Agri Info

Adding Green to your Life

November 22, 2022

பணம் சேமிப்பது சம்பாதிப்பதற்கு சமம்…எப்படி?

November 22, 2022 0

 பணம் சம்பாதிப்பதைவிட, அதை புத்திசாலித்தனமாக செலவழிப்பதிலும், சேமிப்பதிலுமே இருக்கிறது லைஃப் ஸ்டைலின் வெற்றி. கிரெடிட் கார்டு தொடங்கி, ஹோம்லோன் வரை ஒவ்வொரு விஷயத்திலும் தேர்ந்தெடுப்பது முதல் பயன்படுத்துவது வரை தேவை... அதீத கவனம். எப்படி என்று பார்க்கலாமா?



ஆயுள் காப்பீடுகளில், டேர்ம் இன்ஷூரன்ஸ் மிகமுக்கியமாக வலியுறுத்தப்படுகிறது. வருமானம் ஈட்டுபவர்களுக்கு மட்டும்தான் டேர்ம் இன்ஷூரன்ஸ் வழங்கப்படுகிறது. ஆண்டு வருமானத்தைப்போல 10 மடங்கு தொகைக்கு கவரேஜ் எடுக்கலாம். இளம்வயதிலே இந்தப் பாலிசியை எடுக்கும்போது, பிரீமியம் மிகவும் குறைவாக இருக்கும். அதாவது 30 வயதுடைய நபர், 30 லட்சம் ரூபாய் கவரேஜுக்கு இன்ஷூரன்ஸ் செய்ய நினைத்தால், ஆண்டு பிரிமியம் 9 ஆயிரம் ரூபாய்தான். இது மோட்டார் வாகன இன்ஷூரன்ஸ் போல ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட வேண்டும்.

அடுத்த ஆண்டு, சுற்றுலா செல்லவிருக்கிறீர்களா... தேதி உறுதியாகத் தெரிந்தால், தேவைப்படும் தொகைக்கு ஆர்.டி அல்லது கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் இன்றே முதலீட்டை ஆரம்பியுங்கள். தேதி உறுதியாகவில்லை எனில், வங்கிக் கணக்கு அல்லது குறுகியகால டெபாசிட், ஃப்ளக்ஸி டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்யுங்கள்.

தங்கத்தில் முதலீடு எனும்போது, தங்க நகைச் சீட்டுத் திட்டங்கள், தங்கக் காசுகள் என்று சிந்திப்பதைத் தவிர்க்கலாம். நகைச் சீட்டு என்பது சரிவர நெறிப்படுத்தப்படவில்லை என்பதால், ரிஸ்க் உங்களைச் சேர்ந்ததே! தங்கக் காசுகளை விற்கும்போது 23% கழிவு இருக்கும் என்பதால் இதுவும் நமக்கு நஷ்டமே. கோல்டு இ.டி.எஃப் அல்லது கோல்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இதில் தங்கம் உலோகமாக இல்லாமல் யூனிட்களாக சேமிக்கப்படுவதால், கழிவின்றி அன்றைய விலைக்கு யூனிட்களை விற்று, தங்கம் வாங்கிக் கொள்ளலாம்.

ஒரு குடும்பம் குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாய்க்காவது மருத்துவ காப்பீடு எடுப்பதுதான் இக்காலத்துக்கு நல்லது. மேலும் அடிக்கடி வரும் சின்னச் சின்ன மருத்துவச் செலவுகளுக்காக ஒரு தொகையை, வங்கிக் கணக்கு அல்லது ஃபிக்ஸ்ட் டெபாசிட், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வைத்து, எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

இன்றைய நிலையில் இருவர் உள்ள குடும்பத்துக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் தேவை. இதுவே சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, குறைந்தபட்சம் ஆண்டுக்கு பணவீக்கம் 7 சதவிகிதம் என்றிருந்தாலே சுமார் 58 ஆயிரம் ரூபாய் தேவைப்படும். எனவே, ஓய்வு காலத்துக்குத் திட்டமிட்டுக் கொள்வது அவசியம். சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் பி.எஃப் தொகையுடன் கூடுதல் தொகையையும் முதலீடு செய்யலாம்.

நீண்டகால தேவைகளுக்கும், 500 ரூபாய் முதல் 1,50,000 வரை பி.பி.எஃப்  திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதை 15 ஆண்டுகளுக்கு எடுக்க முடியாது. மாதம் 1,000 ரூபாய் வீதம் 15 வருடத்துக்கு முதலீடு செய்தால், திட்டத்தின் முடிவில் சுமார் 3.65 லட்சம் ரூபாய் கிடைக்கும்.  வி.பி.எஃப், பி.பி.எஃப் திட்டங்களுக்கு கூட்டுவட்டி விகிதம் கணக்கிடப்படும். வருமான வரிச்சலுகையும் உண்டு.

குழந்தைகளின் உயர் கல்விக்கு, கிட்டத்தட்ட 13 - 15 வருடங்களுக்கு முன்பிருந்தே சேமித்து வரலாம். அதாவது ஆண்டுக்கு 15% வருமானம் தரக்கூடிய ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் மாதம் 2 ஆயிரம் ரூபாயை அடுத்த 15 வருடத்துக்கு முதலீடு செய்தால், 13,37,014 ரூபாய் கிடைக்கும். இதில் உங்களின் முதலீடு என்பது 3,60,000 ரூபாய்தான். கல்லூரியில் சேரும் காலத்துக்கு முன்பே நாம் டார்கெட் செய்த தொகை வந்துவிட்டால், அப்போதே பணத்தை எடுத்து வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்துவிட வேண்டும் அப்போதுதான் சந்தையின் ஏற்ற இறக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.

பிள்ளைகளின் திருமணத்தை நடத்த இன்றைக்கு 10 லட்ச ரூபாய் தேவை எனில், இன்னும் 20 வருடங்கள் கழித்து 70 லட்சம் ரூபாய் தேவைப்படலாம். இதுபோன்ற நீண்டகால தேவைகளுக்கு, பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். நல்ல வருமானம் தரும். அதாவது எஸ்.ஐ.பி முறையில் மாதம் 4,675 ரூபாய் என, 15 சதவிகிதம் வருமானம் தரக்கூடிய மியூச்சுவல் ஃபண்டுகளில், 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், முதிர்வில் உங்களுக்கு 70 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதில் நீங்கள் மொத்தமாக 11.22 லட்சம் ரூபாய்தான் முதலீடு செய்திருப்பீர்கள்.

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள், கடன் தொகையைச் சரியான நேரத்தில் செலுத்திப் பராமரித்தால் மட்டுமே பலன். இல்லையென்றால், வட்டிக்கு வட்டி என்று ஓய்ந்துவிட வேண்டியதுதான். வட்டி விகிதம் குறைந்தபட்சம் 24 - 36% என்பதால், இ.எம்.ஐ. முறையில் பொருட்கள் வாங்குவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். குறிப்பிட்ட தேதியில் செலுத்தவில்லை எனில் அபராதம் இருக்கும். ஒழுங்காகச் செலுத்தவில்லையெனில், உங்களின் பெயர் சிபில் ரிப்போர்ட்டில் சேர்ந்துவிடும். பிறகு, உங்களால் வேறு எந்த வங்கியிலுமே கடன்கள் எதையும் வாங்க முடியாத நிலை ஏற்படும்!



பொதுத்துறை வங்கிகள் பெரும்பாலும் இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கு கடன் வழங்குவதில்லை. தனியார் நிதி நிறுவனங்கள் 16 - 18% வரையிலான வட்டியில் கடன் தருகின்றன. எனவே, சேமிப்புப் பணத்தில் வாகனம் வாங்குவதே சிறந்தது. அடுத்த வருடம் பைக் வாங்க வேண்டும் எனில், ரெக்கரிங் டெபாசிட் (ஆர்.டி) முறையில் வங்கிகளில் முதலீடு செய்யலாம். இதில் 7.5 - 9% வரை வட்டி கிடைக்கும். அதாவது, மாதம் 3 ஆயிரம் ரூபாய் வீதம் செலுத்தினால், ஓராண்டு முடிவில் சுமார் 38 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். நீங்கள் வாங்கவிருக்கும் பைக்கின் விலையைப் பொறுத்து, மாதாந்திர தொகையை அதிகரிக்கலாம். இப்படி சின்ன சின்ன விஷயங்களில் கூட சரியான திட்டமிடல் இருந்தால் நாம் சம்பாதிப்பது குறைவாக இருந்தாலும் வாழ்க்கை நிறைவாக இருங்கள். எதையும் பிளான் பன்னாம பன்னக் கூடாது…ஓகே? 

Click here to join whatsapp group for daily health tip

அரசு சுகாதார அலுவலகத்தில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

November 22, 2022 0


திருவண்ணாமலை இணை இயக்குனர் நலப்பணிகள் அலுவலகத்தில் காலியாக உள்ள  பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள் விவரம்: 

1.  கணக்கு உதவியாளர் - 1

கல்வி தகுதி: Tally படிப்புடன் B.com முடித்திருக்க வேண்டும்.

மாதச் சம்பளம்: ரூ.16,000 /-

2. பிசியோதெரபி சிகிச்சை அளிப்பவர் (Physiotherapist)

கல்வி தகுதிபிசியோதெரபி  படிப்பில் இளம்நிலை பட்டம்  பெற்றிருக்க வேண்டும்.

மாதச் சம்பளம்: ரூ.13,000 /-

3. நகர்ப்புற சுகாதார மேலாளர்/ சுகாதார செவிலியர்

கல்விதகுதி: செவிலியர் படிப்பில் பிஎஸ்சி/எம்எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மாதச் சம்பளம் ரூ.25,000

நிபந்தனைகள்:

1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.

2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-

கௌரவ செயலாளர்/துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்,

மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),

துணை சுகாதார பணிகள் அலுவலகம்,

பழைய அரசு மருத்துவனை வளாகம், செங்கம் சாலை,

திருவண்ணாமலை.

மேற்கண்ட பதவிகளுக்கு அவசரம் மற்றும் அவசியம் கருதி உடனடியாக பணியிடம் நிரப்ப வேண்டியுள்ளதால் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு 02.12.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்கள் மேற்கண்ட முகவரிக்கு வரவேற்கப்படுகின்றன. அதற்கு மேல் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. மேலும் 05.12.2022 அன்று நேர்முகத்தேர்வு நடத்தப்படும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Click here to join WhatsApp group for Daily employment news  

கட்டணம் இல்லாமல் மைக்ரோசாப்ட் சான்றிதழ் படிப்புகளை படிக்க வேண்டும் - அரசின் அசத்தல் திட்டம்!

November 22, 2022 0

 

NCS digisaksham portal: இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறன்களை அதிகரிக்கும் வகையில் மத்திய/மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2015ம் ஆண்டு  மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளத்தை (National Career Service Portal)  தொடங்கியது. கிட்டத்தட்ட Naukri, Linkedin Job Search போன்ற இணைய சேவைகளுக்கு நிகரான வாய்ப்பை இந்த தளம் ஏற்படுத்தி தருகிறது.

வேலை தேடக்கூடியவர்களை, பொருத்தமான வேலையளிக்கும் நிறுவனங்களோடு இணைப்பதுடன், தொழில் வழிகாட்டுதல், வேலைவாய்ப்பு திறன் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இதில் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த செப்டம்பர் 26ம் தேதி நிலவரப்படி, இந்த  இணையதளத்தில் 4,82,264 காலி இடங்கள் பற்றிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் இந்த சேவையின் மூலம் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.

மைக்ரோசாப்ட் நிறுவனம்: கிராமப்புற இளைஞர்களின் டிஜிட்டல் திறன்களை  வழங்கி, வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக மைக்ரோசாப்ட்  நிறுவனத்துடன் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இணைந்து DIgisaksham எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.


தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளத்தில் பதிவு செய்துள்ள அனைத்து இளைஞர்களும் இந்த திறன் படிப்பில் எந்தவித கட்டணமின்றி சேர்ந்து கொள்ளலாம். Excel, Python, Azure, Java,  Security Fundamentals ஆகிய பாடநெறிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.

சுயமாக கற்கும் முறை, ஆன்லைனில் பயிற்ச்சியாளர்கள் மூலம் கற்கும், நேரடி பயிற்சி வகுப்புகள்  (  Digital Skills – Self paced learning, VILT mode training (Virtual Instructor led) and ILT mode training (Instructor led) என மூன்று வழிமுறைகளின் கீழ் பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் மாதிரி தொழில்நெறி வழிகாட்டு மையம் (Model Career Centres) மற்றும் எஸ்சி/எஸ்டி தொழில்நெறி வழிகாட்டு மையங்களை தொடர்பு கொண்ட பயிற்சி வகுப்புகளை தொடங்கலாம். இணைய வழியாக பயிற்சியை மேற்கொள்ள  https://www.ncs.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

தமிழ்நாடு - மாதிரி தொழிற்நெறி வழிகாட்டு மையம்

எஸ்சி / எஸ்டி வகுப்பினருக்கான தேசிய வேலைவாய்ப்பு சேவை மையம் (National Career Service Centre For SC/ST) சென்னை சாந்தோமில் இயங்கி வருகிறது.

எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் NCS போர்டல் மூலமாகவோ, நேரடியாகவோ மைக்ரோசாப்ட் வழங்கும் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளுங்கள். இதன் மூலம் , உங்கள் கணினித் திறன்கள் அதிகரிப்பதுடன் சந்தையில் மிகச் சரியான வேலையை தேர்ந்தெடுக்க உதவும்.


 Click here to join WhatsApp group for Daily employment news  

வேலை தேடுபவரா நீங்கள்..! 40,000 காலியிடங்கள் - தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

November 22, 2022 0

 Private Job Fair: சேலம் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையமும் இணைந்து நடத்தும்  மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை வரும் 26ம் தேதி நடைபெற இருக்கிறது.

40,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள்:

இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள் காப்பீடு,மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் 40,000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களைத் தேர்வு செய்யவுள்ளனர்.

காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறவிருக்கும் இம்முகாமில் 8ம் வகுப்பு., 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்விதகுதி உள்ளவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் tnprivatejobs.tn.gov.in  என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு சேலம் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு jobfairmccsalem@gmailcom என்ற மின்னஞ்சல் வாயிலாகவும், 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.


 Click here to join WhatsApp group for Daily employment news  

குளிர்காலத்தில் இரத்த அழுத்தம் அதிகரிக்கக்கூடாதா? அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க...

November 22, 2022 0

 குளிர்காலம் தொடங்கிவிட்ட நிலையில், பல்வேறு நோய்களின் தாக்குதல்களும் அதிகரித்துவிட்டன. அதில் ஒன்று தான் உயர் இரத்த அழுத்தம்/ஹைப்பர் டென்சன்.

பொதுவாக குளிர்காலத்தில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஏனெனில் குறைவான வெப்பநிலையானது தற்காலிகமாக இரத்த நாளங்களை குறுகச் செய்யும். இதன் விளைவாக இரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஏனெனில் குறுகிய நரம்புகள் மற்றும் தமனிகளின் வழியாக இரத்த செலுத்த அதிக அழுத்தம் தேவைப்படுகிறது. இதன் காரணமாகவே குளிர்காலத்தில் உயர் இரத்த அழுத்த பிரச்சனை அதிகரிக்கிறது.

எனவே குளிர்காலத்தில் உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் குறைக்க, உடலின் வெப்பநிலையை சீராக பராமரித்து, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும் சில உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். அந்த வகையில் சில உணவுகள் குளிர்காலத்தில் உடலுக்கு வேண்டிய சத்துக்களைக் கொண்டிருப்பதோடு, இரத்த அழுத்தத்தைக் குறைத்து பராமரிக்கவும் உதவுகின்றன. இப்போது குளிர்காலத்தில் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க சாப்பிட வேண்டிய உணவுகளைப் பற்றி காண்போம்.


வெந்தயம்

வெந்தயத்தில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் கணிசமான அளவில் உள்ளது. இது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் இரத்த அழுத்தத்தை நிலையாக பராமரிக்க உதவும். வெந்தய விதைகள் மற்றும் வெந்தய கீரைகளில் உப்பின் அளவு மிகவும் குறைவு. எனவே உயர் இரத்த அழுத்த நோயாளிகள் குளிர்காலத்தில் வெந்தய கீரைகளை அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம், இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம். இருப்பினும் தினமும் வெந்தயத்தை உபயோகிக்க வேண்டாம். ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். வெந்தய கீரை கிடைக்காவிட்டால், வெந்தயத்தை பொடி செய்து சேமித்து, உணவில் சேர்த்து வரலாம்.

பச்சை இலைக் காய்கறிகள்

பொதுவாக பச்சை இலைக காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள அதிகப்படியான சோடியம் வெளியேற்றப்படுபதோடு, உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, உடல் ஆரோக்கியம் மேம்படும். எனவே குளிர்காலத்தில் இரத்த அழுத்தம் அதிகரிக்காமல் இருக்க பசலைக் கீரை, முட்டைக்கோஸ், கேல், லெட்யூஸ் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்து வாருங்கள்.

பீட்ரூட்

பீட்ரூட்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது மற்றும் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது. இது தவிர இதில் உள்ள பி வைட்டமின்கள் நரம்புகளின் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. ஆய்வுகளின் படி, பீட்ரூட்டில் உள்ள அதிகப்படியான நைட்ரேட்டுகள், நைட்ரிக் ஆக்ஸைடு வாயுவின் உற்பத்தியை அதிகரித்து, இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடைய வைத்து, உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, உயர் இரத்த அழுத்த பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது. எனவே உயர் இரத்த அழுத்த நோயாளிகள் குளிர்காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது.

பூண்டு

அன்றாட உணவில் சேர்த்து வரும் பூண்டு உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க மட்டுமின்றி, பராமரிக்கவும் உதவுகிறது. ஆகவே உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், குளிர்காலத்தில் அன்றாட உணவில் பூண்டு சேர்ப்பது நல்லது. வேண்டுமானால், அதிகாலையில் ஒரு பல் பூண்டு சாப்பிட்டு, ஒரு டம்ளர் சுடுநீர் குடிக்கலாம். இருப்பினும் எந்த ஒரு விஷயத்தையும் முயற்சிக்கும் முன் உங்களை மருத்துவரிடம் கேட்ட பின்னரே முயற்சிக்க வேண்டும் என்பதை மட்டும் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

ஆரஞ்சு

குளிர்காலத்தில் பலவிதமான நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த தொற்றுக்களின் தாக்கத்தை தடுக்க சிட்ரஸ் பழமான ஆரஞ்சு பழங்கள் பெரிதும் உதவி புரியும். ஏனெனில் ஆரஞ்சு பழத்தில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. மேலும் இதில் இரத்த அழுத்த அளவைக் குறைக்க உதவும் மக்னீசியம் மற்றும் வைட்டமின் பி6 அதிகம் உள்ளது. எனவே குளிர்காலத்தில் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள நினைத்தால், ஆரஞ்சு பழத்தை சாப்பிடுங்கள்.

முள்ளங்கி

முள்ளங்கியில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ளவும், உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால் அதைக் குறைக்கவும் உதவுகிறது. ஆயுர்வேதத்தின் படி, முள்ளங்கி இரத்தத்தை அமைதிப்படுத்துவதாக கூறப்படுகிறது. எனவே குளிர்காலத்தில் உயர் இரத்த அழுத்த பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமானால், அவ்வப்போது முள்ளங்கியை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள்.

 Click here to join whatsapp group for daily health tip


உங்க ஆயுளை அதிகரிக்க... இந்த கீரைகளில் ஒன்றை தினமும் உங்க உணவில் சேத்துக்கணுமாம் தெரியுமா?

November 22, 2022 0

 ரோக்கியமான உணவில் பல்வேறு காய்கறிகள் மற்றும் பழங்களும் அடங்கும். தினமும் பலவிதமான பழங்கள் மற்றும் காய்கறிகளை குறைந்தது ஐந்து பகுதிகளாகப் பெறுவது குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது என்று ஆராய்ச்சி கூறுகிறது.

காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைந்த உணவு இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும், சில வகையான புற்றுநோய்களைத் தடுக்கும், கண் மற்றும் செரிமான பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கும், மற்றும் இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்துகிறது, இது எடை இழப்புக்கு பங்களிக்கும். உங்கள் உணவில் மாவுச்சத்து இல்லாத காய்கறிகள் மற்றும் ஆப்பிள்கள், பேரிக்காய் மற்றும் பச்சை இலைக் காய்கறிகள் போன்ற பழங்களைச் சேர்த்துக்கொள்வது கூட உங்கள் எடையைக் குறைக்க உதவும்.

இலைக் காய்கறிகள் அங்குள்ள காய்கறிகளின் ஆரோக்கியமான குழுக்களில் ஒன்றாகும். இந்த இலைகளில் பல ஏற்கனவே இந்திய உணவின் ஒரு பகுதியாக உள்ளது. இக்கட்டுரையில் உங்கள் உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய ஐந்து இலைக் காய்கறிகளைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். குறிப்பாக நீங்கள் 30 வயதுக்கு மேல் இருந்தால், இந்த கீரைகளை கண்டிப்பாக உங்கள் உணவில் சேர்க்க வேண்டும்.


காலே

காலே ஒரு அடர் நிற இலை, அதை பச்சையாக சாப்பிட்டால், சிறிது கசப்பு சுவை இருக்கும். இதன் ஆரோக்கிய நன்மைகளை மக்கள் அடையாளம் கண்டுகொள்வதால் இது தொடர்ந்து பிரபலமடைந்து வருகிறது. இந்த கீரை நம்பமுடியாத அளவிற்கு ஊட்டச்சத்துக்கள் மற்றும் குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ளது. வைட்டமின்கள் ஏ, சி, கே உடன் மெக்னீசியம், கால்சியம் மற்றும் பலவற்றின் நல்ல மூலமாக உள்ளது. நம் உடல் சீராக செயல்பட தேவையான பல ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன.

வாட்டர்கெஸ் கீரை

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், புற்றுநோயைத் தடுக்கவும் உதவும் ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய வாட்டர்கெஸ் பல நன்மைகளைக் கொண்ட ஒரு சூப்பர்ஃபுட் ஆகும். எளிமையாகச் சொன்னால், கீரையைக் காட்டிலும் அதிக இரும்புச்சத்து, ஆரஞ்சுப் பழத்தை விட வைட்டமின் சி மற்றும் ஒரு கிளாஸ் பாலை விட அதிக கால்சியம் இதில் உள்ளது. பொதுவாக ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை வெப்பமான மாதங்களில் புதிய வாட்டர்கெஸ் அடிக்கடி கிடைக்கும். இது ஒரு மொறுமொறுப்பான, லேசான இலையாகும். சாலடுகள், பழச்சாறுகள், சூப்கள் மற்றும் பலவற்றில் இந்த கீரையை பயன்படுத்தலாம்.

தைம்

தைம் செரிமானத்திற்கு மிகவும் பயனுள்ள மூலிகையாகும். சிவப்பு இறைச்சியை ஜீரணிக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் வாய்வு ஏற்படுவதைத் தவிர்க்கிறது. கூடுதலாக, தைம் கீரையில் வைட்டமின் சி மற்றும் ஏ நிறைந்துள்ளது. அதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை பண்புகளுக்கு கூடுதலாக, தைமில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு நன்மை பயக்கும் இரசாயனங்கள் உள்ளன. இது இருமல் நிவாரணம் மற்றும் இயற்கையில் ஒரு ஆக்ஸிஜனேற்றியாக இருக்கலாம்.

கடுகு கீரை

கடுகு கீரைகள் இந்தியாவில் பிரபலமான பச்சை இலை காய்கறியாகும். இந்த கடுகு இலைகள் ஒரு காரமான சுவை கொண்டவை. தோல் மற்றும் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் வைட்டமின் ஏ நிறைய உள்ளது. மேலும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளன. கடுகு கீரையின் ஊட்டச்சத்து உள்ளடக்கம் அவை தயாரிக்கப்படும் முறையால் பாதிக்கப்படுகிறது. தயாரிக்கப்பட்ட கடுகு கீரையில் அதிக அளவு வைட்டமின் கே, வைட்டமின் ஏ மற்றும் தாமிரம் உள்ளது, ஆனால் குறைந்த அளவு வைட்டமின் சி மற்றும் ஈ உள்ளது.

துளசி இலைகள்

துளசி உலகின் மிகவும் புனிதமான, ஆரோக்கியமான மற்றும் மிகவும் பயனுள்ள மருத்துவ ஆயுர்வேத மூலிகையாகும். மூலிகைகளின் ராணி என்று அழைக்கப்படும் துளசி, மருத்துவ மதிப்புகள் மற்றும் ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. சுமார் 35 வகையான துளசி வகைகள் உள்ளன, அவற்றில் மிகவும் பொதுவானது புனித துளசி மூலிகையாகும். இது 300க்கும் மேற்பட்ட பல்வேறு நோய்களை குணப்படுத்தும். புனித துளசியை பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம். நீங்கள் அதை சமைக்கலாம், அதை ஒரு துணைப் பொருளாக எடுத்துக் கொள்ளலாம் அல்லது தேநீராகத் தயாரித்து அருந்தலாம்.

ப்ரோகாலி அப்பல்லோ

உங்களில் பெரும்பாலானோருக்கு இது புதியதாக இருக்கலாம். ப்ரோகாலி அப்பல்லோ என்பது ப்ரோக்கோலி மற்றும் சீன காலே ஆகியவற்றுக்கு இடையேயான குறுக்குவெட்டுகளிலிருந்து பெறப்பட்ட ஒரு கலப்பின வகையாகும். இது ப்ரோக்கோலி முளைப்பதைப் போன்ற மென்மையான மற்றும் சுவையான தண்டுகளை உருவாக்குகிறது. கேல் மற்றும் ப்ரோக்கோலி இரண்டும் பிராசிகா குடும்பத்தைச் சேர்ந்தவை, எனவே அவற்றின் கலவை அர்த்தமுள்ளதாக இருக்கிறது. அவை ஒவ்வொன்றும் அழற்சி எதிர்ப்பு குளுக்கோசினோலேட்டுகள், வைட்டமின் கே மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன.

குறிப்பு: இந்த கீரைகளை அதிகமாக சமைப்பதைத் தவிர்க்க நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் அது தண்ணீரின் அளவையும் அதன் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் குறைக்கும்.

 Click here to join whatsapp group for daily health tip


வெந்தயத்தில் ஒளிந்திருக்கும் அழகு ரகசியம்... இது தெரியாம போச்சே..!

November 22, 2022 0

 முக அழகை பராமரிக்க இப்போது ஃபேஷியல், பிளீச் என பல்வேறு அழகு பராமரிப்புகள் வந்தப்போதிலும் இயற்கை முறையில் கிடைக்கும் தினமும் நாம் பயன்படுத்தும் பொருட்களின் நன்மை என்பது மிகவும் பயனளிக்கும்.சமையலறையில் தவிர்க்க முடியாத பொருள் வெந்தயம். அது உணவுக்கு சுவைக் கூட்டுவது மட்டுமன்றி சரும அழகைப் பாதுகாப்பதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.

சரும அழுக்குகளை நீக்கும் : இரவு வெந்தயத்தை ஊற வைத்து மறுநாள் அரைத்து முகத்தில் பூசினால் எண்ணெய் வடிதல் நீங்கி சருமக் குழிகளில் தேங்கியிருக்கும் அழுக்குகளும் நீங்கும்.

சரும நிறத்தை தெளிவாக்கும் : இரவு முழுவதும் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் அந்த நீரை சேமித்து வைத்து அதை காட்டன் துணியில் நனைத்து முகத்தில் தடவினால் நொடியில் முகம் பளபளக்கும். ஸ்பிரே பாட்டிலில் நிரப்பி தினமும் முகத்தில் ஸ்பிரே அடிக்கலாம்.

பொடுகுத் தொல்லையைப் போக்கும் : வெந்தயம் நச்சு நீக்கி மட்டுமல்ல பூஞ்சைகளை அழிக்கும் வல்லமையும் கொண்டது. ஊறவைத்த வெந்தயத்தை அறைத்து அதோடு தயிர் சேர்த்து தலையில் தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

வெள்ளை முடி வளர்ச்சியைத் தடுக்கும் : 20 வயதிலேயே முளைக்கும் வெள்ளை முடி வளர்ச்சியைத் தடுக்க வெந்தயத்திலுள்ள பொட்டாசியம் தடுக்க உதவும். ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து அதோடு பெரிய நெல்லிக்காய் சாறை சேர்த்து தலைமுடி வேர்களில் தடவி தலைக்குக் குளியுங்கள். வெள்ளை முடியைத் தவிர்க்கலாம்.

பளிச் முகம் : வெந்தயத்தில் வைட்டமின் c இருப்பதால் அது முகத்தை பளிச்சென மாற்றும். ஊற வைத்து அரைத்த வெந்தயத்தில் பால் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவ முகம் பளபளக்கும்.

முகச் சுருக்கங்களை நீக்கும் : வெந்தயத்தை பேஸ்டாக அரைத்து முகத்தில் தேய்ப்பதால் முகச் சருமம் இறுகி சுருக்கங்கள் நீங்கும். இழந்த இளமையை மீட்க உதவும்.

முகப்பருக்கள் நீங்கும் : இது நச்சுக் கிருமிகளை நீக்க உதவும். வெந்தயத்தை 20 நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க வைத்து அது ஆறியதும் வெந்தயத்தை நீக்கிவிட்டு தண்ணீரை தினமும் பருக்கள் உள்ள இடங்களில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.

 Click here to join whatsapp group for daily health tip

குளிர்காலத்தில் அதிகரிக்கும் மூட்டு வலிக்கு விட்டமின் டி குறைபாடுதான் காரணம்... தவிர்க்கும் வழிகள்..!

November 22, 2022 0

 வைட்டமின் டி ஆரோக்கியத்தின் ஒரு முக்கிய அங்கமாகும், இது இல்லாமல் உடல் சரியாக செயல்பட முடியாது. மனிதர்களின் எலும்புகள், பற்கள் மற்றும் தசைகள் திடமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வைட்டமின் டி உதவும், ஆனால், நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதில் அதற்கு ஒரு முக்கிய பங்கு உள்ளது.

வைட்டமின் டி-யின் முக்கிய ஆதாரம் சூரிய ஒளியாக உள்ளது. ஆனால்  குளிர்காலத்தில் வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும் என்பதால் சூரியனிலிருந்து கிடைக்கும் விட்டமின் டி தடைபடுகிறது. எனவே விட்டமின் டி குறைபாட்டால் வயதானவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

வைட்டமின் டி ஒரு ஸ்டீராய்டு ஹார்மோன் ஆகும், இது சூரியனில் இருந்து பெறப்பட்ட புற ஊதா கதிர்வீச்சு மற்றும் உணவுப் பொருட்களிலிருந்து கிடைக்கிறது. எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், கால்சியம் சத்தை உறிஞ்சுவதற்கு நம் உடலில் வைட்டமின் டி இருக்க வேண்டும்.

வைட்டமின் டி பற்றாக்குறையால் இந்தியா முழுவதும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வைட்டமின் டி குறைபாட்டால் மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், இதய நோய், மனச்சோர்வு, எடை அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

இன்றைய வேலைச் சூழலால் சூரிய ஒளி உடலில் நேரடியாக படுவதற்கான சூழ்நிலைகள் குறைவதால் மக்கள் பாதிக்கப் படுகின்றனர். இதனால் எலும்பு பிரச்சினைகள், மனச்சோர்வு மற்றும் நரம்பியல் பிரச்சினைகள் உருவாகிறது, இவை அனைத்தும் வைட்டமின் டி குறைபாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளன என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகள்

சோர்வு, மூட்டு வலிகள் மற்றும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பது, கடுமையான எலும்பு அல்லது தசை வலி, பலவீனம் படிக்கட்டுகளில் ஏற அல்லது தரையில் இருந்து எழுந்திருக்க சிரமம் ஏற்படலாம், மன அழுத்தம், குறிப்பாக உங்கள் கால்கள், இடுப்பு வலி ஏற்பட்டால் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.

வைட்டமின் டி-ன் உணவு ஆதாரங்கள்:

* மீன்

* மீன் எண்ணெய்

* முட்டை

* இறால்

* பால்

* தானியங்கள்

* தயிர்

* ஆரஞ்சு சாறு

* காளான்

வைட்டமின் டி உள்ள உணவு வகைகள் எல்லாமே உங்களுக்கு வேண்டிய வைட்டமின் சத்தை கொடுக்க கூடியதுதான். ஆனால் எவ்வித செலவும், வேலையும் இல்லாமல் வைட்டமின் டி சத்து தருவது சூரிய ஒளி மட்டுமே. எனவே தினமும் காலையில் வெயிலில் சிறிது நேரம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஒட்டுமொத்த உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கு வைட்டமின் டி முக்கியமானது என்பதால் கவனமாக இருங்கள்.

 Click here to join whatsapp group for daily health tip

வீட்டிலிருந்தே ஈஸியா பெண்கள் சம்பாதிக்க முடியும்..! டியூசன் முதல் குழந்தைகள் பராமரிப்பு வரை.. இதோ முழு விபரம்!

November 22, 2022 0

 இன்றைக்கு உள்ள பொருளாதார தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்றால் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரும் நிச்சயம் ஏதாவது ஒரு பணிக்குச் செல்ல வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் ஆண்களை விட பெண்கள் சிறு வயது முதல் தனக்கானப் படிப்புகளை தேர்வதோடு எப்படியாவது வெற்றி பெற்ற வேண்டும் என லட்சியத்தோடு வாழ்வார்கள். சில பெண்கள் அதை நிறைவேற்றியும் காட்டுவார்கள். ஆனால் பெண்களின் இந்த கனவு தொடருமா? என்பது தான் பெரிய கேள்வியாக உள்ளது.பெண்கள் வீட்டில் இருந்தப்படியே சம்பாதிப்பதற்கான சில வழிமுறைகள் குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக் கொள்வோம்.

டியூசன் (வீட்டிலேயே பாடம் கற்பித்தல்) : இன்றைக்கு உள்ள பெரும்பாலான பெற்றோர்களால் அருகில் அமர்ந்து குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க முடியவில்லை என்பதோடு பலருக்கு நேரமும் கிடைப்பதில்லை. எனவே நீங்கள் வீட்டிலேயே டியூசன் சென்டர் ஆரம்பிக்கலாம். மாணவர்களுக்குத் தேவைப்படக்கூடிய விஷயங்களைக் கற்றுக்கொடுக்கும் போது சிறந்த ஆசிரியராக நீங்கள் மாறுகிறீர்கள். இது உங்களுக்கு நல்ல வருமானத்தைக் கொடுக்கும். ஒருவேளை உங்களால் பாடம் எதுவும் கற்றுக்கொடுக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை , கைவினைக் கலைகள், யோகா போன்ற உங்களின் திறமைகளை நீங்கள் வரும் தலைமுறையினருக்கு கற்றுக்கொடுக்கலாம்.

கட்டுரை எழுதுதல் (content writing) : பெண்கள் பலருக்கு எழுத்துத் திறன் அதிகளவில் இருக்கும். தற்போது இதுபோன்றுள்ள பெண்களுக்காகவே சோசியல் மீடியாக்கள், டிஜிட்டல் மீடியாக்கள் போன்றவற்றில் பல வேலைவாய்ப்புகள் உள்ளது. உங்களுக்கு கிடைக்கும் ப்ரீ டைம்களில், அலுவலகத்தில் கேட்கப்படும் தலைப்புகளுக்கு ஏற்ப கட்டுரை எழுதுதல், வாய்ஸ் ஓவர் கொடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம். இதன் மூலம் உங்களின் திறமைகள் வளர்வதோடு தனித்துவமான எழுத்துக்களால் நீங்கள் பிரபலமாவீர்கள் .

இதில் சிறப்பம்சம் என்னவென்றலால் நீங்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனிலும் பணியாற்றலாம். ஃப்ரீலான்சிங் அதாவது பகுதி நேர ஊழியராகவும் பணியாற்றக்கூடிய வாய்ப்பை பெண்களுக்கு வழங்குகிறது.

குழந்தைப் பராமரிப்பு சேவைகள் (daycare service) : பொதுவாக குழந்தைகள் என்றாலே பெண்களுக்கு அதிக ஈடுபாடு உண்டு. ஒரு வேளை நீங்களும் குழந்தைகளை அதிகளவு நேசிப்பவர்களாக இருந்தால் குழந்தை பராமரிப்பு மையங்கள் தொடங்குவது சரியான தேர்வாக இருக்கும். ஆம் இன்றைக்கு கணவன் மற்றும் மனைவி இருவரும் பணிக்கு செல்கிறார்கள். இந்நேரத்தில் குழந்தைகளைப் பராமரிப்பதற்கு வீட்டில் யாருமே இல்லை என்பதால் பாதுகாப்பான குழந்தைகள் பராமரிப்பு மையங்களை நாடுகின்றனர். அதிலும் பெண்கள் ஆரம்பத்தில், நல்ல வரவேற்பு கிடைக்கும். எனவே இந்தப்பணியை நீங்கள் தேர்வு செய்யலாம். இதுபோன்று உங்களால் வருமானம் ஈட்டக்கூடிய வேலைகளைத் தேர்வு செய்து, உங்களின் குடும்ப தேவைகளுக்கு பெண்களாகிய நீங்கள் உதவி செய்ய முடியும்.

 Click here to join whatsapp group for daily health tip

November 21, 2022

அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள்: தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு

November 21, 2022 0

 

ண்ணா பல்கலைக்கழகத்தில் இ-கவர்ன்ஸ் பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

பணியின் விவரங்கள்:

பதவியில் பெயர்பணிக்காலம்சம்பளம்
System Architect6 மாதம்ரூ.45,000/-
System Analyst6 மாதம்ரூ.35,000/-
System Administrator6 மாதம்ரூ.35,000/-
Programmer Analyst6 மாதம்ரூ.25,000/-
Software Developer6 மாதம்ரூ.20,000/-
Peon cum Driver6 மாதம்தினசரி சம்பளம்


கல்வித்தகுதி:

B.E/B.Tech/ MCA or M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் தேவை.

Peon cum Driver பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் LMV ஓட்டுநர் உரிமம் தேவை.

இதர தகுதிகள்:

Oracle, MySQL, Java, Codeigniter and Web Application Development, Server Maintenance, Linux Operating System, Network Management and Data Base

Administration, Web Application Development using Java/Codeigniter with Oracle/MySQL.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதார்களில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

அண்ணா பல்கலைக்கழகத்தில் இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிட்ட முகவரிக்குத் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

குறிப்பு:

ஒரே விண்ணப்பதார் வெவ்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிக்கையில் ஒவ்வொரு பதவிக்குத் தனி விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

The Director, Centre for e-Governance, Centre for Excellence Building, Anna University, Chennai – 600 025.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 05.12.2022 மாலை 5.00 மணி வரை.

மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

 Click here to join WhatsApp group for Daily employment news  

வேலை கிடைக்காதவர்களுக்கும் வேலை உறுதி... அரசின் அசத்தல் திட்டத்தில் பயன்பெறுவது எப்படி?

November 21, 2022 0

 Short Term Skill Training (STT):  இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறன்களை அதிகரிக்கும் விதமாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (Tamil Nadu Skill Development Corporation) பல்வேறு பயிற்சித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. எந்தவித வேலைவாய்ப்பும் இல்லாமல் புதியதாக வேலைத்தேடும் இளைஞர்கள் இத்திட்டத்தின் கீழ் இலவசமாக பயிற்சி பெறலாம்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் என்றால் என்ன? 

தமிழ்நாட்டில் இயங்கி வரும் தொழிற்சாலைகளின் திறன் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த நிறுவனம் கடந்த 2013ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

அரசு பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், கல்வி மற்றும் தொழிற் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றால் வழங்கப்படும் திறன் பயிற்சிகளை (Skill Training) வடிவமைக்கும், தரப்படுத்தும், மதிப்பீடு செய்யும் அமைப்பாக விளங்கி வருகிறது.

குறுகிய கால திறன் பயிற்சி:  இந்தியத் தொழிலாளர்களில் 62% பேர் 19-24 வயதுக்குட்பட்வர்கள் என்று கணக்கிடப்படுகிறது. ஆனால்,  இதில் 5%க்கும் குறைவானோர் மட்டுமே முறையான செய்தொழிற் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, இளைஞர்களுக்கு தொழிற்நிறுவனங்களுக்கு தேவையான திறன்களை அளிப்பதற்காக  குறுகிய கால திறன் பயிற்சி திட்டம் செயல்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் , கட்டுமானம், தோல், சில்லறை விற்பனை, கைவினைப் பொருட்கள், சுற்றுலா விருந்தோம்பல் போன்ற தொழிற் துறைகளின் கீழ் 150 முதல் 300 மணி நேரங்கள் (3 மாதம் முதல் 6 மாதங்க வரையிலாலான) கால அளவு கொண்ட பயிற்சிகள் வழங்கப்படுகிறது.  

புதிதாக வேலைதேடும் இளைஞர்கள் தங்கள் விருப்பம் மற்றும் தகுதிக்கேற்ப தொழிற்  துறைகளில் பயிற்சியை மேற்கொள்ளலாம். இந்த பயிற்சி முற்றிலும் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது.  மேலும், பயிற்சியில் 80%  வருகைப்பதிவு வைத்திருக்கும் மாணவர்களுக்கு பயணப்படி, போக்குவரத்து செலவுகள்  வழங்கப்படும். பயிற்சியை நிறைவு செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். 90 நாட்களுக்குள் சான்றிதழ் பெற்ற தேர்வருக்கு ஏதாவதொரு நிறுவனத்தில் பணியமர்த்தம் செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். 

எப்படி விண்ணப்பிப்பது?  

திறன் பயிற்சிகளுக்கு பதிவு செய்ய https://candidate.tnskill.tn.gov.in/Candidate/Account/CandidateLogin என்ற இணையதளத்தில் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

முகப்பு பக்கத்தில், 'Click Here to Register'  என்பதை கிளிக் செய்யவும்

தொலைபேசி எண் ( முதன்மையானது மற்றும்  இரண்டாவது ), ஆதார் எண், நிரந்தர முகவரி, வீட்டு முகவரி ஆகியவற்றை சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் எப்போதும் பயன்படுத்தும் தொலைபேசி எண்ணை முதன்மையானதாக  சமரிப்பியுங்கள். ஆதார் எண் சரிபார்க்கப்படும். ஒரு முறை கடவுச் சொல்லை  சமர்ப்பிக்க வேண்டும். 

 உங்களைப் பற்றிய தனிப்பட்ட விவரங்கள், கல்வி விவரங்கள், தொடர்பு கொள்வதற்கான விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் (பயணப்படி, போக்குவரத்து செலவுகள் நேரடியாக வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும்)

இறுதி கட்டமாக, உங்கள் விண்ணப்ப படிவத்தை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பயிற்சி வகுப்பைத் தேர்வு செய்வது எப்படி? 

பதிவு செய்த பிறகு, விண்ணப்பதாரர் தனது Dashboard-ன் மூலம், மாவட்டத்தில் தற்போது  செயல்பட்டு வரும் பயிற்சி வகுப்புகள் குறித்தும், வரவிருக்கும் பயிற்சி வகுப்புகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும், மாநில, மத்திய அரசு பொதுத் துறை நிறுவனங்கள் , தொழிற்நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள் என 50க்கும் மேற்பட்ட பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

விண்ணப்பதாரர், தனக்கு விருப்பமான துறையில் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். உங்கள் விண்ணப்பம்  ஏற்றுக் கொள்ளப்பட்டவுடன் பயிற்சியைத் தொடரலாம். சில பயிற்சி நிலையங்கள், தங்கும் இடம், உணவு வசதியுடன் கூடிய பயிற்சியை வழங்கி வருகிறது. நீங்கள் எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை. இதற்கான செலவை, அரசு ஏற்றுக் கொள்ளும். 

பயிற்சிக்குப் பிறகு, Assessment Agency -மூலம் விண்ணப்பதாரர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதில்,  தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும், 90 நாட்களுக்குள் தனியார் நிறுவனங்களில் பணியமர்த்துவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு குறைந்தது 80,000 பேர் இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகின்றனர்
வேளாண்மை, கட்டுமானம், மேலாண்மை,சுற்றுலா என 30 தொழிற்துறையின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது
பயிற்சி பெற்றவர்களில் குறைந்தது 50% பேர் தனியார் துறையில் பணி நியமனம் பெற்றுள்ளனர்
இடத்தித்தின் கீழ், பயிற்சி நிறுவனங்கள் ஒரு மணி நேரத்திற்கு ரூ. 42.40 -ஐ பயிற்சி கட்டணமாக அரசிடம் இருந்து பெற்று வருகின்ற்ன
70% பயிற்சியாளர்களுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுத் தரும் பயிற்சி நிறுவனங்கள் மட்டுமே 100% நிதியுதவியைப் பெற முடியும்