Agri Info

Adding Green to your Life

May 24, 2023

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு உதவித்தொகையுடன் வேலை – சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!

May 24, 2023 0

 

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு உதவித்தொகையுடன் வேலை – சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!

South East Central Railway ஆனது NAPS-ன் கீழ் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Electrician பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 105 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.South East Central Railway காலிப்பணியிடங்கள்:

Electrician பணிக்கென காலியாக உள்ள 105 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Electrician கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

South East Central Railway வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Electrician ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.7,000/- முதல் ரூ.7,700/- வரை ஊதியமாக(உதவித்தொகை) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

South East Central Railway தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Reserve Bank of India-வில் புதிய வேலைவாய்ப்பு – ஒரு மணி நேரத்திற்கு ரூ.400/- சம்பளம்!

May 24, 2023 0

 

Reserve Bank of India-வில் புதிய வேலைவாய்ப்பு – ஒரு மணி நேரத்திற்கு ரூ.400/- சம்பளம்!

Part-time Pharmacist பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Reserve Bank of India ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.400/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Part-time Pharmacist கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Diploma in Pharmacy / B. Pharm தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RBI வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Part-time Pharmacist ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.400/- ஊதியமாக வழங்கப்படும்.


RBI தேர்வு செய்யப்படும் முறை:

screening / shortlisting செய்யப்படும் தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு 13.06.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news


Axis Finance Limited நிறுவனத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – முழு விவரங்களுடன்!

May 24, 2023 0

 

Axis Finance Limited நிறுவனத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – முழு விவரங்களுடன்!

Axis Finance Limited ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Axis Finance Limited காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Assistant பணிக்கென மொத்தம் 62 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assistant கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Axis Finance Limited வயது வரம்பு:

24.05.2023ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Assistant முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 0 முதல் 2 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Axis Finance Limited ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Axis Finance Limited-ன் நிபந்தனைகளின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

Assistant தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.06.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

SAIL நிறுவனத்தில் Diploma முடித்தவர்களுக்கான வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டும்!

May 24, 2023 0

 

SAIL நிறுவனத்தில் Diploma முடித்தவர்களுக்கான வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டும்!

Proficiency Training of Nurse, Pharmacists பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Steel Authority of India Limited (SAIL) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.10,000/- மாத ஊதியம்(Stipend) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

SAIL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Proficiency Training of Nurse, Pharmacists பணிக்கென காலியாக உள்ள 73 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pharmacists கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc. (Nursing) / Degree / Diploma தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

SAIL வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Pharmacists ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.10,000/- மாத ஊதியமாக(Stipend) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SAIL தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 13.06.2023 முதல் 15.06.2023, 20.06.2023,21.06.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் நேரில் சென்று கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – மாதம் ரூ.16000 சம்பளம்! முழு விவரம்!

May 24, 2023 0

 

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – மாதம் ரூ.16000 சம்பளம்! முழு விவரம்!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த பணிக்கான முழு விவரங்களை பற்றி பார்க்கலாம்

வேலைவாய்ப்பு அறிவிப்பு

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் project assistant பணியில் ஒரு இடம் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த பணியில் சேர கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம் குறித்த முழு விவரம் வெளியாகி இருக்கிறது

கல்வித்தகுதி

இந்த பணிக்கு கல்வித்தகுதியாக M.Sc. உயிர்வேதியியல்/ வாழ்வியல் அதனுடைய தொடர்புடைய பாடங்களை படித்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் NET/ GATE தேர்வு எழுதி இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

MKU வயது வரம்பு

MKUவில் இந்த பணியில் சேர வயது வரம்பு அதிகபட்சம் 30க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

MKU சம்பளம்

இந்த பணியில் தேர்வு செய்யப்படுவோருக்கு சம்பளமாக ரூ. 16000 மாதம் வழங்கப்படும் என வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இந்த பணியில் விண்ணப்பிப்பவர்களில் தேர்வு செய்யப்படுபவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

project assistant பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் அவர்களின் சுய விவரம் பட்டியலுடன், புகைப்படம் மற்றும் கல்வி சான்றிதழ்களுடன் subbiah@nrcbsmku.org என்பதில் ஜூன் 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

இளைஞர்களுக்கு ஒரு நற்செய்தி… 2.75 லட்சம் பேருக்கு IT துறையில் வேலை வாய்ப்பு!!

May 24, 2023 0

 

மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கில் அரசு கொண்டு வந்துள்ள 'உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை' (Production Linked Incentives) வெற்றியை அளித்து வருகிறது. இதன் நோக்கம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை உற்பத்தி செய்வது தான்.

அந்தவகையில், டெல், ஹெச்பி போன்ற உலகளாவிய நிறுவனங்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்ட PLI திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அத்துடன் ஐடி ஹார்டுவேர் துறைக்கு ரூ.17,000 கோடி மதிப்பிலான உற்பத்தி இணைப்புச் சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், அதன் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் அல்ல, பிரபல தொலைபேசி நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் சாம்சங் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது.

மடிக்கணினிகள், டேப்லெட்டுகள், all-in-one PCs, servers, ultra-small form factor devices ஆகியவற்றின் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் ஆறு ஆண்டுகளில் ரூ.3.35 லட்சம் கோடி மதிப்பிலான உற்பத்தியை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து உற்பத்தி நிறுவனங்களும் PLI 2.0 இன் கீழ் இந்த சலுகைகளுக்கு தகுதியுடையவை. இந்தச் சலுகைகள் மூலம் ரூ.3.35 லட்சம் கோடி மதிப்பிலான கூடுதல் உற்பத்தி நடைபெறும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

இந்த திட்டத்தினால், 75,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இத்துறையில் நேரடி-மறைமுக வேலைவாய்ப்பு விகிதம் 1:3 ஆக உயரும். எனவே, மேலும் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

பிப்ரவரி 2021 இல், இந்தத் துறைக்கு ரூ.7,350 கோடி மதிப்பிலான PLI திட்டத்தையும் அரசாங்கம் அறிவித்தது. இந்தத் தொகையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று தொழில்துறையினர் மத்திய அரசிடம் முறையிட்டுள்ளனர்.

மத்திய அரசு 2020 ஏப்ரலில் முதன் முறையாக PLI திட்டத்தை அறிமுகப்படுத்தியது. மொபைல் போன் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இது எலக்ட்ரானிக்ஸ் துறைக்கு நல்ல ஊக்கத்தை அளித்தது.

உலகின் இரண்டாவது பெரிய மொபைல் உற்பத்தி நாடாக இந்தியா மாறியுள்ளது. இந்த மார்ச் மாத நிலவரப்படி, இந்தியா 11 பில்லியன் டாலர் மதிப்புள்ள மொபைல் போன்களை ஏற்றுமதி செய்துள்ளது. இந்த வெற்றியின் அடிப்படையில், IT வன்பொருளுக்கான இரண்டாவது சுற்று PLI ஊக்கத்தொகையை மையம் சமீபத்தில் அறிவித்தது.

மொபைல் போன் ஏற்றுமதியில் கடந்த ஆண்டு 10 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் இந்தியா 105 பில்லியன் டாலர் என்ற மைல்கல்லை கடந்துள்ளது.

இது தற்போது மடிக்கணினிகள் மற்றும் பிற மேம்பட்ட கணினிகள் போன்ற சாதனங்களின் உற்பத்தியில் ஸ்மார்ட்போன் மற்றும் தொலைத்தொடர்பு உபகரணங்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் வெற்றியை பிரதிபலிக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது. PLI திட்டத்தின் புதிய பதிப்பு, நாட்டில் மொத்த மின்னணுவியல் உற்பத்தியை ஆண்டுதோறும் $300 பில்லியன்களாக உயர்த்தும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

May 23, 2023

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் – ஜூன் 10 கடைசி நாள்!

May 23, 2023 0

 

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் – ஜூன் 10 கடைசி நாள்!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற பொது மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

உதவித்தொகை விண்ணப்பம்:

தமிழக அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் நலனிற்காக ஒவ்வொரு மாதமும் உதவித்தொகை வழங்கி வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற பொது மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்கள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் ஆன மனுதாரர்களுக்கும், மாற்று திறனாளி பிரிவில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ள இளைஞர்களுக்கும் உதவி தொகை வழங்கப்படுகிறது.

இந்த உதவித்தொகை 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத பொது பிரிவினருக்கு ரூ.200, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 300, 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வி தகுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400, பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு ரூ. 600 வழங்கப்படுகிறது. மேலும் இதற்கான வயது வரம்பு பொது பிரிவினர் 40 வயதுக்கு உட்பட்டவராகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயது க்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும் இந்த உதவித்தொகை பெற குடும்ப வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இந்த உதவித்தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும். திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்றோ அல்லது இணையதளத்தில் இருந்தோ படிவத்தை பதிவேற்றம் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த உதவித்தொகை பெற 2023-24 ஆம் ஆண்டுக்கான சுய உறுதிமொழி ஆவணங்களை ஜூன் 10 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

பஞ்சாப் நேஷனல் வங்கியில் SO வேலைவாய்ப்பு 2023 – 240 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.63840/-

May 23, 2023 0

  

பஞ்சாப் நேஷனல் வங்கியில் SO வேலைவாய்ப்பு 2023 – 240 காலிப்பணியிடங்கள்  || சம்பளம்: ரூ.63840/-

பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து  Specialist Officers (SO)  பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த வங்கி பணிக்கு என 240 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளார்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 24.05.2023 முதல் 11.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கி காலிப்பணியிடங்கள்:
  • Officer-Credit (JMGS I) – 200 பணியிடங்கள்
  • Officer-Industry (JMGS I) – 08 பணியிடங்கள்
  • Officer-Civil Engineer (JMGS I) – 05 பணியிடங்கள்
  • Officer-Electrical Engineer (JMGS I) – 04 பணியிடங்கள்
  • Officer-Architect (JMGS I) – 01 பணியிடம்
  • Officer-Economics (JMGS I) – 06 பணியிடங்கள்
  • Manager-Economics (MMGS II) – 04 பணியிடங்கள்
  • Manager-Data Scientist (MMGS II) – 03 பணியிடங்கள்
  • Senior Manager-Data Scientist (MMGS III) – 02 பணியிடங்கள்
  • Manager-Cyber Security (MMGS II) – 04 பணியிடங்கள்
  • Senior Manager- Cyber Security (MMGS III) – 03 பணியிடங்கள்
PNB Specialist Officers (SO) கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து B.E./ B. Tech. in streams of Electrical/ Chemical/ Mechanical/ Civil/ Textile/ Mining/ Metallurgy/ Chartered Accountant (CA) /  B.Arch/ Graduation Degree/ M.E./ M. Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01.01.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 38 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

1. Officer-Credit – Rs.36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840/-

2. Officer-Industry – Rs.36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840/-

3. Officer-Civil Engineer – Rs.36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840/-

4. Officer-Electrical Engineer – Rs.36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840/-

5. Officer-Architect – Rs.36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840/-

6. Officer-Economics – Rs.36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840/-

7. Manager-Economics – Rs.48170-1740/1-49910-1990/10-69810/-

8. Manager-Data Scientist – Rs.48170-1740/1-49910-1990/10-69810/-

9. Senior Manager-Data Scientist – Rs.63840-1990/5-73790-2220/2-78230/-

10. Manager-Cyber Security – Rs.48170-1740/1-49910-1990/10-69810/-

11. Senior Manager- Cyber Security – Rs.63840-1990/5-73790-2220/2-78230/-

SO தேர்வு செயல் முறை:

1. Written/ Online Test

2. Personal Interview

சென்னை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் மட்டுமே தமிழகத்தில் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்:
  • SC/ST/PwBD விண்ணப்பதாரர்கள்  – ரூ.50/- + GST@18% per candidate (only postage charges) = Rs 59/-
  • மற்ற விண்ணப்பதாரர்கள்  – ரூ.1000/- + GST@18% per candidate = Rs 1180/-
PNB Specialist Officers (SO) பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி ஆன்லைன் இணைய முகவரி மூலம் 11.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Apply Online


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ECIL CS Trainee வேலைவாய்ப்பு 2023 – உதவித்தொகை: ரூ. 15,000/- || தேர்வு கிடையாது!

May 23, 2023 0

 

ECIL CS Trainee வேலைவாய்ப்பு 2023 – உதவித்தொகை: ரூ. 15,000/- || தேர்வு கிடையாது!

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) ஆனது CS Trainee பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 31/05/2023 க்குள் இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ECIL காலிப்பணியிடங்கள்:

CS Trainee பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ECIL கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Bachelor’s degree in law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15,000/- உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

ECIL CS Trainee தேர்வு செயல் முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி, அனுபவம் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ECIL பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 31/05/2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf



சுகர் இருக்கவங்க சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சாப்பிடலமா..? நிபுணர்கள் கருத்து..!

May 23, 2023 0

 

டைப் 2 நீரிழிவு மிகவும் ஆபத்தான நோய் என்பது அனைவரும் அறிந்ததே... ஏனெனில் சர்க்கரை நோயை மருந்துகளால் முற்றிலும் ஒழிக்க முடியாது. அதேசமயம் வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் மற்றும் உணவு கட்டுப்பாடுகள் மூலமே அதை கட்டுக்குள் வைக்கமுடியும். அதனால்தான் நீரிழிவு நோயாளிகள் உணவு மற்றும் பானங்களை அதிகம் தவிர்க்க வேண்டும். எந்தப் பொருளைச் சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை அதிகரிக்கிறது, எந்தப் பொருள் சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கிறது என்பதை சர்க்கரை நோயாளிகள் எப்போதும் கவனித்துக் கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் வெல்லம் சாப்பிடலாமா, வேண்டாமா என்ற குழப்பம் பல சமயங்களில் உள்ளது. பல நூற்றாண்டுகளாக வெல்லம் இனிப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. கரும்பிலிருந்து வெல்லம் கைமுறையாக தயாரிக்கப்படுகிறது. அதனால்தான் வெல்லம் சாப்பிடுவதால் சர்க்கரை அதிகரிக்காது என்று சிலர் நம்புகிறார்கள். அதேசமயம், இதில் இனிப்பு அதிகம் உள்ளதால், சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் என்று சிலர் கூறுகின்றனர்.

வெல்லம் என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். வெல்லம் சர்க்கரைக்கு சிறந்த மற்றும் ஆரோக்கியமான மாற்றாகும். வெல்லத்தில் இரும்பு, மெக்னீசியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. ஆர்கானிக் வெல்லம் எப்பொழுதும் இரசாயனமற்றதாகவே இருக்கும், எனவே சாதாரண வெல்லத்தை விட ஆர்கானிக் வெல்லம் பல நன்மைகளைக் கொண்டுள்ளது.

சர்க்கரை நோயாளிகள் வெல்லம் சாப்பிடலாமா..? Healthyfem ஹெல்த் இணையதளத்தின் படி, நீரிழிவு நோயாளிகளுக்கு உணவு சமைக்கும்போது, ​​செயற்கை இனிப்புக்குப் பதிலாக இயற்கை இனிப்பானைப் பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் அனைத்து இயற்கை இனிப்புகளும் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த வழி என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. பதப்படுத்தி தயாரிக்கப்படும் வெள்ளைச் சர்க்கரையை விட ஆர்கானிக் பொருட்களால் செய்யப்பட்ட வெல்லம் சிறந்தது.

வெள்ளை சர்க்கரையைப் போலன்றி, ரசாயனங்கள் மற்றும் பிற பொருட்கள் ஆர்கானிக் வெல்லத்தில் சேர்க்கப்படுவதில்லை. அதேசமயம் அதை அளவாக பயன்படுத்தினால்தான் அதன் நன்மையை முழுமையாக பெற முடியும். காரணம், 100 கிராம் வெல்லத்தில் 98 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. அதே நேரத்தில் இது 383 கலோரி ஆற்றலை வழங்குகிறது.

100 கிராம் சர்க்கரையில் 100 கிராம் கார்போஹைட்ரேட் காணப்படுகின்றது. அதாவது, சர்க்கரையுடன் ஒப்பிடும்போது வெல்லத்தில் இரண்டு கிராம் குறைவான கார்போஹைட்ரேட் மட்டுமே காணப்படுகிறது. எனவேதான் நீரிழிவு நோயாளிகளும் வெல்லம் சாப்பிட பரிந்துரைக்கப்படுவதில்லை.

அப்படியானால் என்ன சாப்பிட வேண்டும்..? சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பு உணவின் மீது நாட்டம் அதிகரித்தால், இஞ்சி, துளசி, இலவங்கப்பட்டை போன்ற மூலிகை பொருட்களை உட்கொள்ள வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் அடிக்கடி அறிவுறுத்துகிறார்கள். இவை அனைத்திலும் கிளைசெமிக் இண்டெக்ஸ் மிகவும் குறைவு. இது தவிர, ஸ்டீவியா செடியின் இலைகள் (இதை சர்க்கரை துளசி, சீனித்துளசி என்றும் அழைப்பார்கள்) சாப்பிடலாம். இதில் கிளைசெமிக் குறியீடும் மிகக் குறைவு. அதேபோல் இனிப்பு பழங்களையும் உட்கொள்ளலாம்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

இரசாயனம் மூலமாக பழுக்க வைத்த மாம்பழங்களால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா..?

May 23, 2023 0

 கோடைகால சீசனில் மாம்பழங்கள் பெருமளவில் விற்பனைக்கு வருகின்றன. மக்களின் அதிகப்படியான தேவைகளை பூர்த்தி செய்ய மாங்காய்களை கூடிய விரைவில் பழுக்க வைத்து உடனுக்குடன் விற்பனைக்கு கொண்டு வர வியாபாரிகள் நினைக்கின்றனர். இதனால், இயற்கையாக மாம்பழங்களை பழுக்க வைக்காமல், துரிதமாக பழுக்கும் வகையில் ரசாயனத்தை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு ரசாயனம் கொண்டு பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை இங்கே பார்க்கலாம்.

பொதுவான விளைவுகள்:

ரசாயனம் மூலமாக பழுக்க வைத்த மாம்பழங்களை சாப்பிடுவதால் வாந்தி, வயிற்றுப்போக்கு, கடுமையான பலகீன உணர்வு, நெஞ்செரிச்சல் போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். சிலருக்கு ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு ஏற்படலாம். மாம்பழத்திற்காக சேர்க்கப்படும் ரசாயனங்கள் நம் உடலில் சேரும்போது சருமத்தில் புண் உண்டாகலாம். உணவை விழுங்க முடியாமல் தொண்டையில் வலி ஏற்படலாம்.

நரம்பு பிரச்சினை மற்றும் இதர பின்விளைவுகள்:

ரசாயன மாம்பழங்களால் ஏற்பட கூடிய நேரடியான பின் விளைவுகள் மட்டுமன்றி இருமல், மூச்சு சுவாச பிரச்சினை போன்றவை ஏற்படலாம். இதுபோன்ற தொந்தரவுகள் ஏற்பட்டால் தாமதம் இல்லாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

ரசாயன மாம்பழங்களால் நம் திசுக்களுக்கு போதுமான அளவில் ஆக்ஸிஜன் சப்ளை நடக்காது. இதனால் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறையத் தொடங்கும். இதனால் நரம்புகளில் பிரச்சினை ஏற்பட்டு கால்களில் உணர்வின்மை ஏற்படும்.

என்னென்ன ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது?

இயற்கையாக மாங்காய்களை பழுக்க வைத்தால் நீண்டகாலம் எடுத்துக் கொள்கிறது என்பதாலேயே ரசாயனங்களை வியாபாரிகள் பயன்படுத்துகின்றனர். கால்சியம் கார்பைடு, எதீபோன் போன்ற ரசாயனங்களை பயன்படுத்தினால் மாங்காய்கள் துரிதமாக பழுத்து விடும். அதேபோல ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ரசாயனங்களையும் பயன்படுத்துகின்றனர்.

எப்படி கண்டறிவது.!!

மாம்பழம் எந்த நிறத்தில் இருந்தாலும் இயற்கையாக பழுக்க வைத்த பழங்களில் அதன் நிறம் மங்கலாக இருக்கும். ஆனால், செயற்கையாக பழுக்க வைத்த பழங்களில் கண்ணை பறிக்கும் வகையில் நிறம் பளீரென்று இருக்கும். இயற்கையாக பழுத்த மாம்பழங்களில் மணம் வீசும் மற்றும் அதன் சுவை அலாதியாக இருக்கும்.

ஆனால், செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களில் எந்தவித மணமும் வீசாது மற்றும் சுவையும் இருக்காது. சீசன் இல்லாத காலங்களில் மாம்பழங்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். பழங்களை கையில் எடுத்து பார்கின்ற போது கனிந்த தோற்றம் ஏற்படாமல் தடிமனான வகையில் கல் போன்று இருக்கும் பழங்கள் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்டதாக இருக்கலாம்.

அக்கம், பக்கத்து வீடுகள், நண்பர்கள், உறவினர்கள் போன்றவர்களின் வீடுகளில் விளைந்த மாங்காய்களை நேரடியாக விலைக்கு வாங்கி அவற்றை வீட்டிலேயே பழுக்க வைத்து சாப்பிடலாம்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

RITES நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

May 23, 2023 0

 

RITES நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவையில் காலியாக உள்ள Team Leader பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

RITES நிறுவன காலிப்பணியிடங்கள்:

Team Leader பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது, 01.06.2023 தேதியின் படி, அதிகபட்சம் 63 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Leader கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து Degree in Civil/ Mechanical minimum Engineering/ Masters in Ocean Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.80,000/- முதல் ரூ.2,20,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 15 நாட்களுள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news