Agri Info

Adding Green to your Life

April 26, 2023

ரெஸ்யூம் இப்படி இருந்தால் உங்களுக்கு வேலை நிச்சயம்..!

April 26, 2023 0

 

பெரிய வேலைகளுக்கும் சரி, சாதாரண ஒரு வேலைக்கும் சரி நமது விபரங்கள் அடங்கிய பயோ டேட்டா அவசியமாகிவிட்டது. ஆனால் ரெஸ்யூம் வலுவாக இருந்தால் வேலை வாய்ப்புகள் மேம்படும் என்கின்றனர் நிபுணர்கள். ஸ்ட்ராங்கான ரெஸ்யூம் என்றால் என்ன? அதில் சேர்க்க வேண்டிய விஷயங்கள் என்ன..? போன்ற விஷயங்களை இங்கே குறிப்பிடுகிறோம்.

ரெஸ்யூம் என்பது வேலைக்கு ஒருவர் தேவை என்று ஆட்சேர்ப்பு செய்பவருக்கு, நமது அனைத்து அம்சங்களையும் விளக்கும் ஒரு ஆவணமாகும். உங்கள் விண்ணப்பம் தீர்க்கமானதாகவும் சிறப்பானதாகவும் இருப்பதை உறுதிசெய்ய, இதில் சில விஷயங்களைச் சேர்க்க வேண்டும்.

1. உங்கள் திட்டங்கள் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும். ஆனால் முக்கியத்துவத்தை மிகைப்படுத்தாதீர்கள். அவற்றை யதார்த்தமாக விவரிக்கவும்.

2. உங்கள் திறமைகளைக் குறிப்பிடவும். குறிப்பிட்ட நிகழ்வுகளின் மூலம் நீங்கள் தொழில்நுட்ப ரீதியாக எப்படி வளர்ந்தீர்கள் என்ற விவரங்களைச் சேர்க்கவும். பிரச்னைகளை தீர்க்கும் உங்கள் திறன்களை முன்னிலைப்படுத்தவும்.

3. ரெஸ்யூமில் பொய்யான தகவல்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். இப்படிச் செய்தால், வேலை கிடைத்தாலும் வருங்காலத்தில் சிரமங்களைச் சந்திக்க நேரிடும்.

ரெஸ்யூம் என்பது வேலைக்கான அணுகல் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் விண்ணப்பத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல ஆட்சேர்ப்பு நபருக்கு அதிகாரம் உள்ளது. எனவே திறமையான மற்றும் பயனுள்ள ரெஸ்யூமை தயார் செய்யவும். எடுத்துக்காட்டுகள் மற்றும் தரவுகளுடன் உங்கள் திறமைகளை முன்னிலைப்படுத்துவது நல்லது.

ஒரு நேர்காணலுக்கு நீங்கள் நல்ல ரெஸ்யூமுடன் வரும்போது, ​​​​பணியமர்த்துபவர் உங்களுடன் பேசுவது இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் அனைத்து முக்கிய அம்சங்களுடனும் நன்கு தயார் செய்யப்பட்ட ரெஸ்யூம், விண்ணப்பதாரரின் ஆளுமை, வேலைக்கான அர்ப்பணிப்பு, எதிர்கால வாழ்க்கைக்கான தயார்நிலை ஆகியவற்றை பிரதிபலிக்கிறது.

ரெஸ்யூமின் அடிப்படையில் நிறுவனத்திற்கு யார் தேவை, யார் ஒரு குறிப்பிட்ட வேலைக்கு ஏற்றவர் என்பதை பணியமர்த்தல் அலுவலர்கள் முடிவு செய்கிறார்கள். அதாவது இந்த காகிதம் அல்லது PDF தான் உங்கள் தலைவிதியை தீர்மானிக்கும். ஆனால் ரெஸ்யூமில் மிக முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது. ரெஸ்யூம்களைப் பிரித்துப் பார்க்க அலுவலர்களுக்கு அதிக நேரம் இல்லாதபோது...

1. நேர்காணல் செய்பவர்கள் விண்ணப்பதாரரின் சிந்தனை தெளிவை மதிப்பிடுகிறார்கள். அடுத்த சுற்றுக்கு முன்னேறும் 43% விண்ணப்பதாரர்கள் அத்தகைய திறனை கொண்டிருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.

2. ஒரு விரிவான ரெஸ்யூம் விண்ணப்பதாரர் மேல் நம்பிக்கையை அதிகரிக்கிறது. அவரின் வெற்றி விகிதத்தை 71 சதவீதம் வரை அதிகரிக்கிறது.

3. நீங்கள் ஒரு மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு மேலாண்மையில் அனுபவம் இருக்க வேண்டும். அதனை விபரமாக குறிப்பிட வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகளைக் குறிப்பிடுவது உங்கள் தேர்வுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தகுதிக்கேற்ற வேலை : தென்காசியில் ஏப்.28-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

April 26, 2023 0

 தென்காசி மாவட்டத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 28-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் துரை ரவிச்சந்திரன், தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற 28.04.2028 அன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அலுவலக வளாகத்திலேயே வைத்து நடைபெற இருக்கிறது.

இந்த முகாமில் பல்வேறு தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது decksjoblar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ அல்லது 04633-213179 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் துரை ரவிச்சந்திரன், தெரிவித்துள்ளார்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

April 23, 2023

COMPETITIVE EXAMS :போட்டித்தேர்வுக்கு நடப்பு நிகழ்வுகளை எப்படி படிப்பது எதை படிப்பது?

April 23, 2023 0

 TNPSC , UPSC, SSC, ரயில்வே தேர்வு  என்று பலதரப்பட்ட தேர்வுகளுக்கு நிறைய பேர் தயாராகிக்கொண்டு இருப்பீர்கள். எல்லா தேர்வுகளிலும் பொதுவாக வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், நடப்பு நிகழ்வுகள் இருக்கும். இது போன்ற பொதுவான படங்களை தினமும் கொஞ்சம் திருப்புதல் செய்ய ஏதுவாக நங்கள் தொகுத்து தர இருக்கிறோம். அந்த வகையில் இன்று நடப்பு நிகழ்வுகளை பற்றி பார்க்க இருக்கிறோம்.

போட்டி தேர்வுகளை பொறுத்தவரை தேர்வர்கள், படிக்கும் பாடங்களில் மட்டும் அல்லது தினசரி தங்களை சுற்றி நடக்கும் விஷயங்களைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்கிறார்களா என்பதை சோதிப்பதற்காகவே தேர்வுகளில் குறிப்பிட்ட அளவிலான நடப்பு நிகழ்வுகள் கேட்கப்படுகின்றன. இந்த நடப்பு நிகழ்வுகளைப்  பொறுத்தவரை ஒவ்வொரு தேர்வுக்கும் கேட்கப்படும் பகுதி  மாறுபடும்.

 TNPSC , UPSC, போன்ற தேர்வுகளுக்கு அரசியல் நடவடிக்கைகள், பொருளாதார நிகழ்வுகள், அரசின் திட்டங்கள், சமூக பிரச்சனைகள், சுற்றுசூழல் பிரச்சனைகள், புதிய கண்டுபிடிப்புகள் தான் முக்கியமானவை. அரசியல் நடவடிக்கைகள் என்றால் அரசு இயந்திரத்தில் நடக்கும் மாற்றங்கள், அரசியல் சாசனம் தொடர்பான செய்திகள் மட்டுமே முக்கியமானது. அரசியல் கட்சிகள் சார்ந்த செய்திகள் தேவை இல்லை.

இப்போது ஒரு அமைச்சர் அவரது அவையில் இருந்து நீக்கப்படுகிறார் என்றால் அவர் எந்த அடிப்படையில் நீக்கப்படுகிறார்? மத்திய அரசின் உறுப்பினர் என்றால் சரத்து 102  அல்லது மாநில அரசின் உறுப்பினர் என்றால் சரத்து 191 அடிப்படியில் நீக்கப்பட்டாரா, அதற்கான தகுதிகள் மற்றும் நடைமுறைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வது தான் நாம் படிக்க வேண்டியது. கட்சி சார்ந்த கருத்துக்களை பற்றி யோசிக்க அவசியம் இல்லை.

மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புகள் எப்படி இயங்குகிறது, அதன் உறுப்பினர்கள் யார், நடப்பு ஆண்டில் இதில் நடந்த மாற்றங்கள் மற்றும் அது சார்ந்த அரசியல் அமைப்பு பிரிவுகள் பற்றி ஆழமாக படிக்க வேண்டும். விளையாட்டு, கலை சார்ந்த செய்திகள் எல்லாம் ssc , ரயில்வே தேர்வுகளில் கேட்கப்படும். செய்தியில் வந்த பிரபல கலைஞர்கள் மாறும் அவர்கள் துறை பற்றி தெரிந்திருத்தல் வேண்டும்.

பொருளியலை பொறுத்தவரை மத்திய மற்றும் மாநில பட்ஜெட்டுகள் முக்கியமானது. எந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கப்பட்ட புள்ளி விவரம் சரியான எண்களில் ஞாபகம் வைத்திருக்க அவசியம் இல்லை. அதற்கு பதிலாக எந்த எந்த துறையின் கீழ் என்னென்ன புதிய திட்டங்களை அரசு கொண்டு வந்துள்ளது, அதன் பெயர்கள் மற்றும் விபரங்களை தெரிந்துகொள்ள வேண்டும்.

இதை எங்கே இருந்து படிப்பது என்ற குழப்பம் ஏற்படும். தினசரி செய்தித்தாள்கள் தான் இதற்கு முக்கிய ஆதாரமாக இருக்கும். அது போக விருப்பம் இருந்தால் அரசின் அதிகாரபூர்வ செய்தி வெளியீட்டு https://pib.gov.in/indexd.aspx வலைத்தளத்தில் இருந்து அரசு சார்ந்த செய்திகளை எடுத்துக்கொள்ளலாம். அதன் பின் அதன் முக்கிய கூறுகளை விரிவாக படிக்க வேண்டும்.

அதே போல புவியியல் சார்ந்தும் நடப்பு நிகழ்வுகளில் இருந்து கேள்வி வரும். புவி அப்படியே தான் இருக்கும் அதில் எங்கிருந்து நடப்பு நிகழ்வு என்று கேட்கலாம். பிரதமர், முதல்வர், குடியரசு தலைவர், அல்லது மற்ற நாட்டின் முக்கிய தலைவர்கள் ஏதாவது 1 ஊருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டாலோ  அல்லது அவர்களது உரையில் ஏதாவது இடத்தை பற்றி குறிப்பிட்டாலோ அது முக்கியத்துவம் பெரும். அப்போது அந்த இடத்தையும் அது சார்ந்த கலாச்சாரத்தையும் பற்றி படிக்க வேண்டும்.

தினசரி நடக்கும் நிகழ்வுகளைக்  குறிப்பு எடுத்துக்கொண்டே வரவேண்டும். ஒரு சில செய்திகள் தொடர்ச்சியாக வரும் அதை ஒரே பக்கத்தில் வரிசையாக எழுதி வந்தால் தேர்வின் போது புரட்டி பார்க்க ஏதுவாக இருக்கும். எல்லா தேர்வுகளிலும் குறைந்தது  20% கேள்விகள் நடப்பு நிகழ்வுகளை சார்ந்தே வரும். அதனால் கவனம் தேவை.

படிக்கிறோமோ அதை விட திருப்புதல் ரொம்ப அவசியம். அது தான் கேள்வியைப் பார்த்ததும் விடையை நமக்குச் சொல்லும். படிக்க ஆரம்பிங்க.. நாளை சந்திப்போம்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

சென்னை பசுமை தீர்ப்பாயத்தில் அலுவலக உதவியாளர் பணி.. உடனே அப்ளை பண்ணுங்க..!

April 23, 2023 0

 சென்னையில் செயல்பட்டு வரும் தெற்கு மண்டலத்திற்கான தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவி, முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

பதவி: அலுவலக உதவியாளர் (பணி காலம்: 3 மாதங்களுக்கு மட்டுமே)

எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) பெற்றிருக்க வேண்டும்; ஆங்கில தட்டச்சில் அனுபவம் இருக்க வேண்டும்; கணினி அறிவு இருத்தல் வேண்டும். நீதிமன்றம்/ தீர்பாயங்களில் முன்னனுபவம் இருத்தல் விரும்பத்தக்கது ஆகும்.

வயது வரம்பு: 21 - 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை www.greentribunal.gov.inஎன்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். முழுவதுமாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை  பதிவுத் தபால் மூலமாக 03.05.2023 அன்றைக்குள் Registrar, National Green Tribunal, Southern Zone Bench, kalas Mahal, PWD Estate, Chepauk, chennai - 600005 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

ஊதிய விகிதம், பணி தொடர்பான இதர நிபந்தனைகள் அனைத்தும் ஆட்சேர்க்கை அறிவிப்பில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Competitive exams : குழுவாக படித்தல் முதல் திட்டமிடல் வரை.. தேர்வுக்கு தயாராக சில டிப்ஸ் !

April 23, 2023 0

 படித்து முடித்துவிட்டு பிளேஸ்மென்ட் ஆகி தனியார் நிறுவனங்களில் சேர்ந்து கைநிறைய சம்பளம் வாங்கினாலும் சமீப காலங்களில் பிரபல நிறுவனங்கள் செய்து வரும் லே ஆஃப்களை பார்த்துவிட்டு இளைஞர்கள் பட்டாளம் முழுவதும் அரசு வேலைகளை நோக்கி படை எடுக்கத்  தொடங்கி விட்டனர். ஆனால் எப்படி தயாராவது என்ற தெளிவு இருப்பதில்லை.

எனவே, போட்டித் தேர்வுகளுக்கு எவ்வாறு தயாராவது என்பது குறித்த சில பயனுள்ள குறிப்புகள் இங்கே கொடுக்கிறோம்.

குழு படிப்பு:

பொதுவாக இந்த போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மக்கள் செய்யும் முதல் தவறு தனியாக படிப்பது. இது எப்படி தவறாகும் தனியாக படித்தால் தானே நன்றாக படிக்க முடியும் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் உண்மையில் குழுவாக படிப்பது குறைந்த நேரத்தில் நிறைய படிக்கச் உதவும்.

குழு விவாதங்கள் நிகழ்த்தும்போது, தனித்தனியாக படித்ததை மற்றவர்களுக்கு சொல்லும்போது அந்த செய்தி உங்களுக்கு இன்னும் தெளிவாகவும் ஆழமாகவும் மனதில் பதியும். அதே நேரம் எல்லா விஷயங்களையும் தனியாக நீங்களே படிக்கும் போது எடுக்கும் காலத்தை விட மற்றவர்கள் சொல்லி கேட்கும் போது சீக்கிரம் முடிந்துவிடும். கேள்விச் செல்வம் பெருஞ்செல்வம்.

அதே போல நேர்காணல்களில் தைரியமாக பேசுவதற்கான பயிற்சியாகவும் இது அமையும். நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொது அறிவைப் பற்றி சகாக்களுடன்இப்படி விவாதிப்பது உங்களுக்கு அந்த செய்தி குறித்த பார்வையை விரிவுபடுத்தவும் உதவும்.

திட்டமிடல்:

ஒரு நல்ல திட்டம் கொண்ட ஆரம்பம் பாதி வேலை முடிந்ததற்கு சமம் என்று சொல்வார்கள் . நீங்கள் முயற்சிக்கும் தேர்வுகளின் அட்டவணையைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் படிப்பைத் தொடங்கும் நாளில் இருந்து தேர்வு நாளைக் கணக்கிட்டு அதற்கேற்ற சரியான திட்டத்தை உருவாக்கவும். உங்கள் திட்டம் குறைந்தது தேர்வுக்கு 10நாள் முன்னர் முடிவதாக இருக்க வேண்டும்.

நேர மேலாண்மை:

வெற்றியை அடைய உங்கள் நேரத்தை புத்திசாலித்தனமாக நிர்வகிப்பது முக்கியம். உங்கள் அன்றாட வழக்கத்தில் குழப்பம் மற்றும் கவனச்சிதறல்களைத் தவிர்ப்பதற்காக, படிப்பு தாண்டி, பொழுதுபோக்கு, ஆரோக்கிய பராமரிப்பு மற்றும் பல்வேறு செயல்பாடுகளுக்கு சிறிது நேரம் ஒதுக்குங்கள். இது உங்கள் படிப்பை கவனச்சிதறல் இல்லாமல் சிறந்த முறையில் பயன்படுத்த உதவும்.

பாடங்களை சரியாக தேர்ந்தெடுத்து படியுங்கள்:

சில தேர்வுகளில் விருப்பப்படங்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கும். இந்த மாதிரியான நேரங்களில் அதிகம் படிக்கும் படம் என்று தேர்ந்தெடுக்காமல் உங்களுக்கு மிகவும் வசதியாக, எளிமையாக இருக்கும் பாடத்தைத் தேர்ந்தெடுப்பது தான் புத்திசாலித்தனம். பல மாணவர்கள் வெற்றியை அடைவதற்கு இது ஒரு முக்கியமான புள்ளியாக இருந்துள்ளது.

பகுதி பிரித்தல்:

கடைசி நிமிடம் வரை படிப்பது, எல்லாவற்றையும் படிப்பது இரண்டுமே மன அழுத்தம் மற்றும் சோர்வு மற்றும் குழப்பத்திற்கு வழிவகுக்கும். உங்கள் படிப்புத் திட்டத்தை உருவாக்கும் முன், தேர்வுப் பாடத்திட்டத்தைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு பிரிவிலும் உங்களுக்கு எளிமையாக இருக்கும் பகுதி கஷ்டமான பகுதி என்று பிரித்துக்கொள்ளுங்கள். சில கஷ்டமான பாட பகுதி, அதிக மதிப்பெண் எடுக்க கூடியதாக இருக்கும். அதற்கு தினமும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி படியுங்கள்.

மாதிரி தேர்வுகள்:

எவ்வளவு படித்தாலும் கேள்வி தாள் கையில் கொடுத்ததும் எதுவும் நினைவுக்கு வருவதில்லை என்பது தான் எல்லாம் பொதுவாக சொல்லும் விஷயம். அதற்கு காரணம் நீங்கள் கேள்விகளுக்கு பழக்கப்படவில்லை என்பது தான். தேர்வுக்கு ஒரு நாளில் 6 நாட்கள் படித்தால் 7 ஆவது நாள் படித்த படங்கள் கொண்ட முந்தைய ஆண்டு மாதிரி தாள்களைப் பயிற்சி செய்ய வேண்டும். முக்கியமாக அதன் விடைகளை சரிபார்த்து என்ன தவறு செய்தோம் என்பதை அறிய வேண்டும். அப்போது தான் முழு பலன் கிடைக்கும். அதோடு இந்த மாதிரி தேர்வுகள் அசல் தேர்வில் உங்கள் நேர மேலாண்மைக்கும் உதவும்.

சுய உந்துதல்:

எதோ வினோத வார்த்தை என்று பார்க்க வேண்டாம். self motivation என்பதை தான் அப்படி சொன்னோம். என்ன ஆனாலும் உங்கள் சுய ஆர்வமும், உந்துதலும் இருந்தால் மட்டுமே உங்களால் சரியாக தேர்வுக்கு தயாராக முடியும். வெற்றிபெறவும் முடியும். உந்துதல் தான் எப்போதும் இலக்குகளை அடைய உங்களை ஊக்குவிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சுய உந்துதலோடு படிக்க ஆரம்பியுங்கள்.. மீண்டும் சந்திப்போம்..


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

April 21, 2023

ரூ. 50,000க்கும் அதிகமாக சம்பளம்... தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு..!

April 21, 2023 0

 மாநகரில் அமைந்துள்ள திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது

தட்டச்சர், உதவி மின் பணியாளர் , காவலர்,  தூய்மை பணியாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள்  எதிர்வரும் ஏப்ரல் 11ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்ப படிவத்தை அனுப்பி வைக்க வேண்டும்.

தட்டச்சர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி (அ) அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்; அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் ; தமிழிலில் இளநிலை கணினி பயன்பாடு மற்றும் Office Automation சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

உதவி மின் பணியாளர் பணிக்கு மின் கம்பிப் பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மின் உரிமம் வழங்கல் வாரியத்திடம் இருந்து H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். காவலர், தூய்மை பணியாளர்  பணிகளுக்கு தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு முறையானது அடிப்படைக் கல்வித் தகுதி, அனுபவம், செயல்முறை தேர்வுகள், கூடுதல் தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும். இந்த பதவிக்கு இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

திருக்கோயிலால் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.இதர நிபந்தனைகளை திருக்கோயில் அலுவலகத்திலும் அல்லது www.tnhrce.gov.in மற்றும் www.thiruvanaikavaljambukeswarar.hrce.tn.gov.inஎன்ற இணையதளங்களிலும் அறிந்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பங்களை மேற்படி இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Bank Jobs | கல்வித் தகுதி எதுவும் வேண்டாம்... எஸ்பிஐ வங்கியில் 1000க்கும் மேற்பட்ட காலியிடங்கள்..!

April 21, 2023 0

 நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான  ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையின் மூலம் 1000க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட உள்ளனர். பாரத ஸ்டேட் வங்கி (SBI)அல்லது வேறு ஏதேனும் அரசு வங்கியில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய  கடைசி தேதி: 2023, ஏப்ரல் 30 ஆகும்.

காலியிடங்கள் விவரம்: மேலாளரின் உதவியாளர் (CMF- Channel Manager Facilitator ) பதவிக்கு 821 காலியிடங்களும்,  சேனல் மேலாளர் மேற்பார்வையாளர் (CMS-AC - Channel Manager Supervisor ) பதவிக்கு 172 காலியிடங்களும், துணை அதிகாரி (SO-AC - Support Officer) பதவிக்கு 38 காலியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், எந்தவித  குறிப்பிட்ட கல்வித் தகுதியையும் கொண்டிருக்கத் தேவையில்லை. தொடர்புடைய துறைகளில் முன்னனுபவம் கொண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.

பதவியில் கோரப்பட்ட முன் அனுபவம் அடிப்படையிலும், நேர்காணல் அடிப்படையிலும் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்வது எப்படி, தேர்வு முறை, விண்ணப்பக் கட்டணம்,  வயது வரம்பு உள்ளிட்ட தகவல்கள் அனைத்து விவரமாக ஆள்சேர்க்கை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. தேர்வர்கள், அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

நெல்லையில் பெண்களுக்கு தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க!

April 21, 2023 0

 திருநெல்வேலியில் பெண்களுக்கான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் கல்லூரியில் வரும் 29ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மையம் டாட்டா பவர் ரெனிவபில் எனர்ஜி நிறுவனத்தின் துணை நிறுவனமான டிபி சோலார் நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் பெண்களுக்கென மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இம்மாதம் 29ஆம் தேதி காலை 9 மணி முதல் பாளையங்கோட்டை சாராள் தக்கர். மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது.

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள டிபி சோலார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புக்காக பிரத்தியமாக நடத்தப்படுகிறது இந்த நிறுவனம் இந்த முகாமில் 1,600 க்கும் மேற்பட்டோரை தேர்வு செய்ய உள்ளது 18 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்ட பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு ஐடிஐ பாலிடெக்னிக் பிஇ முடித்த பெண்கள்அல்லது இறுதி ஆண்டு மாணவிகள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.

விரும்பம் உள்ள பெண்கள் http://surl.li/gllsy என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவிடலாம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அடுத்த ஆறு முதல் பத்து மாதங்களில் படிப்படியாக பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் பணி நியமனம் பெறும் பதிவு தாரர்களுடைய வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது இது தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தங்களது கல்வி சான்று மற்றும் இதர சான்றுகளுடன் பங்கேற்று நமது மாவட்டத்திலேயே ஒரு பெரு நிறுவனத்தில் பணி புரியும் வாய்ப்பை பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

திண்டுக்கல்லில் வேலை மற்றும் உயர்கல்வி பெறும் வாய்ப்பு.. மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க!

April 21, 2023 0

 தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டமும் திண்டுக்கல் மாவட்ட பள்ளிக் கல்வித்துறையும் HCL நிறுவனமும் இணைந்து ஓர் பொன்னான வாய்ப்பை வழங்கியுள்ளது.

HCL நிறுவனம் TechBee திட்டத்தின் வாயிலாக 2023 ஆம் ஆண்டு 12ம் வகுப்பு தேர்வு எழுதிய அரசு அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும், தனியார் பள்ளி மாணவர்களுக்கும் (Matrie/CBSE/ICSE) பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புடன் உயர்கல்வி பெறும் வாய்ப்பை அளிக்கிறது.

அதற்கான தேர்வு Online ல் 28, 29 மற்றும் 30 ஏப்ரல் 2023 (வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு கிழமை) ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் நடக்கின்றது. பழனி கல்வி மாவட்ட மாணவர்கள் ஒட்டன்சத்திரத்திலுள்ள Christian Engineering College தேர்வு மையத்திலும், திண்டுக்கல் கல்வி மாவட்ட மாணவர்கள் திண்டுக்கல் நகரத்திலுள்ள RVS College of Engineering and Technology தேர்வு மையத்திலும் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

தேர்வு எழுத வரும் மாணவர்கள் Aadhaar card, Passport Photo1 Android Mobile phone & மதிய உணவு கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நீங்கள் தேர்வு செய்யப்பட்டால், HCL TechBee வழங்கும் பயிற்சி மற்றும் வேலையுடன் உயர் கல்வியை BITS Pilani/SASTRA/AMITY/KL University/IIM Nagpur பல்கலைக்கழகத்தில் HCL வழங்கும் உதவித் தொகையோடு படிக்கலாம். பயிற்சியின் போது 7வது மாதம் முதல் 12வது மாதம் வரை உதவித் தொகையாக மாதம் ரூ.10,000 வழங்கப்படும்.

இந்த தேர்வில் 2023ல் தேர்வு எழுதியுள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்கள் கலந்துகொள்ளலாம். இத்தேர்விற்கு வரும் மாணவர்கள் https://forms.office.com/r/VruvmhzKQi என்ற இணையதளத்தில் பதிவு செய்துவிட்டு தேர்விற்கு வரவும். பதிவு செய்யாத மாணவர்களும் நேரடியாக தேர்விற்கு வரலாம்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

காலையில் டீ, காபிக்கு பதில் இந்த கிரீன் ஜுஸ் குடிங்க.. ஈஸியா உடல் எடையை குறைச்சிடலாம்..!

April 21, 2023 0

 நம்மில் பலருக்கு தினமும் டீ அல்லது காபி அருந்துவது வழக்கம். ஆனால், டீ அல்லது காபிக்கு பதிலாக கிரீன் ஜுஸ் எடுத்துக் கொள்வது நம் உடலுக்கு மிகவும் நல்லது. இது நம் உடலில் உள்ள தேவை இல்லாத கழிவுகளை நீக்க உதவும் ஒரு மெட்டபாலிசம் பூஸ்டர் ஆகும். இதன் பெயர் குறிப்பிடுவது போல, இதனை பச்சைக் நிறத்தில் உள்ள காய்கறிகள் கொண்டு நாம் தயாரிக்க வேண்டும்.

சிறந்த மெட்டபாலிசம் பூஸ்டர் : உங்கள் மெட்டபாலிசம் அதாவது வளர்சிதை மாற்றம் சற்று பொறுமையாக செயல்படுவது போல் நீங்கள் உணர்ந்தால் அல்லது நீங்கள் உங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், உங்கள் தினசரி உணவில் ஒரு கிளாஸ் கிரீன் ஜுஸை சேர்த்துக் கொள்ளலாம். ஃப்ரெஷ் ஆன கிரீன் ஜுஸில் உள்ள சில கலவைகள் ப்ரீபயாடிக்குகளாக செயல்படுகிறது. இது உங்கள் செரிமான மண்டலத்தில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்கவும், உடல் எடையைக் குறைக்கவும், நோய் எதிர்ப்புச் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.

இது எடை இழப்புக்கான ஒரு பிரபலமான டிரிங் என்றும் சொல்லலாம். கடைகளிலும் கிரீன் ஜுஸ் தற்போது விற்கப்படுகின்றன. இருப்பினும், நீங்கள் அவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அவற்றில் சர்க்கரை அதிகமாக சேர்க்கப்பட்டு இருக்கலாம். ஆதலால், இது எடை அதிகரிப்புக்கு காரணமாகி விடக் கூடும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உடலின் நீர்ச்சத்தை தக்க வைக்க தண்ணீர் மட்டும் போதாது.. இவற்றையும் சேர்த்துக்கொள்ள அறிவுறுத்தும் நிபுணர்..!

April 21, 2023 0

 கோடைக்காலம் வந்தாச்சு. வெயிலும் 100 டிகிரிக்கு மேல் அடித்து நம்மை பாடாய்படுத்துகிறது. நடந்து சென்றாலும் சரி, பைக், கார் போன்ற வாகனங்களில் சென்றாலும் சரி.. வீட்டிற்கு வந்தவுடனே எப்படா.. தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற நினைப்புடன் வருவோம். அப்படி தண்ணீர் குடித்தால் மட்டும் தான் நம்மால் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க முடியும் என்று நினைப்போம். ஆனால் இது சிறந்த வழி அல்ல என்றும், நீங்கள் வெயில் காலத்தில் உங்களது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தால் இதற்கு இந்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

இதுக்குறித்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில், வீடியோ ஒன்றைப் பகிர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் கோரி ரோட்ரிக்ஸ் , ஒரு நாளைக்கு கணிசமான அளவு தண்ணீர் குடிப்பது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் தண்ணீர் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுவது மட்டுமல்லாமல், எடை இழப்பு, தோல் மற்றும் முடி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் பிறவற்றிற்கும் உதவுகிறது. எனவே, தண்ணீருக்கு பல நன்மைகள் இருக்கும்போது, அதிகபட்ச நன்மைக்காக அதை எவ்வாறு உட்கொள்ள வேண்டும்? என்பதை தற்போது நாம் கட்டாயம் அறிந்துக் கொள்ள வேண்டும்.


நம்முடைய உடலில் தண்ணீர் சத்து இல்லாத போது நம்மால் எந்த வேலையும் செய்ய முடியாது. மயக்கம் வருவது போன்ற நிலையில் தான் அதிகளவு தண்ணீரை நாம் தேடுவோம். நீங்கள் வெறும் தண்ணீரை மட்டும் குடிக்கும் போது, சிறுநீர் வழியாக சோடியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற எலக்ட்ரோலைட்களை தண்ணீராக வெளியேற்றுகிறீர்கள். இதனால் நம்மை அறியாமலே உடல் பலவீனமாகிவிடும். இதனால் தான் தாகத்திற்கு நாம் வெறும் தண்ணீர் மட்டும் குடிக்காமல் இதோடு சேர்ந்து எலக்ட்ரோல்களை நீங்கள் சேர்க்க வேண்டும்.

எனவே நீங்கள் வெறும் தண்ணீர் மட்டும் குடிக்காமல் அதனுடன்  உப்பு,இஞ்சி சேர்த்து சாப்பிடலாம். மேலும் வெயில் காலங்களில் சந்தைகளில் அதிகம் விற்பனையாகும் தர்பூசணி பழங்களையும் உங்களது உணவு முறையில் சேர்த்துக்கொள்ளலாம். இளநீரை கூட அடிக்கடி பருகலாம். இவை நிச்சயம் உங்களது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது.பொதுவாக தண்ணீர் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுவது மட்டுமல்லாமல், எடை இழப்பு, தோல் மற்றும் முடி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் பிறவற்றிற்கும் தீர்வாக அமைகிறது. எனவே, தண்ணீருக்கு பல நன்மைகள் இருப்பதால் நீங்கள் அதிகபட்ச வெறும் தண்ணீர் குடிப்பதோடு மட்டுமில்லாமல் மேற்க்கூறியுள்ள உணவுப்பொருள்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

பழங்களை எப்போது சாப்பிட வேண்டும் என்ற குழப்பம் இருக்கா...? வதந்திகளும் உண்மையும்...!

April 21, 2023 0

 பழங்கள் சாப்பிடுவதன் மூலம் நம்முடைய உடல் நலத்தை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும் என்பது அனைவருக்கும் அறிந்த ஒன்று தான். இருந்தப்போதும் உணவிற்கு முன்னதாகவா? உணவிற்கு பின்பு சாப்பிட வேண்டுமா? அல்லது இதை ஒரு நேர உணவாக மட்டும் எடுத்துக்கொள்ளலாமா? என்ற சந்தேகம் நிச்சயம் எழக்கூடும்.

இதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான கட்டுக்கதைகள் மற்றும் சில உண்மைகளைக் கூறுவார்கள். இதோ இன்றைக்கு பழங்களை எப்போது சாப்பிட வேண்டும் என்றும் பழங்கள் சாப்பிடுவது குறித்து இதுவரை உள்ள கட்டுக்கதைகள் குறித்தும் அறிந்துக் கொள்வோம்.

பழங்களை எப்போது சாப்பிட வேண்டும்? சுகாதார நிபுணர்களின் கருத்தின் படி, காலையில் நீங்கள் பழங்கள் சாப்பிடுவது உங்களின் சர்க்கரையை நிர்வகிக்க உதவுகிறது. ஒருவேளை நீங்கள் உணவின் போது பழங்களை சாப்பிட்டால் செரிமானத்தில் பிரச்னை ஏற்படுகிறது. ஆம் சில பழங்களில் அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், உணவில் சேர்த்து கொள்ளும் போது வயிற்றில் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது என்று கூறப்படுகிறது. இதோ இவற்றில் எது உண்மை என்ற விபரம் இங்கே.

உணவு நேரத்திற்கு அருகில் பழங்களை சாப்பிடக்கூடாது என்ற கூற்று கட்டுக்கதை என்று கூறுகின்றனர் சுகாதார நிபுணர்கள். நீங்கள் சாப்பிடும் நேரத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக பழங்களை சாப்பிடுவது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. இது செரிமானத்தை சிறிது குறைக்கிறது. நீங்கள் பழங்களை அதிகாலையில் சாப்பிடுவது சிறந்தது என்று கூறினாலும் அல்லது உணவுக்கு இடையில் சாப்பிடுவது தான் சிறந்தது என்று கூறினாலும் சரி முதலில் உங்களது உடல் ஆரோக்கியம் எப்படி உள்ளது என நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டும். ஆம் உங்களுக்கு குடல் சம்பந்தமான பிரச்சனைகள் இல்லை என்றால் பழங்களை எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் எவ்வித தீங்கும் இல்லை.

பழங்கள் மற்றும் உலர்ந்த பழங்கள்  ஒன்றுதான் என்று கூறுவது தவறானது. ஆம் நீண்ட கால பயன்பாட்டிற்காக பாதுகாக்கப்படும் எதுவும் புதியதைப் போன்று அதே ஊட்டச்சத்துக்களை தக்க வைத்துக்கொள்ளாது. இந்த கூற்று பழங்களுக்கும் பொருந்தும். இன்றைக்கு சந்தைகளின் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, பல பிராண்டுகள் உலர் பழங்களை விற்பனை செய்கின்றன. எனவே முடிந்தவரை ப்ரஷ்ஷான பழங்களை சாப்பிடுவது நல்லது.

உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று தவறான கருத்து. பழங்களில் இயற்கையாகவே சர்க்கரை இருக்கிறது என்பது உண்மை தான். ஆனாலும் சர்க்கரை அளவை மாற்றுவதில் பழங்களின் பங்கு குறைவான தாக்கத்தையே ஏற்படுத்துகிறது. பெரும்பாலான பழங்கள் கிளைசெமிக் குறியீட்டின் கீழ் அவை உங்கள் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

சர்க்கரை நோயாளிகள் பழங்களில் உள்ள சர்க்கரையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? சர்க்கரை நோயாளிகள் ஆரோக்கியமான முறையில் பழங்களை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பது குறித்து, ஃபிட்டர்ஃபிளையின் வளர்சிதை மாற்ற ஊட்டச்சத்து தலைவர் ஷில்பா ஜோஷி சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இதன் படி, "நீரிழிவு உள்ளவர்களுக்கும் பழங்கள் நல்லது, மாம்பழங்களை ரொட்டி, சாப்பாடு, அல்லது உருளைக்கிழங்கு போன்ற பிற கார்போஹைட்ரேட்டுகளுடன் சாப்பிடக்கூடாது. ஆனால் அதற்கு மாற்றாக பாதாம், அக்ரூட் மற்றும் நட்ஸ்களுடன் சேர்த்து சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளலாம். இதுபோன்று தான் பிற பழங்களும். எனவே, அளவுக்கு மீறாமல் சாப்பிடுவது நல்லது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

வெயில் கொளுத்த தொடங்கிடுச்சு.. தினமும் இந்த 8 உணவுகளை கட்டாயம் எடுத்துக்கோங்க.!

April 21, 2023 0

 கோடைக்காலம் வந்தாலே வெயிலின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கும். அதிலும் இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக கடுமையான உஷ்ண அலையுடன் கூட வெப்பம் அதிகமாகவுள்ளது. இந்த நாட்களில் உங்களது உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்துக்கொள்வது அவசியம். இதனால் அதிகளவு தண்ணீர் குடிப்பது, நீர்ச்சத்து நிறைந்த பழங்களை அதிகம் உட்கொள்வது போன்ற விஷயங்களை நீங்கள் மேற்கொள்வீர்கள்.

இவ்வாறு உங்களது உடலை நீரேற்றமாக நீங்கள் வைத்துக்கொள்வது ஒருபுறம் இருந்தாலும், உங்கள் வயிற்றையும் நீங்கள் ஆரோக்கியத்துடன் வைத்திருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம் அதிக வெப்பம் உங்களது செரிமான அமைப்பில் பல பிரச்சனைகளை ஏற்படும். உடலில் அதிக நீரிழப்பு, மலச்சிக்கல், வயிறு வீக்கம் மற்றும் இரைப்பை போன்ற குடல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. எனவே இதுப் போன்ற பிரச்சனைகளைத் தடுக்க வேண்டும் என்றால் கோடைக்காலத்தில் சில உணவுகளை கட்டாயம் நீங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதோ என்னென்ன? என்று இங்கே அறிந்துக்கொள்வோம். உங்கள் வயிற்றை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் உணவுகள்:

தர்பூசணி : அதிக நீர்ச்சத்து பழமான தர்பூசணியை நம்முடைய உணவில் சேர்த்துக்கொள்ளும் போது, வெப்பத்தை எதிர்த்துப்போராடி உடலை குளிர்ச்சியாக மற்றும் நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது. எனவே கோடையில் நீங்கள் அதிகமாக நீங்கள் சாப்பிடும் போது, உடலில் அதிக நீர் இருக்கும். இதனால் உங்களை நீரேற்றமாக வைத்திருப்பதோடு மலச்சிக்கலுக்குத் தீர்வாக அமைகிறது. தர்பூசணியில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் வழக்கமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. மேலும், ஆரோக்கியமான வயிற்றைப் பாதுகாக்க முக்கியமான வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவை இந்தப் பழத்தில் ஏராளமாக உள்ளன.

வெள்ளரிக்காய் : கோடையில் அதிகளவில் நிலவும் வெப்ப அலையால், உங்கள் வயிற்றை எளிதாக வைத்திருக்க உதவுகிறது. இதில் அதிகளவு நீர்ச்சத்து உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலை பாதுகாப்பாக வைத்திருக்க உதவியாக உள்ளது.

இளநீர் : கோடை வெயிலை சமாளிக்க இளநீர் ஒரு சிறந்த பானம். வெப்ப அலையின் போது உடலை நீரேற்றமாக இருக்க உதவும் எலக்ட்ரோலைட்டுகள் இதில் அதிகளவில் உள்ளது. மேலும் இதில் பொட்டாசியம் வழக்கமான குடல் இயக்கத்தை பராமரிக்கவும், மலச்சிக்கலைத் தவிர்க்கவும் உதவுகிறது. லாரிக் அமிலம், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் உங்கள் வயிற்றின் ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவுகிறது.

தயிர் : தயிர் போன்ற புரோபயாடிக் நிறைந்த உணவுப் பொருள்கள் அதிக வெப்ப அலையின் போது குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கும். புரோபயாடிக்குகள் எனப்படும் நல்ல பாக்டீரியாக்கள் உங்கள் வயிற்றில் இருப்பதால் செரிமானத்திற்கு உதவுகிறது. கூடுதலாக, தயிரில் நிறைய கால்சியம் உள்ளதால் குடல் இயக்கங்களை அதிகரிக்கிறது.

மோர் : கோடை காலத்தில் உங்கள் குடலை எரிச்சலின்றி வைத்திருக்க விரும்பினால், உங்கள் தினசரி வழக்கத்தில் மோர் சேர்க்க வேண்டும். இது உங்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் செரிமான பிரச்சனைகளைத் தீர்வாக அமைகிறது. மேலும் இதில் புரோபயாடிக்குகள் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளதால், உடலின் வெப்பநிலையை இயல்பு நிலைக்குத் திரும்ப உதவியாக உள்ளது.

இஞ்சி : நமக்கு ஏற்படும் பெரும்பாலான வயிற்றுப் பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைவது இஞ்சி தான். இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், வெப்ப அலையின் போது உங்களுக்கு ஏற்படும் வயிற்று வலியை சரிசெய்ய உதவியாக உள்ளது. மேலும் செரிமான பிரச்சனைக்குத் தீர்வாகவும் உள்ளது. எனவே இஞ்சியை நீங்கள் உங்களது உணவில் பல வழிகளில் சேர்த்துக்கொள்ளலாம்.

பப்பாளி : உங்களது செரிமான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உதவும் பழங்களில் ஒன்றாக உள்ளது பப்பாளி. பாப்பைன் மற்றும் சைமோபாபைன் போன்ற புரதங்கள் உள்ளது. இதில் நார்ச்சத்து உள்ளது, இது வழக்கமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது.

இதுப்போன்று முலாம்பழம், வெந்தயம் களி போன்றவற்றையும் உங்களது உணவில் சேர்த்துக்கொள்ளவும். நிச்சயம் கோடையில் உங்களது உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க முடியும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

ஏசி இல்லாம உங்க வீடு குளிர்ச்சி ஆகணுமா...? செலவே தேவையில்லை.. இதை ட்ரை பண்ணுங்க...!

April 21, 2023 0

 

வாட்டும் வெயிலில் ஏசி இல்லாமல் இருப்பது உங்களுக்கு கடினமாக இருக்கலாம். ஒருவேளை இருந்தாலும், இந்த காலநிலையில் மின் கட்டணம் எகிறும். ஆனால் செலவே இல்லாமல் உங்களையும், உங்கள் அறையையும் குளிர்ச்சியாக வைத்திருக்க, சில டிப்ஸ்களை இங்கே தருகிறோம்.

கோடை காலத்தில் மின்விசிறி இல்லாமல் அறையை குளிரவைப்பது எப்படி? மின்விசிறியின் முன் ஐஸ் கட்டிகளை வைப்பதன் மூலமோ அல்லது ஈரமான துணியை தொங்கவிடுவதன் மூலமோ அறையை குளிரூட்டும் திறனை கணிசமாக அதிகரிக்க முடியும். விசிறிகள் வியர்வையை முழுவதுமாக உறிஞ்சாமல் இருக்கலாம், ஆனால் ஏர் கண்டிஷனிங்குடன் ஒப்பிடும்போது, அவை மின்சாரத்தைச் சேமிக்கும் மற்றும் கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வைக் குறைக்கும்.

நிறைய தண்ணீர் குடியுங்கள். வியர்வை மூலம் இழந்த அனைத்து நீர் மற்றும் அத்தியாவசிய தாதுக்களையும் நிரப்ப இது தான் முக்கிய வழி. நீரிழப்பைத் தடுக்க அதிக நீர்ச்சத்து கொண்ட கோடைகால பழங்கள் மற்றும் கோடைகால காய்கறிகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தண்ணீர் அருந்துவது போரடித்தால் மோர், மாம்பழச் சாறு மற்றும் சர்க்கரைகள் சேர்க்காத மில்க் ஷேக் ஆகியவற்றை பருகுங்கள். பயணத்தின்போது உங்களை ஹைட்ரேட் செய்ய இளநீர் ஒரு சிறந்த தேர்வு.

காரமான மற்றும் வறுத்த உணவுகளை தவிர்க்கவும். குறைந்த எண்ணெய்யில் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடவும். வெள்ளரி, வெங்காயம், தக்காளி, உப்பு மற்றும் மிளகு சேர்த்த சாலட்கள், தயிர் வடை மற்றும் தயிர் சார்ந்த சுவையூட்டிகள். அதிக நீர்ச்சத்து கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடவும்.

வாட்டர் மிஸ்ட்களை பயன்படுத்தி ஏசி இல்லாமல் அறையை குளிர்விக்கலாம். இது குளிரூட்டும் தொழில்நுட்பத்திற்கு ஒரு வரப்பிரசாதம். அதனுடன் அறையில் உள்ள பிரகாசமான விளக்குகளை அணைக்கவும்.

கோடையில் சாடின், பட்டு மற்றும் பாலிஸ்டர் துணிகளை தவிர்க்கவும். இது  இரவு உடைக்கும் பொருந்தும். காட்டன் உடை போதுமான அளவு வியர்வையை உறிஞ்சி, உங்களை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

ஏசி இல்லாமலேயே அறையை குளிரூட்டுவது உங்கள் வீட்டிலும் வாழ்க்கை முறையிலும் சில சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் சாத்தியமாகும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

வெற்றி பெற்ற மனிதர்கள் பின்பற்றும் 5 காலை பழக்கங்கள்.. இதுதான் அவர்களின் ரகசியம்.!

April 21, 2023 0

 நாம் அன்றாடம் கடைப்பிடிக்கும் ஒரு சில காலை நேர பழக்க வழக்கங்களை சரி செய்தாலே நமக்கு வெற்றி கிட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதற்கு சான்றாக சில வெற்றி பெற்ற மனிதர்கள் விளங்குகின்றனர்.

வெற்றி என்பது நாம் அனைவரும் அனுபவிக்க ஆசைப்படும் ஒன்றாகும். சிறு விஷயங்களில் இருந்து பெரும் நிகழ்வுகள் வரை அனைத்திலும் நாம் அனைவரும் வெற்றி பெறவே விரும்புவோம். ஆனால், வெற்றி அவ்வளவு எளிதாக ஒருவருக்கு கிடைப்பதில்லை. வெற்றி ஒருவருக்கு எட்டாக் கனி ஒன்றும் இல்லை. வெற்றியின் இரகசியத்தில் ஒன்று கடின உழைப்பு என்றாலும், நாம் அன்றாடம் கடைப்பிடிக்கும் ஒரு சில காலை நேர பழக்க வழக்கங்களை சரி செய்தாலே நமக்கு வெற்றி கிட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதற்கு சான்றாக சில வெற்றி பெற்ற மனிதர்கள் விளங்குகின்றனர்.

வெற்றி பெற்ற மனிதர்கள் தங்கள் நாளை சரியாகத் தொடங்க தங்கள் அன்றாட காலை நேர வழக்கங்களை நன்கு திட்டமிட்டே செய்வார்கள். அதற்கென அவர்கள் ஒரு சில பழக்க வழக்கங்களை வகுத்து வைத்திருப்பார்கள். அவர்களின் வாழ்க்கை அனுபவம், நாம் நம் நாளை சரியாக திட்டமிட கண்டிப்பாக உதவியாக இருக்கும். குறிப்பாக அவர்களைப் போன்று நம் காலை நேர பழக்க வழக்கங்களை வெற்றியை நோக்கிய பாதைக்கு வழிவகுக்கும் விதத்தில் வகுத்துக் கொள்ள வேண்டும். வெற்றி பெற்ற மனிதர்கள் தினமும் காலை நேரத்தில் வழக்கமாக செய்யக் கூடிய சில வெற்றிக்கான வித்திடும் செயல்கள்.

இயற்கை கடிகாரம் : பொதுவாக நாம் அனைவரும் காலையில் எழுந்திருக்க அலாரம் வைப்பது வழக்கம். அலாரம் அடித்தாலும், அதனை ஆஃப் செய்துவிட்டு தூங்கி விடவும் கூடும். ஆனால், வெற்றி பெற்றவர்கள் காலையில் சரியான நேரத்தில் தாங்களாகவே எழுந்திருக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டு இருப்பார்கள். அது மட்டும் அல்ல, அவர்கள் தினமும் குறைந்தது 8 மணி நேரம் தூங்குவதை உறுதி செய்து கொள்வார்கள்.

காலையில் காபி குடிப்பதை தவிர்த்தல் : வெற்றி பெற்றவர்கள் காலையில் காபி குடிப்பதை தவிர்த்துவிட்டு முதலில் தண்ணீர் தான் குடிப்பார்கள்.

உடற்பயிற்சி : பெரும்பாலான வெற்றி பெற்ற மனிதர்கள் தினமும் காலை உடற் பயிற்சிக்கென சிறிது நேரத்தை ஒதுக்கி விடுவார்கள். உடற் பயிற்சிக்கு தங்கள் அன்றாட காலை நேர வழக்கத்தில் முன்னுரிமை கொடுப்பார்கள்.

வாசித்தல் : அதே போல் அவர்கள் தினமும் காலையில் வாசிப்பதற்கென நேரம் ஒதுக்கி நாளிதழ் போன்றவற்றை தினமும் வாசிப்பது வழக்கம்.

முடிவெடுத்தல் : அவர்கள் பெரும்பாலும் காலையில் முடிவெடுப்பதை தவிர்த்து விடுவார்கள். ஏனென்றால், காலையில் தொடர்ச்சியாக முடிவு எடுப்பது ஒருவரின் புத்துணர்ச்சியை குறைத்து விடக்கூடும்.

நீங்கள் இது போன்ற பழக்க வழக்கங்களை பின்பற்றினால், அது கண்டிப்பாக வெற்றிக்கு ஒரு பாலமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே, இத்தகைய பழக்க வழக்கங்களை உங்கள் காலை நேர வழக்கத்தில் புகுத்தி வெற்றிக்கான உங்கள் பயணத்தின் முதல் படியை இனிதே தொடங்குங்கள். வாழ்த்துக்கள்!


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

April 19, 2023

போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி... தஞ்சாவூர் மக்களே மிஸ் பண்ணிடாதீங்க!

April 19, 2023 0

 பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வுக்கு தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நாளை நடக்கிறது.

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பணியாளர் தேர்வு வாரியத்தால் (எஸ்.எஸ்.சி), ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு தரம் (சி.ஜி.எல்.) தேர்விற்கு 7,500-க்கு மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்விற்கான வயது வரம்பு 19 வயது முதல் 30 வயதுவரை ஆகும். மேலும் வயது வரம்பு பணியிடத்திற்கு ஏற்ப மாறுபடும். இந்த தேர்விற்கு அடுத்த மாதம் (மே) 3-ந்தேதிக்குள் ssc.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக மேற்கண்ட தேர்விற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை, தேர்விற்கான பாடத்திட்டம், தேர்வுக்கு தயார் செய்யும் விதம் மற்றும் பாடக்குறிப்புகள் உள்ளிட்ட விளக்க வகுப்பு நடைபெறும்.

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் தங்களது பெயர் மற்றும் கல்வித்தகுதியை குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தகவல் அனுப்பி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தொடர்புக்கு அலுவலக தொலைபேசி எண் 04362-237037 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை... அரசு முக்கிய அறிவிப்பு

April 19, 2023 0

 தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களில் பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200ம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300ம், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டிற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்தொகை நேரடியாக மனுதாரர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும். தொடர்ந்து பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- (எழுபத்தி இரண்டாயிரம்) மிகாமல் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவ/மாணவியருக்கு மற்றும் ஏற்கனவே உதவித்தொகை பெற்றவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் அதற்கும் கீழ் படித்தவர்களுக்கு மாதம் ரூ.600ம், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் 10 ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து ஓராண்டுகள் நிறைவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் வேறு எந்த ஒரு திட்டத்திலும் உதவித்தொகை பெறுபவராக இருக்கக் கூடாது.

இந்த உதவித்தொகை பெறுவதற்கு தகுதிகள் உள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களிலும் வருடம் முழுவதும் வழங்கப்படும்.

மேலும், இந்த உதவித்தொகை பெறுபவர்களின் அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது எனவும் உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்துரைத்தலுக்கு எவ்வித தடையும் ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளார்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

April 15, 2023

அடிவயிற்று தொப்பையை குறைக்க நீங்கள் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?

April 15, 2023 0

 ஒருவரது சிறப்பான ஆரோக்கியத்திற்கு தூக்கம் முக்கியமானது, இரவில் போதுமான அளவு தூக்கத்தை பெறுபவர்களின் ஆரோக்கியத்தில் பெரும்பாலும் எவ்வித குறையும் இருக்காது என்று கூறப்படுகிறது.  அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 18 முதல் 59 வயதுக்குட்பட்ட பெரியவர்களிடையே 

உடல் கொழுப்பு விநியோகத்தை தீர்மானிப்பதில் தூக்கத்தின் அளவு முக்கிய பங்கு வகிக்கிறது என்பது தெரியவந்துள்ளது.  அதாவது தெளிவாக சொல்ல வேண்டுமானால் குறைந்த அளவிலான தூக்கத்தை பெரும் பெரியவர்களின் உடலில் கொழுப்பின் அளவு அதிகமாக காணப்படுகிறது.  ஆனால் இந்த கொழுப்புகள் கைகள், கால்கள் மற்றும் அடிவயிறு போன்ற எந்த உறுப்பில் சேரும் என்பது பற்றி எவ்வித தெளிவான தகவலும் கண்டறியப்படவில்லை.  அதிக எடையுடன் இருப்பது பெரும்பாலான உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். 

பெரியவர்களில் 66%க்கும் அதிகமானோர் உடல் பருமன் கொண்டவர்களாக இருக்கின்றனர்.  ஒரு நாளைக்கு எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட மணிநேரம் தூங்குவது ஆரோக்கியமான உடல் கொழுப்பை பராமரிப்பதில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ஆராய்ச்சியின் முடிவுகள் தெரிவிக்கிறது.  

உடலில் அதிகளவு கொழுப்புகள் இருப்பது இன்சுலின் எதிர்ப்பு மற்றும் டைப் 2 நீரிழிவு போன்ற நோய்களை ஏற்படுத்தும்.  இதுதவிர அதிக கொழுப்புகள் வளர்சிதை மாற்றக் கோளாறுகள், எண்டோடெலியல் மற்றும் கார்டியோமெடபாலிக் செயலிழப்புகளின் அபாயத்தை அதிகரிக்கிறது என்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கிறது.  

இரவில் சரியாக தூங்கவில்லையென்றால் உடலில் கொழுப்பு அதிகரித்து உடல் பருமனுக்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு போதுமான அளவில் தூக்கத்தை பெற பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த கண்டுபிடிப்புகள் உடல் கொழுப்பைக் கட்டுப்படுத்துவதில் தூக்கம் எவ்வாறு முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவும், ஆரோக்கியமான உடல் அமைப்பைப் பராமரிப்பதற்கான வழிமுறையாக தூக்கத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டவும் உதவும்.

வெயில் காலத்தில் தேங்காய் சாப்பிடுவது இவ்வுளவு நல்லதா?

April 15, 2023 0

 Coconut Summer Tips: கோடையில் ஆரோக்கியமாகவும், உடற்தகுதியுடனும் இருக்க மக்கள் பெரும்பாலும் தேங்காய் குடிப்பார்கள். ஆனால் தேங்காய் உங்களின் பல பிரச்சனைகளை நீக்கவும் உதவுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? இதற்குக் காரணம் இது குளிர்விக்கும் தன்மை கொண்டது. 

அதனால் தான் கோடை காலத்தில் தேங்காய் சாப்பிடுவது நல்லது என கூறப்படுகிறது. செரிமானம் சரியாகும், எலும்புகளும் வலுவாக இருக்கும். அதே நேரத்தில், இதய நோய்களைக் குணப்படுத்தவும் தேங்காய் உதவுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?. 

தேங்காய் எல்லா காலங்களிலும் சாப்பிடக்கூடிய சத்து நிறைந்த. ஆனால் கோடையில் கண்டிப்பாக இதனை சாப்பிட வேண்டும். வெயில் காலத்தில், தேங்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கு காணலாம்.

கோடையில் தேங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

செரிமானம் சிறப்பாக இருக்கும்

கோடை காலத்தில் வயிறு குளிர்ச்சியாக இருக்க வேண்டுமானால், தேங்காயை சாப்பிடுங்கள். தேங்காயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் குடலை வலுவாக வைத்து, செரிமானம் சிறப்பாக இருக்கும். அதனால்தான் கோடை காலத்தில் தேங்காய் சாப்பிட வேண்டும் என கூறுகிறார்கள். 

வயிறு குளிர்ச்சியாக இருக்கும் 

கோடை காலத்தில் வயிற்றில் எரியும் உணர்வால் மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை, ஆனால் நீங்கள் தேங்காய் சாப்பிட வேண்டும். தேங்காய் மிகவும் குளிர்ச்சியானது. மறுபுறம், நீங்கள் கோடை காலத்தில் தேங்காய் உட்கொள்வதனால் வயிற்றை குளிர்ச்சியாக வைத்திருக்கும். இதனுடன் தினமும் காலையில் காய்ந்த தேங்காய் சாப்பிடலாம்.

வெப்பத்தில் இருந்து நிவாரணம் 

கோடை காலத்தில், ஒவ்வொரு நபரும் சூரியன் மற்றும் அனல் காற்றால் சிரமப்படுகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், பலருக்கு வெப்ப முடக்குவாதம் ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை, ஆனால் நீங்கள் தேங்காய் சாப்பிட வேண்டும்.

 Click here to join whatsapp group for daily health tip

கோடையில் உடலை குளிரவைக்கும் பெருஞ்சீரகம்

April 15, 2023 0

 கோடை காலத்தில் நிலவும் வெயிலின் தாக்கத்தால் உடல் வெப்பம் அதிகரிக்கும். உடல் வெப்பத்தை குறைத்து, உடலை குளிரவைக்கும் உணவுப் பொருளை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தி வருகிறோம். அதுதான் பெருஞ்சீரகம். இதனை பயன்படுத்தி கோடை காலத்தில் புத்துணர்வூட்டும் பானங்களை தயார் செய்து பருகலாம். 


செலினியம், துத்தநாகம் போன்ற முக்கிய கனிமங்கள் இதில் நிரம்பி இருக்கிறது. அதனால் ஹார்மோன் சமநிலையை பராமரிப்பதிலும், மாதவிடாயை ஒழுங்குபடுத்துவதிலும் பெருஞ்சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் பெருஞ்சீரகத்தில் இருக்கும் ஆன்டிஸ்ப்ராஸ்மோடிக் என்னும் வேதிப்பொருள் மாதவிடாய் கோளாறுகளை சீரமைக்க உதவுகிறது. 


வழக்கமாக பருகும் டீ, காபிக்கு பதிலாக பெருஞ்சீரக டீ பருகலாம். இது கோடை காலத்தில் ஏற்படும் செரிமான கோளாறு மற்றும் வயிறு உபாதை சார்ந்த பிரச்சினைகளையும் போக்கும். சாப்பிட்ட பிறகு சிறிதளவு பெருஞ்சீரகத்தை மெல்வது வாய்க்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். 


வாயு தொல்லை மற்றும் வயிறு சார்ந்த பிரச்சினைகளில் இருந்தும் பாதுகாக்கும். பல்வேறு உணவுகள், பானங்களில் பெருஞ்சீரகத்தை பொடித்து சேர்த்துக்கொள்ளலாம். கோடை காலத்தில் பாலுடன் பெருஞ்சீரகத்தை பொடித்து சேர்த்து பருகி வர, பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். பெருஞ்சீரகத்தை நீரில் காய்ச்சியும் பருகி வரலாம். இது இரைப்பை பிரச்சினைகளை தடுத்து செரிமானத்தை மேம்படுத்தும். 

காலை பொழுதை உற்சாகத்துடன் தொடங்குவதற்கும் வழிவகுக்கும். அகன்ற பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றி சிறுதீயில் கொதிக்க விடவும். அதில் 2 டேபிள்ஸ்பூன் பெருஞ்சீரகத்தை போட்டு 10 நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கவும். அந்த நீரை வடிகட்டி குளிரவைத்து, அதனுடன் சிறிதளவு தேன் கலந்து பருகலாம். தினமும் 2 கப் பருகுவது நல்ல பலனை கொடுக்கும். கோடை காலத்தில் பிரிட்ஜில் வைத்தும் பருகி வரலாம்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip