Agri Info

Adding Green to your Life

November 11, 2022

10ம் வகுப்பு தேர்ச்சி போதும் : சென்னை அஞ்சல் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

November 11, 2022 0

 சென்னையில், வரும் 25ம் தேதி அஞ்சல் ஆயுள் காப்பீட்டு மற்றும் கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனை முகவர்களுக்கான நேர்காணல் நடைபெறுகிறது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை மத்திய கோட்டத்தின் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர்  திவ்யா சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

அஞ்சல் ஆயுள் காப்பீட்டு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்கள் தேர்வுக்கு நவம்பர் 25-ல் நேர்காணல் நடைபெறுகிறது.

தேவையான தகுதிகள்:

கல்வி தகுதி: குறைந்தது பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18-லிருந்து 50 வரை

பிரிவுகள்: சுய தொழில் செய்யும் / வேலையில்லா இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள்/ முகவர்கள், அங்கன்வாடி மற்றும் மஹிளா மண்டல் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதிகள்: ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் உள்ளவர்கள், கணினிப் பயிற்சி உள்ளவர்கள் / சொந்தப்பகுதி பற்றி நன்கு அறிந்தவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் முகவர்களாக இருப்பவர்கள், அஞ்சல் அயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதியில்லை.

மேற்கண்ட தகுதியுடையவர்கள் மூன்று புகைப்படத்துடன் (பாஸ்போர்ட் அளவு), அசல் மற்றும் இரண்டு நகல் - வயதுச்சான்று, முகவரிச்சான்று மற்றும் கல்விச்சான்றுடன் அனுகவும். நேர்காணலுக்கு பின் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஐந்தாயிரம் ரூபாய்க்கு தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திரத்தை பணப் பாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும்.

இந்த நேர்காணல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை முகவர்கள் மூலம் விற்பனை செய்வதற்காக மட்டுமே நடத்தப்படுகிறது. முகவர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பிடிக்கும் பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை/கமிஷன் மட்டுமே வழங்கப்படும்.

முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில்,. விருப்பமுள்ளவர்கள் மேற்காணும் தகுதியை பெற்றிருப்பின் எண் 2, சிவஞானம் சாலை, தியாகராய நகர், சென்னை 600017 இல் (பாண்டி பஜார் அருகில்) உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில் 25.11.2022 அன்று 10.00 மணிக்கு நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news  

அதிகப்படியான மன அழுத்தத்தினால் உடல் எடை கூடுமா? மருத்துவர்கள் சொல்வதென்ன?

November 11, 2022 0

உடல் எடை கூடுவதற்கு அதிகப்படியான மன அழுத்தமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய காலத்தில் உடல் எடை கூடுவது அனைவருடைய முக்கிய பிரச்சனையாக மாறி உள்ளது. உடல் எடை கூடுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மாறிவரும் வாழ்க்கை முறை, சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்ளுதல், சரியான உடற்பயிற்சி செய்யாமை போன்ற பல காரணங்கள் உடல் எடை அதிகரிக்கின்றன. இதை தவிர நமக்கு இருக்கும் நோய்களுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவுகளால் கூட உடல் எடை அதிகரிக்கலாம். இவ்வாறு உடல் எடை கூடிய பிறகு, அதனை குறைப்பதற்கு அனைவரும் என்னென்னவோ செய்து வருகின்றனர். ஆனால் அந்த பிரச்சனை அப்படியே தான் உள்ளது.

ஆனால் இவ்வாறு உடல் எடை அதிகரிப்பதற்கு மேலே கூறிய காரணங்கள் தவிர அதிகப்படியான மன அழுத்தமும் ஒரு காரணம் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிகப்படியான மன அழுத்தத்தினால் என்னென்ன வழிகளில் உடல் எடை கூடுகிறது என்பதைப் பற்றி பார்ப்போம்.

அதிகமான பசி : மன அழுத்தத்தில் இருக்கும் போது இயற்கையாகவே தேவைக்கு அதிகமாக உணவுகளை உட்கொள்ளும் பழக்கம் ஆரம்பிக்கிறது. ஜங்க் ஃபுட்ஸ் எனப்படும் உடலுக்கு கெடுதல் தரும் உணவுகளை அளவுக்கு மீறி உட்கொள்ளும் போது உடலில் ஹார்மோன் மாற்றத்தை ஏற்படுத்தி உடல் எடை அதிகரிக்கிறது. மேலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிப்பதோடு வளர்ச்சிதை மாற்றத்தையும் குறைத்து உடல் எடை வேகமாக கூடுகிறது.

இன்சுலின் குறைபாடு : ரத்தத்தில் உள்ள சர்க்கரையை செல்களுக்குள் செலுத்துவது இன்சுலின் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக மன அழுத்தத்தில் இருக்கும்போது இன்சுலின் செயல் திறன் பாதிக்கப்பட்டு இரத்தத்திற்கு சர்க்கரை கொண்டு செல்லப்படுவது வெகுவாக குறைகிறது. இதனால் செல்களில் உடலுக்கு கெடுதல் செய்யும் கொழுப்புகள் அதிகமாக சேர்ந்து இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு வழி செய்கிறது.

உடலில் சர்க்கரை அளவு அதிகரித்தல் : பசியிலிருக்கும் போது வரைமுறையின்றி உணவு வகைகளை உட்கொள்வோம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! அவ்வாறு அதிகபடியான உணவுகளை உட்கொள்ளும்போது உடலில் சர்க்கரையின் அளவு வெகுவாக அதிகரிக்கிறது. இயற்கையாகவே தேவைக்கு அதிகமாக சர்க்கரை உடலில் சேரும்போது அது உடல் எடையை அதிகரிக்கிறது. மேலும் இதனால் உடல் உறுப்புகளும் பாதிக்கப்படலாம்.

தைராய்டு குறைபாடு: அதிகமான மன அழுத்தத்தில் இருக்கும் பொழுது தைராய்டு சுரப்பிகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் செரிமான கோளாறு ஆகியவை ஏற்பட்டு உடல் எடை அதிகரிக்கிறது.

புரோஜெஸ்டிரோன் குறைபாடு : அதிகமான மன அழுத்தத்தில் இருக்கும் போது புரோஜெஸ்டிரோன் எனப்படும் செக்ஸ் ஹார்மோனின் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதனால் உடலில் ஈஸ்ட்ரோஜென் எனப்படும் மற்றொரு ஹார்மோனின சுரப்பது அதிகமாகிறது. இயற்கையாகவே உடலில் ஈஸ்ட்ரோஜென் அதிகமாக சுரக்கும் போது உடல் எடை கூடும். எனவே நீங்கள் அதிகமான மன அழுத்தத்திற்கு உட்படும்போது இவை நேரடியாக உடலில் ஹார்மோன் சமநிலையை பாதித்து உடல் எடை கூடுவதற்கு வழி வகை செய்கிறது.

 Click here to join whatsapp group for daily health tip 

10 நிமிடம் சூரிய நமஸ்காரம் செய்தாலே இவ்வளவு கலோரிகளை குறைக்கலாமா..? மிஸ் பண்ணிடாதீங்க..!

November 11, 2022 0

 பொதுவாகவே ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு யோகாவும் அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இது உடலை இலகுவாக வைத்துக்கொள்வது மட்டுமன்றி நீண்ட ஆயுளுக்கும் வழி வகுப்பதாக ஆய்வுகளே கூறுகின்றன.

அதேபோல் மனித உடல் செயல்பாட்டுக்கு விட்டமின் டி- யை அள்ளிக்கொடுக்கும் சூரிய வெளிச்சம் மிகவும் அவசியம். ஆனால் ஏ.சி சூழ்ந்த உலகில் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. இப்படி யோகாவும், சூரிய வெளிச்சமும் ஒன்று சேர அமைய வேண்டுமெனில் அதற்கு சூரிய நமஸ்காரம் சிறந்த வழியாக இருக்கும்.

சூரிய நமஸ்காரம் தினமும் செய்வதால் உடலில் பல்வேறு மாற்றங்களை உணர முடியும் என யோகா பயிற்சியாளர்கள் கூறுகின்றனர். அதாவது சூரிய நமஸ்காரம் வெறும் பயிற்சியாக மட்டும் பார்க்கக் கூடாது. அது உடலின் மெட்டாபாலிசத்தை அதிகரிக்க உதவுகிறது. இது சுவாசத்தை ஒருங்கிணைப்பதால் உடலுக்கும் மனதிற்கும் ஒருவித அமைதியை தரும் பயிற்சியாகும்.

அதுமட்டுமன்றி தசைகளை தூண்டி நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. நிமிர்ந்து நேராக அமர்வதால் முதுகெலும்பு வலு பெறுகிறது. நம் தோற்ற நிலையும் சீராகிறது. அமைதியான சூழலில் இதை செய்யும்போது கெட்ட எண்ணங்கள் நீங்கி மனதளவில் அமைதி நிலவுகிறது.

அக்ஷர் யோகா நிறுவனங்களின் நிறுவனர் ஹிமாலயன் சித்தா அக்ஷர் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்திற்கு அளித்த பேட்டியில் “ சூரிய நமஸ்காரம் சரியான முறையில் செய்தால் 5-10 நிமிடங்களில் சுமார் 20-30 கலோரிகளை எரிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

இது நீங்கள் எப்படி சுவாசிக்கிறீர்கள் , எந்த மாதிரியான சுவாச முறையை பின்பற்றுகிறீர்கள் என்பதை பொறுத்து குறையும். அதாவது கலோரி உங்கள் வேகத்தின் அளவை பொறுத்து குறையும். எனவே சூரிய நமஸ்காரம் எப்படி செய்ய வேண்டும், சீரான நிலை என்ன என்பதை தெரிந்துகொண்டால் கலோரிகள் எரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும்.

20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் 5 முதல் 10 நிமிடங்கள் சூரிய நமஸ்காரம் செய்தால் சராசரியாக 40 முதல் 50 கலோரிகள் வரை குறைக்கலாம். இதற்கு சரியான சுவாச நுட்பத்தை பின்பற்றினால் கலோரிகளின் அளவு அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். எனவே சுவாச நுட்பத்தை பொறுத்து கலோரி எரியும் அளவு தீர்மானிக்கப்படுகிறது. எனவே 108 சூரிய நமஸ்காரங்களுக்கு பதிலாக 10 நிமிடங்கள் முழு கவனத்துடன் செய்தாலே போதுமானது. இதற்கு யோகா பயிற்சியாளரின் உதவியையும் எடுத்துக்கொள்ளலாம் என்கிறார் திரிவேதி.

 Click here to join whatsapp group for daily health tip

காலையில் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடலாமா..? சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் என தகவல்..!

November 11, 2022 0

 காலையில் நாம் சாப்பிடும் உணவுதான் அந்த நாள் எப்படி இருக்கும் என்று தீர்மானிக்கிறது. இதனால் தான் பெரும்பாலானவர்கள் காலையில் எழுந்த உடனேயே காபி அல்லது தேநீரை குடித்து, ஃபிரெஷாக்கிக் கொள்கிறார்கள். அதேபோல காலை நேரத்தில் கார்போஹைட்ரேட் அல்லது மாவுச்சத்து நிறைந்த உடனடி ஆற்றல் கொடுக்கும் உணவுகளை சாப்பிடுகிறார்கள். ஆனால் கார்போஹைட்ரேட் உணவுகள் உடனடியாக ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து, சீக்கிரமே பசி எடுப்பதால் அடுத்தடுத்து பானம், தின்பண்டம் என்று மதிய உணவுக்கு முன்பேவே அதிகமாக பசி எடுக்க துவங்கிவிடும்.

காலை நேரத்தில் கார்போஹைட்ரேட் உணவுகளுக்கு பதிலாக கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நாள் முழுவதும் ஆற்றலுடன் வைத்திருப்பது மட்டுமல்லாமல் நீண்ட நேரம் பசி எடுக்காமலும் இருக்கும்.

ஊட்டச்சத்து நிபுணரான ராஷி சவுத்ரி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ஒரு சில உணவுகளை சாப்பிட்டால் நீரிழிவு இல்லாதவர்களுக்கு கூட ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென்று அதிகரிக்கும். எனவே, எல்லோருக்குமே சர்க்கரை அளவு சரியாக இருக்க வேண்டும் என்ற விதி பொருந்தும் என்றால் அனைவருமே காலையில் கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதும் பொருந்தும் என்று தெரிவித்திருக்கிறார்.

காலையில் பசிக்கிறது என்று ஒரு வாழைப்பழம் அல்லது பேரீச்சையை சாப்பிட்டால் அது உடனடியாக உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரித்து உடனே பசியைத் தூண்டி விடும். எனவே காலை நேரத்தில் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்த்து, கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது என்பது எந்த மாயாஜாலமும் செய்து உங்களுக்கு ஆற்றல் தராது. உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும். எனவே உங்களுக்கு நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். அதுமட்டுமில்லாமல் கொழுப்பும் கூட உடலில் ஆற்றலாக மாறும் தன்மை கொண்டது. உடலில் கார்ப்ஸ் இல்லாத பொழுது, உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பு ஆற்றலாக மாறும்.

காலை நேரத்தில் கொழுப்பு நிறைந்த உணவுகளை ஏன் சாப்பிட வேண்டும்?

காலையில் நீங்கள் சாப்பிட்ட பின்பு ஆற்றல் குறையாமல் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதற்கு நீங்கள் புரதம் மற்றும் கொழுப்பு உணவுகளை சாப்பிட வேண்டும்.
கொழுப்பு என்பது நம் மூளையை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும் ஒரு ஊட்டச்சத்து. எனவே உடலுக்கு மட்டுமல்லாமல், கொழுப்பு நிறைந்த உணவுகள் மூளையின் ஆற்றலையும் அதிகரிக்கும். நீங்கள் வழக்கத்தை விட துரிதமாக தெளிவாக சந்திப்பீர்கள். வேலையை சுறுசுறுப்பாகவும் செய்ய முடியும். அது மட்டுமில்லாமல் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசால் என்ற ஹார்மோன் சுரப்பும் குறையும்.
நல்ல கொழுப்பு என்பது இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம் என்ற செரிமான கோளாறு மற்றும் நீண்ட காலமாக மலச்சிக்கலால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு மிகச் சிறந்த நிவாரணமாக அமையும். எனவே காலை நேரத்தில் கொழுப்பு நிறைந்த பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடுவது செரிமான பிரச்சினைகளுக்கும் தீர்வு அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு இருக்கும் பட்சத்தில், காலையில் கொழுப்பு நிறைந்த மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடும் பொழுது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் சரியாகி மாதவிடாய் சுழற்சி சீராகும். வழக்கமாக மாவு சத்து நிறைந்த உணவுகளுக்கு பதிலாக, காய்கறிகள், புரதம் மற்றும் கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளுடன் ஒமேகா சப்ளிமென்ட் எடுத்துக்கொண்டால் முறையற்ற மாதவிடாய் சீராக அமையும்.

November 8, 2022

ரூ.85,570/- சம்பளம்.. மத்திய அரசின் நாணயங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை.!

November 08, 2022 0

 மத்திய அரசின் செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா கீழ் இயங்கும் மும்பையில் உள்ள இந்திய நாணயங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் உள்ள Engraver, Junior Office Assistant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய நாணயங்கள் தயாரிப்பு நிறுவன பணிக்கான விவரங்கள்:

பணியின் பெயர்Engraver (Metal Works) B-4 Level , Junior Office Assistant (Hindi) B-3 Level
காலியிடங்கள்Engraver - 2   / Junior Office Assistant - 1
வயது வரம்பு18 இல் இருந்து 28 வயது வரை இருக்க வேண்டும்.

பணிக்கான கல்வித்தகுதி:

Engraver பணிக்காக Fine Arts பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Junior Office Assistant பணிக்காக இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் கணினி அறிவு.

சம்பள விவரங்கள்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Engraverரூ. 23,910/- முதல் ரூ.85,570/- வரை
Junior Office Assistantரூ.21,540/- முதல் ரூ.77,160/- வரை

தேர்வு செய்யப்படும் முறை:

Junior Office Assistant பணிக்குத் தட்டச்சு தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்குக் கணினி முறையில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.

Engraver பணிக்கு எழுதித் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரப்பூர்வ தளத்தில் ஆன்லைனின் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: https://igmmumbai.spmcil.com/

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 04.12.2022.

விண்ணப்பிக்க கட்டணம் :

ஆன்லைனின் விண்ணப்பிக்க UR/OBC/EWS - ரூ.600/-

SC/ST/PWD - ரூ.200/-

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

Click here to join WhatsApp group for Daily employment news 

சென்னையின் பிரபல திருக்கோயிலில் வேலை: தமிழில் எழுதபடிக்கத் தெரிந்தால் மட்டுமே வாய்ப்பு!

November 08, 2022 0

 சென்னை ராயப்பேட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வர் திருக்கோயிலில் பல்வேரு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வரும் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள் விவரம்:

பணி: கணினி இயக்குபவர் - 1

சம்பளம்: மாதம் ரூ.15,300 - 48,700

கல்வித்தகுதி: Diploma in computer science முடித்திருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

பணி: மின் பணியாளர் - 1

சம்பளம்: மாதம் ரூ.12,600 - 39,900

கல்வித்தகுதி: ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மின் உரிமம் வாரியத்தின் B- சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: அர்ச்சகர் நிலை 2 - 1

சம்பளம்: மாதம் ரூ.13,200 - 39,900

கல்வித்தகுதி: தமிழ் மொழியில எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஆகமவிதப்பள்ளி அல்லது வேத பாடச்சாலையில் ஓராண்டு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஓதுவார் - 1

சம்பளம்: மாதம் ரூ.12,600 - 39,900

கல்வித்தகுதி: தமிழ் மொழியில எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். தேவார பாடச்சாலையில் அல்லது தொடர்புடைய துறைகளில் 3 ஆண்டு பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: சுயம்பாகி - 1

சம்பளம்: மாதம் ரூ.13,200 - 41,800

கல்வித்தகுதி:தமிழ் மொழியில எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஆகமவிதிப்படி கைவைத்தியம் மற்றும் பிரச்சாரம் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

பணி: மேளக்குழு நாதஸ்வர பணிக்கும் மட்டும் - 1

சம்பளம்: மாதம் ரூ.15,300 - 48,700

கல்வித்தகுதி: தமிழ் மொழியில எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இசைப்பள்ளிகளில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: பகல் காவலர் - 1

சம்பளம்: மாதம் ரூ.11,600 - 36,800

கல்வித்தகுதி:  தமிழ் மொழியில எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்

பணி: இரவு காவலர் - 1

சம்பளம்: மாதம் ரூ.11,600 - 36,800

கல்வித் தகுதி: தமிழ் மொழியில எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்வது எப்படி? 

மேற்படி தகுதிகள் கொண்ட விண்ணப்பதாரர்கள்,  விண்ணப்பபடிவம் மற்றும் நிபந்தனைகளை hrce.tn.gov.in என்ற இணையதளத்தினும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் 17.11.2022 அன்று மாலை 5.45 மணி வரை மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும். அதன் பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபங்கள் அனுப்ப வேண்டிய முகவரி,

செயல் அலுவலர்,

அருள்மிகு சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் திருக்கோயில்,

இராயப்பேட்டை,

சென்னை-14.

விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி சான்றின் நகல்கள், சாதிச்சான்று நகல், குடும்ப அடையாள அட்டை நகல், முன்னுரிமைக்கான சான்றின் நகல், ஆதார் அட்டை நகல், வேலைவாய்ப்பு பதிவு அட்டை நகல், சுயவிலாசமிட்ட ரூ.25/-க்கான தபால் தலையுடன் கூடிய உறை ஆக்கியவற்றையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

அருள்மிகு சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வர் திருக்கோயிலில்

Click here to join WhatsApp group for Daily employment news  

ரூ.31,000 வரை உதவித்தொகை.. மத்திய அரசின் டிஆர்டிஓ நிறுவனத்தில் JRF பணி வாய்ப்பு!

November 08, 2022 0

 

மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி & மேம்பாடு அமைப்பு (DRDO) வெளியிட்ட தகவலின் படி Defence institute of Bio - Energy research (DIBER) இல் நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Research Fellowships (JRF) மற்றும் Young scientists laboratory for smart materials (DYSL-SM) இல் உள்ள JRF பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது

DIBER JRF - க்கு பணிக்கான விவரங்கள்:

பணியின் பெயர்Junior Research Fellowships (JRF)
காலியாகவுள்ள பணியிடங்கள்9
பணியிடங்கள்ஹைதராபாத்
கல்வித்தகுதிB.E/B.TECH or M.E/M.TECH - Mechanical Engineering / Electronic Engineering & Instrumentation Engineering / Computer EngineeringPost graduate degree in Physics & Chemistry in first division with NET.
வயது வரம்புஅதிகபட்சம் 28க்குள் இருக்க வேண்டும். OBC விண்ணப்பதார்களுக்கு 3 ஆண்டுகள், SC/ ST/ Ex – Servicemen விண்ணப்பதார்களுக்கு 5 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
உதவித்தொகை விவரம்தேர்வு செய்யப்படுபவருக்கு மாதம் ரூ.31,000/- உதவித்தொகையாக வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து yogi.diber@gov,in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 15.11.2022க்குள் அனுப்ப வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 16.11.2022.

மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

DYSL-SM JRF பணிக்கான விவரங்கள்:

பணியின் பெயர்Junior Research Fellowships (JRF)
காலியிடம்1
பணியிடம்ஹல்ட்வானி
கல்வித்தகுதிM.Sc /M.Sc (Tech) / B.Tech /B.E / M.Tech /M.E in Materials Science / Materials Science and Engineering / Materials science and Technology / Metallurgical Engineering and a valid GATE score.
வயது வரம்புஅதிகபட்சம் 28 வயது.
உதவித்தொகை31,000/-

தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்க வேண்டிய முறை :

jrfsm2022@gmail.com

அறிவிப்பு வெளியாகி 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அறிவிப்பு வெளியான நாள் : 01.11.2022

மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

Click here to join WhatsApp group for Daily employment news  

தமிழக மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு பிரிவில் வேலை – சம்பளம்: ரூ.18,536/-

November 08, 2022 0

 

தமிழக மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு பிரிவில் வேலை – சம்பளம்: ரூ.18,536/-

தருமபுரி, மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலகில் 1 வருட கால ஒப்பந்த அடிப்படையில்‌, பணிபுரிய புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 21.11.2022-க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலக காலிப்பணியிடங்கள்:

Social Worker எனப்படும் சமூகப்பணியாளர் பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல்‌ கூடாது. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Social Worker சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.18,536/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Social Worker கல்வி தகுதி:

சமூகப்பணியாளர்‌ (Social Worker) பட்டதாரி (10+2+3 மாதிரி) சமூகப்பணி 7 சமூகவியல்‌ / சமூக அறிவியல்‌ பட்டம்‌ பெற்றிருக்க வேண்டும்‌. இப்பணியில்‌ பணிபுரிந்த அனுபவம்‌ உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்‌ மற்றும்‌ கணிணியில்‌ பணிபுரிந்த அனுபவம்‌ இருக்க வேண்டும்‌.

அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பதவிக்கான தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன்‌ (Passport Size)கூடிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 21.11.2022 அன்று மாலை 5.45 மணிக்குள்‌ கீழ்கண்ட முகவரியில்‌ வந்து சேரும்‌ வகையில்‌ அனுப்பப்பட வேண்டும்‌.

மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலர்‌,
மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகம்‌,
சமூகப்பாதுகாப்புத்துறை,
மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகம்‌,
தருமபுரி.

Download Notification 2022 Pdf
Download Application Form 

Click here to join WhatsApp group for Daily employment news  

SBI Mutual Fund-ல் Sales Executive காலிப்பணியிடங்கள் – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

November 08, 2022 0

 SBI Mutual Fund-ல் Sales Executive காலிப்பணியிடங்கள் – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

Sales Executive பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை SBI Mutual Fund நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி, திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

SBI MF காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Sales Executive பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sales Executive கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBI MF வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Sales Executive முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBI MF ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி, திறன் மற்றும் முன் அனுபவத்தின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sales Executive தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் / Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதிநாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Click here to join WhatsApp group for Daily employment news  

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.71,900/-

November 08, 2022 0

 

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.71,900/-

சேலம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே 22/11/2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம்தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை
பணியின் பெயர்அலுவலக உதவியாளர் மற்றும் ஈப்பு ஓட்டுநர்
பணியிடங்கள்02
விண்ணப்பிக்க கடைசி தேதி22/11/2022
விண்ணப்பிக்கும் முறைOffline
TNRD தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை காலிப்பணியிடங்கள்:
  • அலுவலக உதவியாளர் – 01 பணியிடம்
  • ஈப்பு ஓட்டுநர் – 01 பணியிடம்
அலுவலக உதவியாளர் கல்வி தகுதி:
  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
ஈப்பு ஓட்டுநர் கல்வி தகுதி:

8-ஆம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌. மோட்டார்‌ வாகனச்‌ சட்டம்‌ 1988 (முத்திய சட்டம்‌ 59/1988)-ன்படி தமிழக அரசின்‌ தகுந்த அதிகாரியால்‌ வழங்கப்பட்ட தகுதியான ஓட்டுநர் உரிமம்‌ பெற்றிருக்க வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு குறைவில்லாமல்‌ மோட்டார்‌ வாகனங்களை ஒட்டியமைக்கான நடைமுறை அனுபவம்‌ கொண்டவராக இருக்க வேண்டும்‌.

வயது வரம்பு:

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் சேலம் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 01-07-2022 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 42 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

TNRD சேலம் சம்பள விவரம்:
  • அலுவலக உதவியாளர் – ரூ.15,700 – 58,100/-
  • ஈப்பு ஓட்டுநர் – ரூ.19,500 – 71,900/-
TNRD பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய ஆவணங்களுடன் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 22/11/2022-க்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

November 7, 2022

கழிவுகள் இல்லா சமையலறை... நிலையான எதிர்காலத்திற்கு தேவையான டிப்ஸ்!

November 07, 2022 0

 காய்கறி, பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை எந்த வகையிலும் வீணடிக்காமல் முடிந்தவரை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டும். எந்தவொரு சமையல் பொருளையும் வீணடிக்காத வகையில் தான் நம் முன்னோர்களின் சமையல் முறை இருந்தது. ஆனால், காலங்கள் மாற, மாற நமது சமையல் முறையும் வெகுவாக மாற்றம் அடைந்து விட்டது. உணவின் சுவைக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு உணவுப் பொருள்களை வீணாக்காமல் பயன்படுத்தி கொள்ள காட்டுவதில்லை.

ஆனால், விலைவாசி முன்பு போல இல்லை. முன்பெல்லாம் 100 ரூபாய்க்கு 5 கிலோ பட்டானி கிடைத்தது. ஆனால், இப்போது ஒரு கிலோ பட்டானியின் விலையே 100 ரூபாயை தாண்டும். ஆக, நம் சமையல் அறைக்குள் உள்நுழையும் எந்தவொரு பொருளையும் நாம் வீணடிக்காமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நுனி முதல் அடி வரை பயன்பாடு : காய்கறிகளில் அனைத்துப் பகுதிகளையும் பயன்பத்திக் கொள்ளும் சாதூர்யத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். வேர்கள், தண்டுகள், கீரைகள், மலர்கள், மொட்டுகள் என அனைத்தையும் பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடும் பாரம்பரியம் நம் உணவுக் கலாச்சாரத்தில் அடங்கியுள்ளது. அதேபோன்று ஊறுகாய் செய்வது, வத்தல் போடுவது, காய வைத்து பதப்படுத்துவது என பல்வேறு உத்திகளை நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். மேற்குறிப்பிட்ட வகையில், அனைத்து பாகங்களையும் உணவுப் பொருளாக மாற்றுவது அல்லது அதனை பதப்படுத்தி பிற்கால பயன்பாட்டிற்கு வைத்துக் கொள்வது என இந்த இரண்டு உத்திகளை பயன்படுத்தினாலே நம் சமையல் அறைகள் கழிவு இல்லாத ஒன்றாக மாறும்.

கழிவுகளை தூக்கி எறிய வேண்டாம்:  பெரும்பாலும் காய்கறி மற்றும் பழங்களில் நமக்கு தேவையான பகுதியை வெட்டி எடுத்துக் கொண்டு மற்றவற்றை தூக்கியெறியும் பழக்கத்தை நாம் கடைப்பிடித்து வருகிறோம். அதுபோல செய்யாமல் அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு தண்டுக்கீரை வாங்கி கீரைகளை சமைக்கும் நாம், அந்தத் தண்டுகளை தூக்கியெறிய தேவையில்லை. அதை சிறு துண்டுகளாக வெட்டி சாம்பாரில் சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல, எலுமிச்சை சாதம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதன் தோல்களை பயன்படுத்தி ஊறுகாய் செய்யலாம். சரி பீட்ரூட் தோல், சௌ சௌ தோல் போன்ற எதற்குமே பயன்படுத்த முடியாத கழிவுகளை என்ன செய்வது? அவற்றை உரமாக மாற்றி நமது தோட்டத்தில் உள்ள செடிகள் அல்லது பூந்தொட்டிகளுக்கு உரமிடலாம்.

வத்தல் முறை: வெண்டக்காய், சுண்டக்காய், மாங்காய் போன்ற காய்கறிகள் அதிகம் விளையும் காலங்களில், அதை மலிவான விலையில் வாங்கி வத்தல் போட்டு வைத்துக் கொள்வது மாபெரும் உத்தி ஆகும். பின்னாளில் இவை கிடைக்காத அல்லது விலை உயர்ந்த சமயங்களில் அவற்றை தண்ணீரில் ஊற வைத்து நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பூக்களை உண்ணும் பழக்கம் : பண்டைய காலங்களில் பூ உண்ணும் பழக்கம் இருந்துள்ளது. காலப்போக்கில் அது மாறிவிட்டது. சாதாரணமாக புளியம்பூ, வாழைப்பூ போன்றவற்றை பச்சையாகவோ, சமைத்தோடு சாப்பிடும் பழக்கம் இன்று மறைந்து வருகிறது. அவற்றிலும் கூட ஊட்டச்சத்துகள் நிறைய இருக்கின்றன. வடகிழக்கு மாநிலங்களில் வேப்பம்பூவை சூப் செய்து அருந்துவார்களாம்.

இதையும் முயற்சி செய்யலாம்: வெங்காயம் விலை ஏறி விட்டதாக கண்ணீர் சிந்த வேண்டாம். வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவற்றைக் கூட நறுக்கி காய வைத்து, பிறகு தேவைப்படும் காலங்களில் பயன்படுத்தும் உத்தி சில குடும்பங்களில் உள்ளது. ஆக, மொத்தம் காய்கறிகளை மதிப்பு கூட்டுப் பொருட்களாக மாற்றி விட்டால் மழைக்காலம் அல்லது விலை உயர்ந்த காலங்களில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 Click here to join whatsapp group for daily health tip


 Click here to join whatsapp group for daily health tip

November 6, 2022

வீட்டில் உள்ள லெதர் சோஃபாவை சுத்தம் செய்ய ரொம்ப கஷ்டமா இருக்கா..? ஈசியான 5 வழிகள் இதோ..!

November 06, 2022 0

 விலையுயர்ந்த லெதர் சோபாக்களை வைத்திருப்பது வீட்டிற்கு கம்பீரமான லுக்கையும், அழகையும் தரும் என்றாலும், அதனை பராமரிப்பது பெரும் சவாலான காரியமாகும். குறிப்பாக க்காலங்களில் சோபா முழுவதும் பூஞ்சை பிடித்தது போல் பரவ ஆரம்பிக்கும். இதனால் சோபாவை பராமரிப்பது என்பது வீட்டில் உள்ளவர்களுக்கு பெரும் கவலையாக மாறிவிடும். போதாக்குறைக்கு லெதர் சோபாவை சுத்தம் செய்யும் போது கடினமான கிளீனர்கள், ஹார்டான கருவிகளை பயன்படுத்தக்கூடாது என பல கட்டுப்பாடுகள் வேறு உள்ளன. எனவே தான் லெதர் சோபாக்களை சுத்தம் செய்வதற்கான எளிமையான 5 குறிப்புகளை உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம்...

1. கறைகளை துடைத்தல்: ஆடம்பரமான பிற வகை சோபாக்களைப் போல் அல்லாமல், லெதர் சோபாக்களில் எளிதில் கறை படிவது கிடையாது. இருப்பினும் காபி, டீ, தக்காளி சாஸ் போன்றவை சிந்தினாலோ அல்லது வேறு விதமான கறைகள் ஏற்பட்டாலோ அதனை உடனடியாக மென்மையான, உலர்ந்த துணி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் இந்த மாதிரியான திரவங்கள் லெதர் சோபாக்களில் எளிதில் ஊடுருவி அதன் நிறத்தை பாதிக்கக்கூடும். லெதர் சோப்பா மீது எண்ணெய் பிசுக்கு அதிகமுள்ள உணவு சிந்தினால், அதனால் உருவாகும் கிரீஸ் போன்ற கறையை அகற்றுவது கடினமானதாக இருக்கும். அதன் மீது டால்கம் பவுடரைப் தூவி ஒரு இரவு முழுவதும் விட்டுவிட்டு, காலையில் மைக்ரோஃபைபர் கிளாத் கொண்டு சுத்தப்படுத்தலாம்.

2. வழக்கமான பராமரிப்பு: லெதர் சோபாக்களின் மடிப்புகளில் அதிகப்படியான தூசுகள் படிவது காலப்போக்கில் அதில் விரிசல் மற்றும் சேதத்தை ஏற்படுத்தும். எனவே வீட்டை தினமும் சுத்தப்படுத்துவது போலவே லெதர் சோபாக்களையும் தினந்தோறும் சுத்தம் செய்ய வேண்டும். ஈரமான துணியால் சோபாவை நன்றாக துடைத்து, பின்னர் அதனை உலர வைக்க வேண்டும். வேக்யூம் கிளினர் வைத்திருப்பவர்கள் தினமும் சோபாவின் மூலை முடுக்களில் படித்திருக்கும் அழுக்குகளை அகற்றலாம். லெதர் சோபா வைத்திருப்போர் 6 மாதத்திற்கு ஒருமுறை ஏதாவது சேதம் ஏற்பட்டுள்ளது, அதன் கண்டிஷன் எப்படி உள்ளது என்பதை ஆராய வேண்டும்.

3. லெதர் சோபா கிளீனர்: லெதர் சோபாவில் அதிக சேதம் ஏற்படுவதை தவிர்க்க கடைகளில் கிடைக்கும் கமர்ஷியல் கிளீனர்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக லெதர் சோபாக்களுக்கு என்றே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மென்மையான கிளீனர்களை பயன்படுத்தலாம். சுத்தமான பஞ்சைக் கொண்டு சோபாவை சுத்தப்படுத்திய பிறகு, பின்னர் காட்டன் டவல் கொண்டு துடைத்து அதனை உலர வைக்க வேண்டும்.

4. சேதங்களை சரி செய்தல்: லெதர் சோபாக்கள் மென்மையாக இருப்பதால் சிறிய கீறல்கள் கூட நாளாடைவில் பெரும் சேதங்களை ஏற்படுத்தக்கூடும். லெதர் சோபாவில் ஏற்படும் கீறல்களை அகற்ற பிரத்யேகமாக கடைகளில் கிடைக்கும் லெதர் ஆயில் அல்லது கண்டிஷனை அப்ளே செய்து, வட்ட இயக்கத்தில் தேய்க்கவும். லெதர் சோபாக்களை பளபளப்பாகவும், கீறல்களை மறைக்கவும் மெழுகை பயன்படுத்தலாம்.

5. சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பு: லெதர் சோபா மீது அதிகப்படியான சூரிய வெளிச்சம் படுவது நாளாடைவில் விரிசல், நிறமாற்றம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கக்கூடும். சூரிய ஒளி லெதர் சோபாவில் இயற்கையாக உள்ள எண்ணெய் வளத்தை உறிஞ்சி, அதற்கு சேதத்தை விளைவிக்கும். எனவே ஜன்னல் அருகே லெதர் சோபாவை வைப்பதை தவிர்க்கலாம் அல்லது ஜன்னலுக்கு திரைச்சீலைகளை அணிவிப்பதும் பாதுகாப்பளிப்பதாக அமையும்.



 Click here to join whatsapp group for daily health tip

கொழுப்பு நீக்கப்படாத பால் இவ்வளவு ஆரோக்கியமானதா? நிபுணர்கள் விளக்கம்

November 06, 2022 0

 பால் அதிக கொழுப்பு நிறைந்தது மற்றும் அதிக கலோரிகள் கொண்டது, எனவே பால் குடிப்பதால் எடை அதிகரிக்கும் என்று பலரும் பாலை தவிக்கிறார்கள். அதற்கு பதிலாக கொழுப்பு நீக்கப்பட்ட அல்லது குறைவான கொழுப்பு கொண்ட பால் வகைகளை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், எடை குறைக்க வேண்டுமென்ற முயற்சியில் இருப்பவர்கள் குறைவான கொழுப்பு கொண்ட அல்லது கொழுப்பே இல்லாத உணவுகள் மற்றும் பால் வகைகளை சாப்பிடுகிறார்கள்.

இந்தியா முழுவதுமே எடை குறைக்க வேண்டும் என்றால் கொழுப்பு உணவுகளை நீக்க வேண்டும் என்று தவறான வழிமுறையைப் பின்பற்றி வருகிறார்கள். ஆனால் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் கிடைக்க கூடிய அத்தியாவசியமான ஆரோக்கியமான கொழுப்பு கிடைக்காமல் போகிறது.

பாலில் உள்ள கொழுப்புஆபத்தானது இல்லை :பல ஆண்டுகளாக அதிக சாச்சுரேட்டட் கொழுப்பு கொண்ட அதாவது கொழுப்பு நீக்கப்படாத பால் சாப்பிடக்கூடாது தவிர்க்க வேண்டும் என்று பலராலும் கூறப்பட்டு வருகிறது. மேலும், இந்த ஆண்டில் அமெரிக்க ஹார்ட் அசோசியேஷன் பால் பொருட்கள் சம்பந்தப்பட்ட உணவுகளுக்கான வழிமுறைகளை வழங்கியுள்ளது. அதன்படி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த மற்றும் உடல் பருமனை தவிர்க்க, குறைவான கொழுப்பு அல்லது கொழுப்பில்லாத பால் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

ஆனால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி இந்த குறைவான கொழுப்பு கொண்ட உணவுகளை இந்த வழிமுறைகள் தவறானவை. ஸ்கிம்ட் அல்லது டோன்டு மில்க் என்று கூறப்படும் கொழுப்பு நீக்கப்பட்ட பால் ஆரோக்கியமான தேர்வு அல்ல. அதற்கு மாறாக முழு கொழுப்பு நிறைந்த பால் தான் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

கொழுப்பு நிறைந்த பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பற்றிய விவரங்கள் :Whole milk எனப்படும் கொழுப்பு நீக்கப்படாத பால், குறைவான கொழுப்பு உள்ள பால் மற்றும் முழுமையாக கொழுப்பு நீக்கப்பட்ட பால் ஆகிய வகைகளில் எந்த அளவுக்கு கொழுப்பு இருக்கிறது அல்லது நீக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படையிலேயே வகைப்படுத்தப்பட்டுள்ளது. கொழுப்பு நீக்கப்படாத பாலில் 3.25 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. குறைவான low-fat பாலில் 1 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. முழுதும் கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் கொழுப்பு இல்லை. ஆனால் மற்ற இரண்டு வகைகளில் விட அதிக அளவு வைட்டமின் D சேர்க்கப்படுகிறது.

கொழுப்பு நிறைந்த பால் பற்றிய தவறான புரிதல் :1977 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட ஊட்டச்சத்து வழிமுறைகளின்படி முழுக் கொழுப்புள்ள பாலை தவிர்க்க வேண்டும். அதிக சாச்சுரேட்டட் கொழப்பு இருப்பதால் இதய நோய் பாதிப்பு ஏற்படுவதற்கும் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதற்கும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த கைடுலைன்களை உண்மை என்று நம்புவதற்கு எந்த அறிவியல் பூர்வமான சான்றுகளும் இதுவரை வழங்கப்படவில்லை.

இதையொட்டி 21 ஆய்வுகளில் நடத்தப்பட்ட அனாலிசிஸ் படி, பாலில் உள்ள கொழுப்புகளுக்கும் இதய நோய் பாதிப்பு அதிகரிப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. சாச்சுரேட்டட் கொழுப்பு உணவு வகைகளை சாப்பிடுபவர்களுக்கும் ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவது காரணமாக இல்லை என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழுப்பு நிறைந்த பால் எடை குறைப்பதற்கு சாதகமாக இருக்கும் :கொழுப்பு உணவுகளை சாப்பிட்டாலே எடை குறைக்க முடியாது, மாறாக எடை அதிகரிக்கத் தான் செய்யும் என்று தவறான கண்ணோட்டத்தில் மக்கள் உள்ளனர். ஆனால் ஆய்வு முடிவுகள் இதற்கு எதிர்மாறான தகவல்களை அறிவித்துள்ளது. அதன்படி 16 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் 11 ஆய்வுகளில் கொழுப்பு நிறைந்த பால் குடிப்பதால் உடல் பருமன் குறையும் என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும் 18,000 க்கும் மேற்பட்ட பெண்களிடையே நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி கொழுப்பு நிறைந்த பால் பொருட்களை சாப்பிடுவது உடல் எடை அதிகரிப்புடன் சம்பந்தப்படவில்லை என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி அதிக கொழுப்பு நிறைந்த பால் பொருட்கள் தொப்பை ஏற்படுவதைக் ஆகியவற்றை குறைக்கிறது என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

மெட்டபாலிக் சிண்ட்ரோம் ஆபத்து குறைய கொழுப்பு நிறைந்த பால் உதவுகிறது :உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தால் பல்வேறு குறைபாடுகள் உண்டாகக்கூடும். உதாரணமாக, இன்சுலின் ரெசஸ்டன்ஸ், உயர் டிரைகிளிசரைடு லெவல், தீவிரமான இதய நோய், உள்ளிட்டவை.கொழுப்பு நீக்கப்படாத பால் சாப்பிடுவதால் மெட்டபாலிக் சிண்ட்ரோம் ஏற்படும் அபாயம் பெருமளவு குறைகிறத. இதனால் பல்வேறு நோய்கள் தாக்காமல் பாதுகாப்பாக இருப்பதற்கும் உதவுகிறது.


 Click here to join whatsapp group for daily health tip