Agri Info

Adding Green to your Life

December 21, 2023

Wipro நிறுவனத்தில் பணிபுரிய வேண்டுமா? அப்போ உடனே விண்ணப்பியுங்கள்!

December 21, 2023 0

 

Wipro நிறுவனத்தில் பணிபுரிய வேண்டுமா? அப்போ உடனே விண்ணப்பியுங்கள்!

பிரபல IT நிறுவனங்களில் ஒன்றான Wipro-வில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் Technical Lead பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Wipro பணியிடங்கள்:

Wipro நிறுவனத்தில் காலியாக உள்ள Technical Lead பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Technical Lead கல்வி விவரம்:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Technical Lead பணியமர்த்தப்படும் இடம்:

Technical Lead பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ஹைதராபாத்தில் உள்ள Wipro நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

Technical Lead சம்பள விவரம்:

இந்த Wipro நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.

Wipro தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview, Written Test, Technical Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Wipro விண்ணப்பிக்கும் வழிமுறை:

Technical Lead பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification & Application Link


🔻🔻🔻

December 20, 2023

TNPSC - Annual Planner - Programme of Examinations - 2024 Published

December 20, 2023 0

 TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION Annual Planner - Programme of Examinations - 2024


குரூப்-4 தேர்வுக்காக அறிவிக்கை அடுத்தாண்டு ஜனவரியில் வெளியிடப்பட்டு ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படும் எனவும், குரூப்-2, 2A தேர்வுக்கான அறிவிக்கை மே மாதம் வெளியிடப்பட்டு ஆகஸ்ட்-ல் தேர்வு நடத்தப்படும் எனவும் TNPSC அறிவிப்பு.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Day 38 | Unit 8 | Early Resistance against British Rule | Part 2

December 20, 2023 0

Day 38 | Unit 8 | Strategy & Early Resistance against British Rule

December 20, 2023 0

Day 38 | திருவிளையாடற் புராணம், தேம்பாவணி, சீறாப்புராணம்

December 20, 2023 0

December 19, 2023

Bank of Baroda வங்கியில் Executive ஆக பணிபுரிய வாய்ப்பு – அரிய வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!

December 19, 2023 0

 

Bank of Baroda வங்கியில் Executive ஆக பணிபுரிய வாய்ப்பு – அரிய வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!

Bank of Baroda வங்கியில் (BOB Bank) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Retired Executive பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 08.01.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Bank of Baroda காலியிடங்கள்:

Retired Executive பணிக்கென பல்வேறு பணியிடங்கள் Bank of Baroda வங்கியில் (BOB Bank) காலியாக உள்ளது.

Retired Executive பணிக்கான தகுதி:

இந்த Bank of Baroda வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் வங்கிகளில் பணி சார்ந்த துறைகளில் TEG / S-VI என்ற பிரிவின் கீழ் வரும் பதவிகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.

Retired Executive வயது:

Retired Executive பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 70 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.

Retired Executive ஊதியம்:

இந்த Bank of Baroda வங்கி பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

BOB Bank தேர்வு செய்யும் முறை:

Retired Executive பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

BOB Bank விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த Bank of Baroda வங்கி பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து Zonal Office-ன் முகவரிக்கு 08.01.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Link

🔻🔻🔻

பாரதியார் பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் Technical Assistant பணியிடம் – டிகிரி தேர்ச்சி போதும்!

December 19, 2023 0

 

பாரதியார் பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் Technical Assistant பணியிடம் – டிகிரி தேர்ச்சி போதும்!

பாரதியார் பல்கலைக்கழகத்தில் (Bharathiar University) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Technical Assistant பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இப்பொழுதே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

பாரதியார் பல்கலைக்கழக காலியிடங்கள்:

பாரதியார் பல்கலைக்கழகத்தில் Technical Assistant பணிக்கென 07 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Technical Assistant கல்வி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் M.Sc பட்டம் பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே Technical Assistant பணிக்கென ஏற்றுக்கொள்ளப்படும்.

Technical Assistant வயது:

Technical Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

Technical Assistant மாத ஊதியம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.10,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

Technical Assistant தேர்வு செய்யும் முறை:

இந்த பாரதியார் பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு தகுதியான நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Technical Assistant விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு 27.12.2023 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Form PDF

🔻🔻🔻

TVS Motor நிறுவனத்தில் Diploma / Degree முடித்தவர்களுக்கு வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!

December 19, 2023 0

 

TVS Motor நிறுவனத்தில் Diploma / Degree முடித்தவர்களுக்கு வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!

Lead – OFG (TQM) பணிக்கென TVS Motor நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் சிறிதும் தாமதிக்காமல் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

TVS Motor பணியிடங்கள்:

Lead – OFG (TQM) பணிக்கென பல்வேறு பணியிடங்கள் TVS Motor நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Lead கல்வி விவரம்:

இந்த TVS Motor நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Lead அனுபவ விவரம்:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

Lead சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் TVS Motor நிறுவன விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.

TVS Motor தேர்வு முறை:

Lead – OFG (TQM) பணிக்கு பொருத்தமான நபர்கள் Interview, Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TVS Motor விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification & Application Form Link


🔻🔻🔻

சென்னை பெருநகர வளர்ச்சி குழும வேலை வாய்ப்பு; 38 பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க!

December 19, 2023 0

 சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் (CMDA) பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

மொத்தம் 38 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. 

இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் 29.12.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Transport Planner

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Postgraduate in Transport planning படித்திருக்க வேண்டும். 

மேலும் 0-2 வருட பணி அனுபவம் அவசியம்.

Environmental Planner

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Postgraduate in Environmental planning படித்திருக்க வேண்டும். 

மேலும் 0-2 வருட பணி அனுபவம் அவசியம்.

Urban Designer

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Postgraduate in Urban Design படித்திருக்க வேண்டும். 

மேலும் 0-2 வருட பணி அனுபவம் அவசியம்.

Hydrologist

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Postgraduate in Hydrology படித்திருக்க வேண்டும். 

மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.

Geologist

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Postgraduate in Geology படித்திருக்க வேண்டும். 

மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.

Urban Planner

காலியிடங்களின் எண்ணிக்கை : 33

கல்வித் தகுதி : Postgraduate in Urban Planning படித்திருக்க வேண்டும்.

 மேலும் 0-2 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: அனைத்து பணியிடங்களுக்கும் ரூ 40,000 – 60,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeXUBmqPGK4pnTqClJ57JQOlSq4SMdDrjnH901JsnSykHsAxw/viewform?usp=send_form என்ற இணையதளப் பக்கம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.12.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக 

மேலும் விவரங்கள் அறிய http://www.cmdachennai.gov.in/ என்ற 

இணையதளப் பக்கத்தை பார்வையிடவும்.

🔻🔻🔻

Day 37 | Ages & Mixture | Ratio & Proportion - 2 | Aptitude

December 19, 2023 0

Day 37 | Indian National Movement | Emergence of Leaders 2

December 19, 2023 0

Day 37 | பெரிய புராணம் - நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

December 19, 2023 0

Day 36 | Indian National Movement | Emergence of Leaders

December 19, 2023 0

Day 36 | Ratio & Proportion | Aptitude & Mental Ability

December 19, 2023 0

December 17, 2023

Day 36 | இலக்கியம் | ஐம்பெரும், ஐஞ்சிறுங்காப்பியங்கள்

December 17, 2023 0

JIPMER நிறுவனத்தில் மாதம் ரூ.35,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

December 17, 2023 0

 

JIPMER நிறுவனத்தில் மாதம் ரூ.35,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

ஜிப்மர் தடுப்பு மற்றும் சமூக மருத்துவத் துறையில் SENOIR CLINICAL TRIAL COORDINATOR பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் 29-12-2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

SENOIR CLINICAL TRIAL COORDINATOR தகுதி விவரங்கள்:
  • காலிப்பணியிடங்கள்: 1
  • சம்பளம்: மாதம் ரூ.35,000/-
  • அதிகபட்ச வயது வரம்பு: 31-12-2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும்.
  • கல்வி தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி னறிவுணம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து A Master degree in Life Sciences/ Paramedical sciences / Pharm.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
COORDINATOR தேர்வு செயல்முறை:

ஜிப்மர் மருத்துவமனை பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 29-12-2023 அன்று நடைபெற உள்ளது. நேர்காணல் போது எழுத்து தேர்வும் நடைபெற உள்ளது.

JIPMER விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 29-12-2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download JIPMER Notification2023 Pdf


🔻🔻🔻

அங்கக வேளாண்மையில் காய்கறி உற்பத்தி பயிற்சி: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அழைப்பு

December 17, 2023 0

 சென்னையில் வரும் 21-ம் தேதி நடைபெறும் அங்கக வேளாண்மையில் காய்கறி உற்பத்தி செய்வதற்கான பயிற்சி வகுப்பில் விருப்பமுள்ளவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சிமைய தலைவர் ஏ.டி.அசோக் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில், வரும் 21-ம் தேதி, அங்கக வேளாண்மையில் காய்கறி உற்பத்தி செய்வதற்கான பயிற்சி, செயல்முறை விளக்கத்துடன் அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சி வகுப்பில் இயற்கை வேளாண்மையின் கொள்கைகள், மண் வள வேளாண்மை, இயற்கை முறையில் ஊட்டச்சத்து தயாரித்தல், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, அங்கக தரச் சான்றிதழ் பெறுவது ஆகியவை தொடர்பாக சிறப்பு தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துரையாடுகின்றனர். இதை விவசாயிகள், மகளிர், இளைஞர்கள், தொழில்முனைவோர், சுயஉதவிக் குழுக்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ளலாம். பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் 044-29530048 என்ற தொலைபேசி எண்ணில்தொடர்புகொண்டு, முன் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻

மகளிர்க்கு கயிறு வாரியம் மூலம் பயிற்சி...! அரசு உதவினால் நாங்களும் தொழில் முனைவோர் ஆகலாம்.

December 17, 2023 0

 கிராமப்புறங்களில் பெண்கள் பெருமளவில் தங்களின் சுய வருமானம் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது சுய தொழில் செய்வதற்கு சில பெண்கள் மட்டுமே முயற்சி மேற்கொள்ளும் நிலையில் இருந்து வருகிறது.

பெண்கள் சுய தொழிலில் ஈடுபடுவதற்கு மிகவும் பயனுள்ள வகையிலும். திருவாரூர் மாவட்டத்தில் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக சவுத் இந்தியன் அசோசியேஷன் என் ஜி ஓ ட்ரஸ்ட் (South Indian NGO association trust) மூலமாக கயிறு வாரியத்துடன் இணைந்து சுய உதவி குழுக்களை சேர்ந்த மகளிர்க்கு தேங்காய் நாரில் மதிப்பு கூட்டப்பட்ட மிதியடிகள் தயாரிப்பு பயிற்சியினை வழங்கி வருகின்றனர்.

இந்த பயிற்சியில் திருவாரூர் மாவட்டம் பின்னவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட சுமார் 20 மகளிர் மிதியடிகள் தயாரிக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பயிற்சியில் தேங்காய் நார் கொண்டு கயிறுகள் தயாரிப்பதும், தேங்காய் நாரை கொண்டு மிதி அடிகள் தயாரிப்பதும் இரண்டு மாத கால பயிற்சியாக வழங்கப்பட்டு வருகிறது.

பயிற்சி மேற்கொள்ளும் மகளிர் பயிற்சியின் நிறைவில் சுய தொழில் செய்வதற்கான வங்கி கடன் தன்னார்வ தொண்டு நிறுவனம் பெற்றுத் தருகிறது இதன் மூலம் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரம் மேம்படும். கடந்த 15 நாட்களாக தேங்காய் நாரிலிருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு முறையான மிதியடிகள் பயிற்சி வகுப்பில் சேர்ந்து கற்று வருவதாக பயனாளி தெரிவித்தார்.

இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது என்றும், தேங்காய் நார் மூலமாக மிதியடிகள் தயாரித்து எங்கள் வருமானத்தை மேலும் மேம்படுத்த இம்மாதிரியான பயிற்சி வகுப்புகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளதாக தெரிவித்தார்.

பயிற்சி முடிவுற்றதும் அரசு சுயதொழில் செய்வதற்கான கடன் உதவி வழங்கினால் தாங்கள் அனைவரும் சுய உதவிக் குழுக்களுடன் இணைந்து சுயதொழில் செய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பயனாளி.


🔻🔻🔻

அண்ணா பல்கலை. வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு, பி.இ படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

December 17, 2023 0

 அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியியல் படிப்புகளுக்கான தமிழ் மேம்பாட்டு மையத்தில் உதவியாளர் மற்றும் ப்யூன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 26.12.2023

Professional Assistant I / II

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : B.E/B.Tech (CSE/IT) or M.Sc (CSE/IT) படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 01.12.2023 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : நாள் ஒன்றுக்கு ரூ. 819 - 872

Peon

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : நாள் ஒன்றுக்கு ரூ. 471

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.annauniv.edu/pdf/CDTET-recruitment-Advrtmnt-Dec2023.pdf

என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள

 விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் 

கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்

முகவரி: Dr.P.Uma Maheswari, Professor & Director, 

Centre for Development of Tamil in Engg. & Tech. Hall No. 310 &, 

Centre for Excellence Building Anna University, Chennai – 600 025

விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.12.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய 

https://www.annauniv.edu/pdf/CDTET-recruitment-Advrtmnt-Dec2023.pdf 

என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.


🔻🔻🔻

December 16, 2023

Day 34 | Indian Judiciary | Indian Polity

December 16, 2023 0

December 15, 2023

டிசம்பர் 18 கோழி வளர்ப்பு இலவச பயிற்சி

December 15, 2023 0

 கால்நடை மருத்துவ பல்கலை கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும், 18ல் இலவச கோழி வளர்ப்பு பயிற்சி முகாம் தொடங்குகிறது.இதுகுறித்து, ஆராய்ச்சி மைய தலைவர் அமுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரூர் பண்டுதகாரன்புதுார் கால்நடை மருத்துவ பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும், 18 முதல், 23 வரை இலவச கோழி வளர்ப்பு பயிற்சி முகாம் நடக்கிறது.

அதில், புறக்கடை கோழி வளர்ப்பில் உள்ள நவீன தொழில் நுட்பங்கள், கோழியினங்கள், கொட்டகை அமைத்தல், கோழிகளுக்கான தீவனம் தயாரித்தல், கோழிகளை தாக்கும் நோய்கள் மற்றும் கட்டுபடுத்தும் முறைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில், பல்கலைகழக பேராசிரியர்கள் பேசுகின்றனர். மேலும், செயல்முறை விளக்கம் படக்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முகாமில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த, 18 முதல், 40 வயதுடைய, ஐந்தாம் வகுப்பு படித்தவர்கள் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு, 73390-57073, 04324-294335 ஆகிய எண்களில் வரும், 15 க்குள் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

TNPSC Group 4 போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி – திருவள்ளூர்

December 15, 2023 0

 தமிழக அரசு அறிவிக்கப்பட உள்ள, குரூப்-4 போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட உள்ள குரூப் – 4 பணி காலியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு, திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக தொடங்கப்பட உள்ளது.மேற்காணும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள, திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம்.

இலவச பயிற்சி வகுப்பு, வேலை நாட்களில் காலை 10:30-மதியம் 1:30 மணி வரை, வரும் 20ம் தேதி முதல் நடைபெறும்.மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 97897 14244 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Day 34 | தேவநேயப்பாவாணர்-அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்தரனார்

December 15, 2023 0

மனம் உறுதி பெற 10 வழிகள்!

December 15, 2023 0

 னதை அலையவிட ஆயிரம் விஷயங்கள் இந்த உலகில் வந்துவிட்டன. தேவையற்றவற்றைத் தேடி ஓடிக் கொண்டிருக்கும் ஓட்டத்தில் மனநலனைப் பாதுகாக்க மறந்து விட்டோம்.

முடிவில், மனமகிழ்ச்சியின்றி இருக்கின்றோம். வாழ்வின் பொருள் மற்றும் இலக்கு என்பது மன மகிழ்ச்சிதான். மன மகிழ்ச்சியோடு இருப்பதுதான் நல்ல மனநலனுக்கான அறிகுறி, நம்மைச் சுற்றிலும், நமக்குள்ளேயும் மன மகிழ்ச்சி மற்றும் மனநலனுக்கான வாசல்கள் திறந்தே
உள்ளன. அந்த வழிகள் இதோ:

இயற்கையோடு இணையலாம்

பூங்கா, காடு, வயல் போன்ற பச்சை நிறம் கொண்ட இடங்களில் மற்றும் ஏரி, கடல் போன்ற நீலநிறம் கொண்ட இடங்களில் நம்முடைய நேரத்தைச் செலவிடும்போதோ, வசிக்கும்போதோ மன அழுத்தம்(stress) மற்றும் மனச்சோர்வு (depression) ஆகியவை குறைவதாகவும் மேலும், கவலையும் அச்சமும் கலந்த மனநிலை(anxiety) கொண்டவர்கள் தெளிவான மனநிலையைப் பெறுகிறார்கள் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே கான்கிரீட் காடுகள் என்று அழைக்கப்படும் நகரங்களுக்கு வெளியே வந்து செயற்கை கருவிகளான கைபேசி, மடிக்கணினி ஆகியவற்றுக்கு விடுப்பு வழங்கிவிட்டு இயற்கையின் அழகை ரசிக்கப் பழகுவோம்.

உங்களிடம் நீங்களே அக்கறை காட்டுங்கள்

மனித வாழ்க்கை என்பது சவால்கள் நிறைந்தது. அத்தகைய சவால்களை எதிர்கொண்டு பாதிக்கப்படும்போது, சிக்கலுக்கு ஆளாகின்றபோதும் நம்மை நாமே குறை விமர்சனம் கூறிக் கொண்டு சுருங்கிவிடக் கூடாது. வாழ்க்கைப் பாடங்கள்தான் நம்மை முழு முனிதனாக ஆக்குகின்றன என்பதை அறிந்து, நீங்கள் தெரியாமல் தவறு செய்துவிட்டாலோ, உங்களிடம் குறைகளைக் கண்டறிந்தாலோ அடுத்தமுறை இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து உங்களை நீங்களே மன்னிக்கப் பழகுங்கள். உங்கள் நண்பன் பிரச்னையில் உள்ளபோது உதவுவதைப் போல அக்கறை. அன்பு மற்றும் புரிதலுடன் உங்களை நீங்களே நடத்திக் கொள்ளுங்கள்.

மற்றவர்களுக்கு உதவலாம்

தன்னார்வ சேவை செய்யும்போதும், பிறருக்கு உதவி செய்யும்போதும் மூளையின் குறிப்பிட்ட பகுதிகள் தூண்டப்பட்டு மனமகிழ்ச்சியை நமக்கு கொடுப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. மேலும், அன்பு மற்றும் உதவி செய்யும் குணத்துடன் இருப்பதால் நாம் வாழ்வின் நோக்கமான நற்பெயரையும் அடையலாம்.

நிகழ்காலத்தில் வாழ்வோம்

நேற்றிலிருந்து கற்றுக் கொள், இன்றைய நாளில் வாழ், நாளை மீது நம்பிக்கை கொள் என்பது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறிய பொன்மொழி. கடந்தகால தவறுகள், கசப்புகளை நினைத்துப் பார்க்காமல், எதிர்காலம் பற்றி பயப்படாமல், தேவையில்லாமல் பிரச்னைகளை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்காமல் இருப்பதன் மூலம், நிகழ்காலத் தருணங்களை அனுபவித்து மகிழ்ச்சியுடன் வாழமுடியும். மாற்ற முடியாதவற்றையும், வேண்டாதவற்றையும் அடிக்கடி மனதில் அசைபோடுவது மனநலனுக்கு நல்லதல்ல என்பதை உணர்ந்து நிகழ்காலத்தில் வாழப் பழகுவோம்.

உறவுகள் இனிமை தரும்

நமக்கு எது மகிழ்ச்சியும், உடல் நலனும் தருகின்றது என்று 80 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த அறிவியல் ஆய்வின் முடிவுகள் கூறும் ஒரே பதில் என்ன தெரியுமா இனிமையான உறவுகள் என்பதுதான். அந்த ஆய்வு முடிவுகள் தி குட் லைஃப் என்ற நூலாகவும் வெளிவந்துள்ளது. இனிய உறவுகளுடன் நாம் நேரம் செலவிடும்போது மகிழ்ச்சியைப் பெறுகின்றோம். அப்படி மகிழ்ச்சியுடன் இருப்பதால் நல்ல உடல் நலம் கிடைக்கின்றது. அவ்வாறு, நல்ல உடல் நலம் நம்முடைய வாழ்நாளை அதிகரிக்கின்றது என்பது அறிவியல் ரீதியாக மேற்கண்ட ஆய்வின் வழியே உறுதியாகி உள்ளது. தனிமையில் இருப்பவர்களின் மகிழ்ச்சியும் வாழ்நாளும் குறைகின்றன. ஆகவே, இனிமையான உறவுகளைப் போற்றிப் பாதுகாப்போம்.

அறிவை வளர்க்கலாம்

ஓவியம், இசை, எழுத்து போன்ற கலைகளில் ஈடுபடுதல், புத்தகம் வாசித்தல், கலை மற்றும் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்றல், புதிய திறன்கள் மற்றும் மொழிகளைக் கற்றல், மூளைக்கு வேலை தரும் விளையாட்டுகளை ஆடுதல் போன்ற செயல்பாடுகளால் நம் மூளை தூண்டப்படுகின்றது. அதனால் இன்பம், அமைதி, பெருமிதம் போன்ற நேர்மறை உணர்ச்சிகளை அனுபவிக்கின்றோம் மற்றும் மனநிறைவையும் உணர்கின்றோம்.

உடம்பை உறுதியாக்கலாம்

தினமும் உடற்பயிற்சிகள் செய்வது, சரிவிகித உணவு உண்பது, போதுமான தண்ணீர் குடிப்பது, நல்ல தூக்கம், மன அழுத்தம் குறைக்கும்விதம் யோகா மற்றும் மூச்சுப் பயிற்சிகள் செய்வது, தீமை விளைவிக்கும் புகை மற்றும் மதுப்பழக்கம் தவிர்ப்பது போன்ற செயல்பாடுகளால் நமது உடல்நலனை அதிகரிக்கலாம். உடல் நலம் மேம்படும்போது மனநலனும் சேர்ந்தே மேம்படும். இலக்குகள் இருக்கட்டும் வாழ்விலேஉடல் எடையைக் குறைப்பது, தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது, தொழிலில் வெற்றிபெறுவது என ஒவ்வொருவருக்கும் ஓர் இலக்கு இருக்கும்

வாழ்வின் நோக்கத்தை உணர்ந்து அதை நோக்கிப் பயணிக்கும் நமக்கு இலக்குகள் இருப்பது அவசியம். முதன்மையானவற்றிற்கு முக்கியத்துவம் தந்து, நேரம் மற்றும் ஆற்றலை சரியான முறையில் ஒதுக்கி வாழ்வில் சமநிலையைப் பேன இலக்குகள் உதவுகின்றன.

சமூக உறவுகளை உருவாக்கவும், வலுப்படுத்தவும் இலக்குகள் உதவுகின்றன. பிரச்னைகளைக் கையாளுவதற்கான ஊக்கம் மற்றும் கவனத்தை இலக்குகள் கொடுக்கின்றன. வாழ்க்கை மீதான நேர்மறைப் பார்வையை உருவாக்கி நம்பிக்கைப் பாதையில் நாம் நடக்க இலக்குகள் உதவும். நம் சுயமேம்பாட்டிற்கு இலக்குகள் வாய்ப்பு தருகின்றன. சாதிக்கும் உணர்வையும், மனநிறைவையும் இலக்குகளை அடையும்போது நாம் பெறுகின்றோம்.

இலக்குகளை ஏற்படுத்திக் கொள்வதால் நன்மைகள் பல. எனவே, தெளிவான மற்றும் நடைமுறைக்கு பொருத்தமான இலக்குகளை ஏற்படுத்திக் கொண்டு அவற்றை நோக்கி உற்சாகமுடன் முன்னேறுங்கள். பெரிய அளவில் இருக்கும் இலக்குகளை சிறிது சிறிதாகப் பிரித்து பணிகளை எளிமையாக்குங்கள். ஒவ்வொருநாள் காலைப் பொழுதையும் உற்சாகமுடன் துவங்க இலக்குகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

நேர்மறைக் கண்ணோட்டம் வேண்டும்

வாழ்வில் இன்பமும் துன்பமும் இயற்கையே. துன்பங்களில் இருந்து மீண்டெழுவதற்குக் கற்றுக் கொள்ளுங்கள். தோல்விகளிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். தடைக்கற்களை படிக்கற்களாக பார்க்கப் பழகுங்கள். உங்களிடம் இல்லாதவற்றை நினைத்து வருத்தப்படாமல், உங்களிடம் இருப்பவற்றை நினைத்து நன்றியுணர்வுடன் இருங்கள். எதிர்மறையான செய்திகள், உறவுகள் மற்றும் சுழல்களை தவிர்த்துவிடுங்கள்.

உங்களைச் சுற்றிலும் நேர்மறை இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை கொண்டிருங்கள். 

மனதை ஒருமுகப்படுத்தி செயல்களை ரசித்துச் செய்யுங்கள். அது அந்த நாளுக்கு நாம் காட்டும் நன்றியாகும். நேர்மறையான விஷயங்கள் மீது கவனம் செலுத்தி நேர்மறைப் பார்வையில் வாழ்க்கையை நோக்கி, வாழும் வாழ்க்கைக்கு நன்மைகளை ஈர்த்து மனமகிழ்ச்சி பெறுவோம்,உதவி கேட்க தயங்காதீர்கள்நீங்கள் உணர்ச்சிகளைத் கையாளத் தெரியாமல் போராடிக் கொண்டிருந்தாலோ அல்லது மனநலப் பிரச்னைகளுடன் இருந்தாலோ உங்கள் அருகில் இருக்கும் மனநல மருத்துவரையோ, மனநல ஆலோசகரையோ சந்தித்து வழிகாட்டுதலும் உதவியும் பெறுங்கள்.


🔻 🔻 🔻