Agri Info

Adding Green to your Life

January 24, 2024

கபாலீசுவரர் கோவில் வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு, ஐ.டி.ஐ தகுதி; உடனே விண்ணப்பிங்க!

January 24, 2024 0

 தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் நூலகர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர் மற்றும் உதவி மின் பணியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் 

இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் 

நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 27.01.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

நூலகர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் நூலக அறிவியலில் பட்டயம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 18,500 – 58,600

அலுவலக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,900 – 50,400

ஓட்டுநர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் 

இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 18,500 – 58,600

உதவி மின் பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : மின்/ மின் கம்பி பணியாளர் பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க 

வேண்டும்.

சம்பளம் : ரூ. 16,600 – 52,400

வயதுத் தகுதி : விண்ணப்பதாரர் 01.07.2023 அன்று 18 வயது முதல் 45 வயதிற்குள்

 இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு 

அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php 

என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினைப் 

பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை 

பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட 

முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.

முகவரி: இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு கபாலீசுவரர் 

திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை - 4

விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.01.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php 

என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.



🔻🔻🔻

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 22 பணியிடங்கள்; 10-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!

January 24, 2024 0

 

கடலூர் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 22 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 08.02.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Programme Manager

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : BAMS/BUMS/BHMS/BSMS/BNYS படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 30,000

Data Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Computer Application/ITI/Business Administration/B.Tech., (CS) or (IT/BCA/BBA/BSC-IT  படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,000

Psychologist

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : M.Sc., Psychology/M.Phil Clinical Psychology/M.A or M.Sc., Psychology படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 18,000

Block Entry Operator

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Bachelor Degree in Mathematics with Statistics/Statistics and one year PG Diploma in Computer applications படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,500

Programme cum Administrative Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 12,000

Physiotherapist

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Bachelor Degree in Physiotherapy படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,000

Nurse

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி : Diploma in GNM/BSc (Nursing) படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 18,000

Cleaner

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500

Lab Technician

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Diploma in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,000

Multi Purpose Health Worker

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் Multi- purpose Health Worker (Male) / Health Inspector / Sanitary inspector Course training படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 14,000

Auxilliary Nurse

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Diploma course in Auxilliary Nurse and Midwifery படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 14,000

Multi Purpose Hospital Worker

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500

Radiographer

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : Diploma in X-Ray Technician or Diploma in Radiography Technician 

படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,300

Psychologist

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Post Graduate in Psychology/MSW or graduate in Psychology படித்திருக்க 

வேண்டும்.

சம்பளம்: ரூ. 23,000

Dental Surgeon

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : BDS படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 34,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 

https://cdn.s3waas.gov.in/s3a96b65a721e561e1e3de768ac819ffbb/uploads/2024/01/2024012267.pdf 

என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை 

பிரிண்ட் எடுத்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட 

முகவரியில் சமர்பிக்க வேண்டும்.

முகவரி: உறுப்பினர் செயலர்/ துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், 

மாவட்ட நலவாழ்வுச் சங்கம், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் 

அலுவலகம், 05, பீச் ரோடு, கடலூர் - 607001

விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.02.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற 

https://cdn.s3waas.gov.in/s3a96b65a721e561e1e3de768ac819ffbb/uploads/2024/01/2024012267.pdf 

இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

🔻🔻🔻

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் வேலை வாய்ப்பு; டிகிரி தகுதிக்கு 250 பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க!

January 24, 2024 0

 இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி (UIIC) நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 250 காலிப் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.01.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Administrative Officer

காலியிடங்களின் எண்ணிக்கை : 250

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை

 முடித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 31.12.2023 அன்று 21 முதல் 30 வயதிற்குள் 

இருக்க வேண்டும். இருப்பினும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், 

OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், 

வயது சலுகை உண்டு.

சம்பளம்: 88,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு 

மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் 

தேர்வு செய்யப்படுவார்கள்.

கணினி வழித் தேர்வு: கணினி வழித் தேர்வு கொள் குறி வகை வினாக்கள் 

அடங்கிய தேர்வாக 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். 

இதில் ஆங்கிலம், திறனறிதல், கணிதம், கணினி மற்றும் பொது அறிவு 

அல்லது காப்பீடு தொடர்பான கேள்விகள் (Insurance and Financial Marketing 

Awareness) என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். 

இந்த தேர்வுக்கான கால அளவு 2 மணி நேரம்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் 

மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 

இதற்கு https://ibpsonline.ibps.in/uiicloct23/ என்ற இணையதள பக்கத்தில் 

விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி 23.01.2024

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு 

ரூ.1000. SC/ST, PWD பிரிவுகளுக்கு ரூ.250.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://uiic.co.in/sites/default/files/uploads/recruitment/Recruitment%20of%20AO%20Scale%20I.pdf 

என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.


🔻🔻🔻

வேலூர் சிம்கோ வேலை வாய்ப்பு; 48 பணியிடங்கள்; 10, 12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!

January 24, 2024 0

 வேலூர் மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான தென்னிந்திய பன்மாநில வேளாண்மை கூட்டுறவு சங்க நிறுவனத்தில் அலுவலக உதவியாளர், விற்பனையாளர், மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணியிடங்களில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 48 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 29.02.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

அலுவலக உதவியாளர் (Office Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை : 12

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 5,200 - 20,200

விற்பனையாளர் (Sales Man)

காலியிடங்களின் எண்ணிக்கை : 22

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 6,200 - 26,200

மேற்பார்வையாளர் (Supervisors)

காலியிடங்களின் எண்ணிக்கை : 14

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 6,200 - 28,200

வயதுத் தகுதி : 12.01.2024 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் SC/SCA/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://simcoagri.com/image/main-slider/home-1/simco-application.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கிடைக்கச் செய்ய வேண்டும்.

முகவரி : SOUTH INDIA MULTI-STATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY LTD., HEAD OFFICE, TOWN HALL CAMPUS, NEAR OLD BUS STAND, VELLORE – 632004.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவு ரூ. 500, எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு ரூ. 250

விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.02.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய  https://simcoagri.com/image/main-slider/home-1/simco-notification-2024-tamil.pdf என்ற இணையதளப் பக்கத்தை பார்வையிடவும்.


🔻🔻🔻

January 23, 2024

TANUVAS பல்கலைக்கழகத்தில் Project Assistant வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

January 23, 2024 0

 

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் ஆனது Project Assistant- I பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


TANUVAS காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Assistant- I பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Assistant- I கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s Degree in Life Science / B.V.Sc தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

TANUVAS வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Young professional I ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.23,600/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TANUVAS தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 13.02.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் நேரில் சென்று கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

🔻🔻🔻

Spices Board-ல் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை ரெடி – உடனே விண்ணப்பியுங்கள்!

January 23, 2024 0

 Spices Board-ல் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Consultant Assistant பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Spices Board காலிப்பணியிடங்கள்:

Spices Board-ல் காலியாக உள்ள Consultant Assistant பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Consultant Assistant கல்வி தகுதி:

Consultant Assistant பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்ற நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

Consultant Assistant அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு நிறுவனங்கள், PSU / பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் Pay Matrix Level – 07 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் Section Officer பதவிகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.

Consultant Assistant வயது வரம்பு:

இந்த Spices Board சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 64 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.

Consultant Assistant ஊதியம்:

Consultant Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் ரூ.30,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

Spices Board தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Spices Board விண்ணப்பிக்கும் முறை:

இந்த Spices Board சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 31.01.2024 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.



🔻🔻🔻

Cognizant நிறுவனத்தில் அட்டகாசமான வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

January 23, 2024 0

 Cognizant நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இதில் Xstore POS Support பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Cognizant காலியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Xstore POS Support பணிக்கென பல்வேறு பணியிடங்கள் Cognizant நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Xstore POS Support கல்வி:

Xstore POS Support பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Xstore POS Support பணியமர்த்தப்படும் இடம்:

இந்த Cognizant நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னையில் பணியமர்த்தப்பட உள்ளார்கள்.

Xstore POS Support மாத சம்பளம்:

இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் Cognizant நிறுவன விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.

Cognizant தேர்வு செய்யும் விதம்:

Xstore POS Support பணிக்கு தகுதியான நபர்கள் Written Test, Interview, Group Discussion, Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Cognizant விண்ணப்பிக்கும் விதம்:

இந்த Cognizant நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கென கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து Online-ல் சமர்ப்பிக்க வேண்டும்.


🔻🔻🔻