மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.1,51,100/- ஊதியத்தில் பணிபுரிய வாய்ப்பு – தேர்வு எழுத தேவையில்லை!
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ICAR – NBSSLUP நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Private Secretary, Personal Assistant, Upper Division Clerk, Lower Division Clerk ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Deputation / Permanent Absorption விதிமுறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ICAR – NBSSLUP காலியிடங்கள்:
ICAR – NBSSLUP நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
- Private Secretary – 02 பணியிடங்கள்
- Personal Assistant – 05 பணியிடங்கள்
- Upper Division Clerk – 08 பணியிடங்கள்
- Lower Division Clerk – 02 பணியிடங்கள்
ICAR – NBSSLUP கல்வி:
அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 12ம் வகுப்பு அல்லது Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவர்கள் இந்த ICAR – NBSSLUP நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
ICAR – NBSSLUP அனுபவம்:
இந்த மத்திய அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், PSU / பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவுகளின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 08 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுப்பவும் உள்ளவராக இருக்க வேண்டும்.
ICAR – NBSSLUP வயது:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
ICAR – NBSSLUP மாத சம்பளம்:
- Private Secretary பணிக்கு Level – 8 படி, ரூ.47,600/- முதல் ரூ.1,51,100/- வரை என்றும்,
- Personal Assistant பணிக்கு Level – 7 படி, ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை என்றும்,
- Upper Division Clerk பணிக்கு Level – 4 படி, ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை என்றும்,
- Lower Division Clerk பணிக்கு Level – 2 படி, ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை என்றும் மாத சம்பளமாக தரப்படும்.
ICAR – NBSSLUP தேர்வு செய்யும் விதம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation / Permanent Absorption விதிமுறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICAR – NBSSLUP விண்ணப்பிக்கும் விதம்:
இந்த ICAR – NBSSLUP நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (24.01.2024) அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும்.
Download Notification & Application Form PDF
🔻🔻🔻