Agri Info

Adding Green to your Life

October 3, 2023

குழந்தைகளிடம் பெற்றோர்கள் ஒருபோதும் சொல்லக்கூடாத வார்த்தைகள் என்னென்ன?🔻🔻🔻

October 03, 2023 0

 குழந்தைகள் தங்களை சுற்றி நடக்கும், கேட்கும் அனைத்து விஷயங்களையும் கூர்ந்து நோக்குபவர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு விஷயங்களையும் பிறரிடம் இருந்து கற்றுக்கொள்ளும் அவர்கள் சின்ன விஷயங்களைக்கூட கவனிக்க தவறமாட்டார்கள். அன்றாட வாழ்க்கையில் கவனிக்கும் சில விஷயங்களை குழந்தைகள் நாளடைவில் பின்பற்ற தொடங்குவார்கள். 

வீட்டில் பெற்றோர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளில் இருந்தே அவை தொடங்கும் என்பதால், குழந்தைகள் முன்பு மிகவும் கவனமான வார்த்தைகளை பெற்றோர் பேச வேண்டும். எதிர்மறையான வார்த்தைகள், ஆபாச வார்த்தைகள் போன்றவற்றை முற்றும் முழுதாக தவிர்க்க வேண்டும். என்ன செய்யக்கூடாது என்பதைக் காட்டிலும், எதனை செய்ய வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும்.

எதிர்மறை வார்த்தைகள்:  ஏற்கனவே கூறியதுபோல் பெற்றோர்கள் பயன்படுத்தும் சில எதிர்மறை வார்த்தைகள், குழந்தைகளுக்கு எதிர்மறையான சிந்தனைகளின் உருவாவதற்கு தொடக்க புள்ளியாக அமையும். 

உதாரணமாக, 'கேமை இப்போதே நிறுத்து, ஓவர் சுறுசுறுப்பாக இருக்க, இதை செய்ய முட்டாளா நீ?, தூங்குவதற்கு முன்பு கட்டாயம் கணக்கு வீட்டுப் பாடங்களை முடித்துவிட வேண்டும், இப்படி உட்காராதே, சாப்பிட்டால் மட்டுமே இனிப்பு கிடைக்கும்' இதுபோன்ற ஏராளமான வார்த்தைகள் அன்றாடம் பெற்றோர்கள் உபயோகப்படுத்துவதை பார்த்திருக்கிறோம். ஆனால், இந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் குழந்தைகளுக்கு எதிர்மறை எண்ணங்களை உருவாக காரணமாக இருக்கின்றன.

 நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள், நெகடிவ்வாக வேறொரு பார்வையில் அவர்களை சிந்திக்க வைக்கும்.

பயன்படுத்த வேண்டிய வார்த்தைகள்:  மேலே குறிப்பிட்ட வார்த்தைகள் பேசும்போது எதிர்மறையான ஒலியுடன் இருக்கும். அதற்கு பதிலாக சொல்ல வேண்டியதை நேர்மறையான ஒலியுடன் இருக்கும் வார்த்தைகளை உபயோகப்படுதலாம். நீங்கள் சொல்லும் அணுகுமுறை, உங்கள் மீது அவர்களுக்கு மதிப்பு ஏற்படுத்துபவையாக இருக்கும். மேலும், அவர்களை கட்டுப்படுத்தும் வகையில் இருக்காது. 

தாங்கள் சுதந்திரமாக விளையாட வேண்டும் என நினைத்திருக்கும்போது, கட்டளையிட்டால் குழந்தைகள் உங்களின் வார்தைகளுக்கு எதிராக செயல்பட வேண்டும் என நினைப்பார்கள். கனிவுடன் கூறினால், நீங்கள் எதிர்பார்க்கும் அணுகுமுறை அவர்களிடமிருந்து கிடைக்கும். 

உதாரணமாக, ‘ இன்றைக்கு கேம் விளையாடியது போதும், நன்றாக உட்காருகிறீர்களா?, அதனை தொடுவது நன்றாக இருக்காது, நீங்கள் நன்றாக சாப்பிடுங்கள், உங்களுக்கு இனிப்பு காத்திருக்கிறது’ எனக் கூறலாம். இந்த வார்த்தைகள் ஒரே பொருள் உடையவையாக இருந்தாலும், அணுகுமுறையும் சொல்லும் விதமும் கனிவானதாக இருக்கும்.

சாபம் அல்லது ஆபாச சொற்களை தவிர்த்தல்: குழந்தைகளின் நம்பிக்கையை பாதிக்கக்கூடிய சொற்களை ஒருபோதும் பெற்றோர்கள் பயன்படுத்தக்கூடாது. 

நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் உங்களுக்கு பெரிதாகத் தெரியாது. ஆனால், அவர்களுக்கு கடுமையான மன உளைச்சலைக் கொடுக்கும். தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும். தவறான பாதைகளை பின்பற்றுவதற்கான வழிகளை தேடத் தொடங்குவார்கள். குழந்தை வளர்ப்பில் இது ஆபத்தானது என்பதால், மென்மையான, கனிவான வார்த்தைகள் மட்டுமே உபயோகிக்க வேண்டும். நல்ல செயல்களை பாராட்ட வேண்டும். 

தோல்விக்கு அரவணைத்து, ஊக்குவிக்க வேண்டும். உங்களுடைய ஊக்குவிப்பு சரியான திசையில் செல்ல வேண்டும் என்பதையும், முடிவெடுக்கும் திறனையும் குழந்தைகளுக்குள் வளர்க்கும்.

தெரிந்து கொள்ள வேண்டியவை:  நல்ல வார்த்தைகளை உபயோகப்படுத்துபவர்கள், எப்போதும் மகிழ்ச்சியாகவும், வாழ்க்கையை நேர்மறையாகவும் அணுகுவார்கள். அவர்களுடைய குழந்தைகளும் அப்படியே வளர்க்கப்படுவார்கள். இதனால் நல்ல நண்பர்கள் வட்டாரம் உருவாகும். எதிரிகள் இருக்க மாட்டார்கள். நேர்மை, அன்பு, பாசம் ஆகியவற்றை உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் காணமுடியும். மரியாதைக்கு இழுக்கான எந்தவொரு செயலையும் அவர்கள் நிச்சயம் செய்ய மாட்டர்கள், நீங்கள் நல்ல வார்த்தைகளை பயன்படுத்தும்போது.


🔻 🔻 🔻 

Military Sleep method : 10 நொடிகளில் தூங்கனுமா..? இந்த உத்தியை டிரை பண்ணி பாருங்க

October 03, 2023 0

 இயந்திரம் போல இயங்கிக் கொண்டிருக்கும் நம் வாழ்க்கையில் நிம்மதியின்மை, கவலை போன்ற பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. இவையெல்லாம் இல்லாவிட்டாலும் கூட டிவி, செல்ஃபோன் போன்ற கருவிகளை நாம் மிக அதிகமாகப் பயன்படுத்துகின்றோம். இப்படி ஏதோ ஒரு காரணத்தால் நமது தூக்கம் தடைபடுகின்றது.

மெத்தையில் படுத்து வெகுநேரமாகியும் கூட தூக்கம் வராமல் அங்கும், இங்குமாக புரளுவது, திடீரென்று எழுந்துவிட்டு மீண்டும் தூங்குவதற்காக காத்திருப்பது போன்ற பிரச்சினைகள் இன்றைக்கு அதிகரித்துள்ளன. தூக்கமின்மையால் ஏற்படும் விளைவுகள் நமது உடல் நலனை பாதிக்கின்றன. அதேபோல, மனநலனையும் பாதிக்கிறது.

ஆக, படுத்த சில நொடிகளில் தூங்குவது எப்படி என்ற உத்திதான் இன்றைக்கு பலருக்கும் தேவையானதாக உள்ளது. ராணுவ தூக்கம் என்ற முறையை கையாண்டால் 10 நொடிகளில் தூங்கி விடலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இது எங்கிருந்து வந்தது? கடந்த 1981ஆம் ஆண்டில் லாய் புட் விண்டர் என்பவர் எழுதிய ரிலாக்ஸ் அண்ட் வின்: சேம்பியன்ஷிப் பெர்மாமன்ஸ் என்னும் புத்தகத்தில் இந்த உத்தி குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது வீரர்கள் தங்களுக்கு கிடைக்கும் குறைவான இடைவெளி நேரத்தில் நிறைவாக தூங்கி எழுந்திருக்க வேண்டிய தேவை இருந்தது. அந்த அளவுக்கு போர் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அமெரிக்க கடற்படையில் உள்ள விமானப்படை வீரர்கள் 120 நொடிகளில் தூங்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த புத்தகம் எழுதப்பட்டது. ஏனென்றால் தூக்கமின்றி மிகுந்த மன அழுத்தத்திற்கு இவர்கள் உள்ளாகியிருந்தனர். இதனால் அவர்களின் முடிவெடுக்கும் திறன் பாதிக்கப்பட்டது.

எப்படி கடைப்பிடிப்பது? மிகச் சரியான முறையை கையாண்டால் நமது உடலும், மனதும் ரிலாக்ஸ் அடையும். முதலில் நமது முக தசைகளை ரிலாக்ஸ் செய்ய வேண்டும். தோள்களை தொங்கவிட்டு மனதை ஒருநிலைப்படுத்தி மெதுவாக மூச்சை வெளியிட வேண்டும். இந்த சமயத்தில் உங்கள் மார்பு மற்றும் கைகள் ஆகியவை ரிலாக்ஸ் ஆக இருக்க வேண்டும்.

அதேபோல கால்கள் மற்றும் தொடை ஆகியவற்றையும் ரிலாக்ஸ் ஆக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த 10 நொடிகளுக்கு அனைத்து சிந்தனைகளையும் விலக்கி, உங்கள் மனம் அமைதி பெறும் இடம் ஒன்றை கற்பனை செய்து கொள்ளுங்கள். இதில் பலன் கிடைக்கவில்லை என்றால் மீண்டும், மீண்டும் இதே உத்தியை செய்யலாம். மேலும் அந்த 10 நொடிகளை தவறவிடாமல் கற்பனை செய்ய வேண்டும்.

4-7-8 மூச்சு முறை : தரையில் படுத்து கண்ணையும், வாயையும் மூடிக் கொள்ள வேண்டும். மூக்கு வழியாக 4 நொடிகள் மூச்சை இழுத்து, 7 நொடிகள் மூச்சை அடக்கி, 8 நொடிகள் வரையில் மூச்சை வெளியிட வேண்டும். இதே உத்தியை 4 முறை பின்பற்றினால் உடனடியாக தூக்கம் வரும்.

🔻 🔻 🔻 

செய்தித்தாள்களில் மடித்து தரப்படும் உணவுப்பொருட்களால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் பற்றி தெரியுமா?

October 03, 2023 0

 செய்தித்தாள்களில் பயன்படுத்தப்படும் மையில் பல்வேறு உடல்நல அபாயங்களை ஏற்படுத்தக்கூடிய சில இரசாயனங்கள் இருப்பதாக உணவு ஒழுங்குமுறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

FSSAI எனப்படும் இந்திய உணவு தரம் மற்றும் பாதுகாப்பு முகமையின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி கமலா வர்தன ராவ், நாடு முழுவதும் உள்ள நுகர்வோர் மற்றும் உணவு விற்பனையாளர்கள் உணவுப் பொருட்களை பேக்கிங், பரிமாறுதல் மற்றும் சேமித்து வைப்பதற்கு செய்தித்தாள்களைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு கடுமையாக வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

செய்தித்தாளில் உணவுப் பொருட்கள் மடிப்பதைஏன் தவிர்க்க வேண்டும்? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? விபரமாக பார்க்கலாம்.

FSSAI தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஜி கமலா வர்தன ராவ், உணவுப் பொருட்களை மடிக்க  பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளார். செய்தி தாள் அச்சடிக்க பயன்படும் மை மனித உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் அதில் பல்வேறு ரசாயனப் பொருட்கள் உள்ளன என்றும் ஏற்கனவே FSSAI அறிவுறுத்தியிருந்தது. அந்த அச்சு மை, உணவை மாசுபடுத்தும் என்றும் உட்கொள்ளும் போது உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்றும் கமலா வர்தன ராவ் எச்சரித்துள்ளார்.

மையில் ஈயம் மற்றும் கன உலோகங்கள் போன்ற இரசாயனங்கள் இருப்பதால், அவை பரிமாறப்படும் அல்லது செய்தித்தாளில் சுற்றப்பட்ட உணவுகள் மூலம் மனித உடலுக்குள் சென்று விடும். மேலும், உணவுப் பொருட்கள் மடிக்க பயன்படுத்தப்படும் செய்தித்தாள்கள் அடிக்கடி பல்வேறு சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. இதனால் அவை பாக்டீரியா, வைரஸ்கள் அல்லது பிற நோய்க்கிருமிகளால் மாசுபடுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இது உணவில் பரவும் நோய்களை ஏற்படுத்தக்கூடும்  என்றும் FSSAI எச்சரித்துள்ளது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஒழுங்குமுறைகள் 2018-ல் இது குறித்து விளக்கமளித்துள்ளது. உணவைச் சேமிப்பதற்கும், பேக்கிங் செய்வதற்கும் அல்லது போர்த்துவதற்கும் செய்தித்தாள்கள் அல்லது அதை ஒத்த பொருட்களைப் பயன்படுத்துவதைத் இந்த பிரிவு தடைசெய்கிறது. எனவே விதிமுறைகளின்படி, நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்கள் உண்ணக்கூடிய பொருட்களை வழங்க செய்தித்தாள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். வடை, சமோசா அல்லது பக்கோடா போன்ற வறுத்த உணவுகளிலிருந்து அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சுவதற்கு செய்தித்தாள்களைப் பயன்படுத்தவும் கூடாது.

செய்தித்தாள்களை யாரும் உணவு பரிமாறவோ அல்லது பேக் செய்யவோ பயன்படுத்துவதில்லை என்பதை உறுதிப்படுத்த FSSAI இப்போது மாநில உணவு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. உணவுப் பொருட்களை மடிப்பதற்கு செய்தித்தாள்களைப் பயன்படுத்துவதை தவிர்த்து, பாதுகாப்பான மாற்று வழிகளை ஊக்குவிப்பதன் மூலமும், நாட்டில் வழங்கப்படும் உணவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை FSSAI மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

🔻 🔻 🔻 🔻 🔻 🔻 🔻 🔻 🔻 🔻 🔻 🔻 🔻 🔻 🔻 🔻 🔻 🔻 🔻 🔻 🔻 🔻 🔻 

தேனி சுற்றுவட்டார பகுதிகளில் முகாமிட்டுள்ள வெளிநாட்டு பறவைகள்..! ஆச்சர்யத்துடன் பார்த்து செல்லும் மக்கள்..!

October 03, 2023 0

 தேனி மாவட்டத்தில் லோயர் கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரை முல்லைப்பெரியாறு அணைபாசனத்தின் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் இருபோக பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில் கம்பம் பள்ளத்தாக்கின் கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் முதல் போக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.

கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்படும் இடங்களில் வெளிநாட்டு பறவைகள் வயல்வெளிகளுக்கு வந்து முகாமிடுவது வழக்கமாக வைத்துள்ளது.  அதேபோல் இந்த ஆண்டும் வயல்வெளிகளில் உள்ள புழு, பூச்சிகள் உள்ளிட்ட இறைகளை உண்பதற்க்காக வெளிநாட்டு பறவைகள் அதிகம் வர துவங்கியுள்ளன.

மேலும் இனப் பெருக்கத்திற்காக வந்துள்ள வெளிநாட்டு பறவைகளின் வருகையும் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு நீள மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை, பிளமீங்கோ, அகல வாயான், கருப்பு உள்ளான், போன்ற பறவைகளின் வருகை அதிகரித்துள்ளதாகவும், வயல்வெளிகளில் தேங்கியுள்ள நீரில் இறையை தேடி வெளிநாட்டு பறவைகள் இங்கும் அங்கும் பறந்து வருவது பொது மக்களையும் , சுற்றுலா பயணிகளின் வெகுவாகக் கவர்ந்துள்ளது.

விடுமுறையை கழிக்க சூப்பர் ஸ்பாட்.. வேடந்தாங்கல் எப்போது செல்லலாம்?

October 03, 2023 0

 புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் செங்கல்பட்டில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இது இந்தியாவின் பெரிய நீர்ப்பறவைகள் சரணாலயங்களில் ஒன்றாகும். இங்கு பறவைகள் தண்ணீரில் மூழ்கிய மரங்களின் மீது கூடு கட்டி வாழ்கிறது. வெளிநாடுகளில் இருந்து இனப்பெருக்கத்திற்காக பல்லாயிரம் கிலோ மீட்டர் பயணித்து பருவ காலத்தில் இங்கு வரும் சில பறவைகள் அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் இருக்கும்.

டார்டர், பிளெமிங்கோக்கல், மவுண்ட் கோன்ஸ், வெள்ளை ஐபிஎஸ், ஸ்பூன் மில்ஸ் மற்றும் சாம்பல் உள்ளிட்ட பெரும்பாலான புலம்பெயர்ந்த பறவைகள் வருகை தருகையில் பறவைகளை ஆற்றங்கரை அல்லது கண்காணிப்பு கோபுரத்திலிருந்து பார்க்க முடியும்.

இந்த சரணாலயம் பார்வையிட சிறந்த காலம் அக்டோபர் முதல் மார்ச் வரை ஆகும். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல சுற்றுலா தளங்கள் இருந்தாலும் மிக முக்கிய சுற்றுலா தளமாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் விளங்கி வருகிறது. ஏனென்றால் பல ஆயிரக்கணக்கான பறவைகள் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு குறிப்பிட்ட சில மாதங்களில் வந்து செல்வதால் சுற்றுலாப் பயணிகள் பலரும் இதைக் காண ஆர்வமுடன் வருவார்கள். இந்த இடம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறது.

சென்னை புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் சென்னை உள்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் என அனைவரும் இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை வந்து அடைய முடியும். இதுபோக வட மாவட்டங்களான திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும் பேருந்து மூலமாக சில மணி நேரங்களில் பேருந்து மூலமாகவோ அல்லது தங்கள் சொந்த வாகனம் மூலமாகவோ வேடந்தாங்கல் சரணாலயத்தை பார்வையிட முடியும்.

தற்போது சீசன் காலம் தொடங்கும் நிலையில் சுமார் 20,000 மேற்பட்ட வகையிலான பறவைகள் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் குவிந்து வருகின்றன. எனவே, பறவைகளை காண்பதற்காக வெளிநாட்டினர் வெளி மாநில வெளி மாவட்டங்களில் இருந்து ஆண்டு தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வேடந்தாங்கல் பறவை சரணாலயத்தை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வாரத்தில் அனைத்து நாட்களும் கண்டுக்களிக்கலாம். பெரியவர்களுக்கு 25 ரூபாயும் சிறியவர்களுக்கு ஐந்து வயதுக்கு மேல் 5 ரூபாயும் வீடியோ கேமரா எடுத்துச் சென்றால் 150 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.



October 2, 2023

2,000 SBI PO பணிக்கான டெட்லைன் நீட்டிப்பு

October 02, 2023 0

 பிஓ (Probationary Officers) பணிக்கான ஆட்சேர்ப்பு ஆன்லைன் பதிவு காலக்கெடுவை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஒத்திவைத்துள்ளது. எஸ்பிஐ பிஓ தேர்வு 2023-க்கு பதிவு செய்வதற்கான கடைசி தேதி அக்டோபர் 3, 2023. ப்ரோபேஷனரி அதிகாரிக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் sbi.co.in-ல் காலக்கெடு முடிவதற்குள் பதிவு செயல்முறையை முடிக்க வேண்டும்.

SBI PO பணிக்கான பதிவு செப்டம்பர் 07-ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 3 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த ஆட்சேர்ப்பு இயக்கத்தின் மூலம் மொத்தம் 2000 காலியிடங்களை நிரப்படும். அட்டவணையின்படி, எஸ்பிஐ பிஓ முதல்நிலைத் தேர்வு நவம்பர் 2023-ல் நடத்தப்படும்.

SBI PO ஆட்சேர்ப்பு 2023-க்கு எப்படி விண்ணப்பிப்பது?

படி 1: பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான sbi.co.in-ஐ விசிட் செய்யவும்.

படி 2: முகப்புப் பக்கத்தில், PO ஆட்சேர்ப்புக்கான பதிவு இணைப்பைக் கிளிக் செய்யவும்.

படி 3: நீங்கள் ஒரு புதிய பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள். உங்கள் யூசர் ஐடி-யை பயன்படுத்தி உள்நுழைந்து விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

படி 4: தேவையான ஆவணங்களைப் பதிவேற்றி ஆன்லைன் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.

படி 5: எதிர்கால குறிப்புக்காக உறுதிப்படுத்தல் பக்கத்தை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 01.04.2023 தேதியின்படி 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பின் இறுதியாண்டு/ செமஸ்டரில் இருப்பவர்கள், நேர்காணலுக்கு அழைக்கப்பட்டால், 31.12.2023 அன்று அல்லது அதற்கு முன் பட்டப்படிப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு தற்காலிகமாக விண்ணப்பிக்கலாம். ஒருங்கிணைந்த இரட்டைப் பட்டம் (IDD) சான்றிதழைக் கொண்ட விண்ணப்பதாரர்கள், 31.12.2023 அன்று அல்லது அதற்கு முன் ஐடிடியில் தேர்ச்சி பெற்ற தேதியை உறுதிசெய்ய வேண்டும்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

மாசம் ரூ.30,000 சம்பளம்... ரயில்வேயில் ஒப்பந்த அடிப்படையில் வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்

October 02, 2023 0

 தெற்கு ரயில்வேயில் ஜூனியர் டெக்னிக்கல் அசோசியேட் (JTA) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெற்கு ரயில்வேயின் கட்டுமானப் பிரிவுக்காக ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 14 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கான கல்வி தகுதி, சம்பள விவரம் உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்

கல்வி தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து சிவில் என்ஜினியரிங் பிரிவில் மூன்று ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ படிப்பு அல்லது சிவில் என்ஜினியரிங் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 18-வயது நிரம்பியவர்களும் 33 வயது பூர்த்தியாகாதவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி? ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை முறையாக பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்பிக்க வரும் 09.10.2023 கடைசி நாள் ஆகும். பெண் விண்ணப்பதாரர்களுக்கும் எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கும் தேர்வு கட்டணம் எதுவும் கிடையாது.

சம்பளம் விவரம்: இந்த பணி முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலானது ஆகும். ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒப்பந்த காலம் ரயில்வே நிர்வாகத்தின் முடிவுக்கு உட்பட்டது. சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ. 25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வழங்கப்படும். தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னையிலேயே பணியமர்த்தப்படுவார்கள்.

பிற விவரங்கள்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படும். அரசு விடுமுறை நாட்களிலும் விடுமுறை உண்டு. ஆனால் பணி நிமித்தமாக விடுமுறை ரத்து செய்யப்பட்டால் அதற்கு ஈடாக மற்றொரு நாள் விடுமுறை வழங்கப்படும்.

தேர்வு குறித்த முழு விவரங்களையும் தேர்வு அறிவிப்பாணையும் தெரிந்துகொள்ள இந்த இணையதள லிங்கை கிளிக் செய்யவும்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

12ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. மத்திய அரசில் 7,547 காலியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க..

October 02, 2023 0

 டெல்லி காவல்துறையில் காலியாக உள்ள 7,547 காவலர் (ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கான (நிர்வாகம்) டெல்லி காவல் தேர்வு 2023 ) பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை நாளையுடன் (30-09-2023) நிறைவடைகிறது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க 12ம் வகுப்பு தேர்ச்சி போதுமென்பதால், தேர்வர்கள் கடைசி நேரம் வாரம் காத்திருக்காமால் போதிய கால சாவகாசமா இருக்கும் போதே  விண்ணப்பிக்குமாறு கேட்டுக்  கொள்ளப்படுகின்றனர்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்:  இந்த பதவிக்காக  நடத்தப்படும்  போட்டித் தேர்வுக்கு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது

காலியிடங்கள் விவரம்: மொத்த காலிப்பணியிடங்களில், பெண் காவலர்களுக்கான (நிர்வாகம்) இடங்கள் 2491 ஆகவும், ஆண் காவலர்களுக்கான (நிர்வாகம்) இடங்கள் 4453 ஆகவும் உள்ளது. முன்னாள் ராணுவத்தினர் வரிசையின் கீழ் 603 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி? விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பங்களை அனுப்புவதற்கு கடைசி தேதி 30.09.2023 (இரவு 11.00 மணி) அன்றிரவே விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதச் சம்பளம் : ஊதிய நிலை 3 (21,700 - 69,100)

கல்வி தகுதி: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01-07-2023 அன்று 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.

எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். பட்டியல்/ பழங்குடியினத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் 8 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்திவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு அறிவிக்கை: Constable (Executive) Male and Female in Delhi Police Examination-2023

தேர்வு நடைபெறும் நாள்: டிசம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது அறிவு (General Awareness), கணித பிரச்னை தீர்க்கும் ஆற்றல் (Numerical ability), காரணங்கானல் (Logical Reasoning), கணினி அறிவியில் அடிப்படை (English Language) ஆகிய நான்கு கூறுகளைக் கொண்டதாக உள்ளது.

கணினி வழியில் நடைபெறும் எழுத்துத் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் மட்டுமே நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைக்கடிகாரம், புத்தகங்கள், துண்டுச்சீட்டு, சஞ்சிகைகள், செல்பேசி ப்ளூடூத் சாதனங்கள், ஹெட்போன்கள் சிறிய அளவிலான கேமராக்கள், ஸ்கேனர்கள், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் உள்ளிட்டவைகளை தேர்வு மையத்திற்குள் எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் மின் அனுமதி சான்றிதழ் மற்றும் அசல் அடையாள அட்டைகளை விண்ணப்பதாரர்கள் கட்டாயம் தேர்வு மையத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ரூ. 15,000 சம்பளம்.. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்... சேலம் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை

October 02, 2023 0

 சேலம் மாவட்டத்தில் உள்ள பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.   ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் பெண்களுக்கு தேவைப்படும் அவசரகால மீட்பு மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, காவல் உதவி, சட்ட உதவி. தற்காலிக தங்குமிடம் ஆகியவற்றை வழங்கி அவர்களை பாதுகாக்க மத்திய அரசினால் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையம் ஆகஸ்டு 2018 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய கூடுதல் ஒப்பந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

காலியிடங்கள் விவரம்: 3 வழக்குப் பணியாளர் பணியிடங்கள் (Case Worker) ரூ. 15,000/- தொகுப்பூதியத்தில் நிரப்பப்படவுள்ளது.

கல்வித் தகுதி:  BSW / MSW (Counselling Psychology) சமூகப்பணி மற்றும் உளவியல் பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் அல்லது முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :  21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

முன்னனுபவம்:  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் அரசு / தனியார் நிறுவனங்களில் உளவியல் ஆலோசகராக குறைந்தபட்சம் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். பெண்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். 24 மணி நேரமும் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதியான நபர்கள் தங்களது விபரங்களை 15.10.2023 அன்று மாலை 05.00 மணிக்குள் மாவட்ட சமூக நல கய அலுவலகம் மாவட்ட ஆட்சியர் வளாகம், அறை எண் 126 என்ற முகவரிக்கு நேரிலோ, அல்லது தபால் மூலமாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்கத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 0427-2413213 என்ற மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.



Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

அசத்தல் வருமானம் தரும் 'ஒர்க் ஃப்ரம் ஹோம்' வேலை ஐடியாஸ்!

October 02, 2023 0

 நீங்கள் கற்பிப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்தால், ஆன்லைன் வகுப்பெடுக்கலாம். ஆன்லைனில் கற்பிக்க முடியாது என நீங்கள் நினைத்தால், அக்கம்பக்கத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஆஃப்லைன் வழியிலும் கற்பிக்கலாம். இப்போதெல்லாம் வகுப்பெடுப்பது நல்ல வருமானம். மேலும் குழந்தைகளுடன் நேரம் நன்றாக கழியும்.

சமூக ஊடகங்களின் வருகைக்குப் பிறகு, மார்க்கெட்டிங் முறைகள் வேகமாக மாறிவிட்டன. அதில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மிகவும் பிரபலமானது. பல வகையான பிரபலங்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் விளம்பரத்திற்காக டிஜிட்டல் மார்க்கெட்டிங் உதவியை நாடுகின்றன. மடிக்கணினியின் உதவியுடன் இந்த வேலையை எங்கிருந்தும் செய்ய முடியும் என்பது இதன் சிறப்பு.

குறைந்த முதலீட்டில் ஆன்லைன் வணிகத்தைத் தொடங்க விரும்பினால் ஃப்ளிப்கார்ட், அமேசான், மீஷோ போன்ற இணையதளங்கள் மூலம் உங்கள் தயாரிப்புகளை விற்கலாம். உங்கள் தயாரிப்புகளின் விலையைப் பொறுத்து, நியாயமான தேவை இருக்கும்.

இன்று செக்யூரிட்டிகள், துப்புரவுப் பணியாளர்கள், உதவியாளர்கள், அனைத்து வகையான தொழில்நுட்பப் பணியாளர்கள் என எல்லாவற்றிற்கும் வேலை வாய்ப்பு ஏஜென்சிகள் மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறது. நீங்கள் விரும்பினால், வீட்டிலேயே ஒரு அறையில் இருந்து வேலை வாய்ப்பு நிறுவனத்தைத் தொடங்கலாம். இந்த சேவைக்காக பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்.

நீங்கள் எழுத ஆர்வமாக இருந்தால் அல்லது இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர வேறு சில மொழிகளில் புலமை இருந்தால், நீங்கள் வீட்டில் இருந்து கண்டெண்ட் ரைட்டிங் அல்லது மொழிபெயர்ப்பு வேலை செய்யலாம். இந்த வேலை நல்ல பணத்தையும் தருகிறது. இணையத் தொடர்கள், திரைப்படங்கள், தொடர்கள் ஆகியவற்றிற்கான மொழிபெயர்ப்பு ஸ்கிரிப்ட்களையும் எழுதலாம்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. காத்திருக்கு நிர்வாக உதவியாளர் பதவி: விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

October 02, 2023 0

 Nagapattinam District Job Alerts: நாகப்பட்டினம் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் வழியாக திட்டங்கள் மற்றும் நிர்வாக உதவியாளர் (Programme cum Administrative Assistant) பணியிடம் புதிதாக தோற்றுவிக்கப்பட்டு உள்ளது. அப்பணியிடத்தை ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்காலிக ஊழியரை பணியமர்த்த தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும்  உள்ளவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.

இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது எனவும், வரும் காலங்களில் பணிநிரந்தரம் செய்யப்படாது என்று தெரிவிக்கப்படுகிறது.

ஊதியம்: ஒப்பந்த மாத ஊதியமாக ரூ.12,000- வழங்கப்படும்.

அடிப்படைத் தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

முன் அனுபவம்: தேசிய நலக்குழுமம் மற்றும் சுகாதார திட்டங்கள் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக MS Office மென்பொருளில் சரளமாக பணியாற்றுவதற்கான ஓராண்டு முன்அனுபயம் பெற்றிருக்க வேண்டும். கணக்குப்பதிவியல் மற்றும் கடித வரைவுகளில் நல்ல திறமைகள் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரருக்கு 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஆள்சேர்க்கை அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், மாவட்ட ஆட்சியரக வளாகம், முதல் நுழைவுவாயில், நாகப்பட்டினம் - 611 003, தொடர்புக்கு - 04635 253036 என்ற முகவரிக்கு 19/09/2023 முதல் 02/10/2023 மாலை 5.00 மணி வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

நெல்லையில் ஊர்க்காவல் படையில் வேலை.. முழு விவரம் இதோ..

October 02, 2023 0

 திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் உத்தரவுப்படி திருநெல்வேலி மாநகர ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள துணை வட்டார தளபதி பதவிக்கு ஆள் தேர்வு செய்யப்பட உள்ளது. அதற்கு நல்ல சமூக அந்தஸ்தில் உள்ள நபர்கள் தனியார் நிறுவனத் தொழில் அதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர காவல் தரப்பில் வெளியான செய்தி குறிப்பில், “பொதுநல சேவையும் தன்னார்வ தொண்டு செய்ய விருப்பமும் உள்ளவர்களாக இருக்க வேண்டும். கீழ்கண்ட சான்றிதழை தயார் செய்து பாளையங்கோட்டை மாநகர ஊர்க்காவல் படை அலுவலகத்தில் 25.10.2023 காலை 10 மணி முதல் 31.10.2023 மாலை 6 மணிக்குள் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த வேலைக்கு தகுதிகளாக பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 வயதுக்கு குறையாமலும் 50 வயதுக்கு மிகவும் இருக்க வேண்டும். திருநெல்வேலி மாநகர எல்லைக்குள் குடியிருக்க வேண்டும்.

இதற்கான ஆவணங்களாக பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கலர், கல்வி தகுதி சான்று (அசல் மற்றும் ஒரு சான்றொப்பமிட்ட நகல்), ஆதார் அட்டை (அசல் மற்றும் ஒரு சான்றொப்பமிட்ட நகல்), இருப்பிட சான்று (அசல் மற்றும் ஒரு சான்றொப்பமிட்ட நகல்), மருத்துவத் தகுதிச் சான்று (அரசு மருத்துவரிடம் பெற்றிருக்க வேண்டும்), சுயவிவர படிவம் ஆகியவற்றை சமர்ப்பிக்கவேண்டும்” என கேட்டுக்கொள்ளப்படுகிறது.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

September 29, 2023

BOB வங்கி பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

September 29, 2023 0

 

BOB வங்கி பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

BOB Capital Markets Ltd ஆனது IT Support Executive, IT programmer, JD- Database, JD – Insti Trader, JD – Institutional Equity Sales பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது நீட்டிக்கப்படுள்ளது. எனவே தகுதியனவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

BOB கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Post Graduate, with preference for MBA /CFA / CA முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

அனுபவம்:

5+ ஆண்டுகள் தகுதி அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதி விவரங்களை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து careers@bobcaps.in என்ற இணைய முகவரி மூலம் முதலில் 27.09.2023 வரை வழங்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 03.10.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பதிவுகளை விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

SDCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.50,000/- சம்பளம் !

September 29, 2023 0

 

SDCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.50,000/- சம்பளம் !

SDCL ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள General Manager, Assistant Manager பணிக்கென பல்வேறு காலிப் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

SDCL காலிப்பணியிடங்கள்:

SDCL நிறுவனத்தில் தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி General Manager, Assistant Manager பணிக்கென 04 காலிப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SDCL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது 35 முதல் 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SDCL கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பல்கலைக்கழகத்தில் B.E/B.Tech, CA / ICWA / MBA, Post Graduate degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

SDCL ஊதிய விவரம்:

தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.50,000/- முதல் ரூ. 2,80,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SDCL தேர்வு செய்யப்படும் முறை :

திறமையுள்ள நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SDCL விண்ணப்பிக்கும் முறை :

பதிவு செய்யும் நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரி மூலம் (26.10.2023) இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

BEL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.40,000/- ஊதியம்!

September 29, 2023 0

 

BEL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.40,000/- ஊதியம்!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Trainee Engineer I, Project Engineer I பணிகளுக்கென 18 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Bharat Electronics Limited காலிப்பணியிடங்கள்:

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Visiting Medical Officer பணிக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BEL வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களின் வயதானது 28 முதல் 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Bharat Electronics Limited கல்வி தகுதி:

பணிபுரிய ஆர்வம் உள்ள நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BE, B.Tech பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஊதிய விவரம்:

தேர்வாகும் நபர்களுக்கு ரூ.30,000/- முதல் ரூ.40,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

Bharat Electronics Limited தேர்வு செய்யப்படும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் Written Test, Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

BEL விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு விரைவாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

CIPET நிறுவனத்தில் Lecturer வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.35,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

September 29, 2023 0

 

CIPET நிறுவனத்தில் Lecturer வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.35,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

CIPET Institute of Petrochemicals Technology ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Lecturer பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Bachelor’s degree / Master’s degree / M.E / M. Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணி குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CIPET காலிப்பணியிடங்கள்:

CIPET வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Lecturer பணிக்கான 2 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Lecturer கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s degree / Master’s degree / M.E / M. Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

CIPET வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Lecturer ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.30,000/- முதல் ரூ.35,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

CIPET தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு 09.10.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

IT துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க || ஜாக்பாட் வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!

September 29, 2023 0

 

IT துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க || ஜாக்பாட் வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!

IBM நிறுவனமானது அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Application Developer: Cloud Full Stack பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

IBM காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Application Developer: Cloud Full Stack பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Application Developer கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

IBM வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Product Manager ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

IBM தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news