Agri Info

Adding Green to your Life

November 24, 2023

இரயில்வேயில் காத்திருக்கும் Apprentices வேலை – 1832 காலியிடங்கள் || தேர்வு கிடையாது!

November 24, 2023 0

 

இரயில்வேயில் காத்திருக்கும் Apprentices வேலை – 1832 காலியிடங்கள் || தேர்வு கிடையாது!

இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் (RRC) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் கிழக்கு மத்திய இரயில்வேயில் (ECR) காலியாக Apprenticeship Trainee பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு ITI தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இப்பொழுதே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


இரயில்வே துறை காலிப்பணியிடங்கள்:

Apprenticeship Trainee என 1832 பணியிடங்கள் கிழக்கு மத்திய ரயில்வேயில் (ECR) காலியாக உள்ளது.

Apprenticeship Trainee கல்வி விவரம்:

இந்த இரயில்வே துறை சார்ந்த பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10ம் / 12ம் வகுப்பு + பணி சார்ந்த துறைகளில் ITI தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

Apprenticeship Trainee வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 01.01.2023 அன்றைய நாளின் படி, 15 வயது முதல் 24 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Apprenticeship Trainee வயது தளர்வுகள்:
  • SC / ST – 05 ஆண்டுகள்
  • OBC – 03 ஆண்டுகள்
  • PWBD – 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை
Apprenticeship Trainee சம்பள விவரம்:

Apprenticeship Trainee பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.

கிழக்கு மத்திய ரயில்வே தேர்வு செய்யும் முறை:

இந்த இரயில்வே துறை சார்ந்த பணிக்கு தகுதியான நபர்கள் Merit List, Document Verification, Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.


ECR விண்ணப்ப கட்டணம்:
  • SC / ST / PwBD / Women – விண்ணப்ப கட்டணம் கிடையாது
  • மற்ற நபர்கள் – ரூ.100/-
ECR விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் 09.12.2023 அன்றைய நாளுக்குள் https://www.rrcecr.gov.in/ என்ற இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification Link
Online Application Link


🔻🔻🔻

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் 25 காலியிடங்கள் – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

November 24, 2023 0

 

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் 25 காலியிடங்கள் – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் (CUTN) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் UDC, Personal Assistant, Assistant Professor, Associate Professor, Professor ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தற்போது இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் 01.12.2023 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தமிழக பல்கலைக்கழக பணியிடங்கள்:

CUTN பல்கலைக்கழகத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Upper Division Clerk – 02 பணியிடங்கள்
  • Personal Assistant – 01 பணியிடம்
  • Assistant Professor – 02 பணியிடங்கள்
  • Associate Professor – 11 பணியிடங்கள்
  • Professor – 08 பணியிடங்கள்
CUTN பணிகளுக்கான கல்வி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

  • Upper Division Clerk – Bachelor’s Degree
  • Personal Assistant – Bachelor’s Degree
  • Assistant Professor – Master Degree, Ph.D
  • Associate Professor – Master Degree, Ph.D
  • Professor – Master Degree, Ph.D
CUTN பணிகளுக்கான வயது:
  • Upper Division Clerk பணிக்கு அதிகபட்சம் 32 வயது எனவும்,
  • Personal Assistant பணிக்கு அதிகபட்சம் 35 வயது எனவும் வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.
CUTN பணிகளுக்கான சம்பளம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு Pay Matrix Level – 4 / 6 / 10 / 13A / 14 என்ற ஊதிய அளவுகளின் படி மாத சம்பளம் வழங்கப்படும்.

CUTN தேர்வு செய்யும் விதம்:

இந்த பல்கலைக்கழகம் சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test, Short List மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

CUTN விண்ணப்ப கட்டணம்:
  • UR / OBC / EWS – ரூ.750/-
  • SC / ST / PWBD / CUTN ஊழியர்கள் – விண்ணப்ப கட்டணம் கிடையாது
CUTN விண்ணப்பிக்கும் விதம்:
  • விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிகளுக்கு என தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (01.12.2023) ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (08.12.2023) தபால் செய்ய வேண்டும்.
Download Short Notification Link 1
Download Notification Link 1
Download Short Notification Link 2
Download Notification Link 2
Online Application Link 

NIT திருச்சி நிறுவனத்தில் JRF ஆக பணிபுரிய வாய்ப்பு – சம்பளம்: ரூ.31,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

November 24, 2023 0
NIT திருச்சி நிறுவனத்தில் JRF ஆக பணிபுரிய வாய்ப்பு – சம்பளம்: ரூ.31,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Junior Research Fellow பணிக்கு என திருச்சி மாவட்ட, தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT Trichy) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் சிறிதும் தாமதிக்காமல் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

NIT Trichy காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, NIT Trichy நிறுவனத்தில் Junior Research Fellow பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

Junior Research Fellow கல்வி தகுதி:
  • Junior Research Fellow பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் M.Tech, M.Sc, MS பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
  • விண்ணப்பதாரர்கள் NET / GATE தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.
Junior Research Fellow வயது வரம்பு:

இந்த NIT Trichy நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

Junior Research Fellow ஊதியம்:

Junior Research Fellow பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.31,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

NIT Trichy தேர்வு முறை:

இந்த NIT Trichy நிறுவன பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

NIT Trichy விண்ணப்பிக்கும் முறை:

Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள NIT திருச்சி முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 11.12.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Download Notification & Application Form PDF

🔻🔻🔻

தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் ரூ.2,09,200/- சம்பளத்தில் வேலை ரெடி – உடனே விண்ணப்பியுங்கள்!

November 24, 2023 0

 

தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் ரூ.2,09,200/- சம்பளத்தில் வேலை ரெடி – உடனே விண்ணப்பியுங்கள்!

தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் (NWDA) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை 30.10.2023 அன்று வெளியிட்டுள்ளது. இதில் Superintending Engineer, Deputy Director / Executive Engineer ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.2,09,200/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

NWDA பணியிடங்கள்:

NWDA நிறுவனத்தில் காலியாக உள்ள Superintending Engineer பணிக்கு என 04 பணியிடங்களும், Deputy Director / Executive Engineer பணிக்கு என 05 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.

NWDA பணிகளுக்கான கல்வி விவரம்:

அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Civil Engineering பாடப்பிரிவில் Diploma, Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

NWDA பணிகளுக்கான அனுபவ விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவுகளின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் குறைந்தது 05 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

NWDA பணிகளுக்கான வயது விவரம்:

இந்த NWDA நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.

NWDA பணிகளுக்கான ஊதிய விவரம்:
  • Superintending Engineer பணிக்கு ரூ.78,800/- முதல் ரூ.2,09,200/- வரை என்றும்,
  • Deputy Director / Executive Engineer பணிக்கு ரூ.67,700/- முதல் ரூ.2,08,700/- வரை என்றும் மாத ஊதியமாக தரப்படும்.
NWDA தேர்வு செய்யும் முறை:

இந்த NWDA நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள்.

NWDA விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் (28.12.2023) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Form PDF


🔻🔻🔻

மதுரை HCL நிறுவனத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு – BE / B.Tech பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

November 24, 2023 0

 

மதுரை HCL நிறுவனத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு – BE / B.Tech பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

மதுரையில் அமைந்துள்ள பிரபல தனியார் IT நிறுவனங்களில் ஒன்றான HCL தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Specialist பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

HCL காலிப்பணியிடங்கள்:

HCL நிறுவனத்தில் Specialist பணிக்கு என 01 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

Specialist கல்வி:

Specialist பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் BE / B.Tech Degree முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

Specialist அனுபவ காலம்:

இந்த HCL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் 2.5 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

Specialist சம்பளம்:

Specialist பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது HCL நிறுவன விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.

HCL தேர்வு செய்யும் விதம்:

இந்த HCL நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் Written Test, Interview, Technical Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

HCL விண்ணப்பிக்கும் விதம்:

Specialist பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification & Application Form Link


🔻🔻🔻

SSC GD கான்ஸ்டபிள் அறிவிப்பு 2024 – பதிவுகள் தொடக்கம்.. உடனே பாருங்க!

November 24, 2023 0
SSC GD கான்ஸ்டபிள் அறிவிப்பு 2024 – பதிவுகள் தொடக்கம்.. உடனே பாருங்க!

SSC GD கான்ஸ்டபிள் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த முக்கிய விவரங்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

SSC GD கான்ஸ்டபிள்:

பணியாளர் தேர்வாணையம் மத்திய ஆயுதக் காவல் படைகளில் (CAPFs), NIA, SSF மற்றும் ரைபிள்மேன் (GD) அஸ்ஸாம் ரைபிள்ஸ் தேர்வில் கான்ஸ்டபிள்கள் (GD) தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. மொத்தம் 26146 காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பின் படி, SSC GD கான்ஸ்டபிள் தேர்வுக்கான விண்ணப்ப பதிவுகள் நவம்பர் 24ம் தேதியான இன்று முதல் தொடங்கி, டிசம்பர் 1ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து மெட்ரிகுலேஷன் அல்லது 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 23 வயது வரம்பிற்கு உட்பட்டவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். கணினி அடிப்படையிலான தேர்வு அறிவிப்பின்படி, பிப்ரவரி – மார்ச் 2024 மாதங்களில் நடத்தப்படும். தேர்வுகள் 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படும். தேர்வர்கள் ssc.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மேலும் அதிக விவரங்களை அறிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

OFFICIAL NOTICE


MISSION I'MPOSSIBLE | Day 12 | Foundation of INC | Indian National Movement |

November 24, 2023 0

MISSION I'MPOSSIBLE | Day 12 | தமிழ் அறிஞர்கள் | தமிழில் கடித இலக்கியம் |

November 24, 2023 0

MISSION I'MPOSSIBLE | Day 12 | Chemistry | Acids, Bases & Salts | Part 1 |

November 24, 2023 0

November 23, 2023

ESIC நிறுவனத்தில் 50 காலியிடங்கள் – சம்பளம்: ரூ.2,00,000/- || நேர்காணல் மட்டுமே!

November 23, 2023 0

 

ESIC நிறுவனத்தில் 50 காலியிடங்கள் – சம்பளம்: ரூ.2,00,000/- || நேர்காணல் மட்டுமே!

ESIC என்னும் தொழிலாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. இதில் Senior Resident, Specialist, Super Specialist பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 50 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இப்பணிகளுக்கான நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ESIC வேலைவாய்ப்பு விவரங்கள் 2023:
  • ESIC நிறுவனத்தில் Senior Resident பணிக்கு என 36 பணியிடங்களும், Specialist பணிக்கு என 08 பணியிடங்களும், Super Specialist பணிக்கு என 06 பணியிடங்களும் காலியாக உள்ளது.
  • MBBS, Post Graduate Degree, Post Graduate Diploma, MD, MS, DNB, DM ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை MCI அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் படித்தவர்கள் மட்டுமே இப்பணிகளுக்கான நேர்காணலில் கலந்து கொள்ள இயலும்.
  • 24.11.2023 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பானது Senior Resident பணிக்கு 45 வயது எனவும், Specialist / Super Specialist பணிகளுக்கு 67 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.67,700/- முதல் ரூ.2,00,000- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • இந்த ESIC நிறுவன பணிகளுக்கு தகுதியான நபர்கள் 24.11.2023 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • ESIC விண்ணப்பிக்கும் முறை:

    இப்பணிகளுக்கு ஆவலுடன் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

    Download Notification PDF            

DRDO நிறுவனத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை ரெடி – விரைந்து விண்ணப்பியுங்கள்!

November 23, 2023 0

 

DRDO நிறுவனத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை ரெடி – விரைந்து விண்ணப்பியுங்கள்!

Computer Operator and Programming Assistant பணிக்கு என DRDO நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்கள் குறித்த அறிவிப்பை NAPS ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

DRDO பணியிடங்கள்:

DRDO நிறுவனத்தில் Computer Operator and Programming Assistant பணிக்கு என 20 பணியிடங்கள் காலியாக உள்ளது.

DRDO பணிக்கான கல்வி விவரம்:

Computer Operator and Programming Assistant பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

DRDO பணிக்கான வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

DRDO பணிக்கான ஊக்கத்தொகை:

இந்த DRDO நிறுவன பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.7,000/- முதல் ரூ.7,700/- வரை மாத ஊக்கத்தொகையாக பெறுவார்கள்.

DRDO தேர்வு செய்யும் முறை:

Computer Operator and Programming Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

DRDO விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

Download Notification & Application Link


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

மாதம் ரூ.67,700/- சம்பளத்தில் தமிழக ESIC மருத்துவமனை வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

November 23, 2023 0

 

மாதம் ரூ.67,700/- சம்பளத்தில் தமிழக ESIC மருத்துவமனை வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள Senior Resident பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகம் தமிழ்நாடு (ESIC TN) தற்போது அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ESIC TN காலிப்பணியிடங்கள்:

Senior Resident பதவிக்கு என மொத்தம் 28 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

ESIC TN அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் MD/ MS/ DNB, M.Sc, முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

பணியாளர்களின் மாநில காப்பீட்டுக் கழக தமிழ்நாடு ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 45 வயதாக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Senior Resident சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ. 67,700/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பக் கட்டணம்:

SC/ ST/ PWD/ முன்னாள் ராணுவத்தினர்/ பெண்கள் வேட்பாளர்கள்: கட்டணம் கிடையாது
மற்ற அனைத்து வேட்பாளர்களும்: ரூ. 500/-

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாட்டில் வேலை தேடும் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் முழு பயோ-டேட்டா, தேவையான சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் (அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி) பின்வரும் முகவரியில் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். நேர்காணல் ஆனது 27.11.2023 முதல் 28.11.2023 வரை நடைபெற உள்ளது.

முகவரி:

Office of Dean, ESIC Medical College & Hospital, Ashok Pillar Road, K.K. Nagar, Chennai

 Download Notification 2023 Pdf



🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

DRDO DRDL வேலைவாய்ப்பு 2023 – ரூ.2,60,000/- வரை ஊதியம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

November 23, 2023 0

 

DRDO DRDL வேலைவாய்ப்பு 2023 – ரூ.2,60,000/- வரை ஊதியம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

ஹைதராபாத்தில் உள்ள DRDL இல் ஒப்பந்த அடிப்படையில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளை ‘ஆலோசகராக’ ஈடுபடுத்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

DRDO DRDL காலிப்பணியிடங்கள்:

DRDL இல் ஒப்பந்த அடிப்படையில் Consultant பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

தகுதி விவரங்கள்:

மத்திய / மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், அரசு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

DRDL வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் இறுதியின் தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 63 க்குள் இருக்க வேண்டும். இந்திய அரசின் விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.1,00,000/- முதல் ரூ.2,60,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:
  1. Written Test
  2. Interview
விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 11/12/2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

BHEL Supervisor Trainee வேலைவாய்ப்பு 2023 – 75 காலிப்பணியிடங்கள் || ரூ.1,20,000/- வரை மாத சம்பளம்!

November 23, 2023 0

 

BHEL Supervisor Trainee வேலைவாய்ப்பு 2023 – 75 காலிப்பணியிடங்கள் ||  ரூ.1,20,000/- வரை மாத சம்பளம்!

Supervisor Trainee பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை Bharat Heavy Electricals Limited நிறுவனம் ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இந்த மத்திய  அரசு பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே  விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

BHEL நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • BHEL நிறுவனத்தில் Supervisor Trainee பணிக்கென 75 பணியிடங்கள் காலியாக உள்ளது.
  •  அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற  கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma, BBA, BSW, BBS, BMS முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • 01.10.2023 அன்றைய தினத்தின் படி, 27 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு  அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • தகுதியான நபர்களுக்கு ரூ.32,000/- முதல் ரூ.1,20,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்பட உள்ளது.
  • விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Exam (CBT), Document Verification / Scrutiny என்னும் தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
  • விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையும் முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

    BHEL விண்ணப்பிக்கும் விதம்:

    இந்த BHEL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கென கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து Online-ல் இறுதி நாளுக்குள் (25.11.2023) சமர்ப்பிக்க வேண்டும்.

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

MISSION I'MPOSSIBLE | Day 11 | Chemistry | Elements & Compounds | Part 2 |

November 23, 2023 0