Agri Info

Adding Green to your Life

September 12, 2023

TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- Online ல் எளிய முறையில் விண்ணப்பிக்க முந்துங்கள்!

September 12, 2023 0

 

TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- Online ல் எளிய முறையில் விண்ணப்பிக்க முந்துங்கள்!

தனியார் நிறுவனமான TCS ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள JDE Service Management Consultant பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ள நபர்கள் இறுதி நாள்(30.09.2023) முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TCS காலிப்பணியிடங்கள்:

TCS iBegin நிறுவனத்தில் தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி JDE Service Management Consultant பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TCS கல்வி தகுதி:

TCS iBegin நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Bachelor degree பெற்றிருக்க வேண்டும்.

TCS அனுபவ விவரம் :

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 05 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

TCS ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாதம் ஊதியம் வழங்கப்படும்.

TCS தேர்வு செய்யப்படும் முறை :

பணிபுரிய விரும்பும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TCS விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் (30.09.2023) தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification & Apply Online Link

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் ’இன்சுலின்’ உற்பத்தி அதிகரிக்குமா..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

September 12, 2023 0

 பச்சை வெங்காயத்தை நாடு முழுவதும் பலர் உணவோடு சமைத்து சாப்பிடுகிறார்கள். ஆனால் வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது ஆரோக்கியமானதா? அது உடலுக்கு என்ன செய்யும்? ஊட்டச்சத்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் பார்க்கலாம்.

பச்சை வெங்காயத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வெங்காயத்தில் க்வெர்செடின் என்ற ஆர்கானிக் சல்பர் உள்ளது. இது உடலில் இன்சுலின் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது. இதன் விளைவாக நீரிழிவு நோயாளிகளும் வெங்காயத்தை சாப்பிடலாம்.

வெங்காயத்தில் ஆர்கானிக் கந்தகம் இருப்பதால் சற்று கடுமையான வாசனையுடன் இருக்கும். ஆனால் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைப்பதில் வெங்காயம் பெரும் பங்கு வகிக்கிறது. இது இதய நோய் மற்றும் மாரடைப்பு அபாயத்தையும் குறைக்கிறது.

வெங்காயத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி6 , ஃபோலேட் பொட்டாசியம், மாங்கனீஸ் மற்றும் தாமிரம் நிறைந்துள்ளது. இந்த பண்புகள் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க மிகவும் முக்கியம். வெங்காயத்தை வழக்கமாக உட்கொள்வது நரம்பியல் நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.

வெங்காயம் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றுகளிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது. இதில் உள்ள மருத்துவ குணங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

இருப்பினும், வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் தீமைகளும் உள்ளன. வெங்காயத்தில் குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், வெங்காயம் சரியாக ஜீரணிக்கப்படாவிட்டால், அமிலத்தன்மை பிரச்சனை ஏற்படுகிறது.

Click here for more Health Tip

புற்றுநோய் வர காரணமாக இருக்கும் உணவுகள்... சுவைத்து பார்க்கக்கூட தொடாதீங்க..!

September 12, 2023 0

 இன்றைய காலத்தில் அனைவருமே துரித உணவுகளையும் பாக்கெடில் அடைத்து விற்கப்படும் பதப்படுத்தப்பட உணவுகளையே அதிகமும் சாப்பிடுகிறார்கள். இது சுவையாக இருந்தாலும் நம் உடல்நலத்திற்கு மிகவும் கேடு விளைவிக்க கூடியது. இதனால் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகரிப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

இந்தியாவில் அதிகரிக்கும் புற்றுநோய் : நாளுக்குநாள் இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் கூறலாம். மேற்கத்திய வாழ்க்கைமுறையை பின்பற்றுவது, மோசமான உணவுப் பழக்கம், பால் சார்ந்த பொருட்களை அதிகமாக எடுத்துக் கொள்வது, பதப்படுத்தப்பட்ட உணவுகள், தினமும் இறைச்சி உணவுகள் சாப்பிடுவது, ரசாயன மாசுபாடு, மலச்சிக்கல், உடற்பயிற்சி செய்யாமை என புற்றுநோய்க்கான காரணங்களை சொல்லி கொண்டே போகலாம்.

குடல்வால் புற்றுநோய்க்கான காரணம் : பெருங்குடல் வாய்ப்பகுதியில் வால் போன்று உறுப்பு ஒட்டிக் கொண்டு இருப்பதே அப்பெண்டிக்ஸ் எனும் குடல் வால் நோய் ஆகும். இதுதான் புற்றுநோய் வளர்வதற்கு காரணமாக இருக்கும். அப்பெண்டிக்ஸ் உருவாகும் கட்டி ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளையும் நமக்கு தெரியப்படுத்தாது. ஆனால் சில சமயங்களில் குமட்டல், வாந்தி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, இறுகிய மலம், உடல் எடை குறைதல் மற்றும் அடிவயிற்றின் வலது ஓரத்தில் வலி உண்டாகும். புற்றுநோய் பரவத் தொடங்கினால் குடலிறக்கம், மூச்சுவிடுவதில் சிரமம், பசியின்மை, மலம் கழிப்பதில் சிரமம் போன்றவை ஏற்படும்.

ஆரோக்கியமற்ற உணவுகள் : சிவப்பு இறைச்சி, அதிகப்படியான குடிப்பழக்கம், அதிகளவு பதப்படுத்தப்பட உணவுகளை சாப்பிடுவது போன்ற காரணங்களால் புற்றுநோய் வரும் ஆபத்து 45% அதிகரிக்கிறது. ஆகவே நமது வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களை செய்தாலே புற்றுநோய் வரும் ஆபத்தைக் குறைக்கலாம். உதாரணமாக மோசமான உணவுப்பழக்கத்தை கைவிடுங்கள், உடல் எடையை குறையுங்கள், நன்றாக உடற்பயிற்சி செய்யுங்கள்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் : சாசேஜ், ஹாட் டாக், சலாமி, பேகன், ஹாம், பீஃப் ஜெர்கி போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளை உப்பு மற்றும் புகை சேர்த்தே பத்திரப்படுத்தி வைக்கிறார்கள். இந்த இறைச்சிகளை பதப்படுத்தும் போது நைட்ரேட்டை சேர்க்கிறார்கள். இது கார்சினோஜெனை உருவாக்கும். சில சமயங்களில் ரசாயனம் கலக்காத இறைச்சியே கூட பாலிசைலிக் அரோமெடிக் ஹைட்ரோகார்பன் என்ற கார்சினோஜெனை உருவாக்கும். இந்த கார்சினோஜென் புற்றுநோயை வரவழைக்கும். பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் புற்றுநோயை உருவாக்கக் கூடிய காரணிகள் இருப்பதாக உலக சுகாதார நிறுவனமும் எச்சரிக்கிறது. மேலும் இதை சாப்பிடுவதால் பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கிறார்கள்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் : பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ், நொறுக்கு தீணிகள், க்ரீம் சீஸ், இனிப்புகள், குக்கீஸ், சோடா, சாக்லேட், துரித உணவுகளான பீட்ஸா, பர்கர், வறுத்த சிக்கன் ஆகியவற்றில் நிறத்திற்காகவும், சுவைக்காகவும், நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருக்கவும் பல ரசாயன சேர்க்கைப் பொருளை சேர்ப்பார்கள். இதுபோன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சர்கரை, உப்பு, கொழுப்பு, ரசாயனங்கள் ஆகியவை அதிகளவு இருக்கும். மேலும் இந்த உணவுகளில் வைட்டமின், மினரல்கள் மற்றும் நார்ச்சத்து அகியவை குறைவாக இருக்கும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக சாப்பிடும் போது உடல் எடை கூடுவதோடு புற்றுநோய் வருவதற்கான ஆபத்தும் அதிகரிக்கும்.

வாழ்க்கைமுறை மாற்றங்கள் புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கும் : ஆரோக்கியமான உடல் எடையை பராமரியுங்கள், புகையிலை பழக்கத்தை கைவிடுங்கள், சீரான உடற்பயிற்சி, காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், நட்ஸ் போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். ஆண்டி ஆக்ஸிடெண்ட், நார்ச்சத்து, நிறைவுறா கொழுப்பு நிறைந்த உணவுகள் புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கும்.

புற்றுநோய் வராமல் தடுக்கக் கூடிய ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் : பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், கொழுப்பு இல்லாத புரதம் ஆகியவற்றை உங்கள் டயட்டில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். சிவப்பு இறைச்சிகள் மற்றும் பதப்படுத்தபட்ட உணவுகள் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளுங்கள்.

சீரான உடற்பயிற்சி அவசியம் தேவை : தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். இரவு நேரத்தில் குறைந்தது ஏழு மணி நேரமாவது நன்றாக தூங்குங்கள். உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். மது அருந்துவது, புகைபிடிக்கும் பழக்கம் இருந்தால் இன்றே கைவிடுங்கள்.


அசிடிட்டி Vs மாரடைப்பு... இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன..? அறிகுறிகளை எப்படி கண்டறிவது..?

September 12, 2023 0

 நோய்க்கான அறிகுறிகளை கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதே இதயம் சார்ந்த நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் இருக்கக்கூடிய மிகப்பெரிய தடையாக கருதப்படுகிறது. ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான அறிகுறிகளை ஒரு சிலர் அசிடிட்டி அல்லது கேஸ்ட்ரிக் பிரச்சனையாக இருக்கலாம் என எண்ணிக்கொண்டு மருத்துவரின் உதவியை நாடாமல், கை வைத்தியம் செய்து, மருத்துவமனைக்கு செல்வதில் தாமதத்தை ஏற்படுத்துகின்றனர்.

இது பல்வேறு பிற காரணிகளுடன் இணைந்து ஒரு ஆண்டுக்கு 18 மில்லியன் நபர்கள் இதயம் சார்ந்த நோய்கள் காரணமாக இறந்து போகின்றனர். நெஞ்சில் ஒருவித எரிச்சல் உணர்வை அனுபவிக்கும் பொழுது உடனடியாக நாம் கடைசியாக சாப்பிட்ட உணவுடன் அதனை தொடர்புப்படுத்தி பார்ப்பது வழக்கமாகிவிட்டது. ஆனால் அதற்கு வேறு காரணமாக இருந்தால் என்ன செய்வது?

கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அறிகுறிகளை கொண்டிருக்கும் அசிடிட்டி மற்றும் ஹார்ட் அட்டாக் : அசிடிட்டி என்பது நமது நெஞ்சு பகுதியில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். ஹார்ட் அட்டாக் சமயத்திலும் இதே போன்ற உணர்வு ஏற்படும். இந்த இரண்டு நோய்களுக்கான அறிகுறிகளில் ஒன்று தவிர்க்க கூடியதாகவும், மற்றொன்று மிகவும் மோசமானதாகவும் இருப்பதால் இவை இரண்டிற்கான வேறுபாட்டை நம்மால் புரிந்து கொள்ள முடியாமல் போகிறது. அசிடிட்டியை பொருத்தவரை நெஞ்சு பகுதியில் ஏற்படுகின்ற அசௌகரியம் குறிப்பாக மேல் வயிற்றில் எரிச்சல் உணர்வு ஏற்படும். அதன் பிறகு வாயில் புளிப்பு அல்லது வழக்கத்திற்கு மாறான கசப்பு சுவை உண்டாகும். மேலும் அசிடிட்டி பிரச்சினையில் இறுதியாக நம் வயிற்றில் இருக்கக்கூடிய உணவில் சிறிதளவு மீண்டும் வாய்க்கு வந்து சேரும்.

இதுவே ஹார்ட் அட்டாக்கை பொறுத்தவரை நெஞ்சை யாரோ பிழிவது போல ஒரு வித வலி அல்லது நெஞ்சு பகுதியில் அதிக அழுத்தத்துடன் கூடிய வலி உண்டாகும். நெஞ்சு பகுதியில் தொடங்கிய வலியானது கழுத்து, தாடை மற்றும் முதுகு போன்றவற்றிற்கு பரவுவது ஹார்ட் அட்டாக்கின் முக்கியமான ஒரு அறிகுறி. வயிறு வலி, மூச்சு விடுவதில் சிரமம், குளிர்ந்த வியர்வை மற்றும் மயக்கம் போன்றவை ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான பிற அறிகுறிகள். இதயத்திற்கு போதுமான ரத்த ஓட்டம் கிடைக்காததால் நெஞ்சில் ஒருவித இறுக்கம் மற்றும் வலி ஏற்படுவது ஆஞ்சினா என்று அழைக்கப்படுகிறது. உடற்பயிற்சிக்கு பிறகு ஏற்படக்கூடிய நெஞ்சு வலி பெரும்பாலும் ஹார்ட் அட்டாக் காரணமாக ஏற்படலாம்.

ஹார்ட் அட்டாக்கை போல தோன்றக்கூடிய பிற நெஞ்சு அசௌகரியங்கள் : அசிடிட்டி தவிர உணவுக்குழாயில் ஏற்படக்கூடிய ஒரு வித தசை சுளுக்கு காரணமாகவும் நெஞ்சு பகுதியில் வலி ஏற்படலாம். பித்தப்பையில் நோய்களை அனுபவித்து வரும் நபர்களுக்கு ஏற்படும் வலி ஹார்ட் அட்டாக் போன்ற உணர்வை கொடுக்கலாம்.

எப்பொழுது விரைவாக செயல்பட வேண்டும்? : உடற்பயிற்சி அல்லது மன அழுத்தம் ஏற்பட்ட பிறகு உங்களுக்கு நெஞ்சு பகுதியில் வலி ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். நெஞ்சில் தொடங்கிய வலியானது கைகள், வாய் மற்றும் முதுகு பகுதிக்கு நகரும் பொழுது நிச்சயமாக உங்களுக்கு மருத்துவ உதவி தேவை. இதைத்தவிர உங்களுக்கு ஏற்பட்டுள்ள வலி என்ன என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகி உங்கள் சந்தேகத்தை தெளிவு படுத்தி கொள்ளுங்கள்.

நெஞ்சு வலி ஏற்படும் பொழுது இது அசிடிட்டியாக தான் இருக்கும் என்று நீங்களாக ஒரு முடிவுக்கு வராமல் மருத்துவரை அணுகி ECG மற்றும் கார்டியோ கன்சல்டேஷன் பெறுவது கட்டாயமாக பரிந்துரைக்கப்படுகிறது. அசிடிட்டி மற்றும் ஹார்ட் அட்டாக் ஆகிய இரண்டிற்குமான அறிகுறிகள் இடையே ஒரு மெல்லிய கோடு மட்டுமே உள்ளது. இவற்றை முடிந்த அளவு புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். ஒருவேளை உங்களுக்கு சந்தேகம் இருக்கும் பட்சத்தில் அதனை தெளிவுப்படுத்திக்கொள்ள மருத்துவரை அணுகுவதில் தப்பு ஏதும் கிடையாது.


வீட்டில் இந்த 5 செடிகளை வளர்த்தால் உங்களை நோய்களே நெருங்காதாம்..!

September 12, 2023 0

 உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல பண்புகள் இயற்கையாகவே நிறைந்துள்ளது. அதை நாம் சரிவர புரிந்து கொண்டு பயன்படுத்தி வந்தால், பலவகையான நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும். அந்தவகையில் சில செடிகள் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முக்கிய காரணிகளாக திகழ்கின்றன. 

இவற்றை வீட்டிற்கு உள்ளேயே வளர்க்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு. இதில் அதிக மகத்துவம் கொண்ட ஐந்து செடிகள் குறித்து தான் பார்க்கப் போகிறோம். பலதர நோய்களுக்கு மருந்தாகத் திகழும் இந்த செடிகளை வளர்ப்பது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது, மன சோர்வையும் நீக்கி நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கிறது.

சோற்றுக் கற்றாழை: அலோவேரா, அதாவது சோற்றுக் கற்றாழை என்பது மருத்துவ பண்புகளுக்கு பெயர் பெற்ற ஒரு சதைப்பற்றுள்ள தாவரமாகும். அதன் இலைகளுக்குள் இருக்கும் பிசின் போன்ற பொருள் வெயில், சிறிய தீக்காயங்கள் போன்ற தோல் நிலைகளுக்கு சிகிச்சையளிக்க பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. கற்றாழை செரிமானத்திற்கு உதவுகிறது. 

இதன் சாற்றை உட்கொள்ளும்போது நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய ஒவ்வாமை எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் இதில் இருக்கும் ஆண்டி-ஆக்சிடண்ட் பண்புகள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கிறது.


லாவெண்டர்: லாவெண்டர் அதன் அமைதியான, இனிமையான விளைவுகளுக்கு பெயர் பெற்ற ஒரு நறுமணம் கொண்ட மூலிகையாகும். லாவெண்டர் மலரில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட அத்தியாவசிய எண்ணெய் பெரும்பாலும் மன அழுத்தத்தையும், பதட்டத்தையும் குறைக்கும் நறுமண சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. இது தூக்கமின்மை பிரச்னைகளுக்குத் தீர்வு அளிக்கிறது. இதனைக் கொண்டு மூலிகை தேநீர் செய்து பருகலாம். இது உடலின் தளர்ச்சி நிலையை மாற்றி அமைக்கும் வல்லமைக் கொண்டது. லாவெண்டர் எண்ணெயில் கிருமிகளை அழிக்கும் பண்புகள் உள்ளன. மேலும் தோல் எரிச்சல் போறவைகளுக்கும் சிகிச்சையளிக்க பயன்படுத்தலாம்.


மிளகுக்கீரை: பெப்பர்மிண்ட் எனும் மிளகுக்கீரை புதினா வகையை சேர்ந்த ஒரு தாவரமாகும். பல சுகாதார நன்மைகளைக் கொண்ட பல்துறை மூலிகைகளில் இதுவும் ஒன்றாகும். அஜீரணம், குடல் எரிச்சல், செரிமான பிரச்னைகள் போன்றவற்றுக்கு சிறந்த தீர்வாக இது பார்க்கப்படுகிறது. மிளகுக்கீரை தேநீர் தலைவலியைக் குறைக்கும் வல்லமைக் கொண்டது. அதன் நறுமணம், மெந்தால் உணர்வு காரணமாக சுவாச பிரச்னைகளில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது.

பாம்புச்செடி (சான்செவியரியா): பாம்பு செடி என்பது ஒரு பிரபலமான வீட்டிற்குள் வளர்க்கப்படும் ஒரு செடி ஆகும். வீட்டிற்குள் இருக்கும் ஃபார்மால்டிஹைட், பென்சீன் போன்ற நச்சு மாசுக்களை காற்றிலிருந்து அகற்ற இது உதவுகிறது. குறைந்த பராமரிப்பு மற்றும் குறைந்த ஒளி நிலைமைகளில் இது செழித்து வளரக்கூடியது. இது உட்புற இடங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. வீட்டிற்குள் பாம்பு செடிகளை வளர்ப்பதன் மூலம் காற்றின் தரத்தை மேம்படுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழலை ஊக்குவிக்கலாம்.

எக்கினேசியா: எக்கினேசியா, கோன்ஃப்ளவர் என்றும் அழைக்கப்படுகிறது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்க பெரும்பாலும் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை வைத்தியம் ஆகும். சளி மற்றும் சுவாச நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும், சிகிச்சையளிக்கவும் இது உதவுகிறது.


பழனியாண்டவர் கல்லூரியில் வேலை வாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க!

September 12, 2023 0

 பழனியாண்டவர் கலை பண்பாட்டு கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

என்னென்ன வேலை:

தட்டச்சர், இளநிலை உதவியாளர், ஆய்வக உதவியாளர், பதிவறை எழுத்தர், நூலக உதவியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தட்டச்சர் பணிக்கு மட்டும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மேல்நிலை தேர்ச்சி பெற்ற தகுதி அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பு கணக்கிடப்படும் என்றும், விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்துடன் தங்களது கல்வி சான்றிதழ், தொழில்நுட்ப கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ்களின் சான்றொப்பம் பெற்ற நகல் மற்றும் பணியில் முன் அனுபவம் பெற்றிருப்பின் அதன் நகல் ஆகியவற்றுடன் கீழ் உள்ள முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் முகவரி:

அருள்மிகு பழனியாண்டவர் சுலை மற்றும் பண்பாட்டுக்கல்லூரி, பழனி - 624601 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.

வரும் அக்டோபர் 9ஆம் தேதி மாலை 5 மணியே கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் விண்ணப்பங்களை அனுப்பவும். மேலும் விவரங்களுக்கு apcac.edu.inஅல்லது apcac.eduஎன்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

8ஆம் வகுப்பு படித்தால் போதும்.. கோவையில் கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்பு!

September 12, 2023 0

 கோயம்புத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஓட்டுனர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 19.10.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 18 வயது முதல் 42 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ.19,500 – 62,000

மற்றும் மோட்டார் வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2023/09/2023091264.pdfஎன்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து பூர்த்தி செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி : ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், மதுக்கரை

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2023/09/2023091264.pdfஎன்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

நீங்களும் ரயில்களை இயக்கம் லோகோ பைலட் பணியில் சேர வேண்டுமா? முழு விவரம் இதோ!

September 12, 2023 0

 ரயில்  பயணங்கள் அதன் நடைமுறைகள், டிக்கெட் வாங்குவது, கடைசி நேரத்தில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை வாங்குவது, ரயில் பெட்டிகள் எப்படி வரிசைப்படுத்தி சேர்க்கப்படுகிறது என்பது போன்ற விஷயங்களை எல்லாம் நாம் பார்த்திருப்போம்.

ஆனால் இந்த ரயிலை ஓட்டுபவர் யார்?  இவ்வளவு பெரிய ரயிலை ஒருவர் தனியாக ஓட்டுவாரா? எவ்வளவு நேரம் ஓட்டுவார், முழு பாதைக்கும் ஒருவரே ஓட்டுவாரா ? அவரது சம்பளம் என்னவாக இருக்கும் என்று யோசித்ததுண்டா? மற்ற துறை பணிகளை பற்றி அதிகம் கேட்டிருப்போம். ஆனால் ரயில் சார்ந்த பணிகள் பற்றி அதிகம் தெரியாது. இப்போது தெரிந்துகொள்வோம்.

இந்தியர்களைப் பொறுத்தவரை, ரயில்வே பயணத்திற்கு பிரிக்க முடியாத தொடர்பு உள்ளது. குடும்பம் மற்றும் நண்பர்களுடன் ரயிலில் பயணம் செய்வது வித்தியாசமான அனுபவம். ரயில் பயணத்தில் பெரும்பாலானவர்களுக்கு பல அனுபவங்கள் கிடைக்கும்.

பல கனவுகளோடு செல்லும் ஆயிரக்கணக்கான மக்களை அழைத்து கொண்டு போகும் ரயிலின் ஓட்டுனர் " லோகோ பைலட்" என்று அழைக்கப்படுகிறார். ஒரு விமானி விமானத்தை ஓட்டுவது போன்றது இந்திய ரயில்வேயில் லோகோ பைலட்டுகள் வேலை.  மக்களை அவர்களது இடங்களுக்கு அழைத்து செல்வது மட்டுமல்லாமல், சரக்கு ரயில்களில் பொருட்களையும் கொண்டு செல்கிறார்கள்.

லோகோ பைலட் யார்?

லோகோ பைலட் என்பவர் ரயில்களை ஓட்டுபவர். ரயிலின் இயக்கத்தை திறம்பட மேற்பார்வையிட ஒரு நபர் தேவை. இது இந்திய ரயில்வேயில் ஒரு உயர் பதவி. ஆனால் எந்த ஒரு நபரும் நேரடியாக லோகோ பைலட்டாக நியமிக்கப்பட மாட்டார்கள். இந்திய ரயில்வே முதலில் அசிஸ்டெண்ட் லோகோ பைலட்களை நியமிக்கிறார்கள். இதற்காக தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படும். அசிஸ்டெண்ட் லோகோ பைலட்டாக சேரும் நபர் அனுபவம் பெற்ற பின்னர் பதவி உயர்வு மூலம் லோகோ பைலட்டாக மாறலாம்.

லோகோ பைலட்டின் கடமைகள்

அசிஸ்டெண்ட் லோகோ பைலட்டின் கடமைகள், லோகோ பைலட்டுக்கு ரயிலை சீராக இயக்க உதவுவதாகும். ஒரு லோகோ பைலட்டின் பணி, ரயில் இன்ஜினை முறையாகப் பராமரித்தல், ரயிலில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், அவற்றை சரிசெய்தல், சிக்னல் மாற்றங்களைக் கண்காணித்தல் மற்றும் ரயில்வே அதிகாரிகளுடன் தொடர்புகொள்வது. அதற்கு ஏற்ப ரயில்களை இயக்குவது.

லோகோ பைலட் ஆவது எப்படி?

இதற்காக தனியே  ரயில்வே ஆள்சேர்ப்பு வாரியம் (railway recruitment board) தேர்வுகளை நடத்தும். குறிப்பிட்ட துறையில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது தான் குறைந்தபட்ச கல்வித்தகுதி.  உதவி லோகோ பைலட் பதவிகளுக்கு டிப்ளமோ அல்லது பொறியியல் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். இரண்டு நிலைகளிலும் கணினி அடிப்படையிலான தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றால் லோகோ பைலட் ஆகலாம்.

லோகோ பைலட்டின் சம்பளம்

லோகோ பைலட் பதவிக்கான சம்பளம்  ஊதிய நிலை 2 (Level 2 Pay Matrix) ஆகும். தொடக்க அடிப்படை ஊதியம் ரூ.19,900 ஆக இருக்கும். இதனுடன், வீட்டு வாடகை கொடுப்பனவு, அகவிலைப்படி, போக்குவரத்து கொடுப்பனவு போன்ற சலுகைகள் உள்ளன.

லோகோ பைலட்டின் வேலை நேரம் :

மற்ற வேலைகளை போலவே லோகோ பைலட்டுகளுக்கும் ஒரு ஷிப்ட் என்பது 8 மணி நேரம்தான். அதற்கு கொஞ்சம் முன்னர் அல்லது பின்னர் எதாவது ஸ்டேஷன் வந்தால் அடுத்த பைலட் மாறிக்கொள்வார். இல்லை இன்னும் கொஞ்சம் நேரத்தில் இலக்கே வந்துவிடும் என்றால் அவரே ஓட்டிச்செல்வார். லோகோ பைலட்டுகள் வாரத்தில் குறைந்தது 36 மணிநேரம் வேலை செய்ய வேண்டும். அதற்கு மேல் வேலை செய்தால் ஓவர் டைம் அலவன்ஸ் என்ற கூடுதல் சம்பளம் கிடைக்கும்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Home Plants : உங்கள் வீட்டில் இந்தச்செடிகளை வளர்த்து பாருங்கள்! கவனிக்கும் திறனை அதிகரிக்கச் செய்பவை!

September 12, 2023 0

 

Home Plants : உங்கள் கவனிக்கும் திறனை அதிகரிக்கச் செய்யும் 5 தாவரங்கள் என்ன என்று தெரிந்துகொண்டு வீட்டில் வளர்த்து பயன்பெறுங்கள்!

வீட்டிற்குள் வளர்க்கும் செடிகள் அறைகளுக்குள் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கச்செய்யும். உங்கள் சுற்றுப்புறத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கக்கூடியவை. இதனால் உங்கள் மன ஆரோக்கியம் உயர்ந்து, உங்கள் கவனிக்கும் திறனை அதிகரிக்கச் செய்கிறது.

உங்கள் கவனிக்கும் திறனை அதிகரிக்கச் செய்யும் 5 தாவரங்கள் என்ன என்று தெரிந்துகொண்டு வீட்டில் வளர்த்து பயன்பெறுங்கள்!

அமைதியை அள்ளித்தரும் அல்லி

அமைதியை அள்ளித்தரும் அல்லி புத்துணர்ச்சி தரும் வீட்டுக்குள் வளர்க்கப்படும் தாவரம் ஆகும். இந்த செடி அமைதிக்காகவும், நல்ல மனநிலையை அதிகரிக்கச் செய்யவும் வளர்க்கப்படுகிறது. இதை வீட்டில் வளர்க்கும்போது, நமக்கு மனஅமைதியையும், நேர்மறை எண்ணத்தையும் கொடுத்து நமது கவனிக்கும் திறனை அதிகரிக்கிறது. இதன் மூலம் நம் செயல் திறன் உயர உதவுகிறது.

மான்ஸ்டெரா

இந்த மான்ஸ்டெரா செடியில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. இது ஆக்ஸிஜன் அளவையும் அதிகரித்து, கவனிக்கும் திறனையும் வளர்க்கிறது.

ஜேட் செடி

ஜேட் செடி காற்றின் தரத்தை அதிகரிக்கச் செய்கிறது. மன அழுத்தத்தை குறைத்து, அமைதியான சூழலை உருவாக்குகிறது. அது உங்களுக்கு கவனிக்கும் திறனை அதிகரிக்கிறது.

துளசி

துளசி, ஆக்ஸிஜனை அதிகரிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. அது உங்களின் கவனிக்கும் திறனை அதிகரிப்பதுடன், கவனத்துடன் நடந்துகொள்ள உதவுகிறது. எனவே ஒரு வீட்டில் 14 துளசிச்செடிகள் வளர்க்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அப்படி வளர்க்கும்போது 5 பேர் கொண்ட குடும்பத்துக்கு தேவையான ஆக்ஸிஜனை அந்த துளசி செடியே வழங்குவதோடு, வீட்டில் உள்ளவர்களுக்கு சளித்தொல்லை ஏற்பட்டால் அதை குணப்படுத்த மருந்தாகவும் பயன்படுகிறது.

சன்சீபர் செடி

இந்தச்செடி அறிவாற்றலை வளர்க்க உதவுகிறது. மேலும் காற்றின் தரத்தை அதிகரிக்கவும் செய்கிறது. எனவே உங்கள் வீடுகளுக்குள் இதுபோன்ற செடிகளை வளர்த்து பயன்பெறுங்கள். நகரங்களில் வெளியே தோட்டம் அமைக்க வசதியில்லாதவர்கள், இதுபோல் வீட்டுக்குள் செடிகளை வளர்த்து பயன்பெறலாம். 


Benefits of Citrus Fruits : தினமும் உணவில் சிட்ரஸ் பழங்கள்! நீர்ச்சத்து முதல் நோய் எதிர்ப்பு வரை இத்தனை நன்மைகளா?

September 12, 2023 0

 

Benefits of Citrus Fruits : தினமும் ஒரு சிட்ரஸ் பழக்தையாவது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன என்று தெரியுமா? இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

தினமும் பழங்கள் சாப்பிட வேண்டியதன் அவசியத்தை நமது முன்னோர்கள் காலங்காலமாக வலியுறுத்தி வந்துள்ளனர். பழங்களில் எண்ணிலடங்கா ஆரோக்கியமும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. ஆனாலும், சிட்ரஸ் பழங்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுவது ஏன் தெரியுமா?

ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துக்கள்

சிட்ரஸ் பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை ஃப்ளேவனாய்ட்கள் மற்றும் கரோட்டனாய்ட்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை உங்கள் உடலில் உள்ள செல்கள் சேதம் அடையாமல் காக்கின்றன. நாட்பட்ட நோய்கள் ஏற்படும் ஆபத்துக்களை தடுக்கிறது. இவற்றை தினமும் உட்கொண்டாலே உடல் ஆரோக்கியம் மேம்படும்.

உடலில் நீர்ச்சத்து பராமரிக்கப்படுகிறது

சிட்ரஸ் பழங்கள் அதிக நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இவற்றை நீர்ச்சத்து நிறைந்த ஸ்னாக்ஸ்களாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் நீர்ச்சத்துடன் இருப்பது மிகவும் அவசியம் ஆகிறது.

கேன்சர் தடுப்பு

சில வகை புற்றுநோய்கள் வருவதையும் தடுக்கிறது. குறிப்பாக வாய், வயிறு, உணவுக்குழாய் புற்றுநோய் வருவது ஆகியவற்றில் இருந்த உடலை காக்கிறது.

எடை மேலாண்மை

சிட்ரஸ் பழங்களில் குறைந்தளவு கலோரிகளே உள்ளன. அவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அது உங்களை நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வுடன் வைத்திருக்கிறது. இதனால் எடையும் கூடாமல் காக்கப்படுகிறது. அதிகம் சாப்பிடுவதையும் கட்டுப்படுத்துகிறது.

ஜீரணத்தை அதிகரிக்கிறது

சிட்ரஸ் பழங்களில் உள்ள நார்ச்சத்துக்கள், ஆரோக்கியமான ஜீரணத்தை கொடுக்கின்றன. மலச்சிக்கலை போக்குகின்றன. குடலில் தேவையான நுண்ணுயிர்களை தக்க வைக்கின்றன.

சரும ஆரோக்கியம்

கொலோஜென் உற்பத்திக்கு வைட்டமின் சி தேவைப்படுகிறது. அது உங்கள் சருமத்தை இளமையுடனும் ஆரோக்கியத்துடனும் வைத்திருக்கிறது. சருமத்தின் நிறம் மற்றும் பொலிவுக்கு காரணமாகிறது. வயதான தோற்றத்தையும் குறைக்கிறது.

வைட்டமின் சி சத்து அதிகம்

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்ச், எலுமிச்சை, திராட்சை பழங்களில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. இந்த வைட்டமின்தான் உங்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உங்கள் உடலை தொற்று மற்றும் நோய்களில் இருந்து எதிர்த்து போராட உதவுகிறது.

நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது

உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறனுக்கு உதவுவதில் வைட்டமின் சி சத்து நிறைந்த சிட்ரஸ் பழங்கள் உதவுகின்றன. இது உங்கள் உடல் காய்ச்சல் மற்றும் நோய்தொற்றுகளில் இருந்து விடுபட உதவுகிறது. சளி இருக்கும் காலத்தை குறைக்கிறது. ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்திக்கும் உதவுகிறது.


Tongue Cleaning Benefits: நாக்கு சுத்தம் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்துக்கு பாதுகாப்பு! எப்படி தெரியுமா?

September 12, 2023 0

 

வாய்வழி சுகாதாரத்தில் நாக்கை துடைப்பது வாய்வழி ஆரோக்கியத்துக்கும் ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் நன்மமை தருகிறது. நாக்கு சுத்துப்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளளாம்.

மனித உடல்களில் இருக்கும் வலுவான தசையாக நாக்கு உள்ளது. உடலில் உள்ள உடலின் மற்ற பாகங்களை போல், வாயி வழியிலும் பாதிப்பை ஏற்படுத்தாத பாக்டீரியாக்கள் நிறைந்திருக்கும். ஆனாலும் வாய்வழி சுகாதாரத்தை சரியாக கடைப்பிடிக்காவிட்டால் அந்த பாக்டீரியாக்கள் வாய் வழியாக உங்கள் செரிமான மற்றும் சுவாச குழாய்களுக்குள் நுழைந்து சில உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

வாய்வழி சுகாதாரத்தில் பல்துலக்குவது எவ்வளவு முக்கியமோஅதே அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக நாக்கை சுத்தப்படுத்துவது உள்ளது.

நாக்கை சுத்தப்படுத்தும் முறையும் அவ்வாறு செய்வதால் கிடைக்கும் நன்மையும் பார்க்கலாம்

நாக்கை சுத்தப்படுத்த டங் ஸ்கிராப்பர் அல்லது கிளீனரை பயன்படுத்தலாம். இவை நாக்கின் மேற்பரப்பை சுத்தம் செய்கிறது. அங்கிருக்கும் பாக்டீரியா, அழுக்குகள், இறந்த செல்கள் மற்றும் நாக்கில் சேரும் உணவு துகள்கள் போன்றவற்றை அகற்றுகிறது.

மென்மையாகவும், நெகிழ்வு தன்மையுடனும் இருக்கும் ட்ங் ஸ்கிராப்பர், பிளாஸ்டிக் அல்லது உலோகத்தில் U- வடிவத்தில் இருக்கும்.

டங் ஸ்கிராப்பர் பயன்படுத்துவது எப்படி?

மெட்டல் அல்லது பிளாஸ்டிக் ஸ்கிராப்பரை வாங்கி வழக்காக பல் துலக்கிய பிறகு உங்கள் நாக்கை நீட்டி, ஸ்கிராப்பரை மெதுவாக நாக்கின் பின்புறத்தில் வைக்க வேண்டும். பின் ஸ்கிராப்பரை நாக்கின் மேற்பரப்பில் லேசாக அழுத்தி, அதை உங்கள் நாக்கின் நுனியை நோக்கி இழுக்க வேண்டும்.

இந்த முறையை 3 முதல் 5 தடவை மறுபடியும் இழுத்து, ஒட்டு மொத்த நாக்கின் பரப்பிலும் இவ்வாறு செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை ஸ்க்ராப் செய்த பிறகு உங்கள் வாய் மற்றும் நாக்கு ஸ்கிராப்பரை தண்ணீரில் கழுவவேண்டும்.

இதை ஒரு பழக்கமாகவே நாள்தோறும் அல்லது இரண்டு நாள்களுக்கு ஒரு முறை கடைப்பிடிக்க வேண்டும். ஸ்கிராப்பரை பயன்படுத்திய பிறகு அதில் பாக்டீரியா வளர்வதை தடுக்க நன்கு கழுவி, ஈரம் இல்லாமல் காய வைத்து விட வேண்டும்.

நாக்கை சுத்தப்படுத்துவதால் பாதிப்பை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் நீக்கப்படுகிறது

வாய் வழி ஆரோக்கியத்துக்கு முக்கியமாக இருந்து வரும் நாக்கை சுத்தப்படுத்துவது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், இறந்த செல்கள் மற்றும் நாக்கின் மேற்பரப்பில் குவிந்துள்ள உணவு துகள்களை திறம்பட அகற்றுகிறது. இவற்றை நீக்காமல் குவிய விட்டோமானால் நாக்கில் நிறமாற்றம் ஏற்படுவதுடன். வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தலாம். அத்துடன் வாய்வழி சுகாதார பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம்.

சுவை உணர்திறனை மேம்படுத்தும்

நாக்கை ஒழுங்காக சுத்தம் செய்வதை பின்பற்றுவதன் மூலம் சுவை உணர்திறன் அதிகரிக்கும். எந்த வகையான சுவையாக இருந்தாலும் நான்கு பிரித்து பார்க்க உணர வைக்கும்.

நாக்கின் தோற்றம் அழகாகும்

நாக்கில் அதிகப்படியான குப்பைகள் குவிவதால் அது வெள்ளை அல்லது மஞ்சள் நிறமாக தோற்றமளிக்கும். ஸ்கிராப் செய்வதன் மூலம் இந்த பாக்டீரியாக்கள் உருவாவதை தடுக்கலாம்.

ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியமும் நலம் பெறும்

வாய் வழியில் பாக்டீரியாக்கள் பிற உடல் பாகங்களில் பரவுவது நாக்கை துடைப்பதால் தடுக்கப்படுகிறது. இதனால் ஈறு பாதிப்படைவது, துவாரங்கள் ஏற்படுவது போன்ற வாய்மூலமாக ஏற்படும் நோய் பாதிப்புகள் தடுக்கப்படுகிறது.

வாய் துர்நாற்றம் ஏற்படுவதை தவிர்க்கலாம்

பிரஷ் செய்த பின்னர் நாக்கை சுத்தம் செய்யும் பழக்கத்தை கடைப்பிடித்து வந்தால், வாயில் துர்நாற்றம் ஏற்படுவதை முற்றிலுமாக தடுக்கலாம்.

Click here for more Health Tip

Cardamom For Weight Loss: நறுமணம், சுவைக்கு மட்டுமல்ல..! உடல் எடை குறைக்கவும் உதவும் ஏலக்காய் - எப்படி தெரியுமா?

September 12, 2023 0

 

உணவில் நறுமணத்தையும், சுவையையும் அதிகரிக்கும் ஏலக்காய் உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது என்ற சொன்னால் நம்பமுடிகிறதா? எடையை குறைக்க ஏலக்காய் எப்படியெல்லாம் உதவுகிறது என்பதை பார்க்கலாம்.

மசாலா பொருள்களில் ஒன்றாக திகழும் ஏலக்காய் உணவில் உள்ள சுவையை மெருகேற்றவும். நறுமணத்தை அதிகரிக்கவும் செய்கிறது. இதேபோல் பல்வேறு மருத்துவ குணநலன்களையும் கொண்டதாக ஏலக்காய் உள்ளது. இருமல் பிரச்னை இருப்பவர்கள் ஏலக்காயை மென்று அதன் சாற்றை விழுங்கி வந்தால் இருமல் தாக்கமானது சற்று குறையும்.

உடல் ஆரோக்கியத்தை பேனி காக்கும் ஏலக்காயில் குறைவான கலோரிகள், அதிகமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. அத்துடன் உடலுக்கு தேவையான வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்துள்ளன.

பல்வேறு நன்மைகள் தரும் ஏலக்காய் உடல் எடை குறைக்கவும் உதவுகிறது. ஏலக்காய் தரும் உடல் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

உடல் நச்சுக்களை நீக்குகிறது

உடலில் தேங்கிய இருக்கும் தேவையற்ற நச்சு பொருள்களை, கொழுப்புகளை நீக்கும் தன்மை ஏலாக்காய்க்கு உள்ளது. இதனால் எடை குறைப்பில் ஈடுபட்டுள்ள உடலின் பிற உறுப்புகளின் செயல்திறனை மேம்படுகிறது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கும் ஏலக்காய், எடை குறைப்புக்கு மிகவும் உதவியாக உள்ளது.

செரிமானத்தை ஊக்குவித்தல்

ஏலக்காய் உணவில் உள்ள ஊட்டச்சத்துகளை நன்கு உறிஞ்சி, செரிமானத்தை சீராக்குகிறது. இதனால் செரிமான அமைப்பு நன்றாக செயல்பட்டு, வயிறு உப்புசம் ஆவது தடுக்கப்படுகிறது. அத்துடன் வாயு, மலச்சிக்கல் உள்பட வழக்கமான எடை இழப்புக்கு தடையாக இருக்கும் பிரச்னைகளை சரி செய்கிறது.

வளர்சிதை மாற்றத்துக்கு உதவுதல்

உடலின் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துவதன் மூலம் கொழுப்பு மற்றும் கலோரிகளை எரிக்க உதவுகிறது, இதன் விளைவாக எடை விரைவாக குறைகிறது

பசியை கட்டுப்படுத்துதல்

ஏலக்காய் எடுத்துக்கொள்வது வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருக்கும் உணர்வை தருகிறது. இதனால் வேறு உணவுகளை தேடி மனம் அலைபாயாமல் இருப்பதுடன், தேவையில்லாத உணவுகள் சாப்படுவதும் கட்டுப்படுத்தப்படுகிறது.


Rice: வயிற்று எரிச்சலைக் குறைக்கும் பழையசோறு… இத்தனை நன்மைகளா?

September 12, 2023 0

 

நாம் அனைவரும் அறிந்த பழையசோற்றின் நன்மைகளை இங்கு காண்போம்.

தற்போது ஒரு கலாசாரம் நம் இளைஞர்கள் மத்தியில் திரும்பி வருகிறது. பாரம்பரியம் திரும்புதல் என்பதுவே அது. பலர் பாரம்பரிய உணவுகளை கூகுளில் தேட ஆரம்பித்துவிட்டனர். அது ஒரு வகையில் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதும் கூட. அதில் குறிப்பிடத்தகுந்த ஒரு விஷயம் என்னவென்றால், நிறைய இடங்களில் களி, புட்டு, பழையசோறுக்கென பிரத்யேக கடைகளைக் கூட, சிலர் திறக்க ஆரம்பித்துவிட்டனர். அத்தகைய சிறப்புமிக்க உணவுகளில் மிக முக்கியமானது, பழையசோறு. 

நமது அண்டை மாநிலமான கேரளாவில் அரிசி கஞ்சியிடன் கப்பைக்கிழங்கை உணவு தொட்டு உண்ணும் பழக்கம் இருந்து வருகிறது. அதுபோல், நம் தமிழ்நாட்டில் உழைக்கும் சாமானிய மக்களின் அமிர்தமாகத் திகழ்ந்த பழையசோறு, இன்று பலருக்கும் ஃபேவரைட்டாக மாறி இருப்பது உள்ளபடியே வரவேற்புக்குரியது.

பழைய சாதம் தயார் செய்வது எப்படி?: பாத்திரத்தில் வடித்த நன்கு வெந்த சாதத்தில், இரவில் நீர் மற்றும் தேவைப்பட்டால் மோர், உப்பு சேர்த்து வைத்துவிட்டால், காலையில் பழைய சாதம் தயார். அப்படி என்ன நடக்கிறது, இந்த பழைய சாதத்தில் என்றால், உடலுக்கு நன்மைதரும் பாக்டீரியாக்களின் மூலம் நல்ல எனர்ஜியான உணவாக பழைய சாதம் மாறிவிடுகிறது.

பழைய சாதத்தில் இருக்கும் சத்துக்கள் என்ன?: இந்த பழைய சாதத்தில் கிடைக்கும் இரும்புச்சத்து, வடித்த சாதத்தில் இருக்கும் இரும்புச்சத்தினைவிட 25 விழுக்காடு அதிகம். புரதச்சத்து, பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் பெருமளவு பழைய சாதத்தில் உள்ளன. வைட்டமின் பி6, பி12 போன்ற சத்துக்களும் அதிகம் கிடைக்கும்.

பழைய சாதத்தின் கால இடைவெளி: பழைய சாதத்தை நீருற்றிய 12 மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிட்டால், உடலுக்கு இந்த சத்துக்கள் கிடைத்துவிடும். அதிக நேரம் கழித்துச் சாப்பிட்டால் ஒவ்வாமைகூட ஏற்படலாம்.

பழைய சாதமும் பயன்களும்:

  • பெருங்குடல் அழற்சி, குடற்புண், வயிற்றுப்பொருமல் ஆகியவற்றுக்கு, பழைய சாதம் அருமருந்து.
  • செரிமானத்துக்கு நார்ச்சத்து அவசியம். பழைய சாதத்தில் நார்ச்சத்து அதிகம் என்பதால் எளிதில் உடலில் செரிமானம் ஆகும்.
  • பழைய சாதத்தில் இருந்து கிடைக்கும் நீர் தலைக்கு தேய்த்து குளிக்கும்போது இயற்கை கண்டிசனராகப் பயன்படுகிறது. இதில் இருக்கும் ஆண்டி ஆக்சிடண்ட்கள் முடியின் வளர்ச்சிக்குப் பயன்படுகின்றன.
  • பழைய சோற்றில் கிடைக்கும் செலீனியம், மக்னீசியம் நம் உடல் எலும்புகளை வலுப்படுத்தும்.
  • பழையசோற்றில் இருந்து கிடைக்கும், நீர் ஆகாரம் உடல் சூட்டைக்குறைத்து வயிற்று எரிச்சலைக் குறைக்கும். 
  • பழைய சாதத்தில் வைட்டமின் பி இருப்பதால், வயிற்றில் உண்டாகும் அல்சர் என்னும் புண்களை ஆற்றுப்படுத்தும்

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்