Agri Info

Adding Green to your Life

May 27, 2023

இரவு தூங்கும் முன் இந்த 4 பழக்கங்களை உங்கள் வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.. நீண்ட ஆயுளுடன் வாழலாம்..!

May 27, 2023 0

 பொதுவாக ஒருவரின் வாழ்வில் அன்றாடம் கடைபிடிக்க கூடிய பழக்க வழக்கங்கள் தான் அந்த மனிதரை ஆரோக்கியமானவராக வைத்து கொள்ளும். மோசமான பழக்க வழக்கங்கள் உடலுக்கு கேடு விளைக்க கூடியதாக அமையும். அந்த வகையில், தினசரி செயல்பாடுகள், நடைமுறைகள், நேர அட்டவணைகள் ஒருவருக்கு மிகவும் முக்கியமானவை.

யாராக இருந்தாலும், ஒரு கால அட்டவணையை கொண்டு தினசரி தனது பழக்க வழக்கங்களை சீராக செய்து வருவது எண்ணற்ற நன்மைகளை தரும். ஆனால், இன்றைய தொழில்நுட்ப உலகில் நமது தினசரி நடவடிக்கைகள் என்பது சீரற்ற முறையில் உள்ளன. எனினும் இரவு நேரத்தில் நாம் கடைபிடிக்கும் சில பழக்க வழக்கங்கள் நமது அடுத்த நாளை சிறப்பாக கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்றும்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று தூக்கம் என்பதை நாம் அனைவரும் நன்றாக அறிவோம். நாம் படுக்கைக்குச் செல்வதற்கு எப்படித் தயாராகிறோம் என்பதும் நமது வாழ்க்கை முறையைப் பற்றி நிறைய சொல்கிறது. ஒரு நல்ல இரவு தூக்கத்திற்கு, நீங்கள் சில விஷயங்களைப் பயிற்சி செய்ய வேண்டியது முக்கியம். தரமான இரவு தூக்கம் இல்லாமல் போவது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்த கூடும். குறிப்பாக நம்மில் பெரும்பாலோர் அதிக நேரம் உட்கார்ந்து இருக்க கூடிய வாழ்க்கை முறையை கொண்டிருப்பதால், தூக்கமின்மை என்பது பல சிக்கல்களை ஏற்படுத்தும்.

எனவே ஆரோக்கியமான இரவு நேர வழக்கத்தை உருவாக்குவது சுய பாதுகாப்பு மட்டுமல்லாமல், இது சிறந்த ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் வழிவகுக்கிறது. இரவு நேரத்தில் அவசியம் பின்பற்ற வேண்டிய 4 பழக்க வழக்கங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

எலெக்ட்ரானிக் கேட்ஜெட்ஸ் : பொதுவாக கணினி, தொலைக்காட்சி, ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் உள்ளிட்ட எலக்ட்ரானிக் டிவைஸ்கள் அனைத்தும் வலுவான நீல ஒளியை வெளியிடுகின்றன. எனவே, இந்த டிவைஸ்களை இரவு தூங்குவதற்கு முன் பயன்படுத்தும் போது, அந்த நீல ஒளி உங்கள் மூளையை ஓய்வு நிலைக்கு கொண்டு செல்லாமல் தடுக்க கூடும். மேலும், இது இரவு நேரத்தை கூட உங்கள் மூளையை பகல்நேரம் என்று நினைக்க வைக்கிறது. இதன் விளைவாக, உங்கள் மூளை மெலடோனின் உற்பத்தியை தடுக்குகிறது மற்றும் இரவு நேர தூக்கத்தை வரவிடாமல் உங்களை கண் விழிக்க வைக்கிறது.

ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகள்: காலை நேரத்தில் முதலில் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவை உட்கொள்வது உங்கள் ஹார்மோன் சமநிலையை சமாளிக்க மிகவும் உதவுகிறது. மேலும், இது உங்களின் எடையை குறைக்கவும், சர்க்கரை அளவை சீராக வைக்கவும் வழி செய்கிறது. இந்த பழக்க வழக்கத்தை கொண்டு வர இரவு நேரத்தில் பாதாம் போன்ற நட்ஸ் வகைகளை ஊற வைத்து காலையில் சாப்பிடலாம். இவற்றில் கார்போஹைட்ரேட் இல்லாததால், ரத்த குளுக்கோஸ் அளவும் அதிகரிக்காமல் இருக்கும். கூடுதலாக, இது இன்சுலின் ரெசிஸ்டென்ஸையும் மேம்படுத்துகிறது.

பட்டியலை எழுதுங்கள்: எப்போதும் அடுத்த நாளை தொடங்கும் முன்னர், முதல் நாள் இரவே செய்ய வேண்டிய பட்டியலை உருவாக்குவது, நாளைய பணிகளை பற்றி நினைத்து நம் மனம் கவலைப்படுவதைத் தடுக்கிறது. நீங்கள் காலையில் எழுந்ததும், அடுத்த நாளைத் தொடங்க ஒரு பயணத் திட்டம் தயாராக இருந்தால், அனைத்தும் சரியாக நடக்கும். ஒவ்வொரு மாலையும் 15 - 30 நிமிடங்கள் ஒதுக்கி, அடுத்த நாளுக்காக தயாராகுங்கள். இவ்வாறு செய்து வந்தால், காலை நேரத்தில் பரபரப்பாக இல்லாமல், நிதானமாக வேலைகளை செய்து முடிக்கலாம். மேலும், இது நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது மன அமைதியை மேம்படுத்தவும் உதவும்.

மன அழுத்தத்தைத் தணிக்கவும்: நாள் முழுவதும் ஓடி களைத்து போயிருக்கும் உங்களது மனதை சோர்வில் இருந்து காக்க உங்களுக்கு பிடித்த ஒன்றை செய்து வரவும். அது தியானம், மூச்சு பயிற்சிகள், புத்தகம் படிப்பது, லைட் மியூசிக் கேட்பது அல்லது குடும்ப உறுப்பினருடன் பேசுவது என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இவை மனதையும் உடலையும் நிம்மதியாக வைப்பதுடன், பதற்றத்தை நீக்கி, தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகின்றன. மேலும், அடுத்த நாள் காலையில் நீங்கள் புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்புடனும் எழுந்து, உங்களது வேலைகளை திறம்பட செய்ய உதவும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

சாப்பிட்ட உடனேயே மலம் கழிக்கத் தோன்றுகிறதா.? இந்த பிரச்சனைதான் காரணம்.. சரி செய்ய உதவும் டிப்ஸ்..!

May 27, 2023 0

 ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு முதலில் நாம் கவனம் செலுத்த வேண்டியது வயிறுதான். வயிறு சரியில்லை என்றால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். அப்படி வயிற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நாம் செய்ய வேண்டிய முதல் விஷயம் காலைக் கடனை சிறப்பாக முடிப்பது.. காலையில் எழுந்ததும் மலம் கழித்து வயிற்றை சுத்தம் செய்த பின்னரே மற்ற வேலைகளை செய்ய வேண்டும். ஆனால் பலர் அவ்வாறு செய்யாமல் சாப்பிட்ட பின்னரே வயிற்றில் லோடு அதிகமானதும் கழிப்பறையை நோக்கி ஓடுவார்கள். இதனாலேயே பலர் சாப்பிட்டவுடனே மலம் கழிக்க ஓடுவார்கள்.

அப்படி சாப்பிட்ட உடனேயே மலம் கழிக்க கழிப்பறைக்குச் செல்வதை காஸ்ட்ரோகோலிக் ரிஃப்ளெக்ஸ் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். காஸ்ட்ரோகோலிக் பிரச்சனை பெரும்பாலும் வாழ்க்கை முறை தொடர்பானவை. எனவே, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மாற்றினால், இந்த நோயை குணப்படுத்த முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

சாப்பிட்ட பிறகு மலம் கழிக்க தூண்டுவதற்கு என்ன காரணம்..? சர் கங்கா ராம் மருத்துவமனையின் இரைப்பை குடல் மற்றும் கணைய அறிவியல் நிறுவனத்தின் ஆலோசகர் டாக்டர் ஸ்ரீஹரி அனிகிண்டி கூறுகையில், உணவில் இருந்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை எடுக்க இயற்கையானது வயிற்றில் உள்ளார்ந்த செயல்முறையை உருவாக்கியுள்ளது. இதன் கீழ், உணவில் இருந்து தயாரிக்கப்படும் கழிவுப்பொருட்களை வெளியேற்றுவதற்காக உணவு கால்வாய் முழுவதும் மின்சார அலை உருவாகிறது.

இந்த அலைகள் அனிச்சையாக இருக்கும்போது, ​​முழு உணவு கால்வாயிலும் ஒரு இயக்கம் உள்ளது. இதிலிருந்து, பெருங்குடல் வரை 8 மீட்டர் பயணித்த பிறகு கழிவுப் பொருட்கள் வெளியேறுகின்றன. இது இயற்கையாகவே இயல்பான செயலாகும். ஆனால் சிலருக்கு இந்த ரிஃப்ளெக்ஸ் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். இதன் காரணமாக, உணவை சாப்பிட்ட பிறகு, வயிற்றின் இந்த செரிமான செயல்பாடுகள் வேகமாக மாறும், எனவேதான் சிலர் சாப்பிட்ட உடனேயே கழிவறைக்கு செல்கின்றனர்.

காஸ்ட்ரோகோலிக் ரிஃப்ளெக்ஸ் (gastrocolic reflex) காரணமாக
டாக்டர் ஸ்ரீஹரி அனிகிண்டி கூறுகையில், அதிக பதட்டம் உள்ளவர்களுக்கு இந்த நோய் வருவதற்கான ஆபத்து அதிகம். இது தவிர, எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி உள்ளவர்களுக்கும் அதிக காஸ்ட்ரோகோலிக் ரிஃப்ளெக்ஸ் இருக்கும். இந்த நபர்களின் குடல்கள் மிகவும் உணர்திறன் கொண்டவையாக இருக்கும்.

இந்த நபர்களுக்கு மன அழுத்தம் பிரச்சனை அதிகமாக இருக்கும். அதே நேரத்தில், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும் இதற்குக் காரணம். இதனுடன், சில உள்நோய்களாலும், காஸ்ட்ரோகோலிக் நோய் ஏற்படுகிறது. அழற்சி குடல் நோய், சிலியா, இரைப்பை, உணவு ஒவ்வாமை, குடல் தொற்று போன்றவையும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஐபிஎம் போன்ற பொதுவான காரணங்கள் உள்ளன. இது ஒன்றும் பெரிய நோயல்ல, சில மாற்றங்களால் குணப்படுத்தலாம். சாப்பிட்ட உடனேயே கழிப்பறைக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால், உணவு செரிக்காமல் வெளியே வரும் என்று சிலருக்கு நம்பிக்கை இருப்பதாக டாக்டர் அனிகிந்தி கூறினார். ஆனால் அது அப்படி இல்லை. வெளியேறும் கழிவு பொருட்கள் முந்தைய நாளினுடையது. பொதுவாக நீங்கள் சாப்பிட்ட உணவு செரித்து 18-24 மணி நேரத்திற்குப் பிறகுதான் வெளியேறும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

சம்மரில் நீங்க மிஸ் பண்ணக் கூடாத மாம்பழ வகைகள்..!

May 27, 2023 0

 சம்மரும் மாம்பழமும் பிரிக்க முடியாத ஒன்று. இந்தியாவில் பல வகை மாம்பழங்கள் இருக்கின்றன. அதில் நீங்கள் மிஸ் பண்ணக் கூடாத  5 விலையுயர்ந்த வகைகளை இங்கே குறிப்பிடுகிறோம்.



அல்போன்சா மாம்பழம் இந்தியாவில் மாம்பழங்களின் அரசனாக பரவலாகக் கருதப்படுகிறது. மகாராஷ்டிராவின் ரத்னகிரி மற்றும் தேவ்கட் பகுதிகளில் இது விளைகிறது.

கேசர் மாம்பழம் குஜராத் மாநிலத்தில் விளையும் பிரபலமான மாம்பழமாகும். தனித்துவமான இனிப்பு சுவை மற்றும் வாசனைக்காக இது பெயர் பெற்றது.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் விளையும் சுவையான தாஷெரி மாம்பழம்.

ஆந்திராவில் விளையும் பங்கனப்பள்ளி மாம்பழம் பிரபலமான ஒன்று.

மேற்கு வங்கத்தில் விளையும் ஹிம்சாகர் மாம்பழம், வாசனை, சுவை மற்றும் ஜூஸுக்கு மிகவும் பிரபலமானது.


பெண்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்.. தினமும் தவறாமல் சாப்பிடுங்க..!

May 27, 2023 0

 உடலுக்கு பல விதமான நன்மைகளை அளிக்கும் ஊட்டச்சத்து நிறைந்து உணவுகளைத் தான் சூப்பர்-ஃபுட்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை உணவுகள், பெண்களின் டயட்டில் அவசியமாக சேர்க்க வேண்டிய அத்தியாவசியமான ஒன்றாகும் . உடலுக்குத் தேவையான, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் பல்வேறு காம்பவுண்டுகள் ஆகியவை பவர்-ஹவுஸ் உணவுகளாகும். பெர்ரி போன்ற சில சூப்பர்-ஃபுட்ஸில், நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்சிடன்ட் ஆகியவை நிறைந்துள்ளன. இந்த நுண்சத்துக்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், செரிமானத்தை மேம்படுத்தும்; பாலக் கீரை, கேல், உள்ளிட்ட கீரை வகைகளில் இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை எலும்புகளை ஆரோக்கியமாக்கும், மற்றும் உடலுக்கு ஆற்றல் அளிக்கும்.

அடுத்ததாக, கொழுப்பு நிறைந்த சால்மன் போன்ற மீன் உணவுகளில் காணப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும். பாதாம், பிஸ்தா, போன்ற கொட்டை வகைகள், விதைகள் ஆகியவை ஆரோக்கியமான கொழுப்பு, புரதம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இந்த உணவுகளை பெண்கள் தினமும் தங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் முழுமையான ஆரோக்கியம் கிடைக்கும்..பெண்களுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் ஊட்டச்சத்துள்ள உணவுகளின் பட்டியல்.

முட்டைகள்: இன்றைக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உணவில் சேர்க்க வேண்டிய பொருள்களில் ஒன்றாக உள்ளது முட்டைகள். இதில் உள்ள புரோட்டீன், ஒமேகா 3 மற்றும் வைட்டமின் ஏ,டி,ஈ மற்றும் கே போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் பெண்களின் உடல் ஆரோக்கியத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மேலும் இதில் உள்ள கொழுப்பு மற்றும் புரதத்தின் ஆதாரங்கள், இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் தனிஷா பாவா.

அவோகாடோ: இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஏ, ஈ, சி மற்றும் பி 6, பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. இவற்றை பெண்கள் தங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்ளும் போது சருமம் பளபளப்பாகவும், முடி வளர்ச்சிக்கும் பேருதவியாக உள்ளது. அவோகாடோபழத்தில் உள்ள கொழுப்பு சத்துக்கள், உடலில் இரத்த சர்க்கரை அளவை சமநிலையை வைத்திருக்க உதவுகிறது.

சியா விதைகள்: சியா விதைகளில் ஒமேகா 3, இரும்பு, கால்சியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், எலும்பு மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தவையாக உள்ளது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமான பிரச்சனையை மேம்படுத்துகிறது. மேலும் இன்சுலின் அளவை மேம்படுத்துவதோடு, இரத்த சர்க்கரை அளவையும் உறுதிப்படுத்த உதவியாக உள்ளது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

எள்: பொதுவாக பெண்களுக்கு வயதாக வயதாக எலும்புகள் பலவீனமாகிறது. எனவே பெண்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய உணவில் எள் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளதால் குடல் ஆரோக்கியத்திற்கு உதவியாக உள்ளது.

நெய் மற்றும் வெண்ணெய்: வெண்ணெய் மற்றும் நெய் இரண்டிலும் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் மற்றும் ப்யூட்ரிக் அமிலம் உள்ளது. இவற்றை நீங்கள் எவ்வித தயக்கம் இன்றி உணவில் சேர்த்துக் கொள்ளும் பொது குடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

முருங்கை: இதில் வைட்டமின் ஏ, பி, இரும்பு சத்து, அமினோ அமிலம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரோட்டீன்கள் நிரம்பியுள்ளது. இவற்றை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு: பெண்களின் ஆரோக்கியத்தில் முக்கியத்துவம் வாய்ந்த உணவாக உள்ளது சர்க்கரை வள்ளிக்கிழங்கு. இதில் கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பி6, கே மற்றும் பொட்டாசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகின்றது. செரிமான பிரச்சனையை சரிசெய்வதோடு, கண் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு உதவியாக உள்ளது.

பாதாம் வெண்ணெய்: இதில் நார்ச்சத்து, ஃபோலேட் மற்றும் வைட்டமின் ஈ போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், மூளை வளர்ச்சியை அதிகரிப்பதோடு, நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இதில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகளின் சிறந்த மூலமாக உள்ளதால், எல்டிஎல் என்கிற கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், எச்டிஎல் என்ற நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவுகிறது.

குயினோவா: அரிசி, கோதுமைக்கு மாற்றாக இன்றைக்கு மக்களிடம் பிரபலமாகியுள்ளது குயினோவா என்ற சிறுதானியம். இதில் அதிகளவில் புரதசத்துக்கள், கொழுப்பு, கார்போஹைட்ரேட்,நார்ச்சத்து, கால்சியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இதில் நிரம்பியுள்ளதால் குடல் ஆரோக்கியம் மற்றும் செரிமான பிரச்சனைகளை சரிசெய்ய உதவியாக உள்ளது. மேலும் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் இந்த குயினோவை சாப்பிடலாம்.

தயிர்: பொதுவாக பாலூட்டும் தாய்மார்கள் மற்றும கர்ப்பிணி பெண்களுக்கு தயிர் சாப்பிடுவது பரிந்துரைக்கப்படுகிறது. இதில் லாக்டோஸ் குறைவாகவும், புரதச்சத்து அதிகமாகவும் இருப்பதால் பெண்களுக்கு இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுவதோடு, எலும்பு, நரம்பு மண்டலம் மற்றும் தசை ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியத்தை வழங்க உதவியாக உள்ளது.

மாதுளை: பாலிஃபோலோஸ், ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளிட்ட வைட்டமின் ஏ,சி,ஈ மற்றும் கே போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களில் ஒன்றாக உள்ளது மாதுளை. நார்ச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ளதால், பெண்கள் இந்த பழங்களைச் சாப்பிடும் போது, அவர்களின் ஆரோக்கியம் மேம்படுகிறது. குறிப்பாக கருப்பை ஆரோக்கியம், மாதவிடாயை சீர்ப்படுத்துவது முதல் ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்கிறது. மேலும் பெண்களுக்கு தோல் மற்ற்றும் முடி ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன. குடல் ஆரோக்கியம் மற்றும் மூட்டு வலியை சரியாக்கவும் மாதுளை உதவுகிறது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

சாப்பிட்ட பிறகு பொடி நடையாக நடந்தாலே இவ்வளவு நன்மைகளா..? ஆயுர்வேதம் சொல்லும் மருத்துவம்..!

May 27, 2023 0

 சாப்பிட்ட உடனே படுத்து தூங்கக் கூடாது என்ற வார்த்தையை வீட்டில் பெரியவர்கள் சொல்லி, சொல்லி நம்மை வளர்த்திருப்பார்கள். சாப்பிட்டவுடன் தூங்கக் கூடாது என்பது சரி, ஆனால், வேறென்ன செய்வது? பொடிநடையாக நடந்து செல்லலாமா? அது உடல்நலனுக்கு நல்லதா? இதுகுறித்து ஆயுர்வேதம் என்ன சொல்கிறது என்பதை இந்தச் செய்தியில் பார்க்கலாம்.

நாம் என்ன உணவை சாப்பிட்டாலும் அது சரியான முறையில் செரிமானம் ஆக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். சாப்பிட்ட பிறகு 100 தடங்கள் என்ற அளவில் நடை போட்டால் உணவு செரிமானம் ஆக உதவியாக இருக்கும் என்று ஆயுர்வேதம் தெரிவிக்கிறது. மேலும் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க இது உதவியாக இருக்கிறது.

வேக நடை கூடாது: சாப்பிட்ட பிறகு நடை போடலாம் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டு வேகமாக நடைபோடுவது ஆபத்தானது என்று ஆயுர்வேதம் தெரிவிக்கிறது. அதே சமயம் மதியம் அல்லது இரவு உணவுக்குப் பிறகு பொடி நடையாக 100 தடங்கள் அளவுக்கு சென்று வருவது ஆரோக்கியமானதாம். இந்த நடை எந்த அளவுக்கு மெதுவாக அமைய வேண்டும் என்றால் 100 கால்தட அளவை கடந்து செல்ல 15 நிமிடங்களை எடுத்துக் கொள்ள வேண்டுமாம்..

செரிமானத்திற்கு உதவுகிறது: நாம் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகுவதற்கு பல்வேறு கேஸ்ட்ரிக் ஜூஸ் மற்றும் என்ஜைம்கள் உதவியாக அமைகின்றன. சாப்பிட்ட உடன் நடப்பதால் இந்த கேஸ்ட்ரிக் அமிலத்தின் சுரப்பு வேகமெடுக்கிறதாம். ஆகவே அசிடிட்டி மற்றும் செரிமானக் கோளாறு போன்ற பிரச்சினைகளில் இருந்து தீர்வு கிடைக்கிறது. வயிறு உப்புசம் மற்றும் வாயுத் தொல்லை போன்றவற்றில் இருந்தும் தீர்வு கிடைக்கும்.

சோம்பலை முறிக்கிறது: நாம் சாப்பிட்ட பிறகு லேசாக உடல் அசதியாக இருக்கும். உடனடியாக சாய்ந்து ஒரு 10 நிமிடமாவது தூங்கினால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம். மாவுச்சத்து மற்றும் புரதச்சத்து எடுத்துக் கொண்டதன் விளைவாக நம் உடலில் செரோடோனின் உற்பத்தி அதிகரிக்கும். இதன் காரணமாக நமக்கு அசதி ஏற்பட்டு தூக்கம் வரலாம். சில தொலைவுக்கு பொடி நடையாக சென்று வந்தால் இந்த அசதி களைந்து புத்துணர்ச்சி கிடைக்கும்.

உடல் எடை குறையும்: சாப்பிட்ட பிறகு தூங்குவது அல்லது முடங்கிக் கிடப்பதன் காரணமாக உடல் பருமன் அல்லது உடல் எடை அதிகரிக்கக் கூடும். அதுவே பொடி நடையாக சென்று வந்தால் கலோரிகள் எரிந்து ஆற்றலாக மாறும். இதன் காரணமாக நம் உடல் எடை கட்டுக்குள் இருக்கும் மற்றும் ஒட்டுமொத்தமாக ஆரோக்கியம் மேம்படும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

May 26, 2023

மாதத்திற்கு ரூ.20,000 ஊக்கத்தொகை: பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்... மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு

May 26, 2023 0

 மாணவிகள், பெண் ஆசிரியர்கள், மகளிர் சமூக ஆர்வலர்களுக்கான பயிற்சித் திட்டங்களுக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் விண்ணப்பங்களை வரவேற்கிறது. முதல் நிலை நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த மகளிருக்காக நடத்தப்படும் இந்தப் பயிற்சித் திட்டம் 03.07.2023 முதல் 31.08.2023 வரை இரண்டு மாதங்கள் நடத்தப்பட உள்ளது. இந்தப் பயிற்சி திட்டத்தில் சேர விரும்புவோர் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் படிப்பவராகவோ அல்லது பணியாற்றுபவராக இருக்க வேண்டும்.

21 வயது முதல் 40 வயது வரையிலானவர்கள் இதில் சேர விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதத்திற்கு ரூபாய் 20,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். தில்லியில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். தேர்வு செய்யப்படுபவர்கள், பயிற்சியில் கலந்து கொள்ள தில்லி சென்று வருவதற்கான மூன்றாம் வகுப்பு குளிர்சாதன வசதி ரயில் கட்டணங்கள் வழங்கப்படும்.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் முக்கியத் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுகள் குறித்து இந்தப் பயிற்சித் திட்டம் நடத்தப்படுகிறது.

இதில் சேர விரும்புவர்கள் இந்தஇணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை 29.05.2023 இரவு மணி 11.59 க்குள் சமர்பிக்க வேண்டும்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ஏற்றுமதி தொழிலில் சாதிக்க வேண்டுமா? தமிழக அரசின் இலவச பயிற்சித் திட்டம் இதோ

May 26, 2023 0

 இந்தியாவில் தற்போது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மூலமாக தொழில்கள் விரிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து கொண்டே உள்ளன. எனவே ஏற்றுமதி பற்றியும் அதன் வழிமுறைகளை பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகிறது.

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும், சட்டதிட்டங்களையும் குறித்த இணையவழி கருத்தரங்கம் (1 நாள்) பயிற்சியினை வரும் 03:06:2023ம் தேதி (காலை 10.00 முதல் மாலை 5.00 மணி வரை) வழங்க உள்ளது.

Ads by 

இப்பயிற்சியில் ஏற்றுமதி சந்தையின் தேவை, கொள்முதலுக்கான வாய்ப்புக்கள், ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்கள். வங்கி நடைமுறைகள், அந்நிய செலாவணியின் மாற்று விகிதங்கள். காப்பீடு குறித்த தகவல்கள், ஏற்றுமதி-இறக்குமதி விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள், போன்றவை பயிற்றுவிக்கப்படும்.

மேலும், இப்பயிற்சியில் ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள் பற்றியும் அவைகளை பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும்.

ஏற்றுமதி சார்ந்த தொழில் துவங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 வயது நிரம்பிய 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் சேரலாம்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

முகவரி:  தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை -600 032.

மேலும் இந்த முகாம் குறித்த விவரங்களுக்குத் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் தொலைப்பேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். இந்த மையத்தின் மின்னஞ்சல் முகவரி : asstd@editn.in | admin@editn.in ஆகும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.31,000/-ஊதியம்!

May 26, 2023 0

 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.31,000/-ஊதியம்!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆனது Senior Research Fellow, Junior Research Fellow பணிக்கு 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNAU காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Senior Research Fellow, Junior Research Fellow பணிகளுக்கென மொத்தம் 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNAU கல்வி தகுதி:

விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Agriculture/ Horticulture/ Sericulture பாடப்பிரிவில் B.sc / M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

TNAU ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.20,000/- முதல் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNAU தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்கும் நபர்கள் 06.06.2023 அன்று நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNAU விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு 06.06.2023 அன்று நடைபெறும் நேர்காணல் சென்று கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


CONCOR மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.2,60,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

May 26, 2023 0

 

CONCOR மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.2,60,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (CONCOR) டெல்லி – புதுதில்லியில் உள்ள குரூப் ஜெனரல் மேனேஜர்/ சீனியர் ஜெனரல் மேனேஜர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு 08.06.2023 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

CONCOR காலிப்பணியிடங்கள்:

Group General Manager/ Senior General Manager பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Manager தகுதி விவரங்கள்:

SAG/NFSAG/SG அளவில் பணிபுரியும் IRSEE அதிகாரிகள் குறைந்தபட்சம் 17 வருட பணி அனுபவம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 54 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

CONCOR தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.1,00,000 – 2,60,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

CONCOR விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுய-சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 08.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

May 24, 2023

UPSC CISF AC(EXE) LDCE அறிவிப்பு 2023 – விண்ணப்பிக்கும் தகுதி விவரங்களுடன்..!

May 24, 2023 0

 

UPSC CISF AC(EXE) LDCE அறிவிப்பு 2023 – விண்ணப்பிக்கும் தகுதி விவரங்களுடன்..!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) ஆனது உதவி கமாண்டன்ட்கள் பணியிடங்கள் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் ( CISF AC LDCE ) காலியாக உள்ளதாக அறிவிப்பு ஒன்றினை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 13.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

UPSC காலிப்பணியிடங்கள்:

போட்டித் தேர்வின் அடிப்படையில் 30 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

CISF AC(EXE) LDCE வயது வரம்பு:

விண்ணப்பதாரர் ஆகஸ்ட் 01, 2023 அன்று 35 வயதை எட்டியிருக்கக்கூடாது, அதாவது விண்ணப்பதாரர்கள் 02 ஆகஸ்ட் 1988க்கு முன்னதாக பிறந்திருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்ததேர்வை எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:
  • எழுத்துத் தேர்வு
  • உடல் திறன் சோதனை
  • நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி ஆன்லைன் இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 13.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news