Agri Info

Adding Green to your Life

October 12, 2023

இந்துசமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு... ரூ. 50,000 வரை சம்பளம்... முழு விவரம்..

October 12, 2023 0

 தமிழ்நாட்டில் உள்ள இந்து திருக்கோயில்களை இந்து சமய அறநிலையத் துறை நிர்வகித்து வருகிறது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் 46,020  திருக்கோயில்கள் உள்ளன. இந்த திருக்கோயில்களில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு அவ்வப்போது ஆட்சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

அந்த வகையில்,  திருச்சி நகரிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ள  சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுளளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவஞ்சல் மூலம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 25.10.2023 மாலை 05.45 மணி வரை ஆகும்.

பணியிடத்தின் பெயர்ஊதிய விகிதம்காலிப் பணியிடங்களின் எண்ணிக்கைகல்வித் தகுதி
காவலர்15,900-50,40025தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
காவலர் (தொகுப்பூதியம்)10,00025தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழ்காணும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்:

விண்ணப்பதாரர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்;

விண்ணப்பதாரர் 01.07.2023-ம் தேதி அன்று, 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்;

ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், அந்தந்த பதவிக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்;

விண்ணப்பத்துடன் முகவரிச் சான்று, பிறந்தநாள் குறித்த சான்று, சாதிச் சான்று நகல், கல்வித் தகுதிக்கான சான்றிதல்களின் நகல், அரசு மருத்துவரிடமிருந்த பெறப்பட்ட உடற்தகுதி சான்றிதழ், குற்றவழக்கு ஏதும் இல்லை என்பதற்கான காவல்துறை சான்றிதழ், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை போன்ற பிற ஆவணங்களையும் சேர்த்து அனுப்பப்பட வேண்டும்;

திருக்கோயிலால் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதர நிபந்தனைகளை திருக்கோயில் அலுவல கத்திலும் அல்லது www.tnhrce.gov.in மற்றும் samayapurammariamman.hrce.tn.gov.in என்ற இணையதளங்களிலும் அறிந்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பங்களை மேற்படி இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உறையில், விண்ணப்பிக்கும் பதவியைத் தெளிவாக குறிப்பிட்டு உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம், மண்ணச்சநல்லூர் வட்டம்,   திருச்சிராப்பள்ளி மாவட்டம், 621- 112. தொலைபேசி எண் : 04312670460 என்ற முகவரிக்கு நேரிலோ அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும் ரூ.25/- மதிப்புள்ள தபால் தலை ஒட்டி அனுப்ப வேண்டும். வேலைவாய்ப்பு அறிக்கையை பதிவிறக்கம் செய்ய இந்தஇணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

மீம்ஸ் கிரியேட்டரா நீங்க? மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் சூப்பர் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!

October 12, 2023 0

அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இந்த காலிப்பணியிடங்கள் வெளியாதார முறையில் (Out Sourcing) நியமனம் செய்யப்பட உள்ளதாகவும், முற்றிலும் தற்காலிகமானது என்றும்,  தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியிடம்: மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

திடக்கழிவு மேலாண்மை & சுகாதாரம்  (Solid Waste Management & Sanitation Expert) :

பணியிடங்கள் :  2

மாதாந்திர ஊதியம் - ரூ. 35,000

திரவக்கழிவு மேலாண்மை (Liquid Waste Management Expert)

பணியிடம் : 1

மாதாந்திர ஊதியம் - ரூ. 35,000

இந்த இரண்டு பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், இளங்கலை சுற்றுச்சூழல் பொறியியல் பட்டம் / பொறியியல் (Civil ) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், 1- 2 பணி அனுபவம் இருத்தல் வேண்டும்.

திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் கண்காணித்தல் (Planning, Convergence & Monitoring) : 

பணியிடம்:  1;

மாதாந்திர ஊதியம் - ரூ. 35,000

பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசால் இணைக்கப்பட்ட / அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது பல்கலைகழகத்தில் B.Tech/MBA/MSc. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தகவல், கல்வி மற்றும் தொடர்பு (IEC Consultants) :

பணியிடங்கள் - 2;

மாதாந்திர ஊதியம் - ரூ. 35,000

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், புகழ்பெற்ற/ அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் மக்கள் தொடர்பு / ஊடக பிரிவில் முதுகலை பட்டம் அல்லது அதற்கு சமமான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் 2,3 வருட பணி அனுபவம் இருத்தல் வேண்டும். அரசாங்க அதிகாரிகள், கல்வியார்கள், சமூக ஊடகங்களில் செல்வாக்கு உள்ளவர்களுடன் தொடர்பு கொள்வது. தேவைப்படும் சூழலில் பணிபுரியும் திறன் பெற்றிருத்தல் வேண்டும். கணினியில் MS Word, Power Point. Adobe Photoshop தெரிந்திருக்க வேண்டும்.

வீடியோ தயாரித்தல், மீம் தயாரித்தல், சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் உருவாக்குதல் போன்றவற்றில் அனுபவம் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முன்மாதிரியாக எழுதும் நிறன். ஒருயொருக்கொருவருடன் தொடர்பு கொள்ளுதல், விளக்கவுரை அளிக்கும் திறன், தமிழ் கலாச்சரங்களை புரிந்துகொள்ளுதல் ஆகியவை பெற்றிருத்தல் வேண்டும். இப்பனிக்கு மாத ஊதியம் ரூ.25,000/- வழங்கப்படும்.

மேற்காணும் அனைத்துப் பணிகளுக்கும் வயது 30-க்குள் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?

சுயவிவரக் குறிப்புகளுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ இணை இயக்குனர்/திட்ட இயக்குனர்,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட ஆட்சியரகம் அரியலூர்  என்ற முகவரிக்கு 15.10.2023 -க்குள் அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

பேற்படி பணிகள் மற்றும் இதர சந்தேகங்களை அலுவலக வேலை நாட்களில் அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் நேரில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். ஆள்சேர்க்கை அறிக்கையை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news 

எந்த தேர்வும் கிடையாது: அரசு போக்குவரத்துக் கழகத்தில் 335 காலியிடங்கள் - உடனே விண்ணப்பியுங்கள்

October 12, 2023 0

 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் இயந்திரவியல் பாடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்ளுக்கு  ஒரு வருட  தொழில் பழகுநர் பயிற்சி  காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலியிடங்கள் விவரம்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்பட்டப்படிப்பு தொழில் பழகுநர் பயிற்சிபட்டயபடிப்பு தொழில் பழகுநர் பயிற்சிமொத்த காலியிடங்கள்
விழுப்புரம் மண்டலம்702696
கோயம்பத்தூர் மண்டலம்346296
நாகராக்கோயில் மண்டலம்301040
தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து222244
சேலம் மண்டலம்092029
எம்டிசி - சென்னை101727
தருமபுரி மண்டலம்022123
திருநெல்வேலி மண்டலம்070714
மொத்தம்150185335

பொறியியல் துறை அல்லாதோர் தொழில் பழகுநர் பயிற்சி

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்பட்டப்படிப்பு தொழிற்பயிற்சி
நாகர்கோயில்20
அரசு விரைவு போக்குவரத்துக் கழகம்09
திருநெல்வேலி53
மொத்தம்82

கல்வி தகுதி:  பட்டப்படிப்பு தொழில் பழகுநர் பயிற்சி காலியிடத்திற்கு விண்ணப்பிக்க இயந்திரவியல், தானியியங்கிவியல் துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பட்டயப்படிப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தொடர்புடைய துறைகளில் பட்டயம் பெற்றிருக்க வேண்டும். பொறியியல் துறை அல்லாதோர் பிரிவுக்கு பிஏ/பி எஸ்சி.,/ பி.காம்/ பிபிஏ/ பிசிஏ  ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2019, 2020, 2021, 202,  2023 ஆகிய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் மட்டுமே இந்த பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத ஊதியம்:   ஒவ்வொரு துறைக்கும் குறிப்பிட்டுள்ளபடி கல்வி மற்றும் தொழில்நுட்ப தகுதியின் அடிப்படையில் குறைந்த பட்ச உதவித் தொகை நிர்ணயிக்கப்படும். அதன்படி, பட்டப்படிப்பு தொழில் பழகுநர் பயிற்சி பதவிக்கு மாத உதவித் தொகையாக ரூ. 9000 வழங்கப்படும். பட்டயப்படிப்பு காலியிடத்திற்கு மாத உதவித் தொகையாக ரூ. 8000 வழங்கப்படும். பொறியியல் துறை அல்லாதோர் பட்டபடிப்பு காலியிடத்திற்கு மாதம் ரூ. 9000 உதவித் தொகையாக வழங்கப்படும்.

தேர்வு முறை: இதற்கு எவ்வித எழுத்துத் தேர்வும் நடத்தப்படாது. அந்தந்த பதவிக்கு கோரப்பட்ட  குறைந்தபட்ச கல்வி தகுதியில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி? ஆன்லைன் மூலம்  மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படும். https://boat-srp.com என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் அக்டோபர்  10 வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆள்சேர்க்கை அறிக்கையை பதிவிறக்கம் செய்து கொள்ள இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

SBI வங்கியில் 439 காலிப்பணியிடங்கள்: விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

October 12, 2023 0

 

439 சிறப்பு அதிகாரி காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடுவை பாரத ஸ்டேட் வங்கி நீட்டித்துள்ளது.  ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

காலியிடங்கள் விவரம்: இந்த ஆட்சேர்ப்பின் மூலம் 439 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், பொதுப் பிரிவினருக்கு 240 இடங்களும் , ஓபிசி பிரிவினருக்கு 94 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவருக்கு 30 இடங்களும் , 53 இடங்கள் பட்டியல் இனத்தை சேர்ந்தவருக்கும், 22 இடங்கள் பட்டியல் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி: கணினி அறிவியல்/ தகவல் தொழில்நுட்பம் / மின்னணுவியல்/ மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்/ மென்பொருட் பொறியியல் அல்லது அதற்கு சமமான துறைகளில் பி.இ. / பி.டெக் அல்லது எம்சிஏ. அல்லது எம்.டெக்/எம்.எஸ்சி பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

மொத்த 45 பதவி வகைமையின் கீழ் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஒவ்வொரு காலியிடங்களுக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, பதவி முன்னனுபவம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பணியாளர் தேர்வு அறிவிப்பில் (ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ்) தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, விண்ணப்பிக்க விரும்புவோர், ஆள்சேர்க்கை அறிவிக்கையை பதிவிறக்கம் செய்து கவனமாக வாசிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

முக்கியமான தேதிகள் : ஆன்லைன் எழுத்துத் தேர்வானது 2023 டிசம்பர்/ 2024 ஜனவரி மாதத்திலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தகுதி பெறும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வுக்கு 70 சதவிகித விழுக்காடு மதிப்பெண்களும், நேர்காணல் தேர்வுக்கு 30 சதவிகித விழுக்காடு மதிப்பெண்களும் எடுத்துக் கொண்டு இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் : இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ .750/- ஆகும். பட்டியலின, பழங்குடியின, மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி : இதற்கான விண்ணப்பங்களை பாரத ஸ்டேட் வங்கியின் https://bank.sbi/web/careers/current-openings OR https://www.sbi.co.in/web/careers/current-openings என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும்

RECRUITMENT OF SPECIALIST CADRE OFFICERS IN STATE BANK OF INDIA ON REGULAR BASIS ADVERTISEMENT No. CRPD/SCO/2023-24/14

அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியை தேர்ந்தெடுத்து பதிவு செய்யவும். பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும். விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பிறகு, அந்த பக்கத்தை சமர்ப்பிக்கவும். எதிர்கால பயன்பாட்டிற்காக இந்த படிவத்தின் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்... 2250 கிராம சுகாதார செவிலியர் பணி - உடனே அப்ளை பண்ணுங்க!

October 12, 2023 0

 தமிழ்நாடு பொது சுகாதார சார்நிலை பணிகளில் காலியாக உள்ள 2250 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிக்கையை மருத்துவப் பணியாளர் தேர்வு  வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த காலிப்பணியிடங்களுக்கு பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் .

காலியிடங்கள்: 2,250

கல்வி தகுதி: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்குநரால் வழங்கப்பட்ட 18 மாத கால பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (அல்லது) 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் இரண்டாண்டுகளுக்கான துணை செவிலியர் (auxiliary nurse midwife) அல்லது பல்நோக்கு சுகாதாரப் பணியாளருக்கான பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு செவிலியர்மற்றும் பேறுகால மருத்துவப்பணிக்கான கவுன்சிலில் பதிவு செய்திருத்தல் வேண்டும்.

வயது வரம்பு: இந்த காலிப்பணியிடங்களுக்கான வயது வரம்பு, முற்பட்ட வகுப்பினருக்கு 42 வயது எனவும், இதர பிரிவினருக்கு  அதிகபட்ச வயது வரம்பில் விலக்கு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விகிதம்: சம்பள நிலை - 8  (ரூ .19,500 - 62,000)

தேர்வு முறை: இந்த பதவிக்கு எவ்வித எழுத்துத் தேர்வும், நேர்காணல் தேர்வும் நடத்தப்பட மாட்டாது.  நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதியில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி தேர்வு பட்டியல் தயாரிக்கப்படும். அதன்படி, சான்றிதழ்/ டிப்ளமா படிப்புக்கு 50% மதிப்பெண்ணும், 12ம் வகுப்பு தேர்ச்சிக்கு 30% மதிப்பெண்ணும், 10ம் வகுப்புத் தேர்ச்சிக்கு 20% மதிப்பெண்ணும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு தேர்வு முறை நடைபெறும்.

மேலும், கொரோனா தொற்று மேலாண்மையில் குறைந்தபட்சம் 100 நாட்கள் சிகிச்சை பணிகளை நிறைவு செய்த கிராம சுகாதார செவிலியர் செவிலியருக்கு இந்த பணியமர்த்துதலில் சிறப்பு மதிப்பெண் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 6 முதல் 12 மாதங்கள் கொரோனா பணியை நிறைவு செய்தவர்களுக்கு 2 மதிப்பெண்ணும், 12 முதல் 18 மாதங்கள்   நிறைவு செய்தவர்களுக்கு 3 மதிப்பெண்ணும், 18 முதல் 24 மாதங்கள் நிறைவு செய்தவர்களுக்கு 4 மதிப்பெண்ணும், 24 மாதங்களுக்கு மேலாக பணி நிறைவு செய்தவர்களுக்கு 5 மதிப்பெண்ணும் அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 600 ஆகும். பட்டியலினத்தவர்/ பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகள் ரூ. 300 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தின்  www.mrb.tn.gov.inஎன்ற அதிகாரபூர்வ இணையதளத்தின் வாயிலாகவே மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

2250 கிராம சுகாதார செவிலியர் பணி ஆள்சேர்க்கை அறிவிக்கையை இங்குபதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அனைத்து அசல் கல்விச்சான்றுகள், முன்னுரிமைப் பதிவு தொடர்பான சான்று, சாதிச்சான்று, தமிழ்வழி பயின்றதற்கான சான்று, கொரோனா பணி நிறைவு செய்த சான்று, தடையின்மை சான்று, ஆகியவற்றுடன் எதிர்வரும்  அக். 31ம் தேதிக்கும் விண்ணப்பிக்க வேண்டும்.

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய ஒரு வாய்ப்பு

October 12, 2023 0

 

திண்டுக்கல் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் திண்டுக்கல் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்திலும் பழனி அரசு மருத்துவமனையில் புதிதாக செயல்பட உள்ள சகி -ஒருங்கிணைந்த சேவை மையத்திலும் (Saini-One Stop Centre) மையத்தின் நிர்வாகி, மூத்த ஆலோசகர் , தகவல் தொழில்நுட்ப பணியாளர். வழக்குப் பணியாளர்-1(மற்றும்)2 பாதுகாவலர்-1(மற்றும்)2 பல்நோக்கு உதவியாளர்- 1(மற்றும்)2 ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன

திண்டுக்கல் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளர் பாதுகாவலர், பல்நோக்கு உதவியாளர் என 3 பணியிடங்களும், பழனி அரசு மருத்துவமனை சகி-ஒருங்கிணைந்த சேவை மையத்தில் மைய நிர்வாகி மூத்த ஆலோசகர் - தகவல் தொழில்நுட்ப பணியாளர் வழக்குப் பணியாளர் -1(மூன்று பணியிடம் ), வழக்குப் பணியானார் 2(மூன்று பணியிடம் ), பாதுகாவலர்-1(மற்றும்)2. பல்நோக்கு உதவியாளர் -1(மற்றும்}2 ஆகிய பணியிடங்கள் என 13 பணியிடங்களும் என மொத்தம் 16 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

மைய நிர்வாகி பதவிக்கு ரூ.30,000, மூத்த ஆலோசகர் பதவிக்கு ரூ 20.000, தகவல் தொழில்நுட்ப பணியான ருக்கு ரூ 18,000, வேழக்குப் பணியாளர் - 10)2 பணியிடத்திற்கு ரூ.15,000, பாதுகாவலர்-1(மற்றும்)2 பணியிடத்திற்கு ரூ .10,000. பல்நோக்கு உதவியாளர் – 1மற்றும்)2 பணியிடத்திற்கு ரூ 5400 என்ற வகையில் மாதந்தோறும் ஒப்பந்த ஊதியம் வழங்கப்படும்.

இப்பதவிக்கான விண்ணப்பம் மற்றும் கல்வித்தகுதி உள்ளிட்ட தாவல்களை திண்டுக்கல் மாவட்ட dindigul.nic.in என்ற இணை தளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை \"மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம் . சமூக நலன் மற்றும் மகளி | உசிமைத்துறை. அறை எண் 89 (தரைதனம்), மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம் திண்டுக்கல் மாவட்டம் 624004\" என்ற முகவரிக்கு வரும் 30.10.2023-ஆம் தேதி மாலை 05.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

October 5, 2023

12ம் வகுப்புத் தேர்ச்சி போதும்: கணிணி இயக்குபவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

October 05, 2023 0

 வேலூர் மாவட்ட சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் இளைஞர் நீதிக்குழுமத்திற்கு (Juvenile Justice Board)  உதவியாளர் கலந்த கணிணி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator) பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.  முற்றிலும் தற்காலிக தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்படும் இந்த பதவிக்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (Senior Grade In Tamil and English). கணினி இயக்குவதில் டிப்ளமோ/சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பணியில் முன்னனுபவம் உள்ளோர்க்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது வரம்பு: 01.07.2023 அன்றுள்ளபடி 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்

தொகுப்பூதியம்: ரூ.11,916/- PM.

மேற்குறிப்பிட்ட தகுதிவாய்ந்த நபர்கள் இப்பதவிக்கான விண்ணப்பம் மற்றும் தகவல்களை தகவல்களை வேலூர் மாவட்ட இணையத்தில் http:/vellore.nic.in இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பங்களை உரியசான்றுகளின் ஒளி நகலுடன் வரும் 16.10.2023 மாலை 5.45 மணிக்குள் கீழ்குறிப்பிட்ட முகவரிக்கு வந்து சேரும் வண்ணம் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அண்ணாசாலை, வேலூர் - 632 001 ஆகும்.

16ம் தேதி மாலை 5.45 மணிக்குள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் உரியசான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை செய்து சம்பாதிக்கலாம்.. உடனே அப்ளை பண்ணுங்க!

October 05, 2023 0

 ஆவின் நிறுவனத்தின் ஐஸ்கிரீம்களை விற்பனை செய்ய விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனம் ஆவின் ஜங்ஷன் என கடைகள் மூலம் ஆவின் தயாரிப்பான ஐஸ்கிரீம் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. தற்போது இந்த ஆவின் ஜங்ஷன்கள் விநியோகஸ்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டு ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது ஐஸ்கிரீம் விற்பனை செய்ய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அக்.2 அன்று விருதுநகர் மாவட்ட ஆவின் பொதுமேலாளர் வெளியிட்ட செய்தி குறிப்பில் விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் ஆவின் ஐஸ்கிரீம் வகைகளை விநியோகம் செய்வதற்கு மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் மற்றும் முழு விவரங்கள் அறிய திருவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட ஆவின் அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள் அக்.17. மேலும் கூடுதல் விவரங்களுக்கு 9894204423, 784595109, 9629178789 என்ற ஆவின் தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.



🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தேனி ஊர் காவல் படை பணிக்கு ஆட்கள் தேர்வு.. எப்படி அப்ளை பண்ண வேண்டும்?

October 05, 2023 0

 தேனி மாவட்டத்தில் சமூக சேவையில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் ஊர்க்காவல்படை பணியில் சேர்ந்து பணி செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் விண்ணப்பம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஊர்க்காவல் படை :

காவல்துறையில் பணியில் சேர வேண்டும் என ஆர்வத்துடன் உள்ள இளைஞர்களுக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் . தேனி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் காலி பணியிடங்கள் உள்ளதால் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான இளைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

காலிப் பணியிடம் :-

தேனி மாவட்ட ஊர்க்காவல்படையில் காலியாக உள்ள 41 ஆண்கள் மற்றும் 02 பெண்கள் காலிப்பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற அல்லது தோல்வியடைந்த 20 வயது பூர்த்தியடைந்த சமூக சேவையில் ஆர்வமுள்ள ஆண் மற்றும் பெண் ஆகிய இரு பாலரும் விண்ணப்பம் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊர்க்காவல்படையில் சேர ஆர்வமுள்ளவர்கள், தேனி மாவட்ட

காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம் முதல் தளத்தில் செயல்படும் ஊர்க்காவல்படை அலுவலகத்தில் 05.10.2023 & 06.10.2023 ஆகிய இரண்டு நாட்களில் வழங்கப்படும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தினை முழுவதும் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து வரும் 11.10.2023-க்குள் கீழ்கண்ட முகவரிக்கு தபால் அல்லது பதிவுத்தபால் மூலம் அனுப்ப வேண்டும் எனவும், பின்பு விண்ணப்பதாரர்களை வரவழைத்து பின்னர் அறிவிக்கப்படும் நாளில் தேனி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தகுதியானவர்களை தேர்வு செய்து பின் 45 நாட்கள் அடிப்படை பயிற்சி வழங்கி ஊர்க்காவல்படையில் பணியமர்த்தப்பட உள்ளனர்.

அவ்வாறு பணியமர்த்தப்படுபவர்களுக்கு

ஒரு மாதத்தில் 05 நாட்கள் பணி வழங்கப்படும். இந்த 05 நாட்கள் பணிக்கு நாளொன்றுக்கு ரூபாய் 560 வீதம் ஊதியமாக ரூபாய் 2800 வழங்கப்படும் என தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே தெரிவித்துள்ளார்.

அலுவலக முகவரி :-

வட்டார தளபதி, மாவட்ட ஊர்க்காவல்படை அலுவலகம், தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம் - முதல் தளம், தேனி, தேனி மாவட்டம்-625531. என்ற முகவரிக்கு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தபால், பதிவுத்தபால் மூலம் அனுப்ப கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது .


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

எச்சரிக்கை..! அதிகம் சாப்பிட்டால் உங்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் காய்கறிகள்..

October 05, 2023 0

 டயட் சார்ந்த உணவுகளுக்கும், உடல் எடை குறைக்கவும், உடல் ஆரோக்கியத்திற்கும் காய்கறிகளே பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் சில காய்கறிகளை நாம் அதிகமாக சாப்பிடும் போது நம் உடலுக்கு பிரச்சனைகள் உண்டாகிறது. அப்படியான சில காய்கறிகளை பற்றி தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

குடை மிளகாய் : குடை மிளகாய், உருளைக் கிழங்கு, கத்தரிக்காய் போன்ற காய்கறிகள் உடலுக்கு அழற்சியை உருவாக்கும் என பல ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். நைட்ஷேட் காய்கறிகள் என அழைக்கப்படும் இதை அதிகமாக சாப்பிடும் போது இதய நோய், புற்றுநோய், நீரிழிவு நோய் ஆகியவை வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஆனால் இது தொடர்பாக நடந்து வரும் ஆய்வு இன்னும் முழுமையடையவில்லை. இந்த நைட்ஷேட் காய்கறிகளை சாப்பிடும் போது உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை என்றால் தொடர்ந்து சாப்பிடுங்கள்.

ப்ரோகோலி : டயட் சார்ந்த உணவுகளில் முக்கியமாக இடம்பெரும் ப்ரோகோலி மிகவும் சத்துள்ள காய்கறியாக கருதப்படுகிறது. ஆனால் இதை அதிகமாக சாப்பிடுவதால் வயிறு உப்பசம் ஏற்படும் ஆபத்து அதிகமுள்ளது.

பிரஸ்ஸல் ஸ்ப்ரொட்ஸ் (கிளைக்கோஸ்) : ப்ரோகோலி போல் இந்த பிரஸ்ஸல் ஸ்ப்ரொட்ஸ் காய்கறியும் வாயுவை உண்டாக்க கூடியது. இதற்கு காரணம் இந்த காய்கறியில் அதிகளவு ரஃபினோஸ் மற்றும் சல்பேட் இருக்கிறது. இது காரத்தன்மையையும் அதிகரிக்கிறது.

பாட்டிலில் அடைத்து விற்கப்படும் காய்கறிகள் : இந்தக் காய்கறிகளில் அதிகளவு உப்பு மற்றும் சுவையூட்டிகள் இருப்பதால், உங்கள் செரிமானத்திற்கு இடையூறு விளைவிப்பதோடு வயிற்றுப் பிரச்சனைகளையும் உண்டாக்கும். மேலும் இதில் சோடியம் அளவு அதிகப்படியாக இருக்கும். இது நிச்சயம் உங்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும்.

செலரி : செலரியை சாதாரணமாக மென்று சாப்பிட்டால் உடலில் உள்ள கலோரிகளை குறைக்கலாம் என்று கூறினாலும் இதில் எந்த ஊட்டச்சத்துகளும் கிடையாது. மேலும் இதில் 68 வகையான பூச்சிக்கொல்லிகளின் எச்சம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.

சோளம் : பலரும் விரும்பி சாப்பிடும் சோளத்தில் மரபணு மாற்றம் செய்யபட்டதன் காரணமாக, அதை சாப்பிடும்போது நம் உடலுக்கு பரிட்சியம் இல்லாத புரதம் கிடைக்கிறது. இது பலருக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

கத்தரிக்காய் : இதன் சுவைக்காகவே இறைச்சி உணவுகளுக்கு மாற்றாக அனைவராலும் விரும்பப்படுகிறது கத்தரிக்காய். ஆனால் இதிலிருக்கும் சுவைதான் பிரச்சனையே. இது நம் உடலில் கொழுப்பு, கலோரி மற்றும் சோடியம் அளவை அதிகரிக்கிறது.

உருளைக் கிழங்கு : உருளைக் கிழங்கில் அதிகளவு பொட்டாசியம் மற்றும் விட்டமின் சி இருந்தாலும், இதன் தோலை சீவி, உப்பு சேர்த்து வறுத்தே நாம் சாப்பிடுகிறோம். இதன் காரணமாக இதிலுள்ள சத்துக்கள் எல்லாம் நமக்கு கிடைப்பதில்லை.

கீரைகள் : மிகவும் ஆரோக்கியமான கார்கறிகளில் ஒன்றாக கருதப்படும் கீரைகளில் அதிகளவு விட்டமின் ஏ மறும் விட்டமின் கே உள்ளது. மேலும் இதில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளும் உள்ளது. ஆனால் செயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட கீரைகளை உண்ணும் போது அதில் 50-க்கும் மேற்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளின் எச்சம் இருப்பதை மறந்து விடாதிர்கள்.

🔻 🔻 🔻 

தினமும் 3000 அடிகள் நடைபயிற்சி செய்வதால் சீராகும் இரத்த அழுத்தம்... புதிய ஆய்வில் தகவல்..!

October 05, 2023 0

 தினமும் 3000 அடிகள் நடைபயிற்சி மேற்கொள்வதால் இரத்த அழுத்தத்தில் ஏற்படக்கூடிய பாசிடிவான தாக்கங்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் வெளியான தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

நமது உடலில் இருக்கக்கூடிய உறுப்புகள் ஒவ்வொன்றும் மற்றொன்றுடன் தொடர்புடையவை. அந்த வகையில் பெரியவர்களில் ஆரோக்கியமான ரத்த அழுத்தத்தை பராமரிப்பது அவர்களை ஹார்ட் அட்டாக் மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகளுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கும். அன்றாடம் 3000 அடிகள் நடைப்பயிற்சியை இலக்காக கொள்ளும் பெரியவர்கள், அவர்களது ரத்த அழுத்தத்தை ஆரோக்கியமான அளவுகளில் பராமரிப்பார்கள் என்று ஒரு புதிய ஆய்வு கூறுகிறது.

ஜர்னல் ஆஃப் கார்டியோ வாஸ்குலர் டெவலப்மென்ட் அண்ட் திஸ் இஸ் திஸ் இஸ் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில், தினந்தோறும் குறைந்தப்பட்ச அளவாக 3000 அடிகள் நடப்பது பெரியவர்களில் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் என்று கூறுகிறது. மிகவும் எளிமையான அதே நேரத்தில் பிரபலமான உடல் செயல்பாடுகளில் ஒன்றான அன்றாட நடைபயிற்சி பெரியவர்களுக்கு ஹைப்பர் டென்ஷன் சார்ந்த பலன்களை அளிக்குமா என்பதை கண்டுபிடிப்பதற்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வுக்காக ஆராய்ச்சியாளர்கள் 68 முதல் 78 வயது வரை இருக்கக்கூடிய பெரியவர்களில் கவனம் செலுத்தினர். இவர்கள் ஆய்வில் பங்கு கொள்வதற்கு முன்பு தினமும் சராசரியாக 4000 அடிகள் நடைபயிற்சியை மேற்கொண்டனர்.

தினமும் 3000 அடிகள் நடைப்பயிற்சி செய்வது பெரியவர்களில் ஏராளமான பலன்களை அளிக்கக்கூடும் என்று இந்த ஆய்வு மூலமாக தெரிய வந்தது. இந்த ஆய்வில் பங்கு கொண்ட பங்கேற்பாளர்களின் சிஸ்டாலிக் மற்றும் டயாஸ்டாலிக் ரத்த அழுத்தம் சராசரியாக முறையே 7 மற்றும் 4 புள்ளிகள் குறைந்தன. மேலும் ஏற்கனவே ஆன்டி ஹைப்பர் சென்சிட்டிவ் மருந்துகளை எடுத்து வந்த 21 பங்கேற்பாளர்களில் சிஸ்டாலிக் ரத்த அழுத்தத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.

உடற்பயிற்சியானது மருந்துகளுடன் இணைந்து ஏராளமான பலன்களை அளிக்க கூடும் என்று இதற்கு முந்தைய ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டது. நாம் எவ்வளவு உடற்பயிற்சியில் ஈடுபடுகிறோம் என்பது இங்கு மிகவும் அவசியமாக கருதப்படுகிறது.

கடந்த சில வருடங்களாக நடை பயிற்சி காரணமாக பெறக்கூடிய நன்மைகள் பல ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஆகஸ்ட் மாதத்தில் யுரோபியன் ஜர்னல் ஆஃப் கார்டியாலஜியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் தினமும் 4000 அடிகள் நடப்பது எந்த ஒரு காரணத்திற்காக ஏற்படும் இறப்பின் அபாயத்தை குறைக்க உதவும் எனவும் மற்றும் 3 ஆயிரம் அடிகள் நடப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. நமது வாழ்க்கை முறையில் நாம் செய்யக்கூடிய எளிமையான சில மாற்றங்கள் நமது உடல் ஆரோக்கியத்தில் நீண்ட கால நன்மைகளை தர கூடும் என்று இந்த ஆய்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

🔻 🔻 🔻