தெற்கு ரயில்வே துறையில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை – Online விண்ணப்பங்கள் வரவேற்பு!
Railway Recruitment Cell ஆனது வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள Level 2 / 3 மற்றும் Level 4 / 5 கீழ்வரும் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
தெற்கு ரயில்வே துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:
தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள Level 2 / 3 கீழ்வரும் பணிகளுக்கு என 16 பணியிடங்களும், Level 4 / 5 கீழ்வரும் பணிகளுக்கு என 05 பணியிடங்களும் விளையாட்டு வீரர்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 01.01.2023 அன்றைய தினத்தின் படி, குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
Level 2 / 3 கீழ்வரும் பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Level 4 / 5 கீழ்வரும் பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இந்த ரயில்வே துறை சார்ந்த பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.19,900/- முதல் ரூ.29,200/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் காலிப்பணியிடங்கள், கல்வி தகுதி, விளையாட்டு துறையில் செய்த சாதனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில்வே துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் SC / ST / Women / EXM / PwBD / அரசு ஊழியர்கள் போன்றவர்கள் ரூ.250/- விண்ணப்ப கட்டணமாகவும், மற்ற நபர்கள் ரூ.500/- விண்ணப்ப கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.rrcmas.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை இறுதி நாளுக்குள் (02.01.2023) விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.