Agri Info

Adding Green to your Life

December 14, 2023

கல்லீரல் நோய்கள் களைய!

December 14, 2023 0

 

ம் உடலில் இதயம் மற்றும் மூளைக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கிய பாகமாக கல்லீரலைக் கூறலாம்.

மிகவும் சென்ஸிட்டிவ்உறுப்பான கல்லீரல் நம் உடலில் செய்யும் வேலைகள் பற்பல. சர்க்கரை, கொழுப்பு, இரும்புச்சத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்லீரல் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. மேலும், புரத உற்பத்திக்கும் இது மிகவும் உதவிகரமாக உள்ளது. அதே நேரத்தில், கல்லீரலில் நோய் ஏற்பட்டால் அது உடலின் பல இயக்கங்களைப் பாதிக்கிறது. கல்லீரலில் ஏற்படும் நோய்க்கு கல்லீரல் நோய் என்று பெயர். இந்த நோய் ஏற்படுவதை உடல் நலக் குறைவு, வாந்தி, மயக்கம், களைப்பு, எடை குறைவு ஆகிய பல அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். 75%க்கும் மேற்பட்ட கல்லீரல் திசுக்கள் சேதமடையும் போது கல்லீரல் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறது.

கல்லீரல் முழுவதுமாக செயலிழந்தால் மாற்றுக் கல்லீரல் பொருத்திக் கொள்வதற்கு வாய்ப்புள்ளது.

கல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்

உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரல் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு. ஒரு வேளை கல்லீரல் சரியாக இயங்காவிட்டால், உடனே அதற்கு சரியாக சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். சில நேரங்களில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதை தெரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம். ஏனெனில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கு சில அறிகுறிகள் உள்ளன. ஆனால் அந்த அறிகுறிகள் சாதாரணமாக உடலில் அவ்வப்போது வரும் என்பதால், சரியாக அதனை கவனிக்கமாட்டோம்.

இந்த மாதிரி கல்லீரல் பாதிப்படைவதற்கு ஆல்கஹால் அதிகம் குடிப்பது, அதிகமான எண்ணெய் உள்ள உணவுகளை சாப்பிட்டு, அதனால் கல்லீரலில் கொழுப்புக்கள் அதிகம் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருந்தால், கல்லீரலில் கொழுப்புகள் தங்கிவிடும்.

வாய் துர்நாற்றம்

கல்லீரலானது சரியாக இயங்கவில்லையெனில், வாயிலிருந்து கடுமையான நாற்றம் வரும். ஏனெனில் அப்போது உடலில் அம்மோனியாவானது அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கும்.

கருவளையம் மற்றும் சோர்வான கண்கள்

கல்லீரல் சரியாக இயங்காலிட்டால், சருமத்தில் பாதிப்பு மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும். அதிலும் குறிப்பாக கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்பட்டு,
சுருக்கங்களோடு காணப்படும்.

செரிமானப் பிரச்னை

கல்லீரலில் கொழுப்பானது அதிகம் சேர்ந்திருந்தால், தண்ணீர் கூட சரியாக வெளியேறாமல் இருக்கும். இத்தகைய பிரச்னை உடலில் தெரிந்தால், அது கல்லீரல்
பழுதடைந்துள்ளதற்கான அறிகுறியாகும்.

வெளுத்த சருமம்

கல்லீரலில் பாதிப்பு இருந்தால், சில சமயங்களில் சருமத்தில் உள்ள நிறமிகள் நிறமிழந்து, சருமத் தோலானது திட்டுதிட்டாக ஆங்காங்கு வெள்ளையாக காணப்படும்.

அடர்ந்த நிற சிறுநீர் மற்றும் கழிவுகள்

உடலில் இருந்து வெளியேறும் கழிவுகள் அடர்ந்த நிறத்தில் இருக்கும். இந்த மாதிரி எப்போதாவது ஏற்பட்டால், அதற்கு உடலில் வறட்சி என்று அர்த்தம். ஆனால், தொடர்ச்சியாக இருந்தால், அது கல்லீரல் பழுதடைந்ததற்கான அறிகுறியாகும்.

மஞ்சள் நிற கண்கள்

கண்ணில் உள்ள வெள்ளை பகுதி மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால், அது மஞ்சள் காமாலையாக இருக்கலாம். அதாவது கல்லீரலில் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது. எனவே அதற்கேற்ப முறையான சிகிச்சை செய்ய வேண்டும்.

வாய் கசப்பு

கல்லீரலில் பைல் என்னும் நொதியானது உற்பத்தி செய்யப்படும். அந்த பைல் நொதி தான் கசப்பான சுவையை ஏற்படுத்துகிறது. எனவே வாயில் அதிக கசப்பு இருந்தால், கல்லீரலில் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

வயிறு வீக்கம்

கல்லீரலானது பெரும் பாதிப்பிற்கு ஆளாகியிருந்தால், அவை வயிற்றின் அடிப்பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்தும்.

கல்லீரலுக்கு ஏற்படும் பிரச்னைகளை குணப்படுத்த சில வழிகள்

நெல்லிக்காய்

வைட்டமின் சி அதிகமுள்ள நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கல்லீரலின் செயல்பாடுகள் நன்றாக இருக்கும். அதிலும் ஒரு நாளுக்கு 5 நெல்லிக்காய்கள் வரை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வலுவடையும். வேண்டுமானால் தயிர், உப்பு ஆகியவற்றுடன் நெல்லிக்காயைச் சேர்த்து பச்சடியாகவும் சாப்பிடலாம்.

அதிமதுரம்

சில கல்லீரல் நோய்களுக்கு அருமையான ஆயுர்வேத மருந்தாக விளங்குகிறது அதிமதுரம். இந்த அதிமதுரத்தின் வேரை நன்றாகப் பொடித்து, அதை டீத்தூளுடன் கொதிக்கும் நீரில் போட வேண்டும். சிறிது நேரம் கழித்து, அதை வடிகட்டி குடிக்கலாம். ஒரு நாளைக்கு இரு முறை குடிப்பது உசிதம்.

மஞ்சள்

தினமும் மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்வதால் நம் உடலுக்குப் பலப்பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக, ஹெப்பாடிட்டிஸ் பி மற்றும் சி ஆகியவற்றுக்குக் காரணமான வைரஸ்கள் பரவுவதை மஞ்சள் தடுக்கிறது. அதற்கு தினமும் பாலுடன் அல்லது ஒரு ஸ்பூன் தேனுடன் அரை ஸ்பூன் மஞ்சளைக் கலந்து குடிக்கலாம்.

ஆளி விதைகள்

இரத்தத்தில் உள்ள சில ஹார்மோன்கள் கல்லீரலை சில சமயம் சேதப்படுத்துகின்றன. இதைத் தவிர்க்க, ஆளி விதைகளை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பப்பாளிப் பழம்

கல்லீரல் நோய்க்கு பப்பாளிப்பழம் ஒரு அருமையான மருந்தாகும். தினமும் ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாற்றுடன் 2 ஸ்பூன் பப்பாளிப்பழச் சாற்றைத் தொடர்ந்து 4 வாரங்கள் சாப்பிட்டு வருவது பலன் கொடுக்கும்.

கீரை, கேரட் ஜூஸ்

அரை டம்ளர் கீரை ஜூஸ் மற்றும் அரை டம்ளர் கேரட் ஜூஸ் ஆகியவற்றைத் தினமும் 3 மணிநேரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய் ஓடிப் போகும்.

அவகேடோ மற்றும் வால்நட்ஸ்

கல்லீரல் நோய்கள் எதுவும் வராமல் இருக்க இந்த இரண்டையும் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இதனால் அவற்றில் உள்ள க்ளுடாதியோன், கல்லீரலில் தங்கியுள்ள

நச்சுக்களை வெளியேற்றும் ஆப்பிள், காய்கறிகள்

கல்லீரலைக் காப்பாற்ற பசுமையான காய்கறிகளையும், ஆப்பிளையும் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் காய்கறிகள் பித்தநீரை சீராக சுரக்க உதவுவதுடன், ஆப்பிளில் உள்ள பெக்டின் செரிமான பாதையில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரலில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும்.

க்ரீன் டீ

இதில் நிறைய கேட்டச்சின்கள் இருப்பதால் கல்லீரலுக்கு மிகவும் நல்லது. தினமும் 3 முதல் 4 கப் க்ரீன் டீயைக் குடித்து வந்தால், கல்லீரல் தொடர்பான பிரச்னைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.

பால் நெருஞ்சில் விதை (Milk Thistle Seeds)

பால் நெருஞ்சில் என்று அழைக்கப்படும் மூலிகை பலவிதமான ஈரல் நோய்களைக் குணப்படுத்த வல்லது. வைரல் ஹெப்பாடிட்டிஸ், கைரோசிஸ், ஆல்கஹாலிக் ஹெப்பாடிட்டிஸ் உள்ளிட்ட பலவற்றிற்கும் அருமையான மருந்தாக இம்மூலிகை விளங்குகிறது. தினமும் இருமுறை 900 மில்லிகிராம் அளவில் இந்த மூலிகையை சாப்பாட்டின் போது எடுத்துக் கொள்வது நல்லது.

🔻 🔻 🔻 

பேரீச்சம் பழத்தின் நன்மைகள்!

December 14, 2023 0

 பேரிச்சம்பழத்தில் குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற இயற்கையான சர்க்கரைகள் உள்ளன.

அவை ரத்தத்தில் உறிஞ்சப்பட்டவுடன் ஆற்றல் விநியோகத்தை அதிகரிக்கின்றன. அதனால் சோர்வு நீங்க அதிக நேரம் எடுக்காது. வருடம் முழுவதும் பேரீச்சம்பழம் சாப்பிடுவது இந்தப் பலனைத் தரும். எனவே நீங்கள் சோர்வாக உணர்ந்தால், ஒன்றிரண்டு பேரீச்சம்பழம் சாப்பிட மறக்காதீர்கள்.

பேரீச்சம்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், பேரீச்சம்பழத்தை தொடர்ந்து உட்கொள்வது உடலில் உள்ள எல்டிஎல் அல்லது கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. இதன் விளைவாக, திடீர் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து குறைகிறது. மேலும் இதில் உள்ள பொட்டாசியம் மற்ற அனைத்து இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது. பல்வேறு காரணங்களால் உடல் எடை குறைய ஆரம்பித்தவர்கள் பேரீச்சம்பழம் சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில் இந்தப் பழத்தில் உள்ள கலோரிகள், உடல் செயலிழப்பைத் தடுத்து எடை அதிகரிப்பதில் சிறப்புப் பங்கு வகிக்கிறது.

பேரீச்சம்பழத்தில் வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது நரம்பு மண்டலத்தின் செயல்திறனை அதிகரிப்பதன் மூலம் ஒட்டு மொத்த மூளை சக்தியை அதிகரிப்பதில் சிறப்புப் பங்கு வகிக்கிறது. அதுமட்டுமின்றி, இந்தப் பழம் புத்திசாலித்தனம் மற்றும் செறிவு அதிகரிக்க உதவுகிறது.

பேரீச்சம்பழத்தில் உள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் எலும்புகளை பலப்படுத்துகிறது. வயதான காலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்படு
பவர்களுக்கு பேரீச்சம்பழம் நன்றாக வேலை செய்கிறது. இதன் விளைவாக, அவர்கள் ஆண்டு முழுவதும் பேரீச்சம்பழத்தை தவறாமல் சாப்பிட வேண்டும்.

பேரீச்சம்பழத்தில் இயற்கையான ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது பல நோய்களைத் தடுப்பதோடு, உடல் அமைப்பிலும் சிறப்புப் பங்கு வகிக்கிறது. அதுமட்டுமின்றி, இந்தப் பழத்தில் பல பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. பேரீச்சம்பழம் சாப்பிடுவது தொற்று அபாயத்தையும் கணிசமாகக் குறைக்கிறது.

உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும்போது இந்த வகையான நோய்களின் நிகழ்வு அதிகரிக்கிறது. எனவே இந்த மினரல் உடலில் குறைபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்தப் பழத்தில் இரும்புச்சத்து அதிகம். எனவே ரத்தசோகை போன்ற நோய்களைத் தடுப்பதில் இது சிறப்புப் பங்கு வகிக்கிறது.



🔻 🔻 🔻 

இயர் பட்ஸ் பயன்படுத்துவதால் இவ்வளவு ஆபத்தா?

December 14, 2023 0

 காதுகளில் இருக்கும் அழுக்கை வெளியேற்ற பலரும் பல்வேறு வழிகளை கையாளும் நிலையில் பலர் கையாள்வது இயர் பட்ஸ் வைத்து சுத்தம் செய்வதுதான்.

ஆனால் இயர் பட்ஸ் வைத்து சுத்தம் செய்வது ஆபத்தை விளைவிக்கும் என்று கூறப்படுகிறது.

காதுகளில் இயர் பட்ஸ் பயன்படுத்தினால் காதில் காயம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அதுமட்டுமின்றி செவித்தன்மை பாதிக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.


சாப்பிடும் உணவின் சுவை அறிவதற்கு காதில் நடுப்பகுதியில் செல்லும் நரம்பு இயர் பட்ஸ் பயன்படுத்துவதால் பாதிக்கப்பட்டு சுவையை அறிய முடியாத நிலை ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


எனவே குச்சி, ஹேர்பின் ஆகியவற்றை காதுக்குள் பயன்படுத்தக் கூடாது என்பது போலவே இயர் பட்ஸ்-ஐயும் பயன்படுத்தக் கூடாது என்று கூறப்படுகிறது.


🔻 🔻 🔻 

December 12, 2023

ஏர் இந்தியா வேலை வாய்ப்பு; 148 காலியிடங்கள்; 10-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் உடனே விண்ணப்பிங்க!

December 12, 2023 0

 சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் விமான நிலையங்களில் உள்ள ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 148 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் கொள்ளலாம்.

Duty Manager

காலியிடங்களின் எண்ணிக்கை : 8

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
மேலும் 16 வருட அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 45,000

Duty Officer

காலியிடங்களின் எண்ணிக்கை : 8

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
மேலும் 12 வருட அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 32,200

Customer Service Executive

காலியிடங்களின் எண்ணிக்கை : 80

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 20,130 – 25,980

Utility Agent cum Ramp Driver

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 20,130

Handyman

காலியிடங்களின் எண்ணிக்கை : 50

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 17,850

வயதுத் தகுதி:  28 வயதிற்குள் இருக்க வேண்டும். சில பணிகளுக்கு
 55 வயது வரை விண்ணப்பிக்கலாம். SC/ST பிரிவினருக்கு
 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும்
 வயது சலுகை உண்டு.

தேர்வு முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 26.12.2023 முதல் 30.12.2023 வரை

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Office of the HRD Department,
Air India Unity Complex, Pallavaram Cantonment, Chennai - 600043

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://aiasl.in/resources/Advertisement%20-%20CHENNAI,%20MADURAI,%20TRICHY%20AND%20COIMBATORE%20-%20DEC%202023.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.


ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் 320 காலிப்பணியிடங்கள்: உடனே விண்ணப்பியுங்கள்

December 12, 2023 0

 பொதுத்துறை நிறுவனமான ஆவடி  கனரக வாகன தொழிற்சாலை நிர்வாகம் காலியாக உள்ள பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 320 தொழில்பழகுனர் (Apprentices) பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் மட்டுமே இப்பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.   ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பணியிடங்கள் பற்றிய விவரங்கள்:

பட்டதாரி தொழிற்பழகுநர் (Graduate Apprentices) பணியின் கீழ் 110 இடங்களும் , பட்டய படிப்பு தொழிற்பழகுநர் (Technician (Diploma) Apprentices) பணியின் கீழ்  110 இடங்களும்,பொறியியல் சாராத பட்டதாரி தொழிற்பழகுநர் (Non Engineering Graduate Apprentices  ) பணியின் கீழ் 100 இடங்களும் நிரப்பப்பட உள்ளது.

2019, 2020, 2021, 2022 மற்றும் 2023  ஆகிய வருடங்களில் தொடர்புடைய துறைகளில் பட்டய படிப்பு/ பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெரிவு செய்யப்படும் முறை: அந்தந்த பதவிகளுக்கு அறிவிக்கப்பட்ட கல்வித் தகுதியில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் உத்தேச இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். எழுத்து, வாய்மொழி போன்ற எந்தவித தேர்வும் நடத்தப்படாது. எனவே, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது விண்ணப்பபதாரர் கல்வி தொடர்பான அனைத்து விபரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

பயிற்சி காலம்: ஓராண்டு.

அரசு அறிவித்த நெறிமுறைகளின் படி, பயிற்சி பெறுபவர்களுக்கு மாதாந்திர ஊதியம் அளிக்கப்படும்.

விண்ணப்பங்கள் ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.  portal.mhrdnats.gov.in , nats.education.gov.in   என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.  விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் 16/12/2023 ஆகும். ஆள்சேர்க்கை அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்



🔻🔻🔻

எந்த எழுத்துத் தேர்வும் இல்லை... அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்கள் பணி

December 12, 2023 0

 அஞ்சல் ஆயுள் காப்பீடு / கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு (Postal Life Insurance / Rural Postal Life Insurance products) விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களை (Postal Life Insurance Agents) ஈடுபடுத்தவிருப்பதாக சென்னை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

விருப்பமுள்ளவர்கள் செயின்ட் தாமஸ் மௌன்ட் தலைமை அஞ்சலகம், சென்னை 600016 (ஆலந்தூர் மெட்ரோ அருகில்) உள்ள அலுவலகத்தில் 27.12.2023 அன்று 10.00 மணிக்கு நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

கல்வி தகுதி: குறைந்தது பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18-வயதிலிருந்து.

பிரிவுகள்: சுய தொழில் செய்யும் / வேலையில்லா இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள்/ முகவர்கள், அங்கன்வாடி மற்றும் மஹிளா மண்டல் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.

விரும்பத்தக்க தகுதிகள்: ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் உள்ளவர்கள், கணினிப் பயிற்சி உள்ளவர்கள் / சொந்தப்பகுதி பற்றி நன்கு அறிந்தவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.

இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் முகவர்களாக இருப்பவர்கள், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதியில்லை.

மேற்கண்டதகுதியுடையவர்கள்மூன்றுபுகைப்படத்துடன் (பாஸ்போர்ட் அளவு), அசல் மற்றும் இரண்டு நகல் - வயதுச்சான்று, முகவரிச்சான்று மற்றும் கல்விச்சான்றுடன் அணுகவும். நேர்காணலுக்கு பின் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஐந்தாயிரம் ரூபாய்க்கு தேசிய சேமிப்பு பத்திரம் [National Savings Certificate] பணப் பாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும்.

இந்த நேர்காணல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை முகவர்கள் மூலம் விற்பனை செய்வதற்காக நடத்தப்படுகிறது. முகவர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பிடிக்கும் பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔻🔻🔻


Day 31 | யாப்பு இலக்கணம் - யாப்பின் உறுப்புக்கள், பா வகைகள்

December 12, 2023 0

Day 30 | LCM & HCF | Part 2 | Aptitude & Mental Ability

December 12, 2023 0

Day 30 | Indian Polity | Local Self Government 73rd & 74th

December 12, 2023 0

Day 30 | பொதுத்தமிழ் - பொருள் இலக்கணம் - புறப்பொருள்

December 12, 2023 0

December 11, 2023

Day 29 | LCM & HCF | Part 1 | Apatitude & Mental Ability

December 11, 2023 0

December 10, 2023

Day 29 | State Executives - Legislative Assembly & Council

December 10, 2023 0

Day 29 | பொதுத்தமிழ் - பொருள் இலக்கணம் - அகப்பொருள்

December 10, 2023 0

Day 27 | இலக்கியம் | மணிமேகலை, திருக்குறள் ஒப்புரவறிதல்

December 10, 2023 0

Day 27 | INM | Constitutional Development

December 10, 2023 0

Day 27 | Chemistry | Food Adulterations

December 10, 2023 0

Day 26 | INM | India after Independence

December 10, 2023 0

Day 26 | Chemistry | Petroleum Products

December 10, 2023 0

Day 26 | இலக்கியம் | சிலப்பதிகாரம், திருக்குறள் - வலி

December 10, 2023 0

Day 25 | INM | Last Phase of Independenace

December 10, 2023 0

Day 25 | Chemistry | Fertiliser & Pesticides

December 10, 2023 0

Day 25 | பத்துப்பாட்டு நூல்கள், திருக்குறள்-வாய்மை, காலம் | Mr.S.Vijayakumar

December 10, 2023 0

சென்னையில் தேசிய பல்லுயிர் ஆணைய வேலை வாய்ப்பு; டிகிரி, பி.இ படித்தவர்கள் விண்ணப்பிங்க!

December 10, 2023 0

 மத்திய அரசின் தேசிய பல்லுயிர் ஆணையத்தின் சென்னை அலுவலகத்தில் இண்டர்ன்ஷிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 25 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 11.12.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Internship

காலியிடங்களின் எண்ணிக்கை : 25

கல்வித் தகுதி : Postgraduate degree or Bachelor degree in any discipline (3 Years / 4 Years
 including Engineering) படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 21 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊக்கத்தொகை : ரூ. 22,500

தேர்வு செய்யப்படும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://apply.registernow.in/NBA/Registration2023/ என்ற இணையதளப்
பக்கம் மூலமாக ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 11.12.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://nbaindia.org/uploaded/pdf/bsip.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.


🔻🔻🔻

NTPC ஆணையத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை – 110+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

December 10, 2023 0

 

NTPC ஆணையத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை – 110+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

NTPC Limited ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Associate பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.50,000/- மாத ஊதியம் வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

NTPC Limited காலிப்பணியிடங்கள்:

NTPC Limited வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Mining Overman, Magazine Incharge, Mechanical Supervisor, Electrical Supervisor, Vocational Training Instructor, Junior Mine Surveyor, Mining Sridar பணிக்கென காலியாக உள்ள 114 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Associate கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அலல்து கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / Diploma Engineering தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

NTPC Limited வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Associate ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.50,000/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NTPC Limited தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் Skill Competency Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 31.12.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻

சென்னை துறைமுகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – தேர்வு எழுத தேவையில்லை || விண்ணப்பிக்கலாம் வாங்க!

December 10, 2023 0

 

சென்னை துறைமுகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – தேர்வு எழுத தேவையில்லை || விண்ணப்பிக்கலாம் வாங்க!

சென்னை துறைமுக அறக்கட்டளை ஆனது Superintending Engineer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 9 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையவும்.

Chennai Port காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Superintending Engineer பணிக்கென காலியாக உள்ள 9 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Superintending Engineer கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree தேர்ச்சியுடன் 9 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

Chennai Port வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
.
Superintending Engineer ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.13,000/- முதல் ரூ.18,250/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

Chennai Port தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 22.01.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻

DRDO ஆணையத்தில் Administrative Officer வேலைவாய்ப்பு – 100+ காலிப்பணியிடங்கள் || தேர்வு கிடையாது!

December 10, 2023 0


DRDO ஆணையத்தில் Administrative Officer வேலைவாய்ப்பு – 100+ காலிப்பணியிடங்கள் || தேர்வு கிடையாது!

DRDO ஆனது Stores Officer, Administrative Officer, Private Secretary பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 102 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

DRDO காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Stores Officer, Administrative Officer, Private Secretary பணிக்கென காலியாக உள்ள 102 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Administrative Officer கல்வி தகுதி:

மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

DRDO வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Administrative Officer ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Pay Level 7 அளவிலான ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DRDO தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியான 45 நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


 

🔻🔻🔻