பலரும் கார்போஹைட்ரேட்ஸ் எடை அதிகரிக்க முக்கிய காரணமாக இருப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள். குறிப்பாக இரவு நேரங்களில் Carbs கொண்ட உணவுகளை சாப்பிடுவதால் உடல் எடை கணிசமான அளவு அதிகரிப்பதாக பலரும் நினைக்கிறார்கள்.
ஆனால் உண்மையில் கார்போஹைட்ரேட்ஸ் மீது குற்றம் சாட்டப்பட வேண்டுமா..? என்ற கேள்விக்கு பதிலளித்த பிரபல ஃபிட்னஸ் ட்ரெயினரான Ramapriya இது ஒரு கட்டுக்கதை என மறுத்து, இரவில் கார்போஹைட்ரேட்ஸ்களை உட்கொள்வதில் தவறில்லை என்பதை தனது சமீபத்திய சோஷியம் மீடியா போஸ்ட் மூலம் விளக்கியுள்ளார்.
ஒரு சிலர் நம் உடல் இரவில் நாம் எடுக்கும் கார்போஹைட்ரேட்டுகளை வித்தியாசமாக ப்ராசஸ் செய்கிறது, இது எடை அதிகரிக்க வழிவகுக்கும் என கூறுகின்றனர். இது சரியான கருத்தா என்ற கேள்விக்கு பதில் இல்லை என கூறியுள்ளார். இதற்கு விளக்கமளித்துள்ள ப்ரியா, ”நம் உடல் இரவில் கார்போஹைட்ரேட்ஸ்களை வித்தியாசமாக ப்ராசஸ் செய்வதில்லை. கார்போஹைட்ரேட்ஸ் எனர்ஜிக்காக குளுக்கோஸாக மாற்றப்படுகின்றன. மேலும் சில கார்போஹைட்ரேட்ஸ் நம் கல்லீரல் மற்றும் தசைகளில் கிளைகோஜனாக (Glycogen) ஸ்டோராகும். அதிகப்படியான குளுக்கோஸ், உங்கள் உடலால் உடனடியாகப் பயன்படுத்த முடியாத அல்லது கிளைகோஜனாக மாற்ற முடியாமல் கொழுப்பாக சேமிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.
View this post on Instagram
ஃபிட்னஸ் ட்ரெயினரான Ramapriya-வின் கூற்றுப்படி, Fat loss என்று வரும் போது ஒருவர் எடுத்து கொள்ளும் மொத்த கலோரிகள் தான் முக்கியம். எனவே கார்போஹைட்ரேட் இங்கே பிரச்சனை இல்லை. கார்போஹைட்ரேட் அல்லது வேறு எந்த உணவுகளையும் அதிகம் சாப்பிடுவது, அதிக கலோரிகளை எடுத்து கொள்ள வழிவகுக்கும்.
தவிர நீங்கள் எடுத்து கொள்ளும் கூடுதல் கலோரிகள் உங்கள் உடலில் கொழுப்பாக சேமிக்கப்படும். எனவே அதிக கலோரிகளை சாப்பிடுவது தான் உடல் எடை வழிவகுக்கும். கலோரியை மிதமாக எடுத்து கொள்கிறீர்கள் என்றால், இரவில் கார்போஹைட்ரேட்ஸ்களை சாப்பிடுவது ஒரு பொருட்டல்ல. மிதமான கலோரி நுகர்வால் எடை குறையும் ” என்றார்.
Ramapriya-வின் கருத்தை ஆமோதித்துள்ள பெங்களூர் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸின் தலைமை மருத்துவ உணவியல் நிபுணரான டாக்டர் பிரியங்கா ரோஹத்கி, கார்போஹைட்ரேட்ஸ்கள் பலர் கூறும் அளவுக்கு மோசமானவை அல்ல என்றார்.
”கார்போஹைட்ரேட்ஸ் இரவில் உடலுக்குத் தேவையானவை தான், ஏனெனில் இரவில் தூங்கும் போது உடலின் பழுது மற்றும் மீட்புக்கு இது உட்படுகிறது. எனவே உடல் தசைகளை சரி செய்ய, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் இரண்டையும் நமது உடல் ஆற்றல் மூலமாக பயன்படுத்துகிறது என்றார். உங்கள் Portions உங்களுக்குத் தேவையானதை விட அதிகமாக இருந்தால், இரவில் கார்போஹைட்ரேட்ஸ்களைத் தவிர்ப்பது வேலை செய்யாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது போல கார்போஹைட்ரேட்ஸ்களை தீமை விளைவிப்பவையாக கருதுவதை நிறுத்துங்கள். அதிகப்படியான எதுவும் உங்கள் எடையை அதிகரிக்க செய்யலாம்” என்கிறார் பிரியங்கா.
இரவு உணவு மற்றும் தூக்கத்திற்கு இடையே எப்போதும் 1 - 2 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள். அந்த வகையில் சிம்பிள் கார்போஹைட்ரேட்ஸ்களைத் தவிர்த்து முழு தானியங்கள், அன்பாலிஷ்ட் தானியங்கள், தினைகள் போன்ற காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ்களில் கவனம் செலுத்த வேண்டும், மேலும் தூங்குவதற்கு 2-3 மணி நேரத்திற்கு முன் அவற்றை சாப்பிட வேண்டும் என்பதே எனது ஆலோசனையும் கூட என்றார் பிரியங்கா ரோஹத்கி.
பிரபல Internal medicine கன்சல்டன்ட்டான அபிஷேக் சுபாஷ் கூறுகையில், தூங்க செல்வதற்கு சற்று முன் சாப்பிட வேண்டும் என்றால், ஆரோக்கியமான மற்றும் லேசான உணவை சாப்பிடலாம் என்கிறார். மிக முக்கியமாக, நாள் முழுவதும் ஒருவர் தனது கலோரி உட்கொள்ளலைப் பற்றி விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார். இரவுக்குள் போதுமான கலோரி எடுத்து கொண்டுவிட்டீர்கள் என்றால், இரவில் எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது என்கிறார்.