MISSION I'MPOSSIBLE | Day 11 | Early Uprising against British Rule | Part 2 | INM
Click here to download pdf file
🔻🔻🔻
Adding Green to your Life
MISSION I'MPOSSIBLE | Day 11 | Early Uprising against British Rule | Part 2 | INM
Click here to download pdf file
🔻🔻🔻
MISSION I'MPOSSIBLE | Day 11 | தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் - புதுக்கவிதை
Click here to download pdf file
🔻🔻🔻
உடல் எடையைக் குறைப்பது பற்றி நினைத்தால் முதலில் நினைவுக்கு வருவது உணவுக் கட்டுப்பாடு அல்லது கடுமையான உடற்பயிற்சிதான். ஆனால் சரியான புரிதல் இல்லாமல் செய்யப்படும் உணவு கட்டுப்பாடு சில நேரங்களில் உடல் நலனில் கடுமையான தீங்கு விளைவிக்கும். இருப்பினும், சில எளிய பழைய ஆயுர்வேத முறைகள் எடையைக் குறைக்க அல்லது பராமரிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அப்படிப்பட சில எளிய வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பொதுவாக பயன்படுத்தப்படும் சில வீட்டு மசாலாப் பொருட்கள் மற்றும் மஞ்சள், இஞ்சி, அஸ்வகந்தா, திரிபலா மற்றும் இலவங்கப்பட்டை போன்ற மூலிகைகள் எடை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். தினசரி உணவில் இந்த மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களைப் பயன்படுத்துவது எடையைக் குறைக்க உதவும்.
ஆயுர்வேதம் உணவை சுவைக்கு ஏற்ப இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, கசப்பு, காரம் என 6 வகைகளாகப் பிரிக்கிறது. உணவில் இந்த சுவைகள் அனைத்தும் இருப்பது மிகவும் முக்கியம். இருப்பினும், அதிக சர்க்கரை மற்றும் அதிக உப்பு உட்கொள்வதை தவிர்க்கவும். இதனால் எடை அதிகரிக்கலாம்.
செரிமான செயல்முறையை இயல்பாக வைத்திருக்க உடலுக்கு சிறிது ஓய்வு தேவை. எனவே, ஆரோக்கியமான மற்றும் சிறிய அளவிலான உணவை உட்கொள்வதன் மூலம் உடலுக்கு ஓய்வு கொடுப்பது மிகவும் முக்கியம். எனவே, ஒரு நாளைக்கு மூன்று முறை நாளின் முக்கிய உணவுகளை உட்கொள்வது உடலுக்கு ஜீரணிக்க நேரத்தை வழங்குகிறது
தினமும் இரவு லேசான இரவு உணவை உட்கொள்வது செரிமான அமைப்பில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தாது. நீங்கள் தூங்கும்போது உடலின் இயற்கையான நச்சு நீக்கும் செயல்முறைகளை ஊக்குவிக்கவும் இது உதவுகிறது. ஆயுர்வேதத்தின் படி இரவு 7 மணிக்குள் இரவு உணவு உண்பதற்கு சிறந்த நேரமாக கருதப்படுகின்றது. இதனால் உடலுக்கு உணவு செரிக்க போதுமான நேரம் கிடைக்கும்
உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. எனவே, தினமும் ஜிம்மிற்குச் செல்ல உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், சாப்பிட்ட பிறகு தினமும் குறைந்தது 10 முதல் 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். இது உங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவும்.
ஆயுர்வேதம் எப்போதும் குளிர்ந்த நீருக்கு பதிலாக வெதுவெதுப்பான நீரை குடிக்க பரிந்துரைக்கிறது. ஆயுர்வேதத்தில், வெதுவெதுப்பான நீர் நீர் அமிர்தமாகக் கருதப்படுகிறது. இது உடலில் இருந்து நச்சுகளை (அமா) அகற்றும். அமா என்பது ஒரு வகை ஒட்டும் உணவு. இது மாசுபாடு மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தால் உடலில் சேரும். தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது இதை அகற்ற உதவும்.
ஆயுர்வேதத்தின் (Ayurveda) படி, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தூங்குவதற்கு உகந்த நேரம் என்று கருதப்படுகின்றது. போதுமான தூக்கமின்மை மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. போதிய தூக்கமின்மையும் எடை அதிகரிப்பதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.
🔻 🔻 🔻
அதிகமாக தண்ணீர் குடிப்பது உண்மையில் குளிர்காலத்தில் பற்கள் பராமரிப்புக்கு சிறந்த வழியாக இருக்கும். நாள் முழுவதும் திரவம் எடுத்துகொள்வது வாயை ஈரமாக வைத்திருக்க உதவுகிறது. இது வெடிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும் வறட்சியை போக்கும்.
காற்றில் ஈரப்பதம் குறைவாக இருக்கும் போது வாய் வறட்சி இருக்கும் நிலையில் அதிக தண்ணீர் குடிப்பது உமிழ்நீர் அதிகரித்து இயற்கையாகவே வாயை சுத்தப்படுத்த செய்யும். பல் சிதைவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை குறைக்கும். தினமும் 3 லிட்டர் தண்ணீர் வாய் பகுதியை சுத்தம் செய்ய உதவுகிறது.
பற்களில் உணர்திறன் அதாவது கூச்ச உணர்வு இருந்தால் நீங்கள் பல் துலக்கும் முறை சரியாக உள்ளதா என்பதை கவனியுங்கள். குளிர்காலத்தில் பல் துலக்கும் பிரஷ் மென்மையானதாக இருக்கட்டும். ஈறுகளை சுற்றி பற்களை மென்மையாக துலக்கவும். பல் தேய்க்க இயற்கை பற்பொடிகள் பயன்படுத்துவது பல் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அல்லது பொட்டாசியம் நைட்ரேட் மற்றும் ஸ்ட்ரோண்டியம் குளோரைடு கொண்ட பற்பசைகள் வலியை தடுக்கும். பல் வலி கொண்டிருப்பவர்கள் பல் மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் பற்பசை தேர்வு செய்யலாம்.
சர்க்கரை உட்கொள்வதை கண்டிப்பாக கட்டுப்படுத்த வேண்டும். குளிர்காலத்தில் டீ அல்லது காஃபி போன்ற சூடான பானங்கள் சுவையை கூட்டும். ஆனால் அதில் சர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டும். ஈறு அழற்சி மற்றும் ஈறு நோயை உண்டு செய்ய இதில் உள்ள சர்க்கரை கூட போதுமானது. ஏனெனில் சர்க்கரை சிறிய பாக்டீரியாக்களை ஈர்க்கிறது. வாய் ஆரோக்கியத்தை பராமரிக்க அதிகப்படியான சர்க்கரை, இனிப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும்
அமில உணவுகள் மற்றும் பானங்கள் பற்களின் வெளிப்புற அடுக்கை (எனாமல்) மென்மையாக்குகின்றன. இதனால் பல் சிதைவு மற்றும் அரிப்புக்கு ஆளாகின்றன. அமிலம் நிறைந்த உணாவை கட்டுப்படுத்துவது அவசியம் என்பதோடு அமில உணவுகள் எடுத்துகொண்டால் உடனடியாக தண்ணீர் அல்லது மவுத்வாஷ் மூலம் வாய் கொப்புளிப்பது பல் பாதிப்பை தடுக்க செய்யும்.
குளிர்காலத்தில் ஹெர்பஸ் என்னும் புண்கள் அதிகரிக்க வாய்ப்புண்டு. அதை தவிர்க்க உதடுகளை ஈரப்பதத்துடன் வைத்திருங்கள். லிப் பாம் பயன்படுத்தலாம். குளிர் புண்களின் அபாயத்தை குறைக்க, சளி மற்றும் இருமல் வரும்போதே உரியசிகிச்சை எடுத்துவிடுவது இந்த வாய்ப்புண் உருவாவதை தடுக்கும்.
காஞ்சிபுரம் மாவட்ட இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் (IIITDM Kancheepuram) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் Junior Research Fellow பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Junior Research Fellow பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே IIITDM Kancheepuram நிறுவனத்தில் காலியாக உள்ளது.
CSE, ECE பாடப்பிரிவில் BE, B.Tech, ME, M.Tech டிகிரியை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும்.
இந்த IIITDM Kancheepuram நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 30 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.31,000/- முதல் ரூ.35,000/- வரை மாத சம்பளமாக தரப்படும்.
Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த IIITDM Kancheepuram நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் 01.12.2023 அன்றுக்குள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் உள்ள Google Form-யை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
வட்டார ஒருங்கிணைப்பாளர் (Aspirational Block Fellow) பணிக்கு என சிவகங்கை மாவட்ட திருப்பத்தூர் வட்டாரத்தில் இலட்சிய இலக்கு வட்டார திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.55,000/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தற்போது வெளியான அறிவிப்பின் படி, Aspirational Block Fellow பணிக்கு என 01 பணியிடம் மட்டுமே சிவகங்கை மாவட்ட District Planning Office-ல் காலியாக உள்ளது.
Aspirational Block Fellow பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் / கல்லூரிகளில் ஏதேனும் ஒரு Post Graduate Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.
Aspirational Block Fellow பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.55,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Aspirational Block Fellow பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலுடன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்ட திட்ட அலுவலக முகவரிக்கு 04.12.2023 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.
🔻🔻🔻
Click here for latest employment news
புலனாய்வுப் பணியகம் (IB) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Assistant Central Intelligence Officer II / Executive (ACIO-II / Executive) பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 995 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 25.11.2023 அன்று முதல் ஆன்லைன் மூலம் பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Assistant Central Intelligence Officer II / Executive (ACIO-II / Executive) பணிக்கு என 995 பணியிடங்கள் புலனாய்வுப் பணியகத்தில் (IB) காலியாக உள்ளது.
இந்த புலனாய்வுப் பணியகம் சார்ந்த பணிக்கு அரசு / அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 27 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
ACIO-II / Executive பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் Level – 07 படி, ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
இந்த புலனாய்வுப் பணியகம் சார்ந்த பணிக்கு தகுதியான நபர்கள் Written Test (Tier – I / II), Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே 25.11.2023 அன்று முதல் 15.12.2023 அன்று வரை https://www.mha.gov.in/ அல்லது https://www.ncs.gov.in/ என்ற இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.
🔻🔻🔻
Click here for latest employment news
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் (ICMR) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Project Research Scientist-I பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ICMR நிறுவனத்தில் காலியாக உள்ள Project Research Scientist-I பணிக்கு என 03 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, Graduate Degree, Post Graduate Degree ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
Project Research Scientist-I பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பானது அதிகபட்சம் 35 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ICMR நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.56,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து secretariat.ncaht@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (7.12.2023) அனுப்ப வேண்டும்.
🔻🔻🔻
Click here for latest employment news
தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் ஓய்வூதியதாரர்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்காக புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் பெறும் நபர்கள் ஆண்டுதோறும் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும். இந்த ஆவணத்தை சமர்ப்பிப்பதன் மூலமாக ஓய்வூதியதாரர் உயிருடன் உள்ளார் என்பதையும் இதில் முறைகேடுகள் ஏதும் நடைபெறவில்லை என்பதும் உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மென்பொருள் பொறியாளர்கள் தற்போது வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிப்பதற்காக ஓய்வூதியதாரர்களுக்கு புதிய செயலி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
இதன் மூலமாக ஓய்வூதியதாரர்கள் ஆவணங்களை நேரடியாக சென்று வழங்க வேண்டிய அவசியம் இல்லை. மொபைல் செயலி மூலமாகவே தங்களது வாழ்க்கை சான்றிதழ்களை சமர்ப்பித்து கொள்ளலாம். இதற்கான மொபைல் செயலி வரும் டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பயோமெட்ரிக் முறை மூலம் ஓய்வூதியதாரர்கள் தங்களின் விவரங்களை அங்கீகரிக்க வேண்டும்.
🔻🔻🔻
Click here for latest employment news
MISSION I'MPOSSIBLE | Day 10 | Early Uprising against British Rule | Part 1 | INM |
Click her to download pdf file
MISSION I'MPOSSIBLE | Day 10 | பொதுத்தமிழ் | எழுத்து இலக்கணம் | பகுதி 2 |
Click here to download pdf file
PESB நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் THDC India Limited-ல் காலியாக உள்ள Director (Finance) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
Director (Finance) பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் THDC India Limited-ல் காலியாக உள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் CA, MBA, PGDM தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.
இந்த THDC நிறுவனம் சார்ந்த பணிக்கு 45 வயது பூர்த்தி அடையாத நபர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Director (Finance) பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.1,80,000/- முதல் ரூ.3,40,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔻🔻🔻
Click here for latest employment news
NIEPMD நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை இன்று (21.11.2023) வெளியிட்டுள்ளது. Special Teacher பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.20,000/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு ஆவலுடன் உள்ள நபர்கள் இப்பணிக்கான Walk-in Interview-ல் கலந்து கொண்டு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
NIEPMD நிறுவனத்தில் Special Teacher பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
Special Teacher பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் D.Ed.SE, B.Ed.SE ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த NIEPMD நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
Special Teacher பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ஒரு வருகைக்கு ரூ.250/- வீதம் ஒரு மாதத்திற்கு ரூ.20,000/- சம்பளமாக பெறுவார்கள்.
இந்த NIEPMD நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் 30.11.2023 அன்று காலை 11.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Special Teacher பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.
🔻🔻🔻
Click here for latest employment news
MISSION I'MPOSSIBLE | Day 9 | Percentage 2 | Profit & Loss, Discount, GST | Aptitude
Click here to download this studymaterial
🔻🔻🔻
Copyright (c) AGRIEXAM.IN All Right Reseved