Agri Info

Adding Green to your Life

November 20, 2023

இலவச தையல் பயிற்சி: நவம்பர் 30 க்குள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்

November 20, 2023 0

 

இலவச தையல் பயிற்சி: நவம்பர் 30 க்குள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்

சிதம்பரம் ரோட்டரி சங்கமும், டாக்டா் சபாநாயகா் நினைவு அறக்கட்டளையும் இணைந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களின் முன்னேற்றத்துக்காக 6 மாத இலவச தையல் பயிற்சியை நடத்த உள்ளன.

இதில் பங்கேற்க சிதம்பரம், சுற்றுவட்டார கிராமங்களைச் சாா்ந்த பெண்கள், எட்டாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தோச்சி பெற்ற அல்லது தோல்வுயுற்றவா்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியோா், 45 வயதுக்குட்பட்டவா்கள், ஆதரவற்றோா், விதவைகள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை வடக்கு வீதியில் கண்ணா எலும்பு சிறப்பு மருத்துவமனை எதிரில் மற்றும் இமேஜ் டைலா்ஸ் மாடியில் உள்ள ஸ்ரீமாருதி தையல் பயிற்சி நிலையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

 விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பா் 30-ஆம் தேதியாகும். மேலும் இது தொடா்பான விளக்கங்களைப் பெற 9715874617, 9842333268, 9944944061 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று சிதம்பரம் ரோட்டரி சங்கத் தலைவா் அரிதனராஜ், முன்னாள் தலைவா் இ.மஹபூப் உசேன் மற்றும் டாக்டா் சபாநாயகா் நினைவு அறக்கட்டளைத் தலைவா் பேராசிரியா் நடனசபாபதி ஆகியோா் தெரிவித்தனா்.



🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

நிப்ட்-டீ பயிற்சி மையத்தில் இலவச சணல் பொருள் உற்பத்தி பயிற்சி

November 20, 2023 0

 

நிப்ட்-டீ பயிற்சி மையத்தில் இலவச சணல் பொருள் உற்பத்தி பயிற்சி

வேலை வாய்பற்ற இளைஞர், இளம்பெண்களுக்கு, சணல் பொருட்கள் உற்பத்தி பயிற்சி அளிக்க, நிப்ட்-டீ நிட்வேர் பேஷன் இன்ஸ்டிடியூட் முடிவு செய்துள்ளது.திருப்பூர் நிப்ட்-டீ கல்லுாரி மற்றும், மத்திய, மாநில அரசு திட்டங்களில், இலவச பயிற்சி அளிக்கும் மையம், திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இயங்கி வருகிறது.

கடந்த, எட்டு ஆண்டுகளாக, 4,000 க்கும் அதிகமான இளைஞர், இளம்பெண்கள் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர்.தமிழக அரசின் திறன் மேம்பாட்டு கழகம், சணல் வாரியம் சார்பில், புதிய தொழில் பயிற்சிகள் விரைவில் துவங்க இருக்கிறது.

வேலை வாய்ப்பற்ற இளைஞர், இளம்பெண்கள், இல்லத்தரசிகள், இப்பயிற்சியில் பங்கேற்கலாம். குறிப்பாக, சணல் பொருட்கள் தயாரிப்பது குறித்து இலவசமாக பயிற்சி பெறலாம்.இதுகுறித்து நிப்ட்-டீ நிட்வேர் பேஷன் இன்ஸ்டிடியூட் மைய பொறுப்பாளர்கள் கூறியதாவது:இலவச குறுகியகால திறன் பயிற்சியில், தையல் பயிற்சியில், எட்டாம் வகுப்புக்கு மேல் பயின்ற, 18 முதல், 45 வயதுக்கு உட்பட்டவர் பங்கேற்கலாம்.

சணல் பொருட்கள் தயாரிப்பு பயிற்சியில், 10ம் வகுப்புக்கு மேல்படித்த, 18 முதல், 35 வயதுக்கு உட்பட்டவர் பங்கேற்கலாம். இலவச பயிற்சி பெறுவோருக்கு, வேலை வாய்ப்பும் உறுதி செய்து கொடுக்கப்படும்.

முதலில், பயிற்சிக்கான சேர்க்கையை முடித்த பிறகே, பயிற்சி துவங்கும் நாள் அறிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 88707 25111 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறினர்.


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ONGC நிறுவனத்தில் மாதம் ரூ.38,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது!

November 20, 2023 0

 

ONGC நிறுவனத்தில் மாதம் ரூ.38,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது!

ONGC நிறுவனத்தில் காலியாக உள்ள Consultant மற்றும் Surveyor பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 4 பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 27.11.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ONGC லிமிடெட் காலிப்பணியிடங்கள்:

Consultant மற்றும் Surveyor பதவிக்கு என 4 பணியிடங்கள் காலியாக உள்ளது. அதாவது Consultant – 3 பணியிடங்கள் மற்றும் Surveyorபதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

 வயது வரம்பு:

30.11.2023 தேதியின்படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 656 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தகுதி விவரங்கள்:
  • Consultant – நிலம் கையகப்படுத்தும் பணிகளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற ஓய்வு பெற்ற தாசில்தார். இதற்கு விண்ணப்பிக்கலாம்.
  • Surveyor – நிலம் கையகப்படுத்தும் வேலைகளில் போதுமான அறிவு கொண்ட ஓய்வு பெற்ற சர்வேயர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
  • தேர்வு செயல் முறை:

    மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 30.11.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    சம்பள விவரம்:
    • Consultant : ரூ.38,000/-
    • Surveyor : ரூ.22,000/-
    விண்ணப்பிக்கும் முறை:

    ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் தங்களின் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை துணை ஆவணம்(கள்)/சான்றிதழ்(கள்)/சான்றிதழ்(கள்) உடன் 27.11.2023க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    Download Notification 2023 Pdf



🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2023 – 317 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

November 20, 2023 0

 

IAF AFCAT வேலைவாய்ப்பு 2023 – 317 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய விமானப்படைக்கு (IAF) ஜனவரி 2025 முதல் தொடங்கும் விமானப்படை பொது நுழைவுத்தேர்வு (AFCAT) 1/2024 தொகுதி படிப்புக்கு 12 ஆம் வகுப்பு முடித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். IAF வேலைகளில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் afcat.cdac.in மேலும் கீழே உள்ள பிரிவில் நேரடி இணைப்பை வழங்கியுள்ளோம்.

IAF AFCAT காலிப்பணியிடங்கள்:
  • Flying Branch – 38 பணியிடங்கள்
  • Ground Duty (Technical) – 165 பணியிடங்கள்
  • Ground Duty (Non-Technical) – 114 பணியிடங்கள்

என மொத்தம் 317 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:
  • Flying Branch – Grade 12th with 50% Marks each in Physics and Maths & Graduation (60% marks)
  • Ground Duty (Technical) – Grade 12th with 50% Marks each in Physics and Maths & B.Tech (60% marks)
  • Ground Duty (Non-Technical) – Graduate (60% marks)
வயது வரம்பு:
  • Flying Branch – 20-24 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • Ground Duty (Technical) – 20-26 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பள விவரம்:

இதற்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.56100- 177500/- (Level-10) ஊதியம் வழங்கப்பட உள்ளது

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Written Test, DV, மற்றும் Medical Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

IAF AFCAT விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://afcat.cdac.in/AFCAT/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 30.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf 


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Air India நிறுவனத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு – டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

November 20, 2023 0

 

Air India நிறுவனத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு – டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் ஆனது Cabin Crew (Female) மற்றும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள பெண் விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Air India நிறுவன காலிப்பணியிடங்கள்:

Cabin Crew (Female) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Cabin Crew (Female) தகுதி விவரங்கள்:

அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/பல்கலைக் கழகத்திலிருந்து குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் 12 ஆம் வகுப்பை படித்திருக்க வேண்டும். தற்போதைய இந்திய பாஸ்போர்ட், பான் கார்டு மற்றும் ஆதார் அட்டை வைத்திருக்கும் இந்தியப் பெண்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆங்கிலம் மற்றும் இந்தியில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

புதியவர்களுக்கு 18-27 வயதுக்கு இடையிலும், அனுபவம் வாய்ந்த பணியாளர்களுக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விவரங்களுடன் நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நேர்காணல் ஆனது நவம்பர் 21ஆம் தேதி முதல் நவம்பர் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

Download Notification 1  Pdf
Download Notification 2  Pdf

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

JIPMER பல்கலைக்கழகத்தில் புதிய வேலை – சம்பளம்: 36,580/- || உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

November 20, 2023 0

 

JIPMER பல்கலைக்கழகத்தில் புதிய வேலை – சம்பளம்: 36,580/- || உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

JIPMER பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் Project Junior Research Fellow பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 28.11.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

JIPMER காலிப்பணியிடங்கள்:

Project Junior Research Fellow பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே JIPMER பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ளது.

Project Junior Research Fellow வயது:

இந்த JIPMER பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 30 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.

Project Junior Research Fellow சம்பளம்:

இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.36,580/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

Project Junior Research Fellow கல்வி:

Project Junior Research Fellow பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

JIPMER தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

JIPMER விண்ணப்பிக்கும் விதம்:

இந்த JIPMER பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் உள்ள Google Form-ஐ முழுமையாக பூர்த்தி செய்து 28.11.2023 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification Link
Online Application Form Link


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

CSB வங்கி வேலைவாய்ப்பு 2023 – Degree முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு !

November 20, 2023 0

 

CSB வங்கி வேலைவாய்ப்பு 2023 – Degree முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு !

கத்தோலிக்க சிரியன் வங்கி (CSB Bank) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பில் Sr. Officer – Liability Sales CA மற்றும் AM – Liability Sales பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் வழிமுறை போன்றவை எளிமையாக அனைவருக்கும் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

CSB வங்கி காலிப்பணியிடங்கள்:

Sr. Officer – Liability Sales CA மற்றும் AM – Liability Sales ஆகிய பதவிகளுக்கு என மொத்தம் 13 பணியிடங்கள் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

முன்னனுபவம்:

பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் அதிகபட்சம் 5 முதல் 8 வருடம் வரை அனுபவம் உள்ளவராகவும் அல்லது அனுபவம் இல்லாதவராகவும் இருக்கலாம்.

CSB Bank ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செய்யும் விதம்:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் உள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification 1  Pdf
Download Notification 2  Pdf


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

November 19, 2023

ரூ.2,08,700/- மாத சம்பளத்தில் NVS நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

November 19, 2023 0

 

ரூ.2,08,700/- மாத சம்பளத்தில் NVS நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Executive Engineer பணியிடங்களை நிரப்ப Navodaya Vidyalaya Samiti (NVS) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

NVS நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • NVS நிறுவனத்தில் Executive Engineer பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் காலியாக உள்ளது.
  • அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளில் Civil Engineering பாடப்பிரிவில் Graduate Degree முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
  • அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Pay Matrix Level – 07 / 10 என்ற ஊதிய அளவுகளின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 04 ஆண்டுகள் முதல் 07 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • 20.11.2023 அன்றைய தேதியின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு Level – 11 படி, ரூ.67,700/- முதல் ரூ.2,08,700/- வரை மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் இப்பணிக்கு எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NVS விண்ணப்பிக்கும் வழிமுறை:

Executive Engineer பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் applications.nvs@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 20.11.2023 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

Download Notification & Application Link


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

November 18, 2023

டிகிரி முடித்தவர்களுக்கு SBI வங்கியில் வேலைவாய்ப்பு.. மொத்தம் 8,283 காலிப்பணியிடங்கள்.!!

November 18, 2023 0

 ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள கிளர்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியிடங்கள்: 8,283

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு

வரதுவரம்பு: 20 முதல் 28 வயது வரை

சம்பளம்: ரூ. 17,900 – 47,920 வரை

விண்ணப்பிக்க கடைசி நாள்: 7-12-2023

கூடுதல் விவரங்களுக்கு – https://sbi.co.in/documents/77530/36548767/161123-JA+2023-Detailed+Advt.pdf/926d28be-7df8-36f3-7113-344404668498?t=1700129762521


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

மிதிவண்டி ஓட்டத் தெரியுமா? - ஊராட்சி ஒன்றிய அலுவகத்தில் நிரந்தர வேலை

November 18, 2023 0

 விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistants) பதவிக்கான ஆள்சேர்க்கை அறிவிக்கை வெளியாகியுள்ளது.

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் டிசம்பர் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிப்படைத் தகுதிகள்: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக, மிதிவண்டி ஒட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்
: ரூ. 15700 - 50000/- மற்றும் இதர படிகள்

வயது வரம்பு: பொதுப்பிரிவினருக்கு 32 வயதுக்கு மிகாமலும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு 34 வயதுக்கு மிகாமலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 37 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்

நிபந்தனைகள்: காலிப்பணியிங்களுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் விழுப்புரம் மாவட்டத்திற்கான https://virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சுயமுகவரியுடன் கூடிய தபால்தலை ரூ.30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை-1 (10x4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, சாதிச்சான்று முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் அலுவலக வேலை நாட்களில் ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், வத்திராயிருப்பு, விருதுநகர் மாவட்டம் என்ற முகவரிக்கு 07.12.2023 கிடைக்குமாறு மாலை 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். 

நேரில் கொண்டு வரப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுகொள்ளப்படமாட்டாது. 

தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த தகவல் பதிவஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

அண்ணா பல்கலைக்கழகத்தில் சூப்பர் வேலை!! மாதம் ரூ.35,000/- ஊதியம்!! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!!

November 18, 2023 0

 ண்ணா பல்கலைக்கழகத்தில் சூப்பர் வேலை!! மாதம் ரூ.35,000/- ஊதியம்!! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) Calibration Trainee, Junior Calibration Trainee பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: அண்ணா பல்கலைக்கழகம்

பதவி:

1.Calibration Trainee - 02

2.Junior Calibration Trainee - 01

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 03

பணியிடம்: சென்னை

கல்வித் தகுதி: இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் Diploma, Degree, BE, B.Tech , M.Sc உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: Calibration Trainee, Junior Calibration Trainee பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.8,000/- முதல் ரூ.35,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை:

*Interview (நேர்காணல்)

*Written Test (எழுத்துத் தேர்வு)

வயது வரம்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

கடைசி தேதி: 30.11.2023 ஆம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

Professional Assistant பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் https://www.annauniv.edu/nwsnew/ அல்லது https://annauniv.edu/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களை அணுகவும்.

மின்னஞ்சல் முகவரி: au.nhhid@gmail.com

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

AAI Consultant வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.75000/- வரை சம்பளம்!

November 18, 2023 0

 

AAI Consultant வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.75000/-  வரை சம்பளம்!

இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) Consultant பதவிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு 05.12.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.aai.aero/ இல் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் AAI Consultant  2023 அறிவிப்பை கவனமாகப் படித்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

AAI காலிப்பணியிடங்கள்:

Consultant பதவிக்கு என மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து IT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  இந்தியாவில் உள்ள ஏடிஎஸ்டிஓ(ATSTO)க்களில் பயிற்றுவிப்பாளராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

AAI வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

Consultant பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.75000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

AAI  தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மேலே உள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள்  அறிவிப்பில் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 05.12.2023 க்குள் hodhr_hyd@aai.aero என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news