Search

தேனி மாவட்ட ஊர்க்காவல்படைக்கு ஆட்கள் தேர்வு... விண்ணப்பிக்கும் முறை இதோ...

 தேனி மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதி உள்ள நபர்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி பற்றிய அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

ஊர்க்காவல் படை வேலைவாய்ப்பு :

தேனி மாவட்ட ஊர்க்காவல்படையில் காலியாக உள்ள 17 ஆண்கள் மற்றும் 08 பெண்கள் மற்றும் இதர காலிப்பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற அல்லது தோல்வியடைந்த நபர்களிடமிருந்தும் , 20 வயது பூர்த்தியடைந்த சமூக சேவையில் ஆர்வமுள்ள ஆண் மற்றும் பெண் ஆகிய இரு பாலரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது .

ஊர்க்காவல்படையில் சேர ஆர்வமுள்ளவர்கள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள தேனி அனைத்து மகளின் காவல் நிலையம் முதல் தளத்தில் செயல்படும் ஊர்க்காவல்படை அலுவலகத்தை அணுகி 14.02.2024 & 15.02.2024 ஆகிய இரண்டு நாட்களில் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெற்றுக்கொண்ட விண்ணப்பத்தினை முழுவதும் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து 17.02.2024-க்குள் நேரில் அல்லது தபால், பதிவுத்தபால் மூலம் அனுப்ப வேண்டும். பின்பு விண்ணப்பதாரர்களை வரவழைத்து பின்னர் அறிவிக்கப்படும் நாளில் தேனி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தகுதியானவர்களை தேர்வு செய்து பின் 45 நாட்கள் அடிப்படை பயிற்சி வழங்கி ஊர்க்காவல்படையில் பணியமர்த்தப்படுவார்கள்.

பணியமர்த்தப்படுபவர்களுக்கு ஒரு மாதத்தில் 05 நாட்கள் பணி வழங்கப்படும். இந்த 05 நாட்கள் பணிக்கு நாளொன்றுக்கு ரூ.560/- வீதம் படித்தொகையா ரூபாய் 2800 வழங்கப்படும் என தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத், தெரிவித்துள்ளார்.

தபால் மூலம் விண்ணப்பம் அனுப்பும் நபர்கள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தபால் பதிவுத்தபால் மூலம் வட்டார தளபதி, மாவட்ட ஊர்க்காவல்படை அலுவலகம், தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம் - முதல் தளம்,தேனி, தேனி மாவட்டம்-625531. என்ற அலுவலக முகவரிக்கு அனுப்பலாம்.

🔻🔻🔻

UPSC IFS தேர்வு அறிவிப்பு 2024 – 150 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

UPSC IFS தேர்வு அறிவிப்பு 2024 – 150 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) ஆனது தற்போது வனத்துறையில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக புது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, இந்திய வன சேவைகள் – IFS ல் பல்வேறு பதவிகளுக்கு என்று 150 காலியிடங்களை ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களையும் கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

UPSC IFS காலிப்பணியிடங்கள்:

இந்திய வன சேவை தேர்வின் மூலம் மொத்தம் 150 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

IFS கல்வி தகுதி:

இந்தியாவில் மத்திய அல்லது மாநில சட்டமன்றத்தின் சட்டம் அல்லது பாராளுமன்றச் சட்டத்தால் நிறுவப்பட்ட அல்லது பல்கலைக்கழக மானியக் குழு சட்டம், 1956 இன் பிரிவு 3 இன் கீழ் பல்கலைக்கழகமாகக் கருதப்படும் அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதியைப் பெற்றுள்ள பிற கல்வி நிறுவனங்களில் இருந்து விண்ணப்பதாரர்கள் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல், தாவரவியல், வேதியியல், புவியியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல் மற்றும் விலங்கியல் அல்லது வேளாண்மை, வனவியல் அல்லது பொறியியல் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01.08.2024 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் மற்றும் 32 வயதை எட்டாமல் இருக்க வேண்டும். அதாவது, அவர் 02.08.1992 முதல் 01.08.2003 க்கு இடையில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

UPSC IFS தேர்வு செயல் முறை:

Indian Forest Service (Preliminary) Examination (Objective type)

Indian Forest Service (Main) Examination (Written and Interview)

Interview/Personality Test

விண்ணப்பக் கட்டணம்:

பெண்/SC/ST/PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் கிடையாது

மற்ற அனைவருக்கும் – ரூ.100/-

கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை:

மேலே உள்ள அனைத்து தெளிவாக வகுக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் UPSC இணையதளத்தில் உள்ள தற்போதைய வேலை வாய்ப்புகள் பிரிவில் அதாவது https://upsc.gov.in/ என்ற இணைப்பின் மூலம் 14.02.2024 முதல் 05.03.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2024 Pdf

Apply Online

🔻🔻🔻

JIPMER ஆணையத்தில் Research Associate காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.67,000/- || உடனே விரையுங்கள்!

 Legal Consultant பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை JIPMER ஆனது அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.58,000/- முதல் ரூ.67,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

JIPMER காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Research Associate பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள்  நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Research Associate கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS / BDS / BHMS / BAMS / BSMS / MSc Nursing / MPT (Neuro) / Diploma in Clinical Trials or Clinical Research / Diploma in Epidemiology / MPH தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

JIPMER வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Research Associate ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.58,000/- முதல் ரூ.67,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

JIPMER தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் நேர்காணல்(21.02.2024) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் jipmer.hbsr@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 17.02.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை!! விண்ணப்பிக்க ரெடியா?

 விருதுநகர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய டெக்னீசியன் தேவை என்று தகவல் வெளியாகியுள்ளது.

விருதுநகரில் செயல்பட்டு வந்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் , மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருப்புக்கோட்டைக்கு மாற்றப்பட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை தற்போது விருதுநகர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆறு மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற டெக்னீசியன் தேவை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆறு மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற ரேடியோகிராபி பயின்ற டெக்னீசியன் தேவை என்றும் விருப்பமுள்ளவர்கள் உரிய கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் மருத்துவமனைக்கு வந்து தலைமை மருத்துவரை சந்திக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பணி முற்றிலும் தற்காலிகமானது என்று கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻

திருப்பூரில் பிப்.17-ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

 திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பூர் மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை சார்பில், குமரன் மகளிர் கல்லூரியில் வரும் 17-ம் தேதி காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை தனியார் பிரம்மாண்ட வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

தனியார் துறை வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்கள் நிறுவனங்களுக்கு தகுதியான வேலை நாடுபவர்களை தேர்வு செய்ய உள்ளார்கள். எழுத, படிக்க தெரிந்தவர்கள் முதல் 10-ம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப் படிப்பு, பொறியியல் மற்றும் தொழிற்கல்வி பெற்றவர்கள், கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள், தையல் பயிற்சி பெற்றவர்கள் என அனைத்து விதமான கல்வி தகுதி கொண்டவர்கள் கலந்து கொள்ளலாம். தனியார் துறையில் வேலை பெறுவதால், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது.

இது முற்றிலும் கட்டணமில்லா இலவச சேவையாகும். மேலும், விவரங்களுக்கு 0421- 2999152, 94990-55944 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். வேலை தேடும் இளைஞர்கள் தங்களது கல்வி சான்றிதழ்கள் மற்றும் சுய விவர குறிப்புகளுடன் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். வேலை அளிக்கும் நிறுவனங்களும், வேலை தேடுகிறவர்களும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பேருந்து நிலையங்கள் உட்பட பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வேலை வாய்ப்பு முகாம் தொடர்பான துண்டறிக்கைகளை, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக ஊழியர்கள் வழங்கி வருகின்றனர்.

🔻🔻🔻

TMB வங்கி வேலைவாய்ப்பு 2024 – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!

 தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட், (TMB) Relationship Manager பதவிக்கு இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் அனைத்து வழிமுறைகளையும் கவனமாகப் படித்து, பதவிக்கான அனைத்து தகுதித் தகுதிகளையும் அவர்கள் பூர்த்தி செய்வதை உறுதிசெய்ய வேண்டும்.  அதன் பின் ஆர்வமுள்ளவர்கள் 12.02.2024 முதல் 25.02.2024  வரை ஆன்லைனில் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

TMB வங்கி காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் நிறுவனத்தில் Relationship Manager பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. 

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடத்தில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் Graduation or Post Graduation முடித்திருக்க வேண்டும்.

TMB வங்கி ஆட்சேர்ப்பு 2024 வயது வரம்பு:

31.01.2024 தேதியின்படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எம்பிசி) / பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பிசி) இரண்டு ஆண்டுகள் மற்றும் SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

TMB வங்கி பணிக்கான விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

https://www.tmbnet.in/tmb_careers  என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு வரும் 25.02.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


🔻🔻🔻

ESIC ஆணையத்தில் ரூ. 2,39,607/-சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || நேர்காணல் மட்டுமே!

 Professor, Associate Professor, Assistant Professor பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை ESIC ஆணையம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 13 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ESIC காலிப்பணியிடங்கள்:

Professor, Associate Professor, Assistant Professor பணிக்கென காலியாக உள்ள 13 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Professor கல்வி தகுதி:

Teaching Experience கொண்ட விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ESIC வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 67 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Professor ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.2,39,607/- மாத ஊதியம் வழங்கப்படும்.

ESIC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 22.02.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் நேரில் சென்று கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

உச்ச நீதிமன்றத்தில் ரூ.1,23,100/- சம்பளத்தில் வேலை – Diploma / Degree முடித்தவர்களுக்கான வாய்ப்பு!

 உச்ச நீதிமன்றம் (SCI) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இதில் Director (Library) பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.1,23,100/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

உச்ச நீதிமன்ற காலியிடங்கள்:

உச்ச நீதிமன்றத்தில் (SCI) Director (Library) பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

Director கல்வி:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் / கல்லூரிகளில் Law, Library Science பாடப்பிரிவில் Graduate Degree, Master Degree, Diploma தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

Director அனுபவம்:

Director (Library) பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நூலகங்களில் Level 11 / 12 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் Chief Librarian, Librarian பதவிகளில் 04 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Director வயது:

இந்த உயர் நீதிமன்ற பணிக்கு 01.02.2024 அன்றைய தினத்தின் படி, 40 வயதுக்கு கீழுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

SCI மாத ஊதியம்:

Director (Library) பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் Level 13 படி, ரூ.1,23,100/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

SCI தேர்வு செய்யும் விதம்:

இந்த உயர் நீதிமன்ற பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Computer Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCI விண்ணப்பிக்கும் விதம்::

Director (Library) பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். 11.03.2024 என்பது இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகும்.

ரூ.67,000/-ஊதியத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – உடனே விண்ணப்பியுங்கள் || முழு விவரங்களுடன்!

 India Meteorological Department (IMD) ஆனது Project Scientist பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 72 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Scientist பணிக்கென காலியாக உள்ள 72 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree, B.E/ B. Tech, M.Sc தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 மற்றும் 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.67,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 01.03.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


🔻🔻🔻

NLC இந்தியா Consultant வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

 என்எல்சி இந்தியா லிமிடெட், ஆனது Full Time Consultant (CMD Secretariat) பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பதவிக்கு Post Graduate with Diploma முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து 22-02-2024 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.NLC India காலிப்பணியிடங்கள்:

Full Time Consultant (CMD Secretariat)  பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Consultant வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 60 முதல் 62 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ  அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Post Graduate with Diploma in Labour Laws, Diploma in Computer Programming தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NLC விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள்  அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 22-02-2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



🔻🔻🔻

IIT Madras-ல் Assistant Registrar வேலைவாய்ப்பு – 60+ காலிப்பணியிடங்கள் || உடனே விரையுங்கள்!

 IIT Madras ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Assistant Registrar, Sports Officer, Junior Superintendent, Assistant Security Officer மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 64 பணியிடங்கள் நிரப்ப உள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.IIT Madras காலிப்பணியிடங்கள்:

Assistant Registrar, Sports Officer, Junior Superintendent, Assistant Security Officer மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 64 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assistant Registrar கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / Degree / Masters Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IIT Madras வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 27, 32, 45 மற்றும் 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Assistant Registrar ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் Level 12 அளவில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IIT Madras தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 12.03.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Group 4 தேர்வுக்கு தயாராவது எப்படி?

 

IMG_20240213_131112

Group 4 தேர்வுக்கு தயாராவது எப்படி? பயிற்சி மையங்கள் நடத்தும் அரசு...வீடியோ...👇

https://youtu.be/EbWN3qq2Z4s?si=P3NwKRo6U08XBYIl


🔻🔻🔻

Air India Express நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!

 இந்தியாவின் விமான சேவை நிறுவனமான Air India Express வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Management Trainee, Associate பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Air India Express காலிப்பணியிடங்கள்:

Air India Express நிறுவனத்தில் Management Trainee, Associate பணிகளுக்கென பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

Air India Express கல்வி விவரம்:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் / கல்லூரிகளில் டிகிரி முடித்தவர்கள் மட்டுமே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.

Air India Express ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் Air India Express நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

Air India Express தேர்வு செய்யும் முறை:

இந்த Air India Express நிறுவன பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் நேர்காணல், திறன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Air India Express விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிகளுக்கென தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.


🔻🔻🔻

TNIC தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை – சம்பளம்: ரூ.60,000/-

 தமிழ்நாடு தகவல் ஆணையத்தில்  காலியாக உள்ள State Information Commissioner பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.  இந்த  அறிவிப்பின் படி, மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNIC காலிப்பணியிடங்கள்:

State Information Commissioner பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

தகுதி விவரங்கள்:

சட்டம் அல்லது அறிவியல் அல்லது தொழில்நுட்பம் அல்லது சமூக சேவை அல்லது மேலாண்மை அல்லது பத்திரிகை அல்லது வெகுஜன ஊடகம் அல்லது நிர்வாகத்தில் அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகார்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 29.02.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


🔻🔻🔻