Agri Info

Adding Green to your Life

January 21, 2023

வேலைக்கு செல்லும் பெண்களா நீங்கள்... ரூ.200-ல் அரசு தங்கும் விடுதி! - அரசின் அசத்தல் திட்டம் பற்றி தெரியுமா?

January 21, 2023 0

 Working Women Hostels: பெண்களை வேலைக்கு செல்ல ஊக்குவிக்கவும்,  பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய/மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களில் செயல்படுத்தி வருகிறது. அதில், பணிபுரியும் மகளிருக்கான அரசு விடுதிகள் திட்டம்  மிக முக்கியமானதாக உள்ளது.

பணிபுரியும் மகளிருக்கான அரசு விடுதிகள் திட்டம் (scheme for working women hostel): 

கடந்த 1975ம் ஆண்டு முதல் , மத்திய/மாநில அரசு நிதியுதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. குடும்பத்தை விட்டு வெளியூரில் பணிபுரியும் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பெறும் மகளிருக்கு உணவுடன் பாதுகாப்பான தங்கும் வசதி அமைத்துக் கொடுப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில்  பணிபுரியும் பெண்களுக்கு 28 அரசு விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள்:  மாத வருமானம் சென்னையில், ரூ.25,000/-த்திற்குள்ளும், இதர மாவட்டங்களில் ரூ.15,000/-த்திற்குள்ளும் இருத்தல் வேண்டும்.

தங்கி பயன்பெறும் கால அளவு:  மூன்றாண்டுகள் விடுதியில் தங்கலாம்.   மூன்றாண்டுகளுக்கு மேல், பயனாளியின் தேவை , தங்கிப் பயிலும் காலத்தில் நடந்துகொண்ட விதம் ஆகியவற்றின் அடிப்படையில் காப்பாளரின் பரிந்துரையின்பேரில் நீட்டிக்கப்படும்.

மாத வாடகை:  சென்னையில் மாதமொன்றுக்கு  வாடகையாக ரூ.300/ செலுத்த வேண்டும்.  இதர மாவட்டங்களில் ரூ.200/-ம் செலுத்த வேண்டும். உணவு மற்றும் மின் கட்டணம் பகிர்ந்து  கொள்ள வேண்டும். 

எங்குள்ளது:  சென்னையில் 7 அரசு விடுதிகளும், காஞ்சிபுரத்தில் 3 அரசு விடுதிகளும்,  திருச்சியில் 2 விடுதிகளும்  உள்ளன. கோவை, சிவகங்கை, தூத்துக்குடி, கடலூர், தஞ்சாவூர், திருப்பூர், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், திருநெல்வேலி, சேலம், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தலா ஒரு விடுதிகள் உள்ளன.

சமீபத்திய புள்ளிவிவரங்களின் படி, தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 1415 பேர் தங்குவதற்கு  வசதி  செய்யப்பட்டுள்ளது. ஆனால், 348 அறைகளில் பெண்கள் தங்கியுள்ளனர். 1067 அறைகள் காலியாக உள்ளன (செயலாக்கத் திட்டம் - சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை - 2022-2023).

எனவே, சென்னைபோன்ற பெரு நகரங்களில் குறைவான சம்பளத்தில் பணிபுரியும் பெண்கள், இந்த விடுதியை பயன்படுத்திக் கொள்ளலாம். வாடையாக மாதம் வெறும் ரூ.300 செலுத்தி, உங்கள் சம்பள பணத்தை சேமித்துக் கொள்ளலாம். விடுதியின் முகவரியை, அந்தந்த மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ரேஷன் கடை வேலைவாய்ப்பு : தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

January 21, 2023 0

 தமிழ்நாடு முழுவதும் நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் (salesman) மற்றும் கட்டுநர் (Packer) பதவிகளுக்கான நியமன முடிவுகள் இதுவரை வெளியடப்படாத காரணத்தினால், தேர்வர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம், கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள    விற்பனையாளர்கள் (salesman) மற்றும் கட்டுநர் (Packer) பதவிகளுக்கான அறிவிப்பை அந்தந்த மாவட்ட கூட்டுறவுத் துறை ஆட்சேர்ப்பு நிலையங்கள் வெளியிட்டன. இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பின் மூலம், மாநிலம் முழுவதும் 4000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டன. எவ்வித எழுத்துத் தேர்வும் இல்லாமல், வெறும் நேர்காணலை மட்டும் நடத்தி ஆட்களைத் தேர்வு செய்யப்படும் என்பதால், லட்சக்கணக்கான பேர் இதற்கு விண்ணப்பித்து இருந்தனர் .

இதற்கான, நேர்காணல் தேர்வு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகத்தில்  டிசம்பர் 15 முதல் 30-ம் தேதி வரை  நடைபெற்றது.  நேர்முகத் தேர்வில் முதலில் சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டது. இதில், விண்ணப்பதாரரின் அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. மேலும், சான்றிதழ் சரிபார்ப்புக் குழு, தேர்வர்களின் அசல் சான்றிதழ்களின் இரண்டு நகல்கள் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை வாங்கி வைத்துக் கொண்டனர். பின்னர், அன்று மாலையே நேர்காணல் தேர்வு நடத்தப்பட்டது. ஓவ்வொரு மையத்திலும், கிட்டத்தட்ட 15 -20 நேர்காணல் அறைகள் அமைக்கப்பட்டு, முன்னாள்/இன்னாள் கூட்டுறவுச் சங்கத்தைச் சேர்ந்த பணியாளர்கள் தேர்வை நடத்தினர்.

பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே தேர்வு முடிவுகள் வெளியிடப்படம்  என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  இதுநாள் வரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட வில்லை. இதற்கிடையே, கிராம உதவியாளர் பதவிக்கான தேர்வு முடிவுகளை அந்தந்த மாவட்ட வாட்டாச்சியர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

தேர்வர்கள் ஐயம்: 

கிராம உதவியாளர் பதவியைப் பொறுத்த வரையில், அறிவுப்பு நிலை முதல் இறுதி நியமனம் வரை, அந்தந்த மாவட்ட வட்டாச்சியர்கள்  மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதல் பெற்று மேற்கொண்டனர். வரப்பெற்ற விண்ணப்பங்கள், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள், விண்ணப்பங்கள் நிராகரிப்பு செய்யப்பட்டதற்கான காரணங்கள்  அனைத்தும் மாவட்ட ஆட்சியர் இணையதளங்களில் வெளியிடப்பட்டன.

ஆனால், நியாய விலைக் கடைகளில் இத்தகைய வெளிப்படைத் தன்மை இல்லை என்று தேர்வர்கள் கருதுகின்றனர். உதாரணமாக, நேர்முகத்  தேர்வில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் பெயர் பட்டியலை இதுநாள் வரை இணைய தளத்தில் வெளியிடப்படவில்லை. இத்தகைய, பட்டியல் வெளியிடப்படும் என்று கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் வெளியிட்ட வழிக்காட்டுதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

DHS தர்மபுரி மாவட்ட சுகாதார சங்கத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பியுங்கள்!!

January 21, 2023 0

 

DHS தர்மபுரி மாவட்ட சுகாதார சங்கத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பியுங்கள்!!

தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சுகாதார சங்கம் (DHS Dharmapuri) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் Staff Nurse & MLHP பணிகளுக்கு என 86 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளை (27.01.2023) கடைசி நாள் என்பதால் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

DHS Dharmapuri காலிப்பணியிடங்கள்:

தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சுகாதார சங்கத்தில் (DHS Dharmapuri) சமீபத்தில் வெளியான அறிவிப்பின்படி Staff Nurse & MLHP பணிகளுக்கு என 86 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

DHS வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 50 ஆக இருக்க வேண்டும்.

DHS Dharmapuri கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் நர்சிங், DGNM ல் B.Sc முடித்திருக்க வேண்டும்.

DHS ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு நிறுவனத்தின் விதிமுறை படி மாதம் ஊதியமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

DHS Dharmapuri தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் Written Test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

DHS விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ,தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (27.01.2023) அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification
Application Form PDF


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

முருங்கைக்காயில் இருக்கும் இந்த 7 நன்மைகளை பற்றி தெரியுமா..? மிஸ் பண்ணிடாதீங்க..!

January 21, 2023 0

 சாம்பார் , காரக்குழம்பு என ஏதோ ஒரு வகையில் முருங்கைக்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக்கொள்வோம். சீசனே இல்லை என்றாலும் முருங்கைக்காயை தேடி அலைந்து வாங்கி சாப்பிடும் அளவிற்கு ஃபேன் பேஸ் இங்கு உண்டு. இப்படி அதன் சுவையை அறிந்த நீங்கள் அதன் நன்மைகளையும் தெரிஞ்சுக்கிட்டா நல்லது. எனவே முருங்கைக்காயில் கிடைக்கும் 7 நன்மைகள் இதோ...

செரிமானத்தை மேம்படுத்துகிறது : உடலுக்கு தேவையான நியாசின், ரிபோஃப்ளேவின் மற்றும் வைட்டமின் பி12 போன்ற நுண்ணூட்டச்சத்துக்களை உள்ளடியக்கியதால் செரிமான மண்டலத்தை பாதுகாக்கிறது. குறிப்பாக குடல் இயக்கத்தை சீராக்கி வயிறு சம்மந்தமான பிரச்சனைகளிலிருந்து விடுவிக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் : நோய் எதிர்ப்பு சக்திக்கு சிறந்த ஆதாரம் முருங்கைக்காய். அந்த வகையில் இருமல், சளி போன்ற தொற்று பாதிப்புகளுக்கு முருங்கைக்காயை சாப்பிடுவது பக்கபலம். அதில் உள்ள விட்டமின் சி-யே உங்களுக்கு போதுமானது. அதுமட்டுமன்றி இதயம் தொடர்பான உயர் இரத்த அழுத்த பிரச்சனைகளுக்கும் முருங்கைக்காய் நல்லது.

இரத்தத்தை சுத்தப்படுத்தும் : ஆன்டி பயாடிக் ஏஜெண்டாக முருங்கைக்காய் செயல்படுவதால் இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிற்து. இதனால் இரத்ததின் ஆக்சிஜன் அளவு மேம்படுகிறது. அதாவது இரத்தத்தில் தரத்தை மேம்படுத்த முருங்கைக்காய் உதவுகிறது.

எலும்புகளை பலப்படுத்தும் : முருங்கைக்காயில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து இருப்பது எலும்புகளுக்கு அதிக நன்மை சேர்க்கிறது. எனவே எலும்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்து முருங்கைக்காயில் இருப்பதால் வாரம் ஒருமுறையேனும் எடுத்துக்கொள்வது நல்லது. இதனால் எதிர்காலத்தில் வரும் எலும்பு பிரச்சனைகளையும் தவிர்க்காலாம்.

சுவாசநோய்களுடன் போராடுகிறது : முருங்கைக்காயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. குறிப்பாக இந்தியாவில் நிலவும் அதிக காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படு நுரையீரலுக்கு முருங்கைக்காய் மிகவும் நல்லது. விட்டமின் சி-யும் இதில் இருப்பதால், தொற்று, ஒவ்வாமை தொடர்பான பிரச்சனைகளுக்கும் உதவும்.

இரத்த சர்க்கரை அளவை சீராக்குகிறது : இரத்த சர்க்கரை அளவை சீராக்கி அதை கட்டுக்குள் வைப்பதுதான் முருங்கைக்காயின் பிரதான நன்மை. அதில் உள்ள வைட்டமின் மற்றும் மினரல்கள் பித்தப்பையின் வேலையை மேம்படுத்துவதால் நீரிழிவு நோயாளிக்குக்கு நன்மைகளை அள்ளித்தருகிது.

சருமத்திற்கு நல்லது : முருங்கைக்காய் பூஞ்சை தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. நீங்கள் முருங்கை இலையை காய வைத்து அதை பொடியாக்கி முகத்தில் அப்ளை செய்தாலே முகப்பரு, வெயில் கருமை போன்றவை நீங்கும். அதோடு ஃபேஷியல் செய்த பொலிவு கிடைக்கும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உஷார்..! இந்த 8 பழக்கங்கள்தான் உங்கள் சிறுநீரகத்திற்கு எதிரி...

January 21, 2023 0

 மனித உடலில் இருக்கும் உறுப்புகளில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்றன சிறுநீரகங்கள். உடலில் ஒட்டுமொத்த திரவ சமநிலைக்கு சிறுநீரகங்கள் பொறுப்பாக உள்ளன. அவை உடலில் உள்ள கழிவுப்பொருட்கள் மற்றும் நச்சுகளை வடிகட்டி சிறுநீராக வெளியேற்ற உதவுகின்றன. ரத்தத்தை சுத்தமாக வைத்திருக்கவும் உதவுகின்றன.

எனவே சிறுநீரகங்களின் ஆரோக்கியம் என்பது நம் நல்வாழ்வை உறுதி செய்ய கூடிய ஒன்று. தொடர்ந்து செய்யப்படும் சில சிறிய விஷயங்கள் கூட சிறுநீரகங்களை பாதிக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஆம், சில தினசரி பழக்கவழக்கங்கள் சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கும். சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்றால் உடல் ரத்தத்தை வடிகட்டும் மற்றும் உடலில் இருந்து கழிவுப்பொருட்களை அகற்றும் திறனில் பாதிப்புகள் ஏற்படும். நம் சிறுநீரகங்களை பாதிக்க கூடிய பொதுவான சில பழக்கங்கள் இங்கே...

உப்பு அதிகமாக சேர்த்து கொள்வது: உணவில் அதிக உப்பு சேர்த்து கொள்வது நம் சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும். அதிகப்படியான உப்பு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும், இது சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும். மேலும் இப்பழக்கம் உடலில் அதிகப்படியான சோடியத்திற்கு வழிவகுக்கும். உடலில் குவியும் அதிக சோடியத்தை அகற்ற முடியாமல் சிறுநீரகங்கள் சிரமப்படும். இது சிறுநீரக ஆரோக்கியத்தில் எதிர்மறை விளைவை ஏற்படுத்தும். எனவே சோடியம் நிறைந்த உணவுகளை குறைத்து கொள்ள வேண்டும்.

அதிக சர்க்கரை : உப்பை போலவே உணவில் அதிக சர்க்கரை சேர்த்து கொள்வதும் சிறுநீரகங்களுக்கு தீமை விளைவிக்கும். அதிகப்படியான சர்க்கரை நுகர்வு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது. இதன் விளைவாக சிறுநீரக கோளாறுக்கான ஆபத்து விரைவாக அதிகரிக்கிறது.

உடலில் போதுமான நீர்சத்து இல்லாமல் வைத்திருப்பது : தினசரி பரிந்துரைக்கப்பட்ட அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது சிறுநீரக கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது. உடலை ஹைட்ரேட்டாக வைத்திருக்க தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இப்பழக்கம் வளர்சிதை மாற்ற கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது மற்றும் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது.

உடற்பயிற்சி செய்யாமலிருப்பது : நீண்ட நேரம் அமர்ந்தே இருக்கும் வாழ்க்கை முறை சிறுநீரக ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே சிறுநீரக ஆரோக்கியத்தை பராமரிக்க தினசரி உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

புகைபழக்கம்: புகைபழக்கம் சிறுநீரகங்களில் ரத்த ஓட்டத்தை குறைக்கிறது மற்றும் சிறுநீரக ரத்த நாளங்களை சுருக்குகிறது. புகைபிடித்தல் சிறுநீரகத் தமனிகளின் தடித்தல் மற்றும் கடினப்படுத்துதலுக்கும் காரணமாகிறது. ஆரோக்கியமான சிறுநீரகங்களை பெற விரும்பினால் புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும்.

அதிக மது நுகர்வு: ஆல்கஹால் சிறுநீரக செயல்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது மற்றும் ரத்தத்தை வடிகட்டும் திறனை குறைக்கிறது. அதிக ஆல்கஹால் நுகர்வு யூரிக் அமிலத்தின் உருவாக்கத்தை அதிகரித்து சிறுநீரகங்களை சேதப்படுத்தும்.

அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்து கொள்வது:
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அடங்கி இருக்கும் சோடியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்டவை சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பேக்கேஜ்டு உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதே போல சிறுநீரக நோய் இல்லாதவர்கள் அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது அவர்களின் சிறுநீரகம் மற்றும் எலும்புகளுக்கு தீங்கு விளைவிக்கும்.


பெயின் கில்லர்ஸ் & பாடி-பில்டிங் ஹெல்த் சப்ளிமென்ட்ஸ்:
நம்மில் பலர் உடல்வலி அல்லது தலைவலி என்றாலே உடனே வலி நிவாரணிகளை எடுத்து கொள்கிறோம். மருத்துவர்களின் பரிந்துரை இன்றி அடிக்கடி எடுத்து கொள்ளும் பெயின் கில்லர் மாத்திரைகள் நம்முடைய சிறுநீரகங்களை வெகுவாக பாதிக்கும் மேலும் நீண்டகால சிறுநீரக பிரச்சனைகளை ஏற்படுத்தும். மருத்துவரிடம் கலந்தாலோசிக்காமல் ஊட்டச்சத்து அல்லது பாடி-பில்டிங் ஹெல்த் சப்ளிமெண்ட்ஸ் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

January 19, 2023

சூரிய ஒளியில் இத்தனை நன்மைகள் கிடைக்கிறதா..? இனியும் ஓடி மறையாதீங்க..!

January 19, 2023 0

 பூமியில் உள்ள உயிர்களின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதில் சூரிய ஒளி முக்கிய பங்கு வகிக்கிறது என்பது பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். அதுமட்டுமல்லாது, மனிதர்களின் ஆரோக்கிய தன்மைக்கும் சூரிய ஒளி பெரிதும் உதவுகிறது. இருப்பினும், சூரியனில் இருந்து வரும் அதிகப்படியான புற ஊதா கதிர்வீச்சு தோல் புற்றுநோயை ஏற்படுத்தும். ஆனால், சூரிய ஒளியில் குறிப்பிட்ட அளவு நேரத்தை செலவிடுவது நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், மக்கள் அதிக சூரிய ஒளியில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வது மிகவும் அவசியமானது போலவே, சூரிய ஒளியின் ஆரோக்கிய நன்மைகளைப் பெறுவதற்கும் போதுமான அளவு அதில் நேரத்தை செலவிட வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த போதுமான அளவு வைட்டமின் டி அளவை பெற வேண்டும். சூரிய ஒளியின் முக்கிய பயன்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வைட்டமின் டி அளவு : வைட்டமின் டி உடலில் பல முக்கிய செயல்பாடுகளை செய்கிறது. இது உடலின் வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் செல் பெருக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது. இதை மாத்திரைகள் போன்று தனியாக சாப்பிடுவதால் போதுமான அளவு கிடைப்பது கடினம் என்றாலும், சூரியனிடம் இருந்து வைட்டமின் டி இயற்கையாக கிடைக்கிறது. மேலும் இதன் பலன்களைப் பெற வாரத்திற்கு சில முறை 5-15 நிமிடங்கள் சூரிய ஒளியை நேரடியாக நேரத்தை செலவிடுங்கள். 15 நிமிடங்களுக்கு மேல் வெளியே இருக்கப் போகிறீர்கள் என்றால் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி : உங்கள் நோயெதிர்ப்பு அமைப்புக்கு வைட்டமின் டி முக்கியமானது, மேலும் சூரிய ஒளியை தொடர்ந்து பெறுவதால் வைட்டமின் டி-யை அதிகரிக்க முடியும். ஒரு வலுவான நோயெதிர்ப்பு அமைப்பை பெறவும், அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படும் சிக்கல்களின் அபாயத்தைக் குறைக்கவும் வைட்டமின் டி பெரிதும் உதவும்.

எலும்புகளின் வலிமைக்கு : சூரிய ஒளியில் நாம் இருக்கும் போது, நம் உடல்கள் வைட்டமின் டி-ஐ உற்பத்தி செய்கிறது. ஒவ்வொரு நாளும் சுமார் 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருந்தாலே போதுமானது. மேலும், வைட்டமின் டி உங்கள் உடலில் கால்சியத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும் உடையக்கூடிய, மெல்லிய அல்லது சிதைந்த எலும்புகளின் பாதிப்புகளில் இருந்து தடுக்கிறது. சூரிய ஒளியில் சிறிது நேரத்தை செலவிடுவது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முக்கிய வழியாகும்.

மனச்சோர்வு : மனசோர்வு எல்லோருக்கும் இருக்க கூடிய பாதிப்பாகும். ஆனால், இந்த பாதிப்பில் இருந்து வெளியேற சூரிய ஒளி உதவுகிறது. இது உங்களை நன்றாக உணர வைக்கிறது என்பதற்கான அறிவியல் ஆதாரம் உள்ளது. சூரிய ஒளி உங்கள் உடலில் செரோடோனின் அளவை உயர்த்துகிறது, மேலும் இது உங்கள் மனநிலையை மேம்படுத்தும் ஹார்மோன் உற்பத்திக்கும் வழிவகுக்கிறது. உங்களை நிதானமாகவும், அமைதியாகவும் இருக்க சூரிய ஒளி உதவுகிறது.

உடல் எடை குறைப்பு : 2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி, எடை குறைப்பு என்பது காலை 8 மணி முதல் மதியம் வரை  30 நிமிடங்கள் உடலில் சூரிய ஒளி படுவதால் உடல் எடை குறைக்க பெரிதும் உதவும் என கண்டறிந்துள்ளனர். மேலும், அதிகாலை சூரிய ஒளிக்கும் எடை குறைப்புக்கும் இடையே தொடர்பு இருப்பதாக ஆய்வு செய்துள்ளனர். இதுவும் எடை குறைப்பில் நல்ல விளைவுகளை தருகிறது.

நீண்ட ஆயுள் : ஜர்னல் ஆஃப் இன்டர்னல் மெடிசினில் வெளியிடப்பட்ட 30,000 ஸ்வீடிஷ் பெண்களிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், சூரிய ஒளியில் அதிக நேரம் செலவழித்தவர்கள், குறைவான அளவு சூரிய ஒளியில் இருந்தவர்களை விட 6 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை அதிகமாக வாழ்ந்ததாகக் கண்டறிந்துள்ளது. இது பலருக்கும் சூரிய ஒளியின் முக்கியவத்துவதை உணர்ந்த கூடும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

பிப்ரவரி மாதத்தில் டூர் ப்ளான் இருக்கா..? கோவா முதல் தாஜ்மஹால் வரை.. பட்ஜெட்டில் விசிட் அடிக்கலாம்

January 19, 2023 0

 சுற்றுலா என்பது ஒவ்வொருவருக்கும் மன நிம்மதியைக் கொடுக்கும் சுவாரஸ்சியமான அனுபவம். எத்தகைய பணிச்சுமைகள் மற்றும் மனஉளைச்சல்கள் இருந்தாலும் இயற்கையோடு நாம் பயணிக்கும் போது அத்தனையும் மறந்து சிறு குழந்தையாய் சுற்றித் திரிவோம். இந்த மனநிலையோடும், குறைந்த செலவிலும் அடுத்த மாதம் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தால் இதோ இந்த இடங்களை நீங்கள் பார்த்து ரசிக்கலாம். இதோ எந்தெந்த இடங்கள் என இங்கே அறிந்துக் கொள்வோம் வாருங்கள்.

கோவா : இந்தியாவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள சிறிய மாநிலம் தான் கோவா. இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாக உள்ள இங்கு பிப்ரவரி மாதத்தில் செல்லும் போது அதிக செலவாகாது. சீசன் இல்லாததால் மலிவான விலையில் விமானங்கள், தங்குமிடம் மற்றும் சாப்பாடு அனைத்தும் விலை மலிவானதாக இருக்கும். எப்போதும் போல பீச்சில் ஆட்டம் போட்டு விட்டு கோவாவின் அழகை ரசிக்கலாம்.இது மட்டுமின்றி இந்தியாவின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றான கோவா திருவிழாவும் பிப்ரவரியில் தான் நடைபெறும். பிப்ரவரி 18- 21 முதல் நடைபெறும் இந்த விழாவில் ஏராளமானோர் விதவிதமான வேடம் அணிந்து ஊர்வலமாக வருவார்கள். நல்ல கொண்டாட்டங்களுடன் பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் இருக்கும்.

ஷில்லாங், மேகாலயா :
 கடல் மட்டத்திலிருந்து 1525 மீட்டர் உயரத்தில் உள்ள நகரம் தான் வடகிழக்கு இந்தியாவில் உள்ள ஷில்லாங். மலைகள் என்றாலே எப்போதும் கண்களுக்கு விருந்தாகவே இருக்கும். ஆனால் இங்குள்ள முக்கிய சிறப்பு என்பது உம்ங்கோட் நதி எனப்படும் டாவ்கி நதி. உலகின் தூய்மையான நதிகளில் ஒன்றாக இது உள்ளது. வருடத்தில் எந்த நேரத்திலும் இந்த நதி மிகவும் தூய்மையாகவே தெரியும். இருந்தப்போதும் பிப்ரவரி மாதம் சிறந்த நேரமாக கருதப்படுகிறது. நதியின் கீழே உள்ள கற்பாறைகள், பாசிகள் என அனைத்தும் கண்ணாடி போல நமது கண்களுக்குக் காட்சியளிக்கும்.

ஜோத்பூர், ராஜஸ்தான் : ராஜஸ்தான் என்றாலே பாலைவனம் மற்றும் கோட்டைகள் தான் நமது கண்களுக்கு முதலில் தெரியவரும். இதன் அழகை முழுமையாக ரசிக்க வேண்டும் என்றால் அதிக குளிருக்கும், அதிக வெயிலுக்கும் இடைப்பட்ட நேரத்தில் உள்ள பிப்ரவரி மாதம். லேசான வெப்பநிலையோடு ராஜஸ்தானின் முழு அழகையும் ரசிக்கலாம்.

மும்பை, மகாராஷ்டிரா : இந்தியாவின் நுழைவு வாயிலான மும்பையில் பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளது. மற்ற மாதங்களைப் போல் இல்லாமல் பிப்ரவரி மாதத்தில் நீங்கள் செல்லும் போது அங்கு வருடாந்திர கலா கோடா திருவிழா என்பது பிப்ரவரி 4- 12 வரை நடைபெறும். இதோடு யுனெஸ்கோவின் உலக பாரம்பரியமிக்க யானை குகைககளில் பிப்ரவரி 13- 15 ஆகிய தேதிகளில் யானைத் திருவிழா நடைபெறும். இது சுற்றுலா பயணிகளுக்கு வியப்பை ஏற்படுத்தும்.

சூரஜ்குண்ட், ஹரியானா : இந்தியாவின் வளமான மற்றும் நாட்டுப்புற மற்றும் கலாச்சார பராம்பரியத்தை அனுபவிக்க சிறந்த இடங்களில் ஒன்றாக உள்ளது ஹரியானாவில் உள்ள சூரஜ்குண்ட். இதோடு இங்கு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4 முதல் 20 வரை நடைபெறும் வருடாந்திர கைவினை கண்காட்சி மிகவும் சிறப்பாக நடைபெறும்.

ஆக்ரா, உத்தர பிரதேசம் : காதலர்களின் நினைவு சின்னமாக கருதப்படும் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் சுற்றுலா செல்வதற்கு சிறந்த இடம். பளிங்கு கற்களால் ஆன கோட்டையை வியந்துப்பார்க்கும் வகையில் அமைந்திருக்கும். இதோடு பிப்ரவரி மாதத்தில் 18- 27 ஆம் தேதி வரை இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக தாஜ் மஹாத்சவ் விழா கொண்டாடப்படுகிறது.

அந்தமான் நிக்கோபார் தீவுகள் : கடலுக்கு நடுவில் உள்ள தீவுகள் என்றாலே பார்ப்பதற்கு வியப்பாக இருக்கும். அதிலும் மிகவும் புகழ்பெற்றது அந்தமான் நிகோபார் தீவுகள் என்றே கூறலாம். இங்கு பிப்ரவரி மாதத்தில் வானிலை மிகவும் அழகாக இருப்பதால் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும்.

கூர்க், கர்நாடகா : கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று தான் கூர்க். மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த இடங்கள் பிப்ரவரி மாதத்தில் கண்கவர் காட்சியாக இருக்கும். இங்குள்ள இயற்கையின் அழகு, மரங்கள்,விலங்குகள் அனைத்தும் இந்த நேரத்தில் உயிர்ப்புடன் நமது கண்களுக்கு காட்சியளிக்கும்.

நாசிக், மகாராஷ்டிரா : மாகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக்கில் உள்ள புகழ் பெற்ற சூலா திராட்சைத் தோட்டம் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடம். நேரடியாக திராட்சைத் தோட்டத்திற்கு விசிட் செய்து உங்களுக்குப் பிடித்த பழங்களை நீங்கள் ருசித்துப் பார்க்கலாம். பார்ப்பதற்கும் இந்த இடங்கள் கண்களைக் கொள்ளைக் கொள்ளும் அளவிற்கு இருக்கும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

முதன் முறையாக ஃபாரின் டூர் செல்ல திட்டமிடுகிறீர்களா? முதலில் நீங்கள் போக வேண்டிய இடங்கள் இவைதான்..!

January 19, 2023 0

 நம்மில் பெரும்பாலானோர் வெளிநாடு செல்ல மிகவும் ஆசைப்படுவோம். ஆனால் நமக்கு வரும் வருமானத்தை வைத்து பார்த்தால் ஃபாரின் டூர் போவதெல்லாம் சாத்தியமற்ற இலக்காக தோன்றும். எனவே அதை பற்றி கற்பனை மட்டுமே செய்கிறோம்.

எனினும் வரும் வருமானத்தை திட்டமிட்டு முறையாக சேமித்து வைப்பது அல்லது முதலீடு செய்வது உள்ளிட்டவற்றில் ஈடுபட்டால் வெளிநாடுகளுக்கு செல்லும் கனவை நனவாக்கி கொள்ளலாம். உலகெங்கிலும் ஃபன் செய்வதற்கேற்ற வகையில் அதே சமயம் ஓய்வெடுக்கும் வகையிலும் பல டூரிஸ்ட் ஸ்பாட்கள் உள்ளன. தேசிய பூங்காக்கள், அற்புதமான சுற்றுலா தளங்கள் மற்றும் பழைய நகரங்கள் வரை பல இதில் அடக்கம். நீங்கள் எதிர்காலத்தில் முதல்முறை வெளிநாடு டூர் செல்ல திட்டமிட்டால், போக போகும் நாடுகள் அல்லது அந்த இடத்தின் சிறப்புகள் பற்றி அறிந்து கொள்ள போதுமான நேரத்தை ஒதுக்குங்கள்.

சில ஆவணங்கள் ஒழுங்காக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வெளிநாட்டு பயணத்திற்கு புதுப்பிக்கப்பட்ட பாஸ்போர்ட் அவசியம். பின் தேவையான அனைத்து விசா ஸ்டாம்ப்ஸ்களையும் பெறுவதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். செல்லும் நாடுகளில் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதற்கு வங்கிகள் விதிக்கும் convenience fee-ஐ தவிர்க்க, அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் போதுமான அந்நாட்டு கரன்சியை (எக்ஸ்சேஞ்ச் செய்து) கையிருப்பு வைத்திருங்கள். நீங்கள் செல்லவிருக்கும் எந்தவொரு நாட்டின் அல்லது பகுதியின் உள்ளூர் மொழியில் சில அடிப்படை வார்த்தைகள் அல்லது சொற்றொடர்களை ஆன்லைனில் தெரிந்து கொள்வதன் மூலம் அங்கே சந்திக்கும் உள்ளூர் மக்களிடம் நன்றாக தகவல்தொடர்பு செய்யலாம், திறம்பட பழக முடியும்.முதல் முறை செல்ல வேண்டிய நாடுகளின் பட்டியல்..

வியட்நாம் : பல அற்புத கடற்கரைகளை கொண்ட ஒரு அழகான நாடு வியட்நாம். பாறை நிலப்பரப்புகள் முதல் வெப்பமண்டல தீவுகள் வரை அனைத்தையும் இந்த நாட்டில் காணலாம். பலவித விசித்திர மற்றும் சுவையான உணவுகளை குறிப்பாக அனைத்து வகை கடல் உணவுகளையும் இந்த நாட்டில் ருசிக்கலாம்.உயர்தர ஹோட்டல்களுக்குப் பதிலாக, குறைந்த விலையுள்ள ஹோம்ஸ்டேகளில் தங்க நீங்கள் தேர்வு செய்தால் உங்கள் ஒட்டுமொத்த பயண செலவு கணிசமாக குறையும்.

இலங்கை : நமது அண்டை நாடான இலங்கை நம்பமுடியாத குறைந்த செலவில் சிறந்த சுற்றுலா மையங்களை கொண்டுள்ளது. இந்த நாட்டில் ஏராளமான உயிரியல் பூங்காக்கள் மற்றும் அழகிய இடங்கள் இருப்பதால், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு இந்நாடு ஏற்றது. இந்தியாவை போலவே இலங்கையும் கலாச்சார ரீதியாக பல வேறுபாடுகள் அடங்கிய சமூகத்தை கொண்டது.

ஜப்பான் : ஜப்பானின் பரபரப்பான நகரங்களுக்கு மத்தியில் இருக்கும் பழங்கால கோவில்கள் மற்றும் ஷின்டோ கோவில்கள் சுற்றுலா பயணிகளுக்கு அமைதியை வழங்குகின்றன. முற்றிலும் வேறுபட்ட மற்றும் மாறுபட்ட ஜப்பான் கலாச்சாரம், தோட்டங்கள் மற்றும் புனித இடங்களை கண்டு டூரிஸ்ட்கள் பிரம்மிப்பார்கள். டீ செரிமனிஸ், ஸ்னோ மங்கிஸ், சுஷி, கிமோனோஸ் மற்றும் கரோக்கி போன்றவற்றை டூரிஸ்ட்கள் என்ஜாய் செய்ய முடியும்.

சீசெல்ஸ் தீவு : இந்த கண்கவர் தீவு இந்தியப் பெருங்கடலில் உள்ளது. வணிக ரீதியாக இன்னும் பெரியளவில் வளர்ச்சியடையாததால் பலருக்கு இந்த தீவை பற்றி தெரியாது. இது மேற்கு இந்தியப் பெருங்கடலில் சுமார் 115 தீவுகளைக் கொண்ட ஒரு தீவு நாடாகும். பல வகையான கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பிரமிக்க வைக்கும் கடற்கரைகள் உள்ளிட்ட பல இடங்களை கொண்டுள்ளது. கடற்கரையில் பொழுதை போக்க விரும்பும் இந்தியர்களுக்கு சீசெல்ஸ் தீவு சிறந்த இடமாகும். இங்கு விடுமுறையை கழிக்க ரூ.50,000 - ரூ.60,000-க்கு மேல் செலவாகாது.

தெசலோனிக்கி, கிரீஸ் : கிரீஸின் இரண்டாவது நகரமான தெசலோனிகி ஒரு கிரேக்க துறைமுக நகரமாகும். யுனெஸ்கோவின் அங்கீகாரம் பெற்ற உள்ளூர் உணவு காட்சி (local food scene), மீண்டும் திறக்கப்பட்டுள்ள நூற்றாண்டு பழமையான மோடியானோ ஃபுட் மார்க்கெட் உள்ளிட்டவை இங்கே டூர் செல்ல போதுமான காரணம். தீவுகளுக்கு அருகாமையில் இருக்கும் இந்த இடம், அழகான கடற்கரைகளுடன் கூடிய மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றாகும். நகரின் மையப்பகுதியை அதன் சர்வதேச விமான நிலையத்துடன் இணைக்கும் மெட்ரோ பாதை வரும் நவம்பர் 2023-ல் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

கடந்த சில நாட்களாக தொண்டை சளியால் அவதிப்படுகிறீர்களா..? இந்த வீட்டு வைத்தியங்களை செஞ்சு பாருங்க..!

January 19, 2023 0

 குளிர் அல்லது மழைக்காலம் வந்தாலே சளி, தொண்டை பிரச்சனைகள் வந்துவிடும். அப்படி சளி சேர்ந்துவிட்டாலே குறைந்தது 7 முதல் 14 நாட்கள் வரை நீடிக்கும். ஆனால் அதற்குள் நாம் படும் பாடு சொல்லி மாளாது. குறிப்பாக சைனஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு குளிர்காலம் என்பது நெருக்கடியான பருவநிலை எனலாம்.

அப்படி, சைனஸின் ஒரு வகைதான் தொண்டையில் சளி கட்டுதல். பெரும்பாலானோர் அவதிப்படுவதும் இந்த பிரச்சனையால்தான். இது வந்துவிட்டாலே குரலில் மாற்றம், தொண்டை வலி , வீக்கம் , எதையும் சாப்பிட முடியாது , கண்ணங்கள் , தாடைகளில் வலி என பல அறிகுறிகள் இருக்கும். இதனால் அன்றாட வேலைகளில் கூட ஈடுபட முடியாது.

இவ்வாறு தொண்டையில் சளி கட்ட என்ன காரணம் தெரியுமா..?

அதாவது குளிர்காலத்தில் காற்றின் மூலம் பரவும் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை தொற்றுகள் மூலமாக சளி பிடிக்கும்போது சைனஸ் பிரச்சனை உருவாகிறது. இந்த பாக்டீரியாக்கள் சைனஸ் அறைக்குள் சென்று சளி சவ்வுகளை வீங்க வைத்து அழற்சியை ஏற்படுத்துகிறது. இதனால் மூக்கில் நிணநீர் அதிகமாக சுரந்து தொண்டை வழியாக சளி திரவம் சுரந்துகொண்டிருக்கும். சில நேரங்கள் சளி திரவம் அடர்த்தியாக கட்டிகொள்ளும். இதனால் தொற்று வீரியம் அதிகரித்து தொண்டையில் வலியை உண்டாக்கும்.

இதனால் தொடர் இருமல், தொண்டைப்புண், தொண்டை வீக்கம், தாடை வலி, தலைவலி, தலைபாரம் , மூக்கடைப்பு, அடிக்கடி தும்மல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.

இதை சரி செய்ய சில வீட்டுக்குறிப்புகள் உள்ளன. இதை பின்பற்றுவதால் உங்கள் வலிக்கு சற்றூ நிவாரணம் கிடைக்கலாம். பிரச்சனை தீவிரமாக இருப்பின் மருத்துவரை அணுகுதல் நல்லது.

தொண்டை சளியை கரைக்கும் வீட்டு வைத்தியங்கள் :

1 .  ஒரு கிளாஸ் தண்ணீரை 5 நிமிடங்கள் சூடாக்கி அதில் ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் கலந்து வாயை 3-4 முறை கொப்பளிக்க வேண்டும். தண்ணீர் வெதுவெதுப்பான பதத்தில் இருக்க வேண்டும்.

2.  1 ஸ்பூன் அதிமதுரப் பொடியை தேனில் கலந்து சாப்பிடுங்கள் அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து வாயை கொப்பளித்து துப்பலாம்.

3.  வெற்றிலைக் கொடியின் தண்டுப் பகுதியை மட்டும் வாயில் போட்டு மென்று விழுங்க தொண்டை கரகரப்ப் நீங்கும்.

4.  வெற்றிலையை மைய அரைத்து அதன் சாறில் சுண்ணாம்பு குழைத்து தொண்டையில் தடவுங்கள். தொண்டை சளி நீங்கி, தொண்டை கட்டியிருந்தாலும் சரியாகும்.

5.  பசும்பாலுடன் 1 பூண்டு, மிளகுத்தூள், மஞ்சள் தூள், பனங்கற்கண்டு சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி குடித்து வர தொண்டை சளி கரைந்துவிடும்.

6.  முருங்கை இலை சாறு அல்லது குப்பைமேனி இலை சாற்றுடன் சுண்ணாம்பு குழைத்து தொண்டையில் தடவ சளி நீங்கும்.

7.  கற்பூர வல்லி இலையை மென்று விழுங்கினாலும் சளிக்கு நல்லது.

8.  துளசி இலைஅல்லது இஞ்சியை கொதிக்க வைத்து அவ்வப்போது தொண்டைக்கு இதமாக இருக்க குடித்து வந்தாலே சளி கரையும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

இந்த 7 பிரச்சனைகளுக்கு பேரிச்சம்பழத்தை இப்படி சாப்பிட்டால் பலன் கிடைக்குமாம்..!

January 19, 2023 0

 பேரிச்சம்பழம் இரும்புச்சத்து நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அதை வெறுமனே சாப்பிடுவதைக் காட்டிலும் பாலில் ஊற வைத்து சாப்பிட்டால் கூடுதல் பலன்களைப் பெறலாம். அதோடு ஊறவைத்த பாலிலும் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. சர்க்கரை விரும்பாதவர்களுக்கும் பேரிச்சை இனிப்பில் பால் குடிப்பது இன்னும் கூடுதல் பலன் தானே...சரி அப்படி ஊற வைத்த பாலிலும் பேரிச்சம்பழத்திலும் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன பார்க்கலாம்.

தூக்கமின்மை : தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுவோர் வெதுவெதுப்பான நீரில் பேரிச்சம் பழத்தை கலந்து ஊற வைத்து குடிக்க சரியாகலாம்.

மலச்சிக்கல் : 5-8 பேரிச்சம் பழத்தை அரை லிட்டர் பாலில் கொதிக்க வைத்து ஆறியதும் குடியுங்கள். இதை காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். காலை உணவு சாப்பிடும்போதும் சில பேரிச்சைகளை சாப்பிடலாம்.

வாயு : வாயுத்தொல்லை இருந்தால் பேரிச்சம் பழத்துடன் இடித்த சீரகத்தை 2:1 என்ற அளவில் பாலின் கலந்து குடிக்க வாயுத்தொல்லை நீங்கும்.

ஹாங் ஓவர் : பாலில் நன்கு ஊறிய பேரிச்சம் பழத்தை சாப்பிட ஹாங்ஓவர் சரியாகும்.

இரத்த சோகை, நரம்பு நோய்கள்,: இந்த 2 பிரச்னைகளையும் சரி செய்யும் ஆற்றல் பேரிச்சைக்கு உண்டு. எனவே நீங்கள் 24 மணி நேரம் அல்லது இரவு பேரிச்சையை பாலில் ஊற வைத்து மறுநாள் குடிக்கும்போது அதில் கொஞ்சம் குங்குமப்பூ, ஏலக்காய், இஞ்சி தட்டிப்போட்டு குடித்தால் நல்ல பலன்களைப் பெறலாம்.

இருமல் : பேரிச்சம்பழம் ஊற வைத்த பாலில் கொஞ்சம் தேனும் கலந்து வெதுவெதுப்பான பாலை குடிக்கும்போது நீடித்த இருமலை போக்க முடியும். இதற்கு பாலில் சில பேரிச்சைகளை போட்டு கொதிக்க வைத்து சூடாக குடித்தால் தொண்டைக்கும் இதமாக இருக்கும்.

பாலூட்டும் அம்மாக்களுக்கு நல்லது : பாலில் ஊற வைத்த பேரிச்சையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பாலூட்டும் தாய்மார்களுக்கு நல்லது. பாலும் நன்கு சுரக்கும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

January 18, 2023

30 வயதை எட்டிவிட்டீர்களா? உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள டிப்ஸ்!

January 18, 2023 0

 

30 வயதை எட்டிவிட்டீர்களா? உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள டிப்ஸ்!

இன்றைய காலகட்டத்தில் வயதானவர்கள் என்பது மட்டுமின்றி இளம் வயதினருக்கும் கூட மாரடைப்பு ஏற்படுகிறது.  ஒரு மனிதனின் சிறந்த ஆரோக்கியத்திற்கு அவரின் இதய ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது ஆகும்.  ஆரோக்கியமான உணவு, நிறைய உடல் செயல்பாடு மற்றும் முழு இரவு தூக்கம் உட்பட ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வது உங்கள் இதயத்தின் ஆரோக்கியம் மேப்படும்.  அதிக கொழுப்பு, இரத்த அழுத்தம் அதிகரிப்பு, நீரிழிவு மற்றும் புகைபிடித்தல் ஆகியவை இதய நோய்க்கான ஆபத்து காரணிகள் ஆகும்.  நீங்கள் இளம் வயது முதலே ஆரோக்கியமான உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பதன் மூலம் உங்கள் இதய ஆரோக்கியம் சிறப்படையும்.  30 வயதை எட்டியதும் நீங்கள் உங்கள் உணவிலும், வாழ்க்கையிலும் மாற்றவேண்டிய சில விஷயங்களை பற்றி இங்கே காண்போம்.

1. உடல் உழைப்பின்மை இதய நோய்க்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.  தினமும் உங்கள் உடற்பயிற்சியுடன் ரன்னிங், சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நீச்சல் போன்ற கார்டியோ செயல்பாடுகளை சேர்த்துக்கொள்வதன் மூலம் உங்கள் இதயத்தின் ஆரோக்கியம் மேம்படும்.  கார்டியோ உடற்பயிற்சிகள் உங்கள் இதயத் துடிப்பை உயர்த்துவதோடு, இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவை மேம்படுத்துகிறது.

2) நீங்கள் சாப்பிடும் உணவில் ஊட்டச்சத்துக்கள் சமச்சீரான அளவில் இடம்பெற்றிருக்க வேண்டியது அவசியம்,  உங்கள் உணவில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் புரதசத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.  ஆரோக்கியமான உணவுகளை இப்போதே சாப்பிட தொடங்கினால் நீங்கள் வயதாகும்போது உங்கள் இதய ஆரோக்கியம் மேம்படும்.  ஒரு நாளைக்கு 4.5 கப் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும், ஒரு வாரத்திற்கு குறைந்தது 3.5 கப் மீன் சாப்பிட வேண்டும், ஒரு நாளைக்கு 1 அவுன்ஸ் அளவு வேகவைத்த நார்சத்து நிறைந்த முழு தானியங்களை சாப்பிட வேண்டும் மற்றும் நட்ஸ், பருப்பு வகைகள் மற்றும் விதைகள் போன்றவற்றை ஒரு வாரத்திற்கு குறைந்தது 4 தடவை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.  இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க விரும்புபவர்கள் உங்கள் உணவில் உப்பு பயன்பாட்டை குறைக்க வேண்டும் மற்றும் நிறைவுற்ற கொழுப்புக்களை சாப்பிடக்கூடாது.  மேலும் நீங்கள் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் மற்றும் சர்க்கரை பானங்களைத் தவிர்ப்பதும் முக்கியம்.

3) பெரும்பாலும் இளம் வயதினருக்கு சிகரெட் பிடிப்பதனால் தான் மாரடைப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது.  புகைபிடிப்பதனால் அதிலுள்ள நச்சு புகைகள் இரத்த அழுத்தம் மற்றும் வீக்கத்தை அதிகரிப்பதோடு,  தமனிகளில் கொழுப்பை படிய வைக்கிறது.  இதய பிரச்சினைகள் உள்ள நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் புகைப்பிடிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

4) நீண்ட கால மன அழுத்தம் இருப்பதும் இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது, இதனால் உங்கள் தமனியின் சுவர்கள் சேதப்படுத்தும்.  வேலை ரீதியாக மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது வேறு ஏதேனும் ஒரு சில காரணமாக மன அழுத்தம் இருப்பது உங்கள் இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்பை ஏற்படுத்திவிடும்.  உங்கள் மன அழுத்தம் குறைய சுவாசப் பயிற்சிகள், தினசரி தியானம் அல்லது நீங்கள் விரும்பும் ஏதேனும் ஒன்றைச் செய்யலாம்.  மன அழுத்தமின்றி இருந்தால் உங்கள் இதயத்தின் ஆரோக்கியம் மேம்படும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உடலில் உள்ள வாயுக்கள் எத்தனை? இதற்கு நிவாரணம் என்ன?

January 18, 2023 0

 சித்த மருத்துவத்தில் வாயுக்கள் பத்து வகைப்படும். அவை: பிராணன் (உயிர்க்காற்று), அபானன் (கீழ் நோக்கு காற்று), வியானன் (பரவு காற்று), உதானன் (மேல் நோக்கு காற்று), சமானன் (நடுக்காற்று), நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் ஆகும். இவை நாடி, நரம்புகளில் இயங்குகின்றன என்று திருமூலர், திருமந்திரத்தில் கூறுகிறார்.

 வாயுப் பிரச்சினை என்றால் என்ன, வாயு எவ்வாறு? எப்படி? வயிற்றில் உருவாகிறது என்று பார்ப்போம். 

உணவை அவசர அவசரமாக சாப்பிடுவது, பேசிக்கொண்டே சாப்பிடுவது, தண்ணீரை அண்ணாந்து குடிப்பது, டீ, காபி, பாட்டில் பானங்களை உறிஞ்சிக் குடிக்கும் போது, நம்மை அறியாமலே காற்றையும் விழுங்கி விடுகிறோம். குடலில் உணவு செரிக்கும்போது, அங்கு இயல்பாகவே இருக்கும் லேக்டோ பேசில்லை போன்ற நன்மை தரும் பாக்டீரியாக்கள் நொதித்தல் செயல் மூலம் வேதி மாற்றங்கள் நிகழும் போது ஹைட்ரஜன், நைட்ரஜன், மீத்தேன், கார்பன் டை ஆக்சைடு, ஆக்சிஜன் போன்ற பல வாயுக்கள் தினமும் சுமார் 2 லிட்டர் வரை உற்பத்தியாகின்றன. இவை பெரும்பாலும் ரத்தத்தால் உறிஞ்சப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, சுவாசப்பாதை வழியே வெளியேறுகிறது.

சாதாரணமாக நம் குடலில் 200 மி.லி. அளவு வாயு தான் இருக்கும். குடலில் உள்ள வாயுக்கள் ஏப்பம் மூலம் வாய் வழியாக அல்லது ஆசன வாய் வழியாக வெளியேறும்.

 நாள் ஒன்றுக்கு சராசரியாக 15 முறை வாயு வெளியேறினால் கவலைப்பட தேவையில்லை. வாயு மேல் நோக்கி அல்லது கீழ்நோக்கி வெளியேறவில்லை என்றால் வயிற்றில் அழுத்தம் அதிகரித்து முதுகுப்பிடிப்பு, நெஞ்சு வலி, விலாப்பக்கத்தில் வலி, தலைவலி போன்றவற்றை உருவாக்குகிறது. மொச்சை, பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பாலில் செய்த இனிப்புகள், வெங்காயம், காலிபிளவர், முட்டைக்கோஸ் இவைகளை வாயுப்பிரச்சினை உள்ளவர்கள் அளவோடு சாப்பிடுவது நல்லது.

வாயுப் பிரச்சினை தீர உதவும் உணவுப் பழக்கம்: 

1) தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும், உணவை காலந் தவறாமல் எடுக்க வேண்டும்.

2) உடல் உள்ளுறுப்புகளைப் பலப்படுத்தும் சீரகத்தண்ணீரை தினமும் குடித்து வந்தால் வாயுப்பிரச்சினை குறையும். 

3) சீரகம், ஓமம், பெருங்காயம், மிளகு, சுக்கு, கறிவேப்பிலை, மணத்தக்காளி வற்றல் இவைகளை வறுத்து பொடித்து வைத்து, சோற்றில், உப்பு, நெய் சேர்த்து சாப்பிட வாயுப்பிரச்சினை நீங்கும். 

4) மோரில், வறுத்த பெருங்காயத்தூள், சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து குடிக்கலாம். 

5) ஓமத்தீநீர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குடிக்கலாம். சித்த மருத்துவத்தில்: 

1) ஏலாதி சூரணம் 1 டீஸ்பூன் அல்லது இரண்டு மாத்திரை வெந்நீரில் எடுக்க வேண்டும்.

 2) சீரக வில்வாதி லேகியம் அல்லது வில்வாதி லேகியம் காலை, இரவு சாப்பிட வேண்டும். 

3) குன்ம குடோரி மெழுகு 250-500 மி.கி. இருவேளை சாப்பிட வேண்டும். 

சித்த மருத்துவ   நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா) மின்னஞ்சல்: doctor@dt.co.in, 

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

TNPSC குரூப் 4 தேர்வு முடிவு எப்போது? புதிய அப்டேட் வெளியானது

January 18, 2023 0

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2022 இல் நடத்திய அனைத்து தேர்வுகளுக்கான முடிவுகள் குறித்த அட்டவணையை இன்று அப்டேட் செய்து வெளியிட்டுள்ளனர். 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2022 ஆம் ஆண்டிற்கான குரூப் 4 தேர்வு 7301 காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுக் கொண்டே இருந்த நிலையில் 2022 டிசம்பர் இறுதியில், 2023 பிப்ரவரி மாதம் முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்தனர். இத்தேர்வினை சுமார் 18 லட்சம் பேர் எழுதியுள்ளனர்.

அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட படி 2022 ஆம் ஆண்டும் அக்டோபர் மாதமே இத்தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். மகளிர் இட ஒதுக்கீட்டில் நீதிமன்றம் அளித்த உத்தரவின் பெயரில் திருத்தம் செய்யப்பட்ட முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

தற்போது வெளியிட்டுள்ள அப்டேட் செய்யப்பட்ட தேர்வு முடிவுகளுக்கான அட்டவணைப் படி ஏற்கனவே வெளிவந்த தகவலில் மாற்றம் இல்லை. குரூப் 4 தேர்வு முடிவுகள் 2023 பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ரூ.69,000 வரை சம்பளம்.. மத்திய அரசு வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்

January 18, 2023 0

 மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஃபதேகர் கன்டோன்மென்ட் போர்டில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் முதல் எம்.பி.பி.எஸ் படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்/திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 21 வயது நிறைந்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்வயது
R.M.O(Doctor)1ரூ.15,600-69,10023-35
Mid-Wife(Trained)1ரூ.5,200-20,20021-30
Electrician1ரூ.5,200-20,20021-30
Motor Pump Attendant1ரூ.5,200-20,20021-30

கல்வித்தகுதி:

பதவியின் பெயர்கல்வி
R.M.O(Doctor)எம்.பி.பி.எஸ் பட்டப்படிப்பு மற்றும் 1 வருடப் பயிற்சி
Mid-Wife(Trained)ANM 2 வருட டிப்ளமோ
Electrician10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ
Motor Pump Attendant10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்/திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் https://fatehgarh.cantt.gov.in/என்ற இணையத்தளத்தில் 21.01.2023 முதல் விண்ணப்பிக்கத் தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக்கட்டணமாக எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் ரூ.400 மற்றும் இதர பிரிவினர் ரூ.800 செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க : http://fcb.onlineregistrationforms.com

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 21.02.2023.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ரூ.63,000 வரை சம்பளம்..10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்... ராணுவத்தின் குரூப் சி பிரிவில் வேலை

January 18, 2023 0


 

ஜபல்பூரில் உள்ள ராணுவத்தின் JAK RIF REGIMENTAL CENTRE-இல் குரூப் சி பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். 18,000 ஆயிரம் முதல் 63,200 வரை சம்பளமாக வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க முழுமையான விவரங்கள் இதோ..

விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்
Cook1ரூ.19,900-63,200
Barber1ரூ.180,00-56,900
Tailor2ரூ.18,000-56,900
Draughtsman1ரூ.25,500
Messenger3ரூ.18,000-56,900
Daftry3ரூ.18,000-56,900
Safaiwala1ரூ.18,000-56,900

வயது வரம்பு :

இப்பணியிடங்களுக்கு 18 வயது முதல் 25 வயது வரை இருக்க வேண்டும். மேலும் குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது சலுகைகளும் உண்டு.

கல்வித்தகுதி:

பதவியின் பெயர்கல்வி
Cook10 ஆம் வகுப்பு தேர்ச்சி
Barber10 ஆம் வகுப்பு தேர்ச்சி
Tailor10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 3 வருட அனுபவம்
Draughtsmanபொறியியலில் டிப்ளமோ மற்றும் 1 வருட அனுபவம்
Messenger10 ஆம் வகுப்பு தேர்ச்சி
Daftry10 ஆம் வகுப்பு தேர்ச்சி
Safaiwala10 ஆம் வகுப்பு தேர்ச்சி

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதார்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து மேலும் தகுந்த சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

SELECTION BOARD GP 'C' POST,

JAK RIF REGIMENTAL CENTRE, JABALPUR CANTT PIN 482001.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 11.02.2023.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.



Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

சென்னையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் முதல் கலந்துகொள்ளலாம்..

January 18, 2023 0

 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும், இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் தனியார்துறை 

முகாம் நடைபெறும். அந்த வகையில் தற்போது சென்னையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்குத் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வண்ணம் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்கள் கலந்துகொண்டு தகுதியானவர்களுக்குப் பணி நியமனம் வழங்குவர். இந்த வேலைவாய்ப்பு முகாம் 20.01.2023( வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

வேலைவாய்ப்பு முகாம் முகவரி:

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையம், ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வாளகம்,

ஆலந்தூர் சாலை,

கிண்டி, சென்னை - 32.

இம்முகாமில் 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ, டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் பெற்றவர்கள் கலந்துகொள்ளலாம். இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார்த் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு காலிப் பணியிடங்களுக்கான ஆட்களைத் தேர்வு செய்யவுள்ளனர்.

மேலும் இம்முகாம் மூலம் பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கலந்துகொள்ள எந்தவித கட்டணமும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைதேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயன்பெறலாம்.

கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்கள் விவரங்களைத் தமிழ்நாடு தனியார்த் துறை வேலைவாய்ப்பு https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும்

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news