Agri Info

Adding Green to your Life

November 1, 2022

தேர்வில்லாத வேலை... மத்திய அரசின் ஹெலிகாப்டர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்கும் முறை!

November 01, 2022 0

 மத்திய அரசின் கீழ் இயங்கும் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் ( BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED) அறிவிப்பில் பவன் ஹான்ஸ் லிமிடெட்  நிறுவனத்தில் காலியாகவுள்ள Maintenance Supervisor, Operation Assistant, Duty Electrician/operator Semi - Skilled, Station Co-ordinator, RCS Co-didinator பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எப்படி விண்ணப்பிப்பது, தகுதிகள் குறித்து இதில் தெரிந்துகொள்ளுங்கள். 

பணியின் விவரங்கள்:

ஹெலிகாப்டர் நிறுவனமான பவன் ஹான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பல்வேறு பகுதியில் உள்ள நிலையங்களில் காலியாகவுள்ள இடங்கள்.

பணியின் பெயர்காலி இடங்கள்
 Maintenance Supervisor (Skilled)5
Operation Assistant (Skilled)5
Duty Electrician/operator Semi - Skilled5
Station Co-ordinator (Skilled)5
RCS Co-ordinator (Skilled)1

கல்வித்தகுதி:

Maintenance Supervisor (Skilled) பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில்  பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 3 வருடம் அனுபவம் தேவை.

Operation Assistant (Skilled) பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில்  பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 3 வருடம் Helliport /Airport, liasoning & co-ordination, and handling of passengers etc பிரிவுகளில் அனுபவம் தேவை.

Duty Electrician/operator Semi - Skilled பணிக்கு 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் எலெக்டிரிசன் படிப்பில் 2 வருடம் ஐடிஐ அல்லது டிப்லோமோ படித்திருக்க வேண்டும். 3 வருடம் அனுபவம் வேண்டும்.

Station Co-ordinator பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில்  பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். ஒரு வருட அனுபவம் வேண்டும்.

RCS Co-ordinator பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். ஒரு வருட அனுபவம் வேண்டும்.

வயது வரம்பு :

Maintenance Supervisor,Operation Assistant,Duty Electrician/operator Semi - Skilled பணிகளுக்கு விண்ணப்பிற்பதர்க்கு  28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Station Co-ordinator,RCS Co-ordinator பணிகளுக்கு விண்ணப்பிக்க  25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

விண்ணப்பதார்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பதார்களில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரிவிக்கப்படுவர்.

சம்பளம்: 

ரூ. 17,446/- முதல் ரூ. 22,516/- வரை

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

விண்ணப்பிக்க வேண்டிய தளம்:https://www.becil.com/careers

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 20.11.2022.

மேலும் விவரங்களுக்கு : https://www.becil.com/

Click here to join WhatsApp group for Daily employment news 

மாதம் ரூ.69,810 வரை சம்பளம்.. மத்திய அரசு வங்கியில் வேலை - விண்ணப்பிக்க அவகாசம் நீடிப்பு!

November 01, 2022 0

 மத்திய அரசிக்குச் சொந்தமான இந்தியன் எக்ஸிம் வங்கியில் (Indian Exim Bank) மேனேஜர் மற்றும் மேனேஜ்மண்ட் டிரைனி பணிகளுக்காக வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான தகுதிகள், தேவைகள், விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம்.

வங்கி பணிக்காக விண்ணப்பிக்கக் கடைசி நாள் 04.11.2022 இருந்த நிலையில் புதிய அறிவிப்புப் படி 18.11.2022 தேதிக்கு அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த அவகாசத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். மேலும் முன்னதாகவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவை இல்லை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியன் எக்ஸிம் வங்கி பணிக்கான விவரங்கள்:


1. பணியில் பெயர் : மேனேஜர் (Manager) :

காலியிடங்கள்4 (எஸ்டி-2,ஒபிசி-2)
சம்பள விகிதம்ரூ. 48,170 - 69,810.
வயதுஎஸ்டி பிரிவினர்கள் 40 வயதிற்குள்ளும், ஒபிசி பிரிவினர் 35 இருந்து 38 ஆக நீடிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதிபி.எல் அல்லது எல்.எல்.பி பட்டம் பெற்றுக் குறைந்தது 6 வருட வழக்கறிஞர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கணினி அறிவியல் / ஐடி/ எலக்ட்ரானிக் மற்றும் தொலைத்தொடர்பு பாடப்பிரிவில் பி.இ /பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்.சி.ஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும். 6 வருடப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: மேனேஜ்மண்ட் டிரைனி (Management Trainees):

காலியிடங்கள்41 (UR -12,SC-10,ST-6,OBC-10,EWS-3)
சம்பளம்ரூ.55,000
வயது வரம்பு21 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதிCA/MBA/PGDBA போன்ற ஏதாவதொரு பட்டப்படிப்பை முடித்து 60% மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும். ஏதாவதொரு இளநிலைப் பட்டப்படிப்பில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று மேற்கண்ட கல்வித்தகுதியைப் பெற்றிருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வு தமிழ்நாட்டில் சென்னை உட்பட நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெறும்.

எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி:

நவம்பர் - டிசம்பர் - 2022.

நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி : ஜனவரி 2023.

எழுத்துத்தேர்வுக்கான பாடத்திட்டம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எழுத்துத்தேர்வின் அடிப்படையில் பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட மேனேஜ்மண்ட் டிரைனி பணிக்குரியவர்களுக்கு உதவித்தொகையுடன் 1 வருட பயிற்சி வழங்கப்படும். பயிற்சி வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் டிபியுடி மேனேஜர் பணி வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது/ OBC பிரிவினருக்கு ரூ. 600. SC/ST/PWD/EWS பிரிவினர்கள் மற்றும் பெண்களுக்கு ரூ.100 கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க நீடிக்கப்பட்டக் கடைசி நாள் : 18.11.2022.

தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மேலும் தகவலுக்கு https://www.eximbankindia.in/careers அணுகவும்.

Click here to join WhatsApp group for Daily employment news 

உடற்பயிற்சியை தடையில்லாமல் பின் தொடர்வதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்

November 01, 2022 0
உடற்பயிற்சி என்பது தொடர் விளையாட்டு முறையை போன்றது. தினமும் தவறாமல் அதனை பின்பற்றி வர வேண்டும். உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமான உடல் அமைப்பை பேணுவதற்கான சிறந்த வழிமுறையாகும். உடல் ரீதியாக மட்டுமின்றி மன ரீதியாகவும் வலு சேர்க்கக்கூடியது.
 உடற்பயிற்சியை தொடர்ந்து பின்பற்றும் விஷயத்தில் சிலர் தவறான வழிமுறைகளை கையாளுகிறார்கள். சரியான முறையில் 'வொர்க் அவுட்' செய்யாதது, நேரமின்மை, சலிப்பு, உடல்நல பிரச்சினை போன்ற காரணங்களை காட்டி சில காலம் உடற்பயிற்சியை தவிர்த்துவிடுவார்கள். அல்லது இடைவெளி விட்டு தொடர்வார்கள். உடற்பயிற்சியை பின்பற்றுவதற்கு தடையாக இருக்கும் விஷயங்களை கருத்தில் கொள்ளாமல் உடல் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனெனில் உடற்பயிற்சி செய்வது உடல் எடையை குறைக்கவும் சீராக நிர்வகிக்கவும், உதவும். 

உடலில் 'ஸ்டெமினா' எனப்படும் ஆற்றல் அளவை அதிகரிக்க துணைபுரியும். பல்வேறு விதமான நோய்களில் இருந்து பாதுகாப்பு வழங்கும். மன அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும். மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆழ்ந்த தூக்கத்தை வரவழைக்கும். ஆதலால் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி முக்கியமானதாக கருதப்படுகிறது.

உடற்பயிற்சியை தடையில்லாமல் பின் தொடர்வதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம். 

எளிமையாக தொடங்குங்கள்: 

ஒரே நாளில் உடற்பயிற்சியில் சிறந்த நிலையை எட்ட முடியாது. ஆரம்பத்திலேயே கடினமான உடற்பயிற்சியை தேர்ந் தெடுத்தால் சோர்வடைந்துவிடுவீர்கள். உடலில் நீரிழப்பும் ஏற்படும். எனவே ஆரம்பத்தில் எளிமையான பயிற்சியை தொடருங்கள். அரை மணி நேரம் விறுவிறுப்பாக நடப்பது, 15 நிமிடம் நடனம் ஆடுவது அல்லது யோகா மேற்கொள்வது போன்ற பயிற்சிகளில் ஈடுபடலாம். அதன் பிறகு உடற்பயிற்சியை தொடங்கலாம். நீண்ட நாட்கள் உடற்பயிற்சி செய்து வருபவர்களும் இடையில் நிறுத்தியவர்களும் கூட இந்த முயற்சியை பின் தொடரலாம். எளிமையாக தொடங்கும்போது, அன்றாட வழக்கத்துடன் தொடர்ந்து பின்பற்றுவதற்கு வாய்ப்பு உண்டாகும். 

நீண்ட காலத்திற்கு ஆரோக்கியத்தை உறுதி செய்ய வித்திடும். எடை இழப்பு இலக்கை அடைவதற்கான ஒரு கருவியாக உடற்பயிற்சியை கருதாமல் வாழ்க்கை முறை தேர்வாக ஏற்று தினமும் கடைப் பிடிக்க வேண்டும். 

சரியான உடற்பயிற்சியை தேர்ந்தெடுங்கள்: 

உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் ஒருவித சலிப்பு காரணமாக சிலர் பாதியிலேயே நிறுத்திவிடுவார்கள். சரியான உடற் பயிற்சியை தேர்ந்தெடுக்காததுதான் அதற்கு காரணம். நிறைய பேர் தங்கள் நண்பர் ஜிம்முக்கு செல்கிறார் என்பதற்காக தானும் சேர்ந்துவிடுவார்கள். நண்பர் மேற்கொள்ளும் கடுமையான பயிற்சிகளை பார்த்து தானும் மேற்கொள்வதற்கு விரும்புவார்கள். அதுபோன்ற முயற்சியில் ஈடுபடாமல் தங்கள் உடல் வாகுக்கு பொருத்தமான 'வொர்க் அவுட்'டை கண்டறிந்து செயல்பட வேண்டும். 

ஏரோபிக் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்:

ஒரே விதமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். அவை சலிப்பை ஏற்படுத்திவிடும். ஏரோபிக்ஸ் பயிற்சிகள், உடல் வலிமையை அதிகரிக்கச் செய்யும் பயிற்சிகள் என வெவ்வேறு பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். 

நேரம் ஒதுக்குங்கள்:

உடற்பயிற்சியை தவிர்ப்பதற்கு நேரமின்மையை பலர் காரணமாக முன்வைக்கிறார்கள். அன்றாடம் செய்யும் வேலைகளுக்கு நேரம் ஒதுக்குவதுபோல உடற்பயிற்சிக்கும் போதிய நேரம் ஒதுக்க வேண்டும். உடற்பயிற்சிக்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கினால், மற்ற விஷயங்களுக்கு தானாகவே நேரம் கிடைத்துவிடும். ஏனெனில் உடற்பயிற்சி செய்வதால் மந்த உணர்வு நீங்கும். எந்த வேலையையும் சுறுசுறுப்பாக செய்து விட முடியும்.

 நண்பர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்: 

தனிமையில் உடற்பயிற்சி செய்வது சில காலத்திற்கு பிறகு சலிப்புணர்வை ஏற்படுத்தக்கூடும். நண்பர்களுடன் சேர்ந்து குழுவாக உடற்பயிற்சி செய்வது கூடுதல் நன்மைகளை தரும். உடற்பயிற்சி செய்வதை குறிக்கோளாக கடைப்பிடிக்க தொடங்கிவிடுவீர்கள். அவர்களுடன் சேர்ந்து புதிய உடற் பயிற்சிகளையும் முயற்சிக்க பழகிவிடுவீர்கள். 

சத்தான உணவை உண்ணுங்கள்: 

உடல் நலத்துக்கு உடற்பயிற்சி முக்கியமானது, அதுபோல் உணவும் அவசியமானது. எனவே, உடற்பயிற்சி செய்யதொடங்கும்போது, உணவிலும் கவனம் செலுத்துங்கள். பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் சமச்சீரான உணவை உண்ணுங்கள். போதுமான தண்ணீர் குடிப்பதும் ஆரோக்கியத்திற்கு உகந்தது. தினமும் குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீர் பருகுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு 'வார்ம் அப்' பயிற்சியை தவறாமல் மேற்கொள்ளுங்கள். உடற் பயிற்சி செய்து முடித்த பிறகு போதிய ஓய்வு எடுக்கவும் மறக்காதீர்கள்.


Click here to join whatsapp group for daily health tip

மழைக்காலத்தில் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க...

November 01, 2022 0

 

மழைக்காலம் வந்தாலே வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது. ஆனால் உடற்பயிற்சி செய்தே ஆகவேண்டிய கட்டாயம். வாக்கிங், ஜாக்கிங் என வெளியே செல்ல முடியாதவர்கள் வீட்டிற்குள்ளேயே அதை செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள். அவர்கள் கூறிய ஆலோசனைகளை படியுங்களேன். 

ஸ்கிப்பிங் எக்ஸர்சைஸ்

ஸ்கிப்பிங் விளையாடுவது உடல் எடையை குறைக்கும். உடலின் அத்தனை பகுதிக்குமான உடற்பயிற்சி அது. மேலும் இது வீட்டிற்குள்ளேயே செய்யக்கூடிய எளிமையான உடற்பயிற்சி. எனவே மழைக்காலத்தில் உடல் எடை கூடி விடுமே என்று கவலைப்படாமல் ஸ்கிப்பிங் விளையாடுங்கள். 

மாடிப்படி ஏறுங்கள் 

வெளியே சென்று ஜாங்கிங் போக முடியவில்லையே என்று நினைப்பவர்களுக்கு மாடிப்படி இருக்கிறது. தினசரி நான்கு முறை ஏறி இறங்குங்கள் கலோரிகள் எரிக்கப்படும். ஜாக்கிங் போகமுடியவில்லையே என்ற குறை தீரும். மனதிற்குப் பிடித்த பாடலை போட்டுக்கொண்டு வீட்டிற்குள்ளேயே நடனமாடுங்கள். ஏனெனில் நடனம் மிகச்சிறந்த உடற்பயிற்சியாக இருப்பதோடு உடலின் வடிவமைப்பை கட்டுக்குள் வைக்கும். மன அழுத்தம் இருந்தாலும் குணமடையும்.

 புஷ் அப்ஸ் & சிட் அப்ஸ் 

இது வீட்டிற்குள்ளேயே செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சி. பத்து முறை உட்கார்ந்து எழுந்திரியுங்கள். உங்களின் உடலில் உற்சாகம் பிறக்கும். வயிறு, தொடைப் பகுதி குறைவதற்கான அற்புதமான உடற்பயிற்சி. ஹேண்ட் ஸ்டேன்ட் வீட்டில் ஹேண்ட் ஸ்டேன்ட் இருந்தால் கவலையே படவேண்டாம். இது உடல் முழுவதும் ரத்தத்தை பரவச்செய்யும் உடற்பயிற்சி. மழைக்காலத்தில் வீட்டிற்குள் இருந்து கொண்டே எளிமையாக செய்யலாம். கைகளுக்கு வலிவு தரும் பயிற்சிகளை செய்வது ஆரோக்கியத்தை அதிகரிக்கும். 

பெட் பாட்டில்களில் தண்ணீரை நிரப்பி அதை கைகளில் வைத்து ஏற்றி இறக்கலாம். டம்ப்பெல்ஸ் செய்வதற்கு சமமானது இந்த உடற்பயிற்சி. இனி மழைக்காலத்தில் வெளியே சென்று ஜாக்கிங் போக முடியலையே என்று வருந்த வேண்டாம். நிபுணர்கள் கூறிய எளிய உடற்பயிற்சிகளை செய்து உடலையும், மனதையும் ரிலாக்ஸ் ஆக்கிக் கொள்ளுங்களேன்.


 Click here to join whatsapp group for daily health tip

தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்...

November 01, 2022 0

 

உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல வகையான தேவைப்பாடுகளுக்கு பல வகையான உடற்பயிற்சிகள் உள்ளன. சில உடற்பயிற்சிகள் ஆரோக்கியமான உடல்நலத்துக்கும், சில உடற்பயிற்சிகள் நோயைக் குணப்படுத்தவும் உதவுகின்றன. யோகா போன்ற சில உடற்பயிற்சிகள் மன நலனுக்காகவும் பயன்படுகிறது. ஆகவே உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குவது மிகவும் அவசியமான ஒன்று காலை உடற்பயிற்சி, மூளையின் செயல்திறனுக்கு உதவுகிறது. இதனால், மூளையின் நியூரான்கள் தூண்டப்பட்டு நினைவுத்திறன் மேம்படும். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நினைவுத்திறன் குறைபாட்டால் அல்சைமர் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முறையான காலை உடற்பயிற்சி மூலம் அல்சைமரின் தாக்கம் குறையும்.

தினசரி 30-45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால், உடல் மற்றும் மூளை புத்துணர்வுடனும், ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் மன நிலையையும் நன்றாக வைக்க உதவுகிறது.
புதிய நியூரான்களை உருவாக்கவும் உடற்பயிற்சி உதவுகிறது. இதனால் அல்சைமர் அல்லது பார்கின்சன் போன்ற மன நோய்களிலிருந்து விடுபடலாம். குறிப்பாக, வாழ்க்கையின் பின்னாட்களில் மன நோய் ஏற்பட்டாலும், அதை தடுக்கும் ஆற்றல் உடற்பயிற்சிக்கு உண்டு. உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் பதற்றத்தின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். மனம் அமைதியாய் இருக்கும். இதனால் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் கவலைகளும் நீங்கும்.

வேறு காரணங்களால் அலுவலகத்திலும், வீட்டிலும் நமக்கு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு. இதை தவிர்க்க உடற்பயிற்சி செய்வது ஓர் நல்ல வழியாகும். உடற்பயிற்சி மன அழுத்தத்தை வெகுவாக குறைக்கிறது. உடற்பயிற்சி செய்தால், பல விதமான நோய்களிலிருந்து இதயம் பாதுகாப்பாக இருக்கும். பரம்பரையாக இதயநோய் இருந்தால், உடற்பயிற்சி செய்வதன் மூலம் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமான வாழ்வை வாழலாம். அதனால் உடற்பயிற்சி செய்து, இதய நோய்களை விட்டு விலகி இருக்கலாம். உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் ஆரோக்கியமான உடல் எடையோடு இருப்பது தான் அனைவரின் கனவு. இதை அடைவதற்கு உடற்பயிற்சி மிகவும் உறுதுணையாக இருக்கிறது. தேவையான உடற்பயிற்சியுடன் சரியான உணவை உட்கொண்டால், உடல் கட்டமைப்போடு அழகாக காட்சியளிக்கும்.

உடல் எடையை குறைக்க மட்டும் உடற்பயிற்சி உதவுவதில்லை, அதிக எடை உள்ளவர்களுக்கு ஏற்படும் சர்க்கரை நோயை தடுக்கவும் உதவியாக இருக்கிறது. அதிலும் தினசரி உடற்பயிற்சி செய்தால், இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். அவ்வப்போது உடற்பயிற்சி செய்வதால் அதிகப்படியான வியர்வையானது, நம்மை சோர்வடைய செய்யும். ஆனால் தொடர்ச்சியாக செய்தோமானால் உடல் உறுதி அதிகரித்து, சோர்வைக் குறைக்கும். உயர் இரத்த அழுத்தம் வராமால் தடுக்க சீரான முறையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். மேலும் தசைகளுக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்கும். இதனால் இரத்தக் குழாய்கள் ஓய்வெடுக்க உதவுவதால் இரத்த அழுத்தம் வருவதையும் தடுக்கும்.

தேவையற்ற கொழுப்பை குறைப்பது மட்டுமில்லாது நமது செரிமான கோளாறுகளையும் சீரடைய செய்கிறது உடற்பயிற்சி. உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் சோர்வு குறைவதினால் நாம் தினசரி செய்யும் வேளைகளில் அதிகளவில் ஈடுபட முடியும். அதனால் நமது உற்பத்தித்திறன் அதிகரிக்கிறது. உடற்பயிற்சி செய்வதன் காரணமாக மூளையில் புதிய செல்கள் வளர தூண்டுகிறது. இதன் மூலம் நமது ஞாபக சக்தி அதிகரிக்கிறது. வழக்கமாக உடற்பயிற்சி செய்வதன் மூலம் தேவையற்ற கொழுப்பு கரைந்து நமது தசைகள் வலுப்பெறுகின்றன. தினசரி உடற்பயிற்சி செய்தால், நோய் தடுப்பாற்றல் அமைப்பு அதிகரிக்கும். இதனால் சளி, காய்ச்சல் போன்ற பல வகையான நோய்களில் இருந்தும் விடுபடலாம். உடற்பயிற்சி செய்வதன் முக்கிய காரணம் என்னவெனில் நமது வாழ்நாள் அதிகரிக்க இது உதவுகிறது. உடலும் மனமும் வலுப்பெறுவதினால் நமது வாழ்நாள் தானாகவே அதிகரிக்கிறது. அதனால் கட்டாயம் தவறாது உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் உடற்பயிற்சி, உடலை ஆரோக்கியத்தோடு வைத்திருக்கும். அதிலும் உடல் தடித்தல், சர்க்கரை நோய், இதய நோய், இரத்தக் கொதிப்பு மற்றும் வாதம் போன்ற பிரச்சனையில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

 Click here to join whatsapp group for daily health tip

October 31, 2022

வீட்டிற்குள் சுத்தமான காற்றை பெறுவது சாத்தியமா..? இந்த டிப்ஸை கவனியுங்கள்..!

October 31, 2022 0

இன்றைக்கு பெருநகரங்கள் முதல் கிராமங்கள் வரை காற்று மாசுபட்டுத்தான் கிடைக்கிறது. இயல்பை விட அதிகளவு காற்று மாசு ஏற்பட்டாலும் உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. இதோடு ஆஸ்துமா, நுரையீரல் தொற்று, இதய நோய் உள்ளிட்ட பல பிரச்சனைகளும் மக்களுக்கு ஏற்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள். எனவே முடிந்தவரை சுத்தமானக் காற்றை சுவாசிக்க நாம் முயல வேண்டும்.

ஆனால் இது பொது இடங்களில் குறைவான அளவே என்றாலும், வீட்டிற்குள் இருக்கும் காற்றி சுத்தமாக வைத்துக் கொள்வது நம் அனைவரின் கடமை. இதோ அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

வீட்டினுள் சுத்தமான காற்றை சுவாசிப்பதற்கான வழிமுறைகள்…

காற்றோட்டத்தை அதிகரித்தல்:நீங்கள் வீட்டிற்குள் இருக்கும் போது ஜன்னல் மற்றும் கதவை அடைத்து வைக்காதீர்கள். இதனால் உங்களது அறைக்குள் காற்று ஒட்டம் சரியாக இருக்காது. இதனால் ஈரமான வாசனை உங்களது அறைக்குள் சுற்றி வரும் என்பதால் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாது. எனவே எப்போதும் வீட்டிற்குள் காற்று செல்லும் படியாக திறந்து வைத்திருப்பது அவசியம்.


வீட்டினுள் செடிகளை வளர்த்தல்: உங்களது வீட்டிற்குள் எப்போதும் சுத்தமாக காற்று உலா வர வேண்டும் என்றால் உள்ளே தாவரங்களை வளர்க்க வேண்டும். இது நச்சுத்தன்மையுள்ள காற்றை சுவாசித்து, வீட்டினுள் சுத்தமான ஆக்சிஜன் நிறைந்த காற்றை வெளியிடுகிறது. குறிப்பாக அல்லி, கற்றாழை, பீஸ் லில்லி, ஸ்பைடர் தாவரம் போன்ற தாவரங்களை வளர்க்கலாம்.

காலணிகளை வெளியில் வைத்தல்: சில வீடுகளில் காலணிகளை வீட்டிற்குள் உள்ளேயே வைப்போம். வெளி இடங்களுக்கு சென்று வருவதால் இதில் கிருமிகள் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே முடிந்தவரை உங்களது அறைகளுக்கு வெளியே செப்பல் மற்றும் சூக்களை வைத்திருக்க முயலுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் 50 சதவீதம் தொற்று நோய் அபாயத்தைக் குறைக்க முடியும்.

அத்தியாவசிய எண்ணெய்கள் பயன்படுத்துதல்: பெப்பர்மின்ட் எண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய் மற்றும் பிற அத்தியாவசிய எண்ணெய்கள் இனிமையான இயற்கை மணம் கொண்டவை என்பதால், இவற்றை அதிகளவில் நீங்கள் வீட்டிற்குள் உபயோகிக்கலாம். இவை நல்ல மணத்தை அளிப்பதோடு உடலுக்கும் புத்துணர்ச்சியாக உள்ளது.

உங்களது வீட்டினுள் உட்புறக் காற்றை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், பிளாஸ்டிக் பொருள்களுக்குப் பதிலாக மரத்திலான செய்யப்பட்ட கூடைகள் போன்ற வீட்டிற்குத் தேவையான பொருள்களைப் பயன்படுத்த முயலுங்கள்.

முக்கியமான 24 மணி நேரமும் செயல்பாட்டில் உள்ள ஃபேன், ஏசி போன்ற சாதனங்களை எப்போதும் தூய்மையாக பராமரிக்க முயலுங்கள்.

தற்போது அனைவரின் வீடுகளிலும் செல்லப்பிராணிகள் நிச்சயம் ஏதாவது ஒன்று இருக்கக்கூடும். எனவே உங்களது செல்லப்பிராணிகளை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க முயலுங்கள். இதன் மூலம் நச்சுக்காற்று உங்களது வீட்டைச் சுற்றி வர வாயப்பில்லை.

இதோடு ஈரமான துணிகளை எப்போதும் வீட்டினுள் வைக்காதீர்கள். முடிந்தவரை வெயில் காயப் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதுப்போன்ற சில வழிமுறைகளை நீங்கள் பின்பற்றினாலே நீங்கள் வீட்டிற்குள் இருந்தாலும் ஆரோக்கியமான மற்றும் சுத்தமான காற்றை நீங்கள் சுவாசிக்க முடியும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

 Click here to join whatsapp group for daily health tip

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி நிறைந்த டாப் 5 உணவுகள்!

October 31, 2022 0

 “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்“ என்பார்கள். அதற்கேற்ப தான் நம்முடைய முன்னோர்கள் அவர்களின் வாழ்க்கை முறையை நடத்தி வந்தனர். ஆனால் இன்றைக்கு உள்ள தலைமுறையினரிடம் நல்ல உணவுப் பழக்கம் என்பது கிடையாது. இதனால் தான் பாக்டீரியா, வைரஸ்கள், ஒட்டுண்ணிகள் அல்லது பிற நுண்ணுயிரிகளால் ஏற்படும் தொற்றுகளால் நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதோடு பல உடல் நல பிரச்சனைகளையும் நாம் சந்திக்க நேரிடுகிறது. அதிலும் தற்போது க்காலம் மற்றும் குளிர்காலம் ஆரம்பித்து விட்டதால் பலவிதமானத் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுபோன்ற சூழலில் வைட்டமின் சி நிறைந்த உணவுகள் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. அவை என்னென்ன என்பது? குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்…

ஆரஞ்சு: வைட்டமின் சி நிறைந்த உணவுப் பொருள்களில் முக்கியமானது ஆரஞ்சு. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் சிட்ரஸ் பழமான ஆரஞ்சில், உடலின் முக்கிய பாதுகாப்பு அமைப்பான நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பாதுகாக்கும் திறன் உள்ளது. இதோடு கொலாஜனை அதிகரிக்கவும், சரும பிரச்சனைக்கும் தீர்வாக அமைகிறது. 100 கிராம் ஆரஞ்சு பழத்தில் 53.2 மில்லிகிராம் வைட்டமின் சி இருப்பதாகக் கூறப்படுகிறது.

ப்ரோக்கோலி: இலைக்காய்கறியான ப்ரோக்கோலி வைட்டமின் சி சத்துக்கள் அதிகளவில் உள்ளது. இதோடு நார்ச்சத்து, புரதம் மற்றும் பொட்டாசியம் போன்ற பிற முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. எனவே இதை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் போது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

கேல் கீரை: கேல் கீரையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. 100 கிராம் கேல் கீரையில் 120 mg வைட்டமின் சி இருப்பதாக கூறப்படுகிறது. இதோடு வைட்டமின்கள் ஏ, கே மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்களும் உள்ளது.

ஸ்ட்ராபெர்ரிகள்: வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிகம் நிறைந்துள்ள பழங்களில் ஒன்று தான் ஸ்டராபெர்ரிகள். இந்த பழங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு புற்றுநோய், நீரழிவு நோய், பக்கவாதம் மற்றும் இதய நோய் போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது. ஒரு கப் ஸ்ட்ராபெர்ரியில் கிட்டத்தட்ட 90 மில்லிகிராம் வைட்டமின் சி உள்ளது. இதோடு மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்களும் இதில் இடம் பெற்றுள்ளது.

தக்காளி: தக்காளியில் அதிகளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதோடு பொட்டாசியம், வைட்டமின் பி மற்றும் ஈ போன்ற பிற ஊட்டச்சத்துகள் இதில் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

இதோடு பச்சை மிளகாய், கிவி பழம், எலுமிச்சை,கொத்தமல்லி போன்ற உணவுப் பொருள்களிலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி சத்துக்கள் அதிகளவில் உள்ளது.

 Click here to join whatsapp group for daily health tip

இரவு டின்னருக்கு இந்த 5 உணவுகளை சாப்பிட்டால் தூக்கம் வராதாம்..!

October 31, 2022 0

 இன்றைய இளைஞர்கள் தொடங்கி முதியவர்கள் வரை பலரும் தூக்கம் வராமல் அவதிப்படுகின்றனர். தூக்கமே தலையாய பிரச்சனையாகவும் உருவெடுத்து வருகிறது. அப்படி தூக்கம் வராமல் சிரமப்பட இந்த உணவுகள் கூட காரணமாக இருக்கலாம். ஏனெனில் இந்த உணவுகளுக்கு தூக்கத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்படி இரவு உணவுக்கு தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன பார்க்கலாம்.

டீ : பலருக்கும் சாப்பிட்ட உடன் டீ , காஃபி குடிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால் அதை இரவிலும் கடைப்பிடிக்கிறீர்கள் எனில் அது தூக்கத்தை பாதிக்கும். டீ, காஃபி மட்டுமன்றி சாக்லெட், கோலா பானங்களை குடிப்பதையும் தவிர்க்க வேண்டும். காரணம் இவற்றில் உள்ள கஃபைன் மூளையை பாதித்து உங்கள் தூக்கத்தையும் பாதிக்கும். நீண்ட நேரம் விழிப்போடு வைத்திருக்கும். எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.

நிறைவுற்ற கொழுப்பு உணவுகள் : ஒமேகா 3 போன்ற நிறைவுற்ற கொழுப்பு உணவுகள் தூக்கத்தை கடுமையாக பாதிக்கும். அப்படி நெய், வெண்ணெய் நிறைந்த உணவுகள், குக்கீஸ் போன்றவற்றை இரவு சாப்பிடுவதை தவிருங்கள்.

சுத்திகரிக்கப்பட்ட உணவுகள் : பாஸ்தா, பிரட் என மைதா மாவை பிரதானமாக கொண்டு சமைக்கப்படும் உணவுகளை இரவில் தவிர்ப்பது நல்லது. இவை தூக்கமின்மையை பாதிக்கும். அதேசமயம் செரிமானத்தையும் குறைக்கும்.

வைட்டமின் குறைபாடு கொண்ட உணவு : எப்போதும் நாம் சாப்பிடும் உணவு சரிவிகித உணவாக இருக்க வேண்டும் என்பார்கள். அப்படி சம அளவிலான ஊட்டச்சத்து உணவு இல்லை என்றாலும் தூக்கம் தடைபடும். எனவே வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை இரவிலும் உட்கொள்ளுங்கள். குறிப்பாக வைட்டமின் கே, கால்சியம் , இரும்பு, வைட்டமின் டி , மக்னீசியம் போன்ற சத்துக்களை தவறாமல் உட்கொள்ளுங்கள்.

காரமான உணவுகள் : மசாலா , கார உணவுகளை இரவில் உட்கொள்ளும்போது அது செரிமானத்தை கடுமையாக பாதிக்கும். அந்த வகையில் நெஞ்சு எரிச்சல், அஜீரணக்கோளாறு காரணமாகவும் உங்களுக்கு தூக்கம் தடைபடலாம்.

உணவுக்கு பின் இடைவேளை அவசியம் : பொதுவான இரவு உணவையே 9 மணிக்கு முன் சாப்பிட வேண்டும் என்று பரிந்துரைப்பார்கள். அப்படி சாப்பிட்ட பின் குறைந்தது 2 மணி நேரமாவது ஓய்வு எடுத்த பின் தூங்கச் செல்ல வேண்டும். அப்படி இல்லாமல் சாப்பிட்ட உடனே உறங்கச் சென்றால் புற்றுநோய் ஆபத்து கூட வரலாம் என ஆய்விலும் நிரூபித்துள்ளனர். எனவே மிதமான உணவு மட்டுமன்றி தூங்குவதற்கு முன் போதுமான இடைவேளையும் அவசியம்.


 Click here to join whatsapp group for daily health tip

எப்பவுமே நெகடிவ்வாகவே யோசிக்கிறீர்களா? இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க.. பாசிட்டிவா மாறுங்க!

October 31, 2022 0

 இந்த விஷயம் நடக்கும், இதற்கு பாசிடிவ்வாக சிந்திக்க வேண்டும் என்று சொல்வது மிகவும் எளிது!  இயல்பாகவே நம்முடைய மனம் மற்றும் மூளை எதிர்மறையான விஷயத்தை கிரகித்துக்கொள்ளும்படி தான் படைக்கப்பட்டு இருக்கிறது. இந்த விஷயம் நடக்காது, இது கிடைக்காது என்று நெகட்டிவ் ஆன ஏதாவது ஒரு உணர்வு தோன்றினால் அந்த விஷயம் நடந்துவிடும். ஆனால் அதுவே ஒரு விஷயம் நடக்க வேண்டும், ஏதேனும் ஒன்று கிடைக்க வேண்டும், இந்த வாய்ப்பு என்னுடையது என்று பாசிட்டிவாக நினைக்கும் பொழுது அதை நாம் பாசிட்டிவ் ஃஅபர்மேஷன் என்று திரும்பத் திரும்ப கூறிக்கொண்டே இருக்க வேண்டும். நம்முடைய மனம், நல்ல விஷயங்களை முழுமையாக நம்பாது.

இவ்வாறு எதிர்மறையான எண்ணங்கள் மற்றும் சிந்தனைகளை ஒரு நபரை அதிகமாக ஆட்கொள்கின்றன. இந்த எதிர்மறையான சிந்தனைகள் இயல்பாகவே நமக்கு உள்ளே ஊறிவிடுவதால் இதனை தவிர்ப்பது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் எதிர்மறையான சிந்தனைகள் நம்முடைய செயல்களையும் பாதிக்கிறது.

நம்முடைய சிந்தனைகள் நம்முடைய உணர்வுகளை பாதிக்கிறது; நம்முடைய உணர்வுகள் நம்முடைய செயல்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது; நம் செயல்களில் ஏற்படும் தாக்கம் சிந்தனைகளை மீண்டும் பாதிக்கிறது. இது ஒரு முக்கோண சங்கிலியாக இது தொடர்ந்து வருகிறது. எனவே நம்முடைய செயலும் சிந்தனையும் உணர்வும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்று மன நல நிபுணர்கள் கூறுகின்றனர்.

முழு கவனத்துடன் ஒரு வேலையை செய்து வரும் செய்து கொண்டிருக்கிறோம். சின்ன ஒரு கவனச் சிதறல் மூலம் ஏதாவது ஒரு நெகட்டிவ் ஆன ஒரு விஷயம் அல்லது மோசமான ஒரு அனுபவம் பற்றிய நினைவு வரும் பொழுது அது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகப்பெரிய தொந்தரவை ஏற்படுத்தி வேலையைத் தடை செய்யும். எனவே எதிர்மறையான சிந்தனைகள் வராமல் தடுப்பது எப்படி என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

எதிர்மறையான சிந்தனைகளை தவிர்ப்பது என்பது நாம் இதையெல்லாம் சிந்திக்கவேண்டும் இதையெல்லாம் சிந்திக்கக் கூடாது என்று நேரடியான கட்டுப்பாட்டை விதிக்க முடியாது. ஆனால் நாம் எவ்வாறு சிந்திக்கிறோம், எந்த விஷயங்களைப் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள போகிறோம் கண்டிப்பாக கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொள்ள முடியும்.

அரைகுறை சிந்தனைகளை தவிர்ப்பது

எல்லாருமே எல்லா விஷயங்களிலும் தெளிவாக சிந்திக்க முடியாது. ஒரு விஷயத்தைப் பற்றி யோசிக்கும் போது, கவனச்சிதறலைக் கட்டுப்படுத்தி நம்முடைய சிந்தனைகளை ஒருங்கிணைத்து, அதிலிருந்து மீண்டு வருவது என்பது மிகவும் சவாலானது. ஏற்கனவே நாம் எதிர்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் நம்முடைய மூளை நம்மை பாதுகாக்கும். உதாரணமாக நாம் ஒரு சவாலான ஒரு விஷயத்தை எதிர்கொண்டிருக்குறோம்; அதேபோல மற்றொரு சம்பவத்தை எதிர்கொண்டால், அதிலிருந்து நம்மை பாதுகாக்க மூளை நமக்கு வழக்கத்தை விட அதிகமாக பயத்தை ஏற்படுத்தும். எனவே, இவ்வாறு அரைகுறையாக ஏதேனும் ஒரு விஷயத்தை பற்றி சிந்திப்பதை தவிர்த்து விடுங்கள். இல்லை என்றால், அதிக அச்சம், எதிர்மறையான சிந்தனைகளை உண்டாக்கும்.

ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்

குழந்தைகள் இடத்திலேயே ஒருவரை ஒருவர் ஒப்பிட்டு பார்க்க கூடாது என்று கூறும் வழக்கமிருக்கிறது. பள்ளியில், படிப்பில், விளையாட்டில் என்று எந்த விஷயத்திலேயும் ஒருவரை ஒப்பிட்டு மற்றவருடைய திறனை தீர்மானிக்க கூடாது. ஒருவர் இப்படி நடந்து கொள்கிறார், நீ ஏன் இப்படி செய்யவில்லை என்று எந்த அடிப்படையிலும் கேட்கவே கூடாது. இவ்வாறு தொடர்ந்து மற்றவர்களுக்கு இதை சொல்வது மட்டுமல்ல, அதையே நாமும் செய்ய வேண்டும். நம்மை மற்றவருடன் ஒப்பிடும் பொழுது தோல்வியடையும் வாய்ப்புகள் அதிகரிக்கும். அது மட்டுமில்லாமல் நமக்கு திறமை இல்லையா என்ற சந்தேகமும் எழ தொடங்கும்.

ஒவ்வொரு நபரும் தனித்தன்மை வாய்ந்த திறன்கள் இருக்கின்றன. எனவே உங்களுடைய கடந்த காலத்தில் நீங்கள் எவ்வாறு இருந்திருக்கிறீர்கள் மற்றும் இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்பதை மட்டும் கவனித்தால் போதும். உங்களையே நீங்கள் ஒரு போட்டியாளராக ஒப்பிட்டுக் கொள்ளுங்கள், மற்றவர்களுடன் ஒப்பிட வேண்டாம்.

உங்கள் பலம் மற்றும் திறமைகள் மீது கவனம் செலுத்துங்கள்

நம்முடைய குறைகளையும் பலவீனங்களையும் நாம் திரும்பத் திரும்ப நினைத்து கொண்டே இருக்கும் பொழுது எதிர்மறையான சிந்தனைகள் அதிகமாகத் தோன்றும். நெகட்டிவான எண்ணங்களை தவிர்ப்பதற்கு உங்களுடைய குறைகளைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்காமல் உங்களுடைய திறமைகள் என்ன, எதில் நீங்கள் சிறந்தவர் நீங்கள் செய்யும் எந்த விஷயம் சிறப்பாக இருக்கும் என்று உங்களுடைய பலத்தின் மீதும் திறமைகள் மீதும் கவனம் செலுத்துங்கள். இது வாழ்வில் உங்களுக்கு ஒரு புதிய கண்ணோட்டத்தை ஏற்படுத்தும்.

என்ன செய்ய முடியும் என்பதை குறிக்கோளாக வைத்துக் கொள்ளுங்கள் :  

எல்லோருக்குமே வாழ்வில் பல ஆசைகள், குறிக்கோள், லட்சியம் ஆகிய அனைத்துமே இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு இது எல்லாம் நியாயமே இல்லை, நடைமுறைக்கு சாத்தியப்படாது என்று அவர்களுக்கே தோன்றும். அவ்வாறு நீங்கள் நடைமுறையில் சாத்தியமில்லாத விஷயங்களை உங்கள் குறிக்கோளாக வைத்துக் கொள்ள வேண்டாம். எதை உங்களால் உடனடியாக அல்லது சிறிது காலத்தில் செய்ய முடியுமோ அதை உங்கள் குறிக்கோளாக மாற்றி அதை நோக்கி செயல்படுங்கள். அதை அடைந்த பிறகு உங்களுடைய குறிக்கோளை பெரிதாக்கி கொள்ளலாம்.

உதாரணமாக ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடக்க வேண்டும் என்பது எங்களுடைய குறிக்கோளாக இருந்தால், முதல் நாளிலேயே உங்களால் 10,000 அடிகள் நடக்க முடியாது. அல்லது முதல் ஓரிரு நாட்கள் நடந்தால் மூன்றாவது நாள் கால்கள் வீங்கி விடும். எனவே கொஞ்சம் கொஞ்சமாக முதல்நாள் 2000 படிகள், இரண்டாம் வாரம் 3000 படிகள் என்று கொஞ்சம் கொஞ்சமாக உங்களுடைய இலக்கை அதிகரித்துக் கொள்ளலாம்.

தேவைப்பட்டால் உதவி பெறுங்கள்: 

ஒரு சிலருக்கு உடல் நல பிரச்சினைகள் அல்லது மன ரீதியான தொந்தரவுகள் காரணமாக எதிர்மறையான எண்ணங்கள் தோன்றலாம் அல்லது நெருங்கியவரின் இழப்பு பிரிவு இடமாற்றம் ஆகிய பல விஷயங்களுமே எதிர்மறையான சிந்தனைகளை அதிகரிக்கலாம். எனவே ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக எதிர்மறையான சிந்தனைகள் அதிகமாக தோன்றும் பொழுது மருத்துவரின் அல்லது மனநல ஆலோசகரின் உதவியை பெறுவதில் தவறில்லை.


 Click here to join whatsapp group for daily health tip

தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடக்கனும்... ஆனால் முடியலையா..? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!

October 31, 2022 0

 வாக்கிங் என்பது உடல் எடையை குறைக்க மற்றும் ஆரோக்கியமாக இருக்க உதவும் எளிதான மற்றும் சிறந்த வழிகளில் ஒன்றாகும். வாக்கிங் போவதால் கிடைக்கும் அதிகபட்ச நன்மைகளை பெற நன்றாக நடக்க கூடிய ஒரு நபர் தனது உடல் எடையை பெருட்படுத்தாமல் தினசரி சுமார் 10,000 ஸ்டெப்ஸ்கள் நடக்க நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

10,000 ஸ்டெப்ஸ் விறுவிறுப்பான வாக்கிங் அல்லது தினசரி 30 நிமிடங்கள் உடல் செயல்பாடுகளில் ஈடுபட கூறுகிறார்கள் நிபுணர்கள். ஆனால் உடல் எடையை குறைக்க நினைக்கும் பலரும் வாக்கிங் போவதில் ஆர்வம் காட்டினாலும், 10,000 ஸ்டெப்ஸ்கள் வாக்கிங் செல்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள். பொதுவாக வாக்கிங் என்பது ஒரே ஸ்ட்ரெச்சில் செல்ல வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் நேரத்தை அவரவர்க்கேற்ற மாதிரி அட்ஜஸ்ட் செய்து கொண்டு ஒருநாளில் இவ்வளவு தூரம் அல்லது நேரம் வாக்கிங் போகும் இலக்கை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

விறுவிறுப்பான வாக்கிங் செரிமானத்திற்கு உதவுவதோடு பெரிய நோய்க அபாயங்களில் இருந்து நம்ம பாதுகாக்கும். சரி, நீங்கள் 10,000 ஸ்டெப்ஸ்கள் வாக்கிங் போக முடிவு செய்து விட்டீர்கள் என்றால் உங்கள் அன்றாட வாழ்வில் இதை எப்படி செயல்படுத்துவது என்பதற்கான டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

மாடிப்படிகளில் ஏறி செல்ல பழகுங்கள்: அலுவலகம் மற்றும் குடியிருப்பு என நாம் புழங்கும் பெரும்பாலான இடங்களில் லிஃப்ட் வசதி இருக்கிறது. 2 மாடிகள் ஏறி செல்ல வேண்டும் என்றால் கூட பலரும் படிகட்டுகளை பயன்படுத்தாமல், லிஃப்ட் பயன்படுத்துகிறார்கள். எனவே கூடுமான வரை நேரம் கிடைக்கும் போதெல்லாம் அலுவலகம், அப்பார்ட்மென்ட் என லிஃப்ட் இருக்கும் இடங்களில் அதனை பயன்படுத்தாமல், படிகளில் ஏறி செல்லுங்கள். மேலும் படிக்கட்டுகளில் நடப்பது இதய உடற்பயிற்சிக்கான இலக்கை அடைய உதவும்.

45 நிமிடங்களுக்கு ஒருமுறை: பகல் நேரத்தில் 45 நிமிடங்களுக்கு ஒருமுறை 3 - 5 நிமிடங்கள் இருக்கும் இடத்திலேயே வாக்கிங் செல்ல உங்கள் மொபைலில் ஒரு ரிமைன்டரை செட் செய்து கொள்ளுங்கள். அலாரம் அடித்தவுடன் அதை ஆஃப் செய்யாமல் என்ன வேலையாக இருந்தாலும் சில நிமிடங்கள் நடக்க வேண்டும் என்று உறுதி கொள்ளுங்கள்.

நண்பர் அல்லது செல்ல பிராணிகளுடன்... வாக்கிங் செல்ல சோம்பேறித்தனமாக இருக்கும் போது உங்கள் நண்பர் மற்றும் செல்ல பிராணிகளுடன் வாக்கிங் செல்வதற்கு முன்னுரிமை கொடுங்கள். அதிகாலை அல்லது மாலை நேரம் நண்பர்களுடன் நீங்கள் செல்லும் வாக்கிங் உங்களை உற்சாகமாக வைக்கும்.

பார்க்கிங்: நீங்கள் அலுவலகம், ஷாப்பிங் என வெளியிடங்களுக்கு எங்கு சென்றாலும் பைக் அல்லது காரை பார்க் செய்யும் போது சற்று தூரத்தில் நடந்து சென்று வாகனத்தை எடுத்து செல்லும் வகையில் பாதுகாப்பான இடத்தில பார்க்கிங் செய்யுங்கள். இந்த பழக்கம் வாகனத்தை விட்டு நீங்கள் செல்லும் போது மற்றும் வாகனத்தை எடுத்து செல்லும் போது நீங்கள் குறிப்பிட்ட தூரம் நடப்பதை உறுதி செய்கிறது.

லஞ்சிற்கு பிறகு குட்டி வாக்கிங்: பெரும்பாலான நிறுவனங்கள் மதிய உணவை சாப்பிட 30 - 45 நிமிடங்கள் இடைவேளை வழங்குகின்றன. இந்த இடைவேளையை வாக்கிங் செல்ல பயன்படுத்தி கொள்ளலாம். 20 நிமிடங்களுக்குள் மதிய உணவை சாப்பிட்டு முடித்து விட்டு, மீதி இருக்கும் இடைவேளை நேரத்தில் மிதமான வாக்கிங் செல்வது தினசரி வாக்கிங் இலக்கை அடைய உதவும்.

போன் பேசும் போது நடக்கலாம்: வேலை நேரத்தில் பெரும்பாலும் 8 - 9மணி நேரம் உட்கார்ந்தே இருக்கும் சூழலில், மொபைலில் பிறருடன் பேசும் போது படுக்கையில் படுத்து கொண்டு அல்லது உட்கார்ந்து கொண்டு பேசாமல் வீட்டிற்குள் அல்லது மாடியில் நடந்து கொண்டே பேசலாம்.


 Click here to join whatsapp group for daily health tip

உடல் பருமனாக இருப்பது எதுவரை ஆரோக்கியமானது - எப்போது ஆபத்தாக மாறுகிறது?

October 31, 2022 0

 உலகம் முழுவதிலுமே உடல் பருமன் தீவிரமான பிரச்னைகளுக்கு ஆணிவேராக இருந்து வருகிறது. நீரிழிவு நோய், தைராய்டு கோளாறு, இதய நோய், எலும்பு தேய்மானம் என்று பல விதமான பாதிப்புகளுக்கு உடல் பருமன் ஆரம்ப புள்ளியாக இருக்கிறது. ஆனால் பலருக்கும் இயல்பிலேயே பூசினாற் போல உடல்வாகு கொண்ட, chubby ஆன தோற்றம் இதெல்லாம் இயல்பாகவே அமைந்திருக்கிறது. இவ்வாறு இருப்பவர்கள் மற்றும் குண்டாக இருப்பவர்கள் எல்லாருக்குமே நோய்களால் பாதிப்பு ஏற்படுவதில்லை. எந்த அளவுக்கு வரை உடல் பருமன் அல்லது பூசிய உடல்வாகு இருப்பது ஆரோக்கியமானது, எது ஆபத்தானது என்று இங்கே பார்க்கலாம்.

வளர்சிதை மாற்றம் ஆரோக்கியமாக இருந்தால், உடல் பருமன் ஆபத்தல்ல

உடலின் வளர்சிதை விகிதம் ஆரோக்கியமாக இருந்தால், உடல் பருமன் ஆபதல்ல என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மரிங்கோ QRG மருத்துவமனையின், இன்டர்னல் மெடிசின் துறையில் மூத்த ஆலோசகராகப் பணியாற்றி வரும் மருத்துவர் அனுராக் அகர்வால், இதைப்பற்றி விளக்கியுள்ளார். உடலில் கொழுப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை பாடி மாஸ் இன்டக்ஸ் என்பதம் மூலம் கணக்கிடலாம். BMI 30க்கும் மேல் இருந்தால், அதிக கொழுப்பும், வளர்சிதை மாற்ற விகித ரீதியாக ஆரோக்கியம் அற்றவர் என்று கருதப்படும்.

ஆனால், BMI அதிகமாக இருந்தாலும், மெட்டபாலிக் ஹெல்த்தி ஓபிசிட்டி (வளர்ச்சிதை மாற்ற விகிதத்தின் அடிப்படையில் ஆரோக்கியமான உடல்பருமன்) என்று வரும் போது, அதற்குரிய விதிகள் பொருந்தாது. இத்தகைய நபர்களுக்கு குறைவான வைஸ்சிரல் கொழுப்பு, அதிக சப்குடேனியஸ் கொழுப்பு, அதிக கார்டியோ ரெஸ்பிரேட்டரி திறன், சாதாரண இன்சுலின் உணர்திறன் உடன் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்ய முடியும், உடலில் அழற்சி ஏற்படும் காரணங்கள் ஆகியவை குறைவாக இருக்கும் என்று விளக்கினார்.

உடல் பருமன் வேறு சில நோய்களை ஏற்படுத்தலாம்

குருகிராமில் உள்ள மெடண்டா மருத்துவமனையின் அறுவை சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சைக்கான மூத்த ஆலோசகர், மருத்துவர் விகாஸ் சிங்க்ஹால் இதைப் பற்றி கூறுகையில், உடல் பருமனமாக இருப்பவர்களுக்கு மெடபாலிசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் எதுவும் இல்லை என்பதை, உடல்பருமன் ஆரோக்கியமானது என்று கருதக்கூடாது என்று தெரிவித்தார்.

உடல்பருமன் ஆரோக்கியமானது, ஆபத்தல்ல என்பதை தவறான கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ளக்கூடாது. வளர்ச்சிதை மாற்றம் சம்மந்தப்பட்ட அறிகுறிகள் இல்லை என்றாலும் கூட, இத்தகைய நபர்கள் இதய நோய், பக்கவாதம் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம். கார்டியோ வாஸ்குலார் நோய்களால் பாதிக்கப்படாமல் இருந்தால் கூட, கல்லீரல் வீக்கம், தூக்கமின்மை, எலும்புகள் மற்றும் ஜவ்வு பிரச்னைகள், மலட்டுத்தன்மை, மன ரீதியான பாதிப்புகள் ஆகியவை ஏற்படலாம் என்று தெரிவித்தார்.

எலும்புகள், நுரையீரல் பாதிக்கப்படும் அபாயம் அதிகம்

உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மெட்டபாலிசம் நன்றாக இருந்தாலுமே அவர்களுக்கு வேறு சில பிரச்சனைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கிறது. உதாரணமாக, நுரையீரல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். அதுமட்டுமல்லாமல் ஸ்லீப் அப்னியா என்று கூறப்படும் தூக்கம் தடைபடும் பிரச்சனை ஏற்படலாம். ஒபீசிட்டியால் நீரிழிவு, ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படவில்லை என்றால் கூட எலும்புகள் பலவீனம் மற்றும் எலும்புகளில் துளைகளைக் குறிக்கும் ஆஸ்டியோ-ஆர்த்தரைட்டிஸ் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது.

உடல் பருமன் ஏற்படாமல் தடுக்க, குறைக்க என்ன வழி?

உடல் பருமனைப் பொறுத்தவரை நீங்கள் எவ்வளவு கலோரிகள் சாப்பிடுகிறீர்கள் மற்றும் எந்த அளவுக்கு உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்ற இரண்டு அளவீடுகள் தான் முக்கியமானவை. சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளை குறைத்துக்கொண்டு நார்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது மற்றும் தினசரி குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது போதும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இவை இரண்டுமே உங்களுடைய இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும்.



Click here to join whatsapp group for daily health tip

உடலுக்கு ஆரோக்கியமா இனிப்பு? சர்க்கரை Vs வெல்லம்: இரண்டில் எது சிறந்தது?

October 31, 2022 0

 காலை காபி & டீ-யில் துவங்கி இரவு தூங்க செல்லும் முன் குடிக்கும் பால் வரை சர்க்கரையை நாம் அளவுக்கு அதிகமாகவே பயன்படுத்தி வருகிறோம். அதிலும் வெள்ளை வெளேரென்று இருக்கும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை தான் பலரது விருப்பமாக இருந்து வருகிறது.

எனினும் தினசரி நாம் எடுத்து கொள்ளும் அதிக சர்க்கரை அல்லது வெள்ளை சர்க்கரை ஹை பிளட் பிரஷர், எடை அதிகரிப்பு, நீரிழிவு, கொழுப்பு கல்லீரல் மற்றும் இதய நோய்கள் போன்ற பல உடல்நலப் பிரச்சனைகளின் அபாயங்களை அதிகரிக்கிறது. எனவே சர்க்கரை அல்லது சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரையை அதிகம் பயன்படுத்துவது பல்வேறு உடல்நல கோளாறுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சர்க்கரைக்கு பதில் வெல்லத்தை பயன்படுத்த பலரும் பரிந்துரைக்கிறார்கள்.

வெள்ளை சர்க்கரை என்பது பீட் அல்லது கரும்பு சர்க்கரையிலிருந்து தயாரிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையாகும். அதே நேரம் வெல்லம் சுத்திகரிக்கப்படாத கரும்பு சாற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. பொதுவாக சர்க்கரை கடுமையான செயல்முறைகள் மூலம் தயாரிக்கப்படுவதால் அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் போய்விடுகின்றன. ஆனால் வெல்லம் கரும்பு பாகை கொதிக்க வைத்து தயாரிக்கப்படுகிறது மற்றும் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல நிறைந்துள்ளன என கூறப்படுகிறது. இந்நிலையில் நாம் வெள்ளை சர்க்கரை அல்லது வெல்லம் எதை பயன்படுத்த வேண்டும்..? சர்க்கரையைத் தவிர்க்க வேண்டுமா? போன்ற பல கேள்விகளுக்கு பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் தனது சமீபத்திய இன்ஸ்டா போஸ்ட்டில் விளக்கம் அளித்துள்ளார்.

வெல்லம் சர்க்கரைக்கு மாற்று இல்லை. வீட்டில் தயாரிக்கப்படும் இனிப்புகளில் சர்க்கரைக்குப் பதிலாக வெல்லத்தை சேர்ப்பது, உணவுகளை சுவையாக மற்றும் ஆரோக்கியமானதாக மாற்றும் என்று பலர் நினைக்கலாம். இருப்பினும் நிபுணரின் கருத்துப்படி இது முற்றிலும் உண்மை இல்லை. வீடுகளில் வெல்லம் மற்றும் சர்க்கரையின் பயன்பாடு வெவ்வேறு சீசன்களின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

வெல்லம் அல்லது சர்க்கரை என்று கேப்ஷன் கொடுத்துள்ள போஸ்ட்டில் அவர் கூறியிருப்பதாவது, "சர்க்கரைக்கு பதில் வெல்லத்தை வெறுமனே இனிப்புகளில் பயன்படுத்துவது ஆரோக்கியமான தேர்வாக இருக்காது . நீங்கள் இவற்றை சீசனுக்கு ஏற்ப எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற வழிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் வெல்லம் குளிர்காலத்தில் உட்கொள்ள ஏற்றது, அதுவே கோடை என்றால் சர்க்கரை மிகவும் பொருத்தமானது என்று குறிப்பிட்டுளார்.

இதனிடையே மற்றொரு இன்ஸ்டா போஸ்ட்டில் சர்க்கரையைத் தவிர்ப்பது மற்றும் எந்த வகையான சர்க்கரை உடலுக்கு ஆரோக்கியமற்றது என்பதைப் பற்றி கூறி இருக்கிறார். பேக்கேஜ்ட் ஃபுட் மற்றும் அல்ட்ரா-ப்ராசஸ்டு ஃபுட்களில் இருக்கும் சர்க்கரையை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.


Click here to join whatsapp group for daily health tip

October 28, 2022

சர்க்கரை நோய் மற்றும் மாரடைப்பு வராமல் இருக்கணுமா? காலையில் இந்த ஒரு விஷயத்தை சரியா பண்ணுங்க போதும்!

October 28, 2022 0

 

காலையில் எழுந்த உடனேயே பெரும்பாலான மக்கள் கவலைப்படும் முதல் விஷயம் பெரும்பாலும் காலை உணவாகத்தான் இருக்கும்.

மேலும் நீங்கள் நாளின் தொடக்கத்தில் செய்யும் முதல் நல்ல வேலையாக உங்கள் காலை உணவை எடுத்துக்கொள்வதுதான் இருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் தூங்கும் போது சராசரியாக 6-8 மணிநேரம் உண்ணாவிரதம் இருந்து, நாளை சரியாகத் தொடங்குவதற்கான ஆற்றலைப் பெறுவதற்கு சாப்பிடுவது அவசியம்.

ஆரோக்கியமான மற்றும் நிறைவான காலை உணவு என்பது உங்கள் உடல் ஆற்றலை ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்களால் நிரப்பி மீண்டும் வேலைக்குச் செல்வதற்கு தேவையான ஊக்கத்தை அளிக்கிறது. காலை உணவை ஏன் அவசியம் உண்ண வேண்டும் அதனால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.


எடைக்குறைப்பிற்கு உதவும்

அதிக எடையைக் குறைக்க நீங்கள் ஆர்வமாக இருந்தால், காலை உணவைத் தவிர்ப்பது நீங்கள் செய்யும் பெரிய தவறாகும். எழுந்தவுடன் சக்தி நிறைந்த, ஆரோக்கியமான காலை உணவை உட்கொள்ளும் பழக்கம் நாள் முழுவதும் உங்கள் பசி வேதனையை கட்டுப்படுத்த உதவுகிறது. இது மேலும் அதிகமாக சாப்பிடுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது மற்றும் உங்களின் மற்ற உணவுகளுக்கு வரும்போது சத்தான உணவுகளை தேர்ந்தெடுக்க உதவுகிறது. எனவே நீங்கள் உங்கள் எடையைக் கண்காணிக்கிறீர்கள் என்றால், சத்தான காலை உணவுதான் உடல் பருமனைத் தடுக்க ஒரே வழி என்பதை மறந்து விடாதீர்கள்.

இதயத்திற்கு நல்லது

ஆரோக்கியமான காலை உணவு உங்கள் நாளை சிறப்பாக தொடங்குவது மட்டுமல்லாமல், உங்கள் ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதோடு, நீண்ட காலத்திற்கு இதய நோயால் பாதிக்கப்படும் அபாயத்தையும் குறைக்கிறது. காலை உணவைத் தவிர்ப்பவர்களுக்கு தமனிகள் அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இது அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் பல போன்ற பிற வாழ்க்கை முறை நோய்களுக்கான கதவைத் திறக்கிறது, இது பக்கவாதம் மற்றும் மாரடைப்பு அபாயத்திற்கு வழிவகுக்கிறது.

சர்க்கரை நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது

காலை உணவை உட்கொள்வது நீரிழிவு வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன, ஏனெனில் இது உங்கள் இரத்தத்தில் உள்ள இன்சுலின் ஸ்பைக்கைக் குறைக்கிறது மற்றும் இன்சுலின் எதிர்ப்பைத் தடுக்கிறது. மறுபுறம், வழக்கமாக காலை உணவை தவறவிடுவது, தொடர்ச்சியான இன்சுலின் எதிர்ப்பால் ஏற்படும் டைப் 2 நீரிழிவு நோயுடன் தொடர்புடையதாக இருக்கலாம். காலை உணவைத் தவிர்ப்பதன் மூலம், உங்கள் உடலின் இன்சுலின் அளவைக் குறைக்கவும், மதிய உணவிற்குப் பிறகு மீண்டும் கூர்மையாக அதிகரிக்கவும் அனுமதிக்கிறீர்கள். இது டைப் 2 நீரிழிவு நோயைப் பெறுவதற்கான மிகவும் சுலபமான வழியாகும்.

மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது

நீங்கள் காலை உணவை தவறாமல் சாப்பிட்டால், உங்கள் மூளைக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். மேலும் காலை உணவை தவறாமல் எடுத்துக் கொள்ளும்போது உங்கள் குறுகிய கால நினைவாற்றல் மேம்படுத்தப்படுவதை நீங்கள் கவனிப்பீர்கள், மேலும் செறிவு மற்றும் உற்பத்தித்திறன் அதிகரிப்பதை உணர்வீர்கள்.

ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்க உதவுகிறது

நீங்கள் காலை உணவைத் தவிர்க்கும் போதெல்லாம், நீங்கள் வழக்கத்தை விட அதிக பசியை உணர ஆரம்பிக்கிறீர்கள் மற்றும் ஜங்க் ஃபுட் மீது அடிக்கடி ஈர்க்கப்படுவீர்கள். இது சோர்வின் நேரடி விளைவாகும், பசி மற்றும் ஆற்றல் குறைவாக இருப்பதால் வருகிறது. எனவே உங்கள் இரத்த சர்க்கரை, இன்சுலின் மற்றும் ஆற்றல் அளவை சிறந்த முறையில் நிலையானதாக வைத்திருக்க எப்போதும் ஒரு ஆரோக்கியமான காலை உணவை உண்ணுங்கள். காலை உணவை உண்பது உங்கள் உடலின் குளுக்கோஸ் அளவை மீட்டெடுப்பதால், நாள் முழுவதும் மூளை சீராக செயல்பட உதவுகிறது. இந்த வழியில், சரியான நேரத்தில் காலை உணவை சாப்பிடுவதை வழக்கமாக்குவதன் மூலம், உங்கள் வளர்சிதை மாற்றத்தை சரியான முறையில் அதிகரிக்கிறீர்கள்.

வளர்சிதை மாற்றம்

நீங்கள் காலையில் எழுந்ததும், உங்கள் இரத்த சர்க்கரை அளவு குறைகிறது, எனவே உங்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவு தேவை, இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை கிக்ஸ்டார்ட் செய்ய உங்களுக்கு ஆற்றலை வழங்கும். உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க, எழுந்தவுடன் குறைந்தது 2 மணி நேரத்திற்குள் காலை உணவை சாப்பிட முயற்சிக்கவும்.



 Click here to join whatsapp group for daily health tip

October 25, 2022

டிஜிட்டல் ஸ்கிரீன்களில் மூழ்கியிருக்கும் உங்கள் கண்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி?

October 25, 2022 0

 இன்றைய சூழலில் டிஜிட்டல் ஸ்க்ரீன் பயன்படுத்தாத நபர்கள் உண்டா? அப்படி இருந்தால் அபூர்வம் தான். முன்பெல்லாம் அலுவலகப் பணி செய்பவர்கள் மட்டுமே டிஜிட்டல் ஸ்கிரீன்களை பயன்படுத்த வேண்டிய தேவை இருந்தது. ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. பில்லிங் கவுண்டர் முதல் குழந்தைகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் வரையில் எங்கு பார்த்தாலும் டிஜிட்டல் மயம் தான்.

கம்ப்யூட்டர், லேப்டாப் சவகாசமே இல்லாத சாமானிய நபர்கள் கூட மொபைல் ஃபோன்களில் மூழ்கிக் கிடக்கின்றனர். ஆக யார் ஒருவரும் டிஜிட்டல் ஸ்கிரீன் பயன்படுத்துவதை தவிர்க்க இயலாத சூழல் நிலவுகிறது. அதே சமயம், டிஜிட்டல் ஸ்க்ரீன்களை பார்ப்பதால் நம் கண்களில் ஏற்படக் கூடிய வறட்சி மற்றும் இதர பாதிப்புகள் குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

ஆண்டுதோறும் உலக அளவில் 2 மில்லியன் மக்கள் கண் சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனராம். குறிப்பாக இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்படுகின்றது. 50 வயதை ஒட்டியவர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களில் 66 சதவீதம் பேருக்கு காட்ராக்ட் பிரச்சினை வருகிறது. கண் நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும் க்ளகோமா பிரச்சினையாலும் பாதிக்கப்படுகின்றனர்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் மக்களுக்கு கூடுதலாக டயபெடிக் ரெடினோபதி என்னும் நோய் உடன் வந்து சேருகிறது. மேற்குறிப்பிட்ட நோய்கள் எல்லாமே கண் பார்வைக்கு சிக்கல் ஏற்படுத்தக் கூடியவை. ஆனால், டிஜிட்டல் ஸ்கிரீன்களை பார்ப்பதால் பார்வை இழப்பு என்பதெல்லாம் ஏற்பட்டு விடாது என்றாலும், கண் வலி மற்றும் வறட்சி போன்றவை ஏற்படும்.

சராசரியாக, ஒரு மனிதனின் கண்கள் நிமிடத்திற்கு 15 முறை இமையை சிமிட்டுகின்றன. ஆனால், டிஜிட்டல் ஸ்கிரீன்களை நாம் வைத்த கண் மாற்றாமல் பார்த்துக் கொண்டிருப்பதால் இந்த சிமிட்டல் வெகுவாகக் குறைந்து விடுகிறது. இதன் எதிரொலியாக கண் வறட்சி, அரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

என்னதான் தீர்வு

கண்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது என்பதற்காக இன்றைக்கு நாம் லேப்டாப்களையும், மொபைல் ஃபோன்களையும் ஓரம்கட்டி வைத்து விட முடியுமா? வெறும் பொழுதுபோக்கு அம்சங்களாக இருந்த காலம் போய் இப்போது நாம் வேலை செய்வதற்கான சாதனங்களாக செல்ஃபோன்களே கூட மாறி விட்டன.

கல்வி பயில, வர்த்தகம் செய்ய என நம் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்து விட்ட டிஜிட்டல் சாதனங்களை நாம் இனி புறம்தள்ள முடியாது. அதே சமயம் நம் கண்களை தற்காத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டாக வேண்டும். அதற்குத் தான் 20-20-20 என்ற தீர்வை மருத்துவர்கள் முன்வைக்கின்றனர்.

அதாவது, டிஜிட்டல் ஸ்கிரீன்களை பார்த்துக் கொண்டிருக்கும்போது 20 நிமிடத்திற்கு ஒருமுறை 20 நொடிகளுக்கு 20 அடி தூரத்தில் உள்ள பொருட்களின் மீது பார்வையை செலுத்த வேண்டும். இப்படி செய்வதால் நம் கண்களுக்கு வறட்சி ஏற்படுவது தடுக்கப்படும்.


சுற்றுலா செல்லும் போது அதிகமாக செலவாகிறதா..? பணத்தை மிச்சப்படுத்தும் சூப்பர் ஐடியாஸ்..!

October 25, 2022 0

 பயணம் செய்வது யாருக்கு தான் பிடிக்காது. பண்டிகை அல்லது விடுமுறை வந்துவிட்டாலே எங்காவது ஊர் சுற்றி பார்க்க கிளம்ப வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் தோன்றும். ஆனால் பயண டிக்கெட், தங்கும் வசதி, உணவு உள்ளிட்ட செலவுகளை கணக்கிட்டு பார்க்கும் போது பட்ஜெட் கட்டுப்படியாகாமல் அப்படியே விட்டு விடுவோம். அதேபோல் பலரும் தினமும் ஒரே மாதிரியாக செய்து வரும் வேலையை விட்டு, விட்டு ஜாலியாக உலகத்தை சுற்றி வர விரும்புவார்கள், ஆனால் அவர்களுக்கு இருக்கும் பொருளாதார சூழ்நிலை காரணமாக அது சாத்தியமில்லாமல் போய்விடும்.

ஆனால் பாலிவுட் நடிகையும் பிரபல மாடலுமான ஷெனாஸ் ட்ரெஷரி, தனது பயண ஆசைக்காக தொழிலை விட்டு வெளியேறி, தற்போது ஊர் சுற்றிப்பார்ப்பதையே முழு நேர தொழிலாக செய்து வருகிறார். தனது பயண அனுபவம், சுற்றுலாத்தளம் பற்றிய போட்டோ மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அவர், சுற்றுலாவிற்காக பணத்தை சேமிப்பது எப்படி என சில அட்வைஸ்களையும் கொடுத்துள்ளார்.

பயணத்தை முழு நேர வேலையாக செய்து வரும் ஷெனாஸ் இதுகுறித்து கூறுகையில், “ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திரையுலகை விட்டு விலகி, பயணம் செய்ய திட்டமிட்ட போது சம்பளத்திற்காக என்ன செய்யப்போகிறேன் என தெரியாது. ஆனால் பட்ஜெட் மற்றும் சேமிப்பு எனது கனவுகளை நனவாக்க உதவியது. எனவே அடுத்த முறை நீங்கள் பயணம் செய்ய திட்டமிடும் போது, பணத்தை எப்படி புத்திசாலித்தனமாக செலவழிக்கலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

1. பட்ஜெட் ப்ரெண்ட்லி தங்குமிடம்: 

விலையுயர்ந்த 5 நட்சத்திர ஓட்டலில் தங்கினால் தான் விடுமுறையை ஹேப்பியாக கழித்ததாக அர்த்தம் கிடையாது. புதுப்புது இடங்களை பார்ப்பது, புதிய மனிதர்களை சந்திப்பது, அங்குள்ளவர்களின் கலாச்சாரத்தை அறிந்து கொள்வது தான் பயணத்திற்கான மகிழ்ச்சியான அனுபவமாகும். எனவே பயணம் செல்லும் போது உங்கள் பட்ஜெட்டுக்குள் நல்ல நிலையில் உள்ள தங்கும் விடுதிகள் அல்லது ஓட்டல்களை தேர்வு செய்ய வேண்டும்.


2. சம்பளத்தை சேமியுங்கள்: 

வாழ்க்கை ஒரு மாதிரி போர் அடிக்கிறது... எங்காவது சுற்றுலா சென்று வந்தால் நன்றாக இருக்கும்... என யோசிக்கிறீர்களா?. அதற்கு முன்னதாக உங்கள் சம்பளம் அல்லது வருமானத்தில் இருந்து ஒரு மாதம் ஒரு குறிப்பிட்டத் தொகையை சேமித்து வைக்க வேன்டுமாம். ஆம், பயண செலவிற்காகவே தனியாக ஒரு கணக்கு தொடங்கி, வருமானத்தில் 10 சதவீதத்தை சேமித்து வைக்க வேண்டும்” என்கிறார் ஷெனாஸ் ட்ரெஷரி.


3. பட்ஜெட்டை பாலோ பண்ணுங்க: 

கஷ்டப்பட்ட சேர்த்துவைத்த பணத்தை செலவழிக்கும் முன்பு பட்ஜெட்டை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், அதில் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ளக்கூடாது என்றும் ஷெனாஸ் ட்ரெஷரி தெரிவிக்கிறார். “சுற்றுலா கிளம்பும் முன்பே மொத்த செலவையும் கணக்கிட்டு, பட்ஜெட்டை தயார் செய்து கொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையும் ஈவு, இரக்கம் காட்டாமல் பட்ஜெட்டை ஸ்ட்ரிக்டாக பாலோ செய்ய வேண்டும்” என்கிறார்.

4. செலலவு கண்காணிப்பு: 

பட்ஜெட்டை உருவாக்கினால் மட்டும் போதாது, செய்யும் ஒவ்வொரு செலவையும் கண்காணிக்க வேண்டும். இதனால் பயணத்தின் போது அதிகமாக செலவு செய்வதை முன்கூட்டியே அறிந்து, தவிர்க்க உதவும். தனிப்பட்ட முறையில் கணக்கு வழக்குகளை செல்போன் ஆப்கள் அல்லது நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்தோ கண்காணிக்கலாம்.

5. சேமிப்பு ஹேக்: 

விமான நிறுவனங்கள், கிரெடிட் கார்டுகள், ஹோட்டல்கள் போன்றவற்றால் வழங்கப்படும் பல்வேறு சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் பயண டிக்கெட்கள், ரூம் ஆகியவற்றை ஆன்லைன் அல்லது ஆப்கள் மூலமாக புக் செய்யும் போது கிரெடிட் பாண்ட்களை சேகரிப்பதும் தள்ளுபடிகள் பெற உதவும்.

6. அட்ஜஸ்ட்மெண்ட் அவசியம்: 

எப்போது சுற்றுலா செல்ல விரும்புவோர் சூழ்நிலைகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும். பட்ஜெட்டிற்குள் சுற்றுலா தளங்களை பார்வையிட விரும்பினால் ஆஃப் சீசன்களைத் தேர்வு செய்யலாம். இது தங்கும் இடம் உள்ளிட்ட அனைத்து பயண செலவுகளையும் குறைக்க உதவும். அதேபோல் சின்ன சின்ன வசதிகளை அட்ஜெஸ்ட் செய்து கொள்வதும் பயணத்தை மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றும்.

 Click here to join whatsapp group for daily health tip