Agri Info

Adding Green to your Life

December 2, 2022

எந்த நேரத்தில் தயிர் சாப்பிடுவது நல்லது? குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா? ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?

December 02, 2022 0

 தின்பண்டங்கள் முதல் முக்கிய உணவு வரை, புதிதாக தயாரிக்கப்பட்ட தயிருடன் சேர்த்து சாப்பிடும் போதுதான் அந்த உணவு முழுமையடையும்.

இந்த பால் தயாரிப்பு இந்திய உணவின் பிரிக்க முடியாத பகுதியாக இருந்து வருகிறது, இருப்பினும் தயிர் நுகர்வு மற்றும் அதை உட்கொள்ள சிறந்த நேரம் மற்றும் வழி என்ன என்பதில் சில கவலைகள் மற்றும் குழப்பங்கள் உள்ளன.


தினமும் தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

காலங்காலமாக, தயிர் நமது அன்றாட உணவில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது, இது அதன் அமைதியான மற்றும் குணப்படுத்தும் பண்புகள் காரணமாகும். தொடர்ந்து தயிர் சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை மேம்படுத்தவும் மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும் உதவும். அதுமட்டுமின்றி, குளிர்ச்சியான ஆற்றலையும் மீறி ஆண்டு முழுவதும் தயிர் உட்கொள்வதற்கு முக்கியக் காரணம், குடல் ஆரோக்கியம், செரிமானம், வீக்கத்தைக் குறைத்தல், உடல் பருமன் போன்றவற்றை மேம்படுத்த உதவும் ஆரோக்கியமான புரோபயாடிக்குகள் மற்றும் ப்ரீபயாடிக்குகள் உள்ளன.

ஆய்வு என்ன சொல்கிறது?

விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தின் வளர்சிதை மாற்ற நிலைமைகள் குறித்த ஆய்வின்படி, தயிர் சாப்பாட்டுடன் அல்லது உணவுக்குப் பிறகு சாப்பிடுவதை விட உணவுக்கு முன் சாப்பிடுவது நல்லது என்று கண்டறியப்பட்டது. உணவு உண்பதற்கு முன் தயிர் சாப்பிடும் பெண்கள் குடல் அழற்சியில் கணிசமான குறைப்பு மற்றும் செரிமானத்தை மேம்படுத்துவது கண்டறியப்பட்டது.

ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?

ஆயுர்வேதத்தின்படி, குளிர்காலத்தில் தயிர் தவிர்க்கப்பட வேண்டும், ஏனெனில் இது உங்கள் சுரப்பிகளில் இருந்து சுரப்பை அதிகரிக்கிறது, இது சளி சுரப்பை மேலும் அதிகரிக்கிறது. தாஹி இயற்கையில் கபா-கர் ஆகும், இதனால் ஏற்கனவே ஆஸ்துமா, சைனஸ் அல்லது சளி மற்றும் இருமல் போன்ற சுவாச பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இது கடினமாக இருக்கும். எனவே ஆயுர்வேதம் குளிர்காலத்தில் மற்றும் குறிப்பாக இரவு நேரத்தில் தயிர் தவிர்க்க அறிவுறுத்துகிறது.

குளிர்காலத்தில் தயிரை எப்படி சாப்பிட வேண்டும்?

தயிர் குளிர்ச்சியான ஆற்றலைக் கொண்டுள்ளது, ஆனால் குளிர்காலத்தில் அதை உட்கொள்ளும் போது தேன் மற்றும் கருப்பு மிளகு அல்லது வறுத்த சீரகப் பொடி போன்ற மசாலாப் பொருட்களுடன் கலந்து ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பாக இருக்கும், இது ஆற்றலை சமநிலைப்படுத்த உதவுகிறது, உடலில் சளி உருவாவதைக் குறைக்கிறது. செரிமானம் மற்றும் மலச்சிக்கலை மேம்படுத்த மலமிளக்கியாக செயல்படுகிறது.

எத்தனை மணிக்கு மேல் சாப்பிடக்கூடாது?

தயிரில் உங்கள் குடலுக்கு நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன, அவை உங்கள் ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றன. இந்த புளித்த உணவு ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் கால்சியம், வைட்டமின் பி12 மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. குளிர்கால நாட்களில் தயிர் சாப்பிடுவது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சுவாசக் கோளாறு உள்ளவர்கள் மாலை 5 மணிக்குப் பிறகு தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது சளியை உருவாக்கும், குறிப்பாக ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.


 Click here to join whatsapp group for daily health tip

November 30, 2022

சிறை அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு தேதி மாற்றம் - டிஎன்பிஎஸ்சி

November 30, 2022 0

 சிறை அலுவலர் (ஆண்கள்/ பெண்கள்) பணியிடங்களுக்கான தேர்வு டிசம்பர் 22க்கு பதிலாக 26ம் தேதி நடைபெறும்  என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.

முன்னதாக,  தமிழ்நாடு சிறைப் பணிகளில் அடங்கிய சிறைகள் மற்றும் சீர்திருத்தத் துறையின் சிறை அலுவலர் (ஆண்கள்) மற்றும் சிறை அலுவலர் (பெண்கள்) பதவிக்கான ஆதிசேர்க்கை அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதற்கான எழுத்துத் தேர்வு கணினி வழியில்,  சென்னை, மதுரை, கோயம்பத்தூர், திருச்சி, திருநெல்வேலி,சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மையங்களில்  டிசம்பர் 22 அன்று கணினி வழியில் நடைபெறும் என்றும் அறிவிப்பில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, தேர்வை டிசம்பர் 26ம் தேதிக்கு டிஎன்பிஎஸ்சி மாற்றி வைத்துள்ளது.  அதன்படி, டிசம்பர்  26 அன்று முற்பகல் மற்றும் பிற்பகலில் சென்னை, கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம், இராமநாதபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பத்தூர், வேலூர், விருதுநகர், அரியலூர், செங்கல்பட்டு ஆகிய 24 தேர்வு மையங்களில் கணினி வழித் தேர்வாக (CBT Method) நடைபெறும்.  


 Click here to join WhatsApp group for Daily employment news 

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

November 30, 2022 0

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 7301 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 4 நிலை தேர்வை கடந்த ஜுலை மாதம் 24ம் தேதி நடத்தியது. இந்த டிஎன்பிஎஸ்சி தேர்வில் மாநிலம் முழுவதும் 18.5 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இந்த எழுத்துத் தேர்வின் முடிவுகள் டிசம்பர் மாதத்துக்குள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் ஏற்கனவே தெரிவித்திருந்ததது.

குரூப்- 4 பதவிகளுக்கான தெரிவு முறை குறித்த விவரங்களை இங்கே காண்போம்.  

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் பல்வேறு பதவிகளுக்கு பல்வேறு வகையாக தெரிவு முறைகளை (Selection procedure) பின்பற்றுகிறது.

குரூப் 1, குரூப் 2  உள்ளிட்ட பதவிகளுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, வாய்மொழித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள்  தெரிவு செய்யப்படுகின்றனர்.

சிறைக் காவலர், கல்வித் துறையில் உள்ள நிதியாளர், கால்நடை உதவி மருத்துவர் ஆகிய பதவிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள்  தெரிவு செய்யப்படுகின்றனர்.

குரூப் 4 நிலை பதவிகளுக்கு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

குரூப் 4 தெரிவு முறை:  முதற்கட்டமாக,  குரூப் 4 எழுத்துத் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி  தேர்வாணையம் Interactive mode-ல் வெளியிடும். இதில், விண்ணப்பதாரர்கள் தங்களது பதவி எண்- ஐ சமர்ப்பித்து, தங்களின் ஒட்டுமொத்த மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீடு இனவாரியான தரவரிசை, சிறப்பு வகை வாரியான தரவரிசை உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.


சில தினங்களுக்குப் பிறகு, எழுத்துத் தேர்வின் அடிப்படையில், இளநிலை உதவியாளர்/கிராம நிர்வாக உதவியாளர் (Junior Assistant/VAO), தட்டச்சர்(Typist) , சுருக்கெழுத்தர் (Steno Typist) ஆகிய பதவிகளுக்கு இணைய வழி சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வானவர்கள் பட்டியலை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தனித்தனியாக வெளியிடும்.

2018-2019 மற்றும் 2019-202 ஆண்டுக்கான குரூப் 4 தேர்வில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் 4499வது இடத்திற்குள் வந்த தேர்வர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 4130வது வரை இடத்திற்குள் வந்த மிக பிற்படுத்தப்பட்ட தேர்வர்களும்,6366வது வரை இடத்திற்குள் வந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த தேர்வர்களும், 15320 வரைக்குள் வந்த பழங்குடியின தேர்வர்களும் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இந்த தகுதி பட்டியலில் இடம்பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள், தங்கள் சான்றிதழ்களை இணையவழியில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். உங்கள் தகுதியினை உறுதிப்படுத்தும் அனைத்து மூலச் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு:

இணையவழி சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின்னர், எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், மூலச்சான்றிதழ் மற்றும் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர். இதுதொடர்பான, விவரங்களை Interatcive Mode-ல் மூலம் தெரிவிக்கப்படும்.

ஒவ்வொரு, இடஒதுக்கீடு பிரிவுகளிலும் அறிவிக்கப்பட்ட பணி இடங்களை விட இரண்டு மடங்கு பேர்  மூலச்சான்றிதழ் மற்றும் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர்.  தெரிவுப் பணிகள் முழுவதுமாக முடிவடைந்த பின்னரே, மூலச்சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த பட்டியலை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிடும்.

கலந்தாய்வு:      

ஒட்டுமொத்த தரவரிசையின் படி, கலந்தாய்வில்    விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவர்.

கலந்தாய்வு நடைபெறும்போது, பதவிகளின் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை / அலகு (யூனிட்) தொடர்பான விவரங்கள்  Video Projector மூலம் காண்பிக்கப்படும். காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பத்து நொடிக்கும் புதுப்பிக்கப்படும். விண்ணப்பதாரரின் விருப்பத் தேர்வு அடிப்படையில், பதவி / அலகு ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒதுக்கீட்டு ஆணை தனிப்பட்ட பார் குறியீடு (Bar code) அடையாளத்துடன் அப்பொழுதே வழங்கப்படும். `அனைத்து செயல்முறைகளும் CCTVன் மூலம் கண்காணிக்கப்படும்.

ஒவ்வொரு நாள் கலந்தாய்வு முடிந்த பிறகும், துறை வாரியாக மாவட்ட வாரியாக, இடஒதுக்கீடு வாரியாக நிரப்பப்பட்ட பதவிகள் மற்றும் காலிப்பணியிடங்களின் விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.

 Click here to join WhatsApp group for Daily employment news 

வெளியானது குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்பு

November 30, 2022 0

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 பதவிக்கான  முதல்நிலை போட்டி தேர்வின் உத்தேச விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் இந்த உத்தேச விடைக் குறிப்பை மேல் முறையீடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 1 பதவிகளுக்கான முதல்நிலை போட்டி தேர்வு  கடந்த 19ம் தேதி நடைபெற்றது. தேர்வுக்கு விண்ணப்பித்த 3.22 லட்சம் பேரில், 1.9 லட்சம் பேர் மட்டுமே தேர்வினை எழுதினர். இந்நிலையில், இந்த தேர்வுக்கான உத்தேச விடைக் குறிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த, உத்தேச விடைகளில் ஏதேனும் தவறு உள்ளது என்று கருதினால், விண்ணப்பதாரர் மேல்முறையீடு செய்யலாம். 05.12.2022 அன்று மாலை 5.45 மணிக்குள்  தேர்வாணைய இணையதளத்தில் உள்ள 'Answer Key Challenge' என்ற சாளரத்தைப் பயன்படுத்தி முறையீடு செய்யலாம். மேல்முறையீடு தொடர்பான கோரிக்கைகள் ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்படும் என்றும் அஞ்சல் வழியாகவோ, மின்னஞ்சல் வழியாகவோ பெறப்படாது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவுப்படுத்தியுள்ளது.

பெறப்பட்ட வேண்டுகோள்கள் அனைத்தும் ஒவ்வொரு பாடத்திற்கான வல்லுநர்கள் கொண்ட குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும். மேலும், வல்லுநர் குழுவின் பரிந்துரையில் அடிப்படையில், இறுதியான விடைகள் முடிவுசெய்யப்பட்டு, அதன் பின்னர் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணியானது தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

05.12.2022 அன்று மாலை 5.45 மணிக்கு பிறகு இணைய வழியில் பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட மாட்டாது. இறுதி செய்யப்பட்ட விடைகள், தெரிவுப் பணிகள் அனைத்தும் முடிவுற்ற பிறகு தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்படும்.

COMBINED CIVIL SERVICES EXAMINATION- I IN

GROUP- I SERVICES TENTATIVE ANSWER KEYS

 Click here to join WhatsApp group for Daily employment news 


 Click here to join WhatsApp group for Daily employment news 

13,404 காலிப்பணியிடங்கள்: கேந்திர வித்யாலயாவின் மிகப்பெரிய ஆட்சேர்ப்பு அறிவிப்பு

November 30, 2022 0

 முதுநிலை ஆசிரியர், தொடக்க கல்வி ஆசிரியர், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு  கேந்திரிய வித்யாலயா சங்கதன் விரைவில் ஆள்சேர்க்கை அறிவிப்பை  வெளியிட இருக்கிறது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம், 13,404 காலியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பதவி காலியிடங்கள் 
 உதவி ஆணையர்52
தலைமை ஆசிரியர்239
 துணை தலைமை ஆசிரிஅயர்203
முதுநிலை ஆசிரியர்1409
 பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்3176
தொடக்க கல்வி ஆசிரியர்6414
தொடக்க கல்வி (இசை )303
Librarian  நூலகர்355
Finance Officer நிதி அலுவலர்6
  உதவி பொறியாளர்2
உதவி செக்சன் அலுவலர்156
 சீனியர் செயலக உதவியாளர்322
இளநிலை செயலக உதவியாளர்702
 இந்தி மொழிபெயர்ப்பாளர்11
 சுருக்கெழுத்தாளர் - 2நிலை54
மொத்தம்13,404

ஆதாரம்: scroll,zeebiz மற்றும் இதர ஆங்கில ஊடகங்கள்

13,404 மொத்த பணியிடங்களில், ஆசிரியர் பணி நிலையின் கீழ் 11,747 இடங்களும், ஆசிரியர் நிலை இல்லாத பணி நிலையில்  1,657 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.

இந்த பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வரும் டிசம்பர் 5ம் தேதி வெளியாகும் என்றும், டிசம்பர் 26ம் தேதி வரை விண்ணப்பங்கள்  பெறப்படும் என்று கூறப்படுகிறது.

வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு விவரம், எவ்வாறு விண்ணப்பிப்பது என்பன போன்ற விவரங்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்படும்.

அனைத்து  பதவிகளுக்கும், நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடையவராவர்.

முன்னதாக, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் உள்ள காலியிடம் குறித்து, மக்களவையில் 25.07.2022 அன்று  எழுப்பப்பட்ட கேள்விக்கு, கல்வித் துறை இணை அமைச்சர் ஸ்ரீமதி அன்னபூரணா தேவி எழுத்துப்பூர்வமாக பதில்அளித்தார். நாடு முழுவதும் இயங்கும் கேந்திர பள்ளிகளில் 12,404 ஆசிரியர் நிலை பணியிடங்களும், 1332 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் காலியாக உள்ளன என்று  தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 1162 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

அவ்வப்போதைய, விவரங்களை தெரிந்து கொள்ள https://kvsangathan.nic.in/ என்ற இணைய தளத்தை பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 Click here to join WhatsApp group for Daily employment news 

அடிக்கடி வரும் ஏப்பத்தை நிறுத்த சில வழிமுறைகள்

November 30, 2022 0

 ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் உணவுடன் சேர்த்து சிறிது காற்றையும் விழுங்குகிறோம். அந்தக் காற்றை இரைப்பை வெளியேற்றும் போது தான் 'ஏப்பம்' உண்டாகிறது.

 ஒரு நாளில் ஒருமுறை ஏப்பம் வருவது இயல்புதான். ஆனால், அடிக்கடி வரும் ஏப்பம், அருகில் இருப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும். இந்தப் பிரச்சினையை வீட்டுச் சமையல் அறையில் உள்ள பொருட்களின் மூலம் எளிதாகத் தீர்க்க முடியும். அதைப் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம். வேகமாகச் சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது, கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்களைப் பருகுவது போன்ற பல காரணங்களால் ஏப்பம் வரும்.

 இரவில் தாமதமாகச் சாப்பிடும்போதும், மசாலா சேர்த்த உணவுகளை அதிகமாக உண்ணும்போதும் இரைப்பையில் அமிலத்தன்மை அதிகரிக்கும். இதனால் நெஞ்செரிச்சலுடன் புளிப்பான ஏப்பம் உண்டாகும்.

 சாப்பிட்டவுடன் படுத்தால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு ஏப்பம் வரும். அடிக்கடி, அதிக சத்தத்துடனும், ஒருவித வாடையுடனும் வரும் ஏப்பம் அஜீரணம், நெஞ்செரிச்சல், வயிற்று புண் ஆகியவற்றின் அறிகுறி ஆகும். 

ஏப்பத்தைக் கட்டுப்படுத்தும் உணவு முறைகள்:

 இரைப்பையில் தேவைக்கு அதிகமாக சுரக்கும் அமிலத்தன்மையைக் குறைக்கக் கூடிய கீரை வகைகள், இஞ்சி, சோம்பு, சீரகம் போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளும்போது அடிக்கடி வரும் ஏப்பத்தைத் தடுக்க முடியும். 

பழங்கள்: ஆரஞ்சு, எலுமிச்சை, பப்பாளி பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் ஏப்பம் வருவது குறையும்.

புதினா மற்றும் ஏலக்காய் டீ: கொதிக்கும் தண்ணீரில் புதினா இலைகளைப் போட்டு ஐந்து நிமிடங்கள் நன்றாகக் கொதிக்க வைக்கவும். பின்பு அந்த நீரை வடிகட்டி அதனுடன் நாட்டுச் சர்க்கரை கலந்து குடித்து வரலாம். வாயுத் தன்மை அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடும்போது ஏலக்காய் டீ குடிப்பது செரிமானத்தைத் துரிதப்படுத்த உதவும். இதனால் ஏப்பம் வருவது குறையும். 

பெருங்காயம்: சூடான நீரில் சிறிது பெருங்காயத்தைக் கலந்து உணவு சாப்பிடுவதற்கு முன்பு குடித்தால், ஏப்பம் உள்ளிட்ட வயிறு தொடர்பான பிரச்சினைகள் குணமாகும்.

தயிர்: தயிரில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் வயிற்று கோளாறுகளை குணமாக்கும் திறன் கொண்டவை. 

பூண்டு: பூண்டில் இருக்கும் ரசாயன மூலக்கூறுகள், வாயு தொடர்பான கோளாறுகளை நீக்கும். எனவே இதை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

Click here to join whatsapp group for daily health tip

நடைப்பயிற்சியின் போது தாராளமாகக் கைகளை வீசி நடைபோடுங்கள்...

November 30, 2022 0

 • சரியான நிலையில் நடப்பது மிகவும் அவசியம். தலையைத் தாழ்த்தியபடி முன்னோக்கிச் சாய்ந்தபடி நடப்பதால், கழுத்து வலி, முதுகு வலி, தோள்பட்டை வலி ஏற்படலாம். எனவே, முதுகை வளைக்காமல், நடக்கும்போதும் ஓடும்போதும் நேராக இருங்கள். முதுகின் இயல்பான தன்மையைப் பின்பற்றுங்கள்.

 • வயிற்றை உள்ளிழுத்தபடி பயிற்சியில் ஈடுபடுங்கள். கால்கள் நடப்பதற்கு ஏற்ப நம் உடலை பேலன்ஸ் செய்யும் வகையில் கைகள் அசைகின்றன. இதனால் வேகமாக நடக்கலாம். கைகள் அசைக்காமல் நடக்கும்போது, அது முதுகெலும்பில் அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, தாராளமாகக் கைகளை வீசி நடைபோடுங்கள். வாக்கிங்... ஜாகிங்... 

• சம தளத்தில் பயிற்சியில் ஈடுபடுங்கள். கரடுமுரடான ஓடுதளத்தைத் தவிர்த்துவிடுங்கள். 

• ஒரே இடத்தில் நடைப்பயிற்சி செய்யாமல், அவ்வப்போது நடக்கும் இடத்தை மாற்றிக்கொள்ளுங்கள். 

• நடைப்பயிற்சியை மிதமாகத் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரியுங்கள். அதேபோல முடிக்கும்போது வேகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துப் பயிற்சியை முடியுங்கள்.

 Click here to join whatsapp group for daily health tip


November 29, 2022

சென்னை பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

November 29, 2022 0

சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் நேரடி வகுப்புகள் இல்லாமல் மாணவர்களுக்குக் கல்வி வழங்கப்படுகிறது. இங்கு பல்வேறு துறைகள் இயங்குகின்றன. தற்போது இந்த துறைகளில் தற்காலிக அடிப்படையில் உதவிப் பேராசிரியர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் விவரங்கள்:

துறைபணியிடம்
தமிழ்1
ஆங்கிலம்3
பொருளாதாரம்1
வரலாறு1
அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகம்4
குற்றவியல்1
சைபர் தடவியல்1
வணிகம்6
கணிதம்1
உளவியல்4
கணினி அறிவியல்4
மேலாண்மை படிப்புகள்7
இசை3
பிரெஞ்சு4
இதழியல் & தொலைத்தொடர்பில்2
மானுடவியல்2
சமஸ்கிருதம்2
சைவ சித்தாந்தம்2
புவியியல்2
சமூகவியல்1
கிறிஸ்துவ படிப்பு2
மொத்தம்56

கல்வித்தகுதி:

அந்தந்த துறைக்கு ஏற்ற 55% சதவீதம் மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். NET கண்டிப்பாகத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது முழு நேர Ph. D முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

தற்காலிக பேராசிரியர் பணிக்கு மாதம் ரூ.30,000/- சம்பளமாக வழங்கப்படும்.

பணிக்காலம்:

ஒரு செமஸ்டர் விதம் 120 நாட்கள் பேராசிரியராக பணியாற்ற வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதார்களில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். விண்ணப்பதார்களில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் இணையத்தளத்தில் வெளியிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் சென்னை பல்கலைக்கழக இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து குறிப்பிட்ட நாளுக்குள் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கச் செய்ய : https://www.unom.ac.in/

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி :

The Registrar, University of

Madras, Chepauk, Chennai -600 005.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 09.12.2022.

 Click here to join WhatsApp group for Daily employment news 

உங்களுக்கு அடிக்கடி இடுப்பு வலி வருதா..? கொலஸ்ட்ரால் பிரச்சனை இருக்கலாம்... செக் பண்ணுங்க..!

November 29, 2022 0

 நம் கல்லீரலில் உற்பத்தி செய்யப்படும் மெழுகு போன்ற பொருள் தான் கொலஸ்ட்ரால். ஆரோக்கியமான செல்களை உருவாக்க உதவும் கொலஸ்ட்ரால் என்பது குறிப்பிட்ட அளவே இருக்க வேண்டும். இது ரத்தத்தில் அதிகமாக இருப்பின் அது ஹை கொலஸ்ட்ரால் என குறிப்பிடப்படுகிறது.

இதய நோய் முதல் பக்கவாதம் வரை பல சிக்கல்களுக்கு அடித்தளமாக அமைகிறது ஹை கொலஸ்ட்ரால். அதிக கொலஸ்ட்ரால் மற்றும் இதனால் ஏற்படும் தீவிர நோய்கள் முன்னறிவிப்பின்றி வரும் என்பதால் சைலன்ட் கில்லர் எனவும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் ஹை கொலஸ்ட்ரால் தொடர்புடைய சில முக்கிய அறிகுறிகள் உள்ளன. அவற்றை துவக்கத்திலேயே கண்டறிந்தது உஷாராகி விட்டால், தீவிர நோய் அபாயங்களை தவிர்க்க உதவும். உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பதற்கான அறிகுறிகள் துவக்கத்தில் அவ்வளவு தெரியாது என்றாலும், போதுமான விழிப்புணர்வு இருந்தால் அறிகுறிகளை சரியாக அடையாளம் காண வாய்ப்பு அதிகம்.

இடுப்பு அல்லது குளுட்டியல் தசைகளை பாதிக்கும் ஹை கொலஸ்ட்ரால்:

ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பது ரத்த நாளங்களுக்குள் அவை படிந்து plaques-களை உருவாக்குகிறது. இவை ரத்த நலன்களில் செல்லும் ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துகின்றன. சீரான ரத்த ஓட்டம் இல்லாததன் காரணமாக உடலின் பல தசைகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காது. இதன் விளைவாக உடலின் இடுப்பு மற்றும் பின்புறத்தில் குளுட்டியல் தசைகளில் வலி ஏற்படுகிறது.

வழக்கமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடும் போது வலி அதிகரிக்கிறது. நிபுணர்களின் கூற்றுப்படி ஹை கொலஸ்ட்ரால் பிரச்சனையால் முதலில் பாதிக்கப்படக்கூடிய தசைகளில் முக்கியமானவை இடுப்பு தசைகள். இந்த சிக்கல் உள்ளவர்களில் பலர் தாங்கள் துவக்கத்தில் இடுப்பு பகுதியில் பயங்கரமான வலியை உணர்ந்ததாக கூறுவதை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஆனால் பெரும்பாலானோர் கொலஸ்ட்ரால் மற்றும் இடுப்பு வலிக்கு இடையே உள்ள தொடர்பை அலட்சியம் செய்கிறார்கள். ஏனென்றால் இடுப்பு பகுதியில் வலி ஏற்பட்டாலே பெரும்பாலும் எலும்பு பிரச்சனைகளுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. எனவே இடுப்பு தசை வலிகள் மற்றும் கொலஸ்ட்ராலுக்கும் இடையே உள்ள தொடர்பு சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை. ரத்த நாளங்களில் காணப்படும் கொலஸ்ட்ரால் படிவு காரணமாக ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் குறைவதால் ஏற்படும் புற தமனி நோய் (PAD) இடுப்பு, கால்கள் மற்றும் பாதங்களை பாதிக்கின்றன.

அறிகுறிகள்:

அதிகம் தேவை இல்லை, வாக்கிங் போன்ற மிகவும் குறைந்தப்பட்ச உடல்செயல்பாடுகளின் போது இடுப்பு பகுதிகளில் கடுமையான வலியை உணர்வது முதல் மற்றும் முக்கிய அறிகுறியாகும். இந்த வலி பிட்டம், தொடை உள்ளிட்ட தசைபகுதிகளுக்கு பரவ கூடும். எனினும் வலியின் தீவிரம் உடலில் கொலஸ்ட்ரால் இருக்கும் அளவு மற்றும் ரத்த ஓட்டம் தடைபடும் பகுதிகளை பொறுத்து மாறுபடும். ரெஸ்ட் எடுத்தால் இந்த வலி மறைவது பிளா இருக்கும், ஆனால் உடல்செயல்பாடுகளின் போது மீண்டும் வந்துவிடும். தோல் அல்லது நகங்களின் நிறங்களில் ஏற்படும் மாற்றங்கள் PAD-ன் வேறு சில அறிகுறிகள்.

கவனம் தேவைப்படும் பிற அறிகுறிகள்:

கால்களில் இருக்கும் முடி உதிர்தல், கால்களில் உணர்வின்மை, எளிதில் உடைய கூடிய கால் விரல் நகங்கள், ஆறாத கால் அல்லது பாத புண்கள், கால்களில் தசைகள் சுருங்குவது, ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு உள்ளிட்டவை. முன்னரே குறிப்பிட்டது போல இடுப்பு வலி எப்போதும் வயதான அல்லது எலும்பு தொடர்பான நோய்களின் அறிகுறியாக பார்க்கப்படுவதால் அதிக கொலஸ்ட்ராலுடனான தொடர்பை மக்கள் கவனிப்பதில்லை. தவிர உடல் இயக்கத்தில் இருக்கும் போது வலிப்பதும், ஓய்வில் இருக்கும் போது வலி மறைவதுமாக இருப்பதால் முக்கியத்துவம் குறைவாகிறது. பலர் இதை இயல்பான பயாலஜிக்கல் ப்ராசஸாக நினைத்து அசால்ட்டாக இருக்கிறார்கள்.

தவிர்க்க வேண்டியவை:

கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் உணவுகளான கேக், பிஸ்கட், இறைச்சி துண்டுகள், கொழுப்புமிக்க இறைச்சி மற்றும் பாமாயில், கிரீம், ஹார்ட் சீஸ் மற்றும் வெண்ணெய் கொண்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். ஊட்டச்சத்து மிக்க பழங்கள், காய்கறிகள், முழு தானியங்களை டயட்டில் சேர்க்க வேண்டும்.

 Click here to join whatsapp group for daily health tip

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

November 29, 2022 0

 குளிர்காலத்தில் நம் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். மிகவும் குறைந்த வெப்பநிலையில் நாம் நீண்ட நேரம் செயல்படும்போது நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே பாதிக்கப்படுகிறது. மேலும் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பல நோய்களும் குளிர்காலத்தில் பலரை தாக்குகின்றன. அதனால் குளிர் காலத்தில் நம் உடலின் வெப்பநிலையை சரியாக வைத்துக் கொள்ளவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் சில குறிப்பிட்ட உணவு முறைகளை கடைபிடிக்க வேண்டும்.

அதே விதத்தில் குளிர் காலத்தில் நாம் உண்ணக்கூடாத சில உணவு வகைகளும் உள்ளன. இவற்றை தவிர்ப்பதன் மூலமே பல நோய் தாக்குதலில் இருந்து நம்மால் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். அவ்வாறு எந்தெந்த உணவுகளை நாம் தவிர்க்க வேண்டும் என்று ஃபிஸ்கோ டயட் கிளினிக் நிறுவனர் விதி சாவ்லா சில குறிப்புகளை பகிர்ந்துள்ளார்.

காற்றடைக்கப்பட்ட குளிர் பானங்களை தவிர்க்க வேண்டும்:
உங்களுக்கு குளிர்பானங்கள் மீது அலாதி பிரியம் இருக்கலாம். ஆனால் ஏற்கனவே சில்லென்று இருக்கும் இந்த குளிர் காலத்தில் நீங்கள் இந்த காற்றடைக்கப்பட்ட குளிர்பானங்களை பருகும் போது அதில் உள்ள சர்க்கரை உடலின் இன்சுலினை மட்டுப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் வேலையை செய்கிறது. மேலும் வெளிப்புற சூழ்நிலை ஏற்கனவே வெப்பநிலை குறைந்திருக்கும் போது, நம் உடலுக்கு வெப்பம் தேவைப்படும் நேரத்தில் குளிர்ந்த பானத்தை உட்கொள்ளும் போது உடலின் உட்புற வெப்பநிலையும் குறைகிறது. இவற்றிற்கு பதிலாக சூடான சூப் வகைகளை குடிக்கலாம்.

பால் பொருட்களை தவிர்க்க வேண்டும் :பாலில் இருந்து பெறப்படும் தயிர், மில்க் ஷேக் ஆகியவற்றை குளிர் காலங்களில் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை உடலில் அதிக சளியை உண்டாக்குவதோடு இருமல், ஜலதோஷம் ஆகிய பாதிப்புகளை உண்டாக்குகிறது. ஒருவேளை அவற்றை தவிர்க்க முடியவில்லை எனில் மதிய உணவிற்கு முன்னர் பால் பொருட்களை எடுத்துகொள்ளலாம். ஆனால் முடிந்தவரை பாலை மூலப் பொருளாக கொண்டு செய்யப்படும் பொருட்களை குளிர்காலத்தில் உண்பதை தவிர்க்க வேண்டும்.

வறுத்த உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும் : குளிர் காலத்தில் சுடச்சுட பஜ்ஜி, பக்கோடா போன்ற எண்ணெயில் பொரித்த உணவு பொருட்களை உண்பதற்கு இயற்கையாகவே ஆர்வம் உண்டாகும். ஆனால் முடிந்த அளவு இந்த உணவு பொருட்களை உண்பது தவிர்க்க வேண்டும். அதில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள் செரிமான பிரச்சனைகளை உண்டாக்குவதோடு உடலின் சளி உற்பத்தியாவதை தூண்டுகிறது. குளிர்காலம் முடியும் வரை இந்த உணவுப் பொருட்களை உண்பதை தவிர்ப்பது நல்லது.

ஹிஸ்டமைன் நிறைந்த உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும் : தக்காளி, காளான் போன்ற ஹிஸ்டமைன்கள் அதிகம் உள்ள பொருட்களை குளிர் காலத்தில் உண்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவையும் உடலில் சளி உற்பத்தியாவதை அதிகரிக்கும். இவற்றிற்கு பதிலாக பச்சை காய்கறிகளையும் கீரை வகைகளையும் உணவில் சேர்த்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

Click here to join whatsapp group for daily health tip

November 28, 2022

ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி.. ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

November 28, 2022 0

 டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் அறிவியல், கணித ஆராய்ச்சி மற்றும் கல்வி நிலையமாகச் செயல்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் ஐடிஐ படித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய தொழிற்பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொழிற்பயிற்சி விவரங்கள்:

பணி பிரிவுஎண்ணிக்கைவயதுகல்வி
Tuner128 கீழ் இருக்க வேண்டும்ஐடிஐ தேர்ச்சி
Carpenter128 கீழ் இருக்க வேண்டும்ஐடிஐ தேர்ச்சி
Painter128 கீழ் இருக்க வேண்டும்ஐடிஐ தேர்ச்சி

உதவித்தொகை:

தொழிற்பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு ரூ.12,500/- மாத உதவித்தொகையாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தொழிற்பயிற்சிக்கு நேரடி நேர்காணல் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் https://www.tifr.res.in/Positionsஎன்ற இணையத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தேசிய தொழிற்பயிற்சி இணையத்தளத்தில் http://apprenticeshipindia.org/login பதிவு செய்ய வேண்டும்.

நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் நாள் :

Tata Institute of Fundamental Research,1 Homi Bhabha Road, Navy Nagar, Colaba, Mumbai 400005.

டிசம்பர் 21,2022 அன்று நேர்காணல் நடைபெறும்.

மேலும் தகவலுக்கு இங்கே கிளிக்செய்யவும்.


 Click here to join WhatsApp group for Daily employment news 

மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

November 28, 2022 0

 TNPSC Notification:  தமிழ்நாடு கல்விப் பணிகளில் அடங்கிய நிதியாளர் பதிவிக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

காலியிடங்கள் விவரம்: 

பதவியின் பெயர்:  நிதியாளர் , அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியில் கல்லூரிகள் (பதவிக் குறியீடு எண் - 3010)

காலிப்பணியிடங்கள்: 5

சம்பளம்:  ரூ.56,100— 2,05,700 வரை

(நிலை-22)

முக்கியாயமான நாட்கள்: 

இணையவழி விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க இறுதி நாள்10.12.2022
இணையவழி விண்ணப்பத்தை திருத்தம் செய்வதற்கான காலம்15.12.2022 முதல் 17.12.2022
சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய/மாற்ற/ மீள்பதிவேற்றம் செய்ய இறுதி நாள்26.2.2023
கணினி வழித் தேர்வு நடைபெறும் நாள்10.3.2023
தேர்வு முடிவுமே, 2023
சான்றிதழ் சரிபார்ப்பு/நேர்முகத் தேர்வுஜுன், 2023
கலந்தாய்வுஜுன், 2023

யார் விண்ணப்பிக்கலாம்:  விண்ணப்பதாரர்கள்  பொது நிர்வாகத் துறையில் முதுகலை (M.A.Public Administration) பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது நிதித் துறையில் சிறப்பு பாடமாகக் கொண்ட வணிக நிர்வாக  படிப்பில் முதுகலைப் பட்டம் (MBA) நிதித்துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.

Must have passed Post Graduate Degree in Public

Administration

Or

Post Graduate Degree in Business Administration (MBA)

with Specialization in Finance

வயதுக்கான தகுதி:  இந்த  பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதரவற்ற விதவைகள் ஆகிய  பிரிவினருக்கு 37 வயதை பூர்த்தி அடைந்திருக்கக் கூடாது.   ஏனையோர் 1.07.2022 அன்று, 32 வயதினை பூர்த்தி அடைந்திருக்க கூடாது.

விண்ணப்பக் கட்டணம்: 

பதிவுக் கட்டணம் : ரூ.150/ மற்றும் தேர்வுக் கட்டணம் : ரூ 200/

ஏற்கனவே, நிரந்தர பதிவு செய்துள்ள ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர், பட்டியல் பழங்குடியினர் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பம் செய்வது எப்படி? 

www.tnpsc.gov.in/, www.tnpscexams.in ஆகிய இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

 Click here to join WhatsApp group for Daily employment news 

கடல் ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி..! - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

November 28, 2022 0

 மத்திய அரசின் டிஆர்டிஓ பிரிவில் இயங்கும் கடற்படை ஆயுதங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தும் நிறுவனமான கடற்படை அறிவியல் & தொழில்நுட்ப ஆய்வகம் உதவித்தொகையுடன் கூடிய தொழிற்பயிற்சிக்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பட்டப்படிப்பு, டிப்ளமோ மற்றும் ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தொழிற்பயிற்சியின் விவரங்கள்:

கல்விஎண்ணிக்கைஉதவித்தொகை
B.Tech/B.E24ரூ.9,000/-
Technician17ரூ.8,000/-
ஐடிஐ22ரூ.8,000-6,000/-

தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கக் கல்வித்தகுதி பிரிவுகள்:

இயந்திர பொறியியல், கடற்படை கட்டிடக் கலைஞர், கணினி அறிவியல் பொறியியல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல், மின் மற்றும் மின்னணுவியல், CNC ஆபரேட்டர், கணினி ஆபரேட்டர், எலக்ட்ரீஷியன், வெல்டர், ட்யூனர், ஃபிட்டர், மெக்கானிஸ்ட்.

வயது வரம்பு :

தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க 18 வயது நிறைவு செய்திருக்க வேண்டும். 2019,2022 மற்றும் 2021 ஆண்டுகளில் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதார்களின் கல்வித்தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பப்படிவம்

விண்ணப்பிக்கும் முறை:

தொழிற்பயிற்சிக்கு www.mhrdnats.gov.in மற்றும் www.apprenticeshipindia.gov.in என்ற இணையத்தளத்தில் கண்டிப்பாகப் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் முகவரி : admin.dept.nstl@gov.in 

10.12.2022 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

 Click here to join WhatsApp group for Daily employment news