Agri Info

Adding Green to your Life

September 9, 2024

நீங்கள் வாங்கும் பனீர் சுத்தமானதா இல்லை கலப்படமானதா.? எளிதாக கண்டறிய உதவும் டிப்ஸ்!

September 09, 2024 0

 பனீர் என்பது பாலில் இருந்து தயார் செய்யப்படும் ஒரு உணவு பொருளாகும். பனீர் புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த மூலமாகும். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. ஆனால் தற்போது போலி பனீர் விற்பனைக்கு வந்துள்ளதால் இது பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

போலி பனீர் இந்தியாவில் விற்கப்படுவதை சமீபத்திய ஆய்வுகள் அடையாளம் கண்டுள்ளன. அதிர்ஷ்டவசமாக, போலி வகைகளில் இருந்து உண்மையான பனீரை வேறுபடுத்த எளிய மற்றும் பயனுள்ள முறைகள் உள்ளன. இதுகுறித்து மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர் ஷைல்ஜா ஷர்மைன் கூறிய வழிகாட்டுதல்கள் குறித்து இங்கு காண்போம்.,

News18

வீட்டில் போலியான ‘பனீர்’ சோதனை செய்வது எப்படி?

  1. அயோடின் சோதனை : முதலில் நீங்கள் வாங்கி வைத்துள்ள பனீரை வேக வைத்து எடுத்து கொள்ளவும். இதனுடன் சிறிதளவு அயோடினை சேர்க்க வேண்டும். இப்போது பனீர் நீலமாக மாறினால், அது செயற்கையாக இருக்கலாம். உண்மையான பனீர் அதன் அசல் நிறத்தைத் தக்க வைத்துக் கொள்ளும். எனவே நிறம் மாறாமல் வெள்ளையாகவே இருந்தால் அது இயற்கையான முறையில் சுத்தமாக தயார் செய்யப்பட்டதாகும்.

  2. தால் டெஸ்ட் : தால் டெஸ்ட் என்பது பருப்பை கொண்டு செய்யப்படும் சோதனை ஆகும். இதற்கு வேகவைத்த பனீரை எடுத்து தண்ணீர் ஊற்றி குளிர்விக்க வேண்டும். இதனுடன் துவரம் பருப்பை சேர்த்து கொள்ளுங்கள். சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு, தண்ணீர் வெளிர் சிவப்பு நிறமாக மாறினால், அது போலியானது. எந்த நிற மாற்றமும் இல்லையென்றால் பனீர் தூய்மையானது என்று அர்த்தம்.

  3. மென்மையை கண்டறியுங்கள் : உண்மையான பனீரை தொட்டு பார்த்தல் மென்மையாக இருக்கும். செயற்கை முறையில் தயாரித்த பனீர் என்றால் அது ரப்பர் போன்று காணப்படும். இதன் மூலம் நாம் போலியானதை உடனடியாக கண்டறியலாம். மேலும் இயற்கையான முறையில் தயார் செய்யப்பட்ட பனீர் உதிர்த்தால் உதிரிஉதிரியாக இருக்கும்.

  4. வாசனை சோதனை : உண்மையான பனீரில் லேசான பால் வாசனை இருக்கும், அதே சமயம் போலி பனீரில் ரசாயன வாசனை இருக்கலாம்.

  5. சுவை சோதனை : உண்மையான பனீர் ஒரு சுத்தமான பால் போன்ற சுவையை வழங்குகிறது, செயற்கை முறையில் தாயார் செய்யப்பட்ட பனீர் பால் சுவை இன்றி காணப்படும். மேலும் சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டிருந்தாலும் எளிதாக கண்டறிய முடியும்.

  6. ஈரப்பதம் சோதனை : உண்மையான பனீர் அழுத்தும் போது லேசான ஈரப்பதத்துடன் இருக்கும். இது பெரும்பாலும் போலி தயாரிப்புகளில் இருக்காது.

  7. சமையல் சோதனை : உண்மையான பனீர் சமைக்கும் போது பழுப்பு நிறமாகி அதன் வடிவத்தை பராமரிக்கிறது, அதே நேரத்தில் போலி பனீர் ரப்பர் போல மாறிவிடும்.

    போலி பனீர் சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் :

    செயற்கை பனீர் மிகவும் ஆபத்தானது. இதனை அடிக்கடி சாப்பிடுவதால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் குமட்டல் போன்ற உடனடி அறிகுறிகளை ஏற்படுத்தும். போலி பனீரில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இருப்பதால் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கலாம்.




🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

சிறுநீரகங்கள் செயலிழப்பதற்கு என்ன காரணம்..? ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவும் அறிகுறிகள்..!

September 09, 2024 0

 அக்யூட் கிட்னி இன்ஜூரி (Acute kidney injury - AKI) என்பது ஒருவரின் சிறுநீரகங்கள் திடீரென்று சரியாக வேலை செய்யாமல் போகும் நிலை மற்றும் இது பெரும்பாலும் குறுகிய காலத்திற்குள் ஏற்படுகிறது. சிறுநீரக செயல்பாட்டில் ஏற்படும் சிறிய பாதிப்பு முதல் சிறுநீரகம் முழுமையாக செயலிழப்பது வரை என இதன் பாதிப்புகள் இருக்கலாம்.

அதே போல இந்த சிறுநீரக பாதிப்பு என்பது ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் குறிப்பாக தீவிர சிகிச்சை தேவைப்படும் மோசமான கண்டிஷனில் இருக்கும் நோயாளிகளுக்கு ஏற்படும் மிகவும் பொதுவான நிலையாக இருக்கிறது. இந்த பாதிப்பு சிறிய அளவில் இருக்கும் போதே கண்டறிவது மற்றும் சரியாக நிர்வகிப்பது மீள்வதை எளிதாக்க கூடும் என்பதால் AKI ஏற்படுவதற்கான அடிப்படை காரணங்களை நாம் புரிந்து கொள்வது முக்கியம்.

பிரபல மருத்துவர் சுஜித் சாட்டர்ஜி கூறுகையில் உடலில் காணப்படும் அறிகுறிகள், மருத்துவ நிலைமைகள் மற்றும் சிறுநீரகப் பாதிப்பிற்கு பங்களிக்கும் சமீபத்திய நிகழ்வுகள் போன்ற மெடிக்கல் ஹிஸ்ட்ரி மதிப்பாய்வு மூலம் பாதிப்பை கண்டறியலாம். உடல் பரிசோதனையானது Fluid retention, குறைந்த அளவே சிறுநீர் வெளியேறுவது அல்லது சிறுநீரகச் செயலிழப்பிற்கான மற்ற அறிகுறிகளை மதிப்பிட உதவுகிறது என்றார்.

சிறுநீரக செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதற்காக Creatinine மற்றும் Blood urea nitrogen அளவை அளவிட ரத்த பரிசோதனைகள் செய்யப்படும். தவிர சிறுநீரக ஆரோக்கியத்தை மதிப்பிட சிறுநீர் பரிசோதனைகள் செய்யப்படலாம் என்றார். சில சந்தர்ப்பங்களில் சிறுநீர் பாதையில் Structural abnormalities அல்லது அடைப்புகள் உள்ளதா என்பதை கண்டறிய அல்ட்ராசவுண்ட் அல்லது CT ஸ்கேன் போன்ற இமேஜிங் சோதனைகள் செய்யப்படலாம்.

AKI பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்:

சிறுநீரகங்களுக்கு ரத்த ஓட்டம் குறைதல் - டிஹைட்ரேஷன், குறைந்த ரத்த அழுத்தம், இதய செயலிழப்பு காரணமாக இது நிகழலாம்.

சிறுநீரகங்களில் நேரடி பாதிப்பு - தொற்றுகள், சில மருந்துகள், டாக்ஸின்ஸ் அல்லது மெடிக்கல் இமேஜிங் செயல்முறைகளில் பயன்படுத்தப்படும் Contrast Dyes உள்ளிட்டவை சிறுநீரகங்களுக்கு நேரடியாக தீங்கு விளைவிக்கும்.

சிறுநீரகம் தொடர்பான நோய்கள் - Glomerulonephritis அல்லது Interstitial nephritis போன்ற நிலைமைகள் சிறுநீரகங்களின் செயல்பாட்டை பாதிக்கலாம்.

சிறுநீர் பாதையில் ஏற்படும் அடைப்பு - கிட்னி ஸ்டோன்கள் அல்லது Enlarged prostate போன்ற அடைப்புகள் சிறுநீர் பாதையில் தடையை ஏற்படுத்தலாம். இது AKI பாதிப்புக்கு வழிவகுக்கும்.

AKI பாதிப்பின் பொதுவான அறிகுறிகள்:

AKI பாதிப்பின் அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடலாம் என்றாலும் சில பொதுவான அறிகுறிகள் இருப்பதாக கூறுகிறா மருத்துவர் சுஜித் சாட்டர்ஜி. வெளியேறும் சிறுநீரின் அளவு குறைவது, திரவம் தேங்குவதால் கால்கள், கணுக்கால் அல்லது முகத்தில் வீக்கம் ஏற்படுவது, சோர்வு மற்றும் பலவீனம், குமட்டல், வாந்தி, அல்லது பசியின்மை, மூச்சுத் திணறல் மற்றும் குழப்பம் அல்லது கவனம் செலுத்துவதில் சிரமம் உள்ளிட்டவை AKI-ன் பொதுவான அறிகுறிகள் என்றார்.

டீ-ஹைட்ரேஷன், தொற்று அல்லது மருந்து தொடர்பான பிரச்சினைகள் காரணமாக AKI பாதிப்பு ஏற்பட்டால் உரிய சிகிச்சைகள் அளிக்கப்படும். திரவங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளின் பேலன்ஸை பராமரிப்பது மிகவும் முக்கியம். சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த நரம்பு வழி திரவங்கள் (intravenous fluids) அல்லது Diuretics கொடுக்கப்படலாம். அதே போல காரணத்தைப் பொறுத்து அறிகுறிகளை குறைக்க, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த அல்லது வீக்கத்தை குறைக்க சில மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம் என்கிறார் மருத்துவர் சாட்டர்ஜி.

தீவிர நிலைகளில் சிகிச்சை…

AKI பாதிப்பு மிகவும் தீவிரமாக இருந்தால் சிறுநீரக செயல்பாடு சீராகும் வரை ரத்தத்தில் இருந்து கழிவுகளை வடிகட்டி நீக்க டயாலிசிஸ் செய்யப்படலாம். பாதிப்பு எப்படி இருக்கிறது என்பதை மதிப்பிட, நிலைமைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்க வழக்கமான ஃபாலோ-அப் மற்றும் அப்பாயின்மென்ட்டை சரியாக பின்பற்ற வேண்டும்.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Intermittent Fasting | இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கை மேற்கொள்ள 8 வழிகள் : எது சிறந்தது?

September 09, 2024 0

 இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் மேற்கொள்வதன் மூலம் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தவும், ஆற்றலை அதிகரிக்கவும், ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தவும் உதவுகிறது. இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் என்பது ஒரு உணவுத் திட்டம் ஆகும். இந்த செயல்முறையானது உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது உடலில் உள்ள கொழுப்பை குறைகிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் மேற்கொள்ள 8 வழிகளை பற்றி பார்ப்போம்..

  • ​16:8 டயட்: 16/8 செயல்முறையானது 8 மணி நேரம் சாப்பிட வேண்டும் மற்றும் 16 மணி நேரம் சாப்பிடக்கூடாது. அதாவது, நீங்கள் மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை சாப்பிடலாம். இதனையடுத்து அடுத்த நாள் மதியம் 12 மணிக்கு உங்களின் அடுத்த உணவை சாப்பிட வேண்டும். இந்த இடைப்பட்ட 16 மணிநேர காலம் தான் உங்களுடைய உண்ணாவிரத நேரம் ஆகும். இந்த அணுகுமுறை எளிமையானது. மேலும் இது, கொழுப்பை குறைக்கிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

  • 5:2 டயட்: 5:2 உணவில், நீங்கள் வாரத்தில் ஐந்து நாட்களுக்கு சாதாரணமாக சாப்பிடுவீர்கள், மற்ற இரண்டு நாட்களில் கலோரிகளில் நான்கில் ஒரு பாகமாக கட்டுப்படுத்துவது ஆகும். அதாவது சுமார் 500 முதல் 600 கலோரிகளாக வாரத்தில் இரண்டு நாட்களுக்கு எடுத்துகொள்வதை குறிக்கிறது. தினசரி உண்ணாவிரதத்தை விட இந்த முறையை பின்பற்றுவது எளிதாக இருக்கும்.

  • ஈட் - ஸ்டாப் - ஈட் டயட்: இந்த ஈட் ஸ்டாப் ஈட் டயட்டில் வாரத்திற்கு இரண்டு முறை 24 மணி நேரம் உண்ணாவிரதம் இருப்பதாகும், மீதமுள்ள நாட்களில் நன்றாக சாப்பிடலாம். இந்த முறையானது கொழுப்பை குறைகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

  • ஆல்டர்னேட் ஃபாஸ்டிங்: ஆல்டர்னேட் ஃபாஸ்டிங் என்பது டயட் இருக்கும் நாளில் 500 கலோரிகள் மட்டும் எடுக்க வேண்டும். இந்த முறையானது எடை குறைப்பு மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

  • வாரியர் டயட்​: இதில் 20 மணிநேரம் உண்ணாவிரதம் இருப்பது மற்றும் 4 மணி நேரம் சாப்பிடுவதுமாகும். 4 மணி நேரத்தில் நீங்கள் விரும்பும் எதையும் சாப்பிடலாம். இந்த முறையானது கொழுப்பை குறைக்கிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது.

  • ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு: ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு என்பது சாப்பிடும் நேரத்தை தவிர, மீதமுள்ள 23 மணி நேர உண்ணாவிரதம் இருப்பதும் ஆகும். இந்த முறையானது உணவு முறைகளை எளிதாக்குகிறது மற்றும் எடை குறைப்பு மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

  • டைம் ரெஸ்ட்ரிக்டட் ஈட்டிங்: டைம் ரெஸ்ட்ரிக்டட் ஈட்டிங் என்பது, குறிப்பிட்ட நேரத்திற்கு உணவை கட்டுப்படுத்தும் உணவு முறை ஆகும். அதாவது, ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு எடுத்து கொள்வதை கட்டுப்படுத்துகிறது. இந்த முறையானது எடை குறைப்பு மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இந்த முறையின் எளிமை பலருக்கு விருப்பமான தேர்வாக அமைகிறது.

    500 கலோரிகளுடன் ஆல்டர்னேட் ஃபாஸ்டிங்: 500 கலோரிகளுடன் ஆல்டர்னேட் ஃபாஸ்டிங் என்பது, முதல் நாள் சாதாரணமாக சாப்பிட்டு, அடுத்த நாள் சுமார் 500 கலோரிகளை மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும்.. இந்த முறையானது எடை குறைப்பு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

    இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கை யார் தவிர்க்க வேண்டும்? கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்கள், நாள்பட்ட உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் மற்றும் குறிப்பிட்ட மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் ஆகியோர் இந்த இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் முறையைத் தொடங்குவதற்கு முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

    **இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கில் சிறந்தது எது?**இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கில் சிறந்த முறை என்பது பெரும்பாலும் தனிப்பட்ட விருப்பம் மற்றும் வாழ்க்கை முறையை சார்ந்துள்ளது. இருப்பினும், 16/8 டயட் முறை பரவலாக விரும்பப்படுகிறது. இது 8 மணி நேரம் சாப்பிடுவது மற்றும் 16 மணி நேரம் சாப்பிடக்கூடாது என்பதாகும்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

PAN கார்டு பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 தகவல்கள்! கைட்லைன்ஸ் இதோ

September 09, 2024 0

 பான் கார்டு (PAN card) என்றால் என்ன மற்றும் அதன் முக்கியத்துவம் யாது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? ஒருவேளை பான் கார்டு பற்றிய எந்த ஒரு விவரமும் உங்களுக்கு தெரியாது என்றால் அதனை இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள். பான் கார்டு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்களையும் இப்போது காணலாம்.

தனித்துவமான அடையாளம் காட்டி

பான் கார்டு என்பது வருமான வரி துறையினரால் வழங்கப்படும் தனித்துவமான 10 இலக்க எழுத்துக்கள் மற்றும் எண்கள் அடங்கிய அடையாள எண்ணாகும். இது பொருளாதார பரிமாற்றங்களை கண்காணிக்கவும் மற்றும் வரி காரணங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. உங்களுடைய பான் கார்டு மூலமாக நீங்கள் செய்யும் அனைத்து பொருளாதார ட்ரான்ஸ்ஷாக்ஷன்களையும் தெரிந்து கொள்ளலாம்.

வருமான வரி தாக்கல் செய்வதற்கு கட்டாயம் தேவைப்படுகிறது வருமான வரி தாக்கல் செய்வதற்கு தனி நபர்கள் கட்டாயமாக பான் கார்டு வைத்திருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் அதிக மதிப்பு கொண்ட ட்ரான்ஸாக்ஷன்களை செய்யவும் பிற பொருளாதார செயல்பாடுகளை நிகழ்த்தவும் பான் கார்டு அவசியமாக கருதப்படுகிறது.


பான் கார்டு பெறுவதற்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?

பான் கார்டு வாங்க நினைக்கும் ஒருவர் ஆன்லைன் மூலமாகவோ அல்லது NSDL அல்லது UTIITSL போன்ற நியமிக்கப்பட்ட ஏஜென்சிகள் மூலமாக ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பதாரர் அடையாள சான்றிதழ், முகவரி சான்றிதழ் மற்றும் பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றை வழங்க வேண்டும்.

அடையாள சான்றிதழ்

பான் கார்டு என்பது பெரும்பாலும் பல்வேறு சேவைகளுக்கான செல்லுபடி ஆகக்கூடிய அடையாள சான்றிதழாக செயல்படுகிறது. வங்கி கணக்குகள் திறப்பது முதல் லோன்களுக்கு விண்ணப்பிப்பது வரை பல்வேறு விஷயங்களுக்கு நீங்கள் பான் கார்டை உபயோகிக்கலாம்.

பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைத்தல் ஒருவேளை உங்களிடம் பான் கார்டு இருந்தால் விதிகளின்படி கட்டாயமாக நீங்கள் அதனை உங்கள் ஆதார் அட்டையுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால் அபராதங்கள் விதிக்கப்படும்.

பான் கார்டு அமைப்பு

பான் கார்டில் பான் நம்பர், கார்டு ஹோல்டர் பெயர், பிறந்த தேதி மற்றும் புகைப்படம் போன்ற விவரங்கள் அடங்கியிருக்கும். அது மட்டுமல்லாமல் சரிபார்ப்பு காரணங்களுக்காக அதில் QR கோட் கொடுக்கப்பட்டிருக்கும்.

மாற்றங்கள் மற்றும் புதுப்பிப்புகள்

பான் கார்டில் உள்ள பெயர், முகவரி அல்லது புகைப்படம் போன்ற விவரங்களை ஒருவர் அப்டேட் செய்ய நினைத்தால் அதற்கு சம்பந்தப்பட்ட படிவங்கள் மற்றும் டாக்குமெண்ட்களை சமர்ப்பித்து மாற்றிக் கொள்ளலாம்.பான் கார்டு தொலைந்து விட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ என்ன செய்வது?

ஒருவேளை உங்களுடைய பான் கார்டை நீங்கள் தவறுதலாக தொலைத்து விட்டாலோ அல்லது சேதமாகினாலோ அதனை நீங்கள் மீண்டும் அச்சிடுவதற்கு விண்ணப்பிக்கலாம் அல்லது உங்களுடைய தற்போதைய பான் கார்டு எண்ணை பயன்படுத்தி நீங்கள் இதற்கு முன்பு பான் கார்டு வாங்கிய அதே ஏஜென்சிகள் மூலமாகவே டூப்ளிகேட் கார்டை பெறலாம்.

பான் கார்டின் முக்கியத்துவம்
பல்வேறு பொருளாதார ஒழுங்கு முறையுடன் இணங்குவதற்கு பான் கார்டு அவசியமாக கருதப்படுகிறது. ஒருமுறை உங்களுக்கு பான் கார்டு வழங்கப்பட்டு விட்டால், அதில் நீங்கள் எந்த ஒரு மாற்றமும் செய்யாத போது மற்றும் அது கேன்சல் ஆகாமலும் அதனை நீங்கள் சம்பந்தப்பட்ட துறையிடம் ஒப்படைக்காமல் இருக்கும் பட்சத்தில் அது உங்கள் வாழ்நாள் முழுவதும் செல்லுபடி ஆகும்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

லாபம் தரும் ஸ்பெஷல் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்திருக்கிறீர்களா? கடைசி தேதி இதுதான்!

September 09, 2024 0

 ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, IDBI மற்றும் இந்தியன் பேங்க், பஞ்சாப் மற்றும் சிந்து பேங்க் போன்ற பல்வேறு வங்கிகள் வழங்கக்கூடிய சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான டெட்லைன் செப்டம்பர் 30-ம் தேதியோடு முடிவடைகிறது. FD பாலிசிகளில் அதிக வட்டி விகிதத்தை பெற நினைக்கும் சீனியர் சிட்டிசன்கள் தங்களுடைய பணத்தை இந்த திட்டங்களில் முதலீடு செய்வதை கருத்தில் கொள்ளலாம்.

தங்களுடைய முதலீடுகளில் சிறந்த ரிட்டன்களை பெறுவதற்கான வாய்ப்புகளை சீனியர் சிட்டிசன்கள் மற்றும் வழக்கமான கஸ்டமர்களுக்கு வழங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு இந்த சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களை வங்கிகள் அறிமுகம் செய்தன. எனினும் பொதுமக்கள் இந்த திட்டங்களுக்கு கொடுத்த வரவேற்பு காரணமாக முதலீடு செய்வதற்கான கடைசி தேதியை பலமுறை வங்கிகள் மாற்றியமைத்தது.

IDBI உட்சவ் காலபில் ஃபிக்சட் டெபாசிட்

இதற்கான வேலிடிட்டி செப்டம்பர் 30, 2024 வரை நியமிக்கப்பட்டுள்ளது. இதில் 300 நாட்கள் கொண்ட திட்டத்திற்கு வழக்கமான சிட்டிசன்களுக்கு 7.05%, சீனியர் சிட்டிசன்களுக்கு 7.55 சதவீதமும் கொடுக்கப்படுகிறது. 375 நாட்கள் கொண்ட திட்டத்திற்கு வழக்கமான சிட்டிசன்களுக்கு 7.25 சதவீதமும், சீனியர் சிட்டிசன்களுக்கு 7.75 சதவீதமும் வட்டி விகிதம் நியமிக்கப்பட்டுள்ளது. 444 நாட்கள் கொண்ட சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு வழக்கமான சிட்டிசன்களுக்கு 7.35%, சீனியர் சிட்டிசன்களுக்கு 7.85 சதவீதமும் வழங்கப்படுகிறது. இதுவே 700 நாட்கள் கொண்ட திட்டத்திற்கு வழக்கமான சிட்டிசன்களுக்கு 7.20% வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 7.70 சதவீத வட்டியும் கொடுக்கப்படுகிறது.

இந்தியன் வங்கி சிறப்பு ஃபிக்சட் டெபாசிட்

இந்தியன் வங்கி வழங்கும் ஸ்பெஷல் இண்டு சூப்பர் 300 நாட்கள் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான கடைசி தேதி 30 செப்டம்பர், 2024 ஆகும்.

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி ஸ்பெஷல் ஃபிக்சட் டெபாசிட்

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி அதன் சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான கடைசி தேதியாக 30 செப்டம்பர், 2024 ஐ நியமித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கஸ்டமர்கள் 333 நாட்களுக்கு 7.15 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தை பெறலாம்.

SBI அம்ருத் காலா ஃபிக்சட் டெபாசிட்

SBI வழங்கும் அம்ரித் காலா 400 நாட்கள் கொண்ட திட்டத்தில் 7.10 சதவீத வட்டி கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கான கடைசி தேதி 30 செப்டம்பர், 2024. சீனியர் சிட்டிசன்கள் மற்றும் ஸ்டாஃப் பென்ஷனர்களுக்கு கூடுதல் வட்டி விகிதம் வழங்கப்படும்.

SBI WECARE டெபாசிட் திட்டம்ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ள எஸ்பிஐ வீ கேர் சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டம் 30 செப்டம்பர், 2024 வரை செல்லுபடி ஆகும். இந்த திட்டத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு 7.50 சதவீதம் வரையிலான வட்டி விகிதம் நியமிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Google Pay, Phonepe அடிக்கடி யூஸ் பண்றீங்களா..? இனிமே கூடுதல் கட்டணம் தான்..? வெளியான முக்கிய அப்டேட்!

September 09, 2024 0

 ரூ.2000 வரையிலான டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கு 18% வரை ஜிஎஸ்டி விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி 54ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது.  இந்த கூட்டத்தில், கூகுள் பே, போன் பே போன்ற இடைத்தரக நிறுவனங்கள் மூலம் ரூ.2000 வரை மக்கள் மேற்கொள்ளும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கு அந்த இடைத்தரகர்களிடம் (கூகுள் பே, போன் பே போன்றவை) ஜிஎஸ்டி வரியை விதிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


நாட்டில் நடைபெறும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில், ரூ.2000 கீழ் உள்ள டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தான் அதிகம் என மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில் தான் வரும் ஜிஎஸ்டி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.
அப்படி வரியை விதித்தால், வாடிக்கையாளர்களிடமும் இந்த நிறுவனங்கள் வரி வசூலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மொபைல் ரீச்சார்ஜ், மற்ற பில் கட்டணங்களுக்கு வரியை இந்த நிறுவனங்கள் வசூலிக்கிறது. இந்த வரி ஒருவேளை விதிக்கப்பட்டால், அதைப் பொறுத்தே அந்த நிறுவனங்கள் முடிவெடுக்கலாம் என கூறப்படுகிறது.

ஏன் இந்த வரி?:

ஜிஎஸ்டி பிட்மென்ட் கமிட்டியின் பரிந்துரைகள் படி, இந்த நிறுவனங்கள் இடைத்தரகர்களாகவே செயல்படுகின்றன. இந்த நிறுவனங்கள் வங்கிகள் கிடையாது. ஜிஎஸ்டி விதியின்படி, இடைத்தரகராக உள்ள நிறுவனங்களிடம் வரி விதிக்கப்படும். எனவே இந்த ஆண்டு முதல் ரூ.2000க்கு குறைவான பரிவர்த்தனைகளுக்கும் வரி விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை ஏன் வரி இல்லை?:

மத்திய அரசு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை மக்களிடம் ஊக்குவிக்க முயன்ற போது, இந்த நிறுவனங்களிடம், ரூ.2000 குறைவான பரிவர்த்தனை நடைபெற்றால் வரி இல்லை என தெரிவித்தது. இதனால், இந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடமும் வரியை வசூலிக்காமல் சேவை செய்து வந்தது. ஆனால் தற்போது நாட்டில் பெரும்பான்மையினர் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்வதால், இந்த வரியை அமல்படுத்தப்போவதாக கூறப்படுகிறது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Expiry Date, Best Before மற்றும் Use By தேதியின்படி பொருட்களை பயன்படுத்துவதற்கு என்ன வித்தியாசம்? - 99 % பேருக்கு தெரியாது!

September 09, 2024 0

நீங்கள் எப்போதாவது பொருட்களில் காலாவதி தேதி உள்ளிட்ட தகவல்கள் எழுதியிருப்பதை பார்த்திருக்கிறீர்களா?. இல்லை என்றால் முதலில் அதை தான் நீங்கள் பார்க்க வேண்டும், ஏனென்றால் நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களின் பாக்கெட்டுகள் மீது தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி உள்ளிட்டவை எழுதப்பட்டிருக்கும்.

காலாவதி தேதி (expiry date) என்பது அனைவரும் புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால் பெரும்பாலான மக்களுக்கு best before மற்றும் use by குறித்து அர்த்தம் தெரியாது. இதுகுறித்து உங்களுக்கு குழப்பம் இருந்தால் கவலைப்பட வேண்டாம். இதை பற்றி தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக, காலாவதி தேதி (expiry date), best before மற்றும் use by ஆகியவைக்கு ஒரே அர்த்தம் என மக்கள் கருதுகிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை. மூன்றுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளன. உரிய தகவல் இல்லாததால், சில நேரங்களில் பயன்படுத்த தகுதியற்றதையும் நாம் பயன்படுத்துகிறோம். குறிப்பாக மருந்துகள், ஒப்பனை பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள். இந்த மூன்றை பற்றி விரிவாக தெரிந்து கொண்டால், நீங்கள் மீண்டும் இந்த தவறை செய்ய மாட்டீர்கள். ஆகையால் மூன்றுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன என்பதை அறிந்து கொள்வோம்.

காலாவதி தேதி (expiry date) என்ன?

காலாவதி தேதி என்பது, குறிப்பிட்ட தேதிக்கு பின்பு அந்த தயாரிப்பைப் பயன்படுத்துவது உடல்நலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதை உணர்த்துவதாகும். அந்த பொருளை, அதில் அச்சிடப்பட்ட தேதிக்கு பிறகு பயன்படுத்த முடியாது. ஏனெனில் அதில் பாக்டீரியா அல்லது பிற தீங்கு விளைவிக்கும் பொருட்கள் வளரக்கூடும். வழக்கமாக, 2 முதல் 3 ஆண்டுகளுக்குப் பிறகு காலாவதியாகும் மருந்துகள் அல்லது அத்தகைய தயாரிப்புகளில் காலாவதி தேதி எழுதப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக, ஃபவுண்டேஷன்(Foundation) அல்லது ஐலைனர்(Eyeliner) போன்ற அழகு சாதனப் பொருட்களை அவற்றின் காலாவதி தேதிக்குப் பிறகு பயன்படுத்தினால், சருமத்தில் ஒவ்வாமை, தடிப்புகள் அல்லது பிற பிரச்சனைகள் ஏற்படலாம். இதுவே உணவுப் பொருட்களுக்கும் பொருந்தும். உதாரணமாக, பால் பாக்கெட்டில் எழுதப்பட்ட காலாவதி தேதிக்குப் பிறகு நீங்கள் அந்த பாலை உட்கொண்டால் வயிற்று பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

முன் சிறந்தது (Best Before) என்பதன் பொருள் என்ன?

முன் சிறந்தது (Best Before) என்பது அந்த தேதிக்குப் பிறகு தயாரிப்பு கெட்டுவிடும் என்று அர்த்தமல்ல. இந்த தேதிக்குள் தயாரிப்பு அதன் சிறந்த சுவை, அமைப்பு மற்றும் தரத்தில் இருக்கும் என்று அர்த்தம். இந்தத் தேதிக்குப் பிறகும் தயாரிப்பு பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் அதன் தரம் சிறிது குறையலாம்.உதாரணமாக, ஒரு சாக்லேட்டில் “Best Before” என்று எழுதப்பட்டிருந்தால், அந்த தேதிக்குள் சாக்லேட் அதன் சிறந்த சுவை மற்றும் அமைப்புடன் இருக்கும் என்று அர்த்தம். இருப்பினும், அதன் பிறகும் நீங்கள் அதை சாப்பிடலாம். ஆனால் அதன் சுவை சிறிது மாறலாம். ஆனால் எந்த உணவுப் பொருட்களிலும் காலாவதி தேதி எழுதப்பட்டிருந்தால் அந்த தேதிக்குப் பிறகு அதை உட்கொள்ளக் கூடாது.

Use By date என்றால் என்ன?

தேதியின்படி பயன்படுத்துதல்(Use by date) என்பது, அதை உட்கொள்ள அல்லது பயன்படுத்துவதற்கான கடைசி தேதியாகும். இதன் பொருள், இந்த தேதிக்குள் தயாரிப்பு பயன்படுத்தப்பட வேண்டும். அதன் பிறகு அந்த பொருள் இனி பாதுகாப்பாக இருக்காது. இது ஒரு வகையில் காலாவதி தேதி போன்றது. குறிப்பாக புதிய உணவுப் பொருட்கள் மற்றும் கெட்டுப்போகும் பொருட்களில், ‘use by’ date மிகவும் முக்கியமானது.

எடுத்துக்காட்டாக, உணவு பொருள் பாக்கெட்டில் “use by” என்று எழுதப்பட்டிருந்தால், அந்த தேதிக்குப் பிறகு அதை உட்கொள்வது உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என அர்த்தம். இதேபோல், ஒப்பனைப் பொருட்களில் (makeup products) எழுதப்பட்டிருந்தால், அந்த தேதிக்குப் பிறகு அதைப் பயன்படுத்துவது உங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்.


எந்த தயாரிப்பில் என்ன பார்க்க வேண்டும்?


ஒப்பனை பொருட்கள் (makeup products): இதில், நீங்கள் காலாவதி தேதி மற்றும் பொருளின் பயன்படுத்தப்படும் கடைசி தேதியை(Use by date) பார்க்க வேண்டும். நீங்கள் அதை குறிப்பிட்ட தேதிக்குப் பிறகும் பயன்படுத்தினால், அதன் தரம் சிறிது குறையலாம். ஆனால் காலாவதியான பிறகு அதைப் பயன்படுத்துவது சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

உணவுப் பொருட்கள்: உணவுப் பொருட்களில் (Best before) என்பது அந்தத் தேதி வரை அதன் சுவை மற்றும் தரம் மிகச் சிறந்ததாக இருக்கும். அதே சமயம் அந்தத் தேதிக்குப் பிறகு அதை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
மேலே, கூறப்பட்ட தகவல்கள் அயர்லாந்தின் உணவுப் பாதுகாப்பு ஆணையம் (Food Safety Authority of Ireland), கனெக்டிகட் பல்கலைக்கழக விரிவாக்க வெளியீடுகள்(University of Connecticut Extension Publications), கனேடிய உணவுப் பாதுகாப்பு நிறுவனம் (the Canadian Institute of Food Safety,) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் லேபிளிங் அரசாங்கத் துறைகள்(the European Union’s Food Safety and Labelling Government Department) உட்பட பல்வேறு ஆதாரங்களில் இருந்து எடுக்கப்பட்டது. இது தவிர, சில சுகாதார வலைத்தளங்களிலும் இதே போன்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளன.




🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

மிலாடி நபி விடுமுறை - அரசாணை வெளியீடு

September 09, 2024 0
IMG_20240909_152522_wm

மிலாடி நபி - 17.09.2024 அன்று விடுமுறை - அரசாணை வெளியீடு!


Public Holiday - Holiday for Milad - un - Nabi declared on 17th September 2024 - under Negotiable Instruments Act , 1881 - Change in the date of observance of the festival- Orders - Issued .👇👇👇

Download here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

2024-25ஆம் கல்வியாண்டிற்கான திருத்திய நாட்காட்டி (குறைக்கப்பட்ட வேலை நாட்கள்) வெளியீடு சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!

September 09, 2024 0

 IMG_20240909_202034


2024-25 ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி பார்வை ( 2 ) ல் கண்டுள்ள கடிதப்படி அனைத்து முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டு நாட்காட்டி குறித்த கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் அனுப்பி வைக்க தெரிவிக்கப்பட்டது . இப்பொருள் சார்ந்து பெறப்பட்ட கருத்துக்கள் நடைமுறையில் உள்ள அரசாணைகள் பார்வை ( 2 ) ல் கண்டுள்ள சட்டம் மற்றும் தொடர்புடைய விதிகள் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டது.


 பார்வை ( 3 ) ல் கண்டுள்ள சட்டத்தின்படி 6 முதல் 8 வகுப்புகளுக்கு குறைந்தபட்சம் 220 வேலை நாட்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை மற்றும் 2024-25 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் ஜூன் 10 ம் தேதி திறக்கப்பட்டமை ஆகியனவற்றை கருத்திற்கொண்டு 6 முதல் 8 வகுப்புகளுக்கு வரையறுக்கப்பட்டுள்ள வேலை நாட்களின் அடிப்படையில் உயர் மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கும் 220 வேலை நாட்கள் ( 210 நாட்கள் கற்றல் - கற்பித்தல் , தேர்வுகள் உள்ளிட்டவைக்கும் 10 நாட்கள் பயிற்சி உள்ளிட்ட கல்விசார் பணிகளுக்கும் ) என நிர்ணயம் செய்து 2024-25 ஆம் கல்வியாண்டில் பின்பற்றப்பட வேண்டிய திருத்திய நாட்காட்டி இத்துடன் இணைத்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது . இதனை சார்நிலை அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

`புதிய நாட்காட்டி விரைவில்....

 DSE - New Academic Calendar - Proceedings👇👇👇

Download here



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

EMIS New Update - Change profile request 2024-2025

September 09, 2024 0

2024-25ஆம் கல்வியாண்டிற்கான திருத்திய நாட்காட்டி வெளியீடு!

September 09, 2024 0

 

IMG_20240909_211319

2024-25ஆம் கல்வியாண்டிற்கான திருத்திய நாட்காட்டி வெளியீடு!

New Academic Calendar pdf - Download here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

September 8, 2024

இனிப்பு அதிகமாக சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா.. உண்மை என்ன?

September 08, 2024 0

 அதிகப்படியான இனிப்புகளை சாப்பிடுவது நீரிழிவு நோயக்கு காரணமாகுமா அல்லது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்துமா என்கிற கேள்வி பலருக்கும் எழும். இதுபற்றிய விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

உலகில் பெரும்பாலானோர் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சர்க்கரை நோயை டைப் 1 மற்றும் டைப் 2 என இரண்டாகப் பிரிக்கலாம். இதில் டைப் 1 சர்க்கரை நோய் சர்க்கரையை அதிகமாக எடுத்துக் கொள்வதால் வராது என்றாலும், டைப் 2 நமது தினசரி வாழ்க்கை முறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதிக சர்க்கரையை உட்கொள்வதால் உடல் பருமன் அதிகரிக்கும் மற்றும் இன்சுலின் சுரப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது.

இதுவே டைப் 2 நீரிழிவு நோய்க்கான அபாயத்தை தூண்டுகிறது. குறிப்பாக சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள் தீங்கு விளைவிக்கும். சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதும், சரிவிகித உணவைப் பின்பற்றுவதும் நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைப்பதற்கு முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகிறது.

News18

மிட்டாய்கள் முதல் பேஸ்ட்ரிகள் வரை சர்க்கரையை சேர்ப்பது கட்டாயமாகியிருக்கிறது. இதுபோன்ற பொருட்களில் சர்க்கரையை தவிர்ப்பது கடினம். உடல்நலம், குறிப்பாக நீரிழிவு நோய் பற்றிய கவலைகள் அதிகரித்து வருவதால், அதிகப்படியான இனிப்புகளை உட்கொள்வது உண்மையில் இந்த நாட்பட்ட நிலையை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்குமா என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். சர்க்கரை உட்கொள்வதற்க்கும், நீரிழிவு நோய்க்கும் உள்ள தொடர்பைப் பற்றி நாம் புரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


சர்க்கரைக்கும், சர்க்கரை நோய்க்கும் உள்ள தொடர்பு என்ன?

அதிக சர்க்கரை சாப்பிடுவது நேரடியாக நீரிழிவு நோயை உண்டாக்குகிறதா என்பது மக்களிடையே பொதுவான கேள்விகளில் ஒன்றாகும். இதற்கு எளிதாக “ஆம்” அல்லது “இல்லை” என்று செல்வது தான் உண்மையில் கஷ்டமான விஷயம். அமெரிக்க நீரிழிவு சங்கத்தின் கூற்றுப்படி, டைப் 1 நீரிழிவு என்பது ஒரு தன்னுடல் தாக்க நிலையாகும், இதில் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு, இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களைத் தாக்குகிறது, மேலும் இது சர்க்கரை உட்கொள்வதால் ஏற்படாது. மறுபுறம், டைப் 2 நீரிழிவு நோய், மிகவும் பரவலாக உள்ளது, இது உணவுமுறை உள்ளிட்ட வாழ்க்கை முறை காரணிகளுடன் தொடர்புடையது.

சர்க்கரை அதிகம் உள்ள உணவு, உடல் பருமனுக்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது, இது டைப் 2 நீரிழிவு நோய்க்கான குறிப்பிடத்தக்க ஆபத்தான காரணியாக பார்க்கப்படுகிறது. அதிகப்படியான சர்க்கரை எடுத்துக் கொள்வது உடல் எடையை அதிகரிக்கிறது. குறிப்பாக முக்கிய உறுப்புகளைச் சுற்றியுள்ள உள்ளுறுப்பு, ழுப்பு வடிவத்தில் இருக்கும். இந்த வகை கொழுப்பு, இன்சுலின் எதிர்ப்புடன் தொடர்புடையது, உடலின் செல்கள் இன்சுலினுக்குக் குறைவாகப் பதிலளிக்கும் நிலையில், இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதற்கும், இறுதியில், டைப் 2 நீரிழிவுக்கும் வழிவகுக்கிறது.

சர்க்கரை பானங்களின் பங்கு என்ன?

சர்க்கரையின் முக்கிய ஆதாரங்களில் ஒன்று சர்க்கரை பானங்கள் ஆகும். சர்க்கரை பானங்களைத் தொடர்ந்து உட்கொள்ளும் நபர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான அதிக ஆபத்து இருப்பதாக ஜர்னல் ஆஃப் டயாபிடிஸ் இன்வெஸ்டிகேசன் நடத்திய ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு சர்க்கரை பானங்களை உட்கொள்வது கூட ஆபத்தை 26% அதிகரிக்கும் என்று அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்னவென்றால், சர்க்கரை பானங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை விரைவாக அதிகரிக்கச் செய்கின்றன, இது காலப்போக்கில் இன்சுலின் எதிர்ப்பை உருவாக்குகிறது. இந்த பானங்கள் எந்த ஊட்டச்சத்தையும் வழங்குவதில்லை, நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்காமல்,டை அதிகரிப்புக்கு மட்டும் பங்களிக்கின்றன. சர்க்கரை பானங்களை கட்டுப்படுத்துவது நீரிழிவு அபாயத்தைக் குறைப்பதில் ஒரு முக்கியமான படியாகும்.


இன்சுலின் எதிர்ப்பில் செயற்கையாக சேர்க்கப்படும் சர்க்கரைகளின் தாக்கம் என்ன?

பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருக்கும் இயற்கையான சர்க்கரைகளையும் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருக்கும் சர்க்கரையையும் வேறுபடுத்திப் பார்ப்பது முக்கியமான ஒன்று. மிட்டாய்கள், வேகவைத்த பொருட்கள் மற்றும் இனிப்பு தானியங்கள் போன்ற சர்க்கரை அதிகமாக உள்ள பொருட்களை அதிகமாக உட்கொள்ளும் போது தீங்கு விளைவிக்கும். சர்க்கரைகள் அதிகம் உள்ள உணவுகள் நீரிழிவு நோயுடன் போராடும் இன்சுலின் எதிர்ப்பின் அளவை அதிகரிக்க செய்யும்.

உடலின் செல்கள் இன்சுலினுக்கு சரியாக பதிலளிக்கத் தவறும்போது இன்சுலின் எதிர்ப்பு ஏற்படுகிறது, இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன் ஆகும். இதனை ஈடுசெய்ய கணையம் அதிக இன்சுலினை உற்பத்தி செய்கிறது, ஆனால் காலப்போக்கில், இது அதிக இரத்த சர்க்கரை அளவு மற்றும் இறுதியில், டைப் 2 நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கிறது.

சரிவிகித உணவை உட்கொள்வது எவ்வளவு முக்கியம்?அதிகப்படியான சர்க்கரையை எடுத்துக் கொள்வது நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும் என்பது தெளிவாகத் தெரிந்தாலும், சர்க்கரையானது இயல்பாகவே மோசமானது அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். முக்கிய விஷயம் மிதமான மற்றும் சீரான உணவை பராமரிப்பது. உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) அறிவுரைப்படி, உங்கள் மொத்த தினசரி ஆற்றல் தேவையில் 10% க்கும் குறைவான அளிலான சர்க்கரை உணவையும், கூடுதல் ஆரோக்கிய நன்மைகளுக்காக 5% க்கும் குறைவாக இருக்கும் சர்க்கரையையும் எடுத்து கொள்ளலாம் என்று பரிந்துரைத்துள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

DRDO ஆணையத்தில் Junior Research Fellows வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.48,100/- || டிகிரி தேர்ச்சி போதும்

September 08, 2024 0

 DRDO ஆணையத்தில் Junior Research Fellows வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.48,100/- || டிகிரி தேர்ச்சி போதும்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் எனப்படும் DRDO DYSL-AI ஆனது Junior Research Fellows பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

DRDO காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Junior Research Fellows பணிக்கென ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

JRF கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B.Tech / M.E / M. Tech / Post graduate degree in Basic Science தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

DRDO வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


JRF ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.48,100/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DRDO தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் GATE மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

CMC வேலூர் கல்லூரியில் Field Worker வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

September 08, 2024 0

 CMC வேலூர் கல்லூரியில் Field Worker வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Field Worker, Fire Officer மற்றும் பல்வேறு பணிக்கான 14 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CMC காலிப்பணியிடங்கள்:

Field Worker, Fire Officer மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 14 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு / Any Degree / B.Sc / M.Sc / MD / MS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CMC வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30,35 மற்றும் 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு CMC-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CMC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.09.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group