இன்றைய நவீன உலகில் உணவுக் கலப்படம் என்பது ஒரு முக்கிய கவலையாக உள்ளது. கடைகளில் கிடைக்கும் பல காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளால் நிறைந்திருக்கின்றன.
இருப்பினும், இதற்கு ஒரு எளிய மற்றும் பயனுள்ள தீர்வு ஒன்று உள்ளது, அதாவது காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவை உங்கள் வீட்டிலேயே வளர்ப்பதாகும். பால்கனி தோட்டங்கள், மாடித் தோட்டங்கள் அல்லது சமையலறை தோட்டங்கள் அமைத்து காய்கறிகள் மற்றும் பழங்களை சொந்தமாக விளைவிப்பதால், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உறுதிசெய்யலாம்.
கட்டுப்பாடு மற்றும் விழிப்புணர்வு :
CEF குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், நிறுவனருமான மனிந்தர் சிங் நய்யார் கூறியதாவது, ஒருவர் தங்கள் உணவுக்கு தேவையான பொருட்களை தாங்களே வளர்ப்பதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றலாம். ஒரு சாதாரண மனிதனால் ஒட்டுமொத்தமாக கலப்பட உணவுப் பொருட்களைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், அவர்கள் தங்கள் வீடுகளில் சொந்த தயாரிப்புகளை வளர்ப்பதால், கலப்பட உணவு எடுத்துக் கொள்வதை தடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.
ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து :
கடைகளில் வாங்கும் காய்கறிகள் மற்றும் பழங்கள் உடன் ஒப்பிடும்போது, வீட்டில் உற்பத்தி செய்யப்படும் தயாரிப்புகளில் வைட்டமின்கள், இருப்புசத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் அதிகமாக உள்ளன, இது ஆரோக்கியமான உணவு தேர்வாகும். உங்கள் தோட்டத்தில் இருந்து நேரடியாக புதிய, கலப்படமற்ற உணவை சாப்பிடும்போது உங்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வும் மேம்படும்.
சேமிப்பு :
ஆரோக்கிய நன்மைகளை தவிர, நீங்களே உங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்களை உற்பத்தி செய்து கொள்வது உங்களின் பணத்தை சேமிக்க வழிவகுக்கும். பொதுவாக விதைகள் மற்றும் சிறிய தாவரங்கள் விலை குறைவானது, மேலும் காலப்போக்கில், காய்கறிகள் மற்றும் பழங்கள் வாங்கும் செலவும் குறைகிறது. இது குறித்து நய்யார் கூறியதாவது, அத்தகைய உணவு ஆரோக்கிய நலன்களைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், காலப்போக்கில் நிறைய பணத்தையும் சேமிக்க முடியும் என கூறியுள்ளார்.
சுவை மற்றும் திருப்தி :
பொதுவாக வீட்டில் தயாரிக்கப்படும் காய்கறிகள் மற்றும் பழங்கள் சுவைக்கு நிகரில்லை. சுவைகள் அதிகமாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்களே தயாரித்த உணவை சாப்பிடுவதால் திருப்தி உண்டாகும்.
நடைமுறை குறிப்புகள் :
ZingyZest இன் உணவுப் பதிவர் சாரா ஹுசைன் என்பவர் வீட்டுத் தோட்டம் தொடர்பான தனது தனிப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார். அதாவது, உணவில் கலப்படம் என்பது இன்று மிகவும் கவலையான விஷயங்களில் ஒன்றாகும். பொதுவாக வெளியில் வாங்கப்படும் காய்கறிகள் மற்றும் பழங்கள் எல்லாமே கலப்படம் செய்யப்படுகின்றன, மேலும் ஆர்கானிக் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது, ஆனால் இது எளிதில் கிடைக்காது, என்று அவர் கூறியுள்ளார். மூலிகைகள் மற்றும் கொத்தமல்லி, துளசி, ஆர்கனோ, எலுமிச்சை மற்றும் பூண்டு போன்ற காய்கறிகள் வளர எளிதானவை மற்றும் குறைந்த இடம் இருந்தாலே போதுமானது என்றும் ஹுசைன் கூறியுள்ளார்.
உங்கள் சொந்த தோட்டத்தைத் அமைக்க சில குறிப்புகள் இங்கே:
சரியான இடத்தை தேர்வு செய்யவும்: பால்கனிகள், மொட்டை மாடிகள் அல்லது ஜன்னல்கள் போன்ற சரியான இடத்தை தேர்வுசெய்யவும்.
சிறியதாக தொடங்குங்கள்: மூலிகைகள் (கொத்தமல்லி, துளசி) போன்ற எளிதில் வளரக்கூடிய தாவரங்களுடன் தொடங்கி, படிப்படியாக காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு விரிவாக்குங்கள்.
தரமான மண்ணைப் பயன்படுத்துங்கள்: ஆரோக்கியமான தாவர வளர்ச்சியை உறுதிப்படுத்த நல்ல தரமான மண் மற்றும் உரத்தை பயன்படுத்துங்கள்.
தினசரி பராமரிப்பு: உங்கள் செடிகளுக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்றி, பூச்சிகளைக் கண்காணிக்கவும்.
உங்கள் தோட்டங்களில் தாவரங்கள் வளர்வதைப் பார்த்து மகிழுங்கள். தீங்கு விளைவிக்கும் உணவுகளை கட்டுப்படுத்தி, சொந்த விளைபொருட்களை வளர்ப்பதன் மூலம், உணவுக் கலப்படத்தை தவிர்க்கலாம், நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம், பணத்தைச் சேமிக்கலாம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கலாம்.