சென்னையில் வரும் 21-ம் தேதி நடைபெறும் அங்கக வேளாண்மையில் காய்கறி உற்பத்தி செய்வதற்கான பயிற்சி வகுப்பில் விருப்பமுள்ளவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
December 17, 2023
மகளிர்க்கு கயிறு வாரியம் மூலம் பயிற்சி...! அரசு உதவினால் நாங்களும் தொழில் முனைவோர் ஆகலாம்.
கிராமப்புறங்களில் பெண்கள் பெருமளவில் தங்களின் சுய வருமானம் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது சுய தொழில் செய்வதற்கு சில பெண்கள் மட்டுமே முயற்சி மேற்கொள்ளும் நிலையில் இருந்து வருகிறது.
பெண்கள் சுய தொழிலில் ஈடுபடுவதற்கு மிகவும் பயனுள்ள வகையிலும். திருவாரூர் மாவட்டத்தில் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக சவுத் இந்தியன் அசோசியேஷன் என் ஜி ஓ ட்ரஸ்ட் (South Indian NGO association trust) மூலமாக கயிறு வாரியத்துடன் இணைந்து சுய உதவி குழுக்களை சேர்ந்த மகளிர்க்கு தேங்காய் நாரில் மதிப்பு கூட்டப்பட்ட மிதியடிகள் தயாரிப்பு பயிற்சியினை வழங்கி வருகின்றனர்.
இந்த பயிற்சியில் திருவாரூர் மாவட்டம் பின்னவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட சுமார் 20 மகளிர் மிதியடிகள் தயாரிக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பயிற்சியில் தேங்காய் நார் கொண்டு கயிறுகள் தயாரிப்பதும், தேங்காய் நாரை கொண்டு மிதி அடிகள் தயாரிப்பதும் இரண்டு மாத கால பயிற்சியாக வழங்கப்பட்டு வருகிறது.
பயிற்சி மேற்கொள்ளும் மகளிர் பயிற்சியின் நிறைவில் சுய தொழில் செய்வதற்கான வங்கி கடன் தன்னார்வ தொண்டு நிறுவனம் பெற்றுத் தருகிறது இதன் மூலம் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரம் மேம்படும். கடந்த 15 நாட்களாக தேங்காய் நாரிலிருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு முறையான மிதியடிகள் பயிற்சி வகுப்பில் சேர்ந்து கற்று வருவதாக பயனாளி தெரிவித்தார்.
இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது என்றும், தேங்காய் நார் மூலமாக மிதியடிகள் தயாரித்து எங்கள் வருமானத்தை மேலும் மேம்படுத்த இம்மாதிரியான பயிற்சி வகுப்புகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளதாக தெரிவித்தார்.
பயிற்சி முடிவுற்றதும் அரசு சுயதொழில் செய்வதற்கான கடன் உதவி வழங்கினால் தாங்கள் அனைவரும் சுய உதவிக் குழுக்களுடன் இணைந்து சுயதொழில் செய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பயனாளி.
🔻🔻🔻
அண்ணா பல்கலை. வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு, பி.இ படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!
அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியியல் படிப்புகளுக்கான தமிழ் மேம்பாட்டு மையத்தில் உதவியாளர் மற்றும் ப்யூன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 26.12.2023
Professional Assistant I / II
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி : B.E/B.Tech (CSE/IT) or M.Sc (CSE/IT) படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 01.12.2023 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : நாள் ஒன்றுக்கு ரூ. 819 - 872
Peon
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : நாள் ஒன்றுக்கு ரூ. 471
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.annauniv.edu/pdf/CDTET-recruitment-Advrtmnt-Dec2023.pdf
என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள
விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன்
கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்
முகவரி: Dr.P.Uma Maheswari, Professor & Director,
Centre for Development of Tamil in Engg. & Tech. Hall No. 310 &,
Centre for Excellence Building Anna University, Chennai – 600 025
விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.12.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய
https://www.annauniv.edu/pdf/CDTET-recruitment-Advrtmnt-Dec2023.pdf
என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
🔻🔻🔻
December 16, 2023
Day 34 | Indian Judiciary | Indian Polity
December 15, 2023
டிசம்பர் 18 கோழி வளர்ப்பு இலவச பயிற்சி
கால்நடை மருத்துவ பல்கலை கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும், 18ல் இலவச கோழி வளர்ப்பு பயிற்சி முகாம் தொடங்குகிறது.இதுகுறித்து, ஆராய்ச்சி மைய தலைவர் அமுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரூர் பண்டுதகாரன்புதுார் கால்நடை மருத்துவ பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும், 18 முதல், 23 வரை இலவச கோழி வளர்ப்பு பயிற்சி முகாம் நடக்கிறது.
அதில், புறக்கடை கோழி வளர்ப்பில் உள்ள நவீன தொழில் நுட்பங்கள், கோழியினங்கள், கொட்டகை அமைத்தல், கோழிகளுக்கான தீவனம் தயாரித்தல், கோழிகளை தாக்கும் நோய்கள் மற்றும் கட்டுபடுத்தும் முறைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில், பல்கலைகழக பேராசிரியர்கள் பேசுகின்றனர். மேலும், செயல்முறை விளக்கம் படக்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முகாமில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த, 18 முதல், 40 வயதுடைய, ஐந்தாம் வகுப்பு படித்தவர்கள் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு, 73390-57073, 04324-294335 ஆகிய எண்களில் வரும், 15 க்குள் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
TNPSC Group 4 போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி – திருவள்ளூர்
தமிழக அரசு அறிவிக்கப்பட உள்ள, குரூப்-4 போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட உள்ள குரூப் – 4 பணி காலியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு, திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக தொடங்கப்பட உள்ளது.மேற்காணும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள, திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம்.
இலவச பயிற்சி வகுப்பு, வேலை நாட்களில் காலை 10:30-மதியம் 1:30 மணி வரை, வரும் 20ம் தேதி முதல் நடைபெறும்.மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 97897 14244 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
🔻🔻🔻
Day 34 | தேவநேயப்பாவாணர்-அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்தரனார்
மனம் உறுதி பெற 10 வழிகள்!
மனதை அலையவிட ஆயிரம் விஷயங்கள் இந்த உலகில் வந்துவிட்டன. தேவையற்றவற்றைத் தேடி ஓடிக் கொண்டிருக்கும் ஓட்டத்தில் மனநலனைப் பாதுகாக்க மறந்து விட்டோம்.
உள்ளன. அந்த வழிகள் இதோ:
இயற்கையோடு இணையலாம்
பூங்கா, காடு, வயல் போன்ற பச்சை நிறம் கொண்ட இடங்களில் மற்றும் ஏரி, கடல் போன்ற நீலநிறம் கொண்ட இடங்களில் நம்முடைய நேரத்தைச் செலவிடும்போதோ, வசிக்கும்போதோ மன அழுத்தம்(stress) மற்றும் மனச்சோர்வு (depression) ஆகியவை குறைவதாகவும் மேலும், கவலையும் அச்சமும் கலந்த மனநிலை(anxiety) கொண்டவர்கள் தெளிவான மனநிலையைப் பெறுகிறார்கள் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே கான்கிரீட் காடுகள் என்று அழைக்கப்படும் நகரங்களுக்கு வெளியே வந்து செயற்கை கருவிகளான கைபேசி, மடிக்கணினி ஆகியவற்றுக்கு விடுப்பு வழங்கிவிட்டு இயற்கையின் அழகை ரசிக்கப் பழகுவோம்.
உங்களிடம் நீங்களே அக்கறை காட்டுங்கள்
மனித வாழ்க்கை என்பது சவால்கள் நிறைந்தது. அத்தகைய சவால்களை எதிர்கொண்டு பாதிக்கப்படும்போது, சிக்கலுக்கு ஆளாகின்றபோதும் நம்மை நாமே குறை விமர்சனம் கூறிக் கொண்டு சுருங்கிவிடக் கூடாது. வாழ்க்கைப் பாடங்கள்தான் நம்மை முழு முனிதனாக ஆக்குகின்றன என்பதை அறிந்து, நீங்கள் தெரியாமல் தவறு செய்துவிட்டாலோ, உங்களிடம் குறைகளைக் கண்டறிந்தாலோ அடுத்தமுறை இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து உங்களை நீங்களே மன்னிக்கப் பழகுங்கள். உங்கள் நண்பன் பிரச்னையில் உள்ளபோது உதவுவதைப் போல அக்கறை. அன்பு மற்றும் புரிதலுடன் உங்களை நீங்களே நடத்திக் கொள்ளுங்கள்.
மற்றவர்களுக்கு உதவலாம்
தன்னார்வ சேவை செய்யும்போதும், பிறருக்கு உதவி செய்யும்போதும் மூளையின் குறிப்பிட்ட பகுதிகள் தூண்டப்பட்டு மனமகிழ்ச்சியை நமக்கு கொடுப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. மேலும், அன்பு மற்றும் உதவி செய்யும் குணத்துடன் இருப்பதால் நாம் வாழ்வின் நோக்கமான நற்பெயரையும் அடையலாம்.
நிகழ்காலத்தில் வாழ்வோம்
நேற்றிலிருந்து கற்றுக் கொள், இன்றைய நாளில் வாழ், நாளை மீது நம்பிக்கை கொள் என்பது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறிய பொன்மொழி. கடந்தகால தவறுகள், கசப்புகளை நினைத்துப் பார்க்காமல், எதிர்காலம் பற்றி பயப்படாமல், தேவையில்லாமல் பிரச்னைகளை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்காமல் இருப்பதன் மூலம், நிகழ்காலத் தருணங்களை அனுபவித்து மகிழ்ச்சியுடன் வாழமுடியும். மாற்ற முடியாதவற்றையும், வேண்டாதவற்றையும் அடிக்கடி மனதில் அசைபோடுவது மனநலனுக்கு நல்லதல்ல என்பதை உணர்ந்து நிகழ்காலத்தில் வாழப் பழகுவோம்.
உறவுகள் இனிமை தரும்
நமக்கு எது மகிழ்ச்சியும், உடல் நலனும் தருகின்றது என்று 80 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த அறிவியல் ஆய்வின் முடிவுகள் கூறும் ஒரே பதில் என்ன தெரியுமா இனிமையான உறவுகள் என்பதுதான். அந்த ஆய்வு முடிவுகள் தி குட் லைஃப் என்ற நூலாகவும் வெளிவந்துள்ளது. இனிய உறவுகளுடன் நாம் நேரம் செலவிடும்போது மகிழ்ச்சியைப் பெறுகின்றோம். அப்படி மகிழ்ச்சியுடன் இருப்பதால் நல்ல உடல் நலம் கிடைக்கின்றது. அவ்வாறு, நல்ல உடல் நலம் நம்முடைய வாழ்நாளை அதிகரிக்கின்றது என்பது அறிவியல் ரீதியாக மேற்கண்ட ஆய்வின் வழியே உறுதியாகி உள்ளது. தனிமையில் இருப்பவர்களின் மகிழ்ச்சியும் வாழ்நாளும் குறைகின்றன. ஆகவே, இனிமையான உறவுகளைப் போற்றிப் பாதுகாப்போம்.
அறிவை வளர்க்கலாம்
ஓவியம், இசை, எழுத்து போன்ற கலைகளில் ஈடுபடுதல், புத்தகம் வாசித்தல், கலை மற்றும் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்றல், புதிய திறன்கள் மற்றும் மொழிகளைக் கற்றல், மூளைக்கு வேலை தரும் விளையாட்டுகளை ஆடுதல் போன்ற செயல்பாடுகளால் நம் மூளை தூண்டப்படுகின்றது. அதனால் இன்பம், அமைதி, பெருமிதம் போன்ற நேர்மறை உணர்ச்சிகளை அனுபவிக்கின்றோம் மற்றும் மனநிறைவையும் உணர்கின்றோம்.
உடம்பை உறுதியாக்கலாம்
தினமும் உடற்பயிற்சிகள் செய்வது, சரிவிகித உணவு உண்பது, போதுமான தண்ணீர் குடிப்பது, நல்ல தூக்கம், மன அழுத்தம் குறைக்கும்விதம் யோகா மற்றும் மூச்சுப் பயிற்சிகள் செய்வது, தீமை விளைவிக்கும் புகை மற்றும் மதுப்பழக்கம் தவிர்ப்பது போன்ற செயல்பாடுகளால் நமது உடல்நலனை அதிகரிக்கலாம். உடல் நலம் மேம்படும்போது மனநலனும் சேர்ந்தே மேம்படும். இலக்குகள் இருக்கட்டும் வாழ்விலேஉடல் எடையைக் குறைப்பது, தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது, தொழிலில் வெற்றிபெறுவது என ஒவ்வொருவருக்கும் ஓர் இலக்கு இருக்கும்.
வாழ்வின் நோக்கத்தை உணர்ந்து அதை நோக்கிப் பயணிக்கும் நமக்கு இலக்குகள் இருப்பது அவசியம். முதன்மையானவற்றிற்கு முக்கியத்துவம் தந்து, நேரம் மற்றும் ஆற்றலை சரியான முறையில் ஒதுக்கி வாழ்வில் சமநிலையைப் பேன இலக்குகள் உதவுகின்றன.
சமூக உறவுகளை உருவாக்கவும், வலுப்படுத்தவும் இலக்குகள் உதவுகின்றன. பிரச்னைகளைக் கையாளுவதற்கான ஊக்கம் மற்றும் கவனத்தை இலக்குகள் கொடுக்கின்றன. வாழ்க்கை மீதான நேர்மறைப் பார்வையை உருவாக்கி நம்பிக்கைப் பாதையில் நாம் நடக்க இலக்குகள் உதவும். நம் சுயமேம்பாட்டிற்கு இலக்குகள் வாய்ப்பு தருகின்றன. சாதிக்கும் உணர்வையும், மனநிறைவையும் இலக்குகளை அடையும்போது நாம் பெறுகின்றோம்.
இலக்குகளை ஏற்படுத்திக் கொள்வதால் நன்மைகள் பல. எனவே, தெளிவான மற்றும் நடைமுறைக்கு பொருத்தமான இலக்குகளை ஏற்படுத்திக் கொண்டு அவற்றை நோக்கி உற்சாகமுடன் முன்னேறுங்கள். பெரிய அளவில் இருக்கும் இலக்குகளை சிறிது சிறிதாகப் பிரித்து பணிகளை எளிமையாக்குங்கள். ஒவ்வொருநாள் காலைப் பொழுதையும் உற்சாகமுடன் துவங்க இலக்குகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
நேர்மறைக் கண்ணோட்டம் வேண்டும்
வாழ்வில் இன்பமும் துன்பமும் இயற்கையே. துன்பங்களில் இருந்து மீண்டெழுவதற்குக் கற்றுக் கொள்ளுங்கள். தோல்விகளிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். தடைக்கற்களை படிக்கற்களாக பார்க்கப் பழகுங்கள். உங்களிடம் இல்லாதவற்றை நினைத்து வருத்தப்படாமல், உங்களிடம் இருப்பவற்றை நினைத்து நன்றியுணர்வுடன் இருங்கள். எதிர்மறையான செய்திகள், உறவுகள் மற்றும் சுழல்களை தவிர்த்துவிடுங்கள்.
உங்களைச் சுற்றிலும் நேர்மறை இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை கொண்டிருங்கள்.
மனதை ஒருமுகப்படுத்தி செயல்களை ரசித்துச் செய்யுங்கள். அது அந்த நாளுக்கு நாம் காட்டும் நன்றியாகும். நேர்மறையான விஷயங்கள் மீது கவனம் செலுத்தி நேர்மறைப் பார்வையில் வாழ்க்கையை நோக்கி, வாழும் வாழ்க்கைக்கு நன்மைகளை ஈர்த்து மனமகிழ்ச்சி பெறுவோம்,உதவி கேட்க தயங்காதீர்கள்நீங்கள் உணர்ச்சிகளைத் கையாளத் தெரியாமல் போராடிக் கொண்டிருந்தாலோ அல்லது மனநலப் பிரச்னைகளுடன் இருந்தாலோ உங்கள் அருகில் இருக்கும் மனநல மருத்துவரையோ, மனநல ஆலோசகரையோ சந்தித்து வழிகாட்டுதலும் உதவியும் பெறுங்கள்.
🔻 🔻 🔻
இதயம், எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவும் பச்சை பட்டாணி: 5 முக்கிய நன்மைகள் இருக்கு
பச்சை பட்டாணி, இது மிகவும் சுவையான காய்கறிகளில் ஒன்று. இந்நிலையில் இதில் ஆரோக்கியம் நிறைந்த விஷயங்கள் உள்ளது.
100 கிராம் பச்சை பட்டாணியில் உள்ள சத்துகளை தெரிந்துகொள்வோம்.
கலோரிகள் : 81
கார்போஹைட்ரேட்: 14.45 கிராம்
நார்சத்து: 5.5 கிராம்
சர்கக்ரை : 5.67 கிராம்
புரத சத்து: 5.42 கிராம்
கொழுப்பு சத்து: 0.4 கிராம்
வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் கே,
வைட்டமின் பி-காம்பிளக்ஸ், கால்சியம், இரும்பு சத்து,
மெக்னீஷியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம், சிங்க்,
ஆண்டி ஆக்ஸிடண்டான பிளப்பநாய்ட்ஸ், கரோடி நாய்ட்ஸ் உள்ளது.
இதில் உள்ள பொட்டாஷியம், நார்சத்து, ஆண்டி ஆக்ஸிடண்ட்,
இதய ரத்த குழாய்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
இதில் உள்ள நார்சத்து, வயிற்றின் செயல்பாடுகளை பாதுகாத்து, மலச்சிக்கலை குறைக்கும்.
இதில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம் எலும்பின்
வளர்ச்சிக்கு உதவுகிறது. இதில் புரத சத்து மற்றும் நார்சத்து உள்ளது என்பதால் இது அதிகம் சாப்பிட்டது போல் உணர்வை கொடுக்கும்.
இதனால் உடல் எடை அதிகரிக்காது.
இதில் உள்ள நார்சத்து, சர்க்கரை அளவை குறைக்க உதவும்.
மேலும் இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்து,
இரும்பு சத்தை உடல் எடுத்துகொள்ள உதவும்.
🔻 🔻 🔻
Day 33 | Poverty & Un-Employment | Indian Economy - 10 |
Day 33 | Election & Political Parties | Indian Polity
Day 33 | உ.வே.சா, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார்
ஆட்டோ இம்யூன் நோய்கள் என்றால் என்ன? பெண்களை இவை அதிகம் பாதிப்பது ஏன்?
Women Health: நமது உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு பல நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்க செயல்படுகிறது. நமது நோயெதிர்ப்பு சக்தி உடலுக்குள் வரும் அனைத்து அயல் பொருட்களுக்கும் எதிராக போராடுகிறது.
பெண்களின் ஆரோக்கியம் மற்றும் ஆட்டோ இம்யூன் நோய்கள் (Women Health and Autoimmune Diseases):
ஆண்களை விட பெண்களில் ஆட்டோ இம்யூன் நோய்கள் (Autoimmune Diseases) அதிகம் காணப்படுகின்றன. ஆட்டோ இம்யூன் நோய்களை பற்றிய முழுமையான புரிதைலை கொண்டிருப்பது, பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை நன்றாக பராமரிக்க மிகவும் உதவும். இந்த நோயின் அறிகுறிகள் மற்றும் தடுப்பு குறித்து இந்த பதிவில் காணலாம்
ஆட்டோ இம்யூன் நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் யார்?
ஆட்டோ இம்யூன் நோய்களில் பரம்பரை முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் B வகை ஆட்டோ இம்யூன் நோய் இருந்தால், நீங்களும் இந்த நோயைப் பெறக்கூடும். மரபியல் காரணிகளுடன், சுற்றுச்சூழல் காரணங்களாலும் இந்த நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆண்களை விட பெண்களுக்கு ஆட்டோ இம்யூன் நோய் ஆபத்து அதிகமாக உள்ளது.
பெண்களுக்கு ஏன் அதிக ஆபத்து?
ஆண்களுடன் ஒப்பிடுகையில், பெண்களுக்கு தொற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால் அவர்களுக்கு தன்னுடல் தாக்க, அதாவது ஆட்டோ இம்யூன் நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் குரோமோசோம்கள் (Chromosome). X குரோமோசோம் (X Chromosome), நோயெதிர்ப்பு அமைப்புடன் தொடர்புடைய பல மரபணுக்களைக் கொண்டுள்ளது. இவற்றின் பங்கு இந்த நோய்களில் சிறிய அளவில் இருக்கின்றது. பெண்களுக்கு இரண்டு X குரோமோசோம்கள் உள்ளன, இதனால் ஆடோ இம்யூனிடிக்கான ஆபத்து அவர்களுக்கு அதிகமாக உள்ளது.
X- இணைக்கப்பட்ட பரம்பரை நோய்களிலிருந்து பெண்கள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள். ஒரு பெண்ணிடம் ஒரு எக்ஸ் க்ரோமோசோமில் மரபணுவின் ஆரோக்கியமான நகல் இருக்கும் வரை, மற்ற ஒரு எக்ஸ் குரோமோசோமில் தவறான மரபணு இருந்தாலும், எந்த வித அறிகுறியும் தெரிவதில்லை.
அதனால்தான் பெண்கள் பெரும்பாலும் ஆண்களை விட நீண்ட காலம் வாழ்கிறார்கள். ஆனால் இரண்டு எக்ஸ் குரோமோசோம்கள் ஆடோ இம்யூன் டிஸார்டரி வாய்ப்புகளை அதிகரிக்கிறது. இதனால் மரபணு தயாரிப்பு (Genetic Mutation), டெலீஷன் (Deletion) அல்லது ட்யூப்லிகேஷன் (Duplication) ஆகியவற்றுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றது. இதனால் மரபணு செயல்பாடு மற்றும் மரபணு வெளிப்பாடு நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் பெண்களில் ஆட்டோ இம்யூன் நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது.
ஆட்டோ இம்யூன் நோய்களின் அறிகுறிகள் எப்படி இருக்கும்? (Symptoms of Autoimmume Diseases)
80 க்கும் மேற்பட்ட வகையான ஆட்டோ இம்யூன் நோய்கள் உள்ளன. பொதுவாக இது முடக்கு வாதம், சொரியாசிஸ், சொரியாடிக் ஆர்த்ரைடிஸ், லூபஸ் போன்ற நோய்களை ஏற்படுத்துகிறது. சில பெண்களில் அதன் அறிகுறிகள் மிகவும் கடுமையானவையாக இருக்கும். சிலருக்கு இது மிகவும் குறைவாக இருக்கும். இது மரபியல், சுற்றுச்சூழல் மற்றும் தனிப்பட்ட ஆரோக்கியம் காரணமாக நிகழ்கிறது.
ஆட்டோ இம்யூன் நோய்களை எவ்வாறு கண்டறிவது
ஆட்டோ இம்யூன் நோயைப் பற்றி அறிய, மருத்துவர்கள் நோயாளியின் முழுமையான மருத்துவ வரலாற்றை ஆயுவு செய்கிறார்கள். மருத்துவர்கள் நோயாளியின் உடல் பரிசோதனை செய்து, இரத்தத்தில் உள்ள ஆட்டோஆன்டிபாடிகளைக் கண்டறிய இரத்தப் பரிசோதனையும் செய்கிறார்கள்.
ஆட்டோ இம்யூன் நோய் இருந்தால் என்ன சாப்பிட வேண்டும்
- தானியங்களில், பழைய அரிசி, பார்லி, சோளம், கம்பு, கோதுமை, தினை மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றை உட்கொள்ளுங்கள்.
- பருப்பு வகைகளில், பயத்தம் பருப்பு, மசூர் பருப்பு மற்றும் கருப்பு பருப்பு சாப்பிட வேண்டும். இது தவிர, பட்டாணி மற்றும் சோயாபீன் ஆகியவை நன்மை பயக்கும்.
-பழங்கள்மற்றும் காய்கறிகளில், பப்பாளி, ஆப்பிள், கொய்யா, செர்ரி, ப்ளாக்பெர்ரி, ஆப்ரிகாட், மாம்பழம், தர்பூசணி, வெண்ணெய், அன்னாசி, வாழைப்பழம், கோவைக்காய், பாகற்காய், பாக்கு, பூசணி, ப்ரோக்கோலி போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.
🔻 🔻 🔻
உங்க எலும்பை இரும்புபோல வலுவாக வைத்திருக்க... இந்த 7 பானங்களை மறக்காம குடிங்க...!
வலிமையான எலும்புகளை உருவாக்குவது மற்றும் பராமரிப்பது என்று வரும்போது, அது எடையைத் தூக்குவது மற்றும் ஜிம்மிற்கு செல்வது மட்டுமல்ல.
வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிப்பது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு முக்கியமானது. மேலும் எலும்பு ஆரோக்கியத்திற்கு சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். நீங்கள் போதுமான கால்சியம் மற்றும் வைட்டமின் டி பெறுவதை உறுதி செய்வது எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.
மேலும் உங்கள் எலும்பு அமைப்பை வலுப்படுத்த உதவும் சுவையான மற்றும் சத்தான பானங்கள் என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
கால்சியம் மற்றும் வைட்டமின் டியின் தினசரி தேவைகள்
எலும்பை அதிகரிக்கும் பானங்களின் புத்துணர்ச்சியூட்டும் உலகிற்குள் நாம் நுழைவதற்கு முன், எலும்பு ஆரோக்கியத்திற்குப் பின்னால் உள்ள ஆற்றல்மிக்க இரட்டை சத்துக்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். அவை கால்சியம் மற்றும் வைட்டமின் டி. கால்சியம் உங்கள் எலும்புகளுக்கான கட்டுமானப் பொருள் போன்றது. அதே சமயம் வைட்டமின் டி திறமையான பில்டராக செயல்படுகிறது, உங்கள் உடலை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
மேலும் அந்த கால்சியத்தை திறம்பட பயன்படுத்தவும். ஒன்றாக, அவை வலுவான மற்றும் மீள் எலும்புகளின் மூலக்கல்லாக அமைகின்றன. உங்கள் எலும்புகளை ஆரோக்கியமான நிலையில் வைத்திருக்க, பெரியவர்களுக்கு தினமும் 10 மைக்ரோகிராம் (400 IU) வைட்டமின் டி மற்றும் 700mg கால்சியம் தேவைப்படுகிறது.
இந்த இலக்குகளை அடைவது என்பது உங்கள் சமச்சீர் உணவின் ஒரு பகுதியாக பலவிதமான பானங்களை அனுபவிப்பது போல எளிமையானதாக இருக்கலாம்.
பால்
பால் ஒரு நல்ல கால்சியம் மூலமாக உள்ளது, எலும்பு ஆரோக்கியத்திற்கு ஒரு முக்கிய மூலக்கல்லாக உள்ளது. நீங்கள் பாரம்பரிய பசுவின் பால் அல்லது தாவர அடிப்படையிலான மாற்றீட்டிற்கு செல்லலாம். இது கால்சியத்துடன் வலுவூட்டப்பட்டிருப்பதை உறுதிசெய்து, எலும்புகளை நேசிக்கும் நன்மையின் கூடுதல் பராமரிப்பை பெறலாம்.
இது எலும்பின் வலிமையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பல்வேறு வகையான உணவு விருப்பங்களையும் வழங்குகிறது. இது எந்த எலும்பு-உணர்வு முறையிலும் பல்துறை மற்றும் இன்றியமையாத அங்கமாக அமைகிறது.
சோயா பால்
பால் உங்கள் கப் தேநீர் இல்லை என்றால், கவலைப்பட வேண்டாம். சோயா பால் சரியான மாற்றாக இருக்கும். கால்சியம் ஊக்கத்துடன் ஒரு முழுமையான புரத தொகுப்பையும் வழங்குகிறது. தாவர அடிப்படையிலான வாழ்க்கை முறையைத் தழுவுபவர்களுக்கு ஏற்றவாறு, இந்த சத்தான பானம் ஆரோக்கியமான எலும்புகளுக்கு ஒரு தேர்வாகிறது.
முழுமையான புரதங்கள் மற்றும் கால்சியத்தின் நன்மையுடன், சோயா பால் எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிப்பது மட்டுமல்லாமல், வலுவான மற்றும் மீள்தன்மையுள்ள எலும்புகளை பராமரிப்பதற்கான ஆரோக்கியமான, தாவரத்தால் இயங்கும் அணுகுமுறையை விரும்புவோரின் விருப்பங்களையும் வழங்குகிறது.
பச்சை ஸ்மூத்தி
இயற்கையில் இருந்து கால்சியம் நிறைந்த இலை கீரைகள் நிரம்பிய பச்சை ஸ்மூத்தியின் நன்மையை அனுபவிக்க வேண்டும். கீரை, கோஸ் மற்றும் பிற இலை கீரைகள் உங்கள் பானத்திற்கு புத்துணர்ச்சியூட்டும் திருப்பத்தை சேர்ப்பது மட்டுமல்லாமல், வலுவான எலும்பு ஆரோக்கியத்திற்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களாகவும் செயல்படுகின்றன.
இந்த பச்சை இலை கீரைகள் அதிசயங்களில் காணப்படும் ஊட்டமளிக்கும் மற்றும் எலும்புகளை ஆதரிக்கும் கூறுகளுடன், இந்த சுவையான கலவையானது உங்கள் பருகுதல் அனுபவத்தை மேம்படுத்தும். ஒவ்வொரு சிப்பும் உங்கள் எலும்புகளின் நல்வாழ்வுக்கு பங்களிக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.
ப்ரோக்கோலி ஜூஸ்
ப்ரோக்கோலி சாற்றின் அனுபவத்துடன் உங்கள் நாவின் சுவை மொட்டுகளை மகிழ்விக்கவும். ஒரு தனித்துவமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த சாறு உங்கள் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. கால்சியம் மற்றும் இதர எலும்பை விரும்பும் சத்துக்கள் கொண்ட இந்த பானம் உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை உயர்த்துவதற்கான ஒரு அருமையான வழியாகும்.
திரவ வடிவில் உள்ள இந்த காய்கறியின் நன்மைகள், ஒவ்வொரு சிப்பும் உங்கள் எலும்புகளின் வலிமைக்கு சுவையான மற்றும் ஊட்டமளிக்கும் பங்களிப்பாக மாறுவதை உறுதி செய்கிறது.
ஆரஞ்சு சாறு
ஒரு கிளாஸ் புதிய ஆரஞ்சு சாறுடன் புத்துணர்ச்சியூட்டும் குறிப்பில் உங்கள் நாளைத் தொடங்குங்கள். இந்த சிட்ரஸ் மகிழ்ச்சியானது அதன் கசப்பான சுவைக்கு அப்பாற்பட்டது. வலுவான எலும்புகளுக்கு கொலாஜன் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு பணக்கார வைட்டமின் சி உள்ளடக்கத்தை பெருமைப்படுத்துகிறது.
இது உங்கள் எலும்புக்கு உகந்த பானங்களின் வரிசைக்கு பங்களிப்பது மட்டுமல்லாமல், அதன் மகிழ்ச்சிகரமான இயல்பு உங்கள் காலை வழக்கத்திற்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
கிரீன் டீ
பச்சை தேயிலையின் நன்மைகளுக்காக உங்கள் சாதாரண கப் தேநீரை வர்த்தகம் செய்யுங்கள். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இந்த இனிமையான பானம் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த எலும்பு ஆரோக்கியத்தையும் பராமரிக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. உங்கள் எலும்புகளை உள்ளே இருந்து கவனித்துக்கொள்ளும் ஆறுதலான பழக்கமான கிரீன் டீக்கு மாறவும்.
எலும்பு குழம்பு
எலும்பு குழம்பு கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட முக்கிய தாதுக்களால் நிறைந்துள்ளது. கொலாஜன் நிறைந்த பானம் எலும்புகளுக்கு தேவையான கட்டுமானத் தொகுதிகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், எலும்பு கட்டமைப்பிற்கு வலுவான ஆதரவையும் வழங்குகிறது.
ஒவ்வொரு சிப்பிலும், நீங்கள் ஒரு சுவையான கலவையை அனுபவிப்பது மட்டுமல்லாமல், உங்கள் எலும்புகளுக்கு உள்ளிருந்து ஊட்டமளிக்கும் அனுபவத்தையும் வழங்குகிறீர்கள்.
🔻 🔻 🔻
எடை இழப்பு முதல் செரிமானம் வரை: வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் ஏகப்பட்ட நன்மைகள்!!
தினமும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.
வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் (Health Benefits of Drinking Warm Water)
ஆயுர்வேதத்தில், தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரை உட்கொள்வது சிறந்ததாக கருதப்படுகிறது. ஆனால் இதை உட்கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றியும் குறிப்பிட்ட தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. வெந்நீரின் நன்மைகள் மற்றும் 21 நாட்களுக்கு வெந்நீரை தொடர்ந்து குடிப்பதால் ஏற்படும் நல்ல விளைவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம். இது தவிர, வெந்நீரை எப்போது குடிக்கக் கூடாது? இதைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
எடை இழப்பு (Weight Loss)
எடை இழப்புக்கானபல வழிகளை பற்றி நாம் தினமும் கேள்விப்படுகிறோம். ஜிம் செல்வது, பல வித உணவு கட்டுப்பாடுகளை மெற்கொள்வது என நாம் பல வித முயற்சிகளை எடுக்கிறோம். ஆனால் மிக எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அதில் வெந்நீர் உட்கொள்வதும் ஒன்று. இதனால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது. வெந்நீர் மூலம் உடல் எடையை குறைப்பதால் எந்த செலவும் இல்லாமல் உடல் ஆரோக்கியத்தையும் எளிதாக பராமரித்து, உடல் எடையையும் குறைக்க முடியும்.
ஆயுர்வேதத்தில் மட்டுமல்ல, நவீன ஆய்வுகளிலும், வெந்நீரை உட்கொள்வது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. குளிர்ந்த நீரைக் குடிப்பதை விட வெந்நீரைக் குடிப்பது அதிக பலன் தருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. A குழுவிற்கு சாதாரண நீரும், B குழுவிற்கு வெந்நீரும் கொடுக்கப்பட்டபோது. வெந்நீர் அருந்தியவர்களின் வளர்சிதை மாற்றம் சிறப்பாக இருப்பது ஆய்வில் காணப்பட்டது. தினமும் 2 லிட்டர் வெந்நீரை உட்கொள்வது அவர்களது உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இது அவர்கள் சுறுசுறுப்பாக இருக்க உதவியாக இருந்தது.
வெந்நீர் 3 வழிகளில் உடல் எடையை குறைக்க உதவுகிறது
- உணவை ஜீரணிக்க (Digestion) உதவுகிறது - சூடான நீரை உட்கொள்வதால் உணவை எளிதில் ஜீரணிக்க முடியும்.
- வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது - உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க சூடான நீர் உதவுகிறது.
- பசியைக் குறைக்கிறது - உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் வெந்நீரைக் குடிப்பது உங்களுக்கு நன்மை பயக்கும்.
எவ்வளவு வெந்நீர் அருந்துவது சரியானது?
அதிக சூடான நீரைக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். நன்மைகளுடன், பொருட்களை தவறாக உட்கொள்வதும் தீங்கு விளைவிக்கும். 54 முதல் 70 டிகிரி வரையிலான வெப்பநிலையுடன் சூடான நீரை குடிப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இந்த வகை நீர் மூளைக்கும் நல்லது என்று கருதப்படுகிறது.
மன அழுத்தத்தை போக்கவும் உதவுகிறது
வெந்நீர் மன அழுத்தத்தைக் (Blood Pressure) குறைப்பதற்கும் உதவியாகக் கருதப்படுகிறது. மன அழுத்தம் உள்ளவர்கள் எந்த மருந்தையும் உட்கொள்வதற்குப் பதிலாக, முதலில் ஆழ்ந்த மூச்சை எடுத்து பின்னர் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது நல்லது. இது உங்களை மிகவும் நன்றாக உணர வைக்கும்.
சோம்பு தண்ணீரும் நன்மை பயக்கும்
சோம்பு தண்ணீரும் உங்களை அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் உணர மிகவும் உதவியாக இருக்கும். சோம்பை தண்ணீரில் கலந்து கொதிக்கவைத்து, வடிகட்டியின் உதவியுடன் வடிகட்டி தண்ணீரை உட்கொள்ளவும்.
🔻 🔻 🔻
SAIL நிறுவனத்தில் Lab Technician காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க || நேர்காணல் மட்டுமே!
SAIL நிறுவனத்தில் Lab Technician காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க || நேர்காணல் மட்டுமே!
Steel Authority of India Limited எனப்படும் SAIL நிறுவனம் ஆனது Proficiency Training of Pharmacist, Lab Technician பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 13 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.20,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன
SAIL காலிப்பணியிடங்கள்:
Proficiency Training of Pharmacist, Lab Technician பணிக்கென காலியாக உள்ள 13 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Lab Technician கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு / Diploma / Degree / DMLT / B.Sc. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SAIL வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Lab Technician ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.17,000/- முதல் ரூ.20,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SAIL தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 28.12.2023 ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Download Notification PDF
🔻🔻🔻
சென்னை Cognizant நிறுவனத்தில் வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான சூப்பரான வேலைவாய்ப்பு!
சென்னை Cognizant நிறுவனத்தில் வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான சூப்பரான வேலைவாய்ப்பு!
Manager (Projects) பணிக்கென Cognizant நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Cognizant காலிப்பணியிடங்கள்:
Manager (Projects) பணிக்கென பல்வேறு பணியிடங்கள் Cognizant நிறுவனத்தில் காலியாக உள்ளது.
Manager கல்வி தகுதி:
இந்த Cognizant நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் BE, B.Sc, M.Sc, MCA ஆகிய டிகிரிகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
Manager பிற தகுதி:
- SFDC Dev & Customization
- ANSI SQL
- Core Java
Manager பணியமர்த்தப்படும் இடம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் சென்னையில் உள்ள Cognizant நிறுவனத்தில் பணியமர்த்தப்பட உள்ளார்கள்.
Cognizant தேர்வு முறை:
Manager (Projects) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல், திறன் தேர்வு, எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Cognizant விண்ணப்பிக்கும் முறை:
இந்த Cognizant நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கென தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.
Download Notification & Application Form Link
🔻🔻🔻