுதியாக வைத்துக் கொள்ள, ஆரோக்கியமான உணவுகள் அவசியம். இந்த 5 உணவுகளை தவறாமல் சாப்பிட்டு வந்தால், எலும்புகள் உறுதியாக இருக்கும்.

கீரை வகைகள்: எலும்புகள் உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு உதவும் ஊட்டச்சத்து கால்சியம். அதனுடன், இணை-ஊட்டச்சத்துக்களாக மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய இரண்டு மினரல்களும் எலும்புகளின் அடர்த்திக்கும் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. மேலும், பல உணவுகளில் இல்லாத வைட்டமின் கே மற்றும் ஃபோலேட் ஆகிய இரண்டு சத்துக்களும் எலும்புக்கு அவசியம். இந்த அனைத்து சத்துக்களும் பச்சை நிற காய்கறிகள் மற்றும் கீரைகளில் அதிக அளவில் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், இவை அல்கலைன் தன்மையைக் கொண்டிருப்பதால், உடலில் இருக்கும் பிஎச் அளவையும் சரி செய்து, உங்களுடைய எலும்பு அடர்த்தியை சரியான அளவில் பாதுகாக்க உதவுகிறது. தினமும் ஏதேனும் ஒரு கீரையை சாப்பிட்டு வருவது எலும்பு ஆரோக்கியத்தை உறுதி செய்யும்.

பால் மற்றும் பால் பொருட்கள்: எலும்புகள் ஆரோக்கியம் என்று சொன்னாலே கால்சியம் தான் அதன் அடிப்படை ஊட்டச்சத்து. உடலில் கால்சியம் சத்து குறைபாடு ஏற்பட்டால் எலும்புகள் அடர்த்தி குறைவதோடு மட்டுமல்லாமல் பலவீனமாக்கி எளிதில் உடைந்து போகும். இதனால் தான் குழந்தைகளுக்கு அவர்கள் வளரும் பருவத்தில் பால் அதிகம் நிறைந்திருக்கும் உணவுகள் கொடுக்கப்படுகின்றன. அனைத்து வகையான பால் பொருட்களிலும் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. பால், வெண்ணெய், தயிர், சீஸ், பன்னீர் என்று உடலுக்கு தேவையான கால்சியம் சத்தை பால் பொருட்களில் இருந்தே பெறலாம். பால் பொருட்கள் அலர்ஜி என்று உள்ளவர்கள் தாவரங்களில் இருந்து பெறப்படும் பால் வகையின் மூலம் தங்களுடைய உடலுக்கு தேவையான கால்சியத்தைப் பெறலாம்.

கடல் உணவுகள் மற்றும் மீன்: கடல் உணவுகளில் பொதுவாக அதிக மினரல்கள் இருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் எலும்புகள் உறுதியாவதற்கு தேவையான வைட்டமின் டி சத்து கடல் உணவுகளில் அதிகமாக இருக்கின்றது. உங்கள் உடல் கால்சியம் சத்தை உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி தேவை. பலவிதமான கடல் உணவுகள் மற்றும் மீன்களில் வைட்டமின் டி சத்துடன் கால்சியம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இவை எலும்பின் அடர்த்தியை அதிகரித்து வயதாகும் காலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட பலவித எலும்பு குறைபாடுகளை தவிர்க்க உதவும். சைவ உணவு சாப்பிடுபவர்கள் இயற்கையாகவே வைட்டமின் டி சத்தை சூரிய ஒளியின் மூலமாக பெற முடியும்

விதைகள்: கால்சியம் தவிர புரதம் மற்றும் வேறு சில மினரல்களும் எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவை. மக்னீசியம், ஜிங்க், வைட்டமின் ஈ, ஃபோலேட் ஆகிய அனைத்து மினரல்களும், பாதாம், பிஸ்தா, முந்திரி, சூரியகாந்தி விதைகள், ஆளி விதைகள் ஆகியவற்றில் அதிகம் இருக்கின்றன.

ஆரஞ்சு பழம்: உடலுக்கு தேவையான கொலாஜன் உற்பத்திக்கு வைட்டமின் சி சத்து அவசியம். இந்த சத்து, உடலின் இணைக்கும் திசுக்கள் மற்றும் எலும்பு மஜ்ஜைகள் அனைத்தும் உருவாக கொலாஜன் அவசியம். எனவே, ஆரஞ்சு பழம் சாப்பிடுவது கொலாஜன் உற்பத்தி செய்ய உதவும்.


 Click here to join whatsapp group for daily health tip