Agri Info

Adding Green to your Life

November 6, 2022

உங்கள் காலை நேரத்தை மகிழ்ச்சியானதாக மாற்ற இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க..!

November 06, 2022 0

 ‘புத்தம் புது காலை’ என்ற பாடலோடு உங்கள் காலை அமைய வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் காலை பொழுதே கவலைகளோடும், புலம்பல்களோடும் தொடங்கினால் பின் இரவில் எப்படி நிம்மதியான உறக்கத்தை எதிர்பார்க்க முடியும்.  எனவே, உங்கள் காலை பொழுதை இனிமையாகவும், ஆரோக்கியமானதாகவும் தொடங்க கற்றுக் கொள்ளுங்கள்.

காலையில் தாமதமாக எழுந்தால் மன அழுத்தம் ஏற்படும்.  காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது போன்ற எளிய நடைமுறைகள்,  நாள் முழுவதும் ஏற்படும் பதற்றத்தை தடுக்கும்.உங்கள் அலாரம் அடிக்கும் போதே, அணைத்து விட்டு படுக்கையை வி்ட்டு எழுந்து இன்றைய நாளை தொடங்குங்கள்.  காலை எழுந்த உடன்  மொபைலை தேடாதீர்கள். மொபைல் போன் உங்களுக்கான நேரத்தை எடுத்துக்கொள்ளும். மொபைலை அலாரம் வைக்க பயன்படுத்தினால், அலாரத்தை ஆஃப் செய்து விட்டு , அங்கிருந்து எழுந்து விடுங்கள். இது போன்ற எளிமையான நடைமுறையை பழக்கமாக்கி கொண்டால் , நாள் முழுவதும் அமைதியாக அமைவதோடு, அதிக வேலை செய்யும் உத்வேகத்தையும் கொடுக்கும்.

காலையில் எழுந்த உடன் சிறிது தண்ணீர் குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். உடலிலுள்ள நச்சுகளை அவை வெளியேற்றிவிடும். காலை எழுந்தவுடன் காப்பி, டீ குடிப்பது உடலுக்கு தீங்காகும். மேலும் இந்த வகையான அசிட்டிக் வகைகளை தவிர்ப்பது நல்லது. தண்ணீரில் எலுமிச்சை கலந்து குடிப்பதால் , உடல் வலி, இரத்த அழுத்தம், புற்றுநோய், நீரிழிவு, ஆஸ்துமா போன்ற பலவற்றுக்கும் தீர்வு கிடைக்கும்.

அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், உடலில் புது இரத்தம் உற்பத்தியாகும். இப்படி புது இரத்தம் உடலில் உற்பத்தியானால், நோய்களின் தாக்கம் குறைந்து, உடல் பிரச்சனையில்லாமல் இருக்கும். இரத்தத்தில் உள்ள டாக்ஸின்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, சருமம் பொலிவோடும் ஆரோக்கியமாகவும் காணப்படும். இரத்த வெள்ளையணுக்கள் நோய்த்தொற்றுக்களை எதிர்த்து போராடி, உடலை பாதுகாக்கும். உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கப்பட்டு, உடலின் எடை குறையும்.

தண்ணீர் மிகவும் சிறப்பான மற்றும் உடலை சுத்தப்படுத்தும் பொருள். அத்தகைய தண்ணீரை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் போது, வாந்தி, புற்றுநோய், தொண்டை பிரச்சனைகள், கண் பிரச்சனைகள், சிறுநீராக பிரச்சனைகள், டிபி, வயிற்றுப்போக்கு, தலைவலி மற்றும் நாள்பட்ட மூட்டு வலி போன்ற நோய்கள் குணமாகும். 

க்ரீன் டீ யில் இருக்கும் ஃப்ளேவினாய்ட், ஆன்டி ஆக்ஸிடென்ட் உடலில் எதிர்ப்பு திறனை அதிகரிக்க்சச் செய்து, நச்சுக்களை வெளியேற்றுகிறது. குடல்களில் தங்கும் கழிவுகளை சுத்தமாக வெளியேற்றுகிறது. ஆகவே காலை நேரத்தை பசுமையான க்ரீன் டீ யுடன் தொடங்கலாம். அதன்பிறகு சிறிய அளிவலான உடற்பயிற்சி மிகவும் நல்லது. தசைகளை இளக்கி, நாள் முழுவதற்குமான சுறுசுறுப்பை இந்த உடற்பயிற்சி உருவாக்கும்.

உடற்பயிற்சியை முடித்த கையோடு குளியலறைக்கு ஓடாமல் மொட்டை மாடியிலோ, பால்கனியிலே அமர்ந்து அந்த அற்புதமான காலைப்பொழுதை உள்வாங்குங்கள். மேனியை தழுவிச் செல்லும் பூங்காற்றையும், கண்களை கூசாத காலை உதயத்தையும் ரசியுங்கள். அப்படியே இன்று நாள் முழுவதும் என்னவெல்லாம் செய்யப்போகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள். ஒரு 5 நிமிடத்தை ஒதுக்கி தியானம் செய்யலாம், இல்லையேல் உங்களுக்குப் பிடித்த ஸ்லோகங்களைக் கூட சொல்லலாம் தவறில்லை. இவை மனதை அமைதிப்படுத்தி அடுத்தக்கட்டத்திற்கு நம்மை நகர்த்த சக்தி தரும்.

காலை நேரத்தில் நாம் தவிர்க்க கூடாத விஷயங்களில் மிகவும் முக்கியமானது காலை உணவு. காலை வேளையில் உணவை தவிர்க்காமல் சாப்பிடுவதால், இதயம், ஜீரண மண்டலம் மற்றும் எலும்பு ஆகியவையும் ஆரோக்கியமாக இருக்கும். காலை உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது, அது ஜீரண சக்தியை அதிகரிக்கும். காலை உணவை முறையாக உட்கொள்பவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு இயல்பாக இருப்பதால், இடையில், பசி தோன்றாது. காலையில் அதிக கொழுப்பு நிறைந்த உணவை சாப்பிடும் போது, அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதற்கு பதிலாக, மந்த நிலையை உருவாக்கி விடும்.

காலை எழுந்தில் இருந்து இத்தனை விஷயங்களையும் திட்டமிட உங்களுக்கு 8 மணி நேர உறக்கம் அவசியமானது மட்டுமல்ல கட்டாயமானதும் கூட. நாள் முழுக்க கடுமையாக உழைப்பவர்கள் இரவில் எட்டுமணி தூக்கத்தை மேற்கொண்டால் உடலுக்கு போதிய ஓய்வு கிடைக்கிறது.  இதனால் உடல் புத்துணர்ச்சி மற்றும் சுறுசுறுப்பு பெறுகிறது. அதிக  நேரம் மூளைக்கு வேலை கொடுப்பவர்கள் எட்டு மணி நேரம் தூங்கினால் மூளையின் செல்கள் சீரான இடைவெளியில் ஓய்வு பெறுகிறது.  இது உடல் புத்துணர்ச்சி பெறுவதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் உதவி செய்கிறது.   தினந்தோறும் எட்டு மணி நேரம் தூங்கினால் வாழ்நாளின் அளவு நீடிக்கிறது.

நமது உடலில் லெப்டின் என்னும் ஹார்மோன் உள்ளது.  இந்த ஹார்மோன் தான் நாம் பசியுடன் இருக்கிறோமா, இல்லையா என்பதை நமக்கு உணர்த்துகிறது.  ஒருவர் சரியாக தூங்காவிட்டால் இந்த ஹார்மோனின் அளவு குறைந்துவிடும்.  மற்றும் அதிகப்படியான பசியையும் தூண்டும்.  இதனால் நிறைய உணவை சாப்பிட வைப்பதுடன் பருமனாக்கி விடும்.  இதுவே நல்ல தூக்கத்தை மேற்கொண்டால் லெப்டின் அளவு சீராக இருக்கும். ஒருவர் தினந்தோறும் எட்டுமணி நேரம் தூங்கினால் அவர் மன அழுத்தத்திலிருந்து  விடுபடலாம்.

தூக்கமின்மையால் ஒருவர் துன்பப்பட்டால் அவரால் எந்த ஒரு காரியத்தையும் ஆர்வத்துடனும் கவனத்துடனும் செய்ய முடியாது.  ஒருவரின் செக்ஸ் வாழ்க்கையை தூக்கமின்மை பாதிப்படையச் செய்கிறது.  எப்படியென்றால் சரியான அளவில் தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருக்கும் ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவு பாதிப்படைகிறது.  இதனால் செக்ஸ் வாழ்க்கை தடைபடுகிறது.  எனவே தினந்தோறும் எட்டு மணி நேர தூக்கத்தை மேற்கொண்டு, மனைவியுடன் சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருங்கள்.இது போன்ற சின்னி சின்ன விஷயங்களை பின்பற்றினாலே போதும் உங்களுடைய ஒவ்வொரு நாளும் இனிமையான நாளாக அமையும்.. அப்புறம் என்ன கூலா ஜாலியா வேலையை பாருங்க..

November 5, 2022

8ம் வகுப்பு தேர்ச்சி போதும்: மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்

November 05, 2022 0

 சேலம் மாவட்டத்தில் வரும் 26ம் தேதி ஓமலூர் பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாபெரும் முகாமினை  சேலம் மாவட்ட நிர்வாகமும், அம்மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையமும் இணைந்து நடத்துகின்றன.   

இந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் சேலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 300-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித் தகுதி உள்ளவர்களும் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த வேலைவாய்ப்பு முகாமின் முன்னேற்பாடு பணிகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு வேலைவாய்ப்புகள் அளிக்கவுள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் வருகைதரும் வேலைநாடுநர்களுக்குத் தேவையான பேருந்து வசதிகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் வழங்கிட உறுதி செய்யுமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


Click here to join WhatsApp group for Daily employment news  

ஆயத்த ஆடை தொழிலில் விருப்பமா? ரூ.3 லட்சம் வரை மானியம்- விண்ணப்பிக்க தகுதிகள் என்ன?

November 05, 2022 0

 ஆயத்த ஆடை உற்பத்தி அலகு (Ready-made garment manufacturing)அமைக்க ரூ.3.00 இலட்சம் வரை மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

யார் விண்ணப்பிக்கலாம்: ஆயத்த ஆடை உற்பத்தி அலகு தொழிலில் ஈடுப்பட்டு வரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் இதற்கு விண்ணப்பிக்கலாம். 10 நபர்கள் கொண்ட குழுவிடம் இருந்து  மட்டுமே விண்ணப்பபங்கள் பெறப்படும்.

மானியம்:  ஆயத்த ஆடை உற்பத்தி அலகு அமைக்க தேவைப்படும் உபகரணங்கள் வாங்க அதற்கான நிதி பின்வருமாறு வழங்கப்படும்.

Single Needle machine(5) ரூ.100000/- 
Over lock machine -(1)ரூ. 30000/-
Cutting machine (1)ரூ. 15000/-
Cutting table (1)ரூ. 15000/ ,
Industrial ironing table (1)ரூ.  30000/-,
இடைநிகழ்செலவினம் (Incident ant Charges)ரூ.  50000/-,
பணி மூலதனம் (Working capital)ரூ. 50000/-
ஆக மொத்தம் ஒருகுழுவிற்குரூ. 3 லட்சம்

இதர பொது நிபந்தனைகள்: 

  • குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயதுவரம்பு 20 ஆகும்.
  • குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் (Ministry of Micro, small and medium enterprise) துறை மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும்
  • விதவை, கணவானால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கு முன்னுரிமைஅளிக்கப்படும்.
  • 10 நபர்களை கொண்ட ஒருகு ழுவாக இருத்தல் வேண்டும்.
  • 10 நபர்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருக்க வேண்டும்.
  • குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர்  சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
  • குழுவில் உள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் 1 இலட்சத்திற்குமிகாமல் இருத்தல்வேண்டும்.

  • எனவே, இத்திட்டத்தில் பங்கு கொள்ள ஆர்வமாக உள்ள இத்தொழிலில் முன் அணுபமுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த மக்கள் தகுதியான குழுக்களை அமைத்து குழுவின் மூலம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்று பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Click here to join WhatsApp group for Daily employment news  

சுயமாக தொழில் தொடங்க விரும்புகிறீர்களா..? உங்களுக்கான செய்திதான் இது..

November 05, 2022 0

 சுயமாக புதிய தொழிலை எவ்வாறு தொடங்குவது என்பது குறித்த விழிப்புணர்வு முகாமினை தமிழ்நாடு அரசின்  தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (Entrepreneurship Development and Innovation Institute)  வரும் 9ம் தேதி நடத்த இருக்கிறது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் கலந்து கொள்ளலாம்: தொழில் தொடங்க விரும்பும்  18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம்.

முகாம் நடைபெறும் நாள்: சென்னை தொழில் முனைவோர் மேம்பாட்டு வளாகத்தில் வரும் 9ம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும்.

இது, முதற்கட்ட பயிற்சியாகும். சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலை தெரிவு செய்வது எப்படி, தொழில் துவங்கவிருக்கும் முனைவோருக்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியன பற்றி இம்முகாமில் விவரிக்கப்படும். பயிற்சி முகாமின் இறுதியில் தொழில் தொடங்க விரும்பும் நபர்களின் பெயர்கள் பெறப்பட்டு அவர்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு அழைக்கப்படுவார். அடுத்த கட்டமாக 3 நாள் திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு அவர்களுக்கு நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும்.

மேலும், மாவட்ட தொழில் மையங்களோடு இணைந்து 5 நாள் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சிகளும் EDII வழங்கி வருகிறது. இப்பயிற்சி மூலம் நிதி உதவி பெறும் திட்டங்களில் குறிப்பிட்டுள்ள கட்டாய பயிற்சியிலிருந்து தற்போதைய விண்ணப்பதாரர்கள்  விலக்கு பெறலாம். எனவே, அரசு திட்டங்கள் பற்றிய விளக்கங்களும் அதன் மூலம் பயன்பெறும் வழிவகைகளும் ஏற்படுத்தி தரப்படும் என்று சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு வளாகம் தெரிவித்துள்ளது.

மேலும், விவரங்களை பெற , தொலைபேசி எண்: 044-22252081/82/83

04422252085 .இந்த மையத்தின் மின்னஞ்சல் முகவரி :  asstd@editn.in | admin@editn.in ஆகும்.

Click here to join WhatsApp group for Daily employment news  

November 2, 2022

தமிழக வருவாய் துறையில் 5 ஆம் வகுப்பு படித்தவருக்கான வேலைவாய்ப்பு – 2748 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.35,100/-

November 02, 2022 0
தமிழக வருவாய் துறையில் 5 ஆம் வகுப்பு படித்தவருக்கான வேலைவாய்ப்பு – 2748 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.35,100/-

தமிழ்நாடு வருவாய்த் துறையில் இருந்து முன்னதாக வேலைவாய்ப்பு பற்றிய செய்தித்தாள் அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பின் படி, தமிழகம் முழுவதும் இருந்து 2748 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன் படி, சில மாவட்டங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதற்கான முழு விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 10.10.2022 முதல் 07.11.2022 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்தமிழ்நாடு வருவாய்த்துறை
பணியின் பெயர்கிராம உதவியாளர்
பணியிடங்கள்2748
விண்ணப்பிக்க கடைசி தேதி07.11.2022
விண்ணப்பிக்கும் முறைOnline
தமிழ்நாடு வருவாய்த்துறை காலிப்பணியிடங்கள்:

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2748 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

  • கோயம்புத்தூர் – 3 பணியிடங்கள்
  • கிருஷ்ணகிரி – 27 பணியிடங்கள்
  • தருமபுரி – 22 பணியிடங்கள்
  • அரியலூர் – பல்வேறு
  • திருப்பத்தூர்‌ – 31 பணியிடங்கள்
  • திருவாரூர்‌ – 91 பணியிடங்கள்
  • சென்னை – 12 பணியிடங்கள்
கிராம உதவியாளர் கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழில் நன்றாக எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வருவாய்த் துறை தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் படித்தல்‌, எழுதுதல்‌ திறனறித்‌ தேர்வு மற்றும்‌ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். படித்தல்‌, எழுதுதல்‌ திறனறித்‌ தேர்வு 30.11.2022 அன்றும் நேர்காணல் ஆனது 15.12.2022 முதல் 16.12.2022 வரையிலும் நடைபெற உள்ளது.

உதவியாளர் வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு மாதம் ரூ.11,100 முதல் ரூ.35,100/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவம்‌ தேர்வு முறை குறித்த இதர விவரங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்‌ மற்றும்‌ சம்மந்தப்பட்ட வருவாய்‌ வட்டாட்சியர்‌ அலுவலகங்களிலிருந்தும்‌ பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 07.11.2022 மாலை 5:45 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Apply Online

Download Kinathukadavu, Coimbatore Notification 2022 Pdf

Download Bargur, Krishnagiri Notification Pdf

Download Hosur, Krishnagiri Notification 2022 Pdf

Download Denkanikottai, Krishnagiri Notification 2022 Pdf

Download Tirupathur Notification 2022 Pdf

Download Ariyalur Notification 2022 Pdf

Download Dharmapuri Notification 2022 Pdf

Download Tiruvarur Notification 2022 Pdf

Download Chennai Notification 2022 Pdf

Download Chengalpattu Notification 2022 Pdf

Download Cuddalore Notification 2022 Pdf

Download Dindigul Notification 2022 Pdf

Download Erode Notification 2022 Pdf

Download Kallakurichi Notification 2022 Pdf

Download Kanchipuram Notification 2022 Pdf

Download Karur Notification 2022 Pdf

Download Madurai Notification 2022 Pdf

Download Mayiladuthurai Notification 2022 Pdf

Download Nagapattinam Notification 2022 Pdf

Download Ooty Notification 2022 Pdf

Download Namakkal Notification 2022 Pdf

 


Click here to join WhatsApp group for Daily employment news  

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை..ரூ.60,000 சம்பளம் - விண்ணப்பிக்க இன்னும் 3 நாட்களே உள்ளது

November 02, 2022 0

 

அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் துறையில் பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தில்  (Centre for Climate change and Disaster management)தொடங்கியுள்ள புதிய திட்டத்தில் வேலை செய்ய ஆட்கள் தேவைப்படுகின்றனர். அந்த பணிக்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க இன்னும் 3 நாட்களே உள்ளது. பணியின் முழு விவரத்தை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

பணியின் விவரங்கள் :

பணியின் பெயர் காலியாகவுள்ள இடங்கள்  சம்பளம்
Project Scientist3ரூ.60,000/-
Project Associate II2ரூ.50,000/-
Project Assistant1ரூ.15,000/-

தேவைப்படும் பிரிவுகள்:

பணியின் பெயர்பிரிவு
Project ScientistCoastal Ecosystem, Urban Habitat, Geospatial Technology.
Project Associate IIUrban Habitat, Geospatial Technology.

பல்கலைக்கழக பணிக்கான கல்வித் தகுதி:

Project Scientistசம்பந்தப்பட்ட துறையில் Ph.D or M.E/M.Tech/M.Sc
Project Associate IIசம்பந்தப்பட்ட துறையில்  M.E/ M.Tech/M.Sc
Project AssistantB.Com/BCA

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்துகொண்டு பூர்த்தி செய்து தபால் மூலம் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் தேவையாக நகல்களுடன் அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் மற்றும் அறிவிப்பிற்கு :  https://www.annauniv.edu/

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

The Director, Centre for Climate Change and Disaster Management, Anna University, Chennai - 600 025.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 05.11.2022

Click here to join WhatsApp group for Daily employment news  

November 1, 2022

காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து பருகுவது நல்லதா?

November 01, 2022 0

 காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீருடன் தேன், எலுமிச்சை சாறு கலந்து பருகும் பழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள்.

 எலுமிச்சையில் வைட்டமின் சி, பிளாவனாய்டுகள், பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளன. தேன், காயத்தை குணப்படுத்துவதற்கும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் உதவக்கூடியது. எனினும் இது எல்லோரும் பருகுவதற்கு ஏற்ற பானம் இல்லை என்று ஆயுர்வேதம் கூறுகிறது. இதுபற்றி ஆயுர்வேத நிபுணர் டாக்டர் டிக்சா பாவ்சார் கூறுகையில், ''எலுமிச்சை சாறு, தேன் கலந்த நீர் உடலில் உள்ள கொழுப்பை உருக்குவதற்கு உதவும். ஆனால் இது எல்லோருக்கும் பொருந்தாது'' என்று எச்சரிக்கை விடுக்கிறார்.

''காலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு, தேன் சேர்த்து பருகுவது உடல் எடையை குறைக்க உதவும் என்பது பெரும்பாலானோர் கேள்விப்பட்ட விஷயம். ஆனால் உங்களில் எத்தனை பேர் இதை நம்புகிறீர்கள்? 

இந்த பானத்தை பருகியவர்களில் சிலர் தனக்கு உடல் எடை குறைந்திருப்பதாக கூறுகிறார்கள். சிலர் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்கிறார்கள். ஒருசில பக்கவிளைவுகளை அனுபவித்ததாக சிலர் கூறுகிறார்கள்'' என்பவர், இந்த பானத்தை பருகுவதால் ஏற்படும் நன்மைகளையும், சிலருக்கு ஏற்படும் பக்கவிளைவுகளையும் பகிர்ந்து கொள்கிறார். 

நன்மைகள்
 * எலுமிச்சை மற்றும் தேன் கொழுப்பை எரிக்க, உருக வைக்க உதவும். ஆனால் இந்த பானத்தை பருகுபவர்கள் உடற்பயிற்சி செய்பவர்களாக இருக்க வேண்டும். உணவு விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.
* இந்த பானம் கல்லீரலில் சேரும் நச்சுத்தன்மையை போக்க உதவும். * அடிவயிற்றில் கொழுப்பு சேருவதை தடுக்கும். உடல் எடையை குறைப்பதற்கும் உதவும். 

யாரெல்லாம் பருகக்கூடாது? 
பலவீனமான பற்கள், பலவீனமான எலும்புகள், வாய் புண்கள் போன்றவை இருந்தால் இந்த பானத்தை பருகக்கூடாது. கீல்வாதம், அசிட்டிட்டி பிரச்சினை கொண்டவர்களும் உட்கொள்ளக்கூடாது. 

கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்: 
1. தண்ணீர் மிகவும் சூடாக இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் தேனை சூடான நீரில் சேர்த்தால் நச்சுத்தன்மை கொண்டதாக மாறிவிடும். தண்ணீர் ஓரளவுக்கு சூடு குறைந்து வெதுவெதுப்பாக இருக்கும் சமயத்தில்தான் தேன் கலக்க வேண்டும். ஒரு டேபிள்ஸ்பூனுக்கு அதிகமாக தேன் சேர்ப்பதும் கூடாது.

2. எலுமிச்சை பழத்தில் பாதியைத்தான் பயன்படுத்த வேண்டும். உங்கள் உடலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றால் முழுப்பழத்தையும் சாறு பிழிந்து கொள்ளலாம். 

3. ஆனால் இந்த பானம் உங்கள் உடலுக்கு ஒத்துக்கொள்கிறதா? என்பதை சில நாட்கள் பரிசோதித்து பார்க்க வேண்டும். ஏதேனும் அசவுகரியத்தை ஏற்படுத்துகிறதா? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 
எப்படி கண்டறிவது? இந்த பானத்தை பருகியதும் எந்த அசவுரியமும் ஏற்படாது. குறிப்பாக நெஞ்செரிச்சல் உண்டாகாது. பற்களில் கூச்சமோ, புளிப்பு தன்மையோ தென்பட்டால் வாய் புண்ணுக்கு வழி வகுத்துவிடும். ஏதேனும் வித்தியாசமாகவோ, சங்கடமாகவோ, உணர்ந்தால் இந்த பானத்தை தவிர்க்க வேண்டும்.

பிளஸ்2 முடித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு HCL-ல் பணிபுரிய வாய்ப்பு - பயிற்சியுடன் கூடிய வேலை!

November 01, 2022 0

 2021 அல்லது 2022 ஆண்டுகளில் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு HCL, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம் இணைந்து வேலைவாய்ப்புடன் கூடிய ஓராண்டு பயிற்சி திட்டத்தை வழங்குகின்றனர். இந்த திட்டத்தில் சேர அக்டோபர் 28 முதல் 30-ம் தேதிகளில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முகாம் நடத்தப்படவுள்ளது.

2021-2022 – ஆம் ஆண்டு 12-ம் வகுப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, HCL நிறுவனம் பயிற்சியோடு திறன் மேம்பாடு வாய்ப்புகளை வழங்க அரசு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

தமிழக அரசின் “நான் முதல்வன்” திட்டத்தின் வாயிலாகத் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், அரசுப் பள்ளி படித்த மாணவர்கள் 2,000 நபர்களுக்கு HCL Techbee ”Early Career Program”க்கான பயிற்சிக் கட்டணம் முழுவதையும் வழங்குகின்றது. இத்திட்டத்தின் வாயிலாக மாணவர்களுக்கு வாய்ப்புகளையும் வழங்குவதுடன் திறன்களை மேம்படுத்த உதவுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு:

தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் பயிற்சியோடு HCL Technologies-ல் கீழ்க்கண்ட முழுநேர பணிவாய்ப்பை வழங்குகின்றது.

Internship பயிற்சியின்போது 7வது மாதம் முதல், மாதம்தோறும் ரூபாய் 10,000/- உதவித்தொகையைப் பெறலாம்.

பணியில் சேர்ந்தவுடனே துவக்க நிலை ஊதியமாக ஆண்டுக்கு ரூபாய் 1.70 லட்சம் முதல் 2.20 லட்சம் வரை வழங்கப்படும் (பணிநிலைக்கு ஏற்றாற்போல்)

HCL Technologies – ல் பணிபுரிந்து கொண்டே உயர்கல்வியைத் துவங்குவதற்கு BITS Pilani, Amity மற்றும் SASTRA பல்கலைக்கழகங்களில் வாய்ப்பை பெற்றுத் தருகின்றது.

மேலும் அவர்களின் கல்விக் கட்டணத்தின் ஒரு பகுதியை HCL Technologies நிறுவனம் வழங்குகின்றது. மேலும் இத்திட்டமானது மாணவர்கள் சிறுவயதிலேயே உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் தங்கள் பணியினை துவங்க வாய்ப்பளிக்கின்றது.

மாநிலம் முழுவதிலும் இந்த HCL “Techbee”திட்டத்தின் தேர்வு முகாமினை அக்டோபர் 28 முதல் 30-ம் தேதி வரை, சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. HCL Techbee ”Early Career Program”மில் மென்பொருள் வடிவமைப்பு, அனலிஸ்ட், டிசன் என்ஜீனியர், டேடா என்ஜீனியர், சம்போர்ட் மற்றும் பாரஸ்சஸ் அசோசேட், சர்வீஸ் டெஸ்க் மற்றும் டிபிஒ பணிகளுக்கான பயிற்சி அளிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிரிவில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை – 88079 40948. மதுரை – 9788156509. திருநெல்வேலி – 98941 52160. திருச்சி – 94441 51303. கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர்– 89032 45731, 98655 35909.


Click here to join WhatsApp group for Daily employment news  

IBPS SO 2022: வங்கி வேலைவாய்ப்பு.. 710 காலியிடங்கள்..! - உடனே விண்ணப்பியுங்கள்

November 01, 2022 0

வங்கி பணியாளர் தேர்வாணையம் ஆனது SO பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை 30.09.2022 அன்று வெளியானது. அதில் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய வங்கிகளில் காலியாகவுள்ள SO பணியிடங்களை நிரப்பவதற்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளன. பணியின் முழு விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் முறையை இதில் தெரிந்துகொள்ளுங்கள்.

பணியின் முழு விவரம்:

IBPS SO காலிப்பணியிடங்கள்:

பணியில் பெயர்இடங்கள்
I.T. Officer (Scale-I)44 பணியிடங்கள்
Agricultural Field Officer (Scale I)516 பணியிடங்கள்
Rajbhasha Adhikari (Scale I)25 பணியிடங்கள்
Law Officer (Scale I)10 பணியிடங்கள்
HR/Personnel Officer (Scale I)15 பணியிடங்கள்
Marketing Officer (Scale I)100
மொத்தம்710

விண்ணப்பிக்க வயது வரம்பு :

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

IBPS பணியிடங்களுக்கான கல்வித் தகுதி:

பணியின் பெயர்அனுபவம்கல்வித்தகுதி
I.T. Officer(Scale-I)Min- 20 YearsMax-30 Yearsa) 4 year Engineering/ Technology Degree in Computer Science/ ComputerApplications/ Information Technology/ Electronics/ Electronics & Telecommunications/ Electronics & Communication/ Electronics &InstrumentationORb) Post Graduate Degree in Electronics/ Electronics & Tele Communication/Electronics & Communication/ Electronics & Instrumentation/ ComputerScience/ Information Technology/ Computer ApplicationsORGraduate having passed DOEACC ‘B’ level
AgriculturalField Officer(Scale I)Min- 20 YearsMax-30 Years4 year Degree (graduation) in Agriculture/ Horticulture/Animal Husbandry/Veterinary Science/ Dairy Science/ Fishery Science/ Pisciculture/ Agri.Marketing & Cooperation/ Co-operation & Banking/ Agro-Forestry/Forestry/Agricultural Biotechnology/ Food Science/ Agriculture Business Management/Food Technology/ Dairy Technology/ Agricultural Engineering/ Sericulture
RajbhashaAdhikari(Scale I)Min- 20 YearsMax-30 YearsPost Graduate Degree in Hindi with English as a subject at the degree(graduation) levelORPost graduate degree in Sanskrit with English and Hindi as subjects at thedegree (graduation) level.
Law Officer(Scale I)Min- 20 YearsMax-30 YearsA Bachelor Degree in Law (LLB) and enrolled as an advocate with Bar Council
HR/Personnel Officer(Scale I)Min- 20 yearsMax- 30 yearsGraduate and Two Years Full time Post Graduate degree or Two Years Fulltime Post Graduate diploma in Personnel Management / Industrial Relations/HR / HRD/ Social Work / Labour Law.
MarketingOfficer(Scale I)Min- 20 yearsMax- 30 yearsGraduate and Two Years Full time MMS (Marketing)/ Two Years Full timeMBA (Marketing)/ Two Years Full time PGDBA / PGDBM/ PGPM/ PGDMwith specialization in Marketing

IBPS SO தேர்வு செயல் முறை:

காலியாகவுள்ள இடங்கள் நிரப்பும் பணித் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு படி நடக்கும். இரண்டு கட்ட தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

  • Preliminary Examination
  • Main Examination
  • Interview

IBPS SO விண்ணப்பிக்கும் முறை:

பணிக்குத் தகுதியானவர்கள் ஆன்லைனில் https://ibpsonline.ibps.in/crpsoxioct22/என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் காலியாகவுள்ள வங்கிகள்:

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 21.11.2022.

மேலும் தகவலுக்கு : https://ibpsonline.ibps.in/crpsoxioct22/

Click here to join WhatsApp group for Daily employment news  

தேர்வில்லாத வேலை... மத்திய அரசின் ஹெலிகாப்டர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்கும் முறை!

November 01, 2022 0

 மத்திய அரசின் கீழ் இயங்கும் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் ( BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED) அறிவிப்பில் பவன் ஹான்ஸ் லிமிடெட்  நிறுவனத்தில் காலியாகவுள்ள Maintenance Supervisor, Operation Assistant, Duty Electrician/operator Semi - Skilled, Station Co-ordinator, RCS Co-didinator பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எப்படி விண்ணப்பிப்பது, தகுதிகள் குறித்து இதில் தெரிந்துகொள்ளுங்கள். 

பணியின் விவரங்கள்:

ஹெலிகாப்டர் நிறுவனமான பவன் ஹான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பல்வேறு பகுதியில் உள்ள நிலையங்களில் காலியாகவுள்ள இடங்கள்.

பணியின் பெயர்காலி இடங்கள்
 Maintenance Supervisor (Skilled)5
Operation Assistant (Skilled)5
Duty Electrician/operator Semi - Skilled5
Station Co-ordinator (Skilled)5
RCS Co-ordinator (Skilled)1

கல்வித்தகுதி:

Maintenance Supervisor (Skilled) பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில்  பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 3 வருடம் அனுபவம் தேவை.

Operation Assistant (Skilled) பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில்  பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 3 வருடம் Helliport /Airport, liasoning & co-ordination, and handling of passengers etc பிரிவுகளில் அனுபவம் தேவை.

Duty Electrician/operator Semi - Skilled பணிக்கு 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் எலெக்டிரிசன் படிப்பில் 2 வருடம் ஐடிஐ அல்லது டிப்லோமோ படித்திருக்க வேண்டும். 3 வருடம் அனுபவம் வேண்டும்.

Station Co-ordinator பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில்  பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். ஒரு வருட அனுபவம் வேண்டும்.

RCS Co-ordinator பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். ஒரு வருட அனுபவம் வேண்டும்.

வயது வரம்பு :

Maintenance Supervisor,Operation Assistant,Duty Electrician/operator Semi - Skilled பணிகளுக்கு விண்ணப்பிற்பதர்க்கு  28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Station Co-ordinator,RCS Co-ordinator பணிகளுக்கு விண்ணப்பிக்க  25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

விண்ணப்பதார்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பதார்களில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரிவிக்கப்படுவர்.

சம்பளம்: 

ரூ. 17,446/- முதல் ரூ. 22,516/- வரை

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

விண்ணப்பிக்க வேண்டிய தளம்:https://www.becil.com/careers

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 20.11.2022.

மேலும் விவரங்களுக்கு : https://www.becil.com/

Click here to join WhatsApp group for Daily employment news