Agri Info

Adding Green to your Life

August 12, 2024

VIT வேலூர் பல்கலைக்கழகத்தில் JRF வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.37,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

August 12, 2024 0

 VIT வேலூர் பல்கலைக்கழகத்தில் JRF வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.37,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

வேலூர் தொழில்நுட்ப நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

VIT காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Research Fellow கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ME / M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIT வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Junior Research Fellow ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.37,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIT தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.08.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு 2024 – ஜாக்பாட் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க || உடனே விண்ணப்பியுங்கள்!

August 12, 2024 0

 TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு 2024 – ஜாக்பாட் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க || உடனே விண்ணப்பியுங்கள்!

தனியார் துறையில் முன்னணி வகிக்கும் TCS நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Axiom Developer பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

TCS காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Axiom Developer பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Axiom Developer கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TCS வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Axiom Developer முன் அனுபவம்:

சம்பந்தப்பட்ட துறையில் 4 முதல் 8 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

TCS ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு TCS-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

Axiom Developer தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 07.09.2024 ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

BEL நிறுவனத்தில் Project Engineer வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.55,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

August 12, 2024 0

 BEL நிறுவனத்தில் Project Engineer வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.55,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

BEL நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Project Engineer-I பணிக்கென காலியாக உள்ள 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

BEL காலிப்பணியிடங்கள்:

BEL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Project Engineer-I பணிக்கென மொத்தம் 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Project Engineer கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அனுமதி பெற்று இயங்கும் பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு தகுதியானவர்கள்.

BEL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Project Engineer ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1st Year – Rs. 40,000/-

2nd Year – Rs. 45,000/-

3rd Year – Rs. 50,000/-

4th Year – Rs. 55,000/-

BEL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 23.08.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Apply Online


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

ஆகஸ்ட் மாதம் ஆறு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க ஆசிரியர்களுக்கு ஒரு வாய்ப்பு

August 12, 2024 0

 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆறு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க ஆசிரியர்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் அன்று பள்ளியில் விழா முடித்து அன்று விடுமுறை ஆகும். அடுத்த நாள் ஆகஸ்ட் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் வரையறுக்க பட்ட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள ஆகஸ்ட் மாதத்திற்கான புதிய நாட்காட்டியில் 17 மற்றும் 18ஆம் தேதி சனி ஞாயிறு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது 


அடுத்ததாக 19.08.2024 திங்களன்று ரிக் உபகர்மா வரையறுக்க பட்ட விடுமுறை வருகிறது. மேலும் 20.08.2024 செவ்வாய் அன்று காயத்ரி ஜெபம் வரையறுக்கப்பட்ட விடுமுறை வருகிறது.


ஆகவே தொடர்ச்சியாக ஆறு நாட்கள் விடுமுறை பெற ஆசிரியர்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கின்றது. இந்த விடுப்பானது இதுவரை வரையறுக்கப்பட்ட விடுமுறை ஒன்று கூட எடுக்காத ஆசிரியர்களுக்கு பயன்படலாம். எனவே ஆசிரியர்கள் தங்களின் பள்ளியின் பிற ஆசிரியர்கள் விடுப்பு மற்றும் தங்களின் பயணங்களை விடுமுறை நாட்களைக் கொண்டு அமைத்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது


RL leave in August 2024 - ஆகஸ்ட்


03.08.2024, சனி - ஆடி பெருக்கு


16.08.2024, வெள்ளி - வரலட்சுமி விரதம்


19.08.2024, திங்கள் -  ரிக் உபகர்மா/யஜுர் உபகர்மா/ஆவனி அவிட்டம்


20.08.2024, செவ்வாய் -  காயத்ரி ஜெபம்



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

SMC Reconstruction - Members Details - EMIS Upload Form

August 12, 2024 0

 IMG_20240812_064043

SMC மறுகட்டமைப்பு நிகழ்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட் உறுப்பினர்களின் விவரங்களை EMIS - யில் பதிவேற்றம் செய்வதற்கு தேவையான விவரங்கள் உள்ள படிவம்...


👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

SMC Reconstruction - Members Details - EMIS Upload Form👇👇👇

Download here



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

பள்ளி வேலை நாட்கள் எண்ணிக்கை குறைகிறது

August 12, 2024 0

 பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வித்துறையில், வேலை நாட்கள் எண்ணிக்கையை வழக்கம் போல் 210 நாட்களாக அறிவிக்க, அனைத்து ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன.


கோரிக்கையை ஏற்று, இந்த கல்வியாண்டுக்கான வேலை நாட்கள் 210 என, குறைக்க இருப்பதாக பள்ளிக்கல்வி இயக்குனரகத்தில் இருந்து, தகவல் வெளியாகி உள்ளது.


தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் அருளானந்தம் கூறியதாவது:

ஆசிரியர்களுக்கு 210 நாட்கள்தான் வேலை நாட்களாக இருப்பது வழக்கம். இந்த கல்வியாண்டில் 220 நாட்கள் என, அறிவிக்கப்பட்டு, சனிக்கிழமையும் வேலை நாட்கள் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.


இதை மாற்றி, வழக்கம் போல் 210 நாட்களாக அறிவிக்க வேண்டும் என, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் இயக்குனருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. கடந்த மாதமும், இந்த மாதமும் சனிக்கிழமை வேலை நாட்கள் இல்லை.


அதன் அடிப்படையில், மீண்டும் வேலை நாட்கள் 210 ஆக குறைக்கப்பட்டு, சனிக்கிழமை வேலை நாட்கள் சரி செய்யப்பட்டு, விரைவில் திருத்திய ஆணை வெளியிட, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். விரைவில் அறிவிப்பு வெளி வர உள்ளது.


இவ்வாறு, அவர் கூறினார்.

IMG_20240812_123806


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

முஸ்லிம் மாணவியர்களின் கல்வி உதவி தொகை வழங்கும் திட்டம் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - திட்டம் செயல்படுத்துதல்- தொடர்பாக செயல்முறைகள்

August 12, 2024 0

 முஸ்லிம் மாணவியர்களின் கல்வி உதவி தொகை வழங்கும் திட்டம் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - திட்டம் செயல்படுத்துதல்- தொடர்பாக செயல்முறைகள் ...

IMG-20240812-WA0011_wm


IMG-20240812-WA0012


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

DEE - 01 .08 .2024 இல் உள்ள மாணவர்கள் எண்ணிக்கையின் படி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்ய உத்தரவு

August 12, 2024 0

 

IMG_20240812_195302

01 .08 .2024 இல் உள்ள மாணவர்கள் எண்ணிக்கையின் படி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்ய தொடக்க கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள். 12.08.24.


👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

DEE Dir Proceedings - Download here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

கலைத்திருவிழா போட்டிக்கான தலைப்பு

August 12, 2024 0

 
கலைத்திருவிழா போட்டிக்கு கீழ்கண்ட தலைப்பின் கீழ் மாணவர்களை போட்டிக்கு தயார் படுத்தலாம்.

IMG-20240812-WA0013


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

August 10, 2024

பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பதால் ரத்த அழுத்தம் அதிகரிக்குமா? - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

August 10, 2024 0

 தொழில்நுட்பமும் அறிவியலும் வளர வளர அதோடு சேர்த்து அழிவும் மாசுபாடும் அதிகரித்து வருவதை நாம் பார்த்து வருகிறோம். நமது உணவு மற்றும் தண்ணீரில் காணப்படும் சிறிய பிளாஸ்டிக் துகள்களாக மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு மூலங்களிலிருந்து நமது பூமி தொடர்ந்து மாசடைந்து வருகிறது.

இந்த மைக்ரோபிளாஸ்டிக்ஸை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இது மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிப்பதாக கருதப்படுகிறது. இதய பிரச்சனைகள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு மற்றும் புற்றுநோய் ஆகியவற்றுக்கும் இந்த மைக்ரோபிளாஸ்டிக்ஸுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்றில், பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து தண்ணீர் குடிப்பதால், நம் ரத்த ஓட்டத்தில் நுழையும் மைக்ரோபிளாஸ்டிக் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

News18

ஆஸ்திரியாவில் உள்ள டான்யூப் தனியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவத் துறை நடத்திய ஆய்வில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றவர்களிடம் பிளாஸ்டிக் பாட்டில்களில் சேமிக்கப்படாத திரவங்களை பருகுவதற்கு ஆராய்ச்சியாளர்கள் வழங்கினர். இப்போது அவர்களின் ரத்த அழுத்தத்தில் குறிப்பிடத்தக்க அளவு குறைவைக் கண்டனர்.

“குறிப்பிடத்தக்க போக்குகள் காணப்பட்டன. முதன்முறையாக, பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும் என இந்த ஆய்வின் முடிவுகள் கூறுகிறது. அநேகமாக ரத்த ஓட்டத்தில் பிளாஸ்டிக் துகள்களின் அளவு குறைவதால் கூட இது நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது” என்று ஆய்வுக் குழு கூறியுள்ளனர்.

“மேலும் பிளாஸ்டிக் நுகர்வு குறைவதால் ரத்த அழுத்தம் குறைவதைக் குறிக்கும் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், ரத்த ஓட்டத்தில் இருக்கும் பிளாஸ்டிக் துகள்கள் உயர் இரத்த அழுத்தத்திற்கு பங்களிக்கக்கூடும் என்று நாங்கள் கருதுகிறோம்" என இவர்கள் அனுமானித்துள்ளார்கள்.

ஆகவே பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்களைத் தவிர்க்க வேண்டும் என்ற பரிந்துரையுடன் இந்த ஆய்வை ஆராய்ச்சியாளர்கள் நிறைவு செய்துள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, பிளாஸ்டிக் பாட்டில்களில் உள்ள திரவங்களை குடிப்பதன் மூலம் மனிதர்கள் வாரந்தோறும் சுமார் 5 கிராம் அளவிற்கு மைக்ரோ பிளாஸ்டிக் உட்கொள்வதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

மைக்ரோபிளாஸ்டிக்ஸ் உடலுக்குள் நுழைவதைத் தடுக்க என்னதான் செய்ய வேண்டும்? இனிமேல் பிளாஸ்டிக் பாட்டிலில் உள்ள தண்ணீரை குடிப்பதற்கு பதிலாக வீட்டு குழாயில் வரும் நீரை கொதிக்கவைத்து வடிகட்டி குடிக்க வேண்டும் என்று இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது. இந்த முறைகள் மூலம் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் மற்றும் நானோபிளாஸ்டிக்ஸ் இருப்பதை கிட்டத்தட்ட 90 சதவிகிதம் குறைக்கலாம்.

இறுதியாக, இதய செயல்பாட்டில் பாலின வேறுபாடுகள் மற்றும் குறைந்த பித்தலேட் வெளிப்பாட்டின் சாத்தியமான தாக்கம் போன்ற காரணிகள் இந்த ஆய்வில் சேர்க்கப்படவில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் இதுகுறித்த மேலதிக விவரங்கள் ஆராயப்பட வேண்டும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

பசியின்மை, குமட்டல், வாந்தி... கிட்னி செயலிழப்பதற்கான அறிகுறியா.? காரணங்களும் பிற அறிகுறிகளும்..

August 10, 2024 0

 அக்யூட் கிட்னி இன்ஜூரி (Acute kidney injury - AKI) என்பது ஒருவரின் சிறுநீரகங்கள் திடீரென்று சரியாக வேலை செய்யாமல் போகும் நிலை மற்றும் இது பெரும்பாலும் குறுகிய காலத்திற்குள் ஏற்படுகிறது. சிறுநீரக செயல்பாட்டில் ஏற்படும் சிறிய பாதிப்பு முதல் சிறுநீரகம் முழுமையாக செயலிழப்பது வரை என இதன் பாதிப்புகள் இருக்கலாம். அதே போல இந்த சிறுநீரக பாதிப்பு என்பது ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் குறிப்பாக தீவிர சிகிச்சை தேவைப்படும் மோசமான கண்டிஷனில் இருக்கும் நோயாளிகளுக்கு ஏற்படும் மிகவும் பொதுவான நிலையாக இருக்கிறது. இந்த பாதிப்பு சிறிய அளவில் இருக்கும் போதே கண்டறிவது மற்றும் சரியாக நிர்வகிப்பது மீள்வதை எளிதாக்க கூடும் என்பதால் AKI ஏற்படுவதற்கான அடிப்படை காரணங்களை நாம் புரிந்து கொள்வது முக்கியம்.

பிரபல மருத்துவர் சுஜித் சாட்டர்ஜி கூறுகையில் உடலில் காணப்படும் அறிகுறிகள், மருத்துவ நிலைமைகள் மற்றும் சிறுநீரகப் பாதிப்பிற்கு பங்களிக்கும் சமீபத்திய நிகழ்வுகள் போன்ற மெடிக்கல் ஹிஸ்ட்ரி மதிப்பாய்வு மூலம் பாதிப்பை கண்டறியலாம். உடல் பரிசோதனையானது Fluid retention, குறைந்த அளவே சிறுநீர் வெளியேறுவது அல்லது சிறுநீரகச் செயலிழப்பிற்கான மற்ற அறிகுறிகளை மதிப்பிட உதவுகிறது என்றார்.

News18

சிறுநீரக செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதற்காக Creatinine மற்றும் Blood urea nitrogen அளவை அளவிட ரத்த பரிசோதனைகள் செய்யப்படும். தவிர சிறுநீரக ஆரோக்கியத்தை மதிப்பிட சிறுநீர் பரிசோதனைகள் செய்யப்படலாம் என்றார். சில சந்தர்ப்பங்களில் சிறுநீர் பாதையில் Structural abnormalities அல்லது அடைப்புகள் உள்ளதா என்பதை கண்டறிய அல்ட்ராசவுண்ட் அல்லது CT ஸ்கேன் போன்ற இமேஜிங் சோதனைகள் செய்யப்படலாம்.

AKI பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்:

  • சிறுநீரகங்களுக்கு ரத்த ஓட்டம் குறைதல் - டிஹைட்ரேஷன், குறைந்த ரத்த அழுத்தம், இதய செயலிழப்பு காரணமாக இது நிகழலாம்.

  • சிறுநீரகங்களில் நேரடி பாதிப்பு - தொற்றுகள், சில மருந்துகள், டாக்ஸின்ஸ் அல்லது மெடிக்கல் இமேஜிங் செயல்முறைகளில் பயன்படுத்தப்படும் Contrast Dyes உள்ளிட்டவை சிறுநீரகங்களுக்கு நேரடியாக தீங்கு விளைவிக்கும்.

  • சிறுநீரகம் தொடர்பான நோய்கள் - Glomerulonephritis அல்லது Interstitial nephritis போன்ற நிலைமைகள் சிறுநீரகங்களின் செயல்பாட்டை பாதிக்கலாம்.

  • சிறுநீர் பாதையில் ஏற்படும் அடைப்பு - கிட்னி ஸ்டோன்கள் அல்லது Enlarged prostate போன்ற அடைப்புகள் சிறுநீர் பாதையில் தடையை ஏற்படுத்தலாம். இது AKI பாதிப்புக்கு வழிவகுக்கும்.

AKI பாதிப்பின் பொதுவான அறிகுறிகள்:

AKI பாதிப்பின் அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடலாம் என்றாலும் சில பொதுவான அறிகுறிகள் இருப்பதாக கூறுகிறா மருத்துவர் சுஜித் சாட்டர்ஜி. வெளியேறும் சிறுநீரின் அளவு குறைவது, திரவம் தேங்குவதால் கால்கள், கணுக்கால் அல்லது முகத்தில் வீக்கம் ஏற்படுவது, சோர்வு மற்றும் பலவீனம், குமட்டல், வாந்தி, அல்லது பசியின்மை, மூச்சுத் திணறல் மற்றும் குழப்பம் அல்லது கவனம் செலுத்துவதில் சிரமம் உள்ளிட்டவை AKI-ன் பொதுவான அறிகுறிகள் என்றார்.

டீ-ஹைட்ரேஷன், தொற்று அல்லது மருந்து தொடர்பான பிரச்சினைகள் காரணமாக AKI பாதிப்பு ஏற்பட்டால் உரிய சிகிச்சைகள் அளிக்கப்படும். திரவங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளின் பேலன்ஸை பராமரிப்பது மிகவும் முக்கியம். சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த நரம்பு வழி திரவங்கள் (intravenous fluids) அல்லது Diuretics கொடுக்கப்படலாம். அதே போல காரணத்தைப் பொறுத்து அறிகுறிகளை குறைக்க, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த அல்லது வீக்கத்தை குறைக்க சில மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம் என்கிறார் மருத்துவர் சாட்டர்ஜி.

தீவிர நிலைகளில் சிகிச்சை…

AKI பாதிப்பு மிகவும் தீவிரமாக இருந்தால் சிறுநீரக செயல்பாடு சீராகும் வரை ரத்தத்தில் இருந்து கழிவுகளை வடிகட்டி நீக்க டயாலிசிஸ் செய்யப்படலாம். பாதிப்பு எப்படி இருக்கிறது என்பதை மதிப்பிட, நிலைமைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்க வழக்கமான ஃபாலோ-அப் மற்றும் அப்பாயின்மென்ட்டை சரியாக பின்பற்ற வேண்டும்.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

இரவில் நிம்மதியான தூக்கம் வேண்டுமா? இந்த 4 தவறுகளை மட்டும் பண்ணாதீங்க….

August 10, 2024 0

 நாள் முழுவதும் உழைத்து சோர்வாக இருக்கும் போது, மாலையில் நிம்மதியாக தூங்குவது மிகவும் அவசியம். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு நிம்மதியான தூக்கம் கிடைப்பதில்லை. எவ்வளவு முயற்சி செய்தாலும் அவர்களின் தூக்கம் சரியாக இல்லை.

இதற்கு அவர்கள் செய்யும் சில தவறுகள்தான் காரணம். இரவில் படுக்கும் போது எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டாம். இது ஜீரணிக்க கடினமாக இருக்கும். மேலும் இது அமிலத்தன்மையை ஏற்படுத்துகிறது. பின்னர் அது தூக்கத்தை பாதிக்கிறது.

இரவு உறங்கச் செல்வதற்கு முன் நீண்ட நேரம் தொலைக் காட்சி அல்லது தொலைபேசியைப் பயன்படுத்தக் கூடாது. அது வெளியிடும் நீல ஒளி மூளையை பாதிக்கிறது. தூக்கத்தையும் வெகுவாக பாதிக்கிறது. இதனால் உங்களுக்கு முழுமையாக தூங்கிய அனுபவம் கிடைக்காது.

அலாரம் அடிக்கும்போது அதை அணைத்துவிட்டு பலர் தூங்கச் செல்கிறார்கள். இது பெரும்பாலும் தூக்கமின்மைக்கு வழிவகுக்கிறது. எனவே சீக்கிரம் தூங்கி, அலாரம் அடிக்கும் நேரத்தில் எழுந்திருக்க முயற்சி செய்யுங்கள்.

இரவில் தாமதமாக தூங்க செல்வதும் தூக்கத்தைப் பாதிக்கும். எனவே சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அதனால் தூக்கம் முழுமையடைந்து நாள் முழுவதும் நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

நிம்மதியான தூக்கமின்றி அவதிப்பட்டால், இங்கு குறிப்பிட்ட இந்த 4 வழிமுறைகளை நீங்கள் பின்பற்றி பாருங்கள்.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

Plastic பயன்படுத்தினால் Cancer - விழிப்புணர்வை சுற்றுச்சூழல் மன்றம் வாயிலாக மாணவர்களுக்கு வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

August 10, 2024 0

 IMG_20240810_183021

Plastic Tiffen Box, Plastic Water Bottle போன்றவற்றை பயன்படுத்தினால் Cancer வரும் என்பதால் இது குறித்த விழிப்புணர்வை சுற்றுச்சூழல் மன்றம் வாயிலாக மாணவர்களுக்கு வழங்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

DSE - Avoiding Plastic Things proceedings

Download here



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

களஞ்சியம் செயலி மூலம் விடுப்பு விண்ணப்பித்தல் - மாவட்டக் கருவூலரின் கடிதம் ( 09.08.2024 )

August 10, 2024 0

 

 IMG_20240809_204625

கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையர் அவர்களின் காணொளிக் காட்சி கூட்டம் 09.08.2024 ஆம் நாளன்று நடைப்பெற்றது. 


கீழ்கண்ட விவரங்கள் மற்றும் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 1.களஞ்சியம் செயலி ( KALANJIYAM MOBILE APP ) அனைத்து அரசு பணியாளர்களும் தங்களின் மொபைலில் களஞ்சியம் செயலியை கட்டாயமாக பதிவிறக்கம் செய்து அதில் உள்ள 

1 ) Profile , 2 ) Leave , 3 ) Payslip , 4 ) Report ... etc போன்ற விவரங்களை சரி பார்த்துக்கொள்ளவும் , மேலும் இனிவருங்காலங்களில் விடுப்பு எடுப்பவர்கள் களஞ்சியம் மொபைல் செயலியை பயன்படுத்தி விடுப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் தற்செயல் விடுப்பு , ஈடுசெய்யும் விடுப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட விடுப்புகளை தவிர மற்றும் ஏனைய விடுப்புகளை சம்மந்தப்பட்ட பணியாளர்கள் அனுமதி ஆணைப் பெற்று அவ்வாணையை மொபைல் செயலியில் ஏற்பளிப்பு செய்த பிறகுதாள் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.


முன்பணங்கள் சம்பந்தமாக அதாவது பண்டிகை முன்பணம் , குறுகிய கால முன்பணம் போன்ற முன்பணம் விண்ணப்பங்கள் களஞ்சியம் மொபைல் செயலியின் மூலம்தான் விண்ணப்பிக்க வேண்டும். எனவே முழுமையாக களஞ்சியம் மொபைல் செயலியை பயன்படுத்த வேண்டும். இதில் ஏதேனும் குறைகள் தென்படின் குறைகளை களைய Feedback Report அனுப்ப வேண்டும் மற்றும் ஏற்கனவே எடுத்த விடுப்புகளை Navigation Path ( HR - Report View - Employee List view Details ) பயன்படுத்தி Web id- யில் பதிவிட்டு ஏற்பளிக்க வேண்டும் அப்போதுதான் விடுப்பு விவரங்கள் முழுமையாக பதியப்படும்

களஞ்சியம் செயலி மூலம் விடுப்பு விண்ணப்பித்தல் - திண்டுக்கல் மாவட்டக் கருவூலரின் கடிதம்!

DGL Treasury Officer Letter👇

Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group