Agri Info

Adding Green to your Life

January 11, 2023

நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்! - கைகொடுக்கும் கைவினை பொருட்கள்... அரசின் சுயதொழில் பயிற்சி!

January 11, 2023 0

 கலைப்பொருட்களுக்கு என்று பெரிய சந்தை உள்ளது. உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளும் கைவினைப்பொருட்களுக்கு என்று பெரிய அளவிலான சந்தைகள் உண்டு. தமிழ்நாட்டின் குறிப்பிட்ட பாரம்பரிய மற்றும் பெருமைக்குரிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு எனப்படும் அங்கீகாரம் கொடுக்கப்படுகிறது. அதில் கைவினைப்பொருட்களும் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தது கைவினைப்பொருட்களை உற்பத்தி செய்வது 2வது பெரிய வேலைவாய்ப்பு பிரிவாக இருக்கிறது. இந்தியாவில் பெரும்பாலும் கைவினைப்பொருட்கள் உற்பத்தி கிராமங்களிலிருந்து சிறிய அளவிலான நகரங்களில் இருந்து நடைபெற்று உலகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

தஞ்சாவூர் ஓவியங்கள், குடைவரை சிற்பங்கள், மரக்கடை சிற்பங்கள், நகை வேலைப்பாடுகள், உலோக சிற்பங்கள், ஜவுளி, பாய் முடைதல், மட்பாண்டம் மற்றும் மண் சிற்பங்கள் மற்றும் கார்பெட் செய்தல் போன்ற கலைத்திறன்கள் மூலம் தமிழ்நாட்டில் இருந்து பல விதமான கைவினைப்பொருட்கள் விற்பனைக்குச் செல்கிறது.

கைவினைப்பொருட்கள் செய்வதைக் கற்றுக்கொள்ளப் பெரிய அளவிலான படிப்பு அவசியமில்லை. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கூட அரசின் கைவினைப்பொருட்களுக்கான பயிற்சியை உதவித்தொகையுடன் பெற்று சுயமாக நிதி உதவியுடன் தொழில் தொடங்கலாம். மேலும் பட்டம் பெற விரும்பும் மாணவர்கள் கலை மற்றும் பண்பாட்டுத் துறை கீழ் அரசால் நடத்தப்படும் கல்லூரிகளில் சேர்ந்து கலையைக் கற்றுக்கொண்டு சுயதொழில் தொடங்கலாம் அல்லது நிறுவனங்களில் பணி செய்யலாம்.

கைவினைப்பொருட்கள் தயார் செய்யப் பயிற்சி பெறுவது எப்படி :

தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகத்தில் (பூம்புகார்) கைவினைக்கலைஞர்களுக்கு 5 மாத IDTDP(Integrated Development and Promotiion of Handicrafts) பயிற்சி மற்றும் 2 மாத DRDC(Design Research and Development Centre) பயிற்சி அளிக்கின்றனர். IDTDP மூலம் கலைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டு மற்றும் புதிய வகையை டிசைன்களை அறிமுகப்படுத்தப்படும். DRDC பயிற்சி மூலம் 3டி தொழில்நுட்ப மூலம் செய்யப்படும் பொருட்கள் மற்றும் ஓவியங்கள் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

IDTDP திட்டத்தின் மூலம் பயிற்சி பெரும் கலைஞர்களுக்கு ரூ.5000 மதிப்பிலான கருவிகள் வழங்கப்படும். 10,000 கலைஞர்கள் இதன் மூலம் பயனடைகின்றனர். கைவினைக்கலைக்களுக்கு என்று தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறது. அதில் சேர்ந்து பயிற்சி பெற்று இதனைத் தொழிலாக மாற்றிக்கொள்ளலாம். பயிற்சி காலத்தில் ரூ.7,500/- உதவித்தொகையாக வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசால் சுவாமிமலை மற்றும் ஈரோடு பகுதியில் வெண்கலம் சிலைகள் செய்ய ரூ.30 லட்சம் செலவில் 3 வருடங்கள் பயிற்சி அளிக்கும் திட்டம். 100 பெண்களுக்கு ரூ.83 லட்சம் செலவில் தஞ்சாவூர் ஓவியம் வரையப் பயிற்சி அளிக்கும் திட்டம். அதே போல், ரூ.80 லட்சம் செலவில் காகித மேச் பயிற்சி 50 பெண்களுக்கு அளிக்கும் திட்டம் மற்றும் சிறப்புக் குழந்தைகளுக்கு ரூ.16 லட்ச செலவில் காகித மேச் பயிற்சி போன்ற திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.

கைவினைப் பொருட்கள் செய்யும் பயிற்சி அளிக்கும் இடங்கள்:

வெண்கல்லைப் பொருட்களைச் செய்யச் சுவாமிமலை, கும்பகோணத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பித்தளை விளக்கு செய்ய நாச்சியார் கோவில்,கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, சிவகங்கை இடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தஞ்சாவூர் ஓவியம், தஞ்சாவூர், திருச்சி, சென்னை ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தஞ்சாவூர் தட்டு செய்யப் பயிற்சி தஞ்சாவூரில் வழங்கப்படுகிறது. மரக்கடைசல் செய்ய கள்ளக்குறிச்சி, அரும்பாவூர், தம்மம்பட்டி மற்றும் சின்னசேலம் பகுதிகளில் பயிற்சி வழங்கப்படுகிறது.

சந்தனமரக்கடைசல் செய்ய கள்ளக்குறிச்சியிலும் கற்சிற்பம் செய்ய மாமல்லபுரம், நாமக்கல் மற்றும் கோவை ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இது போல், டெரகோட்டா, பாய் முடைதல், பனையோலை, கடற்சிப்பிகள், செயற்கை இழை(பையர்), நகைகள் செய்தல் போன்ற கைவினைப்பொருட்கள் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் செய்யப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

குறிப்பாக, நாச்சியார் வெண்கல விளக்குகள் புதிய வடிவமைப்புகளில் உருவாக்கம் மூன்று மாத பயிற்சி தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார் கோவிலில் வழங்கப்படுகிறது. திருச்சி ஸ்ரீரங்கத்தில், தஞ்சாவூர் ஓவியம் வரைதல் தொடர்பாகப் பெண்களுக்கான ஒரு வருடப் பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சி பெரும் பெண்களுக்கு ரூ.2000/- பிழைப்பூதியமும், மூலப்பொருட்களும் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும் மரவேலைப்பாடுகள் தொடர்பாக 1 வருடப் பயிற்சி ரூ.2000/- பிழைப்பூதியமும் மற்றும் மூலப்பொருட்களுடன் சின்ன சேலத்தில் வழங்கப்படுகிறது. தஞ்சாவூர் தட்டு தயார் செய்ய மயிலாடுதுறை பூம்புகாரில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதே போல், மூங்கிலைக் கொண்டு கலைப்பொருட்கள் செய்யத் திறன் மேம்பாட்டுக் கழகத்தினால் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் பல தனியார் நிறுவனங்களும் கைவினைப்பொருட்கள் தாயார் செய்யப் பயிற்சி அளிக்கின்றனர். கைவினைப்பொருட்களில் உள்ள பல்வேறு சிறப்புப் பொருட்களுக்கான சான்றிதழ் படிப்பினை முடித்து சான்றிதழ் பெறுவதன் மூலம் தொழில் தொடங்க மற்றும் தயார் செய்த பொருட்களை விற்பனை செய்யப் பயனுள்ளதாக இருக்கும்.

நிதி உதவி :

கைவினைஞர்கள் தயாரிப்புகளைக் கண்காட்சி மூலம் சந்தைப்படுத்துவதற்கென ரூ.50,00,000/- நிதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 200 கலைஞர்கள் பயன்பெறுகின்றனர். ஒரு நிகழ்ச்சிக்கு ரூ.25,000/- கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் வெளிநாடுகளில் சந்தைப்படுத்திட ஒரு நிகழ்ச்சிக்கு ரூ.50,000/- வழங்கப்படுகிறது.

மேலும் தொழில்முனைவோர்களுக்கு என்று வங்கியில் வழங்கப்படும் கடன் உதவியும் கைவினைப்பொருட்கள் வியாபாரத்திற்கு பெற்றுக்கொள்ளலாம்.

கைவினைப்பொருட்கள் செய்ய கற்று கொள்ளவதன் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் என்ன?

டிசைனர் மற்றும் ஸ்கெட்சர், டிரில் மெஷின் ஆபரேட்டர், கணினிடிசைனர், மிக்சிங் ஆப்ரேட்டர், லேப் அசிஸ்டென்ட், துறை ஆய்வாளர், சில்வர் கோட்டிங் டெங்னீசியன், தரம் நிர்ணயிக்கும் சூப்பர் வைசர் போன்ற பணிகளை நிறுவனங்களில் பெறலாம்.

மேலும் சரியான முறையில் பயிற்சி பெருப்பவர்கள் சிறிய அளவில் வீட்டில் இருந்தபடியே கூட தொழில் தொடங்கலாம்.

கைவினைப்பொருட்களை விற்பனை செய்வது எப்படி?

கைவினைஞர்களுக்கான தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக்கழகம் 1973 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இக்கழகத்தின் வணிக நிறுவனமாகப் பூம்புகார் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் மூலம் கைவினைப் பொருட்களில் பெரும்பாலானவை பூம்புகார் நிறுவனத்தின் வாயிலாகச் சந்தைப்படுத்தப்படுகின்றது. கைவினைப்பொருட்கள் மற்றும் கார்பெட் துறைதிறன் கவுன்சில் மற்றும் PMKVY ஆகிய நிறுவனங்கள் மூலம் கைவினைஞர்கள் தயாரிக்கும் பொருட்களைச் சந்தைப்படுத்தலாம்.

இவை பொருட்களில் தரத்தை மேம்படுத்த, தகுந்த பயிற்சி அளிக்க மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கச் செயல்படுகின்றனர். மேலும் கைவினைஞர்களுக்கு சமூக, பொருளாதார பாதுகாப்பு அளித்தல் மற்றும் சிறந்த படைப்புகளுக்கான விருதுகள் வழங்குதல் போன்றவற்றை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

கைவினைஞர்களுக்கு வழங்கும் விருதுகள்:

பூம்புகார் மாநில விருது, பூம்புகார் மாவட்ட கலை விருது, Gen Next Competition மற்றும் Living Craft Treasure போன்ற விருதுகள் கைவினைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது.

ரூ.2 லட்சம் வரை சம்பளம்.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை..!

January 11, 2023 0

 என்ஜினீயர்ஸ் இந்தியா நிறுவனத்தில் (Engineers India Limited) மேலாளர் பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு அனுபவம் வாய்ந்த Metallurgical/Mechanical பொறியியலாளர்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். Deputy General,Assistant General மற்றும் Senior Manager பதவிகளுக்கு 5 பணியிடங்கள் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது. அதிகபட்சம் 47 வயது வரை உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்வயது
Deputy General Manager1ரூ.1,20,000-2,80,00047
Assistant General Manager2ரூ.1,00,000-2,60,00044
Senior Manager2ரூ.90,000-2,40,00040

கல்வித்தகுதி: இப்பணியிடங்களுக்கு Metallurgy/Mechanical பாடத்தில் B.E./B. Tech/B. Sc. (Engg.) பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தது 12 வருடத்தில் இருந்து 19 வருட அனுபவம் தேவை.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் https://engineersindia.com/ என்ற இணையத்தளத்தில் ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்

ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://recruitment.eil.co.in/

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 17.01.2023.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

ரூ.90,000 வரை சம்பளத்தில் மத்திய அரசு வேலை - 10 ஆம் வகுப்பு, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

January 11, 2023 0



கைத்தறி மேம்பாட்டு ஆணையர் அலுவலகம் கீழ் செயல்படும் நெசவாளர் சேவை மையம், சென்னை தென் இந்தியாவில் உள்ள நெசவாளர் சேவை மையங்களில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 30 வயதிற்குரிய ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்பணியிடம்வயது
Senior Printer130
Junior Weaver130
Junior Printer130
Junior Assistant (Weaving)230
Attendant (Weaving)130

கல்வித்தகுதி:

பதவியின் பெயர்கல்வி
Senior Printer10 ஆம் வகுப்பு தேர்ச்சி, பிரிண்டிங் டிப்ளமோ. 8 வருட அனுபவம்.
Junior Weaver10 ஆம் வகுப்பு தேர்ச்சி, நெசவு செய்தலில் 8 வருட அனுபவம்
Junior Printer10 ஆம் வகுப்பு தேர்ச்சி, பிரிண்டிங் டிப்ளமோ. 5 வருட அனுபவம்.
Junior Assistant (Weaving)10 ஆம் வகுப்பு தேர்ச்சி, Textile Weaving Trade டிப்ளமோ.
Attendant (Weaving)10 ஆம் வகுப்பு தேர்ச்சி,Textile Weaving/Winding/Warping Trade டிப்ளமோ.
 2 வருட அனுபவம்

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதார்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் http://handlooms.gov.in/ என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தைப் பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் இணைத்து விரைவு தபால் மூலம் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : http://handlooms.gov.in/

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

Director (South Zone), Weavers’ Service Centre, C.1.B, Rajaji Bhawan, Besant Nagar

Chennai-600090.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 29.01.2023.

பெண்களுக்காக... தங்கத்தில் முதலீடு.. லாபம் தருமா?

January 11, 2023 0

 தங்கத்தின் பயன்பாடு நம் நாட்டில் மிக அதிகம். குறிப்பாக பெண்கள் தங்க நகைகளை விரும்பி அணிவது என்பது காலம் காலமாக நடந்து வரும் தவிர்க்க முடியாத வழக்கம். 

ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும் போது பெண் வீட்டார் அந்த பெண்ணிற்கு தங்க நகைகள் அணிவிக்க வேண்டும் என்பது நம் நாட்டில் கட்டாய சம்பிரதாயம் ஆகி விட்டது. மேலும் திருமணம் உள்ளிட்ட குடும்பத்தாரின் சுப நிகழ்ச்சிகளுக்கு செல்கிற போது பெண்கள் தங்க நகைகளை கழுத்திலும், கைகளிலும் அணிந்து செல்வது என்பது மாற்ற முடியாத நடைமுறை. இதனால் என்னவோ.. இப்போது தங்கத்தின் விலை நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு ஏறிக்கொண்டே இருக்கிறது.

முதலீடு செய்ய வேண்டிய நிலத்தில் காசை போடவேண்டும். அல்லது தங்கத்தில் போட வேண்டும் என்று சொல்வார்கள். இதனால் தங்கம் இன்று சிறந்த முதலீடாகவும் ஆகிவிட்டது. 
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போவதால் குறுகிய கால முதலீடாக தங்கத்தை பலரும் வாங்கி குவிக்க தொடங்கி விட்டனர். எனவே தங்க நகைகள், தங்கத்தில் முதலீடு செய்யக் கூடிய பரஸ்பர நிதி நிறுவனங்களின் கோல்டு ஈ.டி.எப் பிளான் போன்றவற்றில் முதலீடு செய்வது நல்லது.

 ஈ.டி.எப் திட்டத்தின்படி தங்கத்தை தொழில் நிறுவனங்களின் பங்குகளை பங்கு சந்தை வர்த்தகத்தின் மூலம் எப்படி வாங்கவோ விற்கவோ இயலுமோ அதே போல் தங்கத்தை வாங்கவோ விற்கவோ முடியும்.

இம்முறையில் பரிவர்த்தனையாகும் தங்கம் நேரடியாக தரப்படமாட்டாது. மாறாக அதுவாங்குகிறவரின் டிமேட் கணக்கில் வரவு வைக்கப்படும். தேவை ஏற்படும்போது பங்குகளை விற்பதைப்போல் இந்த தங்கத்தையும் விற்பனை செய்து பணத்தை வாங்கி கொள்ளலாம். 

இந்த திட்டத்தினால் தங்கத்தின் தரத்தைப்பற்றியோ பாதுகாப்பு பற்றியோ எந்த பயமும் உங்களுக்கு இருக்காது. கடந்த 3 ஆண்டுகளில் கோல்டு ஈ.டி.எப் திட்டத்தில் செய்த முதலீடு சுமார் 30 சதவீத வருவாயை எட்டியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தனி நபருக்கான வட்டி விகிதம் 15 சதவீதம் முதல் 16 சதவீதம் வரை இருக்கிறது. இந்த நிலையில் கோல்டு ஈ.டி.எப் திட்டம் நிச்சயம் லாபகரமானதாகவே விளங்குகிறது.


தங்கம் நகையாக முதலீடு செய்கிறபோது செய்கூலி சேதாரம் போன்றவை கழிக்கப்பட்டு விடுகிறது. எனவே இப்போது வங்கிகளில் கட்டிகளாக விற்கப்படும் தங்கத்தை வாங்கி அப்படியே வங்கி லாக்கர்களிலேயே அதனை வைத்தும் பாதுகாக்க தொடங்கி விட்டனர். பின்னர் தங்கத்தின் விலை பன்மடங்காக அதிகரித்து பணத்தேவையும் ஏற்படுகிறபோது இந்த தங்க கட்டிகளை விற்பனை செய்து அதிக லாபத்தை அடையமுடிகிறது.

 தற்போது இந்த பரஸ்பர நிதி நிறுவனங்கள் இந்த கோல்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன. அதாவது தங்கத்திற்கான பணத்தை நீங்கள் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யலாம். அவர்களும் உங்கள் பெயரில் தங்கம் வாங்கி உள்ளதாக கூறி உங்களுக்கு டாக்குமெண்டும் அனுப்பி வைப்பார்கள். ஆனால் இந்த முதலீட்டை நீங்கள் திரும்பப் பெற நினைத்தால் அடுத்த இரண்டு தினங்களில் அப்போதைய தங்கத்தின் மதிப்பிற்கான பணத்தை பரஸ்பர நிதி நிறுவனம் உங்களுக்கு அளித்து விடுகிறது. இதில் அவர்களுக்கு ஒரு சிறிய லாபம் மட்டும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. 

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இதர முதலீடுகளைப்போல தங்கத்தில் முதலீடு செய்வதில் எந்த சட்ட சிக்கல்கள் எதுவுமே கிடையாது. தரம் மட்டுமே முக்கியம். சுத்தமான தங்கம் என்று உங்களை நம்பவைக்கிற மாதிரி பேசி குறைந்த தங்கத்தை தலையில் கட்டிவிடுவார்கள். 

24 காரட் தங்கம் என்று சொல்லி 18 காரட் தங்கத்தை தந்து ஏமாற்றி விடுவார்கள். அதனை விற்கும்போதும் அல்லது அடகு வைக்கும் போதுதான் இந்த உண்மை நிலவரம் உங்களுக்கு தெரியவரும். அதற்கு நம்பிக்கையான இடத்தில் தங்கத்தை வாங்குவது அவசியம். எப்போது வேண்டும் என்றாலும் வங்கிகளிலோ, நிதி நிறுவனங்களிலோ தங்கத்தை அடகு வைத்து பணம் பெறலாம். ஆக.. தங்கத்தில் செய்யப்படும் முதலீடும் ஒரு வகையில் இன்று லாபம் தரும் வணிகமாகவே கருதப்படுகிறது.

கண்கள்: தெரிந்ததும், தெரியாததும்..

January 11, 2023 0

 மனிதன் சராசரியாக 10 வினாடிகளுக்கு ஒரு முறை கண் சிமிட்டுகிறான். கண்கள் மற்ற உறுப்புகளை விட காயம்பட்டால் விரைவில் குணமாகும் தன்மை உடையது (48 மணிநேரம்) சரியான பராமரிப்பு இருந்தால்... பிறந்த குழந்தைகளுக்கு அதிகம் கண்ணீர் வராது. அது தகவல் பரிமாறுவதற்கே அழுகிறது. கண்ணீர் வருவதற்கு 4-13 வாரங்கள் வரை பிடிக்கும். 

உலகில் 39 மில்லியன் மக்கள் சராசரியாக பார்வையற்றவர்களாக உள்ளனர். கண்களின் கோள வடிவ செல்கள் (ராட் செல்) வடிவத்தையும் கூம்பு வடிவ செல்கள்(கோன் செல்) நிறங்களையும் பார்க்க உதவுகின்றன. உங்கள் கண்களின் அளவு கிட்டத்தட்ட ஒரு அங்குலம் அகலம் கொண்டது. எடை 0.25 அவுன்ஸ்.


சிலர் இயற்கையாகவே ஒரு கண்ணில் ஒரு நிறமும் மற்ற கண் இன்னொரு நிறமுமாக பிறந்திருப்பார்கள். இது ஒருவகை நோய். அதன் பெயர் ஹீடகோமியா. மற்ற தசைகளை விட கண் தசைகள் எந்நேரமும் சுறுசுறுப்பாகவும் விரைந்து இயங்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கின்றன. 

80 சதவிகித கண்நோய்கள் உலகில் தீர்க்கப்படக் கூடியதாகவும் நிவாரணம் பெறக் கூடியதாகவும் உள்ளது. உலகில் பொதுவான கண் நிறம் பிரவுன். கண்களின் நிறம் கருவிழி படலத்தில் உள்ள மெலனினை கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. நாம் பிறந்ததிலிருந்து அனைத்து உறுப்புகளும் வளர்கின்றன கண்களை தவிர. 

கண்கள் பிறப்பில் உள்ள அளவுதான் எப்போதும் இருக்கும். கண்கள் திறந்தபடி தும்முவது சிரமமானது; பெரும்பாலும் அப்படி தும்ம முடியாது. தீக்கோழிக்கு அதன் மூளையை விட கண்கள் பெரிதாக இருக்கும். புகைப்பிடிப்பது கண்களைப் பாதிக்கும். 

குறிப்பாக இரவு கண் பார்வையை. பல்லிகள் மனிதனைவிட நிறங்களை அறிவதிலும், இருட்டில் பார்ப்பதிலும் 350 மடங்கு சிறந்ததாக விளங்குகிறது. டால்பின்கள் ஒரு கண் திறந்தபடியே படுக்கும். தேனீக்கு 5 கண்கள் உண்டு. மூளைக்குப் பிறகு சிக்கலான உறுப்பு கண்கள்தான்.

January 10, 2023

2023-ல் சுற்றுலா செல்ல திட்டமா? இந்தியாவில் உள்ள சிறந்த இடங்களின் லிஸ்ட் இதோ!

January 10, 2023 0

 சுற்றுலா என்பது மனதிற்கு இனிமைத் தரக்கூடிய ஒரு சுகமான பயணம்.. என்ன தான் ஆண்டு முழுவதும் வேலைப்பார்த்தாலும் குடும்பத்தோடு அல்லது நண்பர்களோடு ஒரு ட்டீப் போன எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் அனைத்தும் பறந்தோடிவிடும். அதிலும் இயற்கை எழில் கொஞ்சம் இடங்கள் என்றால் அதை விட்டு வரவே நமக்கு மனம் இருக்காது. இதோ இந்த 2023 ஆம் ஆண்டில் நீங்கள் டூர் போக ப்ளாண் பண்ணிருந்தா? இதோ அதற்கான சிறந்த இடங்கள் என்னென்ன இந்தியாவில் உள்ளது என முதல்ல தெரிஞ்சுக்கோங்க. இதோ அந்த லிஸ்ட் உங்களுக்காக…

தால் ஏரி, ஸ்ரீநகர் : இந்தியாவின் வடக்கு எல்லையில் ஸ்ரீநகரில் அமைந்துள்ள ஏரி தான் தால் ஏரி. சுமார் 26 கிமீ பரப்பளவில் விரிந்திருக்கம் இந்த ஏரி, ஸ்ரீ நகருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் விருப்பமான மற்றும் முதன்மையான ஒன்றாக உள்ளது. இமயமலையை பின்னணியாகக் கொண்டிருக்கும் இந்த ஏரியில் மரப்படகு மிகவும் புகழ் பெற்றது. இதில் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகளில் இயற்கையில் அழகைக் கண்டு ரசிக்கலாம். சூரிய அஸ்தமானத்தை படகில் பயணம் செய்து பார்க்க முடியும். இதோடு நீச்சல் போட்டிகள், நீர் சறுக்குதல், கேனோயிவ் ஆகியவை இந்த ஏரியில் உள்ள புகழ்பெற்ற விளையாட்டாகும்

வாரணாசி, உத்தரபிரதேசம் :உலகின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாக உளளது வாரணாசி. ஆன்மீக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த இடம் நல்ல தேர்வாக அமையும். சிவனின் அனுக்கிரகம் இருக்கும் ஊர் காசி என்றும் அழைக்கப்படுகிறது. காசியில் நீராடினால் செய்த பாவங்கள் அனைத்தும் போகும் என்பது ஐதீகம். சுற்றுலா செல்ல விரும்புவோர் இங்கு செல்லலாம். நீங்கள் ஆண்டுமுழுவதும் நினைவில் இருக்கும் படியான பல புகைப்படங்களை எடுப்பதற்கும் இங்கே பல இடங்கள் உள்ளது.

பாங்காங் ஏரி, லடாக் : நீங்கள் மிகவும் சுவாரஸ்சியமான இடங்களைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் இதற்கு நல்ல தேர்வு பாங்காங் ஏரி தான். இந்தியாவில் லடாக் ஒன்றியப் பகுதியில் உள்ள லே மாவட்டத்தின் கிழக்கில் இந்திய- திபெத் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. மலைகளுக்கு இடையே கண்களைக் கொள்ளைக் கொள்ளுதம் அழகான ஏரி, அதன் பின்னால் பனியால் மூடப்பட்ட மலைகள் என எந்த திசையில் இருந்து பார்த்தாலும் நமது கண்களுக்கு விருந்தளிக்கும் என்பதில் மாற்றம் இல்லை. குறிப்பாக பாங்காங் ஏரி உப்பு நீர் ஏரியாக இருந்த போதும், குளிர்காலங்களில் இதிலுள்ள நீர் முழுவதும் பனிக்கட்டியாக உறைந்துவிடுவதும் பார்ப்பதற்கு அழகு தான். ஒருவேளை நீங்கள் இந்த இடத்திற்கு செல்வதற்கு ப்ளான் செய்திருந்தால் எப்போதும் உங்களது கேமிராவை ஆன் செய்து வைக்கவும். ஏனென்றால் அந்த அளவிற்கு இயற்கையின் அழகு கெட்டிக்கிடக்கிறது.

ஆலப்புழா, கேரளா : கேரளா மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் சுற்றுலாவிற்கு ஏற்றதாக இருந்தாலும் ஆலப்புழாவில் உள்ள படகு இல்லம் குடும்பத்தோடு செல்வதற்கு ஏற்றது. மிகப்பெரிய ஏரியில் படகில் பயணித்து கேரளத்தின் அழகை ரசிக்கலாம்

ஷில்லாங், மேகாலயா : வடகிழக்கு இந்தியாவில் அமைந்துள்ள இடம் தான் ஷில்லாங். கடல் மட்டத்தில் இருந்து 1525 மீட்டர் உயரத்தில் உள்ள மலை வாழிட நகரம் தான் இது. மலையில் இயற்கையின் அழகோடு பயணம் செய்து சுற்றுலாப் பயணிகளுக்கு விருந்து தான். எப்போதும் குளிராக இந்த நகரம் கிழக்கின் ஸ்காட்லாந்து என்றும் அழைப்பார்கள்.

வேலி ஆப் பிளவர்ஸ் நேஷனல் பார்க், உத்தரகாண்ட் : இயற்கையை ரசிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற இடம் தான் வேலி ஆப் பிளவர்ஸ் நேஷனல் பார்க். இமயமலைப் பகுதியில் உத்தரகாண்டில் அமைந்துள்ள இடத்தில் அழகு நிறைந்த வித்தியாசமாக மலர்களைக் காணலாம்.. மலர் பள்ளதாக்கில் எங்கு பார்த்தாலும் கலர்புல்லான மலர்கள் எப்போதும் கண்களுக்கு விருந்து தான்.

கோவா : இந்தியாவின் மேற்கு கரையில் அமைந்துள்ள சிறிய நகரம் ஆகும். நண்பர்களோடு பயணம் செய்வதற்கு ஏற்ற இடம் தான் இது. எங்கு பார்த்தாலும் கடற்கரை ரிசாட், சன் பாத், கடற்கரையில் விளையாட்டு என சுற்றுலாவிற்கு ஏற்றது

கட்ச் பாலைவனம், குஜராத் : மலைகள், ஆறுகள், ஏரிகள், மலர்கள் என ரசிப்பது போதும் என்று நினைத்தால் நீங்கள் குஜராத்தில் உள்ள கட்ச் பாலைவனத்திற்கு டூர் ப்ளான் பண்ணலாம். பாலைவனத்தில் வாக்கிங், அங்குள்ள விலங்குகளைப் பார்ப்பது ஒரு புதுவித அனுபவமாக இருக்கும்.

இதுப்போன்று இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள கஜியார் போன்ற இடங்களும் சுற்றுலாவிற்கு சிறந்த இடங்கள் தான். இது மட்டுமில்லாமல் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் சுற்றுலாவிற்கு ஏற்ற பல்வேறு இடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


 Click here to join whatsapp group for daily health tip

புத்தாண்டுக்குப் பின் உடல் எடையை குறைக்க டயட் இருக்கிறீர்களா? முதலில் இதை படிங்க.! உங்களுக்கான 6 வழிமுறைகள்

January 10, 2023 0

 கிறிஸ்துமஸ், அதைத் தொடர்ந்து புத்தாண்டு என்று அடுத்தடுத்து விடுமுறை தினங்கள் அணிவகுத்த நிலையில், உங்கள் உணவுக் கட்டுப்பாடு எல்லை மீறி சென்றிருக்கும். அடுத்ததாக பொங்கல் விடுமுறை நாட்களிலும் கூட உணவு வேட்டை எல்லை மீறி செல்வதை நம்மால் தடுக்க இயலாது. ஆக, தவிர்க்க இயலாத சூழலில் இந்த பண்டிகை தினங்களை கொண்டாட்டமாக கழிக்கும் அதே வேளையில், உணவுப் பழக்கத்தை ஆரோக்கியமானதாக மாற்றுவது எப்படி என்பது குறித்து இந்தச் செய்தியில் பார்க்கலாம்.

எளிமையான இலக்குகளை நிர்ணயிக்கவும் : திடீரென்று தடாலடியாக உணவுக் கட்டுப்பாடு விதித்து விட முடியாது. அதை கடைப்பிடிப்பதும் சிரமம். ஆகவே உங்களால் இப்போதைக்கு எளிமையாக என்ன பழக்கத்தை விட முடியுமோ, அதை இலக்காக நிர்ணயம் செய்து கொள்ளவும். உதாரணத்திற்கு காய்கறி, பழங்களின் அளவுகளை அதிகரிக்கும் அதே வேளையில் இனிப்பு மிகுந்த செயற்கை குளிர்பானங்களை குறைத்துக் கொள்ளலாம்.

முன்கூட்டியே டயட் திட்டம் மேற்கொள்வது : அடுத்த வேளைக்கு என்ன உணவு சாப்பிட வேண்டும், என்ன ஸ்நாக்ஸ் எடுத்துக் கொள்ளலாம் என்று முன்கூட்டியே திட்டமிட வேண்டும். முன்கூட்டியே யோசிப்பதால் ஆரோக்கியமற்ற உணவு வகைகளை நம் மனம் தாமாகவே தவிர்த்து விடும். எதையும் திட்டமிடாமல் கண்ணில் தென்படும் அனைத்தையும் சாப்பிடத் தொடங்கினால் உடல் பருமனை தவிர்க்க இயலாமல் போகும்.

ஆரோக்கியமான உணவுகளை இருப்பு வைப்பது : நீங்கள் வெளியிடங்களுக்கு செல்கிறீர்கள், தொலைதூரம் பயணம் செல்கிறீர்கள் என்றால் ஆரோக்கியமான உணவு மற்றும் ஸ்நாக்ஸ் வகைகளை முடிந்தவரை உடன் எடுத்துச் செல்வது நல்லது. ஏனென்றால் போகும் இடங்களில் கிடைக்கின்ற ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கலாம் மற்றும் சில தொந்தரவுகள் ஏற்படலாம்.

சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் : உணவு கட்டுப்பாடு பழக்கங்களை பின்பற்றுகின்ற அதேவேளையில் நம் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வது அவசியமாகும். உடற்பயிற்சி செய்தால் நம் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும் மற்றும் மனதுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். வாரம் ஒன்றுக்கு 150 நிமிடங்கள் வரையில் பயிற்சி செய்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு மற்றும் கலோரிகள் எரிக்கப்படும்.

மனதில் கட்டுப்பாடு வேண்டும் : எப்போதும் நாம் என்ன உணவு சாப்பிடுகிறோம், அதன் மூலமாக நமக்கு கிடைக்கின்ற சாதக, பாதகங்கள் என்ன என்பது குறித்து மனதில் கவனம் இருக்க வேண்டும். குறிப்பாக, டிவி பார்த்துக் கொண்டு அல்லது மொபைல் ஃபோன் பார்த்துக் கொண்டு ஸ்நாக்ஸ் கொரிக்கும் பழக்கம் இருந்தால் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்ற எச்சரிக்கை உணர்வே மனதுக்கு தோன்றாமல் போய்விடும்.

உணவு அளவு கட்டுப்பாடு : பிடித்த உணவு, ஆரோக்கியமான உணவு என்றாலும் எவ்வளவு அளவு சாப்பிடுகிறோம் என்பது முக்கியமானது. மிகுதியாக சாப்பிட்டால் அதிகப்படியான கலோரி சேரக் கூடும். குறிப்பாக உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்களின் உணவுகளின் அளவை குறைத்துக் கொள்வது நல்லது.

 Click here to join whatsapp group for daily health tip

January 8, 2023

காமராஜர் பல்கலைக்கழகத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன்!

January 08, 2023 0

 மதுரை காமராஜர் பல்கலைக்கழகமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Technical Assistant பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

MKU :

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Fellow, AI Trainer பணிக்கென மொத்தம் 7 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Project Fellow கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc.,/M.C.A/M.Tech / Master Degree in Computer Science/Computer Application/Computer Science and Engineering / Master Degree in Linguistics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MKU வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


Project Fellow ஊதிய விவரம்:


தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.16,000/- முதல் ரூ.30,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


MKU தேர்வு செய்யப்படும் முறை:


தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


விண்ணப்பிக்கும் முறை:


ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 19.01.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

Download Notification PDF 




ஈரோடு மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை – 10ம் / 12ம் வகுப்பு / Diploma பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

January 08, 2023 0

 ஈரோடு, மாவட்ட சுகாதார சங்கம் (DHS – Erode District) தற்போது வெளியிட்ட அறிவிப்பில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் கீழ் காலியாக உள்ள Accountant, Data Entry Operator, Driver போன்ற பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 33 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தமிழக அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


மாவட்ட சுகாதார சங்க காலிப்பணியிடங்கள்:ஈரோடு, மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள 33 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

Senior Tuberculosis Laboratory Supervisor (STLS) – 04 பணியிடங்கள்

Lab Technician / Sputum Microscopist (LT) – 16 பணியிடங்கள்

District Public Health Lab – 01 பணியிடம்

Tuberculosis Health Visitor – 09 பணியிடங்கள்

Accountant – 01 பணியிடம்

Data Entry Operator – 01 பணியிடம்

Driver – 01 பணியிடம்

மாவட்ட சுகாதார சங்க பணிக்கான கல்வி தகுதிவிண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வி தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும்.

Senior Tuberculosis Laboratory Supervisor (STLS) – Graduate Degree, DiplomaLab Technician / Sputum Microscopist (LT) – 12ம் வகுப்பு + Diploma / MLTDistrict Public Health Lab – Graduate Degree, DiplomaTuberculosis 

Health Visitor – Graduate Degree அல்லது 12ம் வகுப்பு

Accountant – Graduate Degree

Data Entry Operator – 12ம் வகுப்பு + Diploma

Driver – 10ம் வகுப்பு


மாவட்ட சுகாதார சங்க பணிக்கான வயது வரம்பு:இந்த தமிழக அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 65 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.மாவட்ட சுகாதார சங்க பணிக்கான ஊதியம்:Senior Tuberculosis Laboratory Supervisor (STLS) பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.15,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.மற்ற பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.10,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.DHS தேர்வு செய்யும் விதம்:


இந்த தமிழக அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


DHS விண்ணப்பிக்கும் விதம்:


இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் (Biodata) தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (16.03.2023) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.


Download Notification PDF




SBI Card வங்கியில் Manager காலிப்பணியிடங்கள் – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

January 08, 2023 0

 பாரத ஸ்டேட் வங்கி (SBI) – Card வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Manager – Area Sales பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

SBI Card காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Manager – Area Sales பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBI Card காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Manager – Area Sales பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBI Card வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Manager முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 3 முதல் 5 ஆண்டு காலம் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBI Card ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Manager தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 27.04.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 



தேசிய சுகாதார ஆணையத்தில் வேலை – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்!

January 08, 2023 0

 தேசிய சுகாதார ஆணையம் (National Health Authority) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Director மற்றும் Junior Director பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேசிய சுகாதார ஆணைய பணியிடங்கள்:தேசிய சுகாதார ஆணையத்தில் (NHA) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.Director – 02 பணியிடங்கள்Junior Director – 03 பணியிடங்கள்.

Director / Jr. Director தகுதிகள்:

இந்த மத்திய அரசு நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், யூனியன் பிரதேச நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் போதிய ஆண்டு காலம் பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Director / Jr. Director வயது விவரம்:


இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Director / Jr. Director சம்பள விவரம்:Director பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level – 13 என்ற ஊதிய அளவின் படி, மாத ஊதியம் பெறுவார்கள்.Junior Director பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level – 12 என்ற ஊதிய அளவின் படி, மாத ஊதியம் பெறுவார்கள்.


NHA தேர்வு முறை:

இந்த NHA நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையை பொறுத்து Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள்.

NHA விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அறிவிப்பு வெளியான நாள் முதல் அதற்கு பிறகு வரும் 45 நாட்களுக்குள் தபால் செய்ய வேண்டும்.

Download Notification Link




கொழுப்பைக் குறைக்க உதவும் ஏலம்! இது ஏலக்காயின் உடல் குறைக்கும் பண்பு

January 08, 2023 0

 Cardamom Benefits For Weight Loss: அதிகரித்து வரும் எடையை எப்படி குறைப்பது என்ற சவாலை சமாளிக்க மக்கள் போராடி வருகின்றனர். சமையலறையில் உள்ள பொருட்களே, நமக்கு ஆரோக்கியத்திற்குக் அடிப்படையாக உள்ளது. இருந்தாலும், உணவில் நறுமணத்தைக் கூட்ட உதவும், ஏலக்காயால் தொப்பையை குறைக்க முடியும் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா?  


வயிற்றில் உள்ள கொழுப்பைக் கரைக்கும் ஏலக்காய்

நறுமணத்தை மட்டுமல்ல, தொப்பையையும் குறைக்கும் பொருள் ஏலக்காய் என்பது பலருக்குத் தெரியாது. மணத்திற்கு மட்டுமல்ல உடல் எடை குறைப்புக்கும் ஏலக்காய் என்பது பாரம்பரியமான ஒன்று. உடல் பருமன் என்பது தனிப்பட்ட முறையில் நோய் என்று சொல்லாவிட்டால், பல நோய்கள் ஏற்பட அடிப்படையான விஷயமாக இருக்கிறது.

மாறிப் போன வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் என உடல் எடை அதிகரிக்க பல்வேறு காரணங்கள் இருந்தாலும், ஏலக்காயை பயன்படுத்தி, விரைவில் எடையை குறைக்கலாம்.

ஏலக்காயின் பயன்கள்

உடலில் படியும் கொழுப்பை குறைக்கும் குணம் கொண்ட ஏலக்காயை தினசரி உணவில் சேர்த்து வந்தால், வயிறு மற்றும் இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பை இயற்கையாகவே கரைக்கலாம். பொதுவாக உணவிலும், இனிப்புப் பதார்த்தங்களிலும் சேர்க்கப்படும் ஏலக்காய், தேநீரிலும் பயன்படுத்தப்படும்.  


உடல் எடை குறைக்க உதவும்

ஏலக்காயில் கொழுப்பை எரிக்கும் குணம் உள்ளது, இதனை தினசரி உணவில் சேர்த்து வந்தால், வயிறு மற்றும் இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பை இயற்கையாகவே கரைக்கலாம்.  


கொலஸ்ட்ரால் குறையும்

ஏலக்காய் சாப்பிடுவது செரிமான சக்தியை அதிகரிக்கிறது. அதனால், வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மை, மலச்சிக்கல், வயிற்றில் எரியும் வாயு மற்றும் வாயு போன்ற பிரச்சனைகளும் நீங்கும். செரிமான சக்தி அதிகரிப்பதால், படிப்படியாக எடை குறையயும். தினமும் ஒன்று அல்லது இரண்டு சிறிய ஏலக்காயை சமைக்காமல் அப்படியே வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால், கெட்ட கொலஸ்ட்ராலை சட்டென்று குறைந்துவிடும்.

குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா?

January 08, 2023 0
பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிரில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. மேலும், கால்சியம் அதிகம் கொண்ட உணவுப்பொருளாகவும் தயிர் உள்ளது. இது எலும்புகளை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். குறிப்பாக தயிரில் உள்ள கால்சியம் எலும்பின் அடர்த்தியை சமப்படுத்தவும், பலப்படுத்தவும் செய்யும். மேலும் தயிரில் குறைந்த அளவே கொழுப்புகள் மற்றும் கலோரிகள் உள்ளன. உடல் எடையை சீராக பராமரிப்பதற்கு இவை உதவும். இருப்பினும் குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா? என்ற குழப்பம் நிறைய பேருக்கு இருக்கிறது. குளிர்ச்சி நிறைந்த அதனை உட்கொள்வது சளி, இருமல் பிரச்சினைக்கு வித்திடும் என்பது அவர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால் அனைத்து பருவ காலங்களிலும் உட்கொள்வதற்கு ஏற்ற உணவுப் பொருளாக தயிர் இருந்தாலும், கோடை காலத்தில்தான் அதிகம் விரும்பப்படுகிறது. குளிர்காலத்திலும் தயக்கமின்றி உட்கொள்ளலாம். இருப்பினும் இரவில் உட்கொள்வதாக இருந்தால் தயிருடன் சிறிதளவு உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. பகல் பொழுதிலும் தயிர் உட்கொள்வதற்கு யோசிப்பவர்களும் இந்த வழிமுறையை பின்பற்றலாம்.

குளிர்காலத்தில் வரும் சரும பிரச்சினைகளில் முக்கியமானது சருமம் உலர்வடைவது. சருமத்திற்கு ஈரப்பதமூட்டும் பொருட்கள் தயிரில் இயற்கையாகவே உள்ளன. அவை சருமம் உலர்வடையாமல் தடுக்கக்கூடியவை. முகப்பரு பிரச்சினை இருப்பவர்களுக்கு தயிர் சிறந்த நிவாரணியாக அமையும். அதில் லாக்டிக் அமிலம் இருப்பதால் முகத்தை அழகுபடுத்தும் `பேஸ் பேக்'காகவும் உபயோகிக்கலாம். தயிரை முகத்தில் தடவிவிட்டு சிறிது நேரம் கழித்து நீரில் கழுவினால் போதும். அது முகத்திற்கு பொலிவு சேர்ப்பதோடு, இறந்த செல்கள், சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகள் போன்றவற்றையும் நீக்கிவிடும். குடல் சார்ந்த பிரச்சினை இருப்பவர்கள் குளிர் காலத்தில் தயிர் சேர்த்துக்கொள்வது நல்லது. அது குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். வயிறு தொடர்பான அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் விலக்கி வைக்கும்.

குளிர்காலத்தில் உணவில் கலந்து சாப்பிடுவதோடு சமைக்கும் பொருட்களிலும் தயிரை சேர்த்துக்கொள்ளலாம். சப்பாத்திக்கு மாவு பிசையும்போது அதனுடன் சிறிதளவு தயிரும் சேர்க்கலாம். தயிரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மாவில் கலந்து ஒட்டுமொத்தமாக ஊட்டச்சத்துக்களின் எண் ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். மேலும் சப்பாத்தியும் மென்மையாக இருக்கும். ஒரு சிலர் குளிர்காலத்தில் மந்தமாகவோ, சோர்வாகவோ உணரலாம். அவர்கள் மாதுளை அல்லது ஸ்ட்ராபெர்ரி பழத்துடன் தயிர் கலந்து சாப்பிடுவது புத்துணர்வை அளிக்கும். நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க வழிவகை செய்யும். குழந்தையின் உணவில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களை சேர்க்க தயிர் பயன்படுத்தலாம். காய்கறிகளுடன் தயிர் சேர்த்து சாலட்டாக தயாரித்து கொடுப்பது சிறப்பானது.

January 7, 2023

இந்த புத்தாண்டில் தனி சுகாதாரம் குறித்து நீங்கள் எடுக்க வேண்டிய சபதம் இதுதான்!

January 07, 2023 0
ஒவ்வொரு புத்தாண்டிலும் வெவ்வேறு உறுதிமொழிகளை நாம் எடுத்துக் கொள்கிறோம் என்றாலும், அவற்றில் பெரும்பாலானவற்றை நாம் கடைப்பிடிப்பதில்லை. இதனால் பெரும்பாலான நபர்கள் இப்போதெல்லாம் உறுதிமொழி எடுப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

ஆனால், நம் வாழ்க்கை ஆரோக்கியமாக அமைய வேண்டும் என்றால் தனி சுகாதார நடவடிக்கைகளை நாம் எந்தவிதத்திலும் கை விட்டுவிடக் கூடாது. கடந்த கால அனுபவங்கள் இந்தப் பாடத்தை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளன. ஆக, இந்த ஆண்டில் தனி சுகாதாரத்தை கடைப்பிடிக்கும் வகையில் நீங்கள் எடுக்க வேண்டிய உறுதிமொழி என்ன, ஏன் அது அவசியம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

தினசரி உடற்பயிற்சி :
 தினசரி உணவு சாப்பிடுவது, தூங்குவதை போலவே மிகவும் அத்தியாவசியமான பழக்கம் உடற்பயிற்சி ஆகும். உடற்பயிற்சி செய்யாமல் உடல் இயக்கமின்றி வாழ்க்கையை வாழுபவர்களுக்கு பலவிதமான நோய்கள் ஆட்கொள்கின்றன என்பதை மறக்க வேண்டாம். கடினமான பயிற்சிகளை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. நடைபயிற்சி அல்லது யோகா போன்ற பயிற்சிகள் போதுமானது.

கை சுகாதாரம்
கொரோனா பெருந்தொற்று காலம் வந்ததில் இருந்தே கைகளை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் குறித்து நாம் எல்லோரும் தெரிந்து வைத்துள்ளோம். ஆனால், வாழ்க்கை ஓட்டத்தின் வேகத்தில் அதை அவ்வப்போது மறந்து விடுகிறோம். கைகளை அவ்வப்போது கழுவும் பழக்கம் நம் குணாதிசயங்களில் ஒன்றாக மாற வேண்டும். இதைச் செய்ய தவறும் பட்சத்தில் ஏராளமான நுண்ணுயிர்கள் வயிற்றினுள் செல்லும் என்பதை மறக்க வேண்டாம்.

வாய் சுகாதாரம் முக்கியம் : 

காலை எழுந்தவுடன் யாரும் பல் துலக்குவதற்கு மறப்பதில்லை. ஆனால், அதற்குப் பிறகு வாய் சுகாதாரம் குறித்து மறந்து விடுகிறோம். நாள் முழுவதும் பாக்டீரியா மற்றும் கிருமிகள் நம் பற்களை தாக்குவதற்கு வாய்ப்பு உண்டு. குறிப்பாக, வாயில் உணவுப் பொருள் தங்குவதே கிருமிகளுக்கான அச்சாரம் ஆகும். ஆகவே சாப்பிட்டவுடன் வாய் கொப்பளிக்கவும். காலை பல் துலக்கிய பிறகு ஆயில் புல்லிங் செய்வது நல்ல தீர்வை தரும்.

இரவில் நல்ல தூக்கம் அவசியம்
இரவில் தூங்க வேண்டிய நேரத்தில் ஆன்லைனில் மூழ்கியிருக்கும் பழக்கம் இன்று பரவலாக இருக்கிறது. ஆனால், சரியான நேரத்திற்கு தூங்கச் சென்றால் மட்டுமே ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும். ஆழ்ந்த உறக்கம் தான் நம் உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி தரும். நாம் தூங்கும்போது நம் செல்கள், திசுக்கள் ஆகியவை மறு உருவாக்கம் செய்யப்படுகின்றன. அதிலும் இப்போதெல்லாம் தூக்கமின்மை பிரச்சினை பலரையும் ஆட்கொள்ளத் தொடங்கியுள்ள நிலையில், சரியான நேரத்திற்கு ஆழ்ந்த உறக்கம் கொள்ளும் பழக்கத்தை நம்மில் நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

உடலில் அதிக அளவு கொழுப்பு சேர்வதால் இவ்வளவு வியாதிகள் ஏற்படுமா..?

January 07, 2023 0
உலகம் முழுவதும் உள்ள மக்களில் பெரும்பாலானவர்களுக்கு உடலில் அதிக அளவிலான கொழுப்பு சேர்ந்திருக்கும் பிரச்சினை உள்ளது. அதிக அளவிலான கொழுப்பு உடலில் சேரும்போது அது பல்வேறு வித உடல் உபாதைகளை உண்டாக்குகிறது.

சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி, ஒரு மனிதனின் உடலில் அதிக கொழுப்புகள் சேரும்போது அவை ரத்த நாளங்களின் வழியாக ரத்தம் பாய்வதை கடினமாக்குகிறது. மாறிவரும் வாழ்க்கை முறைகளினாலும், ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல், புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பிரச்சனைகளினால் உடலில் அதிக கொழுப்பு சேருகிறது..

இதில் மிகப்பெரிய அபாயம் என்னவெனில் இவை உடலில் சேர சேர உடனடியாக எந்தவித அறிகுறியையும் வெளிப்படுத்தாது. படிப்படியாக உடலில் சேரும் இந்த கொழுப்பு குறிப்பிட்ட காலத்தில் திடீரென உடலில் பல்வேறு விதமான நோய்களை உண்டாக்கும். முக்கியமாக இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை அதிக அளவில் உண்டாக்குகிறது. உடலில் அதிக கொழுப்பு சேர்வதால் உண்டாகக்கூடிய முக்கியமான ஐந்து நோய்களைப் பற்றி பார்ப்போம்.

கொரோனரி ஹார்ட் டிசிஸ்

உடலில் உள்ள ரத்த நாளங்களின் சுவர்களில் பிளேக் உருவாக்கத்தினால் இந்த வியாதி உண்டாகிறது. இந்த ரத்த நாளங்கள் இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கிய பணியை செய்கின்றன. மேலும் நாளடைவில் இந்த ரத்த நாளங்களில் கொழுப்புகள் படிந்து ரத்த ஓட்டத்தை சிரமமாக்குகின்றன. இதன் காரணமாக ரத்தத்தின் வழியாக ஆக்ஸிஜன் கடத்தப்படுவது தடை செய்யப்படுகிறது.

அப்ஸ்ட்ராக்டிவ் கொரோனரி ஆட்டரி டிசிஸ், நான் அப்ஸ்ட்ராக்டிவ் கொரோனறி ஆர்டரி டிசீஸ், ஸ்பான்டேனியஸ் கொரோனரி ஆட்டரி டைசெக்ஷன் ஆகியவை இந்த நோயின் வகைகள் ஆகும்.

மாரடைப்பு

உடலில் அதிக அளவு கொழுப்பு சேர்வதால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. ரத்த நாளங்களில் கொழுப்புகள் அதிகரிக்கும் போது, அவை ரத்தம் பாய்வதை தடை செய்கிறது. இதன் காரணமாக ரத்த நாளங்களின் வழியே போதுமான அளவு ரத்தம் கடத்தப்படாத நிலையில் அங்கு ரத்தம் உறைதல் ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுவதற்கு வழிவகை செய்கிறது.

பெரிபெரல் ஆர்டேரியல் டிசீஸ்

பிஏடி எனப்படும் இந்த நோய் அதிகப்படியான கொழுப்புகள் ரத்த நாளங்களில் படிவதால் ரத்த நாளங்கள் சுருங்குவதற்கு வழி செய்கிறது. முக்கியமாக உடலின் கீழ்பாகத்தில் இது அதிக பாதிப்பை ஏற்படுத்தும். கால்கள், பாதம், மூட்டுகள் ஆகிய இடங்களில் குறைந்த அளவு ரத்தம் பாய்வதோ அல்லது மொத்தமாக ரத்தம் பாய்வதை தடை செய்வதும் நிகழ்கிறது.

கால்களில் உணர்வற்று இருப்பதும், கால்களில் உள்ள சருமத்தின் நிறம் மாறுவதும், நகங்கள் மிக மெதுவாக வளர்வதும் காலில் காயம் ஏற்பட்டால் அவை ஆறுவதற்கு அதிக காலம் எடுத்துக் கொள்வதும் இந்த நோயின் அறிகுறிகள் ஆகும்.

பக்கவாதம்

இதயத்தை சுற்றியுள்ள ரத்த நாளங்களில் அதிக அளவு கொழுப்புகள் படிவதால் போதுமான அளவு ரத்தம் இதயத்திற்கு கடத்தப்படுவது தடை செய்யப்படுகிறது. மேலும் இதயத்தில் இருந்து மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களிலும் அடைப்பை ஏற்படுத்தி மூளைக்கு போதுமான அளவு ரத்தம் கடத்தப்படுவதும் தடுக்கப்படுகிறது. இதன் காரணமாக பக்கவாதம் உண்டாகிறது.

எவ்வாறு தற்காத்துக் கொள்வது?


முறையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பழக்க வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். நாம் உண்ணும் உணவில் சோடியம் குறைவாக இருக்கும் படியும் அதிக கொழுப்புகள் இல்லாத உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


இறைச்சிகளை உண்பதற்கு பதிலாக காய்கறிகளையும் பழங்களையும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான புரதச்சத்து கிடைப்பதுடன் அதிகளவு கொழுப்பு சேர்வதையும் தவிர்க்க முடியும்.

இவற்றைத் தவிர தினசரி உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உடல் எடையை பேணிக்காப்பது ஆகியவை முக்கியமானவை. 

தமிழகத்தில் வரும் 21ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 300க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!

January 07, 2023 0


Home  news  தமிழகத்தில் வரும் 21ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 300க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள்...

newsதமிழகத்தில் வரும் 21ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 300க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!

By

 Deepika

-

 January 7, 2023

0

தமிழகத்தில் வரும் 21ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 300க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!

தமிழகத்தில் வரும் 21ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 300க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!

தருமபுரியில் ஜனவரி 21ம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வேலை நாடுநர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்:

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் துறைகள் வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு மையங்கள் வாயிலாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை அளிக்கும் நோக்கில் மாதந்தோறும் அல்லது வாரந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடந்து வருகிறது. இதில் முன்னணி நிறுவனங்கள் முகாமில் பங்கேற்று வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றனர்.

ஜனவரி 21ம் தேதி ஸ்ரீ விஜய் வித்யாலயா – கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நல்லம்பள்ளி, தர்மபுரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளது. இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதில் 8 வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள் பங்கேற்று வேலைவாய்ப்பை பெறலாம். இந்த முகாம் மூலம் 10000+ காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Indigo Airlines நிறுவனத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு 2023-விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ !

January 07, 2023 0
Indigo Airlines நிறுவனம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Senior Executive- AOCS in the role of Customer Services/ Security/ Ramp பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Indigo Airlines காலிப்பணியிடங்கள்:

Indigo Airlines நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Senior Executive- AOCS in the role of Customer Services/ Security/ Ramp பணிக்கென பல்வேறு காலியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இண்டிகோ ஏர்லைன்ஸ் கல்வி தகுதி:

Senior Executive- AOCS in the role of Customer Services/ Security/ Ramp பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Indigo Airlines அனுபவ விவரம் :

இப்பணிகளுக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 04-08 ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Indigo Airlines ஊதிய விவரம் :

Indigo Airlines நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indigo Airlines தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது .கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Indigo Airlines விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து,தேவையான ஆவணங்களுடன் இறுதி நாள் முடிவதற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழ்நாடு அரசின் TNBB வாரியத்தில் Data entry Operator வேலை... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

January 07, 2023 0
தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரியத்தில் (Tamil Nadu Biodiversity Board) தற்காலிக அடிப்படையில் DATA ENTRY OPERATOR பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிவியல் பாடத்தில் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த பணி 4 மாதங்களுக்கு மட்டுமே. பின்னர் திறமையில் அடிப்படையில் பணிக்காலம் நீட்டிக்கப்படும். இப்பணிக்கு 3 இடங்கள் உள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுதப் படிக்க மற்றும் பேச நன்கு தெரிந்திருக்க வேண்டும். MS Excel, Lower grade தட்டச்சு மற்றும் taxonomy பற்றி அறிவு தேவை.

கல்வித்தகுதி:

Data entry Operator பணிக்கு Botany/Zoology அல்லது அதற்கு நிகரான இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் முதல் கட்டமாகத் தேர்வு செய்து எழுத்துத் தேர்வு/ நேர்காணலுக்கு அழைப்பர்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://tnbb.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யhttps://tnbb.tn.gov.in/

முகவரி:

The Secretary,

Tamil Nadu Biodiversity Board,

TBGP Campus II Floor,

Nanmangalam, Medavakkam Post,

Chennai - 600100.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 30.01.2023.


January 6, 2023

பேங்க் ஆப் பரோடா வங்கியில் தேர்வில்லாத வேலை – சம்பளம்:ரூ.23,000/- விண்ணப்பங்கள் வரவேற்பு!!

January 06, 2023 0
பேங்க் ஆப் பரோடா வங்கி ஆனது FLC Coordinator பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பேங்க் ஆப் பரோடா காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி FLC Coordinator பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
FLC Coordinator கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பேங்க் ஆப் பரோடா வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 64 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

FLC Coordinator முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேங்க் ஆப் பரோடா ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.23,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FLC Coordinator தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.01.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

ICFRE இந்திய வனவியல் துறையில் வேலை – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.31000/-

January 06, 2023 0
இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் ஆனது Junior Project Fellows (JPFs) மற்றும் Field Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 25.01.2023-க்குள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ICFRE காலிப்பணியிடங்கள்:Junior Project Fellow – 7 பணியிடங்கள்Field Assistant – 1 பணியிடம்

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து M.Sc/B.Sc/M.E/M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.



Home  அறிவிக்கைகள்  ICFRE இந்திய வனவியல் துறையில் வேலை – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.31000/-

அறிவிக்கைகள்ICFRE இந்திய வனவியல் துறையில் வேலை – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.31000/-

By

 Deepika

-

 January 7, 2023

0

ICFRE இந்திய வனவியல் துறையில் வேலை - தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.31000/-

ICFRE இந்திய வனவியல் துறையில் வேலை – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.31000/-

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் ஆனது Junior Project Fellows (JPFs) மற்றும் Field Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 25.01.2023-க்குள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023நிறுவனம்ICFREபணியின் பெயர்Junior Project Fellow & Field Assistantபணியிடங்கள்08விண்ணப்பிக்க கடைசி தேதி25.01.2023விண்ணப்பிக்கும் முறைOnline & OfflineICFRE காலிப்பணியிடங்கள்:Junior Project Fellow – 7 பணியிடங்கள்Field Assistant – 1 பணியிடம்

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து M.Sc/B.Sc/M.E/M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பேங்க் ஆப் பரோடா வங்கியில் தேர்வில்லாத வேலை – சம்பளம்:ரூ.23,000/- விண்ணப்பங்கள் வரவேற்பு!!

ICFRE சம்பள விவரம்:Junior Project Fellow – ரூ.20,000/-Field Assistant – ரூ.17,000/-வயது வரம்பு:

01/01/2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ICFRE விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு ஆன்லைன் மற்றும் Offline மூலம் 25.01.2023-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.